சங்கரன்கோவில் தேர்தலின் பிரசாரத்திற்கு வருகை தந்த தமிழக அரசியல் தலைவர்களில் ஒருவரும் , திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் " தீக்குளிப்பதாக" அறிவித்த வார்த்தைகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது .
தென் ஆசியாவில் மிகப்பெரிய நூலகம் என்ற பெயரை பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகம் திமுக தலைவரான கலைஞர் கருணாநிதி கட்டப்பட்டு சென்னையில் திறந்து வைக்கப்பட்டது . கிட்டத்தட்ட 3 . 75 லட்சம் சதுர அடியில் 180 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நூலகம் சுமார் 1 . 20 மில்லியன் புத்தகங்கள் வைக்கும் திறன் படைத்தது . மாத்திரமல்ல இணையத்தின் மூலமாக 2 லட்சம் இணைய புத்தகங்களையும் , 20000 இணைய பத்திரிகைகளையும் கொண்ட பெரிய அறிவு சுரபி என்று சொல்லலாம் .
இத்தகைய பெருமை உடைய இந்த நூலகம் தமிழகத்தில் ஆட்சி மாறின பொழுது தற்பொழுதைய முதல்வர் அவர்களால் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது . இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உண்டுபண்ணியது என்றால் அது மிகையல்ல . இத்தகைய சூழலில் தான் இந்த நூலகம் மாற்றப்பட்டால் தான் தீக்குளிக்கப் போவதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் அறிவித்து உள்ளார் .
தமிழகத்தில் சில நிகழ்வுகளின் பொழுது தீக்குளித்து சில சகோதர சகோதரிகள் தங்களை மாய்த்து கொண்ட பொழுது , இந்த மாதிரி முடிவுகளை மக்கள் எடுக்ககூடாது என்று அறிவுறுத்திய தலைவர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் .
இது வரைக்கும் எந்த கட்சியிலும் எந்த தலைவரும் தீக்குளித்து இறந்து போனதில்லை . ஆனால் அவர்களுக்காக உயிர் கொடுக்கும் சில உண்மை தொண்டர்கள் எல்லா கட்சிகளிலும் உண்டு என்பதை நான் அறிந்து இருக்கிறேன் . எனவே கலைஞர் கருணாநிதி அவர்களின் இந்த மாதிரி அறிவிப்பு சில முரட்டு தொண்டர்களை உணர்ச்சி வசப்படுத்தலாம் . அப்படி இருக்கும் பட்சத்தில் அதன் விளைவுகள் மிக பரிதாபமாக இருக்கும் . சில மாலைகளும் , சில போஸ்டர்களும் மாத்திரம் தான் அவர்களுக்கு மிஞ்சும்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் கோபம் நியாயமானது என்றாலும் ஐந்து முறை தமிழகத்தை ஆண்டவரும் ,. மிக பெரும் தலைவருமான அவரின் கருத்து எனக்கு சரியாக படவில்லை .
மீடியாக்கள்தான் இதை பெரிது படுத்துகின்றன... மக்கள் மத்தில் இது குறித்து எந்த எஃபெக்டும் இருப்பதாக தெரியவில்லை...
ReplyDeleter u crazy...........?he tells the same once in every two years!now he is entertaining us more than he did in the past.thank god he did not carry cynide capsule....if he does,his family members will feed him at the moment when he said that.
ReplyDelete