"பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை
ஆட்டிவிடுதல்" என்ற மொழியை அறியாத தமிழர்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்பது
எனது திடமான எண்ணம்..! நல்லா தூங்கிகிட்டு இருந்த பிள்ளையை வேண்டும் என்றே கிள்ளி
விட்டு , அது அழ ஆரம்பித்தவுடன் தொட்டிலை ஆட்டி பெயர் வாங்குவது தான் அந்த
மொழியின் அர்த்தம்....!
இந்த மொழிக்கும் , கருப்பு பண மீட்புக்கும் என்ன தொடர்பு
என்று ஒரு கேள்வி எழும்பத்தான் செய்கிறது...சற்று சிந்திப்போமே....!
கருப்பு பணம் என்றால் என்ன என்பதை நாம் முந்தைய
பதிவுகளில் சிந்தித்து இருக்கிறோம்.
கணக்கில் காட்டாத பணம் மக்கள் மத்தியில் புழங்கி கொண்டு இருக்கிறது. அதை
கண்டுபிடிக்க தான் இந்த போராட்டம் எனவே நாம் ரத்தம் சிந்தவும் ( இராணுவ வீரர்களை
போல ) என்று ஒரு கூட்டம் பிரசாரம் செய்கிறது. ஆனால் சில உண்மைகள் என்னை
வேதனைப்படுத்துகிறது....!
உலகையே பொருளாதார சீரழிவு தாக்கினபோதும் கூட, இந்தியா
தாக்குபிடித்த காரணம் , முந்தைய அரசில் இருந்த சில பொருளாதார நடவடிக்கைகள் என்பதை
யாரும் மறக்க முடியாது. மறுக்கவும் முடியாது. ஆனால் கருப்பு பண மீட்பு என்ற
போர்வையில் இப்போது செய்யப்படும் இந்த திட்டம் மாபெரும் பொருளாதார சீரழிவுக்கு
நேராக மக்களை கொண்டுபோவதை அநேகர் புரிந்து கொள்ளமுடியவில்லை. சரி....நாம் கட்டுரைக்கு வருவோம்.....
முந்தைய அரசின் காலத்தில் ( அதாவது மார்ச் 2014ல் ) பண புழக்கம் , வங்கிகளின் பண இருப்பு மற்றும்
பொதுமக்களிடம் இருக்கும் பணம் மற்றும் தற்போதைய அதே காரணிகளை ( ஜூலை 2௦16 ல் )
ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து ஆராய்ந்து பார்த்தால் , ஒரு ஆச்சரியம்
மிஞ்சுகிறது....
Year Month
|
Currency In Circulation
(பில்லியன் )
|
வங்கி இருப்பு
(பில்லியன் )
|
Currency With Public (பில்லியன் )
|
மார்ச் 2014
|
13010.74
|
552.55
|
12458.19
|
மார்ச் 2௦15
|
14483.12
|
621.31
|
13861.82
|
மார்ச் 2௦16
|
16634.63
|
662.09
|
15972.54
|
ஜூலை 2௦16
|
17361.77
|
750.34
|
16611.43
|
மேலே குறிப்பிட்ட அட்டவணையில் இருந்து பார்த்தால் 2 வருட
காலத்திற்குள் 4,351.03 பில்லியன் அளவிற்கு பணப்புழக்கம் அதிகரித்து
உள்ளது. மாத்திரம் அல்ல மக்களிடம் உள்ள பணம் என்று கணக்கிடப்பட்டதில் 4153.24 பில்லியன் அதிகரித்து உள்ளது. 1 பில்லியன் என்பது 1௦௦௦ மில்லியன் ( 1
மில்லியன் என்பது 1௦ லட்சம் ). அதாவது 4153,24,00,00,000 ரூபாய் . அதாவது 41.53 லட்சம் கோடி
அதிகமாக இந்த வருடத்தில் புழக்கத்தில்
அனுமதிக்கப்பட்டு உள்ளது .
சரி போகட்டும்...! 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்கள்
செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது அல்லவா...! ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கைவசம்
இருந்த 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகளின் மதிப்பும் ரிசர்வ் வங்கி தளத்தில்
இருந்து பெறப்பட்டது....
மாதம் / வருடம்
|
5௦௦ ரூபாய்
( பில்லியன் )
|
1௦௦௦ ரூபாய்
( பில்லியன் )
|
மார்ச் 2014
|
5702.48
|
5081.37
|
மார்ச் 2௦15
|
6563.91
|
5612.45
|
மார்ச் 2௦16
|
7853.75
|
6325.68
|
மார்ச் 2௦14 ல் இருந்து மார்ச்
2௦16 வரை அதிக அளவில் அச்சடிக்கப்பட்டு மக்கள் மத்தியில் புழக்கத்திற்கு
விடப்பட்ட 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் மதிப்பு
|
||
அதிகம்
|
2151.27 பில்லியன்
|
1244.31 பில்லியன்
|
இந்த 2 வருடத்தில் அதிகமாக 2151270000000 ( 21.57 லட்சம் கோடி 5௦௦ ரூபாயிலும் ) 1244310000000 ( 12.44 லட்சம் கோடி 1௦௦௦ ரூபாயிலும் ) ஆக மொத்தம் 34.01லட்சம் கோடி புதிதாக சந்தைக்குள் இந்த 2 வருடத்தில்
அனுமதிக்கப்பட்டு உள்ளது.
பல மாதங்களாக திட்டமிடப்பட்டு தான் 5௦௦ ரூபாய் மற்றும்
1௦௦௦ ரூபாய் திரும்பபெறப்படுகிறது என்று கூறபட்டாலும் , கீழ்க்கண்ட கேள்விகள்
மனதில் எழும்ப தான் செய்கிறது...
1.
இப்படி ஒரு திட்டம் இருந்தால் , அதிக அளவில்
5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் இந்த இரண்டு வருடத்தில் புழக்கத்தில்
விடப்பட்டதின் காரணம் என்ன...?
2.
கடந்த 2 வருடங்களாக பணபுழக்கத்தை படிப்படியாக
குறைத்து இருந்தால் , மீதம் உள்ள 5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய்களை மாற்றுவது
எளிதாக இருக்குமே...?
3.
கடந்த இரண்டு வருடத்தில் பணம் அச்சிட
செலவழிக்கப்பட்ட தொகை மீந்திருக்குமே...?
4.
நீங்களே பணப்புழக்கத்தை அதிகமாக்கி , நீங்களே
திரும்ப வாங்கி , அது தான் கருப்பு பணம் என்று நம்ப வைப்பதின் இரகசியம் என்ன...?
மொத்தத்தில் ஓன்று தான் தோன்றுகிறது....." பிள்ளையை
கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிட்ட கதை தான் " இது....
உங்களால் ஒரு செயலுக்கு மூன்று விதமான விளக்கம் கொடுக்க இயலுமா? முதலில் கருப்பு பணம் மீட்பு என்றார்கள் , அது பொய் என்று மக்கள் உணர்ந்தபின், இல்லையில்லை கள்ளநோட்டிற்கு எதிரானது என்றார்கள், புது 2000 ருபாய் நோட்டு வெளியிட்ட மூன்றாவது நாளே 2000 ருபாய் கள்ளநோட்டு பெங்களூருவில் பிடிபட்டு மக்களுக்கு அதிர்ச்சியளித்தபின், அதுவும் இல்ல,அதாவது இந்தியா கேஷ்லஸ் வணிகத்தை நோக்கி நகர்கிறது என்கிறார்கள். கட்சியா இன்னதாம்பா சொல்லவாராரு??
ReplyDelete// உலகையே பொருளாதார சீரழிவு தாக்கினபோதும் கூட, இந்தியா தாக்குபிடித்த காரணம் //
இப்படித்தான் கேஷ்லஸ் வணிகம், கேஷ்லஸ் வணிகம்னு ஒருத்தன் செஞ்சு, நல்லா வச்சு செஞ்சுட்டான். பணத்தை எல்லாம் பேங்க்ல குவிச்சு, கண்டவனுக்கெல்லாம் கடன குடுத்து, ஆனானப்பட்ட அமெரிக்காவுல வரிசையா பேங்க் திவால் ஆச்சு. அன்னக்கி விழுந்தவனுங்க இன்னம் எந்திரிக்கிறானுங்க.. ஆனா அப்ப கூட, அது இந்திய பொருளாதாரத்தை அதிகமா பாதிக்கவில்லை. அதுக்கு காரணம் இந்தியர்களோட சிறுசேமிப்பு பழக்கம்தான்னு ரொம்ப பெருமையா சொன்னாங்க. இனிமே எங்கே சிறுசேமிப்பு, பேங்க் திவால்னா எல்லாருக்கும் நாமம் தான். இன்னொரு தடவ அந்தமாதிரி ஏதாவது வந்தா, அரசின் சார்பில் திருவோடு இனாமாக தரப்படும். என்ஜாய் பண்ணுங்க மக்காஸ்..
நண்பரின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றிகள்....
Deleteஇந்தியாவில் இன்னும் கொஞ்ச காலத்திற்கு பணமில்லா வியாபாரம் என்பது சாத்தியமல்ல....அந்த கொஞ்ச காலம் என்பது நமது ஆயுள் காலமாகவும் இருக்கலாம்...
பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுபவர்கள்..மகா மட்டமான நாதாரிகளால் முடியும்...
ReplyDeleteபிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடுபவர்கள்..மகா மட்டமான நாதாரிகளால் முடியும்...
ReplyDeleteநண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...!
Deleteமூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் பதிவு எழுதத் தோணும்..
ReplyDeleteநண்பரே ( கருத்து கந்தசாமி )....நான் எழுதிய இந்த பதிவு ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களை கொண்டு எழுதப்பட்டது.....எனது கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்....!
Delete