Sunday, 20 November 2016

கருப்பு பணம் என்றால் என்ன ...?

இன்றைய பெரும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் பொருள் "கருப்பு பண ஒழிப்பு ".. கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு 5௦௦ ரூ / 1௦௦௦ ரூ நோட்டுகளை திரும்ப பெறுவது ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....உண்மையில் கருப்பு பணம் என்றால் என்ன என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்....

நாட்டில் உள்ள மக்கள் கூட்டத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்....
1. பெரிய தொழில் அதிபர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள்.....இவர்களை X என்று அழைப்போம். இவர்கள் மிஞ்சி போனால் தேசத்தின் ஜனத்தொகையில் ஒரு 5% பேர் தான் இருப்பார்கள். ஆனால் தேசத்தின் பொருளாதாரத்தில் அல்லது பணத்தில் 7௦% இவர்கள் கையில் தான் இருக்கும்.

2. மத்திய மாநில அரசு ஊழியர்கள். இவர்களை Y என்று அழைப்போம்... இவர்கள் ஒரு 1௦% பேர் இருப்பார்கள் . பணத்தில் ஒரு 15 சதவீதத்தை வைத்திருப்பார்கள்....

3. சாதாரண மக்கள் , கூலி தொழிலாளிகள் , உழவர்கள் மற்றும் சிறிய கடை நடத்துபவர்கள் . இவர்களை Z என்று அழைப்போம். இவர்கள் மக்கள் தொகையில் 85% பேர் இருந்தாலும் ஒரு 15% பொருளாதாரத்தை தான் கையில் வைத்திருப்பார்கள்..


சரி கருப்பு பணம் என்றால் என்ன...? கருப்பு பணம் என்பது கணக்கில் வராத பணம்... அப்படியென்றால் என்ன அர்த்தம்....

1. வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்தால் கருப்பு பணம் உண்டாகும். அதாவது A என்பவன் 1௦௦ ரூபாய் வரி கட்டவேண்டிய இடத்தில் 1௦ ரூபாய் மட்டும் கட்டினால் , 9௦ ரூபாய் கருப்பு பணம் என்று அழைக்கப்படுகிறது. வருட வருமான 2.5 லட்சம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டியதில்லை. அப்படியானால் மேல் குறிப்பிட்ட Z பிரிவு மக்கள் இந்த பட்டியலில் வரமாட்டார்கள்....சம்பளம் கொடுக்கும்போதே , வருமான வரி பிடிக்கபடுவதால் Y பிரிவு மக்களும் இந்த பிரிவில் வரமாட்டார்கள். அதிக வரி கட்டவேண்டியது வருகிறபடியால் தான் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது எனவே x பிரிவு மக்கள் தான் இந்த பிரிவில் வரமுடியும்..... 

2. ஊழல் / லஞ்சம்  மூலம் கிடைக்கும் பணம் :- அரசு அதிகாரிகள் / அரசியல்வாதிகள் ஊழல் / லஞ்சம் மூலம் பணம் பெற்றால் , அது வருமான கணக்கில் வராது . எனவே அதற்க்கு வரி கட்டமாட்டார்கள் . அதாவது B என்பவன் 1௦௦ ரூபாய் லஞ்சம் பெற்றால் , அந்த 1௦௦ ரூபாயுமே கருப்பு பணம் என்று அழைக்கப்படும். லஞ்சம் என்பது Z பிரிவு மக்களால் Y பிரிவுக்கும் X பிரிவில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இதில் X பிரிவில் உள்ள தொழில் அதிபர்களும் x பிரிவில் உள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்படுவதால் லஞ்சம் மூலம் உண்டாகிற கருப்புப்பணம் ( அதாவது B ) x மற்றும் Y பிரிவு மக்களிடம் தான் இருக்கும்.

3. கள்ள நோட்டுகள் :- கள்ள நோட்டுகள் கருப்பு பணம் என்று அழைக்கப்படாது . ஆனால் கள்ள நோட்டுகளை மாற்றுபவர்கள் அதற்க்குவாங்கும் பணம் கருப்பு பணம்.  அதாவது C என்பவன் 1௦௦ ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றினால் அதற்க்கு கிடைக்கும் 5௦ ரூபாய் கருப்பு பணம்.  கள்ளநோட்டுகள் புழக்கம் பொதுவாக Z பிரிவு மக்களிடம் நடக்க கூடும்  ( சாதாரண ஜனங்களை தான் கள்ள நோட்டு கொடுத்து ஏமாற்ற முடியும் ) ஆனால் Z பிரிவு மக்கள் C அல்ல.... C யினால் ஏமாற்றப்பட்டவர்கள்..

4. இன்னும் ஒரு வித்தியாசமான காரியம் இருக்கிறது. A வும் ( X பிரிவு தொழில் அதிபர்கள் / நடிகர்கள் / அரசியல்வாதிகள் ) B வும் ( Y பிரிவு மத்திய மாநில அரசு அதிகாரிகள் ) தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை கொண்டு Z பிரிவில் உள்ள சாதாரன மக்களிடம் நிலத்தை வாங்குவார்கள். 1 கோடி நிலத்தை 1௦ லட்சம் என்று பத்திரபதிவு செய்து 1 கோடி ரூபாயை Z மக்களிடம் கொடுத்து விடுவார்கள்...இப்போது A மற்றும் B யிடம் இருக்கும் கருப்பு பணம் வெள்ளையாகிவிட்டது.. இப்போது Z பிரிவில் இருக்கு பணமும் காலபோக்கில் சமுதாயத்தில் கலந்து விட்டு இருக்கும். சும்மா நிலத்தை விக்க உழவர்கள் பைத்தியகாரர்களா...? வீடு கட்டனும் , பிள்ளையை படிக்க வைக்கணும் , கல்யாணம் கட்டி கொடுக்கணும் ...ஆயிரம் காரணங்கள் இருக்கும்... அந்த காரணங்களுக்காக செலவு செய்யும் போது பணம் வெள்ளையாக திரும்பவும் X பிரிவிடத்தில் சேருகிறது.... அல்லது Z பிரிவில் கூட இருக்கலாம்....

இப்போது நாம் கேள்விக்கு வருவோம்....5௦௦ / 1௦௦௦ திரும்ப கொடுப்பதால் யாருக்கு நஷ்டம் ..?
1. X பிரிவு கையில் உள்ள கருப்பு பணத்தை நிலமாக / தங்கமாக மாற்றியிருக்கும்....X பிரிவு அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலுக்கு செலவழிக்க பணம் வைத்திருக்க வாய்ப்புண்டு...
2. Y பிரிவு கையில் இருக்கும் கருப்பு பணம் நிலமாகவோ / தங்கமாகவோ மாற்றப்பட்டு இருக்கும்...
3. Z பிரிவில் உள்ள யாருமே கணக்கு பார்த்து செலவழிப்பதில்லை...ஒரு தடவை வாழை வெட்டினால் சிலநேரம் 1 லட்சம் கிடைக்கும் , சில நேரம் காற்றில் அழிந்து போகும்....லாப நட்ட கணக்கு தெரியாமல் , தான் உழைத்து / சேர்த்து வைத்த பணத்தை வங்கியில் கட்டும் போது , கருப்பு பண முதலை என்ற பெயரை வாங்க போகிறான்....

எனவே தான் நான் கூறுகிறேன் . 85% மக்களை வதைக்காதீர்....மீதம் இருக்கும் 15% சதவீதம் மக்களின் பணம் ( கையிருப்பு / வங்கி கணக்கு ) , நிலம் , சொத்து , நகைகளை ஆய்வு செய்யுங்கள்....வேலை எளிதாக முடிந்து விடும்.. அதற்காக 85% மக்களின் உழைப்பை கைப்பற்றி விட்டு கருப்பு பணத்தை கைப்பற்றினோம் என்று மார் தட்டினால் இந்த சமூகம் உங்களை மன்னிக்காது.....


கருப்பு பணத்தை உண்மையாக ஒழிக்கவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை...

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி