Saturday, 15 September 2012

திரு. உதயகுமாருக்கு நக்சல் தொடர்பு உண்டா ? - ஒரு பகீர் ரிப்போர்ட்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் போராடி வருகிறதை நாம் நாளேடுகள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் அறிந்து இருக்கிறோம் .  இந்த போராட்டத்தில் மக்களை பலவிதங்களிலும் பொய்யான தகவல்களை சொல்லி , அவர்களை குழப்பி , போராட்டத்தில் அவர்களை திரு. உதயகுமார் பயன்படுத்தியதை இந்த வலைப்பூவில் பல கட்டுரைகளில் நான் எழுதியுள்ளேன் .   சிறு குழந்தைகள் மனதில் கூட அரசுக்கு எதிரான எண்ணத்தை வித்திட்டு எதிர்கால சமுதாயத்தை வீணாக்கிய பெருமை இவரையே சேரும் .  ஆனால் பதிவுலக நண்பர்கள் பலர் இவரின் உண்மை முகம் அறியாமல் இவருக்கு ஆதரவு கொடுத்து வருவதை பார்த்து வேதனையுற்ற நான் " திரு. உதயகுமாருக்கு நக்சல் தொடர்பு உண்டா ?" என்ற இந்த கட்டுரையை எழுத முனைந்தேன் .


என்னுடைய நிலைப்பாட்டை ஒரு முறை வெளிப்படையாக சொல்லி கொள்ளுகிறேன் .  இந்த பதிவு அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல ,  கூடங்குளம் போரரட்டத்தில் எப்படி நக்சல் நிலைகள் தங்கள் வேலையை செய்தன என்பதயும் ,  திரு. உதயகுமாருக்கு அப்படி பட்டவர்களுடன் தொடர்பு உண்டா என்றும் ஆராய்ந்தே இந்த கட்டுரை எழுதப்படுகிறது .  நக்சல்கள் என்பவர்கள் மக்களை எப்பொழுதும் அரசுக்கு எதிராக திருப்பி விடுபவர்களே .  நியாயமான போராட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டாலும் , இந்த நக்சல்கள் ஒரு போதும் , மக்கள் அரசுக்கு செவி கொடுத்து விடகூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள் .  அதனால் இவர்கள் மக்களை தங்கள் வழிக்கு கொண்டு வருவதற்கு பாடல்கள் , நாடகங்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் நடத்துவார்கள் .  இந்த பாடல்களை , நாடகங்களை கூர்ந்து பார்க்கிற மக்கள் மத்தியில் வர்களை அறியாமலே அரசின் மேல் வெறுப்பும் ,  இறையாண்மை தத்துவத்தை மதியாமையும் ஏற்ப்படும் .  இதற்க்கு குற்றவாளிகள் மக்களா என்றால் இல்லை , அது அவர்களை தவறாக நடத்தும் நக்சல்களே.


இடிந்தகரை மக்கள் தான் போராடுகிறார்கள் என்ற எண்ணம் உலகம் முழுவதும் இருக்க , இடிந்தகரை என்ற கிராமத்திற்கும் , கூடங்குளம் என்ற கிராமத்திற்கும் சம்பந்தம் இல்லாத சில  இயக்கங்கள் இந்த போராட்டத்தை எண்ணெய் ஊற்றி தூண்டி விட்டன .  அப்படி பட்ட சில இயக்கங்களின் செயல்பாடுகளை நான் கீழே விவரிக்கிறேன்


மகஇக என்ற இயக்கத்தின் புரட்சி போராட்டம் என்ற தலைப்பில் கீழ் உள்ள இந்த வீடியோவை பாருங்கள் . இதனுடைய 0 . 38 முதல் 0 . 59 வது நிமிடம் வரை  இந்த video வில் உள்ள ஒருவர் பேசுகிற காரியத்தை நான் அப்படியே எழுதுகிறேன்

" அந்த இடிந்தகரை கூடங்குளம் மக்களுடைய போராட்டம் என்கிறது அது வீச காத்திருக்கிற ஒரு புயல் மாதிரி அது . இந்த 180 நாட்களாக அந்த இடிந்தகரையில் இந்த புயல் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது அல்லது தருணம் பார்த்து கொண்டிருக்கிறது .  அந்த இடிந்தகரை புயல் ஒரு நாள் கரையை கடக்கும் . அப்படி கரையை கடக்கும் தினத்திலே , கூடங்குளம் அணு உலை வேரோடு பிடுங்கி வீசி எறியப்படும் தோழர்களே " 

என்று தொடர்ந்து பேசுகிறார் .  Video இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .  அப்படியானால் ஒரு பெரிய வன்முறைக்கு அப்பொழுதே அடித்தளம் போடப்பட்டு இருக்கிறது என்பது விளங்குகிறது அல்லவா !



இடிந்தகரையில் நடைபெற்ற உண்ணாவிரத பந்தலில் முரசு கலை இயக்கம் என்ற இயக்கம் நடத்திய ஒரு பாடலின் Video பதிவை நான் கீழே இணைத்துள்ளேன் .  அந்த பாடலின் வரிகள் இப்படி ஆரம்பிக்கிறது

" அழுதால் வராது நீதி
ஆவேசம் கொண்டு வா நீ "


இந்த பாடலின் இடையில் இப்படி ஒரு வரி வருகிறது

" யுத்தம் என்று வந்த போது
இரத்தம் சிந்த வேண்டும் " 
  என்று

இந்த பாடலின் வரிகளும் , இதை பாடுகிறவர்களின் உணர்சிகளும் ,  அந்த மேளதாளமும் மக்களை காந்திய வழியிலா நடத்தி இருக்கும் ?


இடிந்தகரை மற்றும் கூடங்குளம் மக்களின் சிறு பிள்ளைகளையும் இந்த கூட்டம் விட்டு வைக்கவில்லை.  இதை குறித்து நான் பல பதிவுகளில் எழுதி உள்ளேன் .  அணுமின்  நிலையத்திற்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் அவ்வ பொழுது அரசுக்கு எதிராகவும் இந்த சிறு பிள்ளைகளுக்கு சொல்லி வந்து இருக்கிறார்கள் .  கீழே ஒரு video இணைப்பு  இணைத்திருக்கிறேன் .

பள்ளிக்கு போய் பாடம் படித்து , நாட்டின் தூண்களாய் விளங்க வேண்டிய இந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கப்படும் கோசத்தை பாருங்கள் .  அதில் அரசுக்கு எதிராக " மானம் கெட்ட மத்திய அரசே"  என்று கோசம் சொல்லி கொடுக்கப்படுகிறது .   இது வளரும் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு பாய்க்கும் செயல் அல்லவா ?  நாளைக்கு எப்படி இந்த குழந்தைகள் அரசியல் அமைப்பு சட்டத்தையும் ,  இந்திய இறையாண்மையையும் மதிக்கும் ?

 சரி ...இப்படி பல Video பதிவுகளை என்னால் இணைக்க முடியும் .   இப்பொழுது நீங்கள் கேட்கலாம் சரி . திரு. உதயகுமார் நக்சல் கூட்டத்தில் தொடர்பு உள்ளவரா என்பதை குறித்து சொல்லவே இல்லையே என்று .

அதையும் நான் கூறி விடுகிறேன் .  தமிழ் தேச பொதுவுடைமை கட்சி என்று ஓன்று இருக்கிறது .  இந்த கட்டுரையை வாசிக்கும் அநேகர் அதன் பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க முடியாது .  அந்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சியின் முக்கியமான கொள்கை என்ன தெரியுமா ?

" தேர்தல் அரசியலை புறந்தள்ளி , மக்கள் எழுச்சி பாதையின் மூலம் இந்தியத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்து இறையாண்மையுள்ள தமிழ்  தேசிய குடியரசை அமைப்பது "

இவர்கள் அணுமின் நிலையத்தை எதிர்த்தும் ,  திரு . உதயகுமாருக்கு ஆதரவாகவும் தங்கள் முக நூலிலே எழுதி வருகிறார்கள் .  இந்திய இறையாண்மைக்கு எதிரான கொள்கை உடைய இவர்கள் திரு. உதயகுமாரை ஆதரிப்பது ஏன் ?  அவர்களுடைய முக நூலில் திரு,. உதயகுமார் நண்பராக உள்ளார் .  அந்த Screen Shot யை கீழே நான் இணைத்துள்ளேன்

 கூடங்குளம் செய்திகள் என்ற பெயரில் பொய்யான சில செய்திகளை கூறி மக்களை ஏராளமாய் திசை திருப்பும் ஒரு Web Page இருக்கிறது .  அதில் இன்றைக்கு வீர தமிழன் என்பவர் செய்த பதிவை Screen Shot செய்து இணைத்துள்ளேன் .  காணுங்கள் .   தமிழ் , தமிழன் என்ற பெயரை சொல்லியே தமிழுக்கும் , தமிழனுக்கும் ஏதும் செய்யாமல் , அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வஞ்சகம் இது


தமிழ்நாட்டில் நக்சல்கள் இல்லை என்று நமது அரசும் , காவல் துறையும் சொல்லி வருவது மிகவும் மகிழ்ச்சியான காரியம் தான் .  ஆனாலும் அரசுக்கு எதிரான கருத்துகள் அப்பாவி மக்களிடையே வஞ்சகர்கள் பரப்பி வருவதை அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டால் , நம்மால் நமது நாட்டின் இறையாண்மையையும் ,  ஒற்றுமையையும் , வருங்கால சந்ததியையும் காப்பாற்றவே முடியாத சூழல் ஏற்ப்படலாம்.

மறுபடியும் சொல்லுகிறேன் .  எனது இந்த பதிவு அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல . எனவே அப்பாவி மக்களுக்கு எதிராக நீ எழுதி விட்டாய் என யாரும் தயை கூர்ந்து கருத்து எழுத வேண்டாம் .  எனது பதிவுகள் உணர்வுகளை தூண்டி மக்களின் மூளையை மழுங்க வைக்கும் , தீய சக்திகளுக்கு எதிரானதே ..

ஜெய் ஹிந்த்

Monday, 10 September 2012

உதயகுமாரின் கபட எண்ணத்தின் விளைவே கூடங்குளம் கலவரம்


கூடங்குளம் அணுமின் நிலயத்திற்கு எதிரான மக்களின் போரரட்டம் பற்றியும் ,  அந்த போராட்டத்திற்கு மக்களை வஞ்சகமாக உபயோகித்து வரும் திரு. உதயகுமாரை குறித்தும் பல பதிவுகள் நான் எழுதியுள்ளேன் .  இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எழுதிய " கிழிகிறது திரு. உதயகுமாரின் போலி முகமூடி - ஒரு பகீர் ரிப்போர்ட்" என்ற பதிவில் எப்படி உதயகுமார் கலவரத்தை தூண்ட முயற்சி செய்கிறார் என்பதை நான் ஆதாரத்துடன் வெளியிட்டு இருந்தேன் .  இந்த சூழலில் இன்று அந்த காரியம் நடந்தே விட்டது.


இந்த கலவரத்தை உதயகுமார் தான் திட்டமிட்டு நடத்தினார் என்பதை நான் எழுதுவதற்கு பின்வரும் காரணங்கள் தான் உள்ளது .

முற்றுகை போராட்டம் என்று அறிவித்த திரு. உதயகுமார் மக்களை குறிப்பாக பெண்களையும் , குழந்தைகளையும் கடற்கரையோரம் அழைத்து வந்தது அவர் செய்த கபட நாடகத்தின் உச்ச கட்டம் .  இதை அறியாமல் மக்கள் அவர் பின்னால் நடந்து வந்தது வேதனையின் உச்சம் என்று தான் சொல்லமுடியும் .  நான் இப்படி சொல்லுவதற்கு காரணங்கள் இருக்கிறது . 



ஒரு வேளை முற்றுகை போராட்டம் நில வழியாக நடந்து இருந்தால் , காவல் துறை மிக எளிதாக அவர்களை தடுத்து எந்த சேதமும் இல்லாமல் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருப்பார்கள்  ஆனால் இவரோ பெண்களையும் , குழந்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பெரும் கூட்டத்தை கடற்கரைக்கு கொண்டு வந்தது ஒரு மாபெரும் சூழ்ச்சி.  ஏன் நான் அப்படி சொல்லுகிறேன் எனில் , ஒருவேளை அவர் திட்டமிட்டபடி ஒரு பெரும் கலவரம் கடற்கரையோரப் பகுதியில் நடந்து இருந்தால் , கூட்ட நெரிசலில் சிக்கி பெண்களும் , குழந்தைகளும் கடலில் குதித்தால் அவர்கள் கதி என்ன என்று நினைத்து பார்க்கவே நெஞ்சம் பொறுக்கவில்லை.  எப்படி மாஞ்சோலை எஸ்டேட் விவகாரத்தில் சம்பவம் நடந்ததோ அப்படி நடந்திருக்கும் .  ஆனால் கடவுளின் பெரிதான ஆசியால் அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை.  காவல்துறை இதை உணர்ந்து மெதுவாக செயலபட்டதால் அப்படி ஒரு பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.  ஒருவேளை அப்படி ஒரு சம்பவம் நடத்திருந்தால் உதயகுமார் அதை பெரிய பிரச்சினையாக எடுத்து தன போராட்டத்தை விரிவுபடுத்தலாம் என நினைத்திருக்கலாம் .

நான் இப்படி பேசுவதும் , எழுதுவதும் திரு. உதயகுமார் மீது நான் செலுத்தும் அபாண்ட குற்றசாட்டுகள் என்று நீங்கள் நினைக்கலாம் .  அப்படி என்றால் ஏன் கேள்விக்கு பதில் கூறுங்கள் .
  1. சின்னச்சிறு பிள்ளைகளை கடலோரம் அழைத்து வந்தது ஏன் ?
  2. பெண்களையும் , சிறு பிள்ளைகளையும் முன் நிறுத்தியது ஏன் ?
  3. தன்னை நம்பி வந்த ஜனங்கள் கலவரத்தில் சிக்கி இருக்கும் பொழுது திருடன் போல தப்பி சென்றது ஏன் ?
  4. காந்திய போராட்டம் என்று தன்னை வர்ணிக்கும் உதயகுமார் , காந்தியை போல செய்யாமல் தலைமறைவானது ஏன் ?
  5. நேற்று போராட்டத்தின் போது , பலமுறை காவல்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்த போதும் , வர மறுத்துவிட்டு இன்று பேச்சுவார்த்தைக்கு விழைவது ஏன் /
இப்படி பல கேள்விகளுக்கு உதயகுமார் சொல்லும் பதில்களை இன்னும் நம்புவதற்கு அப்பாவி ஜனங்கள் இருக்கும் வரை திரு. உதயகுமார் போன்ற கபட தாரிகளின் நாடகம் இன்னும் பல அப்பாவி ஜனங்களின் வாழ்க்கையில் விளையாடி கொண்டே தான் இருக்கும் .



எனது தாழ்மையான கோரிக்கை ஒன்றே ஓன்று தான்
  • மக்களே ,  உங்களை வஞ்சித்து நடத்தி உங்களை இந்த நிலைக்கு ஆளாக்கி உங்களை தவிக்க விட்டு ஒளித்து ஓடி போன திரு. உதயகுமார் உங்கள் நலனை விரும்புகிறவர் அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து உங்களின் போராட்டத்தை  கைவிட்டு அரசோடு பேச்சு வார்த்தை நடத்துங்கள்
  • காவல்துறையே , தயை கூர்ந்து வஞ்சிக்கப்பட்ட அப்பாவி ஜனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் , அவர்களை வஞ்சித்து இதுவரை நடத்திய திரு, உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டத்தின் மீது வெகு விரைவில் நடவடிக்கை எடுங்கள் .

Sunday, 9 September 2012

சதமடித்தது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - ISRO


ISRO - Indian Space Research Organization என்ற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாத்திரமல்ல , இந்தியர்களாகிய நாம் அனைவருமே பெருமை கொள்ளவேண்டிய நாள் இது ( 09 09 2012 ) . ஆம் விண்வெளி துறையில் இந்தியா வெற்றிகரமாக தனது 100 வது பணியை ( mission ) நிறைவு செய்துள்ளது .PSLV 21 என்ற ராக்கெட் மூலம் 2 செயற்கை கோள்களை ஏவி இந்த சாதனையை  இந்தியா படைத்துள்ளது 



100 வது mission என்று சொல்லப்படுவதினால் இது 100 வது ராக்கெட் என்று நாம் நினைக்க கூடும் .  அப்படி அல்ல  ஒவ்வொரு இந்தியா செயற்கை கொள் ஏவப்படுவதும் ஒரு mission  மற்றும் ஒவ்வொரு இந்தியா ராக்கெட் ஏவப்படுவதும் ஒரு mission .  அதாவது இந்தியா செயற்கை கோள் ஏதாவது வெளிநாட்டு ராக்கெட் மூலமாக ஏவப்பட்டது என்றால் 1 mission ( செயற்கை கோளுக்கு மாத்திரம் ) .  இப்படி இந்தியா 62 செயற்கை கோள்களையும் , 37 ராக்கெட்களையும் செலுத்தி நேற்று வரை 99 missions முடித்திருந்தது . இன்று ஏவப்பட்ட ராக்கெட் இந்தியாவின் 100 வது mission 

1969 ல் நிர்மாணிக்கப்பட்ட இஸ்ரோ , தனது முதல் செயற்கை கோளான ஆர்யாபட்டாவை சோவியத் யூனியனின் ராக்கெட் பயன்படுத்தி 1975 ல் விண்ணுக்கு ஏவியது . அதன் பிறகு இந்தியா தயாரித்த ரோகினி என்ற செயற்கை கோள் இந்திய ராக்கெட்டான SLV 3 மூலம் விண்ணில் ஏவப்பட்டது . அதன் பிறகு ASLV (Augmented Satellite Launch Vehicle ) , PSLV (Polar Satellite Launch Vehicle ) மற்றும் GSLV (Geosynchronous Satellite Launch Vehicle ) போன்ற ராக்கெட் மூலம் இஸ்ரோ பலவிதமான செயற்கை கோள்களை விண்ணுக்கு ஏவி உள்ளது.  இதில் GSLV ராக்கெட்டில் மாத்திரம் கிரையோஜெனிக் இஞ்சின் ருச்சிய நாட்டிடம் இருந்து வாங்கப்படுகிறது .  இந்தியா தனது சொந்த தொழில் நுட்பத்தில் கிரையோஜெனிக் இஞ்சின் தயாரித்து கொண்டு வருகிறது .


இந்தியாவின் முதல் சந்திர பயணமான சந்திராயன் வெற்றிகரமாக ஏவப்பட்ட பிறகு இஸ்ரோ , உலக அரங்கில் இந்தியாவின் விண்வெளி திறமையை உயர்த்தி வைத்தது . இஸ்ரோ வின் INSAT series , IRS Series மற்றும் பல செயற்கை கோள்கள் இன்னும் விண்வெளியில் சுற்றி கொண்டு இந்தியாவின் பெருமையை பறை சாற்றி வருகின்றன .

இந்த நன்னாளில் இந்த அரும் சாதனையை செய்த நம் தாய் நாட்டின் விஞ்ஞானிகளை நாம் மனதார பாராட்டுவோம் . இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம் .

Saturday, 8 September 2012

கிழிகிறது திரு. உதயகுமாரின் போலி முகமூடி - ஒரு பகீர் ரிப்போர்ட்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பயத்தினால் மக்களை போராடி வந்த போராட்டங்களையும் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்தும் பத்திரிகைகள் , நிகழ்வுகள் எல்லாவற்றிலும் பேசப்படுகிறது .  பதிவுலகத்திலும் பல பதிவுலக நண்பர்கள் தங்கள கருத்துகளை வெளியிடுகிறார்கள் .  நான் கூட இந்த நிகழ்வுகள் குறித்து விளக்கமாக இந்த வலைப்பூவில் பல கட்டுரைகள்  எழுதி உள்ளேன் .  இந்த சூழ்நிலையில் இன்று காலை தினத்தந்தி பத்திரிகையை படித்தவுடன் இந்த இடுகையை எழுதும் எண்ணம் தோன்றியது 

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் திரு. உதயகுமார் வஞ்சகமாக பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவரது நோக்கம் மக்களின் நியாயமான பாதுக்காப்பு அச்சங்களை போக்குவதில் இல்லை என்று நான் பல முறை பல ஆதாரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன் .  ஆனால் திரு. உதயகுமார் மற்றும் சில பதிவுலக நண்பர்கள் இந்த போராட்டத்தை ஒரு அகிம்சை போராட்டம் என்றே வர்ணித்து வந்தனர்

 
இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கடைசி போராட்டத்தை ( அகிம்சை ..? ) திரு. உதயகுமார் அறிவித்து உள்ளார் .  அதாவது நாளை 09 09 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகை இடப்போவதாக.  
இந்த சூழ்நிலையில் இடிந்தகரை மற்றும் அதை சுற்றியுள்ள சில மீனவ கிராமங்களில் அணுமின் நிலையத்தின் எதிர்ப்பு குழுவில் உள்ள 32 பேர் ஒரு அறிவிப்பை தண்டோரா போட்டு அறிவித்து உள்ளனர் .  அந்த அறிவிப்பு என்ன சொல்லுகிறது என்றால் , "  போராட்டத்தில் உயிர் இழக்கும் நபர்களுக்கு அணுமின் நிலையத்தின் எதிர்ப்பு குழுவின் நிதிக்குழு சார்பில் 5 லட்சம் வழங்கப்படும் " என்று.   ( நன்றி : தினத்தந்தி 08 09 2012 )

அதாவது அகிம்சை போராட்டம் என்று மக்களை தூண்டிவிடும் திரு . உதயகுமார் நாளைய போராட்டத்தை மிக பெரிய கலவரமாக உருவாக்க திட்டமிட்டு உள்ளார் என்பது தானே அர்த்தம் .  எப்படியும் சில உயிர்களை அந்த போரரட்டத்தில் இழக்க வைப்பதும் இவரின் திட்டம் என்று தெரிகிறது அல்லவா ..!
இவரை பார்த்தும் , இவர் இப்படி சொன்னதை ஆதரித்து எனக்கு பதில் எழுத காத்திருக்கும் நண்பர்களை பார்த்தும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் ...
  1. இந்த முற்றுகை போராட்டத்திற்கு செல்லும் கூட்டத்தின் முன்பு நீங்களோ ( திரு. உதய்குமாரோ அல்லது திரு . புஷ்பராயனோ அல்லது மேற் சொன்ன பதிலை ஆதரிக்கும் யாரோ ) செல்ல தயாரா ...?
  2. ஒரு உயிருக்கு 5 லட்சம் என்று தைரியமாக அறிவித்து இருக்கும் நீங்கள் , உங்கள் உயிரை விட்டு அந்த 5 லட்சத்தை பெற்று கொள்ளுவீர்களா ...?
  3. அப்பாவி பெண்களையும் , குழந்தைகளையும் முன்னால் நிறுத்த திட்டமிட்டு இருக்கும் நீங்கள் ( திரு ,. உதயகுமார் , திரு. புஷ்பராயன் மற்றும் அவரின் கருத்துகளை ஆதரிப்பவர்கள் ) உங்கள் மனைவிகளையோ அல்லது பிள்ளைகளையோ முன் நிறுத்துவீர்களா ..?
அப்பட்டாக மக்களை நயவஞ்சக வார்த்தைகளினால் ஏமாற்றி வரும் திரு, உதயகுமாரின் மக்கள் தலைவன் என்ற போலி முகமூடி அவரின் இந்த வார்த்தையின் மூலம் கிழிந்துள்ளது ,   இதன் பிறகும் மக்கள் அவரின் பின்னால் செல்வதும் , மக்களாகிய தங்கள் நலனில் மாத்திரம் அக்கறை கொண்ட படியினால் இன்னும் கனிவுள்ளதுடன் அவர்களை அணுகும் அரசை கீழ்த்தரமாக நினைப்பதும் பரிதாபத்துக்கு உரிய நிகழ்வுகள் ..


 அப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் , அது திரு. உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டத்தின் மொத்த சதி திட்டத்தின் வெளிப்பாடு தான். அதை மக்களும் , எதிர்கால சமுதாயமும் ஒருகாலும் மன்னிக்க மாட்டார்கள்