பிரதமர் அவர்களே......! ஒரு திட்டமிடலும் இல்லாமல் 1௦௦௦ ரூபாய் மற்றும் 5௦௦ ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து 2௦௦௦ ரூபாய் நோட்டுகளை களத்தில் இறக்கி விட்டீர்கள்....!
நீங்க சந்தோசமா இருக்கீங்க....நாளுக்கு நாள் ஒரு அறிக்கை விடுறீங்க...! நாடாளுமன்றத்திலே பேச மாட்டீங்க....! ஆனா மங்கி பாத்ல மட்டும் பேசுவீங்க...உங்க குடிமக்கள் நிலை தெரியுமா....?
ஒரு வங்கியிலும் 1௦௦ ரூபாய் நோட்டுகள் இல்லை ஐயா....! ரோசா பூ கலர்ல 2௦௦௦ ரூபாய் நோட்டை கொடுக்கிறாங்க.....!
2௦௦௦ ரூபாய் நோட்டை பார்த்தால் , எவனும் பொருள் தரமாட்டேங்குறான்....ஹோட்டல் போய் சாப்பிட முடியல.....ஒரு கிலோ பழம் வாங்க முடியல.....வயிறு பசிக்குது ஐயா....! துரித உணவகம் போய் கேட்டால் , சில்லரை இருக்கா என்று தான் முதலில் கேட்கிறான். பேப்பர் காரனுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை....பால்கார அம்மாவுக்கு பைசா கொடுக்கமுடியவில்லை......பிள்ளைகளுக்கு சாப்பிட முட்டாய் வாங்க முடியவில்லை.....
நீங்க பெரிசா அறிமுகப்படுத்தின 2௦௦௦ ரூபாய் என் பாக்கெட்டில் இருக்கு...ஆனா என் வயிறு எரியுது.....! இந்த சாபம் உங்களை விடாது.....
எல்லாம் சரியாகும் ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு ஆனால் எப்போ தெரியாது.
ReplyDeleteபாங்க் வாசலில் வரிசையில் நின்றது நாம் தான் எந்த விஐபியும் அல்ல. அந்த விஐபி எல்லாம் தன்னிடமுள்ள சில்லறையை சிக்கனமாக செலவு செய்கிறார்கள் நமக்கு அப்படி செலவு செய்ய தெரியவில்லை:)
நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜனவரி 1 என்பது முடியாத காரியம் என்பது எனது கருத்து. குறைந்த பட்சம் 6 மாதங்களாவது ஆகலாம்....எங்கே போய் இது முடியும் என்று தெரியவில்லை...
Deleteபெரும்பாலான மக்களின் குரல் இதுதான். அரசுக்கு காது கேட்குமா என்று தான் தெரியாது.
ReplyDeleteபெயரில்லா நண்பருக்கு வணக்கம்....அரசு காது கொடுத்து கேட்கவேண்டும் என்பது தான் நமது விருப்பமும்....
Deleteமொக்கை.. ஜெலுசில் வாங்கி சாப்பிடுங்க..
ReplyDeleteநண்பருக்கு வணக்கம். உங்கள் கருத்துக்கு நன்றி.... ஜெலுசில் வாங்க வேண்டும் என்றால் கூட மெடிக்கல் ஸ்டோர் சில்லறை கேட்கிறான். 2௦௦௦ ரூபாயை வைத்து கொண்டு அதுவும் செய்யமுடியவில்லை.....
Deleteappa thookkula thonkidu
ReplyDeleteநண்பரே ....உங்கள் மதிப்பு மிகுந்த கருத்துக்கு மிக்க நன்றி...! உங்கள் கருத்து ஒன்றே நீங்கள் யாராய் இருக்கமுடியும் என்பதை தெளிவாக காண்பிக்கிறது...
Deleteஇதுவும் கடந்து போகும்!
ReplyDeleteநண்பரின் வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. திரு.குருமூர்த்தி இந்த 2௦௦௦ ரூபாய் நோட்டும் வாபஸ் பெறப்படும் என்று சொல்லி உள்ளார்...இது மக்களை கோமாளி ஆக்கும் நிகழ்வே அல்லாமல் வேறு இல்லை....
Delete