இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட விவகாரம் அமெரிக்காவினால் ஜெனிவா தீர்மானத்தின் மூலம் மறுபடியும் கொண்டு வரப்பட்டுள்ளது . இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும் , இலங்கை அரசுக்கு எதிராகவும் இந்தியா வாக்களிக்க வேண்டும் என உலக நாடுகள் ஒருபுறம் எதிர்பார்க்க , இந்திய நாடாளுமன்றம் இது வரை எதிர்பார்க்காத அளவு தமிழக உறுப்பினர்களின் கடும் குரலை எதிர் கொண்டுள்ளது .
ஆனால் இதனை அமளி நடந்த பிறகும் பிரதமர் ஒன்றுமே பேசவில்லை என்பதாக நாளேடுகளில் நான் வாசித்து அறிந்து கொண்டேன் . ஒரு புறம் திமுக , அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி வருகிறது . இன்னும் ஒரு புறம் சில குட்டி தமிழக தலைவர்கள் காங்கிரஸ் மற்றும் அதன் தலைமை தமிழர்களுக்கு எதிரானது என்று பேசி வருகின்றனர் . ஒரு வழியாக தமிழ்நாட்டில் அநேகர் மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு அதிருப்தி தான் தெரிவித்து உள்ளனர் .
சரி ....உண்மையில் இதற்க்கு என்ன தான் காரணமாய் இருக்க முடியும் என்ற எனது கேள்விக்கு கிடைத்த பதில் தான் இந்த பதிவில் ....
சரி கொஞ்சம் முந்திய காலத்திற்கு கடந்து செல்லுவோம் .... காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி . இந்திராகாந்தி அவர்கள் ஆட்சி காலத்தில் தான் இலங்கை தமிழ் புலிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளும் செய்யப்பட்டு வந்தது என்பதை வரலாறு மறக்கவும் / மறுக்கவும் முடியாது .
1987 ம வருடம் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பொழுது ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்ட பொழுது Operation பூமாலை என்ற பெயரில் இந்திய விமானப்படை இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவி செய்தது .
தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் தரப்பில் ஒரு பயங்கரமான திட்டம் கொண்டு வரப்பட்டது . அதாவது அமெரிக்காவின் சார்பில் திரிகோணமலையில் ஒரு ராணுவ தளம் அமைக்கவும் , அதன் மூலம் அமைதி நிலை நாட்டவும் அமெரிக்கா முடிவு செய்தது . ஆனால் இலங்கையில் எந்த அயல் நாட்டு ராணுவ ராணுவம் வரவேண்டும் என்றாலும் , இந்தியாவின் அனுமதியும் பெறவேண்டும் என்ற எழுதபடாத ஒப்பந்தத்தை யோசித்து பார்த்த இந்தியா , தனது ராணுவத்தை அமைதி படையாக அனுப்ப ஒரு ஒப்பந்தத்தை இலங்கையிடம் ஏற்படுத்தியது .
இது அமெரிக்க ராணுவம் இலங்கையில் காலூன்ற விடாமல் தடுத்து அதோடு கூட அமைதியை ஏற்ப்படுத்தும் முயற்சியிலும் இறங்கியது . ஆனால் எதிர்பாராத சில மோதல்கள் அமைதி படைக்கும் , விடுதலை புலிகளுக்கும் ஏற்ப்பட்டதை தொடர்ந்து அமைதி படை 3 வருடங்களில் இந்தியா திரும்ப தொடங்கியது . இந்திய அமைதிப்படை நினைத்து இருந்தால் அன்றே விடுதலை புலிகளை அழித்து இருக்கும் என்றும் ஆனால் அதன் நோக்கமே அது அல்ல என்றும் சில அரசியல் நோக்கர்கள் சொல்லுகிறார்கள் . ஆனாலும் அதன் விளைவாக காங்கிரஸ் தலைவர் , முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொலப்பட்டார் . அவரை கொலை செய்ததை தங்கள் தவறாகவும் விடுதலை புலிகளின் தலைவர் திரு. பிரபாகரன் செய்தியாளர்கள் கூட்டத்தில் சொல்லியதும் நாம் அறிந்து இருக்கிறோம் .
சரி .... இந்த சம்பவங்களுக்கும் , இப்பொழுது உள்ள சூழலுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது எனக்கு விளங்குகிறது . சரி தொடர்ந்து பேசுவோம் . 1990 ம வருடங்களுக்கு பிறகு கொஞ்ச காலம் அமைதியாக இருந்த இந்திய பெருங்கடல் இப்பொழுது கொஞ்ச வருடங்களாக கலங்கி போய் உள்ளதற்கு ஒரு காரணம் இருக்கிறது . அது தான் சீனா .
இந்திய பெருங்கடலில் இந்தியாவை சுற்றி சுற்றி பல இடங்களிலும் சீனா தனது ராணுவ படைத்தளத்தை நிறுவி வருகிறது . இந்த சூழ்நிலையில் சீனாவின் அடுத்த முயற்சியாக இலங்கையில் உள்ள Hambantota என்ற இடத்தில சீனாவின் நிதி உதவியுடன் ( 85% ) கட்டப்பட காத்து இருக்கும் மிகப் பெரிய துறைமுகம் இந்திய பெருங்கடலில் இந்தியாவுக்கு மிகபெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . ஏன் எனில் இதன் மூலம் சீன கப்பல்கள் எளிதாக இந்திய பெருங் கடலில் வலம் வரும் . இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு எதிரானது என்று அரசிய நோக்கர்கள் கருதுகிறார்கள் .
எனவே சீனாவின் இந்த ஊடுருவும் முயற்சியை எப்படியாவது தடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது . எனவே இலங்கையுடன் மிக நெருங்கிய நட்பை வளர்த்து கொள்ள இந்தியா விரும்புகிறது .
அப்படியானால் நாம் இலங்கைக்கு எதிராக தானே வாக்களிக்க வேண்டும் என்று நீங்கள் கேட்பது நியாயம் தான் . ஆனால் அப்படி இந்தியா ஒருவேளை வாக்களிக்க நேர்ந்தால் சீனா நேரடியாக இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க வழி கிடைத்து விடும் . அப்படி சீனா இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்தால் , சில சமயம் போர் கூட நிகழலாம் . அப்படி போர் நிகழ்ந்தால் வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரம் தலை கீழாக பாதாளத்தில் சரியவும் வாய்ப்பு உள்ளது . இன்றைக்கு பெரிய அண்ணன் அமெரிக்கா பொருளாதாரம் தலை கீழாக இருப்பதற்கு காரணமே தேவையில்லாத போர்கள் தான் என்பதை யாரும் மறக்க முடியாது .
அப்படி சீனா இலங்கையில் கால் வைத்தால் பெரிய அச்சம் தமிழர்களாகிய நமக்கு தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது . ஒரு பக்கம் அரசியல்வாதிகள் . இன்னொரு பக்கம் பொது மக்கள் . இன்னும் ஒரு பக்கம் சர்வதேச நெருக்கடி . இன்னும் ஒரு பக்கம் சீனா . இந்த இக்கட்டான சூழ் நிலையில் மிக முக்கிய முடிவை கவனமாக எடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது என்பது தான் உண்மை
அப்படியெனில் இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலையை மறந்து விடவேண்டுமா என்று கேட்டால் , நிச்சயமாக இல்லை . ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் உயிருக்கு இலங்கை பதில் சொல்லி தான் ஆகவேண்டும் .

I am watching your post for a long. There is no surprise by seeing your post like this.
ReplyDelete:(
Dear Friend, Thank you for your regular visit and your comment...
Deleteசோ மற்றும் சுப்பிரமணியன் சாமி மாதிரியே சொல்லியுள்ளீர்கள்.
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
மிகப் பெரிய எழுத்தாளர்களிடம் தயை கூர்ந்து என்னை ஒப்பிடாதீர்கள் . சாதாரண குடிமகனுக்கு தோன்றும் கருத்துகளை உண்மையாய் கூறும் சாதாரண பதிவன் தான் நான் ....
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
ஐயா இந்த சப்பைக் காரணங்களை உங்கள் அரசியல் வியாதிகளின் வியாக்கியனம் போலவே எழுதியிருக்கின்றீர்கள். இன்று நேற்றல்ல காலாதி காலமாக சிங்கள இனவெறி அரசு இந்தியாவிற்கு சார்பாய் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை. பாக்கிஸ்தான் இந்திய யுத்தத்தின் போது பாக் விமானங்களுக்கு எரிபொருள் இலங்கையிலிருந்தே கொடுக்கப்பட்டது. யுத்ததின் போது இந்திய எதிர்ப்பே இங்கு அன்று மேலோங்கி இருந்தது. எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கை என்னும் கொலைதேசம் இந்தியாவிற்கு உதவாது. தற்போது சிங்கள அரசு சீனாவிற்கு முக்கிய கேந்திர நிலையங்களை கொடுத்துவிட்டு இந்தியாவிற்கு கண்ணாமூச்சுக் காட்டுகிறது. நிச்சயமாக இந்தியா தமிழர் பக்கம் இருந்திருந்தால் உதவியிருந்தால் சீனாவினால் திருகோணமலையிலோ கச்சதீவிலோ ஊடுரூவியிருக்க முடியாது. ஊடூரூவ விட்டும் இருக்கமாட்டார்கள் தமிழர்கள். இனியும் இப்படிப்பட்ட கோணங்கித் தனமான கதையளப்புகளை விடுத்து, இன்னமும் காலம் கடந்து விடவில்லை இனியாவது தமிழர் சார்பான நிலைப்பாட்டை எடுக்க உங்கள் முட்டடாள் பிரதமருக்கு அழுத்தம் கொடுங்கள். அதுவே வருங்காலத்தில் வல்லரசுக்கனவுடன் இருக்கும் உங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு. உங்கள் காலடியில் உள்ள ஆபத்திற்கு தமிழீழமே சிறந்த மாற்றிடூ. பிரபாகரன் என்னும் வீரத்தலைவன் இருக்கும் வரை எம் தேசத்தில் எந்தவோரு வேற்று நாட்டு ஊடூரூவலும் இருந்ததில்லை. ஆனால் இன்று, இனி வருங்காலம். ஈழத்தமிழருக்கல்ல இந்திய தேசத்திற்கே ஆபத்து. புரிந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
நான் கோணங்கித்தனமான கதைகளை அள்ளி விடவில்லை . தற்பொழுதைய உண்மையான நிலையை உண்மையாக எழுதி உள்ளேன் . உங்கள் கருத்துகளும் நான் எழுதி உள்ள கருத்துகளை ஆதரிக்கறது ...
நன்றி
நீங்கள் சொல்வதை பாத்தா சீனா தான் பிரச்சனை புலி எல்லாம் ரொம்ப சாதுவான பிராணி.
ReplyDeleteபுலி தொடாந்து இருந்திருந்தால் அதனால் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஆசியாவுக்கே தீமை.
புலியால் ஒரு தமிழ் மீனவர் கூட தாக்கபட்டதில்லை, சிங்களவர்களால் எவ்வளவு தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் தெரியுமா? ஒரே நாள் இரவில் 25000 க்கு மேற்பட்ட ஈழ தமிழர்கள் சிங்கள படைகளால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
Deleteநண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
தமிழகத்தைவிட குட்டி நாடான இலங்கை உலகையே எதிர்த்து தைரியமாக நிற்கும் போது இந்தியா சீனாவிற்கு ஏன் பயப்படவேண்டும் ?
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...
நீங்கள் சொல்லுவது போல இந்தியா சீனாவிற்கு பயப்படுகிறது என்று அர்த்தம் கிடையாது . நமது நாடு யாருக்கும் பயந்தது கிடையாது . ஆனால் தேவை இல்லாத போர்களை தவிர்க்கவே விரும்புகிறது என்பது தான் உண்மை . எந்த நாட்டின் ராணுவத்திற்கும் ஈடுகொடுக்கும் வல்லமை நமது நாட்டின் ராணுவத்திற்கும் , ராணுவ வீரர்களுக்கும் உண்டு . சமாதானமான முடிவு பெறுவதே சால சிறந்தது என்பது இந்தியாவின் கருத்தாய் இருக்கலாம் என்பது எனது எண்ணம் . ஆனால் அதற்காக யாராவது இந்தியாவை சீண்டி பார்த்தால் அதற்க்கு அவர்கள் நிச்சயம் பதில் சொல்லவேண்டி இருக்கும் .
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
நண்பருக்கு வணக்கம் ,
ReplyDeleteதங்களின் வலைப்பதிவை பார்த்தேன் ....
வாழ்த்துக்கள் நண்பரே .... சிறந்த பங்களிப்பு உங்களுடையது ...
நன்றி
@Anand
ReplyDelete//புலியால் ஒரு தமிழ் மீனவர் கூட தாக்கபட்டதில்லை//
Al-Qaida ம் ஒரு தமிழ் மீனவர்கள் தாக்கபட்டதில்லை. அதனால் Al-Qaida ஆதரிக்க முடியுமா? புலிகளும் அதே மதிரி மேசமான பயங்கரவாதிகள் தான்.
எல்லை மீறி இலங்கை கடல் பிரதேசங்களுக்குள் செல்லும் தமிழர்கள் தாக்கபட வேண்டியதில்லை. ஆனால் தமிழக அரசியல்வாதிகளுக்கு குளிர்காய்வதிற்காக அப்படியான சம்பவங்கள் தேவைபடுகிறது. ஒரே நாள் இரவில் 25000 இலங்கை தமிழர்கள் கொல்லபட்டது என்ற உங்கள் கணக்கு சரியானதா? புலிகள் மக்களை தங்களது பாதுகாப்பு கேடயங்களாக பிடித்து வைத்திருந்தனர். எவ்வளவு மக்கள் இறக்கிறார்களோ அவ்வளவுக்கு தங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் அமெரிக்கா தலையிடும் என்று செயல்பட்டார்கள்.
தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவு .
ReplyDelete-Madhan
Dear Sir,
DeleteThank you for your visit and comment
Do not forget the history Mr. Irudhayam. No time, Sri lanka has helped us whether be it in war times or normal situations. When you write your opinion in a social blog, read the history and analyse it to some extent. As an anonymous noted above, China was never able to enter Srilanka until LTTE organization was in Srilanka.
ReplyDeleteThe sad thing is that India always wanted to help Srilanka. But, Srilanka always played double-minded games as being friend to our neighbours like China and Pakistan.
You blog writers, please do understand....
Dear Sir,
Deletethank you very much for your visit and constructive discussion.
As you said , i know little bit about the history. This article is written based on the current situation of India. you may agree with me . I am not supporting Srilanka or LTTE. But i am worrying about the poor innocent Tamil people and our Country "INDIA". Anyway there is a lot to write. But i hope i can write in future about this issue more.
Anyway , thank you for your valuable suggestion which will lead me to write more with historic evidence.
Thank you..