மின்தேவை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் நாட்டின் மின் தேவையை சந்திப்பதற்காக அரசும் பல வழிகளில் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கிறது . இந்த சூலில் ஏற்க்கனவே அமைக்கப்பட்டு இருக்கும் 22000 MWe மின்சாரம் தடைபடும் நிலை உருவாகி உள்ளது .
நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 66 சதவீதம் அனல் மின்சாரம் மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது . இந்த அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி உள்நாட்டு உற்பத்தியின் மூலமும் , வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதின் மூலமும் சந்திக்கப்பட்டு வருகிறது . இந்த நிலையில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ள செய்தி குறிப்பின் படி கடும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் 22000 MWe மின்சார உற்பத்தி பதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளார் .
11 ம் ஐந்தாண்டு திட்டத்தின் போது ( இந்த வருடம் மார்ச் 31 ம் தேதி வரை ) , கிட்டத்தட்ட 700 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது . ஆனால் இன்றைய தேதி வரை 560 மில்லியன் டன் நிலக்கரி மாத்திரமே உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது . கிட்டத்தட்ட 140 மில்லியன் டன் நிலக்கரி குறைவாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது . இந்த கடும் நிலக்கரி தட்டுப்பாட்டினால் ஏறக்குறைய 22000 MWe மின்சாரம் தயாரிக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது .
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியின் 70 முதல் 72 சதவீதம் அனல் மின் நிலையங்களுக்கும் , மீதம் உள்ள நிலக்கரி மற்ற தொழில் நிறுவனங்களுக்கும் ( சிமெண்ட் மற்றும் சில ) பயன்படுத்தப்படுகிறது . அந்த 28 சதவீதம் நிலக்கரியும் மின் நிலையங்களுக்கு பயன்படுமானால் மற்று தொழில் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு , பொருளாதாரத்தின் சரிவு உண்டாகும் .
( Source : The Indian express , Dt. 20.02.2012 , Page No : 13)
நாடு இப்படிப்பட்ட சூழலில் போய் கொண்டு இருக்கும் போது , அனல் மின்சாரத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு குறையும் வாய்ப்பு ஏற்ப்படும் . ஆனால் மின்தேவையோ ஒவ்வொரு நாளும் பெருகி கொண்டு இருக்கிறது . இந்த மாதிரி சூழ்நிலையில் , மிகவும் பாதுகாப்பான , சுற்று சூழலுக்கு பாதுகாப்பான அணுமின் நிலையங்களை வரவேற்ப்பதில் நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும் ...?
பகலில் அணு உலைக்கு எதிராக போராடிவிட்டு இரவில் இருளில் மூழ்கி கிடக்கவேண்டியதுதான்.
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . இந்த சூழலில் திரு . உதயகுமார் 1000 MWe மின்சாரத்தை மத்திய தொகுப்பில் இருந்து கேட்கிறார் . சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது ஐயாவுக்கு தெரியாது போல .... ஏனெனில் ஐயா ... அமெரிக்கவாசி அல்லவா ...?
தொடர்ந்து வருகை தாருங்கள் நன்றி