Monday, 19 March 2012

முற்று பெறும் கூடங்குளம் பிரச்சினை - வெற்றி பெற்றது யார் ...?


அதிநவீன் தொழில் நுட்பத்துடன் கூடங்குளம் பகுதியில் ரசியா நாட்டு உதவியுடன் 2000 MWe மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலையம் கட்டப்பட்டு வருகிறது .  இந்த அணுமின் நிலையத்தை செயல்படுத்த கூடாது என்ற கோஷத்துடன் கடந்த 6 மாதங்களாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது நாம் எல்லாரும் அறிந்ததே .   இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு, உதயகுமார் மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு விடை காண முயற்சிக்காமல் ,  பொய்யான தகவல்களை சொல்லி மக்களை குழப்பி வந்ததை இந்த வலைப்பூவில் பலமுறை நான் எழுதியுள்ளேன் .  


மக்களின் அச்சத்தை தீர்க்க மத்திய மாநில அரசுகள் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை தனி தனியாக கூடங்குளம் பகுதிக்கு அனுப்பி , அணுமின் நிலையத்தை ஆய்வு செய்தது .  வல்லுனர்கள் குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து , " கூடங்குளம் அணுமின் நிலையம் அனைத்து வழிகளிலும் பாதுகாப்பானது " என்று அறிக்கை அளித்தது .


இந்த நிலையில் , கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் தமிழக அரசு இன்று முக்கிய முடிவு எடுத்துள்ளது .   வல்லுநர் குழுவை பரிசீலித்த தமிழக அரசு , " கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்தலாம் " என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது .  இதனால் கடந்த 6  மாதங்களாக நடத்த வந்த கூடங்குளம் போராட்டம் முடிவுக்கு வருகிறது .  





உண்மையில் இந்த போராட்டத்தின் காரணமாக பல ஆயிரம் கோடிகள் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் ,  இந்த போராட்டத்தில் அரசும் , மக்களும் வெற்றி பெற்று உள்ளார்கள் என்று தான் நான் சொல்லுவேன் .




அரசின் வெற்றி :-  
  • குழம்பி போய் இருந்த கூடங்குளம் பகுதி மக்களின் நியாயமான் அச்சம் தீர்க்கப்பட்டு உள்ளது .   வல்லுனர்களின் குழு மக்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துள்ளது .  தமிழக அரசு மக்களின் அரசு என்று ஏற்றுகொண்ட மக்கள் அரசின் முடிவை வரவேற்று உள்ளார்கள் .
  • திட்டமிட்டு மக்களை குழப்பிய சில தீய சக்திகளை அரசு அருமையாக அடையாளம் கண்டு சரியான நடவடிக்கையை எடுத்து சமாதானத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தி உள்ளது .
  • பல நலத்திட்டங்களை அறிவித்ததின் மூலம்  ,  மக்களின் நல் ஆதரவை அரசு தக்க வைத்து உள்ளது .


மக்களின் வெற்றி :-
  • இந்த போராட்டத்தின் மூலம் அணுமின் சக்தியை குறித்த தெளிவான விழிப்புணர்வு கூடங்குளம் பகுதி மக்களுக்கு மாத்திரம் அல்ல , தமிழகம் முழுவதும் ஏற்ப்பட்டுள்ளது .  அதனால் இனி வரும் திட்டங்களில் மக்களை சில தீய சக்திகள் குழப்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது .
  • நல்ல பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் ,  கூடங்குளம் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற மாயை உடைக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது .

 இந்த கூடங்குளம் பிரச்சினை குறித்து நான் பல கட்டுரைகள் இதே வலைத்தளத்தில் எழுதியுள்ளேன் .  எதிர் கேள்விகள் கேட்டு எனது கட்டுரையை மேலும் மெருகேற்றிய பதிவுலக நண்பர்களுக்கும் ,  கடுமையான விமரிசனங்கள் வந்தபொழுது என்னை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் எனது நன்றியை இந்த 50 வது இடுகையில் நான் தெரிவித்து கொள்ளுகிறேன் . 





7 comments:

  1. அரசின் வெற்றி?
    மக்களின் வெற்றி ?
    மக்களின் வெற்றி ?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      அணுசக்தியை குறித்த விழிப்புணர்வை மக்கள் விவாதித்தால் இது மக்களின் வெற்றி எனவும் , மக்களின் உணர்வுகளையும் , அரசின் வளர்ச்சியையும் சரியாக அறிந்து தீய சக்திகளை இனம் கண்டு அணுமின் நிலையத்தை ஆரம்பிக்க ஒப்புதல் கொடுத்தததால் , இது அரசின் வெற்றி என்பது எனது கருத்து நண்பரே ... நன்றி

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. கூடங்குளம் மக்களின் அச்சம் தீர்க்கப் பட்டு உள்ளது என்று அப்பகுதி மக்கள் சொல்ல வேனண்டும். எஙயோ இருக்கும் நமக்கு அதை சொல்ல தகுதி இல்லை..

    -- vinoth

    ReplyDelete
  4. அட பாவிங்கள...?

    (எப்படியோ தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் செத்து..... ஒட்டுமொத்த தமிழ் இனமே அழிஞ்ச போன சரி.)

    ReplyDelete
  5. நெருப்பு27 March 2012 at 07:38

    இது அரசியல் அல்லக்கைகளின் வெற்றி .

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி