நாளேடுகள் முழுவதும் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் அதே சாதனையின் தருணங்களில் , இந்த அணுமின் நிலையம் எத்தனை விதமான தவறான வதந்திகளுக்கு ( போராட்டக்காரர்களின் ) முற்றுபுள்ளி வைத்திருக்கிறது என்று எண்ணிப்பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு .
1. கூடங்குளம் பகுதி முழுவதும் காலி செய்யப்படும் என்ற முதல் வதந்தி :-
பெரும்பாலான உள்ளூர் கிராம மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட ஆரம்பித்ததே இந்த வதந்தியை நம்பித்தான் . இது தான் போராட்டத்திற்கு மக்களை கூட்டி சேர்த்த யுத்தி என்று கூட என்னால் சொல்லமுடியும் . போராட்டம் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் வலைப்பூவில் கூட அநேக பதிவர்கள் இந்த காரியத்தை முன் நிறுத்தி பதிவெலுதியதை நாம் படித்திருக்கிறோம் .
3000 புல்டோசர்கள் தயாராய் இருப்பதாகவும் , அவைகள் மூலம் கூடங்குளம்
மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தரைமட்டமாக்கப்படும் என்றும் இந்த பகுதி
மக்கள் பயமுறுத்தப்பட்டு இருந்தனர் என்பதையும் நாம் அறிந்து இருக்கிறோம் .
அந்த மாதிரி தருணங்களில் எல்லாம் அரசும் சரி , அணுமின் நிலைய நிர்வாகிகளும்
சரி " மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை "
என்று மாறி மாறி சொன்னபோதும் , போராட்டக்காரர்கள் அவைகளை பொய் என்றே மக்களை
நம்ப வைத்தனர் .
இப்படிப்பட்ட தருணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினபடியால் " மக்களை காலி செய்யவேண்டும் என்ற வதந்தி பொய்யானது "
2. அணுமின் நிலையம் இயங்கினால் அருகில் வாழ முடியாத அளவுக்கு சத்தம் உண்டாகும் என்ற வதந்தி :-
கூடங்குளம் அணுமின் நிலையம் தனது சோதனை ஓட்டத்தை தொடங்கிய நாட்களில் , அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான சத்தமும் , அதிர்வுகளும் , புகையும் உண்டானது என்றும் , எனவே அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் இப்படிப்பட்ட சத்தங்கள் அதிர்வுகள் உண்டாகும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்
ஆனால் இந்திய அணுமின் கழகமோ , அணுமின் நிலையங்கள் இயங்கும் போது சத்தம் உண்டாகாது என்றும் , சோதனை ஓட்டத்தின் போது அதிகப்படியான நீராவி உற்பத்தியானால் அதை வெளியேற்றும் முறையை ( safety Valve ) பரீட்சித்து பார்த்ததினால் மாத்திரமே இந்த சத்தம் வந்தது என்று விளக்கினாலும் அதை கேட்பதற்கு யாரும் இல்லை
அணுமின் நிலையத்தினால் உண்டாக கூடிய சத்தத்தை குறித்து நிபுணர் குழுவிடமும்
போராட்ட குழு கேள்வி எழுப்பி இருந்தது . அதற்க்கு சத்தம் ஏதும் உண்டாகாது
என்ற நிபுணர் குழுவின் பதில் ஏனோ மக்களிடம் சேர்க்கப்படவே இல்லை .
இன்றைக்கும் கூட சில வலைபூ நண்பர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சத்தம் ஏதும் வரவில்லை எனவே அணுஉலை இன்னும் இயங்கவே இல்லை என்று ஆணித்தரமாக எழுதுவதை பார்த்தால் சிரிக்கவா அல்லது அழுவதா என்று தெரியவில்லை
(Source : https://www.facebook.com/henavel?fref=ts)
ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சத்தமில்லாமல் தனது இயக்கத்தை தொடங்கி
இருப்பது இந்த வதந்திக்கு வைத்த ஒரு பெரிய முற்றுப்புள்ளி தானே .
3. தரமற்ற பொருட்களால் ஆன் கட்டுமானம் என்ற வதந்தி :
ஆரம்ப நாட்களில் இருந்தே திரு உதயகுமாரும் அவரை சேர்ந்தவர்களும் கூடங்குளம்
அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்றும் அதில் உள்ள பொருட்கள்
எல்லாம் தரமற்றவை என்றும் சொல்லி மக்களை ஏமாற்றியே வந்தனர் .
அரசும் , அறிஞர்களும் , அறிவியல் மேதைகளும் பொருட்களின் தரத்தை குறித்து சான்று கொடுதபோதேல்லாம் , அவர்களை தூற்றியே வந்த போராட்டகாரர்களின் பொய்யான வதந்தி இன்று தவிடு பொடியாயிற்றெ கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கதொடங்கியதால் .
இப்படி வதந்திகளை தவிடு பொடியாக்கி , அறிவியலின் அதிசயத்தை மக்கள் உணர தொடங்கி இருக்கும் அதே நேரத்தில் திரு உதயகுமாரின் புது போராட்ட அறிவிப்பு. அதன் பெயர் " மக்கள் திரள் மரண போராட்டமாம் ". எங்கிருந்து கிடைக்கிறதோ இவருக்கு இப்படி பெயர்கள் . இப்பொழுதே தெளிய தொடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் இவருக்கு புரிய வைக்கும் நாங்கள முட்டாள்கள் அல்ல என்பதை
கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த அறிவியல் தொகுப்பை இதே வலைப்பூவில்
நான் எழுதி இருக்கும் "கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு" என்ற சுட்டியை சுட்டி படியுங்கள்