கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விவாதங்கள் பெருமளவில் பதிவுலகில் அங்கம் வகித்தது . அவரவர் சூடான கருத்துகளை பரிமாறி கொண்டாலும் , சில நல்ல ஆக்கப்பூர்வமான விடயங்கள் பெருமளவில் விவாதிக்கப்பட்டன . எனது வலைப்பூவிலும் அணுமின் நிலையங்களை குறித்த பதிவுகள் அறிவியல் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன ... பல நண்பர்கள் ஆக்கப்பூர்வமான பல கேள்விகள் கேட்டு , பதிவை இன்னும் மெருகு ஏற்றினார்கள் ... இன்னும் சிலரோ ,,,கடைசி வரை அணுமின் நிலையங்கள் குறித்த பதிவுகளை ஏற்று கொள்ளவே இல்லை . ஆனால் ஒரு மகிழ்ச்சியான விடயம் என்னவெனில் ..... பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விடயங்களை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள் என்பதே ...
அநேகம் நண்பர்களின் ஒரு பொதுவான கேள்வி என்னவெனில் , " மின்சாரம் தயாரிப்பதற்கு பல வழிகள் இருக்கும் பொழுது , நீங்கள் ஏன் அணுமின் சக்தியை ஆதரிக்கிறீர்கள் ...?" என்பதே .... இது ஒரு நியாயமான கேள்வி .... எனது பதிவுலக பதிவுகள் துவங்கியதே , " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவோடு தான் . அந்த பதிவில் பல வகை மின்நிலையங்களின் செயல்பாடுகளையும் புள்ளி விவரங்களோடு கூட விளக்கி இருக்கிறேன் . இருப்பினும் , இப்பொழுது விவாதத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 MWe உற்பத்தி திறன் உடையதால் , 1000 MWe மின்சாரம் மற்ற மின் நிலையங்கள் தயாரித்தால் அவற்றின் ஒப்புமை எப்படி இருக்கும் என்பதே இந்த பதிவு .... தொடர்ந்து படியுங்கள் .....! ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள் ....!
அநேகம் நண்பர்களின் ஒரு பொதுவான கேள்வி என்னவெனில் , " மின்சாரம் தயாரிப்பதற்கு பல வழிகள் இருக்கும் பொழுது , நீங்கள் ஏன் அணுமின் சக்தியை ஆதரிக்கிறீர்கள் ...?" என்பதே .... இது ஒரு நியாயமான கேள்வி .... எனது பதிவுலக பதிவுகள் துவங்கியதே , " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவோடு தான் . அந்த பதிவில் பல வகை மின்நிலையங்களின் செயல்பாடுகளையும் புள்ளி விவரங்களோடு கூட விளக்கி இருக்கிறேன் . இருப்பினும் , இப்பொழுது விவாதத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 MWe உற்பத்தி திறன் உடையதால் , 1000 MWe மின்சாரம் மற்ற மின் நிலையங்கள் தயாரித்தால் அவற்றின் ஒப்புமை எப்படி இருக்கும் என்பதே இந்த பதிவு .... தொடர்ந்து படியுங்கள் .....! ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள் ....!
1000 MWe அனல் மின் நிலையம் :-
இந்தியாவின் தற்பொழுதைய மொத்த மின் உற்பத்தி திறன் 1 .8 2 லட்சம் MWe . இதில் கிட்டத்தட்ட 1 . 15 லட்சம் MWe உற்பத்தி திறன் அனல் மின் நிலையங்கள் தான் . அதாவது நமது பெரும்பான்மை மின் உற்பத்தி அனல் மின் நிலையங்கள் மூலம் தான் . அனல் மின் நிலையங்கள் கூட 24 x 7 மணிநேரமும் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவை தான் . பிறகு என்ன என்று நீங்கள் கேட்கலாம் ...! சரி நாம் கொஞ்சம் கவனிப்போம் ...
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி நமது நாட்டில் ஒரு பெரும் பிரச்சினை தான் . இந்திய நாட்டில் நிலக்கரி கையிருப்பு ஒரு பக்கம் இருந்தாலும் , நமது நாட்டின் நிலக்கரி அதிக அளவில் சாம்பலை கொடுப்பதினால் , இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து நிலக்கரி ( குறைந்த சாம்பல் ) இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது ....
சரி.... சாம்பல் அதிகமாக இருந்தால் என்ன ..? என்ற கேள்வி எழும்பலாம் .. அதிகமான சாம்பல் மிக அதிக சுற்று சூழல் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகிறது ... அது மாத்திரமல்ல , நிலக்கரி எரித்து போக உள்ள மீதி உள்ள சாம்பலில் அதிக கதிரியக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது . மேலும் தகவலுக்கு http://www.ornl.gov/info/ornlreview/rev26-34/text/colmain.html
மாத்திரமல்ல அனல் மின் நிலையங்கள் வெளியிடும் கடும் புகை , கார்பன் டை ஆக்சைட் மற்றும் SO2 போன்ற வாயுக்களால் ஓசோன் படலம் ஓட்டையாகி , அதன் மூலம் புவி வெப்பமயம் அடைந்து , அதன் மூலம் ஆர்டிக் பிரதேசம் உருகி , அதன் மூலம் கடல் மட்டம் பெருகி , அதன் மூலம் கடலோர கிராமங்கள் அழியோடு அழியும் அபாயம் உள்ளது .....எனவே உலகம் முழுவதும் இந்த மாதிரி வாயுக்களை கட்டுப்பத்த வேண்டும் என்ற வேகம் பெருகி உள்ளது ..... இது குறித்து நான் ஏற்க்கனவே " அணுமின் நிலையங்கள் சுற்று சூழல் நண்பனா " என்ற கட்டுரையில் எழுதி உள்ளேன் .
ஒரு 1000 Mwe அனல் மின் நிலையம் ஒரு ஆண்டில் 4380000 டன் நிலக்கரியை பயன்படுத்துகிறது எனவும் , அதன் மூலம் 320000 டன் சாம்பலும் 6 . 5 மில்லியன் டன் CO2 வாயுவும் ., 44000 டன் SO2 வாயுவும் , 22000 டன் NO2 வாயுவும் வெளியிடப்படுகிறது ....Source : The Book of Public perceptions about atomic Energy Myths & Realities , Page No : 16
சரி அப்படியானால் , அனல் மின் நிலையங்களை விட அணுமின் நிலையங்கள் சிறந்தது என்பதை நாம் ஏற்றுகொள்ள தான் வேண்டி உள்ளது ... சரி .....நாம் ஏன் சூரிய ஒளி மின்சாரம் , மற்றும் காற்றலைகளை பயன்படுத்த கூடாது என்று நீங்கள் கேட்கலாம் .... தொடர்ந்து வாசியுங்கள்
1000 MWe சூரிய மின் நிலையம் : -
அணுசக்தி வேண்டாம் என்று சொல்லுகிற அநேகம் நண்பர்கள் நாம் ஏன் சூரிய ஒளியால் மின்சாரத்தை தயாரிக்ககூடாது என்று கேள்வி கேட்பது உண்டு ..... நிச்சயமாக நாம் தயாரிக்கலாம் .....இந்தியாவும் சூரிய ஒளியின் மூலமாக வரும் காலத்தில் 20000 Mwe மின்சாரம் தயாரிக்க முடிவு செய்து உள்ளது
ஆனால் சூரிய வெளிச்ச மின்சாரத்தில் சில குறைபாடுகள் உள்ளன . அதாவது சூரிய ஒளி மின் தகடுகள் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு பாதிக்கப்படுமானால் மிக அதிக அளவு இடம் நமக்கு தேவைப்படும் . அந்த இடத்திற்கு நாம் பாலைவனங்களை பயன்படுத்தலாம் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது ..... சரி .... பிறகு அப்படி செய்தால் என்ன என்று நமக்கு தோன்றலாம் .....
பொதுவாக மின்சாரத்தில் On _ Grid மற்றும் off - grid என்று நாம் சொல்லுவது உண்டு . On _ Grid என்றால் , மின்சாரம் தயார் செய்யப்பட்டு மின் கடத்தும் கம்பிகளின் வழியாக நாம் மின்சாரத்தை வேறு இடத்திற்கு நாம் கடத்த முடியும் . ஆனால் off - grid என்று சொல்லப்படுவது என்னவெனில் நாம் மின்சாரத்தை தயாரித்து அதே இடத்தில பயன்படுத்தி ஆகவேண்டும் . இப்படி on - grid ல் மின்சாரம் செலுத்தப்பட வேண்டுமானால் அதிக மின் அழுத்தத்தில் மின்சாரம் செலுத்தப்பட வேண்டும் . ஆனால் சூரிய ஒளி மின்சாரம் இப்படி அதிக அழுத்தம் உடைய மின்சாரமாக கிடைப்பது கடினம் . எனவே பாலைவனத்தில் வைத்து மின்சாரம் தயாரித்து அதை நாம் மின் கம்பிகள் வழியே கடத்தினால் , Transimission loss தவிர்த்து எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்
மாத்திரமல்ல ஒரு 1000 MWe மின்நிலையம் மாதம் முழுவதும் ( 24 மணி நேரமும் ) மின் உற்பத்தி செய்தால் சுமார் 72 கோடி யூனிட் தயாரிக்கலாம் . தொடர் தகவலுக்கு எனது "மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம் " என்ற பதிவை பாருங்கள் . இப்படி இருக்கும் பொழுது ஒரு 1000 MWe மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய பண்ணை 12 மணி நேரம் வேலை செய்தாலும் 36 கோடி யூனிட் மாத்திரமே தயாரிக்க முடியும் ..... அதுவும் மழை காலம் மற்றும் மேக மூட்டம் என்றால் குறையும் ....
எனவே சூரிய ஒளி மின்சாரம் வீடுகளில் அல்லது அலுவலங்கங்களில் பயன்படுத்தலாமே தவிர பொருளாதார மேப்பாட்டிர்க்கு தேவையான தொழிற்சாலைகளுக்கு பயன்படுவது கடினமே .... அதனால் தான் என்னவோ....உலகின் மிகப்பெரும் சூரிய ஒளி பண்ணையே சுமார் 250 முதல் 300 MWe மின்சாரம் மாத்திரம் தான் தயாரிக்கிறது
இருந்தாலும் தற்பொழுது விண்வெளியில் இருந்து சூரிய ஒளியை நேரடியாக பூமிக்கு கொண்டு வர விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள் ... பொருது இருந்து பார்ப்போம் இந்த முயற்சிகளின் வெற்றியை ...
மேற்குறிப்பிட்ட Contraints அணுமின் நிலையங்களில் கிடையாது ....
- அவைகள் பூமிக்கு கேடு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதில்லை .....
- சாம்பலை வெளியிடுவதில்லை
- 24 x 7 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் கொடுக்கவல்லவை .....
- மிகுந்த பாதுகாப்பானவை .....
- Energy security க்கு மிகவும் அவசியமானவை .....
எனவே நாம் அதை வரவேர்ப்பத்ர்க்கு ஏன் தயங்கவேண்டும் .....?
சரிங்கண்ணே... நீங்க சொல்றது அதாவது... சூரிய ஒளியால் கிடைக்கும் மின்சாரத்தை கடத்த முடியாது... அதிகம் ஆகும்.... சரி. நல்லது.
ReplyDeleteஇதை வீடுகளில், Officeகளில் இன்ஸ்டால் செய்யலாமே .... அதற்க்கு எங்கே எந்த வீடுகளில் எல்லாம் வசதி இருக்கிறதோ அங்கே எல்லாம் இன்ஸ்டால் செய்யலாம்...
இட வசதி தேவை என்பது எல்லாம் சப்பைக் கட்டு காரணங்கள்.... மேலும் இந்த விசயத்தில் ஊழல் செய்வது கொஞ்சம் கஷ்டம்... பெரிய திட்டம் 15000௦௦௦ கோடி திட்டம் என்றால், ஒரே திட்டத்தில்.... 15% கமிசன்... அடேங்கப்பா... யோசிச்சுப்பாருங்க....எவ்வளவு வரும்....?
நண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...
எனது கருத்தை நீங்கள் ஏற்று கொண்டதற்கு நன்றி .... வீடுகளில் நாம் இதை செய்யலாமே என்ற உங்களின் கருத்து வரவேற்க்கப்பட வேண்டியது ... எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ..... அதை தான் அரசுகளும் செய்து வருகிறது நண்பரே .....
ஹலோ, மிஸ்டர். டுபாக்கூர், நான் எங்கே உங்க கருத்த ஏத்துகிட்டேன்? நீங்கதான் இப்ப என் கருத்த ஏத்துகிட்டு இருக்கீங்க... சந்துல சிந்து பாடாதீங்க மிஸ்டர். டுபாக்கூர்.
Deletemy friend,
ReplyDeleteAre you working in any atomic power plant?
Anand
Dear Friend ,
DeleteThank you very much for your visit...
I feel , as i am writing many things about the nuclear power , you are asking this question....
As i love science , i am writing the scientific reasons behind that... If i get an opportunity to work in Nuclear field , i will be very happy and i feel i can write better than this...
Thank you...
ஆக.... நீங்க அணு உலை சம்பந்தமா எதுவுமே படிக்காமல், அதைப் பற்றி எழுத வந்துட்டீங்க... பாஸ் நீங்க ஒரு விஞ்ஞானி பாஸ்.... அணு உலை பாதுகாப்பானதுன்னு நீங்க சொல்லும் போதே நினைச்சேன்... நீங்க எதுவுமே படிக்காத ஒரு தற்குறின்னு... அதைத்தான் நல்லா படிச்சிட்டு வந்து எழுதுங்கன்னு நிறைய தடவை சொன்னேன்... இப்ப நீங்களே ஒத்துகிட்டீங்க நீங்க ஒண்ணும் தெரியாத தேசபக்தி வியாபாரம் செய்யும் ஒரு மட்டமான வியாபாரின்னு... எத வேணா வித்து தொலைங்க சாமி.... இந்த தேசத்தை அந்நிய சக்திகளிடம் அணு விஞ்ஞானம் என்ற போர்வையில் தேசபக்தி வியாபாரம் செய்து விற்று விடாதீர்கள்....
Deleteஅணுமிண் நிலையம் கட்டிணால் கட்டுவதில்,பண்ணாட்டு முதலாளிகளிடம் கருவிகளை இறக்குமதி செய்வதில்,யுரேணியம் இறக்குமதி செய்வதில் ஊழல்
ReplyDeletehttp://tamil.webdunia.com/newsworld/news/international/1204/06/1120406041_1.htm
ReplyDeletenuclear powr plant is not safe
Deleteநானொரு இந்தியன் ... தேச பக்தி மிகுந்தவன் ... இந்தியாவை விற்பவன் ... சாரி... இந்தியாவை நேசிப்பவன் .. அப்படி இப்படின்னு ஓவரா தேசபக்தி சீன் காமிக்கிறீகளே... ஏன் Profile-ல போட ஒரு இந்தியன் தாத்தா போட்டோ கிடைக்கலையா? வெளிநாட்டு தாத்தா போட்டோ போட்டுக்கிட்டு தேசபக்தி வியாபாரம் பண்றீங்க..? இப்படி எல்லாம் Careless-சா இருக்காதீங்க...
ReplyDeleteஅண்ணே...தேசபக்தி அண்ணே.... எங்க போனீங்க? கூடங்குளம் திறக்கப்படும்ன்னு சொன்ன உடன ஆளையே காணல.... தேசபக்தி வியாபாரம் போதும்ன்னு நினைச்சுடீங்களா?
ReplyDeleteMr.Irudayam...there is no article from your side? This blog is live now?
ReplyDelete