Monday, 5 March 2012

அம்மா அங்கே போ போ .... ! காக்கா இங்கே வா வா .....!


பல வருடங்களாக , பல மாதங்களாக எனது மனதை மிகவும் அரித்து கொண்டு இருந்த இந்த விடயம் இன்றும் இது சம்பந்தப்பட்ட விடயத்தை நேரில் பார்த்தவுடன் நொந்து போனதின் விளைவு தான் இந்த பதிவு ........



வயதான ஒரு தாயாருக்கு மூன்று பிள்ளைகள் . மிகவும் கஷ்டப்பட்டு அந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி , திருமணம் செய்வித்த உடன் பிள்ளைகள் எல்லாரும் , தனது வயதான தாயை விட்டு விட்டு தூர தேசத்திற்கு குடும்பத்தோடு வேலைக்கு சென்று விட்டார்கள் .  தாய் மிகவும் வயது முதிர்ந்து , நோய் வாய் பட்ட போதிலும் , பிள்ளைகளுக்கு வந்து பார்க்க நேரம் இல்லை .  யாரும் பொருட்படுத்தவும் இல்லை ....

 
இந்த நிலையில் அந்த வயதான தாய் இறந்து போனார்கள் .  மேள தாளம் , வேட்டுகளுடன் ( சீக்கிரம் போய் விட்டார் என்ற சந்தோசமா ....? ) இறுதி ஊர்வலமாய் கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டார் ....


 இறந்து 15 ம நாள் நினைவு விழா , இன்று பிள்ளைகள் அனைவராலும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது .  தாயை அடக்கம் செய்த இடத்திற்கு வந்த பிள்ளைகள் , சில சம்பிராதய சடங்குகளை செய்த பின்பு , தாய்க்கு பிடித்த சில பலகாரங்களை கல்லறையில் படையலாக படைத்தனர் .  அதற்க்கு பிறகு தான் இந்த சம்பவம் நடைபெற்றது .

 
தாயின் கல்லறையில் இருந்து கொஞ்சம் உணவை எடுத்து கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி போய் கா கா என்று கத்த ஆரம்பித்து விட்டார்கள் .  அட ... என்ன இது என்று பார்க்கும் பொழுது  . அங்கிருந்த சில பெரிய ( ? ) நபர்கள் பேசிக்கொண்டார்கள் .  இந்த அம்மா ஏன் இன்னும் வந்து படையலை சாப்பிடவில்லை என்று .  அட .....! ஆமா .....! அந்த அம்மா காக்கா ரூபத்தில் வந்து சாப்பிடுவார்களாம் .....  பெரும் போராட்டத்திற்கு பிறகு ஒரு காக்கா வந்து ஒரு வாய் சாப்பிட்டதும் , அங்கிருந்தோர் முகத்தில் எல்லாம் என்ன ஒரு மகிழ்ச்சி ....!


அட ... பாவிகளா ...! 10 மாதம் சுமந்து பெத்த தாய் நோயில் கிடக்கும் பொழுது வந்து பார்பதற்கு நாதியில்லை  , அந்த தாயின் கடைசி நிமிடத்தில் கூட உணவளிப்பதற்கு யாரும் வரவில்லை .  இப்பொழுது காக்காவை கூப்பிடுகிறார்களாம் .....! என்ன கொடுமை .....

அம்மா நீ போ ...போ......!   காக்கா இங்கே வா.....வா......


2 comments:

  1. அட ... பாவிகளா ...! 10 மாதம் சுமந்து பெத்த தாய் நோயில் கிடக்கும் பொழுது வந்து பார்பதற்கு நாதியில்லை , அந்த தாயின் கடைசி நிமிடத்தில் கூட உணவளிப்பதற்கு யாரும் வரவில்லை . இப்பொழுது காக்காவை கூப்பிடுகிறார்களாம் .....! என்ன கொடுமை .....

    அம்மா நீ போ ...போ......! காக்கா இங்கே வா.....வா......


    நல்லாக் கேட்டீங்க நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா , தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி