கூட்டம் கூட்டமாக மக்கள் ATM முன்பு வரிசையில் நிற்பது
பலராலும் பல விதங்களில் விமரிசிக்கப்படுகிறது....சில பேர் கருப்பு பணம் வைத்து
இருப்பவர்கள் வரிசையில் நிற்கிறார்கள் எனவும் , சிலபேர் அன்றாட தேவைகளுக்காக
வரிசையில் நிற்கிறார்கள் எனவும் கூறுகிறார்கள்.....ஆனால் உண்மை நிலவரம் தான்
என்ன...?
பணப்புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நமது நாட்டில் அதிகரித்து
வருவதை நாம் அறிந்து இருக்கிறோம். சிறுக சிறுக சேர்த்து வைத்த பணத்தை மாற்றுவதற்கு
ஒரு புறம் மக்கள் முயற்சித்தாலும் , இன்னொரு புறம் அதற்க்கு ஒரு வலுவான காரணம்
இருக்கிறதாகவே தோன்றுகிறது...
ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சிறிய
தகவலை தொகுத்து தருகிறேன்.... ஆகஸ்ட் மாதம் 2௦16 ம் வருடத்தில் பண அட்டைகள் மூலமாக
பண பரிவர்த்தனை மற்றும் பண அட்டைகள் மூலமாக பொருள் வாங்கியதை குறித்த தகவலே அது...
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளின் பரிவர்த்தனை தொகுப்பு... தகவல் (https://www.rbi.org.in/scripts/ATMView.aspx )
கிரெடிட் கார்டு....
ஒரே மாதத்தில் கிரெடிட் கார்டு மூலமாக 39,54,292 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 2.57 லட்சம் கோடி அளவுக்கு
பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் 6,46,950 பரிவர்த்தனைகள்
மூலமாக ரூபாய் 304.2 கோடி பணம் ATM மூலமாக எடுக்கப்பட்டு உள்ளது . இதில் ஒரு காரியத்தை கவனிக்க வேண்டும் .
கிரெடிட் கார்டு பொதுவாக பணக்காரர்களும் , அரசு அதிகாரிகளும் தான்
பயன்படுத்துவார்கள். இதை பயன்படுத்தி
பொருட்கள் தான் அதிகம் வாங்கி உள்ளார்கள்.....
டெபிட் கார்டு... :
சராசரி மனிதர்கள் பயன்படுத்தும் கார்டு டெபிட் கார்ட்...
சம்பளம் , பென்ஷன் , கூலி , LPG மானியம் முதலானவைகள் நேரடியாக வங்கிகளில்
செலுத்தப்படுவதால் , வங்கி கணக்கு தொடங்கும் போதே ATM கார்டுகள் ( டெபிட் )
இலவசமாக கொடுக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2௦16ம்
மாதத்தில் மாத்திரம் இந்த டெபிட் கார்டுகள் மூலமாக 13,05,29,004 பரிவர்த்தனைகள் மூலமாக ரூபாய் 1.83 லட்சம் கோடி மதிப்பில் பொருட்கள் வாங்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் 75.67 கோடி பரிவர்த்தனைகள் மூலமாக 21.96 லட்சம் கோடி பணம் ATM
மையங்களில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது. இந்த 21.96 லட்ச கோடி பணமும் நியாயமான
பணம் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால் இதுவும் சாத்தியமா என்பது தெரியவில்லை...அதற்க்கு
சில காரணங்களை கருதுகிறேன்.....
1.
ATM ல் உள்ளவர்கள் 2௦௦௦ ரூபாய் எடுப்பதை
தவிர்க்கிறார்கள். 2௦௦௦ என்று தேர்வு செய்தால் ஒரே ஒரு 2௦௦௦ ரூபாய் நோட்டு
வருகிறது. எனவே 19௦௦ என்று தான் தேர்வு செய்கிறார்கள்...
2.
ATM களில் புது 1௦௦ ரூபாய் நோட்டுகளை தான்
வைக்கமுடியும்....ஆனால் போதுமான அளவு புது 1௦௦ ரூபாய்கள் கைவசம் இல்லை என்று அரசு
வழக்கறிஞர் மாண்புமிகு சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்து உள்ளார்....
3.
ஆகஸ்ட் மாதத்தில் தேவைப்படும் போது மட்டும்
ATM யை நாடியவர்கள் , பணம் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து வங்கி கணக்கில்
இருக்கும் பணத்தை கூட எடுக்க முயலலாம். அதனால் கூடுதல் நெருக்கடி ஏற்பாட
வாய்ப்புண்டு....
4.
ஆனால் அதேநேரத்தில் இந்தியாவின் 6,40,867 கிராமங்களில் 40,000 கிராமங்களில்
மாத்திரமே வங்கி சேவை உள்ளது....
மொத்தத்தில் அரசின் தவறான திட்டமிடல் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. என்ன நடக்கும் என்று தெரியவில்லை....காலம் தான் பதில்
சொல்லும்....!
No comments:
Post a Comment
நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி