இரண்டு வருடங்களுக்கு முன்பு , மிகுந்த எதிர்பார்ப்பையும் , பரபரப்பையும் தனது பிரசாரத்தினாலும் , வாக்குறுதிகளினாலும் மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிஜேபி அரசின் 2 வருட சாதனைகள் என்ன என்று சிந்தித்து பார்த்ததின் ஒரு பகுதி தான் இந்த பதிவு.....
2014 ம் வருட தேர்தல் வாக்குறுதிகளை பிஜேபி வெளியிட்ட போது , அதில் முதலாவதும் , பிரதானதுமான வாக்குறுதி என்னவென்றால் விலைவாசியை குறைப்பது தான் .
விலைவாசி குறைக்கப்பட வேண்டும் என்பது எல்லாரின் கோரிக்கையும் தான் . ஆனால் அதில் சில முக்கியமான விடயங்கள் இடைபட்டுள்ளன என்பது ஏற்கத்தகுந்த ஓன்று. அவையாவன....
- பொருட்களின் தேவையை விட , அதன் உற்பத்தி அதிக அளவில் இருந்தால் விலைவாசி குறைய வாய்ப்பு இருக்கிறது.
- பொருட்களை உற்பத்தி செய்யும் நபருக்கும் தேவையான் லாபம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது.
- பொருட்களின் போக்குவரத்து செலவு குறைக்கப்பட்டால் , பொருட்களின் விலை குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
- போக்குவரத்து செலவில் , எரிபொருள் செலவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.
இந்தியாவின் பெரும்பாலான எரிபொருள் தேவை அதாவது டீசல் மற்றும் பெட்ரோல் தயாரிக்க பயன்படும் கச்சா எண்ணையை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி தான் நாம் சமாளித்து வருகிறோம். எனவே , பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது அயல் நாட்டு சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொருது மாறுபடும்...
இங்கு தான் நாம் கவனிக்கவேண்டும்... முன்னாள் காங்கிரஸ் ஆட்சியும் 1 பீப்பாய் கச்சா எண்ணெய் 127 டாலருக்கு விற்கப்பட்ட நிலையில் , நமது நாட்டில் பெட்ரோல் 1 லிட்டருக்கு கிட்டத்தட்ட 60 ரூபாயாக விற்கப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது சந்தை விலையில் கிட்டத்தட்ட 32 டாலருக்கு ( அதாவது 70 சதவீத சரிவு ) , விலைக்கு வாங்கி மோடி சார் அரசாங்கம் மக்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலை 65 ரூபாய்க்கு விற்கிறது. நியாயப்படி 70 சதவீத வாங்கும் விலை குறைந்தால் , ஒரு 50 சதவீதமாவது விற்கும் விலை குறையவேண்டாமா....? குறையவில்லை.... காரணம் .....உற்பத்தி வரியை அநியாயத்திற்கு ஏற்றி , மக்கள் பணத்தை அழகாக ஏமாற்றுகிறது அரசு என்று தான் நினைக்க தோன்றுகிறது.....
கச்சா எண்ணெய் கடந்த 5 வருடங்களில் வாங்கப்பட்ட விலையை பாருங்கள்....
(நன்றி : http://www.infomine.com/investment/metal-prices/crude-oil/5-year/)
குறைந்த விலைக்கு கச்சா எண்ணையை வாங்கி அதை அதிக விலைக்கு சொந்த மக்களுக்கு விற்றுவிட்டால் , விலைவாசி எப்படி குறையும்.....?
மோடி சார் எங்க இருக்கீங்க......? மக்கள் முட்டாள்கள் அல்ல.,....
No comments:
Post a Comment
நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி