Thursday, 8 March 2012

நிலம் இருக்கிறதா ...? - பத்திரப்படுத்தும் வழிகள்


நெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது .   அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் .  காரணம் என்ன என்று கேட்ட பொழுது அவரின் அநேக நிலங்கள் நெடுங்காலம் கவனிக்காமல் விட்டதினால் அவரின் நிலங்கள் பறிபோகும் நிலையில் இருக்கும் சோக கதையை சொன்னார் .  உடனே இந்த பதிவு எழுதும் யோசனை தோன்றியது .
 
 
 
உங்கள் நிலங்களை நீங்கள் பாதுகாக்க கீழ்க்கண்ட யோசனைகளை கடை பிடியுங்கள்  :-


உங்கள் நிலங்களுக்கு உரிய வரியை ( நன்செய் / புன்செய் அல்லது வீட்டு வரி ) செலுத்தி வருகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் .  இல்லை எனில் வேறு யாராவது உங்கள் நிலத்திற்கு தீர்வை செலுத்தி வந்தால் , அதன் மூலம் கூட அவர்கள் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடும் உரிமை ஏற்பட்டு விடலாம் .
 
 

வரி சரியாக செலுத்தி ( சிட்டா ) கொண்டு இருந்தால் , அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி உள்ளீர்களா என்பதை நீங்கள் சரி பாருங்கள் .   சில பேர் நிலத்தை வேறு ஆட்களிடம் இருந்து வாங்கி இருப்பார்கள் . ஆனால் பட்டா மாற்றம் செய்து இருக்க மாட்டார்கள் .  பட்டா உங்களிடம் இல்லையா ...? உடனே தாலுகா அலுவலகம் சென்று கணினி பட்டா ( உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து ) வாங்குங்கள் . 


பட்டா ஏற்க்கனவே , நீங்கள் வாங்கி இருந்தால் அதன் மாற்றங்களை அவ்வப்பொழுது http://taluk.tn.nic.in/eservicesnew/home.html வலைத்தளத்தில் சரி பார்த்து கொள்ளுங்கள் .  மாற்றம் ஏதும் இருப்பின் , உடனடி கவனம் தேவை .
 
 
சில பேர் , பட்டாவை வாங்கி பார்த்தால் , அந்த பட்டாவில் வேறு பயனாளிகள் பெயர் இருக்கும் . அப்படி இருந்தால் உடனடியாக பட்டாவில் பெயர் மாற்றம் செய்யவேண்டும் .  அப்படி பெயர் மாற்றம் செய்யும் முன் EC என்று சொல்லப்படும் வில்லங்க சான்றிதழ் வாங்கவேண்டும் .


வில்லங்க சான்றிதழ் தாலுகா அலுவலகத்தில் கிடைக்காது . ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் எழுதி மனு கொடுக்கவேண்டும் .  அப்படி கொடுக்கும் பொழுது உங்கள் பத்திரத்தின் தேதிக்கு முந்தைய 10 வருடங்களில் இருந்து தற்பொழுதைய வருடம் வரைக்கும் வில்லங்கம் பார்ப்பது நல்லது .
 
 
 வில்லங்க சான்றிதழ் எனப்படுவது உங்கள் நிலம் யாரால் யாருக்கு எந்த வருடம் எழுதி கொடுக்கப்பட்டது என்று அத்தனை விவரங்களும் உள்ளடக்கியதாக இருக்கும் .  உங்களுக்கு அந்த வில்லங்க சான்றிதழ் வாங்கிய பிறகு , உங்கள் பத்திர பதிவு நாளுக்கு பிறகு ஏதாவது பரிமாற்றம் உண்டாகி இருக்குமானால் அந்த பத்திரத்தின் நகலையும் நீங்கள் அந்த அலுவலகத்தில் தனியாக மனு கொடுத்து பெற்று கொள்ளலாம் .
 

வில்லங்க சான்றிதழ் உங்களின் பரிவர்தனையோடு முடிந்தது என்றால் , நீங்கள் அந்த நகலை கொண்டு உங்கள் பட்டாவின் பெயர் மாற்றத்திற்கு மனு கொடுக்கலாம் .
 
 
 ஒருவேளை உங்கள் காலம் சென்ற தந்தையார் நிலம் உங்கள் பெயர்க்கு மாற்றம் செய்யப்படவேண்டும் எனில் உங்கள் தந்தையாரின் இறப்பு சான்றிதழ் மற்றும் உங்கள் தந்தைக்கு வாரிசு சான்றிதழ் பெற்று அவைகளின் மூலம் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றம் செய்யலாம் .
 
 
கூடிய மட்டும் உங்களின் நிலங்களை வேலி அடைத்து பாதுகாப்பது நல்லது . 


உங்கள் நிலங்களின் சர்வே நம்பர் மற்றும் அளவுகளை ஏதாவது புத்தகத்தில் தொகுத்து வைத்து இருந்தால் , அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுப்பதற்கு நலமாக இருக்கும் .  சில வீடுகளில் பிள்ளைகள் நிலம் எங்கே என்று தெரியாமல் நிற்பதும் வேடிக்கை தான் . 
 
 
 காசு கொடுத்து வாங்குகிறீர்கள் .... கொஞ்சம் கவனிக்கலாம் தானே ... உங்களுக்கு இந்த பதிவு பிரயோஜனமாய் இருந்தால் அடுத்த பதிவில் பட்டா பெயர் மாற்றம் செய்வதின் முறைகளை எழுத ஆசைப்படுகிறேன் ....

18 comments:

  1. Useful inforamtions

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you for your visit and comments...

      Please visit again...

      Delete
  2. Replies
    1. வாங்க நண்பரே .... தங்கள் வருகைக்கு நன்றி ...

      நிச்சயமாக சொல்லுகிறேன் ......

      Delete
  3. படிச்சாதான் எழுதணுமா? சும்மா எழுதி வைங்க பாஸ் !

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே .... தங்கள் வருகைக்கு நன்றி ...

      நிச்சயமாக எழுதுகிறேன் தலைவரே ......

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  4. Payanulla Pathuivu.

    Nanri.

    M.Syed
    dubai

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

      தொடர்ந்து வருகை தாருங்கள் .. நன்றி

      Delete
  5. நண்பரே,
    மிக பயனுள்ள கிடைத்தற்கரிய அனைவருக்கும் பயன்படக்கூடிய பதிவு.
    வாழ்த்துக்கள்.
    நன்றி
    அன்புடன்
    BS

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

      தங்கள் கருத்து என்னை தொடர்ந்து எழுத தூண்டுகிறது .

      தொடர்ந்து வருகை தாருங்கள் .. நன்றி

      Delete
  6. இது போன்ற பதிவுகள் வரவேற்க தக்கவை உங்கள் சேவை தொடரட்டும்

    ReplyDelete
  7. ஐயா வணக்கம் ,
    என் பூர்வீக சொத்தின் மீது எங்கள் கிராம பஞ்சாயத்தில் உள்ளவர்கள்
    உரிமை கொண்டாடுகிறார்கள் அது மீண்டும் எண்களுக்க கிடைக்க வழி
    உள்ளதா என்று தெரியவேண்டும் பிரச்சனையை முழுவதுமாக இங்கு
    எழுதா முடியாது உங்களை தொடர்புகொண்டு பேச வழி சொல்லவும்
    தயவு செய்து பதில் கூறவும்

    ReplyDelete
  8. THIS MY E-MAIL ID kumardeena143@gmail.com

    ReplyDelete
  9. but at the time of registration they collect the fee, form for transfer of patta etc., at the registrar office itself. If they don't transfer, is it not the responsibility of the govt., as both the depts are under the same state govt.,

    ReplyDelete
  10. Its very useful to us.

    Thanks for the suggetions............ jeeva

    ReplyDelete
  11. innum niraya ethir parkiren please

    ReplyDelete
  12. இம்மாதிரியான தகவல்கள் அனைத்து மக்களுக்கும் தெரியுவதற்கு வழி செய்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  13. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...தொடர்ந்து வருகை தாருங்கள்...

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி