Saturday, 18 February 2012

மக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு - ஒரு பார்வை


கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து போராடி வரும் போராட்ட குழுவினர் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது நாம் எல்லாரும் அறிந்த விடயமே .  ஆனால் இந்த போராட்ட குழுவின் நிபுணர் வாதங்களை நாம் கவனித்து பார்த்தால் , இவர்கள் மக்களை வேண்டும் என்றே ஏமாற்றி போராட தூண்டுகிறார்கள் எனவும் , இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையும் நாம் விளங்கி கொள்ள முடியும் .

கூடங்குளம் அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாகவோ அல்லது இயற்க்கை எரிவாயுவில் மின்சாரம் தயாரிக்கும் ஆலையாகவோ மாற்றலாம் என்பது தான் திரு . உதயகுமாரின் புத்திசாலி நிபுணர் குழு சொல்லி உள்ள யோசனை .  இதற்க்கு ஆதாரமாக அமெரிக்காவில் லில்கோ என்ற நிறுவனத்திற்கு சொந்தமான அணுமின் நிலையம் ,  இயற்க்கை எரிவாயு தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டதாக கூறுகின்றனர் .   கூடங்குளம் பகுதியை சேர்ந்த மக்களிடம் இப்படி சொல்லி அணுமின் நிலையங்களை குறித்த ஒரு வித அச்சத்தை திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் .    இது குறித்து பதிவுலகிலும் DIANUKE என்ற வலைப்பூவில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது .  தகவலுக்கு : http://www.dnaindia.com/india/report_kudankulam-nuclear-power-plant-can-be-converted-into-a-thermal-power-station-protestors_1601295 
 இவர்கள் சொல்லி வரும் இந்த மாதிரி கருத்துகளை படித்தால் எனக்கு கொஞ்சம் வேதனையாகவும் , கொஞ்சம் ஆத்திரமாகவும் உள்ளது .   அணுமின் நிலையங்கள் என்று சொல்லப்படுவது விசேட தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை .  அப்படி உருவாக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் யுரனியம் எரிபொருளுக்கு பதிலாக எரிவாயுவையோ அல்லது நிலக்கரியையோ பயன்படுத்த முடியாது என்பது ஆணித்தரமான உண்மை .  அது எப்படி என்று நீங்கள் கேட்டால் ,,  நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் ..... ஒரு மின்சார அடுப்பில்  , LPG வைத்து சமைக்க முடியுமா அல்லது ஒரு LPG அடுப்பில் விறகு வைத்து சமையல் செய்வீர்களா ..?  ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில் நுட்பம்.

சரி.  உண்மையில் அப்படி வாய்ப்பு ஏதும் இருக்கிறதா என்று நாம் அறிந்து கொள்ளவேண்டுமானால் , ஒரு காரியத்தை நாம் விளங்கி கொள்ளவேண்டும் .  அணுமின் நிலையங்களில் பொதுவாக இரண்டு அமைப்புகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை .  ஓன்று அணுப்பிளவு வினைகள் நடக்கும் Reactor building இன்னொன்று விசையாழியை ( Turbine ) சுற்ற வைக்கும் Turbine building .  அனல்  மின் நிலையங்களிலும் Turbine building உள்ளது .  சரி அப்படியானால் இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் Reactor building முழுவதும் அகற்றி விட்டு ( படத்தில் வட்டமாக இருக்கிறதே ) ,  அனல் மின் நிலையத்திற்காக புதிய கொள்கலன் கொண்ட Building யை அமைக்கவேண்டுமாம் . அட கொடுமையே ..... என்று நீங்கள் யோசித்தால் , இன்னும் ஓன்று நான் சொல்லுகிறேன் . அனல் மின் நிலையங்கள் உருவாக்கும் நீராவி , அனல் மின் நிலையங்களின் நீராவியை விட சக்தி குறைந்தவை . அப்படி எனில் Turbine building ல் உள்ள கருவிகளையும் மாற்ற வேண்டும் .  மொத்தத்தில் என்ன அர்த்தம் என்றால் முழு அணுமின் நிலையத்தையும் எடுத்து விட்டு அதற்க்கு பதிலாக அனல் மின் நிலையம் கட்டப்பட வேண்டும் என்பது தான் அவர்கள் கோரிக்கை .  சரி .....நிபுணர் குழுவே ..... நீங்கள் ஏன் இந்த ரகசியங்களை மக்களிடம் சொல்ல வில்லை ..  சொன்னால் மக்கள் உங்களை ஒதுக்கி விடுவார்கள் என்ற பயமா ...?
  ஏன் அணுமின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது என்ற காரியத்தை நான் புள்ளி விவரமாக " அணுமின்சாரம் தேவையா ...?" என்ற பதிவில் எழுதியுள்ளேன் . பாருங்கள் 

சரி ..... அணுமின் நிலையத்தினால்  கடலோர மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற முகமூடியை அணிந்து கொண்டு வந்து உள்ள போராட்ட நிபுணர் குழுவுக்கு நான் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் .....

  • அனல் மின்நிலையம் அமைக்கலாம் என்று ஆலோசனை சொல்லும் நீங்கள் அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எங்கிருந்து பெற்று தருவீர்கள் ....?  உள்ள அனல் மின் நிலையங்களுக்கே கரி இல்லையே ...
  • எரிவாயு நிலையம் அமைக்கலாம் என்று சொல்லும் நீங்கள் வீடுகளுக்கு ஒழுங்காக கொடுக்கும் அளவுக்கு எரிவாயு நமது நாட்டில் கிடைக்கிறதா என்பதை ஏன் யோசித்து பார்க்கவில்லை ...?
  • அனல் மின் நிலையம் மூலம் வெளியிடப்படும் grean house gases மூலமாக புவி வெப்பம் அடைந்து , பனிக்கட்டிகள் உருகி கடம் மட்டம் ஆண்டுக்கு 2  அடி உயருமே ... அப்பொழுது கடலோர கிராமங்கள் எல்லாம் கடலில் மூழ்கி போகுமே ..... அதை ஏன் மக்களிடம் சொல்லவில்லை ...? சொன்னால் உங்கள்  அக்கறை மக்கள் மீது இல்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளுவார்கள் என்ற பயமா ...?
  • Cancer , கதிர்வீச்சு என்று அணுமின் நிலையங்களை குறித்து பீதி கிளப்பி வரும் நீங்கள் ,  அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தும் நிலக்கரியில்  கலந்திருக்கும் தோரியம் தாதுக்கள் உபயோகத்திற்கு பிறகு நிலக்கரி சாம்பலுடன் அப்படியே இருந்து விடுவதால் , வெளிப்படும் கதிர்வீச்சு பலமடங்கு இருக்குமாமே ( http://www.scientificamerican.com/article.cfm?id=coal-ash-is-more-radioactive-than-nuclear-waste ) . அதை நீங்கள் ஏன் சொல்லவில்லை ?  சொன்னால் உங்களின் வேடம் கலைந்துவிடும் என்ற அச்சமா ...?

நிபுணர் குழு என்ற பெயரில் போராட்ட குழு மக்களை அச்சத்தில் ஆட்படுத்தி வைத்து இருக்கிறதே தவிர .. வேறு ஒன்றும் இல்லை .  உண்மையில் மக்களின் மேல் அக்கறை இருந்தால் அணு விஞ்ஞானி உதயகுமாரும் , அணு விஞ்ஞானி பரமேஸ்வரனும்  , அணு விஞ்ஞானி புகழேந்தியும், அணு விஞ்ஞானி புஷ்பராயனும்  இந்த கேள்விகளை கேட்டு இருப்பார்கள் .  உங்கள் அக்கறை எப்படியாவது மக்களை குழப்பதிற்குள் ஆழ்த்தி இந்திய நாட்டின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதே .....


இந்த போலிகளின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும் என்பதும்  , மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்பதுமே இந்த இந்தியனின் ஆசை , ஏக்கமும் கூட ....

19 comments:

  1. ஐயா நன் இந்தியன்! சும்மா போலித்தனமான கருத்துக்களை முன் வைக்காதீர்கள். அணுவுலை கொடிய ஆபத்தானது என்பது உலகம் அறிந்த உண்மை. அதை வேண்டும் என்றே எந்த முகாந்திரம் இல்லாமல் ஹிந்துத்துவா போலி தேசபக்தி முகமூடியை அணிந்து கொண்டு கூடங்குளம் பகுதிகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள் என்ற காரணத்தால் எதிர்ப்பதால் நீங்களும் அதை எதிர்க்க வேண்டாம். ஒரு ராமர் பாலம் என்ற நம்பிக்கையை சொல்லி சேது சமுத்திர திட்டத்தை வேண்டாம் என்று சொன்ன ஹிந்து முன்னனி மற்றும் பரிவார்களுக்கும் உங்களுக்கும் சொல்வதெல்லாம் ஒன்றுதான் இந்த அணு உலையை ஸ்ரீரங்கத்திலோ அல்லது காஞ்சி சங்கர மடத்துக்கு அருகிலோ அமைத்தால் அதை திறக்க வேண்டும் என்று சொல்வீர்களா இல்லையா. நீங்களும் ஹிந்து முன்னணியும் கூடாது என்று சொல்வீர்கள் அதுதானே உண்மை நடுநிலையோடு பேசுங்கள்.

    ReplyDelete
  2. உங்களுக்குத்தான் இன்று ஒருபதிவு போட்டு இருக்கேன் வாருங்கள்......

    ReplyDelete
  3. அப்படியே அரசு பயங்கரவாதத்தின் கொடுக்கு மாதிரி பேசுறீங்களே.... மக்களை பற்றி உங்களுக்கு எந்த கவலையும் இல்லை அப்படித்தானே..... ஐயா பெரியாள் உங்களுக்கு எந்த ஊரு...... நீங்கள் என்ன கூடன் குளத்திலா வாசிக்கிறீர். பாதிப்பு வந்தால் சாகப்போவது நீங்களா....... ஈழத்திலே செத்தது மாதிரி எவனோ அப்பாவி சாவான்...... எங்காவது போர் நடக்கட்டுமே...... எவனாவது சாவட்டுமே..... நாம் ஒரு இணையத்தளம் வைத்து கொண்டு கூடங்குளம் மட்டும் பற்றி பேசி அந்த பகுதி மக்களை கொல்ல அரசு பயங்கரவாதிகளுக்கு அந்நிய முதலாளிகளுக்கு இந்தியாவை பட்டா போட்டு கொடுக்கும் கும்பலுக்கும் துணை போவோம். நல்ல சிந்தனை ,,,, நல்ல பொது நலம் ஐயா உங்களுக்கு......

    ReplyDelete
  4. நண்பருக்கு வணக்கம் ,

    தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

    உங்கள் கருத்துகளை பார்த்தால் எனக்கு அழவா அல்லது சிரிக்கவா என்பது தெரியவில்லை . கண்ணை மூடிக்கொண்டு நான் சொல்லுவது தான் சரி சரி என்று நீங்கள் சத்தம் போட்டு கொண்டு இருப்பதால் உண்மையை பொய்யாய் மாற்ற முடியாது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் .

    உங்கள் வாதம் சரியானது எனில் , எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளித்து இருக்கலாமே .... ஏன் உங்களால் பதில் கொடுக்கமுடியவில்லை ? உங்களால் முடியவும் செய்யாது . ஏன் எனில் உங்களின் போலி முகமூடிகளை தோலுரிக்கும் கேள்விகள் அவை .

    எனது போன இடுகையில் நீங்கள் சொன்ன பொய்யான தகவலை நான் ஆதாரத்துடன் மறுத்து இருந்தேன் . நீங்கள் பதில் ஒன்றும் சொல்லவில்லை . மிகுந்த ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட எனது பதிவுகளுக்கு நீங்கள் மதச்சாயம் பூச நினைக்கிறீர்கள் . இது உங்களின் அறியாமையா ..? அல்லது இயலாமையா என்பதும் எனக்கு விளங்கவில்லை .

    மதச்சாயம் பூசி மக்களை ஏமாற்றும் சில கூட்டங்களின் முகமூடிகள் சீக்கிரம் மக்களால் கிழிக்கப்படும் . அந்த கூட்டத்தில் நீங்கள் இருக்ககூடாது என்பது தான் எனது ஆசை .

    நன்றி

    ReplyDelete
  5. இருதயம் அவர்களுக்கு பதில் (1).

    விஞ்சானிகள் சொல்கிறார்கள் அணு உலை ஆபத்தானது என்று. உலகம் முழுவதும் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றது. உங்கள் அபுல் கலாம் என்கிற அரசு கொடுக்கு அதை ஆபத்தில்லை என்று சொன்னால் அது உண்மையாகி விடுமா? என்ன? நீங்கள் பெரிய ஆதாரத்தை சமர்பித்தது விட்டீர்கள். ஜப்பானில் மீன் பிடிக்கிறார்கள் என்று ஒரு படத்தை போட்டு ஜப்பானில் மீன் வளம் இருக்கு என்று சொல்லி இருக்கீங்கள்.

    நீங்கள் பேசுவதுதான் சிறுபிள்ளை தனமாக இருக்கு. அணுவின் கழிவு அழிந்து போக இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும் என்று விஞ்சானிகள் சொல்கிறார்கள். சாதாரண தொழில் சாலைகளை இருந்து வெளியேறும் கழிவால் ஏற்ப்படும் நிலத்தடி நீர் மாற்றங்கள், மற்றும் சுகாதார கேடுகள் ஆகியவற்றையே சமாளிக்க முடியாமல் சாயப்பட்டறை போன்ற சிறு தொழில் செய்யும் மக்ககளின் வயிற்றில் அடித்து அதை மூட சொல்கிறார்கள். அணு உலை உங்களுக்கு ஆபத்து இல்லையோ?

    சரி போபால் விஷவாய்வு கசிவுக்கு இதுவரை நிவாரணம் கொடுக்க முடியவில்லை. இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது அந்த மக்கள் துன்பத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இன்னும் அங்கு பிறக்கும் குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றன. அணுவின் மூல கூரான மஞ்சள் கேக் வெட்டி எடுக்கப்படும் ஜாதுகோடா பகுதி மக்களின் அவலம் உலகம் முழுவதும் நாறுகிறது. என்ன சார் பெரிசா கேள்வி கேட்டு விட்டீர்கள், பதிவு எழுதி விட்டீர்கள் உங்களால் எதற்கும் தீர்வு சொல்ல முடியாது. தங்க ஊசி என்று நீங்கள் சொல்வதால் கண்ணில் குத்தி கொள்ள முடியாது.

    ஏன்? கேரளா அரசும், மற்றைய மாநில அரசுகளும் அணு உலையை எதிர்கின்றன. கேரளாவிற்கு மின்சாரம் தேவை இல்லையா? தமிழ் நாட்டு மின்சாரம் தமிழ் நாட்டுக்கு போதுமானதாக உள்ளதே. அதை ஏன் கேரளாவிற்கு கொடுக்க வேண்டும். கேரளத்தில் ஏன்? ஒரு அணு உலை அமைக்க கூடாது. கேரளத்தில் ஒரு அணு உலை கூட இல்லையே தமிழ் நாட்டில் அணு உலையை கட்டி ஏன்? கேரளத்திற்கு மின்சாரம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

      // விஞ்சானிகள் சொல்கிறார்கள் அணு உலை ஆபத்தானது என்று//
      அணு உலை எதிர்ப்பு விஞ்ஞானிகளின் கேள்விகளை குறித்த நியாங்களை தான் நான் தற்பொழுது பதிவாக எழுதி வருகிறேன் . எனது "
      மக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு - ஒரு பார்வை" மற்றும் "கூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை" என்ற பதிவுகளில் உங்களின் விஞ்ஞானிகளின் அறிவு பூர்வமான கேள்விகளையும் அதற்க்கு எனது பதிலையும் , எனது எதிர் கேள்விகளையும் கேட்டு இருக்கிறேன் . நீங்கள் சொன்னபடி நீங்களோ , தோழர் முத்து கிருஷ்ணனோ அல்லது கூடங்குளம் அணுமின் நிலைய எதிப்பு குழுவோ இதற்க்கு பதில் கொடுங்கள் .... காத்திருக்கிறேன் .

      //உங்கள் அபுல் கலாம் என்கிற அரசு கொடுக்கு அதை ஆபத்தில்லை என்று சொன்னால் அது உண்மையாகி விடுமா?//
      Phd . பொலிடிகல் சயின்ஸ் படித்த உங்கள் அணு விஞ்ஞானியும் ( திரு . உதயகுமார் ) , Lawyer படித்த இன்னும் ஒரு அணு விஞ்ஞானி ( திரு . சுப்ரமணியன் ) கூறுவது தான் உண்மை என்று நீங்கள் கூறுவது " அதோ பார் சூரியனிக்கு மேல் காக்கை " என்று கூறுவது போல உள்ளது . திரு . அப்துல் கலாம் மாத்திரம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று சொல்லவில்லை . மத்திய குழுவினர் ... ஏன் நேற்று மாநில குழுவினரும் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று சொல்லி உள்ளார்கள் . எல்லாருமே முட்டாளா .....? நீங்கள் மாத்திரம் அறிவாளிகளா ...?

      //ஜப்பானில் மீன் பிடிக்கிறார்கள் என்று ஒரு படத்தை போட்டு ஜப்பானில் மீன் வளம் இருக்கு என்று சொல்லி இருக்கீங்கள்.//
      எனது பதிவை நீங்கள் மேலோட்டமாக படித்து உள்ளீர்கள் . 3 அணுமின் நிலையனகள் செயல் பட்டு கொண்டு உள்ள பகுதியில் உள்ள மீன் மார்கெட் தான் கானொளியில் உள்ளது . மேலும் உலக மீன் ஏற்றுமதியில் ஜப்பான் 3 வது இடத்தில உள்ளது என்பதை ஏன் நீங்கள் அந்த பதிவில் படிக்கவில்லையா ..?

      //ணுவின் கழிவு அழிந்து போக இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகள் வரை ஆகும் என்று விஞ்சானிகள் சொல்கிறார்கள்.//
      உங்களின் இந்த கேள்வி தான் சிறு பிள்ளை தனமானது . Half life என்றால் என்ன என்று நீங்கள் தான் முதலில் புத்தகத்தை படித்து அறிந்து கொள்ளவேண்டும் . ஆமா ... கடலோரம் பெருமளவில் கிடக்கிறதே தோரியம் என்ற கதிரியக்க தாது அதனுட்டைய Half லைப் பற்றி ஏன் நீங்கள் பேச மறுக்கிறீர்கள் ....? அணுக்கழிவு குறித்த மேலும் தகவல்களுக்கு எனது அணுக்கழிவு - இந்தியாய்வின் நிலைப்பாடு என்ற கட்டுரையை காணுங்கள் .

      மற்ற தொழிற் சாலைகளையும் , சாக்கடை கழிவு நீரையும் குறித்த உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளக்கூடியவை தான் . ஆனால் அவைகளை நீங்கள் அணுமின் நிலையத்துடன் ஒப்பிட்டு இருப்பது அணுமின் நிலையங்களின் தொழில் நுட்பத்தை நீங்கள் இன்னும் அறிந்து கொள்ளவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன் .

      போபால் நிகழ்வை நீங்கள் அணுமின் நிலையத்துடன் ஒப்பிடுவது தான் கொஞ்சம் கூட ஏற்று கொள்ளமுடியாதது . என்னுடைய ஆக்கப்பூர்வ பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலை வருகிற போது அநேகம் பதிவர்கள் இந்த கேள்வியை தான் கேட்கிறார்கள் . சரி போபாலில் என்ன நடந்தது என்று ஒரு தனி இடுகை இடுகிறேன் .

      //அணுவின் மூல கூரான மஞ்சள் கேக் வெட்டி எடுக்கப்படும் ஜாதுகோடா பகுதி மக்களின் அவலம் உலகம் முழுவதும் நாறுகிறது.//
      மிக அருமையாக ஒரு கேள்வி கேட்டீர்கள். ஜாதுகோடா பகுதியில் எந்த அணுமின் நிலையங்களும் இல்லை என்பதை நீங்களும் ஒத்து கொள்ளுகிறீர்கள் . ஆனால் அந்த ஜாதுகோடா பகுதியில் யூரனியம் தாது இருப்பதால் ஏற்பாடும் இயற்க்கை கதிர்வீச்சை நீங்கள் பேசுகிறீர்கள் ,. அதே போல இயற்க்கை கதிர்வீச்சு தமிழ்நாட்டின் கடலோர கிராமங்களில் 2400 mSv இருக்கிறதே . ஏன் அதை குறித்து நீங்கள் பேசவில்லை . ..? உங்கள் விஞ்ஞானிகள் குழு சொல்லி தரவில்லையா ...?

      //ஏன்? கேரளா அரசும், மற்றைய மாநில அரசுகளும் அணு உலையை எதிர்கின்றன.//
      யார் சொன்னது .... அணுமின் நிலயங்கள் அமைப்பதற்கு என்று தேவையான இடம் Site Selection committee தேர்ந்தெடுக்கும் எல்லா இடங்களிலும் சீக்கிரம் புதிய திட்டங்களை எதிர்பாருங்கள் . இப்பொழுது கூட Kovvada , Jaithapur , மிர்ச்சி விர்ச்சி , ஹரிபுர் , போன்ற சில இடங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் .

      Delete
  6. இருதயம் அவர்களுக்கு பதில் (2).

    ஏன் இத்தனை பேசும் நீங்கள்! அணு உலையை கட்டினால் தமிழகம் முன்னேறி விடும் என்று பேசும் பெரிய சமுதாய சிந்தனை கொண்ட தாங்கள் ஏன் சேது சமுத்திர திட்டம் குறித்து வாய் திறக்க வில்லையே. கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவினர் கேட்க்கும் கேள்விகளுக்கு இதுவரை ஒழுங்கான பதில் கொடுக்க மத்திய குழுவால் முடியவில்லை. நீங்கள் உப்பு சப்பு இல்லாத காரணத்தை வைத்து பதிவு எழுதி கொண்டு ஒரு மிக பெரிய மக்கள் போராட்டத்தை கொச்சை படுத்துகிறீர்கள். தமிழத்தில் உள்ள அறிவு ஜீவிகளாலும் இது எதிர்க்கப்படுகிறது என்பதை உணருங்கள்.

    நான் அதில் ஹிந்துத்துவா பற்றி கேட்ட கேள்விகள் நியாயமானதா இல்லையா? தமிழகத்தின் நலனின் மீது அக்கறை உள்ள ஹிந்து முன்னணி ராம கோபால ஐயர் இதே அணு உலையை காஞ்சி சங்கர மடத்துக்கு அருகிலேயோ அல்லது வேறு ஏதாவது புனித தளங்களுக்கு அருகிலேயோ நிறுவப்பட்டால் ஒத்து கொள்வாரா? இதில் மக்கள் பிரச்னையை வைத்து ஹிந்து முன்னணி போது நலத்தோடு வரவில்லை. அவர்கள் வந்ததன் நோக்கம் அந்த பகுதிகளில் வாழ்வதில் பெரும்பான்மை மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதே அப்பட்டமான உண்மை.

    உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்று போயி விடவில்லை. ஒரு பதிவை பார்த்ததும் அதற்க்கு பதில் எழுதுவதோடு சரி. அதற்க்கு அவர்கள் என்ன பதில் சொல்லி இருக்கிறார்கள் என்று எல்லா நேரமும் பின்தொடர்வது கடினமே. அதனால் உங்களுக்கு இங்கே எங்களது ஈமெயில் முகவரி கொடுக்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் இட்ட கருத்து பதில் எழுதலாம். உடனே உங்களுக்கு மறுப்பு பதில் அனுப்பப்படும் அல்லது உங்கள் இணையத்திலேயே வந்து மறுப்பு பதியப்படும்.

    தோழர் முத்து கிருஷ்ணன் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்தவர் அணு உலைகளின் ஆபத்தை குறித்து ஒரு சிறந்த காணொளியை வெளியிட்டுள்ளார். உங்களுக்கு விருப்பம் என்று சொன்னால் உங்களது கருத்துக்களுக்கு அவரை கொண்டே பதில் சொல்ல சொல்கிறோம், அல்லது கூடங்குளம் அணு எதிர்ப்பு குழுவுடன் வேண்டுமானால் பேசி உங்களது சந்தேங்களை போக்க வழி சொல்கிறோம். அல்லது அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களது சந்தேங்களை தெரிவியுங்கள், அல்லது ஈமெயில் மூலமாகவும் தெரிவித்து தீர்த்து கொள்ளுங்கள்.

    சும்மா பதிவு எழுதுகிறோம் என்று சொல்லி வேண்டும் என்றே ஒரு அநியாயத்திற்கு துணை போக முடியாது. கண்ணு முன்னாள் ஒரு பெரிய குழி இருக்கு என்று தெரிந்தும் அதில் போயி விழுங்கள் என்று சொல்ல முடியாது. நீங்கள் சொல்வது அப்படித்தான் இருக்கு. நாங்களும் உலக அணு உலை எதிர்ப்பு மக்களும் விஞ்சனிகளும் தெளிவாகத்தான் இருக்கிறோம் என்பதை உங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லி கொள்ள ஆசைபடுகிறோம்.

    கூடங்குளம் அணு உலை எதிப்பு குழுவை சேர்ந்தவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மத்திய நிபுணர் குழுவே திணறுகிறது நீங்கள் ஒரு ஆள்தான் அதிசயமா அணு உலையை ஆதரித்து எழுதுகிறீர்கள். என்ன பெரிய கேள்விகள் கேட்டு விட்டீர்கள். முதலில் விடியோவை பார்த்து விட்டு அதற்க்கு வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அல்லது கேள்விகளை ஒன்றன் பின் ஒன்றாக நீங்கள் கேளுங்கள் நாங்கள் உங்களுக்கு ஆதாரங்களை சமர்பிக்கிறோம்.

    அணு உலை என்கிற மக்களை கொல்லும் அரக்கனை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மொத்த மனித குலத்தின் எதிரியே.....

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

      // பெரிய சமுதாய சிந்தனை கொண்ட தாங்கள் ஏன் சேது சமுத்திர திட்டம் குறித்து வாய் திறக்க வில்லையே.//
      நிச்சயமாக எழுதுகிறேன் . ஆனால் இந்த பிரச்சினை மிக பழையது என்பதால் இது குறித்து எழுதுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் .

      //கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்பு குழுவினர் கேட்க்கும் கேள்விகளுக்கு இதுவரை ஒழுங்கான பதில் கொடுக்க மத்திய குழுவால் முடியவில்லை//
      ஹ.. ஹா. அருமையான் கேள்வி. இப்படி கேள்வி கேட்டு கேட்டு தான் மக்களை நீங்கள் குழப்பி வருகிறீர்கள் . கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு எந்த 50 கேள்விகளை கேட்டார்கள் என்றே மக்களுக்கு தெரியாது ...? சரி உங்களுக்கு தெரியுமா ...? உங்களுக்கும் தெரியாது .... மக்களுக்கு பயன்தரும் வித்தில் எந்த கேள்வியையும் கேட்காமல் இந்திய இறையாண்மைக்கு எதிரான சில கேள்விகளை கேட்டிருக்கிராகள் . அவற்றிற்கு மாத்திரம் மத்திய குழு பதில் தர வில்லை . ஏன் ஐயா ... இவ்வளவு கேட்கிறீரே , எனது முந்தய பதிவில் நான் கேட்டிருந்த படி மத்திய குழுவின் பதில்களை நீங்கள் ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை ...? என்ன பயமா ...? இல்லை வேடம் கலைந்துவிடும் என்ற உணர்வா ...?

      //ஹிந்துத்துவா பற்றி கேட்ட கேள்விகள் நியாயமானதா இல்லையா?//
      எனது உண்மையான பதிவுக்கு நீங்கள் மறுபடியும் மத சாட்டை பூச முனைகிறீர்கள் ...... இந்த மாதிரி மதங்களை கொண்டு மற்றவர்களை சாடும் மனிதர்களை நான் வெறுக்கிறேன் .

      //உங்களது கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்று போயி விடவில்லை.//
      இந்த பதிவிலும் நீங்கள் மழுப்பலாக சொல்லி உள்ளீர்களே ஒழிய .... பதில் சொல்லவில்லை . கூடங்குளம் மீன்பிடி கிராமம் என்றும் அதை என்னால் நிரூபிக்கமுடியும் என்றும் தாங்கள் சொன்னதாக நியாபகம் . நிரூபித்து காண்பியுங்களேன் .

      கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு குழுவை குறித்து நானும் அச்சத்தினால் விளைந்த போராட்டம் என்று நினைத்து வெகு நாட்கள் மெளனமாக இருந்தது உண்டு . ஆனால் இந்த குழு அச்சத்தினால் போராட வரவில்லை என்றும் அப்பாவி மக்களை பகடை காயாக பயன்படுத்தி நாட்டின் வளர்சிக்கி எதிராக போராடுகிறது என்றும் குழுவின் தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் பேச்சின் மூலம் நான் அறிந்து கொண்டேன். அவரது பேச்சை குறித்த எனது கேள்விகள் , எனது சந்தேகங்கள் எல்லாம் எனது பதிவுகளில் யாராலும் பதில் கொடுக்க முடியாததாய் இருக்கிறது . சரி இந்த உதயகுமார் உண்மையிலே பூமியை காக்கவேண்டும் என்று போராடுகிறார் என்றே வைத்து கொள்ளுங்கள் .. ஏன் அமெரிக்காவின் குடியுரிமை வைத்து இருக்கும் அவர் அமெரிக்காவில் போராட வில்லை ..? அங்கு 104 அணுமின் நிலையங்கள் இருக்கிறதே . அங்கு உள்ள அரசியலவாதிகள் நாம் ஊர் ஆட்கள் போல இல்லை என்பதற்காகவா ....?

      சரி . இந்த உதயகுமார் எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரவில்லை என்றும் அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் பல மாதங்களாக பேசி வருகிறாரே , ஏன் வழக்கு தொடரவில்லை ....? உண்மை வெளிப்பட்டு விடும் என்ற பயமா ...?

      சரி . இந்த உதயகுமார் , கூடங்குளம் மக்களை பார்த்து உங்கள் ஊரை காலி செய்து விடுவார்கள் என்று கூறி உள்ளாரே ... ஏன் அது குறித்த சந்தேகத்தை மத்திய குழுவிடம் எழுப்பவில்லை ...? என்ன வேடமா ....?

      சரி .... இந்த உதயகுமார் பெண்களையும் , ஒன்றும் அறியாத சிறுவர்களையும் பேசி உசுப்பேற்றி போராட்டத்தில் கலந்துகொள்ள வைக்கிறாரே ...? என்ன அவர்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளலாம் என்ற நினைப்பா ...?

      இப்படி என்னால் பல மடங்கு கேள்விகளை கேட்கமுடியும் . எனது கோபம் , குமுறல்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் போலிகள் மீது தானே தவிர மக்கள் மீது அல்ல .

      சில நக்சல் இயங்கங்களும் , சில அரசியல் சூத்திரதாரிகளும் இந்த மக்களை ஆயுதமாக எடுத்து கொண்டு விளையாடிவதை பார்த்து நீங்கள் பெருமைப்படலாம் . ஆனால் என்னால் முடியாது . எனவே இந்த மாதிரி போலிகளின் முகதிரிரைகளை கிழிக்கும் எனது பதிவுகள் தொடரும் .

      நன்றி

      Delete
  7. HELLOW MR. IDHAYAM........ THE DOUBTS OF MR. PUTHIYATHENRAL CAN NOT BE CLEARIFIED BECAUSE HE DONT WANT INDIA TO BE SUPERPOWER.
    BIG SORRY FOR HIM. PLEASE DONT WASTE YOUR TIME BY GIVING REPLY TO HIM .. LOOK FORWARD BY POSTING OTHER USEFUL POSTS..

    REGARDS

    MAHESH

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . நண்பர் புதிய தென்றல் புரியாதது போல நடித்தாலும் , நம்மால் முடிந்த அளவுக்கு பதில் கொடுக்க வேண்டும் அல்லவா ....!

      தங்களை போன்ற நண்பர்களின் ஊக்கத்தினால் , இன்னும் எழுத உற்சாகம் பிறக்கிறது .

      தொடர்ந்து வருகை தாருங்கள் ....

      நன்றி

      Delete
  8. // நண்பர் புதிய தென்றல் புரியாதது போல நடித்தாலும் , நம்மால் முடிந்த அளவுக்கு பதில் கொடுக்க வேண்டும் அல்லவா//

    நீங்கள் ஒன்று அணு விஞ்சானி இல்லை. உங்களுக்குதான் புரியவில்லை என்பதே உண்மை. சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற 9 வல்லுனர்கள் சொல்கிறார்கள் உலகில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடைத்து நொறுக்கினாலும் நஷ்டமில்லை ஆனால் அது உண்டாக்கும் பதிப்பு இந்த உலகையும், மக்களையும் அழிக்க வல்லது என்று. சும்மா இணையத்தில் படித்து அதை வைத்து சில பதிவு எழுதிவிட்டு இணையத்திற்கு பின்னால் மறைந்து கொண்டால் போதாது.

    கூடன்குளத்திலே மக்கள் களப்பணி போராட்டங்களை செய்கிறார்கள். அவர்கள் கார்பரேட் இந்திய அரசின் கேள்விகளுக்கு பதில் கொடுக்கிறார்கள். நியாயமான ஐம்பது கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள். ஆரம்பத்தில் அந்த கேள்விகள் மிகவும் நியாயமானது என்று சொன்னார் மத்திய அமைச்சர் நாராயணன். கூடங்குளம் அணு உலை போராட்டம் என்பது மக்கள் போராட்டம். அவர்களின் போராட்டத்திற்கு பின்னால் கார்பரேட் அரசு சாராத புத்தி ஜீவிகளும், அறிஞ்சர்களும், சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.

    உங்கள் கேள்விகளை தயார் செயுங்கள நாம் கூடங்குளம் நேரில் சொல்வோம் அந்த போராட்ட குழு மக்களோடு பேசுவோம். இதற்க்கு தயாரா என்று சொல்லுங்கள் சும்மா அவதூறு பரப்பி திரிய வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ....

      //நீங்கள் ஒன்று அணு விஞ்சானி இல்லை. உங்களுக்குதான் புரியவில்லை என்பதே உண்மை. //
      அட ... எப்படி கண்டு பிடிச்சீங்க .....! அணு விஞ்ஞானிகள் சொல்லுவதை மாத்திரம் நீங்கள் அப்படியே ஏற்று கொண்டீர்களோ ...? மாபெரும் அறிவியல் மேதை திரு . அப்துல் கலாமையே மதிக்காத கூட்டம் இந்த பதிவனை எப்படி மதிக்கும் என எனக்கு தெரியாதா நண்பரே .....?

      //சமாதானத்துக்காக நோபல் பரிசு பெற்ற 9 வல்லுனர்கள் சொல்கிறார்கள் உலகில் உள்ள அனைத்து அணு உலைகளையும் உடைத்து நொறுக்கினாலும் நஷ்டமில்லை ஆனால் அது உண்டாக்கும் பதிப்பு இந்த உலகையும், மக்களையும் அழிக்க வல்லது என்று//
      உங்கள் நோக்கம் ரொம்ப தெளிவாக எனக்கு விளங்குகிறது . எங்கே அணுமின் நிலையங்கள் மூலம் இந்தியா அணுகுண்டு தயாரித்து பெரிய வல்லரசு ஆகிவிடுமோ என்று பயப்படுகிறீர்கள் . உங்களுக்கு அந்த பயம் வேண்டாம் நண்பரே . கூடங்குளம் அணுமின் நிலையம் மின்சாரத்திற்கு மாத்திரமே ( ஆக்கப்பூர்வ சக்திக்கு ) . அதனால் தான் இந்த அணுமின் நிலையத்தின் கண்காணிப்பு IAEA என்று சொல்லப்படுகிற பன்னாட்டு முகமையின் கீழ் வருகிறது . இப்ப கொஞ்சம் நிம்மதி தானே ...!

      //நியாயமான ஐம்பது கேள்விகளையும் எழுப்பி உள்ளார்கள்.//
      அப்படியா ....! அந்த 50 கேள்விகள் என்னவென்று பொது மக்களுக்கு தெரியுமா .....? சரி மத்திய குழு கொடுத்த 50 பதில்களும் பொதுமக்களுக்கு தெரியுமா ...? நியாயமான கேள்விகளை பொதுமக்களிடம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம் ...? என்ன முகமூடி கிழியும் என்ற பயமா ...? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா ...?

      //அவர்களின் போராட்டத்திற்கு பின்னால் கார்பரேட் அரசு சாராத புத்தி ஜீவிகளும், அறிஞ்சர்களும், சிந்தனையாளர்களும் இருக்கின்றனர்.//
      இந்த வருடத்தின் மிக சிறந்த வரிகளில் ஒன்றாக இதை வைத்து கொள்ளலாம் . புத்தி ஜீவிகள் தான் அரசின் உடமையான அணுமின் நிலையத்தை குண்டு வீசி தகர்ப்போம் என்று சொல்லுகிறவர்கள் . அறிஞர்கள் தான் அணுமின் நிலையத்தில் அணு எரிபொருளை ஏற்றாமல் அதில் நிலக்கரியை எரிக்கலாம் என்ற யோசனையை சொல்லுபவர்கள் . சிந்தனையாளர்கள் தான் அணுமின் நிலையங்களை குறித்து புதிய புதிய பொய்களை அவிழ்த்து விடுபவர்கள் . உங்கள் யோசனை நல்ல இருக்கே .....!

      //உங்கள் கேள்விகளை தயார் செயுங்கள நாம் கூடங்குளம் நேரில் சொல்வோம் அந்த போராட்ட குழு மக்களோடு பேசுவோம். இதற்க்கு தயாரா என்று சொல்லுங்கள் சும்மா அவதூறு பரப்பி திரிய வேண்டாம்.//
      ஐயா .... யார் அவதூறு செய்கிறார் . நானா ...? அல்லது நீங்களா ...? எனது பதிவில் கேட்கப்பட்டிருக்கும் எந்த கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்லவில்லை . உங்களின் அறிஞர்களும் , சிந்தனையாளர்களும் கூட பதில் சொல்ல முடியாது . திரும்பவும் சொல்லுகிறேன் . எனது பதிவு மக்களுக்கு எதிரானது அல்ல . மக்களை தூண்டி விட்டு நல்லவர்கள் போல நடிக்கும் சில வேடதாரிகளுக்கு எதிரானது . உண்மையை சொல்லுவது தான் எனது வேலை ...

      நன்றி ஐயா ...

      Delete
  9. HELLOW MR. IDHAYAM........ THE DOUBTS OF MR. PUTHIYATHENRAL CAN NOT BE CLEARIFIED BECAUSE HE DONT WANT INDIA TO BE SUPERPOWER.

    வணக்கம் மகேஷ் உங்கள் சுப்பர் பவரை தூக்கி குப்பையில் போடுங்கள். மக்களிஎல்லாம் கொன்று விட்டு சூப்பர் பவர் ஆகணுமா? மக்களை மதிக்கத்தெரியாத அரசுகள் எதற்கு? கண்ணை விற்று ஓவியம் வாங்க முடியாது. நாடு, அதற்க்கு எல்லை, சட்டம் எல்லாம் யாருக்கு அங்கே வாழும் மக்களுக்கு. அந்த மக்கள் விரும்பாத எதையும் செய்ய முடியாது. உலகமே அணு உலை வேண்டாம் என்று சொல்கிறது. இருதயமும் நீங்களும், சொல்வதை யாரும் ஏற்றுகொள்ள முடியாது.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      உங்களது கருத்துகள் மிகவும் வியப்பு அளிக்க கூடியதாய் இருக்கிறது .

      மக்களை கொல்லுவதற்காக அணுமின் நிலையம் என்ற கருத்து முற்றிலும் தவறானது . உலகம் எங்கும் 430 க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இருக்கிறது . மக்கள் சந்தோசமாய் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் . இந்தியாவில் மாத்திரம் 20 அணுமின் நிலையங்கள் கடந்த 40 வருடங்களாக இயங்கி வருகிறது . மக்கள் சந்தோசமாய் தான் இருக்கிறார்கள் . இப்படி உணர்ச்சி வேகத்தில் பேசி மக்களை திசை திருப்பவதை நீங்கள் நிறுத்த வேண்டும் என்பது தான் எனது எண்ணம் .

      //உலகமே அணு உலை வேண்டாம் என்று சொல்கிறது.//
      எனது பதிவான " புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள்" கொஞ்சம் படித்து பாருங்கள் . ( http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_09.html ) . உங்களுக்கு விளங்கும் நீங்கள் சொல்லுவது தவறு என்று .

      நன்றி

      Delete
  10. நான் இந்தியன் என்கிற வார்த்தையே உங்களை இந்த அளவுக்கு வெறிகொள்ள செய்கிறது. நாம் மனிதர்கள் என்பதை மறந்து விடவேண்டாம். அதை மறப்பதால்தான் மனித நேயம், மக்கள் பிரச்சனைகள் பற்றி மறந்து போனது. நீங்கள் குடித்திருக்கும் கள்ளு, சாராயம் சாதாரணது இல்லை. அந்த போதை உங்களை மொத்த மக்களையும் கொன்று இந்தியா வல்லரசு என்கிற பட்டம் வேண்டும். மக்களை கொன்று, அவர்கள் நலன்களை கொன்று வெளிநாட்டு கார்பரேட் முதலாளிகளோடு கூத்து அடிக்க உங்களுக்கு கிடைத்த ஒரு சொல்தான் நான் இந்தியன். இந்த வார்த்தையே ஒரு கேவலமான வார்த்தை மற்றவன் எல்லாம் என்ன வெளிநாட்டுகாரனா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதிய தென்றலுக்கு வணக்கம் ....,

      //நான் இந்தியன் என்கிற வார்த்தையே உங்களை இந்த அளவுக்கு வெறிகொள்ள செய்கிறது.//
      உண்மை .....! தாய் நாட்டில் பிறந்து ... தாய் நாட்டை நேசித்து .... தாய் நாட்டின் வளர்ச்சியை காண துடிக்கும் ஒரு சாதாரண குடிமகன் ஒவ்வொருவர் மனதிலும் நான் ஒரு இந்தியன் என்ற உணர்வு எப்பொழுதும் இருந்து கொண்டு தான் இருக்கும் . இந்த தாய் நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் பொறாமை கொண்டோர் , அப்பாவி மக்களை ஏமாற்றி , தவறான தகவல்களை கூறி இந்திய வளரும் சமுதாயத்தை சீரழிககிறதை பார்க்கும் போதும் , அதை தடுக்க நினைக்கும் போதும் , அதற்காக போராடும் போதும் சில வேளை நான் ஒரு இந்தியன் என்ற வெறி கூட வரலாம் .

      //நான் இந்தியன். இந்த வார்த்தையே ஒரு கேவலமான வார்த்தை மற்றவன் எல்லாம் என்ன வெளிநாட்டுகாரனா?//
      அப்படியா ... இந்த கேவலமான வார்த்தை உண்மை இந்தியர்களின் ஜீவ நாடி . உங்கள் கருத்தின் பின் பகுதியை நீங்களே யோசித்து பதில் கண்டு பிடியுங்கள் .....

      நன்றி ........ நான் இந்தியன் ........ வந்தே மாதரம் ........நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுகிறேன்

      Delete
  11. நாம் தேச துரோகி என்று உரக்கச் சொல்லுவோம்! http://www.sinthikkavum.net/2012/02/blog-post_20.html

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தியன் ........ வந்தே மாதரம் ........நான் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுகிறேன்

      Delete
  12. நண்பருக்கு வணக்கம் ,

    தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

    இந்தியா Super power என்ற வார்த்தையை நீங்கள் உபயோக்கிரீர்கள் . பரவாயில்லை . நண்பரே ... Super power என்றவுடன் அணுகுண்டுகள் தான் தயாரிக்கிறார்கள் என நீங்கள் தவறாக நினைக்க கூடாது ... எனது பதிவான . " அணுமின் நிலையங்கள் - அணுகுண்டுகள் " கொஞ்சம் பாருங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_06.html . இந்தியா சூப்பர் power என்ற வார்த்தையை மின்சாரத்தில் தன்னிறைவு என்று கொஞ்சம் நீங்கள் நினைத்து பாருங்கள் ...

    நெய்வேலி மின்சாரம் மாத்திரம் போதும் என நீங்கள் சொல்லி உள்ளீர்கள் . தயை கூர்ந்து எனது பதிவான , " 22000 MWe மின்சாரம் குறையுமா ?" கொஞ்சம் பாருங்களேன் . http://naanoruindian.blogspot.in/2012/02/22000-mwe.html

    அணுமின் நிலையங்கள் குறித்த ஒரு அறிவியல் தொகுப்பையும் இந்த வலைப்பூவில் பதிவிட்டு உள்ளேன் . கொஞ்சம் அதையும் பாருங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_02.html

    தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி