Friday, 25 November 2016

கருப்பு பண மரணங்கள் - மௌனமே அஞ்சலி

5௦௦ / 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் இந்தியா முழுவதும் நிகழ்ந்த பரிதாப மரணங்கள் உங்கள் மௌன அஞ்சலிக்காக....!

1.       டெல்லி :- 25 வயது நிரம்பிய இளம் தொழில் அதிபர் விரேந்தர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  தன்னிடம் இருந்த 12 லட்சம் ரூபாயை மாற்ற வழி இல்லாததால் , மனம் உடைந்து தற்கொலை செய்ததாக மனைவி கூறினார் . தகவல் :- இந்தியன் எக்ஸ்பிரஸ்.

2.       ஆந்திர மாநிலம் சித்தூர் :- 7௦ வயது நிரம்பிய இரத்தின பிள்ளை வங்கி வாசலில் அதிக நேரம் நின்றதால் களைப்படைந்து வங்கி மேலாளரை அணுகிய நேரத்தில் இறந்தார் . தகவல் : தி இந்து.

3.       ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டம் :- 56 வயது நிரம்பிய வங்கி மேலாளர் ராஜேஷ் குமார் , 3 நாட்கள் இரவு பகல் வேலை செய்ததால் வங்கியில் இறந்து போனார். தகவல் :- இந்துஸ்தான் டைம்ஸ்.

4.       உபி மாநிலம் , அசம்கார் :- 7௦ வயது நிரம்பிய அஹமது வங்கி வாசலில் வரிசையில் நிற்கும் போது இறந்தார் . தகவல் டைம்ஸ் ஒப் இந்தியா

5.       ராஜஸ்தான் மாநிலம் , சிகார் மாவட்டம் :- 62 வயது நிரம்பிய டீ விற்கும் ஜகதீஸ் பன்வர் , தனது மகளின் திருமணத்திற்கு பணம் எடுக்கமுடியாததால் மாரடைப்பில் மரித்தார் . தகவல் இந்தியன் எக்ஸ்பிரஸ்.

6.       மீரட் :- நான்கு நாட்களாக வரிசையில் நின்றும் பணம் கிடைக்காத நிலையில் , வங்கி முன் வரிசையில் நிற்கும் போது மரணமடைந்தார் முகமது. தகவல் : தி இந்து.

7.       மத்திய பிரதேசம் : 7௦ வயது முன்னாள் இராணுவ வீரரான பாபுலால் தன்னிடமிருந்த 12௦௦௦ ரூபாயை மாற்ற போகையில் வங்கிக்கு 1௦௦ மீட்டர் அருகில் மரித்தார்.  தகவல் : தி வீக்கென்ட் லீடர்

8.       ஜார்கண்ட் , பலமு :-  வங்கியின் வாசலில் நிற்க்கும் போது ராம் சந்திர பாஸ்வான் மரித்தார்.  தகவல் : இந்திய எக்ஸ்பிரஸ்.

9.       உபி மாநிலம் , பல்லியா :- பல மணி நேரம் செலவழித்த பின்பும் தன்னிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் மாரடைப்பில் மரித்தார் சுரேஷ் சோனார். தகவல் : பிரஸ் டிரஸ்ட் ஒப் இந்தியா.

10.   புனே :- 53 வயது வங்கி உதவியாளரான துக்காராம் அதிக கூட்டத்தை கையாண்டதால் , மாரடைப்பில் உயிரிழந்தார். தகவல் : இந்துஸ்தான் டைம்ஸ்

இறந்த 65 பேர்களில் ஒரு பத்து பேர் மாத்திரமே இவர்கள்.....என்ன தப்பு செய்தார்கள்....? கொள்ளை அடித்தார்களா...? கருப்பு பணத்தின் மீது படுத்து கிடந்தார்களா...? இல்லை கள்ளப் பணம் அடித்தார்களா....?

நாட்டுக்காக இப்படி சில காரியங்களை சகிக்க தான் வேண்டும் என்று யாராவது கூறினால் , உங்கள் வீடுகளில் இப்படி யாரையாவது விட்டு தருவீர்களா என்று சிந்திக்கவும்....


மௌன அஞ்சலிகள் மாத்திரம்......!

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. நீங்கள் அடுத்தவரிடம் தவறை திருத்திக் கொள்ளவும் என சொல்லத் தகுதி உடையவர்தானா என முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும் இருதயம் அவர்களே: மத்தேயு : அதிகாரம் 5 : ஆணையிடுதல்: 33.மேலும் பொய்யாணை இடாதீர் ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்கு செலுத்துவீர், என்று முற்காலத்தவர்க்கு கூறப்படிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34.ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம்.விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. 34. மண்ணுலகின் மேலும் வேண்டாம் ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்;ஏனெனில் அது பேரரசரின் நகரம். 36. உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது..37..ஆகவே நீங்கள் பேசும்போது ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள், இதை விட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது. ஹலோ மிஸ்டர் இருதயம் இது போதுமா?

    இருதயம் எனப் பேர் வைத்துக் கொண்டு பைபிளை சரியாகப் படிக்காமல் எனக்கு திருத்திக் கொள்ள அறிவுரை வேறு...நீர் திருத்திக் கொண்டு முதலில் ஒழுங்காக பைபிளைப் படித்து புரிந்து கொள்ளவும் அதன் பிறகு அடுத்தவருக்கு சொல்ல வாரும்...பை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... ஒழுங்காக விவிலியத்தை படிக்காதது என் தப்பு தான்...ஏற்று கொள்ளுகிறேன்...

      Delete
    2. ஆமாமாம்.. எந்த ஊருல எந்த பாட்டி செத்தாலும் அதுக்கு மோடிதான் காரணம். ஒருத்தர் சாவறதப் பார்த்தும் உதவாத மக்கள் ..?

      Delete
    3. நண்பர் கருத்து கந்தசாமி அவர்களுக்கு வணக்கம். இவர்கள் இறப்புக்கு மோடி ஜி தான் காரணம் என்று இந்த பதிவில் எங்காவது எழுதி உள்ளேனா...? உங்களுக்கு அவர் தான் காரணம் என்று தோன்றுகிறதோ...?

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி