Monday, 10 September 2012

உதயகுமாரின் கபட எண்ணத்தின் விளைவே கூடங்குளம் கலவரம்


கூடங்குளம் அணுமின் நிலயத்திற்கு எதிரான மக்களின் போரரட்டம் பற்றியும் ,  அந்த போராட்டத்திற்கு மக்களை வஞ்சகமாக உபயோகித்து வரும் திரு. உதயகுமாரை குறித்தும் பல பதிவுகள் நான் எழுதியுள்ளேன் .  இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய " கிழிகிறது திரு. உதயகுமாரின் போலி முகமூடி - ஒரு பகீர் ரிப்போர்ட்" என்ற பதிவில் எப்படி உதயகுமார் கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார் என்பதை நான் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தேன் .  இந்த சூழலில் இன்று அந்த காரியம் நடந்தே விட்டது.


இந்த கலவரத்தை உதயகுமார் தான் திட்டமிட்டு நடத்தினார் என்பதை நான் எழுதுவதற்கு பின்வரும் காரணங்கள் தான் உள்ளது .

முற்றுகை போராட்டம் என்று அறிவித்த திரு. உதயகுமார் மக்களை குறிப்பாக பெண்களையும் , குழந்தைகளையும் கடற்கரையோரம் அழைத்து வந்தது அவர் செய்த கபட நாடகத்தின் உச்ச கட்டம் .  இதை அறியாமல் மக்கள் அவர் பின்னால் நடந்து வந்தது வேதனையின் உச்சம் என்று தான் சொல்லமுடியும் .  நான் இப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருக்கிறது . 



ஒரு வேளை முற்றுகை போராட்டம் நில வழியாக நடந்து இருந்தால் , காவல் துறை மிக எளிதாக அவர்களை தடுத்து எந்த சேதமும் இல்லாமல் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள்  ஆனால் இவரோ பெண்களையும் , குழந்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கூட்டத்தை கடற்கரைக்கு கொண்டு வந்தது ஒரு மாபெரும் சூழ்ச்சி.  ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் எனில் , ஒருவேளை அவர் திட்டமிட்டபடி ஒரு பெரும் கலவரம் கடற்கரையோரப் பகுதியில் நடந்து இருந்தால் , கூட்ட நெரிசலில் சிக்கி பெண்களும் , குழந்தைகளும் கடலில் குதித்தால் அவர்கள் கதி என்ன என்று நினைத்து பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை.  எப்படி மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் சம்பவம் நடந்ததோ அப்படி நடந்திருக்கும் .  ஆனால் கடவுளின் பெரிதான ஆசியால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.  காவல்துறை இதை உணர்ந்து மெதுவாக செயலபட்டதால் அப்படி ஒரு பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.  ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடத்திருந்தால் உதயகுமார் அதை பெரிய பிரச்சினையாக எடுத்து தன போராட்டத்தை விரிவுபடுத்தலாம் என நினைத்திருக்கலாம் .

நான் இப்படி பேசுவதும் , எழுதுவதும் திரு. உதயகுமார் மீது நான் செலுத்தும் அபாண்ட குற்றசாட்டுகள் என்று நீங்கள் நினைக்கலாம் .  அப்படி என்றால் ஏன் கேள்விக்கு பதில் கூறுங்கள் .
  1. சின்னச்சிறு பிள்ளைகளை கடலோரம் அழைத்து வந்தது ஏன் ?
  2. பெண்களையும் , சிறு பிள்ளைகளையும் முன் நிறுத்தியது ஏன் ?
  3. தன்னை நம்பி வந்த ஜனங்கள் கலவரத்தில் சிக்கி இருக்கும் பொழுது திருடன் போல தப்பி சென்றது ஏன் ?
  4. காந்திய போராட்டம் என்று தன்னை வர்ணிக்கும் உதயகுமார் , காந்தியை போல செய்யாமல் தலைமறைவானது ஏன் ?
  5. நேற்று போராட்டத்தின் போது , பலமுறை காவல்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் , வர மறுத்துவிட்டு இன்று பேச்சுவார்த்தைக்கு விழைவது ஏன் /
இப்படி பல கேள்விகளுக்கு உதயகுமார் சொல்லும் பதில்களை இன்னும் நம்புவதற்கு அப்பாவி ஜனங்கள் இருக்கும் வரை திரு. உதயகுமார் போன்ற கபட தாரிகளின் நாடகம் இன்னும் பல அப்பாவி ஜனங்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டே தான் இருக்கும் .



எனது தாழ்மையான கோரிக்கை ஒன்றே ஓன்று தான்
  • மக்களே ,  உங்களை வஞ்சித்து நடத்தி உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி உங்களை தவிக்க விட்டு ஒளித்து ஓடி போன திரு. உதயகுமார் உங்கள் நலனை விரும்புகிறவர் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து உங்களின் போராட்டத்தை  கைவிட்டு அரசோடு பேச்சு வார்த்தை நடத்துங்கள்
  • காவல்துறையே , தயை கூர்ந்து வஞ்சிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , அவர்களை வஞ்சித்து இதுவரை நடத்திய திரு, உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டத்தின் மீது வெகு விரைவில் நடவடிக்கை எடுங்கள் .

71 comments:

  1. @ selvaraj : சரி . ஐயா . தங்களின் அறிவுரைப்படி திரு, உதயகுமாரின் கபட எண்ணத்தின் விளைவே கூடங்குளம் கலவரம் என்று மாற்றவா ? ( திரு, என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு உள்ளது )

    ReplyDelete
  2. ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா? மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?

    ReplyDelete
  3. @ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் .

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    குடியரசு நாடு என்பதால் தான் இந்த போராட்டத்தை இவ்வளவு காலம் அரசு பொறுமையுடன் அணுகியது என்பதை நீங்கள் மறந்து விடகூடாது . ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களின் அச்சத்தை போக்க பல விதங்களிலும் மத்திய , மாநில அரசுகள் தன்னால் ஆனா மட்டும் முயற்சித்தது . ஆனால் , மக்களோ தன்னை தவறாக நடத்தும் திரு. உதயகுமாரின் மாயவலையில் விழுந்து விட்டதால் இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமாக தான் எடுக்கப்பட்டு உள்ளது . குடியாட்சி என்று சொல்லி மக்களை நக்சல்கள் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம் என்பதும் , அதை அரசு தடுக்க கூடாது என்பது கொஞ்சம் கடினம் தான் நண்பரே ...

    ஆனால் இந்த நடவடிக்கையில் மக்களை தூண்டி விட்ட திரு. உத்ய பட்டை கொண்டார் ஆனால் தூண்டப்பட்ட மக்கள் மாட்டி கொண்டார்கள் . அது தான் வேதனை

    ReplyDelete
  4. 55 வருடம் 20 அணு உலைகள் மூலம் செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 2.7 சதவீதம் மட்டும் தானே ? இன்னும் எத்தனை வருடங்கள் கழிந்தால் எத்தனை அணு உலைகளை வைத்தால் நம் மின் உற்பத்தியில் பெரும்பான்மையை அணு உற்பத்திகள் செய்ய இயலும்?

    இயக்க செலவை மட்டும் வைத்து கொண்டு அணு மின் உற்பத்தி மலிவானது என்று டமாரம் அடிப்பது என்ன நியாயம். நிர்மான செலவு எங்கே போனது? எங்கே 20 அணு உலைகளின் மொத்த நிர்மான செலவுகளையும் அரசு மக்களிடம் பட்டியலிட்டு காட்ட தயாரா?

    பின்னர் எத்தனை வைத்து கொண்டு அணு மின் சக்தி இலாபம் தரும் என்ற பிம்பத்தை உருவாகுகிறார்கள் . என்ன இலாபத்தை தந்து இருக்கிறது . இந்திய கணக்குத் தணிக்கை முதன்மை அலுவலர் இதன் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்தார். அவர் தனது பரிசீலனையின் முடிவாக, “மார்ச் 1998 முடிய ரூ.5291.48 கோடிகளை செலவழித்து இந்தச் செயல் திட்டம் அளித்த கூடுதல் மின் உற்பத்தி பெரிய பூச்சியமே” என எழுதினார். 2009ம் ஆண்டு வரையிலும் கூட இந்த அணுமின்சக்தி இந்திய மொத்த மின் உற்பத்தியில் அதே 3% அளவுக்கே நீடிக்கிறது.

    இவ்வளவு இலாபமே கொடுக்காத தொழிற்சாலையை வைத்து கொண்டு என்ன தான் செய்கிறீர்கள் ?? இவ்வளவு செலவு செய்ததற்கு பதிலாக மாற்று மின் சக்தி திட்ட ஆராய்ச்சியை எப்பவோ முடுக்கி விட்டு இருந்தால் எப்பவோ அதன் முடிவை அறிந்து அதை செயல் படுத்தியும் இருக்கலாமே . எவனோ வல்லரசு நாடுகள் துப்பி போட்ட தொழில்நுட்பத்தை வைத்து கொண்டு நாங்களும் வல்லரசு ஆக போகிறோம் என்று எத்தனை காலம் தம்பட்டம் அடிப்பீர்கள் ? தொழில்கள் செய்ய மின்சாரம் கண்டிப்பாக தேவை . வீட்டு மற்றும் தெரு உபயோகங்களுக்கு ஏன் புதுப்பிக்க தக்க மூலங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய வைத்து மின் தேவையை குறைக்கலாமே. மின் தேவைகளை குறைக்க , மின் இழப்புகளை குறைக்க இது வரை என்ன ஆராய்சிகள் செய்ய படுகிற??து. அது எந்த அளவிற்கு செய்யபடுகிறது? . இதை எல்லாம் செய்யாமல் அணு உலை வைத்தால் சரி ஆகி விடும் என்றால் நாளை மின் தேவை அதிகரிக்க அதிகரிக்க ஒவ்வொரு ஊரிலும் அணு உலைகளை அமைப்பீர்களா என்ன ? என்ன ஒரு அருமையான கட்டமைப்பு இங்கு . அரசுகளும் பன்னாட்டு நிறுவங்களின் மாய வலையில் மக்களை தெளிவாக விழ வைக்கின்றன . சூரிய ஒளி சக்தி ஒத்து வராது என்று மேற்கத்திய நாடுகள் சொன்னால் சரி . அவர்களின் தட்ப வெப்பம் அவ்வாறு உள்ளது. வருஷத்தில் 300 நாட்கள் வெப்பம் தாளாத அளவில் உள்ளோம் . அனால் இங்கு சாத்தியமில்லை என்று வாதிடுகிறோம் . சஹாரா பாலைவனத்தில் ஐரோப்பிய நாடுகள் செய்ய முடியும் .ஆனால் இது இங்கு சாத்தியமில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ??? இதை பற்றிய ஆராய்சிகளை மேற்கொண்டு இருந்தால் அதை வெற்றிகரமாக எப்பவோ இந்தியா முடித்து இருக்கும். வல்லரசு நாடுகள் நம்மிடம் பிச்சை கேட்டு நின்று கொண்டு இருந்து இருப்பார்கள். ஆனால் அவனிடம் பிச்சை வாங்கி கொண்டு எத்தனை வருடம் வல்லரசு வல்லரசு என்று கூவி கொண்டே இருப்பீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . நீங்கள் சில நல்ல கேள்விகளை கேட்டு உள்ளீர்கள் என்றே கருதுகிறேன் , அவற்றிற்கான பதிலை நிச்சயம் நாம் பெற்று கொண்டே ஆக வேண்டும் .

      //55 வருடம் 20 அணு உலைகள் மூலம் செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு வெறும் 2.7 சதவீதம் மட்டும் தானே ?//
      உண்மை . நீங்கள் கூறியது போல இந்தியாவின் மின் உற்பத்தியில் தற்பொழுது அணுமின் சக்தி 3 சதவீதம் மாத்திரமே . காரணம் என்னவென்றால் சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவின் மின் உற்பத்தியில் குறிப்பிட தகுந்த அளவு மைல் கல்லை எட்ட முடியவில்லை . 1950 - 1985 வரை இந்தியாவின் மின் உற்பத்தி குறிப்பிட தகுந்த அளவு உயரவில்லை . கடந்த இருபது வருடங்களில் மாத்திரம் 120 GW ( 1 . 20 லட்சம் MWe ) திறனுள்ள மின் உறைபதி நிலையங்கள் அமைக்கப்பட்டது . இதன் காரணமாக 1991 ல் 66000 MWe ஆக இருந்த மின் உற்பத்தி திறன் 2001 ம ஆண்டில் 1 லட்சம் MWe மின் உற்பத்தி திறனாகவும் மற்றும் 2011 ம ஆண்டில் 1 . 85 லட்சம் MWe மின் உற்பத்தி திறனாகவும் உயர்த்தப்பட்டது . இந்த கால கட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் நிலையங்கள் எல்லாம் அனல் மின் நிலையங்களாக தான் இருந்தன . அணுமின் உறைபதி செய்யும் திறன் நமக்கு 1967 ம் ஆண்டு கிடைத்தது என்றாலும் , இந்தியாவின் பெரும்பாலான திட்டங்கள் அனல் மின் நிலையத்தை சார்ந்து தான் இருந்தன என்பது உண்மை . அதனால் அணுமின் திட்டங்கள் அவ்வளவாக இந்த கால கட்டத்தில் வளர்ச்சி அடையவில்லை என்று கூட சொல்லலாம் . ஆனாலும் அணுசக்தியில் இந்தியா தோரியம் கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம் என Dr . பாபா அப்பொழுதே சொன்னார் . இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் இந்திய நிலக்கரி குறைவான திறன் உடையதாகவும் , அதிக சாம்பலை வெளியிடுவதாகவும் இருந்ததால் , அனல் மின் நிலையங்களுக்கு ஒரு மாற்று உண்டாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்ப்பட்டது . இந்த சூழ்நிலையில் நமது கையிருப்பில் உள்ள நிலக்கரியும் குறைந்து கொண்டே வருகிறது . அதை குறித்து ஏற்க்கனவே நான் எழுதியுள்ள "22000 MWe மின்சாரம் குறையுமா ...? - ஒரு அதிர்ச்சி தகவல்" ( http://naanoruindian.blogspot.in/2012/02/22000-mwe.html ) என்ற கட்டுரையை பாருங்கள் . இப்படி இருக்க நமது மொத்த மின் உறப்தியில் 66 சதவீதம் உள்ள அனல் மின் நிலையங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் மின்சக்தி குறையும் ஆனால் அதே நேரம் நமது அன்றாட மின்தேவை அதிகரிக்கும் . எனவே தான் பசுமையான 24 மணி x 7 நாட்கள் x 52 வாரங்களும் மின்சாரம் தரும் அணுசக்தி அந்த இடத்தை நிரப்பும் என்று நம்பிக்கை கிடைத்தது . எனவே வரும் காலங்களில் இந்த 3 சதவீதம் கணிசமான அளவு உயரும் . அதாவது தற்பொழுது 4800 MWe ஆக இருக்கும் அணுமின் நிலையங்களின் உற்பத்தி திறன் 2030 ம் ஆண்டுக்குள் 30000 Mwe ஆக உயர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது

      Delete
    2. //இயக்க செலவை மட்டும் வைத்து கொண்டு அணு மின் உற்பத்தி மலிவானது என்று டமாரம் அடிப்பது என்ன நியாயம். நிர்மான செலவு எங்கே போனது?//

      நீங்கள் இந்த கேள்வி என்னை ஆச்சரியப்பட தான் வைக்கிறது . அணுமின் நிலையங்களினால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அதன் இயக்க செலவு மாத்திரம் அல்ல , அதன் நிர்மான செலவு மற்றும் De commissioning செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு தான் நிர்ணயம் செய்யப்படுகிறது . என்ன உங்களால் நம்ப முடியவில்லையா ? சரி ஒரு சின்ன கணக்கு போட்டு பார்ப்போம் .

      கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ( 2 x 1000 Mwe ) ஆகியவற்றை நிர்மாணிக்கும் தொகை 30000 கோடி ( Approx ) என்று வைத்து கொள்ளுவோம் . ஒரு 1000 MWe அணுமின் நிலையம் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 72 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கும் ( தகவலுக்கு : http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_24.html ) . அப்படியானால் ஒரு வருடத்தில் 864 கோடி யூனிட் மின்சாரம் ஒரு 1000 MWe அணுமின் நிலையம் தயாரிக்கும் . அப்படியானால் இரண்டு அணுமின் நிலையங்களும் சேர்ந்து ( 2 x 864 ) = 1728 கோடி யூனிட் மின்சாரம் ஒரு வருடத்தில் தயாரிக்கும் . ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூபாய் 3 என்று வைத்து கொள்ளுவோம் . அப்படியானால் ஒரு வருடத்தில் இரண்டு அணுமின் நிலையங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 5184 கோடி ரூபாய்க்கு மின்சாரம் தயாரிக்கும் . இதில் ஒரு 1184 கோடியை செலவு மற்றும் பராமரிப்பு பணிகள் , less capacity factor ( இதுவே அதிகம் தான் ) என்று வைத்து கொண்டாலும் ஒரு வருடத்தில் நிகர லாபமாக 4000 கோடி ரூபாய் கிடைக்கும் . அப்படியானால் 7 வருடத்தில் அணுமின் நிலயத்தின் மொத்த நிர்மான செலவும் கிடைத்துவிடும் . ஒரு அணுமின் நிலயத்தின் ஆயுள் காலம் 40 வருடங்கள் என்றே வைத்து கொள்ளுவோம் ( 60 வருடங்கள் வரை செயல்படும் ) அப்படி இருந்தால் கூட மீதி இருக்கும் 33 வருடத்தில் கிட்டத்தட்ட 132000 கோடி ரூபாய் கிடைக்கும் . அதுவே 60 வருடம் ஓடினால் ( 53 x 4000 ) = 212000 கோடி ரூபாய் கிடைக்கும் . அப்படியானால் இந்த தொகை Decommissioning cost யும் சேர்த்து என்பது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் .

      ஆனால் இந்த பணம் அரசின் குறிக்கோள் அல்ல , ஆனால் இதன் மூலம் 40 வருடத்தில் தயாரிக்கப்படும் 69120 கோடி யூனிட் ( 1728 x 40 வருடம் ) மின்சாரமும் , தனால் ஏற்ப்படும் தொழில்வளமும் , அதனால் ஏற்ப்படும் வாழ்க்கை தரமும் அரசுக்கு முக்கியம் .

      யோசித்து பாருங்கள் . இது மலிவானது தானே . நன்றி

      Delete
    3. நாம் ஏன் சூரிய ஒளியால் மின்சாரத்தை தயாரிக்ககூடாது என்று கேள்வி கேட்பது சரியே ..... நிச்சயமாக நாம் தயாரிக்கலாம் .....இந்தியாவும் சூரிய ஒளியின் மூலமாக வரும் காலத்தில் 20000 Mwe மின்சாரம் தயாரிக்க முடிவு செய்து உள்ளது. 2020 ம் வருடத்திற்குள் 20 மில்லியன் சதுர மீட்டர் அளவுக்கு சூரிய ஒளி தகடுகள் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது .
      ஆனால் சூரிய வெளிச்ச மின்சாரத்தில் சில குறைபாடுகள் உள்ளன . அதாவது சூரிய ஒளி மின் தகடுகள் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு பாதிக்கப்படுமானால் மிக அதிக அளவு இடம் நமக்கு தேவைப்படும் . அந்த இடத்திற்கு நாம் பாலைவனங்களை பயன்படுத்தலாம் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது ..... சரி .... பிறகு அப்படி செய்தால் என்ன என்று நமக்கு தோன்றலாம் .....
      பொதுவாக மின்சாரத்தில் On _ Grid மற்றும் off - grid என்று நாம் சொல்லுவது உண்டு . On _ Grid என்றால் , மின்சாரம் தயார் செய்யப்பட்டு மின் கடத்தும் கம்பிகளின் வழியாக நாம் மின்சாரத்தை வேறு இடத்திற்கு நாம் கடத்த முடியும் . ஆனால் off - grid என்று சொல்லப்படுவது என்னவெனில் நாம் மின்சாரத்தை தயாரித்து அதே இடத்தில பயன்படுத்தி ஆகவேண்டும் . இப்படி on - grid ல் மின்சாரம் செலுத்தப்பட வேண்டுமானால் அதிக மின் அழுத்தத்தில் மின்சாரம் செலுத்தப்பட வேண்டும் . ஆனால் சூரிய ஒளி மின்சாரம் இப்படி அதிக அழுத்தம் உடைய மின்சாரமாக கிடைப்பது கடினம் . எனவே பாலைவனத்தில் வைத்து மின்சாரம் தயாரித்து அதை நாம் மின் கம்பிகள் வழியே கடத்தினால் , Transimission loss தவிர்த்து எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்

      Delete
  5. மின்வெட்டை காரணம் காட்டி அணு மின் உலையை திறக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு, எந்த ஒரு அணு உலை நிலையமும் இல்லாத மானிலத்தில் எல்லாம் மின்வெட்டு அளவு மிக குறைவாக இருப்பது எப்படி ? குஜராத் அரசு தன் உபரி மின்சாரத்தை கொடுக்க முன் வந்த போதும் மத்திய மின் பகுப்பில் அதை தமிழகத்திற்கு கொண்டுவர மத்திய அரசு தடை போடுவது ஏன்?? பாகிஸ்தானுக்கு 2000 மெகாவாட் மின்சாரம் அளிக்க பிரதமர் ஒப்புக்கொண்டது எப்படி ?

    ஆக இது ஒரு திட்டமிட்ட மின் வெட்டு என்பது தெரியவில்லையா ?

    ReplyDelete
    Replies
    1. எந்த அணுமின் நிலயமும் இல்லாத மாநிலங்களில் மின் பற்றாக்குறை இல்லை என்று சொன்னீர்கள் ஆனால் எந்த மாநிலம் என்று சொன்னால் நாம் பேசுவதற்கு வசதியாக இருக்கும் . குஜராத் அரசு உபரி மின்சாரத்தை கொடுக்க முன் வந்தது என்று சொல்லுகிறீர்கள் ஆனால் அதே குஜராத் அரசு தன மாநிலத்தில் கக்ராப்பாரா என்ற இடத்தில இன்னும் இரண்டு அணுமின் நிலையங்கள் தொடங்க அனுமதி அளித்துள்ளது . அது போக மிர்த்தி விர்த்தி என்ற இடத்தில 2 x 1000 Mwe திறனுக்கான அணுமின் நிலையம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளது . உபரியாக மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் என்று நீங்கள் சொல்லுவது இன்னும் பல திட்டங்களை ஏன் அமைக்கிறது என்றும் , நீங்கள் குறிப்பிட்ட மாநிலம் இன்னும் 4 நான்கு அணுமின் நிலையங்களுக்கு அனுமதி கொடுத்து இருப்பதினால் , நாமும் ஏன் கொடுக்ககூடாது என்றும் நீங்கள் யோசிக்கலாமே ..

      நன்றி

      Delete
  6. எத்தனையோ முறஒ எழுதியாகிவிட்டது. இதை விட அறப்போராட்டத்தை சிறப்பாக நடத்த முடியாது. பல லட்சம் கோடி ஊழல் செய்தவன் போலிஸ் பாதுகாப்போடு வெளியே உலவுகிறார்கள் நாடெங்கும். அது தேசதுரோகமா அல்லது இதுவா? மின்சாரம் வேண்டும் எனக்கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் கூடங்குளத்திலிருந்துதான் வேண்டும் எனக்கேட்க எவருக்கும் உரிமையில்லை.

    ReplyDelete
  7. நண்பருக்கு வணக்கம் ,

    உங்களின் கருத்துகள் ஏற்று கொள்ளமுடியாதவை . அன்பான அப்பாவி மக்களை ஏமாற்றி அல்லது பொய்யான காரியங்களை கூறி திரு. உதயகுமார் போராட வைத்துள்ளார் . அவரின் பொய்களை குறித்து நான் விளக்கமாக இதே வலைப்பூவில் பல கட்டுரைகள் எழுதி உள்ளேன் . இன்னும் எழுதுவேன் . நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள் . இப்பொழுதும் இரண்டு கட்டுரைகள் எழுதி கொண்டு தான் இருக்கிறேன் .

    ஓன்று : கூடங்குளம் அணுமின் நிலயத்தில் தேவையான நன்னீர் வசதி இல்லை என்ற அவரது சமீபத்திய குற்றசாட்டு குறித்து
    இரண்டாவது : உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டாளிகளின் தொடர்புகள் குறித்து .

    வாசியுங்கள் , பின்பு விவாதியுங்கள் . நன்றி

    ReplyDelete
  8. அணு சக்தியின் அடிப்படை தெரிந்த எவரும் அணு உலைகளை ஆதரிப்பது எளிதல்ல. இதற்கு மேதையாக இருக்க வேண்டியதல்ல. அணு சக்தி தொடர்பான எந்த முயற்சியிலும்(அணுமின் உருவாக்கம் உட்பட) கதிரியக்கமும், அணு கழிவும் கட்டாயம் உண்டு. ஒரு உயர்நிலை பள்ளி மாணவன் கூட இதை அறிவான். கதிரியக்கத்தில் பாதுகப்பான அளவு என்பது எதுவும் அல்ல என்பது தான் அறிவியல் உண்மை. அணு மின் நிலையம் சுற்றிலும் எற்படும் கதிரியக்கம் பாதுகாப்பான அளவில் உள்ளது என மேதைகள் கூறினாலும் உணமை எதுவென்றால் மித அளவு கதிரியக்கமாக இருப்பினும் மனித உடல் அதை தொடர்ச்சியாக எதிர்க்கொண்டால் அது ஆபத்து தான். அணு கழிவுகலை இயற்கைக்கு ஊறு செய்யாது அழிக்கும் முறை உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அவை அழியும் வரை பாதுகப்பாக வைப்பதற்கும் சரியான முறைகள் எங்கும் இல்லை. இதுவே உண்மை. முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் மட்டும் இயங்கும் அணு மின் நிலையதின் அணு கழிவுகலை அழிக்க ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆகும். மற்ற மாநிலங்கள் புறக்கணித்த இத்திட்டம் நம் தமிழர்களின் அசட்டையாலும் மற்றும் மக்களை பற்றி கவலைபடாத பதவி பேராசை கொண்ட தமிழ் அரசியல்வாதிகளினாலும் எற்பட்ட சாபம்.

    ReplyDelete
  9. அண்ணே.. சூப்பரு அண்ணே... அறிவுக்கண்ண தொறந்து வச்சுட்டீங்க... இவ்வளவு நாள் ஏன் உற்பத்தி உயரலைன்னு கேட்டால் இனிமே உயர்ந்துருமாம்... உங்க பதிலை கொண்டு போயி தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு அங்கயே உக்காந்து பத்திரமா பாத்துக்கோங்க... ஏன்னா இனிமே வர்ற சந்ததிகள் இதைப் பார்த்து எப்படி எல்லாம் சமாளிக்கலாம், எப்படி எல்லாம் வெக்கமே இல்லாம பொய் சொல்லலாம்னு கத்துக்குவாங்க..

    அணுக்கழிவுகளை பாதுகாக்கவேண்டுமே, அதுக்கு என்ன செய்வீங்கலாம்? எங்க போவீங்களாம்? எவ்வளவு செலவு செய்வீங்கலாம்? அதுக்கு என்ன போட்டு வச்சு இருக்கீங்க? 40௦ வருஷம் இயங்குற ஆலையின் கழிவுகளை 1000௦௦ ஆண்டுகள் பாதுகாக்க வேண்டுமே... எங்கே அய்யா போய் கொட்டுவீர்?

    ReplyDelete
  10. நண்பர் முருகனுக்கு வணக்கம் ,

    எத்தனை தடவை இதே கேள்வியை ஒவ்வொரு இடுகையிலும் கேட்பீர்கள் . உடனே அணுக்கழிவு என்கிறீர்கள் . அதை குறித்து நான் ஏற்கெனவே உங்களுக்கு தெளிவுபட விளக்கியுள்ளேன் . இன்னும் நீங்கள் விளங்கி கொள்ள http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_18.html இணைப்பை பார்க்கவும் .

    அது எப்படி எத்தனை தடவை விளக்கினாலும் , அசராமல் விளங்காதது போலவே அதே கேள்வியை கேட்டு கேட்டு அசர வைக்கிறீர்கள்? நண்பரே , நான் எழுதிய கட்டுரைக்கு உங்களால் மறுப்பு ஏதும் சொல்ல முடியாத சூழல் வந்து விட்ட போதே , உண்மை உங்களை உறுத்துகிறது என்பதை நீங்களும் , நானும் , மக்களும் அறிவோம். புதிய புதிய கேள்விகளை கேளுங்கள் . நாம் விவாதிக்க எதுவாக இருக்கும்

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. அண்ணே.. டுபாக்கூர் அண்ணே... http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_18.html இந்த பதிவுல, அணுக்கழிவுகளை எப்படி கையாள்வது என்ற தகவலே இல்ல... சும்மா 5ஆம் வகுப்பு புத்தகத்துல இருந்து கதிரியக்கம்னா என்னன்னு போட்டு இருக்கீங்க ... நான் கேட்பது அணுக்கழிவுகளை பாதுகாக்க என்ன செய்யப்போகிறீர்கள்? கேள்வி புரியுதா? இதப் பத்தி நீங்க எதுவுமே இன்னும் கப்சா விடல... கேக்குற கேள்விகளுக்கு பதில் சொல்லாம திடீர்னு ஒரு ௬ மாசம் லீவு விட்டுட்டு போயிட்டேங்கன்ன திரும்ப வரும்போது அதையேதான் காப்பேன். இதுல என்ன பிரச்சனை உங்களுக்கு?

      Delete
    2. தயை கூர்ந்து மன்னிக்கவும் . தயை கூர்ந்து இந்த லிங்க் யை பாருங்கள் "http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_15.html "

      தவறை சுட்டி காண்பித்ததற்கு மிக்க நன்றி

      Delete
  11. குழந்தைகளையும் ஏன் போராட்டத்துக்கு
    அழைத்துக்கிட்டு வரணும்? சில புத்திசாலிங்க.... கேக்குறாங்க...

    சரிதான்......... குடும்பம் குடும்பமா போராட வரும் அன்னாடம்காச்சிகள் கைக்குழந்தைகளை மட்டும் பேபிசிட்டர் கிட்டயா விட்டுட்டு வருவான்.., அதிகாரத்தில் உள்ளவர்களை நம்பாட்டியும் அடிமட்டத்தில் வேலை பார்க்கும் போலீசையும் (பெண்) நம்பித்தானையா கைக்குழந்தைகளை தூக்கிட்டு வரான். ஆனா..... நம்ம முதலாளிகள் நல்லாத்தான் பழக்கப்படுத்தியிருக்காங்க நன்றியுள்ள விலங்குகளுக்கும் மேல....

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத அநேகம் கருத்துகளை தெரிவித்து உள்ளீர்கள் . ஆனாலும் பரவாயில்லை அவற்றிற்கு மறு உத்தரவு கொடுக்கவும் நான் ஆயத்தம்

      //குழந்தைகளையும் ஏன் போராட்டத்துக்கு
      அழைத்துக்கிட்டு வரணும்? சில புத்திசாலிங்க.... கேக்குறாங்க...//

      ஆமா , கேட்ப்போம் . குழந்தைகளை அழைத்து கொண்டு வந்தீர்கள் . சரி ...மகாத்மா வழியில் போராட்டம் நடத்துகிறோம் என்று வாய் கிழிய பேசின திரு. உதயகுமார் மகாத்மா போல கூட்டத்திற்கு முன்னாள் நிற்காமல் , குழந்தைகளை முன்னாள் நிற்க செய்து அவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டாரே . அதை தான் கேட்கிறோம் குழந்தைகளை ஏன் மனித கேடயமாக பயன்படுத்துகிறீர்கள் என்று ?

      உங்களின் வஞ்சகமான பேசினால் அப்பாவி ஜனங்களின் குழந்தைகளை போராட்டத்தில் பங்கு பெற வைத்து விட்டர்கள் , சரி பரவாயில்லை மானுடதிர்க்காக உழைக்கிறோம் என்று மார் தட்டுகிற நீங்கள் உங்கள் பிள்ளைகளை அல்லவா முதலாவது முன்னால் நிறுத்தவேண்டும் ? ஆனால் செய்யமாட்டீர்கள் . ஏன் என்றால் அப்பொழுது தானே உங்களை நம்பி பின்னால் வந்து பாதிக்கப்படும் அவர்களை காண்பித்து உங்கள் போராட்டத்தை வலுப்படுத்த முடியும் !

      இல்லைஎன்றால் நீச்சல் கூட தெரியாத பிள்ளைகளை கடல் பக்கம் அழைத்து வந்திருப்பீர்களா ? நீங்கள் செய்வீர்கள் ? எனது வார்த்தைகள் கொஞ்சம் உணர்ச்சி மிகுதி ஆகிறது . வருந்துகிறேன்

      Delete
  12. போராட்டம்.....

    பிறக்கும் போதே யாரும் போராட்ட வெறியுடனோ அல்லது உலக அறிவுடனோ பிறப்பதில்லை. அனுபவம்தான் கத்து கொடுக்குது. அந்த வகையில் பாத்தா உதயகுமாரிடம் சிறந்த மன உறுதியும் திட்டமிடலும் தளராத போராட்டமும் தெரியுது. தலைவர் பிறந்த திருவாருரிலோ தலைவி பிறந்த ஸ்ரீரங்கத்திலோ கூட அங்க உள்ள மக்கள் எல்லாரும் இவங்க ஒருத்தர் பின்னாடி நிப்பாங்களா?

    ஒன்னு பண்ணலாமே...கூடங்குளம் மக்கள்தான் விவரம் புரியாதவைங்க, ஆனால் அணு உலையை ஆதரிக்கும் மத்த மாவட்ட மக்கள் எல்லாம் சேர்ந்து எங்க ஊருல வைங்க எங்க ஊருல வைங்கன்னு ஒரு போராட்டம் பண்ணலாமே.... பண்ணுவாங்களா?

    கூடங்குளம் பகுதி மக்களும் நம்ம ஆளுங்கத்தானே.... போபால் மாதிரி ஏதாவது ஆச்சுன்னா அந்த பக்கம் போக நம் மனசு கூசாதா?

    நாட்டில் இருக்கும் எந்த அணு உலையிலும் இது வரை பிரச்சனை இல்லையாமே? யார் சொன்னது மக்களே......? அணு உலைகள் சம்பந்தமான எந்த செய்தியும் வெளியிடுவது சட்டப்படி தப்புன்னு சொல்லும் அரசுகள் சொன்னதா? வெளியில் தெரிய வந்தாதானே நமக்கு தெரியும்?. அந்த அணு உலைகளில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளிகள் சொன்னார்களா?.

    கரண்டு கிடைக்கலன்னா அதுக்கான வேறு பல திட்டங்களை செய்ய சொல்லி போராடாமல் வெறும் நாப்பது வருஷத்துல 75% உற்பத்தி கூட எட்ட முடியாத ஏகப்பட்ட செலவு செய்து காலத்துக்கும் பாதுக்காக்கப்பட வேண்டிய கழிவுகளை சுமக்க போறோமோ? குழந்தைகள் போகும் பேருந்தையும் , அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலையையும் கண்காணிக்க முடியாத அதிகாரிகள் எத்தனை வருஷத்துக்கு அணு உலை கழிவுகளை பாதுகாத்து கண் காணிக்க போறாங்க?.

    ReplyDelete
    Replies
    1. உண்மை பிறக்கும் போது யாரும் போர்ராட்ட வெறியுடனோ அல்லது உலக அறிவுடனோ பிறப்பது இல்லை . இந்த திரு. உதயகுமார் நீங்கள் சொன்னது போல திட்டமிட்டு மக்களை ஏமாற்றி விட்டார் என்பது உண்மை தான் . மக்கள் எப்படி அவரை நம்பினார்கள் என்பதை நீங்க் இந்த கட்டுரையில் காணலாம் http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post_20.html .

      அணு உலைகளின் தரம் , அவற்றின் பயன்பாடு குறித்து வேறு யாருக்கும் தெரியாது என நீங்கள் கூறுவதும் political sceince படித்த ஒரு மனிதருக்கு மாத்திரமே தெரியும் என நீங்கள் சாதிப்பதும் வேதனையின் உச்ச கட்டம்

      Delete
  13. வெறும் 250 மெகாவாட் தான் கிடைக்குமுன்னு பதவியில் உள்ளவர்களின் அறிக்கையே சொல்லுது. அதுவும் வி.ஐ.பி தொகுதிக்குத்தான் போவும். ஆக இன்னும் சில வருஷத்துக்கு பக்கிங்களுக்கு கரண்டு கிடைக்க போவதே இல்லை.

    இதை தவிர வேற திட்டம் என்ன இருக்கு? ஒன்னு செய்யலாமே......இன்னும் சில அணு உலைகளுக்கு போட்டிருக்கும் ஒப்பந்தத்தை சட்டுன்னு ரெடி செஞ்சு ரொம்ப படிச்சவங்க இருக்கும் கேரளாவில் ஒரு அணு உலை போட்டுட்டு.....அட போட கூட வேண்டாம் சும்மா இடம் ஒதுக்கிட்டு பாருங்கப்பா ரொம்ப படிச்சவங்களே ஒத்துக்கிட்டாங்கன்னு சொல்லி கிண்டலும் கேலியும் பண்ணலாமே? முடியுமா?.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கற்பனைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது . 250 MWe தான் கிடைக்கும் என்று யார் சொன்னது நண்பரே ? அதே போல VIP தொகுதிகளுக்கு போகும் என்று யார் சொன்னது .? இப்படி தான் அப்பாவி மக்களை எமாற்றுவீர்களோ ?

      Delete
    2. அண்ணே... அதன் அதிகபட்ச Capacitiyaeயே 1000௦௦௦ மெகா வாட்தான். இந்தியாவில் 20௦ வருடங்களுக்கு பின்பு இப்பொழுதுதான் அணு உலைகள் 75% உற்பத்தி நிலையே நெருங்குகின்றன... அப்படியென்றால்.. இந்த அணு உலையில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு கொடுத்ததுக்கு போக, நீங்கள் பிச்சை போடும் மின்சாரத்தின் அளவு.. 200 MWe௦௦ கூட வராது...

      எங்க கணக்கு சொல்லுங்க பார்ப்போம்... Ready.. Start Music.

      Delete
    3. அது எப்படி நண்பரே நீங்கள் அசாத்தியமாக புரியாது போலவே நடிக்கிறீர்கள் ? முன்பு ஒருமுறை அணுமின் நிலயங்கள் 40 % தான் மின்சாரம் தரும் என்றீர்கள் ( திரு. உதயகுமார் கூட அப்படி சொன்னார் . அதற்க்கு பதிலாக நான் தனி பதிவே எழுத வேண்டியதாய் இருந்தது ) . இப்பொழுது 75 % தரும் என்று கூட்டி உள்ளீர்கள் . நாளைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் உற்பத்தியை தொடந்தும் போது , என்னை போலவே உண்மையை நீங்கள் உணர்வீர்கள் . உங்கள் கணக்கு படி பார்த்தாலும் 200 MWe கணக்கு வரவில்லையே நண்பரே . குழம்பி போய் தான் இருக்கிறீர் என்று நினைக்கிறேன்

      Delete
    4. நான் குழம்ப வில்லை... நீங்கள் தான் மற்றவர்களைப் போல் என்னையும் குழப்ப நினைக்கிறீர்கள்... இந்த அணு உலையின் மூலம் நீங்கள் சொன்னபடியே 1000௦௦௦ Mwe வந்தாலும் அதில் தமிழகத்திற்கு வரும் பங்குதான் 250 Mwe. ஆனால்... அணு விஞ்ஞானிகள் சொன்ன கணக்குதான் "75% வரை உற்பத்தி வந்துள்ளது" என்றுள்ளது, அப்படி என்றால் வரும் 750௦ Mweல் தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும்? கணக்கு தெரியுமா?

      Delete
  14. அடுத்து என்ன?

    இத்தனை வருஷமா எங்க போனார் உதயகுமாரும், அந்த பகுதி மக்களும்? நல்ல கேள்விதான்....போன சுனாமிக்கு பின்ன, உலகத்தின் அந்த கோடியில் சின்ன பூகம்பம் வந்தாலும் சுனாமி வந்தாலும் வரும் என அறிக்கை வாசிக்கும் அதிகாரிகளும், பத்திரிக்கைகளும் போன சுனாமிக்கு முன்னாடி எங்க போயிருந்தாங்க?

    அது போலத்தான் அந்த பகுதி மக்கள் ஏற்கனவே சின்ன அளவில் போராடிக்கிட்டு இருந்தாலும் ஜப்பானே சிக்கி சின்னாபின்னமானதை பார்த்துட்டு ரொம்ப ஆவேசமாக கிளம்புனாங்க போராட.

    பொது மக்களுக்கான ரோடு போடும்போது ஒருத்தரின் வீட்டுக்கு பாதிப்பு வந்தா வழக்கு போடவும், தடை வாங்கவும் கட்சி தொடங்கி போராடவும் உரிமை இருக்கும் நாட்டில் மொத்த தமிழ் நாட்டுக்கும் இல்லாட்டியும் ஒரு ஊருக்கே வரும் பாதிப்புக்காக போராட உரிமை மறுக்க படுவதேன். அவர்களுக்கு எதிராக இத்தனை பொய்யும் புரட்டும் ஏன்?.

    அட பக்கி பய மக்களே.....ஒவ்வொரு தேர்தலின் போதும் அப்போதைய ஆளுங்கட்சிதான் அதிகளவில் பணம் கொடுக்குது, ஆனாலும் எதிர் கட்சிக்கும் பணமே கொடுக்காத மற்ற சில கட்சிகளுக்கும் நாலு ஓட்டாவது கிடைக்குதே எப்படி?

    அப்படி இருக்கும் போது ஒரு(பல) ஊரே ஒற்றுமையா இருந்து எந்த கட்சிக்கும் கட்டுப்படாமல் போராடுவதை பாத்தாலே தெரிய வேண்டாமா? அந்த போராட்டத்தின் நேர்மையை? .

    ReplyDelete
    Replies
    1. உரிமைக்காக இடிந்தகரை மக்கள் போராடுகிறார்கள் என்றும் இடிந்தகரை மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று போராடுகிறார்கள் என்றும் கூறப்படுவதை நான் தவறு என்று சொல்லவில்லை. அப்படியானால் எங்கோ மூலையில் இருக்கும் நக்சல் அமைப்புகள் இடிந்தகரையில் வந்து அரசுக்கு எதிரான பாடல்களை ஏன் பாடவேண்டும் ? இந்திய இறையாண்மைக்கு எதிரான திரு. உதயகுமாரின் சில நக்சல் கட்சிகள் இடிந்த்கரைக்கு ஏன் வரவேண்டும் ?

      ஐயா , செய்வதை எல்லாம் நீங்கள் திட்டமிட்டு செய்து விட்டு , எல்லாவற்றையும் அப்பாவி மக்கள் மீது போடும் உங்களின் வஞ்சகங்கள் வெளிப்படும் நாள் வந்து விட்டது

      Delete
    2. ஆகா... இடிந்தகரை மக்கள், தங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டு இருக்கிறார்கள், என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி....

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. உரிமைக்கு குரல் கொடுப்பவர்களை கலகக்காரர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும் கட்டுக்கதைகளை பரப்புவது ஆதிக்கசக்திகளின் வேலை... ஆதிக்கசக்திகளை ஆதரித்து எழுதிவருவது என்பது தாயைக் கூட்டிக் கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது எனபதையும் ஒப்புக்கொண்டால் நீங்கள் மனிதராகிறீர்கள்...

      Delete
    5. என்னங்க நீங்க இப்படி ஈசியா சொல்லிப்புட்டீங்க? அம்மா நக்சல் நடமாட்டம் தமிழகத்தில் இல்லைன்னு சொல்றாங்க... நீங்க என்னடான்னா... நக்சல் அங்கு வந்து போனாதா சொல்றீங்க? அப்ப முதல்வர் சொல்வது பொய்யா?

      இவ்வளவு நாள் அமெரிக்காதான் இடையூறு செய்கிறது என்று சொல்லி வந்தீர்கள்.. இப்பொழுது நக்சல்... நக்சல் வந்து பாட்டு பாடுற அளவுக்கு விட்டு வைத்து இருக்கா நம்ம உளவுத்துறை? ஆனாலும் நீங்கள் நம்ம நாட்டு உளவுத் துறையை இவ்வளவு கேவலமாக மறைமுகமாக விமர்சிக்கவேண்டாம்... அதற்கு நான் எனது கண்டனகளை பதிவு செய்கிறேன்.

      Delete
    6. நான் எந்த விதத்திலும் அந்த போராட்டத்தில் பங்கு பெறவில்லை.... அதற்காக உண்மையிலயே நான் வெட்கப்படுகிறேன்... ஆனால்... உண்மையை மறைத்து அணு உலையை பாதுக்காப்பானது என்று எழுதிவரும் உங்கள் போன்றோரின் எழுத்துக்கள் தான் என்னை எரிச்சல் அடையச்செய்கின்றன...

      ஒரு வேலை செய்யலாமா? செர்நோபிலுக்கு அணு விஞ்ஞானி அப்துல் கலாமுடன் ஒரு டூர் போய் வருவோமா? கூட நம்ம அணு விஞ்ஞானி நாராயணசாமியையும், அன்னை சோனியாவையும் கூட கூட்டிச்செல்வோம்...

      Delete
    7. நண்பர் அவர்களுக்கு , உங்களின் அதனை கேள்விகளுக்கும் (Naksal தொடர்பு பற்றியது ) பதிலாக , நான் ஏற்கெனவே சொல்லியபடி ஒரு பதிவு எழுதி கொண்டு இருக்கிறேன் . அது உங்களுக்கு பதில் கொடுக்கும் . கொஞ்சம் பொறுத்து இருங்களேன் . நன்றி

      Delete
    8. //ஒரு வேலை செய்யலாமா? செர்நோபிலுக்கு அணு விஞ்ஞானி அப்துல் கலாமுடன் ஒரு டூர் போய் வருவோமா? கூட நம்ம அணு விஞ்ஞானி நாராயணசாமியையும், அன்னை சோனியாவையும் கூட கூட்டிச்செல்வோம்...//

      இந்தக் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.... இதில் நக்சல் எங்கே வந்துள்ளது.. இந்தக் கேள்விக்கும் உங்கள் அணு விஞ்ஞானி என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அப்துல் கலாமிடம் கேட்டுச் சொல்லுங்கள்...

      Delete
    9. நண்பருக்கு வணக்கம் ,

      சிறுபிள்ளை போல ஒரு கேள்வியை கேட்டு விட்டு நீ பதில் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நீங்கள் அடம்பிடிப்பது வேடிக்கையாக தான் இருக்கிறது . நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக நான் சொல்லுகிறேன் செர்நோபில் சுற்றுலா செல்ல நான் தயார் ஆனால் போக்குவரத்து செலவுகளை நீங்கள் கவனித்து கொண்டால் போதும் . என்னோடு கூட Dr அப்துல் கலாம் அவர்கள் வந்தால் பெரும் பாக்கியமே . நன்றி

      Delete
    10. எது சிறுபிள்ளைத்தனமான கேள்வி?

      http://environment.about.com/od/chernobyl/p/chernobyl.htm

      இங்கே போய் படியுங்கள். எத்தனை பேர் இருந்துள்ளார்கள் என்று மிகத் தெளிவாக போட்டுள்ளார்கள். ஆனால் இதை எல்லாம் மறைத்து, வெறும் பேர் மட்டுமே இறந்தனர் என்ற ஒரு மாபெரும் பொய்யைச்சொன்ன அப்துல் கலாமுடன் வருவது உங்களுக்கு பாக்கியமாக வேண்டுமானால் இருக்கலாம்...

      இதோ கீழே இருக்கும் லிங்க்குகளைப் பாருங்கள்... இதுவும் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதுதான்... அந்நாள் நடந்தது என்ன?

      http://www.youtube.com/watch?v=Bhqb1HfHDwg

      http://www.youtube.com/watch?v=JVf6nclRTXw&feature=related

      http://www.flickr.com/photos/30941421@N06/sets/72157626521958089/

      http://www.youtube.com/watch?v=FzgSEg2TkIE&feature=related

      http://www.youtube.com/watch?v=dVJ6PLBgTC4&feature=fvwrel

      Delete
    11. செர்நோபில்லுக்கு டூர் போகிறீர்களா என்று கேட்டீர்களே , அதை தான் நான் சிறுபிள்ளைதனமான கேள்வி என்று சொன்னேன் நண்பரே

      Delete
  15. இத்தனை கோடி செலவு செய்த பின்னர் திட்டத்தை நிறுத்த சொல்வது சரியா?

    அதுக்கு?.................1000 உவா போட்டு வாங்கின பொருள், வாங்கிய பின் அது விஷம் என்று தெரிந்த பின் பெரிய செலவு செய்து விட்டோம் என்பதுக்காக அதை குடிக்க முடியுமா?.அந்த விஷத்தை கடைக்காரனிடம் திருப்பி கொடுக்கவும் மாட்டோம், அதை குடிச்சு செத்து போனாலும் நஷ்ட ஈடும் கேக்க மாட்டோம் என டெர்ம்ஸ் & கண்டிசன் போட்டு வாங்கியது யார் தப்பு?.

    புதிய அணு உலைகள் அமைப்பதையே நிறுத்தி வைத்திருக்கும் காலத்தில் செகண்ட் ஹான்ட் அணு உலை எதுக்கு? பழைய கேஸ் சிலிண்டருக்கு பெயின்ட் அடிச்சு கொடுத்தா மட்டும் வேணாம், அதே அணு உலைன்னா வேணும் ஏன்னா அது நம்ம வீட்டுல இருந்து ரொம்ப துரத்துலதானே வைக்க போறாங்க...

    முறை கேடான கோடி கணக்கான கருப்பு பணத்துக்கு மட்டும் சத்தம் காட்டாத மத்திய அரசு, இந்த சில கோடிகளுக்கு மட்டும் நீலி கண்ணிர் வடிப்பதேன்? 75௦௦ லட்சம் கோடிகள் கருப்பணம் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்?

    ReplyDelete
    Replies
    1. உங்களது கருத்தை பார்த்தல் வேடிக்கையாக இருக்கிறது . இப்படி தான் சொல்லி சொல்லி மக்களை ஏமாற்றுவீர்கள் போல் இருக்கிறது , 100 ரூபாய்க்கு பொருளை வாங்குவோமாம் . வாங்கின பிறகு விஷம் என்று தெரியுமாம் அதனால் அதை விடவேண்டுமாம் . ஏன் சார் , நீங்கள் கடைக்கு போனீர்கள் என்றால் என்ன வாங்க போகிறோம் என்று தெரியாமல் தான் போவீர்களா ? சும்மா 100 ரூபாய்க்கு பொருள் தாங்க என்று தான் கேட்பீர்களா ? நீங்கள் வாங்கபோகும் பொருள் , அதன் விலை , அதன் பயன்பாடு எல்லாம் அறிந்து தானே வாங்குவீர்கள் . அப்படி வாங்கியபிறகு அது எப்படி விஷம் என்று தெரியும் ?

      உங்களின் வேடமான வார்த்தைகள் மக்களுக்கு புரியாது என்றா நினைக்கிறீர்கள் நண்பரே !

      Delete
    2. நன்று நண்பரே.. நன்றாக கவனித்து விட்டேன்... உங்களுக்கு பதில் சொல்ல முடியாத நேரத்தில், எனது வார்த்தைகள் வேடம் என்று தப்பித்துக்கொள்கிறீர்கள்....

      போபாலில் விபத்து நடக்கும் என்று தெரிந்து இருந்தால் அப்பகுதி மக்கள், அங்கு அந்தத்தொழிற்சாலையை ஆரம்பிக்க விட்டு இருப்பார்களா? விபத்து நடந்தவுடன் தானே தெரிகிறது அதன் உண்மை முகமும், ஆதிக்க சக்திகளின் உண்மை முகமும்.... ஆகா, விஷம் என்று தெரியாமல் தானே வாங்கி விட்டோம். இப்பொழுது, விபத்து நடந்த பிறகு, அதன் உரிமையாளரை, பத்திரமாக விமானம் ஏற்றி அனுப்பியது யார்? இதுவரை அங்கு வாழ்ந்த, விபத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுக்கு நஷ்டஈடு வழங்காதது யார்? செத்துப்போனவனுக்கு எப்படி அய்யா நஷ்டஈடு கொடுப்பீர்கள்? அவன் உயிர் போய் விட்டதே...

      இப்பத் தெரியுதா? விசம்னு தெரியாம செலவு செஞ்சு வாங்கிட்டு, விசம்னு தெரிஞ்சவுடனே வீசி கடாசணும்ம்னு...

      Delete
    3. நீங்கள் அழகாக் தப்பி கொள்ள நினைக்கிறீர்கள் . அணுமின் நிலையத்தை குறித்து உங்களுக்கு விவாதம் செய்ய வார்த்தைகள் இல்லாத போது , அணு சக்திக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத போபால் விடயத்தை கிளறுகிறீர்கள் . சரி பரவாயில்லை . போபால் விபத்து நடந்த சம்பவத்தை நீங்கள் என்றாவது ஆராய்ந்து பார்த்தது உண்டா .? அதற்கும் அணு சக்திக்கும் என்ன சம்பதம் உண்டு ?

      இப்பொழுது கூட இந்த கட்டுரையில் நான் குறிப்பிட்டு இருக்கும் விவாதங்களுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்பதை தங்களுக்கு நினைவு படுத்துகிறேன்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. நீங்க கேட்ட கேள்வி... விஷயம் தெரியாமலா 100௦௦ ரூபாய் கொடுத்து பொருள் வாங்குவீர்கள்?

      எனது பதில்... அப்படித் தெரியாமல் வாங்கியதுதான் போபால் ... வாங்கிய பிறகு பல லட்சம் பேர் தங்கள் உடைமைகளை இழந்து ஊனங்களாக தெருவில் நிற்கின்றனர். 25 வருடங்களுக்கு மேலாகியும் ஆதிக்க சக்திகள் எந்தவிதமான நஷ்ட ஈட்டையும் கொடுக்கவில்லை... அது விஷம் என்று தெரியாமல் வாங்கியதால்தான் இந்த நிலை.

      உங்கள் கேள்விக்கு இதுதானே பதில். இது என்ன சம்பந்தம் இல்லாதது? ஒரே சம்பந்தம் இரண்டும் அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பத்தை வளப்படுத்த, மக்களை சீரழிக்க கொண்டு வந்தவை...

      புரிகிறதா நண்பரே...

      Delete
    6. //முறை கேடான கோடி கணக்கான கருப்பு பணத்துக்கு மட்டும் சத்தம் காட்டாத மத்திய அரசு, இந்த சில கோடிகளுக்கு மட்டும் நீலி கண்ணிர் வடிப்பதேன்? 75௦௦ லட்சம் கோடிகள் கருப்பணம் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்களே... அதைப் பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்?//

      இந்தக் கேள்விக்கு என்ன பதில்... ஒன்றும் தெரியாத அப்பாவி போல் தப்பி ஓடாதீர்கள்... ஆறு மாதமாக லீவில் போய் இருந்தீர்களே... இப்பொழுது எங்கே திடீர் என்று தேசபக்தி? பிரச்சனை வரும்போது தேசபக்தி வியாபாரம் செய்ய வந்துவிடுகிறீர்கள்... இதற்கு பெயர்தான் அல்லக்கை.

      Delete
    7. நண்பருக்கு வணக்கம் ,

      ஹ..ஹா. ..உங்கள் வாதம் ஏற்க்கதக்கது அல்ல . 40 வருடங்களாக கிட்டத்தட்ட 20 அணுமின் நிலையங்களை இயக்கி கொண்டிருக்கும் நமது நாட்டிற்கு அணுமின் நிலையத்தை குறித்து தெரியாது என்பது போல பேசுவது சரியாகுமா ? அதனால் அணுமின் நிலையங்கள் விஷம் என்று நீங்கள் நினைக்க வேண்டிய அவசியமில்லை நண்பரே

      Delete
    8. 25 வருடங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த விபத்துக்கு இன்று வரை நஷ்டஈடு கொடுக்காமல், லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்... அதற்கே உங்களுக்கு துப்பு இல்லை என்றால், "உங்கள் வாதம் ஏற்கத்தக்கது அல்ல" என்ற சப்பை பதில்... அணுமின் நிலையம் விஷம் இல்லை நண்பரே... விஷம்கூட குடித்தவனைத்தான் சாகடிக்கும்... இது வேடிக்கை பார்ப்பவனின் பரம்பரையையும், இனிமேல் வேடிக்கை பார்க்கக்கூட ஆளே இல்லாமலும் செய்துவிடும்... உடனே "அணு உலைகள் பாதுகாப்பாக கட்டப்பட்டுள்ளது" என்ற பல்லவியைப் பாடாதீர்கள்... அப்படி விபத்து நடந்த இடத்துக்கு (செர்நோபில்) வாங்க ஒரு டூர் போயிட்டு வருவோம்ன்னு சொல்றேன்... பலமுறை சொல்றேன் அதுக்கு பதிலே சொல்ல மாட்டேன்றீங்க... நீங்க தனிய வர வேண்டாம் மிஸ்டர் டுபாக்கூர்... அணு வியாபாரி அப்துல் கலாம்... அணு விஞ்ஞானி நாரவாய் சாமி, அன்னை சோனியா காந்தி, ராகுல் காந்தி எல்லோரையுமே கூட்டிச்செல்வோம்... தயாரா?

      Delete
    9. நண்பருக்கு வணக்கம் ,

      போபால் சம்பவம் ஒரு Chemical factory இல் நடந்த விபத்து . நீங்கள் அதை அணுமின் நிலையத்துடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் . அது எப்படி சரியாகும் ? நீங்கள் போபால் விபத்தை குறித்து பேசுவதானால் , நாட்டில் உள்ள Chemical factories க்கு எதிராக தான் போராட்டம் செய்யவேண்டும் . ஆனால் 40 வருடங்களாக பாதுகாப்பாக இயங்கி வரும் அணுமின் திட்டங்களுக்கு எதிராக போராடுவது எப்படி சரியாகும் ?

      செர்நோபில்லுக்கு டூர் போகிறீர்களா என்று கேட்டீர்களே , அதை தான் நான் சிறுபிள்ளைதனமான கேள்வி என்று சொன்னேன் நண்பரே

      Delete
  16. //வெளிநாட்டு பணம் வாங்கிக்கிட்டு, வெளிநாட்டுக்கு ஆதரவாகவும், நம் நாட்டுக்கு எதிராகவும் போராடுகிறார்கள்//

    இதே கதையைத்தானே கொசு தொல்லை நாராயண சாமி பல மாசமா பாடிக்கிட்டு இருக்கார். இது உண்மைன்னா ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க முடியலை.

    பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரா பல ஆதாரங்களை நிமிடங்களில் திரட்ட கூடிய பலங்கள் பல வாய்ந்த மத்திய அரசால் வெளிநாட்டு பணம் வரும் வழியை அடைக்க இத்தனை சோம்பேறித்தனம் ஏன்? ரஷ்யாவின் அணு உலைக்கு எதிராக அமெரிக்காத்தான் இருக்குன்னா, அந்த அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தாமல் மண்ணு கம்முன்னு இருப்பதேன்.

    பெரும் பதவியில் இருந்த, தொண்டர்கள் பலம் நிறைந்த அரசியல்வியாதிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் கைது செய்ய தடையில்லாத போது, 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட உதய குமாரை கைது செய்ய முடியாதது ஏன்?. தவறுகள் நடந்திருந்தால் அதற்கான ஆதாரங்களை திரட்டி மக்கள் முன் தூக்கி எறிந்து இருக்க முடியுமே? ஒரு அரசுக்கு அது அவ்வளவு கஷ்டமா என்ன? முடியவில்லையே? ஆதாரம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்ட பின்னரும் , அதே பல்லவியை பாடுவது ஏன்?

    சரி ஆதாரம் இல்லாமல் யார் வேனா தப்பு செய்யலாமா? செய்ய கூடாதுதான்.....அப்படி பார்த்தா ஆதாரம் இல்லாத தப்பு செய்த அரசியல்வியாதிகளும் மன்னுஜிக்களும்தான் முதலில் சரணடைய வேண்டும்.

    இந்த நிருபிக்க முடியாத ஒரு குற்றசாட்டு மூலமே தெரிஞ்சு போச்சு மத்திய மாநில அரசுகளின் பொய்யும் புரட்டும்.......ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

    சரி......பணம் வாங்கிட்டு அணு உலைகளை எதிர்ப்பதாக யார் சொல்லுறாங்க பாத்திங்களா? நம்மகிட்ட பணம் கொடுத்து ஓட்டு கேட்டவங்கத்தான்....

    ReplyDelete
    Replies
    1. // 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட உதய குமாரை கைது செய்ய முடியாதது ஏன்?. //

      இங்கு தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள் . திரு.உதயகுமாரை கைது செய்வது என்பது மிக எளிதான காரியம் . காவல்துறை நினைத்தால் அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் . ஆனால் வஞ்சகமாக மக்களை ஏமாற்றி இருக்கும் அவரின் உண்மை முகத்தை மக்களுக்கு புரிய வைத்து அவரை கைது செய்வதே சரியாக இருக்கும்

      Delete
    2. ஹி ஹி ஹி .. நீங்க காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே... அவர் தவறு செய்து இருந்தால் அவர் மீது ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே... அதான், நாடாளுமன்றதுலயே, நாராயணசாமி ஒத்துக்கொண்டாரே, ஆதாரம் இல்லை என? ஆதாரம் இருந்தால் ஏன் அய்யா விட்டு வைக்கிறீர்கள்... இந்த நாராயணசாமி மீதுதான் கோர்ட் தனது கண்டனத்தை பதிவு செய்து வைத்துள்ளது... அதாவது தெரியுமா? ஆதரத்த தேடிகிட்டு இருக்கோம் , தேடிகிட்டு இருக்கோம்ன்னுட்டு 1 வருசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க... ஐயோ...எனக்கு கேட்டு கேட்டு காது வலிக்குதுடா சாமி...

      Delete
    3. @ முருகன் : ஹி....ஹி....நாம் Comedy செய்யவில்லை நண்பரே . செய்யுறதை எல்லாம் செய்து விட்டு சிறு பிள்ளைகள் , பெண்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி அவர்கள் பின்னால் ஒளிந்து கொண்டதால் , அந்த சிறு பிள்ளைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்பட கூடாது என்று தான் காவல் துறை அமைதி காத்தது . இப்பொழுது ஓடி பொய் ஒளித்து இருக்கிறார் . காலம் தன கடமையை செய்யும் நண்பரே ..உங்களை போன்று திரு. உதயகுமாருக்கு நற்சான்று கொடுக்கும் நண்பர்கள் , தங்கள் கருத்துகளை மாற்றி கொள்ளும் நேரம் வந்து விட்டது . பொறுத்து இருந்து பாருங்கள்

      Delete
    4. பேச்சை மாற்றாதீர்கள்... அவர் மீது ஆதாரம் இல்லையென பாராளுமன்றத்திலேயே உங்கள் நாரவாய் சாமி தெரிவித்து விட்டார். ஆதாரங்களை தேடிக்கொண்டு இருப்பதாகவும் அவர்தான் சொல்லி இருக்கிறார். என்ன ௧ வருசமா தேடுறார். கிடைக்கமாட்டேங்குது போல... நீங்களும் போய் சேர்ந்து தேடலாமே, இல்லாத ஆதாரங்களை...பொய்யும் புரட்டும் நிறைந்த வார்த்தைகளை இன்னும் எத்தனை வருடங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்... அவற்றை நம்ப நாங்கள் ஒன்றும் தினமலரைப் போன்ற கைக்கூலியோ, முட்டாள்களோ அல்ல... உதயகுமார் தவறே செய்து இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை... நாங்கள் எழுதுவது, போராடுவது உதயகுமாருக்காக அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்... நாங்கள் போராடுவது அணு உலை வேண்டாம் என்பதற்காக.... எனக்கு பின்னால் வரும் என் சந்ததிகள், உங்கள் சந்ததிகள் வாழ நல்ல பூமியை விட்டுச்செல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்காக...

      Delete
    5. அவர் பணம் வாங்கிவிட்டார், வாங்கிவிட்டார் என்றும் அலறும் பத்திரிக்கைகள் மற்றும் உங்களைப் போன்ற அல்லக்கைகள் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்... அப்படி அலறும் கட்சிகள்தான் தேர்தலில் மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து ஆட்சிக்கு வந்துள்ளார்கள்... அவர்கள்தான் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கிறார்கள்... இந்தக் குற்றச்சாட்டை வைப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா?

      இதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?

      "உங்கள் வேடம் கலைந்துவிட்டது ... நீங்கள் நன்றாக யோசியுங்கள்... "

      இப்பை சப்பையான பதிலாகவே இருக்கும்...

      Delete
    6. உதயகுமார் தவறு செய்திருந்தாலும் பரவாயில்லை என்று நீங்கள் ஒத்து கொள்ளுகிறீர்கள் ஆனால் பிறகு திரு. உதயகுமாருக்கு Support செய்கிறீர்கள் . ஐயா எந்த கட்டுரையில் நான் கேட்டிருக்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாத நீங்கள் அரசியலையும் ,. அரசியல்வாதிகளையும் இணைத்து பேசி , விவாதத்தை திசை திருப்ப தானே செய்கிறீர்கள் ?

      Delete
    7. மறுபடியும் மழுப்பலான பதில்களே... நேரடியான பதில் தேவை. உதயகுமார் மீதான பணம் வாங்கிப் போராடுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை ஆதாரம் இல்லை எனவும், ஆதாரத்தை தேடிக்கொண்டு இருப்பதாகவும், அணு விஞ்ஞானி நாராயணசாமி பாராளுமன்றத்தில் சொன்னாரா இல்லையா? அப்படி சொன்னவர்கள் இன்னும் எதைத்தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்... அப்படி தேடிக் கண்டுபிடிக்கும் முன்பே ஏன் இந்த மாதிரி கீழ்த்தரமாக எழுதுகிறீர்கள்....

      Delete
    8. இடையில் நக்சல் தொடர்பு இருப்பதாகவும் அணு விஞ்ஞானி நாராயணசாமி சொன்னார். அதற்கும் இதுவரை எந்த ஆதாரமும் தரப்படவில்லை. நீங்களும் நக்சல்கள் வந்து பாட்டு பாடி டான்ஸ் ஆடி சென்றார்கள் என்று சொல்லுகிறீர்கள்.. ஆனால் உளவுத்துறை இதுவரை நக்சல் நடமாட்டம் தமிழகத்தில் இல்லை என்றே சொல்லுகிறது... ஆகா நீங்கள் உளவுத்துறை பொய் சொல்லுகிறது என்று குற்ரம் சாட்டுகிறீர்களா? நேரடியான பதில் தேவை... உடனே "Anonymos"பெயரில் உங்களை பாராட்டி நீங்களே ஒரு பதில் போட்டுக் கொள்ளாதீர்கள்..

      அப்புறம், உங்களை பாராட்டி எழுதுபவர்கள் எல்லாம் ஏன், "Anonymus" ஆகா இருக்கிறார்கள்... ஒரு IDஐக் பண்ணி உங்களை நீங்களே பாராட்டி எழுத வேண்டியதுதானே..

      Delete
    9. ஹ..ஹ...என்னை பாராட்டி யாரும் எழுத வேண்டுமென்று நினைப்பவன் அல்ல நான் . ஆனால் பாருங்கள் புதிய நண்பர்கள் இந்த தளத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துகளை anonymous ஆக பதிவு செய்கிறார்கள் . எனது நோக்கம் நான் பாராட்டப்பட வேண்டும் எனது அல்ல நண்பரே , மக்கள் உண்மையை உணர வேண்டும் என்பதே

      Delete
    10. நண்பரே , நான் ஏற்க்கனவே சொல்லியபடி நான் எனது பதிவை எழுதி முடிக்கும் வரை கொஞ்சம் சமயம் கொடுங்கள் . அந்த பதிவை படித்து பாருங்கள் . நாம் விவாதத்தை தொடருவோம் . நன்றி

      Delete
  17. Good effort by Mr.Irudhayam.I think He must be an Engineering person.Excellent work by u Mr.Irudhayam sir.Carry on.....

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,

      Thank you very much for your encouraging words. Please visit again.

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. Very Good article revealing the truth.

    ReplyDelete
    Replies
    1. Dear friend ,

      thank you very much for your visit and for your comments. Please visit again

      Delete
  20. அண்ணே உங்கள் கூற்று படி இடிந்தகரையில் உதயகுமார் பணம் வாங்கிக்கொண்டு போராட்டத்தை தூண்டி விடுகிறார் என்றே வைத்துகொள்வோம் .ஆனால் இன்று நாட்டின் பிற பகுதியில் நடக்கும் போராட்டத்திற்கும் அவர்தான் காரணமா ?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் கேள்வி மிகவும் நேர்த்தியாக கேட்கப்பட்ட ஒரு சிக்கலான கேள்வி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . திரு. உதயகுமார் எப்படி எல்லாம் பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார் என்பதையும் , மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் எப்படி அவரை ஏற்றுகொண்டார்கள் என்பதயும் இதே வலைப்பூவில் நான் பலமுறை கட்டுரையாக எழுதியிருக்கிறேன் .

      ஆனால் இப்பொழுது நடந்த இந்த போரரட்டத்தில் மீனவ மக்கள் , காவல் துறையால் தாக்கப்பட்டார்கள் என்ற செய்தியை கேட்டு , மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் போராடுகிறார்கள் , திரு. உதயகுமாரும் இதை தான் எதிர்பார்த்தார் . அரசியல்வியாதிகளும் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்காக போராடுகிறார்கள் என்பது உண்மை,. இந்த நிலையில் இந்த அன்பான மக்கள் விசமியை குறித்த உண்மையை அறிந்து கொள்ளும் காலம் வந்தால் தான் நாம் விரும்பும் ஒரு நன்னாள் பிறக்கும் என்பது உண்மை

      Delete
  21. நன்றி திரு இருதயம் அவர்களே,
    உங்களின் கட்டுரைகள் அனைத்தும் தகுந்த செரிவுடன் உள்ளது. திரு முருகன் போனறவர்கள் பதில் எழுத வேண்டும் என்ற நோக்குடன் எழுதும் பதில்கள் சிறுபிள்ளை தனமாக உள்ளது. இவரின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்கு பெரிய பொருமை வேண்டும். திரு.உதயகுமாரை வளரவிட்டு வேடிக்கை பார்த்த இரு அரசுகளும் ஒரு வகையில் குற்றவாளிகளே. அனைத்து நக்சல் இயக்கங்களும் இது போன்ற ஏதாவது ஒரு போராட்டத்தை மையமாக கொண்டு வளர்ந்தவையே. தேவை கடுமையான நடவடிக்கை.

    ReplyDelete
    Replies
    1. ஐயா , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      நீங்கள் சொன்ன கருத்துகளை நான் அப்படியே ஆமோதிக்கிறேன் . நாம் பதிவுகளை எழுதும் போது , அன்பர்கள் கேட்க்கும் பதில்களுக்கு பொறுமையுடன் பதில் அளித்து தானே ஆகவேண்டும் . அவருக்கு அது புரியவில்லை என்றாலும் , பதிவுகளை பார்வையிடும் பல நண்பர்களுக்கு அது புரியுமல்லவா ?

      தங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி