Sunday, 4 December 2016

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் - உண்மையாகுமா......!

குடும்பம் என்ற வார்த்தை நமது சமுதாயத்தின் ஆணிவேர் என்பதை யாரும் மறக்கமுடியாது. நாடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் , ஊர் நன்றாக இருக்கவேண்டும். ஊர் நன்றாக இருக்கவேண்டும் என்றால் , வீடு நன்றாக இருக்கவேண்டும். வீடு நன்றாக இருக்கவேண்டும் என்றால் குடும்பம் நன்றாக இருக்கவேண்டும்..

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்ற வரியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்றைய குடும்பங்கள் பல்கலைகழகங்களாக இருக்கிறதா என்பது மில்லியன் டஜன் கேள்வி. பணமும் , புகழும் , பட்டமும் மாத்திரம் குடும்பத்தை உயர்த்தும் என்று நினைத்தால் , அது தவறு.....!

நல்ல ஒரு குடும்பம் உருவாகவேண்டும் என்றால் , குடும்பத்தின் உறுப்பினர்களாகிய கணவன் , மனைவி , பிள்ளைகள் எப்படி வாழவேண்டும் என்று விவிலியம் கூறுவதை கொஞ்சம் பாருங்கள்....


கணவன் :

" புருஷர்களே உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள்" - எபே 5 : 25

தினம் ஒரு நான்கு முறையாவது அன்பான வார்த்தைகளை கூறலாமே..!
     நான் உன்னை நேசிக்கிறேன்...
     நான் ரொம்ப கொடுத்து வைத்தவன்.....
     இப்படி ஒரு மனைவி கிடைக்க என்ன தவம் செய்தேன்.....

" புருஷர்களே , உங்கள் மனைவிகளில் அன்புகூறுங்கள் , அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்..."  - கொலோ 3 : 19

கசப்பான வார்த்தைகள் மனதை காயப்படுத்திவிடும்.....கீழ்க்கண்ட வார்த்தைகள் இன்று குடும்பங்களில் சாதாரணம்....தவிர்க்கலாமே...!
     உன்னை கட்டினதுக்கு ஒரு எருமையை கட்டியிருக்கலாம் ...!
     உன்னால எனக்கு ஒரே வேதனை தான்....!

" புருஷர்களே , மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்யுங்கள் " -  1 பேதுரு 3 : 7
     வெளியே போகும் போது , உங்கள் மனைவியையும் கூட்டிக்கொண்டு போங்கள்....அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துங்கள்.....மற்றவர்களிடம் எனது மனைவி என்று பெருமையுடன் அறிமுகப்படுத்துங்கள்.....


மனைவி :-

" மனைவிகளே உங்கள் சொந்த புருஷருக்கு கீழ்படியுங்கள்...." - எபே 5:22

நமது குடும்பத்தில் மிஸ் ஆகிற பெரிய காரியம் இதுதான்....இது பெண்ணடிமை என்று வாதிடுவோர் உண்டு....பெண் அடிமை அல்ல ஆனால் ஒரு நல்ல மனைவி தன் புருஷனுக்கு உடனே கீழ்ப்படிந்தால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சினைகள் வராமல் போய்விடும்.  வாக்குவாதங்களும் , தர்க்கங்களும் தானே நமது குடும்பத்தை சீரழிக்கிறது.....

"தகுதியான வஸ்திரத்தினாலும் , நாணத்தினாலும் , தெளிந்த புத்தியினாலும் , நற்கிரியைகளினாலும் தங்களை அலங்கரிக்கவேண்டும் " - 1 தீமோ 2 : 1௦

ஆகா....! எவ்வளவு அருமையான வரிகள்....எந்த பியூட்டி பார்லர் போய் கோடிகணக்கிலே கொட்டி அழகு செய்தாலும் , இந்த அழகுக்கு ஈடாகுமா....?.

பிள்ளைகள் :-

"பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்கு கீழ்படியுங்கள் " - எபே 6 : 1

பெற்றோர் எது சொன்னாலும் எதிர்த்து பேசுவது பிள்ளைகளின் வேலையாகிவிட்டது. நீங்களெல்லாம் Outdated என்று இன்றைய பிள்ளைகள் பெற்றோரை உதறி தள்ளுகிறார்கள்.  உங்களை பெற்று , படிக்கவைத்து , ஆளாக்கி அழகு பார்த்த பெற்றோருக்கு கீழ்ப்படிந்தால் , குடும்பம் எவ்வளவு அழகாக இருக்கும்.....


இப்படிப்பட்ட குடும்பம் பல்கலைகழகம் அல்லாமல் வேறென்ன....!  இந்த சமுதாயத்தில் நாம் இதை காண்போமா.....?

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி