Sunday, 9 September 2012

சதமடித்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - ISRO


ISRO - Indian Space Research Organization என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாத்திரமல்ல , இந்தியர்களாகிய நாம் அனைவருமே பெருமை கொள்ளவேண்டிய நாள் இது ( 09 09 2012 ) . ஆம் விண்வெளி துறையில் இந்தியா வெற்றிகரமாக தனது 100 வது பணியை ( mission ) நிறைவு செய்துள்ளது .PSLV 21 என்ற ராக்கெட் மூலம் 2 செயற்கை கோள்களை ஏவி இந்த சாதனையை  இந்தியா படைத்துள்ளது 



100 வது mission என்று சொல்லப்படுவதினால் இது 100 வது ராக்கெட் என்று நாம் நினைக்க கூடும் .  அப்படி அல்ல  ஒவ்வொரு இந்தியா செயற்கை கொள் ஏவப்படுவதும் ஒரு mission  மற்றும் ஒவ்வொரு இந்தியா ராக்கெட் ஏவப்படுவதும் ஒரு mission .  அதாவது இந்தியா செயற்கை கோள் ஏதாவது வெளிநாட்டு ராக்கெட் மூலமாக ஏவப்பட்டது என்றால் 1 mission ( செயற்கை கோளுக்கு மாத்திரம் ) .  இப்படி இந்தியா 62 செயற்கை கோள்களையும் , 37 ராக்கெட்களையும் செலுத்தி நேற்று வரை 99 missions முடித்திருந்தது . இன்று ஏவப்பட்ட ராக்கெட் இந்தியாவின் 100 வது mission 

1969 ல் நிர்மாணிக்கப்பட்ட இஸ்ரோ , தனது முதல் செயற்கை கோளான ஆர்யாபட்டாவை சோவியத் யூனியனின் ராக்கெட் பயன்படுத்தி 1975 ல் விண்ணுக்கு ஏவியது . அதன் பிறகு இந்தியா தயாரித்த ரோகினி என்ற செயற்கை கோள் இந்திய ராக்கெட்டான SLV 3 மூலம் விண்ணில் ஏவப்பட்டது . அதன் பிறகு ASLV (Augmented Satellite Launch Vehicle ) , PSLV (Polar Satellite Launch Vehicle ) மற்றும் GSLV (Geosynchronous Satellite Launch Vehicle ) போன்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ பலவிதமான செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவி உள்ளது.  இதில் GSLV ராக்கெட்டில் மாத்திரம் கிரையோஜெனிக் இஞ்சின் ருச்சிய நாட்டிடம் இருந்து வாங்கப்படுகிறது .  இந்தியா தனது சொந்த தொழில் நுட்பத்தில் கிரையோஜெனிக் இஞ்சின் தயாரித்து கொண்டு வருகிறது .


இந்தியாவின் முதல் சந்திர பயணமான சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு இஸ்ரோ , உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி திறமையை உயர்த்தி வைத்தது . இஸ்ரோ வின் INSAT series , IRS Series மற்றும் பல செயற்கை கோள்கள் இன்னும் விண்வெளியில் சுற்றி கொண்டு இந்தியாவின் பெருமையை பறை சாற்றி வருகின்றன .

இந்த நன்னாளில் இந்த அரும் சாதனையை செய்த நம் தாய் நாட்டின் விஞ்ஞானிகளை நாம் மனதார பாராட்டுவோம் . இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம் .

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி