Tuesday, 14 February 2012

கூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்ச உணர்வு கொண்டு போராடி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த காரியமே .   ஆனாலும் எனக்கு இதுவரை விளங்காத ஒரு காரியத்தை சென்ற சில நாட்களில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது .  கூடங்குளம் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் ஒரே சமயத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றேன் ...

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை குறித்து பதிவுலக நண்பர்கள் எழுதும் பொழுது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மக்கள் போராடுகின்றனர் என்று எழுதி வந்தனர்.   இந்த காரியத்தை குறித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் அநேகம் உண்டு .  ஏன் எனில் , போராட்டத்தில் இருக்கும் இடிந்தகரை என்ற கிராம மக்கள் மீன்பிடி தொழிலை மாத்திரம் செய்து வருகிறவர்கள் . அவர்கள் கடலை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்துகிறவர்கள் .   இவர்கள் அணுமின் நிலையத்தினால் தங்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்று அச்சப்பட்டார்கள் .  ஆனால் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன் .   கடல் சார் வாழ்வும் , அணுமின் நிலையமும் என்ற இடுகையை காணுங்கள் .
கூடங்குளம் பகுதி மக்கள் கடல் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் மீன்பிடி தொழில் செய்கிறவர்கள் அல்ல .  அணுமின் நிலைய பணிகள் ஆரம்பிக்கப்படுவதர்க்கு முன்பு வரை கூடங்குளம் பகுதியின் பெரும்பாலான மக்களின் தொழில் என்னவெனில் பீடி சுற்றுதல் என்பது தான் உண்மை .  ஆண்கள் பெரும்பாலோர் சென்னை , மும்பை பகுதிகளில் வேலை பார்த்து வந்தார்கள் என்பது உண்மை .   எப்படி இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுகிறார்கள் என்பது தான் எனது நீண்ட நாள்   வியப்புக்கு காரணம் .


என்னோடு கூட பயணம் செய்த அந்த கூடங்குளம் நண்பரிடம் இந்த கேள்வியை கேட்டபொழுது , அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியபடுத்தியது .  கூடங்குளம் மக்கள் தாங்கள் வாழ்ந்து வருகிற வீட்டையும் , தங்களின் நிலங்களையும் ரொம்ப நேசிக்கிறவர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.  நான் சொன்னேன் , " அதில் என்ன வியப்பு இருக்கிறது . எல்லாரும் அவரவர் வீட்டையும் , நிலங்களையும் நேசிக்க தான் செய்வார்கள் " என்று .  அவர் சொன்னார் , " அப்படி இருக்கும் பொழுது , எங்கள் வீட்டை விட்டு எங்களை காலி பண்ண சொன்னால் நாங்கள் எப்படி பொறுத்து கொள்ளுவோம் ?" என்று .


என ஆச்சரியம் பல மடங்கு ஆனது .  நான் கேட்டேன் , " நண்பர் என்னை தவறாக நினைக்க கூடாது ,  நீங்கள் வீட்டை காலி பண்ணவேண்டும் என்று உங்களுக்கு சொன்னது யார் ?" என்று கேட்டேன் .  அவர் சொன்ன பதில் , " கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட பிறகு , நாங்கள் எல்லாரும் எங்கள் வீடுகளை காலி பண்ண வேண்டும் .  எங்கள் வீடுகளை விட்டு விட்டு நாங்கள் எங்கே போவோம் ...?  மாத்திரமல்ல எங்கள் எல்லாருக்கும் கான்சர் வியாதி வந்துவிடும் , எங்கள் பிள்ளைகள் எல்லாம் ஊனமாக பிறக்கும் . அது குறித்து எல்லாம் எங்கள் போராட்டத்தில் திரு . உதயகுமார் தெளிவாக சொல்லியுள்ளார் " என்றார் .

 
இப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன் , ஏன் கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் என்பதை .  நான் அவரிடம் சொன்னேன் , " நண்பரே ... உங்கள் யாருடைய வீட்டையும் நீங்கள் காலி பண்ண வேண்டிய அவசியம் இல்லை .  நீங்கள் அதே இடத்தில வசிக்கலாம் " என்று .  அவர் கேட்டார் , " உங்களுக்கு என்ன தெரியும் . 1988 ல் அரசின் ஆணை இருக்கிறதாம் . 2 KM  க்குள் யாரும் வசிக்க கூடாதாம் . 5 KM க்குள் மொத்த மக்கள் தொகை 10000 தான் இருக்கவேண்டுமாம் . அப்படி எனில் சொல்லுங்கள் ...எங்கள் ஊரில் நாங்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம் தெரியுமா? " என்று .

நான் சொன்னேன் , " நண்பரே 1 . 6 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) யாரும் வசிக்க கூடாது என்பது உண்மைதான் . அதனால் தான் அந்த பகுதிகள் எல்லாம் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டு இருக்கும் .  5 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) ஒரு இடத்தில 10000 பேர் இருக்கலாம் . மொத்த மக்கள் தொகை அல்ல.  அதுவும் இயற்கையாக  பெருகும் மக்கள் தொகை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது .   It is wriiten , " Population center may be 10000 , However , natural growth is allowed .  உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன் .  அவர் சொன்னார் , " இது மாதிரி போராட்டத்தில் சொல்லவில்லையே என்று .  நான் சொன்னேன் , " ஐயா , இந்த கேள்வி போராட்ட குழுவினர் , மத்திய குழுவிடம் கேட்ட 50 கேள்விகளில் இடம் பெறவில்லை தெரியுமா ? " என்று .  அவர் அதிர்ந்து போனார் .

 நான் தொடர்ந்து கேட்டேன் , " நண்பர் என்னை மன்னிக்க வேண்டும் ...! திரு . உதயகுமார் மத்திய குழுவிடம் அளிப்பதற்காக 50 கேள்விகளை கேட்போம் . அவற்றிற்கு மத்திய குழு அளிக்கும் பதில்களை மக்களிடம் கொண்டு செல்லுவோம் . மக்கள் திருப்தி அடைந்தால் போதும் என்று சொன்னாரே ...... உங்களிடம் அந்த பதில்களை காண்பித்தாரா / சொன்னாரா ...?."   அவர் சொன்னார் " இல்லை ..." .  நான் மறுபடியும் கேட்டேன் , " சரி .... பரவாயில்லை அவர் எந்த 50 கேள்விகளை கேட்டார் என்பதாவது  உங்களுக்கு தெரியுமா " .  அவர் சொன்னார் , " அதுவும் தெரியாது . ஆனால் சில கேள்விகளுக்கு மாத்திரம் அரசு பதில் கொடுக்கவில்லை " என்று.


நான் அவரிடம் பேசிய அநேகம் காரியங்களில் அவர் திருப்தி அடைந்தாரோ , இல்லையோ என்பது எனக்கு தெரியவில்லை .  ஆனால் எனக்கு சில கேள்விகள் தோன்றியது .....

1 .  கூடங்குளம் மக்களை காலி செய்து விடுவீர்களா ..? என்று போராட்ட குழு மத்திய குழுவிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை ..? அப்படி கேட்பது அபத்தம் என நினைத்தார்களா ...? அல்லது ..அந்த கேள்விக்கு மத்திய குழு அளிக்கும் பதிலினால் மக்கள் போராட்டத்தை விட்டு விடுவார்கள் என்ற பயமா ...?

2 .  என்ன கேள்விகள் மத்திய குழுவிடம் கேட்டார்கள் என்றே மக்களுக்கு தெரிவிக்காத போராட்ட குழு ,  மத்திய குழு அளித்த பதில்களையாவது முன்னரே சொன்ன படி மக்களிடம் கொண்டு போய் இருக்கலாமே ...?  வேடம் களைந்து போய் விடும் என்ற பயமா ....?

3 . மக்களின் இருப்பிடம் காலி செய்யப்படாது என்று அரசு பகிரங்கமாக அறிவித்த பிறகும் , மக்கள் இன்னும் அந்த பயத்தை கொண்டிருக்கும் காரணம் என்ன ...?. 

4 .  அவசர கால ஏற்பாடுகளை குறித்து மத்திய குழுவிடம் கேள்வி கேட்டுள்ள போராட்ட குழு , அந்த ஏற்பாடுகளை மக்களிடம் வித்தியாசமாக சொல்லி , பயம் காட்டின மர்மம் என்ன ....?

கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் .  காத்திருப்போம் பொறுமையுடன் .....

32 comments:

  1. மனது கனக்கிறது நண்பரே!! தைரியம் இல்லாத மக்கள்,இரக்கம் இல்லாத அரசியல்கள், கருணை இல்லாத கடவுள்... என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  2. // 5 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) ஒரு இடத்தில 10000 பேர் இருக்கலாம் . மொத்த மக்கள் தொகை அல்ல. அதுவும் இயற்கையாக பெருகும் மக்கள் தொகை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது . It is wriiten , " Population center may be 10000 , However , natural growth is allowed . ///

    Hi, hope you are doing well.
    just want to know why only 10,000 people allowed to stay within 5 km? is there any scientific reason?

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you verymuch for your visit and your constructive questions.

      Actually , there is no scientific reason behind this. In case of any emergency , evacuation plans has to be speed up. For that purpose only it was written like that.

      In Fukushima nearly 5,00,000 people were living near the Nuclear power plant.

      Thank You...

      Delete
    2. oh..
      I think it should be written "in proportion to the evacuation capability" instead of giving some numbers.

      Delete
    3. If its calculated based on capability of evacuation then its 0 in case of India or Tamil Nadu. You can take a best example as Bhopal disaster.

      Delete
    4. Dear Friend,

      thank you very much for your visit and for your comment.

      I am astonishing about your arguement. friend, you have to understand the technological defense in Nuclear Power and i feel comparing the Nuclear Power Project with Bhopal disaster is meaningless...

      Thank you,...

      Delete
  3. அருமையான பதிவு! உதயகுமார் போன்றவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டிய ஊடகங்கள் அவரை வைத்து காசு சம்பாத்தித்துக் கொண்டிருக்கிறன. உதயகுமாரை உடணே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, மக்களுக்கு உண்மையை புரிய வைத்து கூடங்குளம் அனு மிண் நிலையத்தை மத்திய அரசு பயண்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை .

      Delete
  4. ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.

    பீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.

    மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாது காத்து வைத்திருக்க முடியுமா என்பதே பெரும் கேள்வி.

    சோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கோடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
    உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. Mr.Irudhayam is getting benefits in all the sorts from someone and that is why he is always writing supporting article about Koodankulam project. His name is irudhyam but he has no heart.He does not deserve to live like a human being.O Jesus please save this creature who wants to kill all the human beings living in Tamilnadu.

      Delete
    2. @ PUTHIYATHENRAL :

      நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      //ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே//
      என்னுடைய பதிவை நீங்கள் கவனமாக படிக்கவும் . இடிந்தகரை என்ற கிராமத்தின் தொழில் மீன்பிடி தொழில் எனவும் , கூடங்குளம் கிராமம் மீன்பிடி தொழில் ஈடுபடவில்லை எனவும் நான் குறிப்பிட்டு உள்ளேன் . இது தவறான தகவல் என்றால் , நீங்கள் கூடன்குளதிர்க்கு ஒரு முறை கூட செல்லவில்லை என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும் . இன்னும் சொல்லுகிறேன் ... கூடங்குளம் கிராமம் மீன்பிடி கிராமம் அல்ல .... வேண்டுமானால் சென்று பாருங்கள் ...அப்படி இல்லை எனில் , கூடங்குளத்தில் இருந்து பதிவுகளை எழுதும் மதிப்பிற்கு உரிய பதிவர் கூடல் பாலாவிடம் கேட்டு பாருங்கள் . நீங்கள் தான் உண்மைக்கு மாறாக பேசுகிறீர்கள் நண்பரே ....

      //அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள்.//
      நண்பரே ...உங்களின் கருத்து எனக்கு ஆச்சரியமானது . நீங்கள் ஒரு மனிதரின் வார்த்தைகளை கேட்க சொல்லுகிறீர்கள் . ஆனால் நானோ ஆதாரப்பூர்வமாக எனது கட்டுரையில் செய்திகள் மற்றும் காணொளிகள் துணையுடன் எழுதியுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து போக வேண்டாம் ...

      //அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள்//
      நண்பரே ....நீங்கள் முதலாளிதுவத்திற்கு எதிரானவரா அல்லது அறிவியலுக்கு எதிரானவரா ....? இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் அணுமின் நிலையங்களை நீங்கள் ஆதரிப்பீர்களா ...? ஏன் எனில் அவைகள் கார்பெரெட் முதலாளிகள் அல்ல. அரசு உடமைகள் ... நான் அதிசய மனிதன் அல்ல நண்பரே ... உங்களை போன்ற சாதாரண மனிதன் தான் ..

      //அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாது காத்து வைத்திருக்க முடியுமா என்பதே பெரும் கேள்வி.//
      அணுக்கழிவு குறித்த கேள்விக்கு எனது அணுக்கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு என்ற கட்டுரையை காணுங்கள் ...

      //நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
      உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.//
      நான் வெகு நாட்களாக இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் நண்பரே ... அநேக வருடங்கள் பதிவுலகத்தின் வாசகராக இருந்து வந்த நான் பதிவனாக மாற வேண்டும் என்ற வேகத்தை எனக்கு கொடுத்தது கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த சர்ச்சைகள் தான் . ஏன் எனில் எனக்கு கொஞ்சம் அறிவியல் பிடிக்கும் . அறிவியலை புரிந்து கொள்ளாமல் , பதிவர்கள் தங்கள் இஸ்டத்திற்கு பதிவு எழுதுவதை பார்த்து நான் அவர்களுக்கு Comment இட்டுக்கொண்டும் , பதில் எழுதிக்கொண்டும் இருந்தேன் . ஆனால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிவர்கள் பதில் கொடுக்காதது மாத்திரமல்ல என்னுடை கேள்விகளையும் நீக்கி விட்டார்கள் . எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதாரமாக கொண்டு தான் எனது முதல் பதிவை எழுதினேன் . இது அறிவியலுக்கு , உணர்ச்சிக்கும் , சில பொல்லாத விசமிகளுக்கும் இடைப்பட்ட காரியம் என்பதாலும் , நான் பிறந்த தமிழ் மண்ணில் இந்த காரியங்கள் நிகல்வதினாலும் , இவற்றை குறித்து அதிகமாக எழுதிவருகிறேன் . இன்னும் எழுதுவேன் . எனது சமூகம் சார்ந்த மற்ற பதிவுகளையும் நீங்கள் இந்த தளத்தில் காணலாம் .

      உங்கள் கேள்விகளும் , கருத்துகளும் என்னை ஊக்குவிக்கிறது . நன்றி

      Delete
    3. @ Anonymous ;

      Dear anonymous friend, i do have pity on your comment ...

      If somebodt is supporting Nuclear , then you are telling that he is getting something. But if somebody is getting money and making the people as fool , then you will treat him as leader. isn't it..?

      As i am having the heart only , i am raising my voice against the forces that misguiding the people. Kindly pray with Jesus to give bright sense to understand what is good and what is wrong..

      I do welcome you to have visit again with constructive questions.

      Thank You...

      Delete
    4. very nice mr.iruthaiyam.. v r the peoples frm kalpakkam v are aware of nuclear.. pls someone teach kudamkulam peoples to get cleared..

      Delete
  5. bosterd udaya kumar govt should thro him out the universe

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      thank you verymuch for your visit and comments. Let us avoid some unfair words while commenting...

      Cheers...

      Thank You & visit again...

      Delete
    2. ok .i cant agree with this kai kooli

      Delete
    3. Thank You Friend for your visit again...

      Delete
  6. தமராக்கியான்14 February 2012 at 23:21

    உதயக்குமார் சொல்வது மட்டுமே உண்மை. மற்றோர் சொல்வதெல்லாம் பொய்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நீங்கள் எந்த தொனியில் இந்த கருத்தை எழுதி உள்ளீர்கள் என்பதை எனக்கு விளங்கி கொள்ளமுடியவில்லை . திரு. உதயகுமார் சொல்லுவது உண்மை என்று நீங்கள் சொன்னால் , எனது பதிவில் நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கொடுங்கள் அல்லது திரு . உதயகுமாரிடம் கேட்டு சொல்லுங்கள் ..

      நன்றி

      Delete
    2. உங்கள் கேள்விகளும் , கருத்துகளும் என்னை ஊக்குவிக்கிறது
      நன்றி

      Delete
    3. திரு Anonymous நண்பர் ,

      வணக்கம் , தங்கள் வருகைக்கு மிக்க நந்தி

      Delete
  7. ஆண்மையற்ற,மானங்கெட்ட மத்திய அரசு,நாட்டு நலனைவிட வரட்டு கௌரவ போதையில் மூழ்கிக் கிடக்கும் மாநில அரசு,அந்நிய நாட்டு கிருஸ்துவ உளவாளிகளால் சீரழிக்கப்படும் சமுதாயம்...இதுபோன்ற கேவலமான அரசு எந்த நாட்டிலும் இருக்காது

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் .

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் மாத்திரம் இந்தியாவில் இதனை காரியங்கள் என்று நான் நினைக்கிறேன் . அரசுகளின் அமைதியையும் , அரசுகளின் அமைதி போக்கும் ஒருவேளை சமாதான முடிவை தேடலாம் . ஆனால் அதேயே தங்களுக்கு ஆதாயமாக்கும் கூட்டம் இருக்கும் போது , அருசுகள் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை நானும் ஏற்க்கவேண்டி தான் உள்ளது ..

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  8. makane unnai kandenaa konnuduven oodiboidu

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் .

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      உண்மையை பேசுவதை உங்களால் சகிக்க முடியவில்லை. இல்லையா ...? பரவாயில்லை .... நான் ஓடி போக மாட்டேன் . தொடர்ந்து எழுதுவேன் . போலிகளின் முகமூடி கிழிக்கப்படும் வரை ..... தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  9. மத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசை, இந்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள். அணு மின் நிலையம் எதிர்ப்பை முன்னின்று நடத்துபவர்கள் நடத்தும் வசதியான வாழ்க்கையை அப்பாவிகள் புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் கட்டுரை நல்ல சாட்டையடி.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . தங்கள் கருத்து என்னை ஊக்குவிக்கிறது

      Delete
  10. ஏம்பா கூடங்குளம் அணுமின் நிலையத்தை அனல் மின்சாரமாக உருவாக்கலாம் அப்படின்னு போராட்ட குழுவின் அறிஞர்கள் குழு சொல்லுதே , அது குறித்து நீ என்னப்பா சொல்லற

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி . இதே போன்ற கேள்விகளை பதிவுலகின் பல நண்பர்களும் கேட்டு உள்ளதால் , நான் ஒரு தனி இடுகையை வெகு சீக்கிரம் இடுகிறேன் . கொஞ்சம் பொருது கொள்ளுவீர்களா ...? நன்றி

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி