ஊழல் என்றவுடனே நமது நினைவுக்கு வருவது 2G தான். அதுவும்
1,76,௦௦௦ கோடி ரூபாய் ஊழல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது. இன்றும்
1,76,௦௦௦ கோடி ரூபாயை பணமாக வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்று வாதிடுபவரும்
உண்டு....உண்மையில் 1,76,௦௦௦ கோடி ரூபாயை ஊழல் செய்து விட்டார்களா...? உலகின்
முதல் பணக்காரர் பில்கேட்சின் சொத்து மதிப்பு 85 பில்லியன் டாலர் , அதாவது 4.25 லட்ச கோடி. அதேநேரத்தில் உலகின் 1௦௦ வது பணக்காரரின்
மதிப்பு 10.2 பில்லியன் டாலர் , அதாவது கிட்டத்தட்ட 5,3௦௦ கோடி. எனவே
1,76,௦௦௦ கோடி பணத்தை யாராவது கையில் வைத்திருந்தால் , அவர் நிச்சயம் உலக அளவில்
ஒரு 3௦ வது இடத்தையாவது பிடிக்க வாய்ப்புண்டு.... சரி...2G என்றால் என்ன...?
இரண்டாம் தலைமுறை தொலைபேசி / அலைபேசி களுக்கான
அலைவரிசையே 2G ஸ்பெக்ட்ரம் என்று அழைக்கப்பட்டது.. 1997 ம் வருடம் மற்றும் 2௦௦௦
வருடங்களில் அலைவரிசைகள் ( 9௦௦ MHz) MTNL மற்றும் BSNL க்கு வழங்கப்பட்டது....2௦௦1
ம் வருடத்தில் முதல்முறையாக 1800 MHz அலைக்கற்றைகள் ஏலமுறையில் விடப்பட்டன....இந்த
காலத்தில் தான் தமிழ்நாட்டில் முதல்முறையாக BPL அலைபேசி தன் சேவையை துவங்கியது. வாக்கி
டாக்கி போல பெரிய செல்போன்களை கையில் வைத்திருப்பதே கவுரவம் என்று கருதிய காலம்
அது. அது ஒருவகையில் உண்மைதான்....ஏன்
எனில் BPL அலைபேசி வகுத்திருந்த சேவைக்கட்டணம் அவ்வளவு அதிகம். ஒன்றுமில்லை அவுட்கோயிங்
ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 16ம் , இன்கம்மிங் ஒரு நிமிடத்திற்கு ரூபாய் 4ம் வசூலிக்கப்பட்டது. இப்படி கட்டணம் இருந்தால் நம்மில்
ஒருவர் கூட அலைபேசியை பயன்படுத்த மாட்டோம் என்பதை அரசு அறிந்தது.... அதே நேரத்தில்
இந்தியாவின் அபரீதமான கணிணியல் வளர்ச்சிக்கும் அதிகவேக இன்டர்நெட் போன்றவை
தேவைப்பட்டன...இக்காலத்தில் தான் நாட்டை கணினிமயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டது
என்று தான் கூறமுடியும்....
சாமானிய மக்களும் அலைபேசியை / இணையத்தை
பயன்படுத்தவேண்டும் , அதே நேரத்தில் அந்த சூழல் சீக்கிரமாக இந்தியாவில் உருவாகவேண்டும்
என்று நினைத்த அரசு 2௦௦8
ல் 122 2G அலைகற்றைகளை 2௦௦1 விலையிலே
கொடுக்கக் தீர்மானித்தது...ஏலத்தில் விடாமல் 2௦௦1 விலையிலே கொடுப்பதற்கு அரசு
நினைத்த பிரதான காரணம் வளர்ச்சியே....! ஒருவேளை 2௦௦8 ல் ஏலம் விடப்பட்டு இருந்தால் பல ஆயிர
கோடிக்கு ஏலம் போயிருக்கும். ஆனால் பல ஆயிர கோடிக்கு ஏலம் எடுக்கிறவன் தனது சேவையை
எப்படி குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கமுடியும் என்ற நினைப்பு தான் அந்த
முடிவுக்கு காரணம். எனவே First Come First Serve முறையில் அலைகற்றைகளை ஒதுக்க அரசு
தீர்மானித்தது..
இங்கு தான் தமிழ்நாட்டின் சிங்கம் (!) ராஜா தனது வேலையை
காண்பித்தார். தனது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத / அனுபவமில்லாத
நிறுவனங்களுக்கு அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்தார். வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு
செய்யும் படி பிரதமர் கூறிய அறிவுரையை புறம் தள்ளியதால் இந்த முறைகேடான ஒதுக்கீடு
நடந்தது....ஆனால் இந்த காலங்களில் தான் 1 நிமிடத்திற்கு 16ரூபாய் ஏற்று இருந்த
அவுட்கோயிங் கால் 1 ரூபாய் அளவுக்கு வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்....! இந்த
காலகட்டத்திற்கு பின்பு தான் இந்திய தொலைபேசி வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்பட்டதை
யாரும் மறுக்கமுடியாது. சரி ...! இப்போது
1,76,௦௦௦ கோடி ஊழல் குற்றசாட்டை குறித்து சிந்திப்போம்...!
அரசின் திட்டங்களை ஆய்வுசெய்யும் CAG என்று சொல்லப்பட
கூடிய மத்திய தணிக்கை துறை இந்த 2G ஒதுக்கீடு குறித்தும் ஆய்வு செய்தது. 2௦௦8 ல் First Come First Serve முறையில் ஒதுக்கீடு செய்யாமல்
ஏலம் மூலம் அலைகற்றைகளை விற்று இருந்தால் அரசுக்கு லாபம் கிடைத்து இருக்கும் என்று
தந்து அறிக்கையை சமர்ப்பித்தது. 2௦1௦ ம் வருடம் விடப்பட்ட 3G அலைகற்றை ஏலத்தை
அடிப்படையாக கொண்டு 2௦௦8
ல் 2G அலைகற்றைகள் ஏலம் விடபட்டு இருந்தால்
1,76,௦௦௦ கோடி அரசுக்கு கூடுதல் பணம் கிடைத்து இருக்கும் என்று அறிவித்தது....
அதாவது அரசுக்கு 1,76,௦௦௦ கோடி இழப்பு என்று அறிவித்தது....
சரி ....இவைகளை கருத்தில் கொண்டு நாம் பின்வரும்
காரியங்களை சிந்திப்போம்....!
1.
ஏலம் விட்டு இருந்தால் 1,76,௦௦௦ கோடி கிடைத்து இருக்கலாம். ஆனால் 1,76,௦௦௦
கோடிக்கு ஏலம் வாங்கிய தொலைபேசி நிறுவனங்கள் மக்களிடம் தானே அந்த பணத்தை திரும்ப
வாங்கும். அப்படியானால் சாமானிய மக்களுக்கு எப்படி அலைபேசி போய் சேரும்...? இது ஒருவகையில் இலவச மின்சாரம் கொடுப்பது
போலதான். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்
கொடுப்பது அரசுக்கு இழப்பு தானே..! ஆகிலும் நமது நாட்டில் விவசாயம் வளரவேண்டும்
என்ற எண்ணத்தில் இலவச மின்சாரம் கொடுக்கபடுகிறது....
2.
அப்படியானால் இதிலே ஊழல் இல்லையா...என்று
கேட்டால் கண்டிப்பாக இருந்து இருக்கும்...சாவு சான்றிதழ் வாங்குவதற்க்கே பணம்
வாங்குகிற இந்த நாட்டிலே , சும்மா ஒதுக்கீடு செய்து இருப்பார்களா...? கண்டிப்பாக
வாங்கியிருப்பார்...ஆனாலும் இவ்வளவு தான் லஞ்சம் வாங்கினார்கள் என்று யாராலும்
நிரூபிக்கமுடியவில்லை....! நான் நினைக்கிறேன் அதிகபட்சம் 5௦௦ கோடிகள்
....இருக்கலாம்....
3.
திரு.ராஜாவுக்கு நான் வக்காலத்து
வாங்குகிறேனா...? இல்லை...ஊழல் செய்தது யாராய் இருந்தாலும் சட்டத்தின் முன்
நிறுத்துங்கள் தண்டனை வாங்கி கொடுங்கள்.....! எனவே தான் கருப்பு பணம் யாரிடம்
இருக்கிறதோ , அவர்களை மடக்குங்கள் என்கிறேன்...
4. 1,76,௦௦௦ கோடி என்பது ஊழல்
அல்ல அது இழப்பு...! அது மக்கள் மத்தியில் 1,76,௦௦௦ கோடி ஊழல் என்று பரப்பியது ஒரு
அரசியல் தந்திரமே....!
Appadi. Neenga orutharavathu idhu uthesa izappunu ezudhi irukingale. Two weeks munnadi oru news padichen. 4G auctionle Govt., was expecting for 5,00,000 crores but the auction ends at 65,000 crores. The telecom company syndicate is that strong. Further, if they pay 5,00,000 crores to buy the bandwidth it will fall on common people head only. No one is going to understand this and it will take huge time for DMK to come out of this.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...நீங்கள் கூறியதை நான் ஆமோதிக்கிறேன்...உண்மை மக்களுக்கு விளங்கும் என்று நான் நம்புகிறேன்...காத்திருப்போம்....
Delete