Friday 30 March 2012

1000 MWe அனல் மின் நிலையம் , சூரிய ஒளி மின் நிலையம் , நீர் மின் நிலையம் , அணுமின் நிலையம் - ஒரு ஒப்பீடு !


கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த விவாதங்கள் பெருமளவில் பதிவுலகில் அங்கம் வகித்ததுஅவரவர் சூடான கருத்துகளை பரிமாறி கொண்டாலும் , சில நல்ல ஆக்கப்பூர்வமான விடயங்கள் பெருமளவில் விவாதிக்கப்பட்டனஎனது வலைப்பூவிலும் அணுமின் நிலையங்களை குறித்த பதிவுகள் அறிவியல் ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன ...  பல நண்பர்கள் ஆக்கப்பூர்வமான பல கேள்விகள் கேட்டு , பதிவை இன்னும் மெருகு ஏற்றினார்கள் ...  இன்னும் சிலரோ ,,,கடைசி வரை அணுமின் நிலையங்கள் குறித்த பதிவுகளை ஏற்று கொள்ளவே இல்லைஆனால் ஒரு மகிழ்ச்சியான விடயம் என்னவெனில் ..... பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த விடயங்களை ஆர்வமுடன் படித்து வருகிறார்கள் என்பதே ...

அநேகம் நண்பர்களின் ஒரு பொதுவான கேள்வி என்னவெனில் , " மின்சாரம் தயாரிப்பதற்கு பல வழிகள் இருக்கும் பொழுது , நீங்கள் ஏன் அணுமின் சக்தியை ஆதரிக்கிறீர்கள் ...?" என்பதே .... இது ஒரு நியாயமான கேள்வி .... எனது பதிவுலக பதிவுகள் துவங்கியதே , " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவோடு தான்அந்த பதிவில் பல வகை மின்நிலையங்களின் செயல்பாடுகளையும் புள்ளி விவரங்களோடு கூட விளக்கி இருக்கிறேன்இருப்பினும் , இப்பொழுது விவாதத்தில் இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் 1000 MWe உற்பத்தி திறன் உடையதால் , 1000 MWe மின்சாரம் மற்ற மின் நிலையங்கள் தயாரித்தால் அவற்றின் ஒப்புமை எப்படி இருக்கும் என்பதே இந்த பதிவு .... தொடர்ந்து படியுங்கள் .....!  ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள்  ....! 



1000 MWe அனல் மின் நிலையம் :- 
 
இந்தியாவின் தற்பொழுதைய மொத்த மின் உற்பத்தி திறன் 1 .8 2 லட்சம் MWe .  இதில் கிட்டத்தட்ட 1 . 15 லட்சம் MWe உற்பத்தி திறன் அனல் மின் நிலையங்கள் தான்அதாவது நமது பெரும்பான்மை மின் உற்பத்தி அனல் மின் நிலையங்கள் மூலம் தான்அனல் மின் நிலையங்கள் கூட 24 x 7 மணிநேரமும் மின்சாரம் தயாரிக்கும் திறன் கொண்டவை தான்பிறகு என்ன என்று நீங்கள் கேட்கலாம் ...!  சரி நாம் கொஞ்சம் கவனிப்போம் ...

 
அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி நமது நாட்டில் ஒரு பெரும் பிரச்சினை தான் .   இந்திய நாட்டில் நிலக்கரி கையிருப்பு ஒரு பக்கம் இருந்தாலும்  , நமது நாட்டின் நிலக்கரி அதிக அளவில் சாம்பலை கொடுப்பதினால்இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து நிலக்கரிகுறைந்த சாம்பல் )  இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது ....

சரி.... சாம்பல் அதிகமாக இருந்தால் என்ன ..? என்ற கேள்வி எழும்பலாம் .. அதிகமான சாம்பல் மிக அதிக சுற்று சூழல் சீர்கேட்டை ஏற்ப்படுத்துகிறது ...  அது மாத்திரமல்ல , நிலக்கரி எரித்து போக உள்ள மீதி உள்ள சாம்பலில் அதிக கதிரியக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதுமேலும்   தகவலுக்கு http://www.ornl.gov/info/ornlreview/rev26-34/text/colmain.html 


 மாத்திரமல்ல அனல் மின் நிலையங்கள் வெளியிடும் கடும் புகைகார்பன் டை ஆக்சைட் மற்றும் SO2 போன்ற வாயுக்களால் ஓசோன் படலம் ஓட்டையாகி , அதன் மூலம் புவி வெப்பமயம் அடைந்து , அதன் மூலம் ஆர்டிக் பிரதேசம் உருகி , அதன் மூலம் கடல் மட்டம் பெருகி , அதன் மூலம் கடலோர கிராமங்கள் அழியோடு அழியும் அபாயம் உள்ளது .....எனவே உலகம் முழுவதும் இந்த மாதிரி வாயுக்களை கட்டுப்பத்த வேண்டும் என்ற வேகம் பெருகி உள்ளது ..... இது குறித்து நான் ஏற்க்கனவே " அணுமின் நிலையங்கள் சுற்று சூழல் நண்பனா " என்ற கட்டுரையில் எழுதி உள்ளேன் .

 
ஒரு 1000 Mwe அனல் மின் நிலையம் ஒரு ஆண்டில் 4380000 டன் நிலக்கரியை பயன்படுத்துகிறது எனவும்  , அதன் மூலம் 320000 டன் சாம்பலும் 6 . 5 மில்லியன் டன் CO2 வாயுவும் .,  44000 டன் SO2 வாயுவும் , 22000 டன் NO2 வாயுவும் வெளியிடப்படுகிறது ....Source : The Book of Public perceptions about atomic Energy Myths & Realities , Page No : 16

சரி அப்படியானால் , அனல் மின் நிலையங்களை விட அணுமின் நிலையங்கள் சிறந்தது என்பதை நாம் ஏற்றுகொள்ள தான் வேண்டி உள்ளது ... சரி .....நாம் ஏன் சூரிய ஒளி மின்சாரம் , மற்றும் காற்றலைகளை பயன்படுத்த கூடாது என்று நீங்கள் கேட்கலாம் .... தொடர்ந்து வாசியுங்கள் 

 
 
1000 MWe சூரிய மின் நிலையம் : -

அணுசக்தி வேண்டாம் என்று சொல்லுகிற அநேகம் நண்பர்கள் நாம் ஏன் சூரிய ஒளியால் மின்சாரத்தை தயாரிக்ககூடாது என்று கேள்வி கேட்பது உண்டு ..... நிச்சயமாக நாம் தயாரிக்கலாம் .....இந்தியாவும் சூரிய ஒளியின் மூலமாக வரும் காலத்தில் 20000 Mwe மின்சாரம் தயாரிக்க முடிவு செய்து உள்ளது

ஆனால் சூரிய வெளிச்ச மின்சாரத்தில் சில குறைபாடுகள் உள்ளனஅதாவது சூரிய ஒளி மின் தகடுகள் 1000 MWe மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு பாதிக்கப்படுமானால் மிக அதிக அளவு இடம் நமக்கு தேவைப்படும் .   அந்த இடத்திற்கு நாம் பாலைவனங்களை பயன்படுத்தலாம் என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது ..... சரி .... பிறகு அப்படி செய்தால் என்ன என்று நமக்கு தோன்றலாம் .....


பொதுவாக மின்சாரத்தில் On _ Grid மற்றும் off - grid என்று நாம் சொல்லுவது உண்டு .  On _ Grid என்றால் , மின்சாரம் தயார் செய்யப்பட்டு மின் கடத்தும் கம்பிகளின் வழியாக நாம் மின்சாரத்தை வேறு இடத்திற்கு நாம் கடத்த முடியும் .   ஆனால் off - grid என்று சொல்லப்படுவது என்னவெனில் நாம் மின்சாரத்தை தயாரித்து அதே இடத்தில பயன்படுத்தி ஆகவேண்டும் .   இப்படி on - grid ல் மின்சாரம் செலுத்தப்பட வேண்டுமானால் அதிக மின் அழுத்தத்தில் மின்சாரம் செலுத்தப்பட வேண்டும்ஆனால் சூரிய ஒளி மின்சாரம் இப்படி அதிக அழுத்தம் உடைய மின்சாரமாக கிடைப்பது கடினம் .   எனவே பாலைவனத்தில் வைத்து மின்சாரம் தயாரித்து அதை நாம் மின் கம்பிகள் வழியே கடத்தினால் , Transimission loss தவிர்த்து எவ்வளவு கிடைக்கும் என்பதை நீங்கள் யோசித்து பாருங்கள்


மாத்திரமல்ல ஒரு 1000 MWe மின்நிலையம் மாதம் முழுவதும் ( 24 மணி நேரமும் )  மின் உற்பத்தி செய்தால் சுமார் 72 கோடி யூனிட் தயாரிக்கலாம்தொடர் தகவலுக்கு எனது "மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம் " என்ற பதிவை பாருங்கள்இப்படி இருக்கும் பொழுது ஒரு 1000 MWe மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய பண்ணை 12 மணி நேரம் வேலை செய்தாலும் 36 கோடி யூனிட் மாத்திரமே தயாரிக்க முடியும் ..... அதுவும் மழை காலம் மற்றும் மேக மூட்டம் என்றால் குறையும் ....


 எனவே சூரிய ஒளி மின்சாரம் வீடுகளில் அல்லது அலுவலங்கங்களில் பயன்படுத்தலாமே தவிர பொருளாதார மேப்பாட்டிர்க்கு தேவையான தொழிற்சாலைகளுக்கு பயன்படுவது கடினமே .... அதனால் தான் என்னவோ....உலகின் மிகப்பெரும் சூரிய ஒளி பண்ணையே சுமார் 250 முதல் 300 MWe மின்சாரம் மாத்திரம் தான் தயாரிக்கிறது


இருந்தாலும் தற்பொழுது விண்வெளியில் இருந்து சூரிய ஒளியை நேரடியாக பூமிக்கு கொண்டு வர விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள் ... பொருது இருந்து பார்ப்போம் இந்த முயற்சிகளின் வெற்றியை ...


மேற்குறிப்பிட்ட Contraints அணுமின் நிலையங்களில் கிடையாது ....
  • அவைகள் பூமிக்கு கேடு விளைவிக்கும் வாயுக்களை வெளியிடுவதில்லை .....
  • சாம்பலை வெளியிடுவதில்லை
  • 24 x 7 மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் கொடுக்கவல்லவை .....
  • மிகுந்த பாதுகாப்பானவை .....
  • Energy security க்கு மிகவும் அவசியமானவை .....
எனவே நாம் அதை வரவேர்ப்பத்ர்க்கு ஏன் தயங்கவேண்டும் .....?

Friday 23 March 2012

திரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..?



கூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி..? என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்கள் படித்து உள்ளனர் .  சுமார் 1600 பக்க பார்வைகள் , இந்த பதிவு மாத்திரம் பார்க்கப்பட்டு உள்ளது.  சிலர் எனது கருத்துகளை ஆதரித்தார்கள் .  சிலர் திரு . உதயகுமாரை நான் தனிப்பட்ட விரோதத்தில் தாக்குகிறேன் என்றும் கருத்து கூறினார்கள் .   நான் மறுபடியும் தெளிவு படுத்த விரும்பும் காரியம் என்னவெனில் எனக்கும் , திரு . உதயகுமாருக்கும் எந்த தனிப்பட்ட கசப்போ , விரோதமோ கிடையாது .  ஆனால் அப்பாவி மக்களின் நம்பிக்கையை பெற்று கொண்ட அவர் பொய்யான பல தகவல்களை சொல்லி மக்களை மேலும் போராட தூண்டுவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது .  எனவே .. இந்த பதிவிலும் திரு . உதயகுமார் சொன்ன ஒரு கருத்து மாபெரும் பொய் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்க விரும்புகிறேன் .


" இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்தும் 40 சதவீதம் மாத்திரமே மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்றும் அதனால் கூடங்குளம் அணுமின் நிலையமும் 400 - 500 MWe மின்சாரம் மாத்திரம் தான் தயாரிக்கும் எனவும்  , அதனால் தமிழகத்திற்கு 160 MWe மின்சாரம் மாத்திரமே கிடைக்கும் என்றும் " ஒரு புதிய ஆனால் பெரிய பொய்யை திரு . உதயகுமார் மக்களிடம் பேசி வருகிறார் .
Source : http://www.youtube.com/watch?v=L72xvNan1Bs&feature=related
Source : http://www.youtube.com/watch?v=HWX-cgu1Y_M&feature=related




மேற்சொன்ன இரு வீடியோ பதிவுகளிலும் திரு. உதயகுமார் இந்த கருத்தை சொன்னதுமன்றி , இதே கருத்தை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என்று தான் நான் சொல்லவேண்டும் .  ஏன் எனில் ... இதே கருத்துகளை புதிய தலைமுறை தொலைகாட்சியில் " புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் " பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பினரும் முன் வைத்தனர் .  எனவே ... இந்த கருத்து பொய் என்று நிரூபிக்க தனி பதிவு எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன்

 கடந்த சில வருடங்களுக்கு  முன்பு  ( அதாவது அணு எரிபொருள் ஒப்பந்தம் செய்யப்படும் வரை ) சில காலம் இந்திய அணுமின் நிலையங்கள் 50 சதவீத மின்சாரம் தான் தயாரித்து வந்தன என்பது உண்மையே ... அதற்க்கு காரணம் இந்திய அணுமின் நிலையங்களின் செயல்பாடு அல்ல மாறாக அணுமின் நிலையங்களுக்கு தேவையான அணு எரிபொருள் பற்றாக்குறையினால் தான் என்பதே உண்மை . ஆனால் அணுசக்தி உடன்பாடு இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்டபிறகு எரிபொருள் தடை இன்றி கிடைக்க ஆரம்பித்து இருப்பதினால் , அவற்றின் உற்பத்தி திறன் பெருமளவில் உயந்து உள்ளது என்பதே உண்மை ....
 பொதுவாக அணுமின் நிலையங்கள் அவற்றின் பாதுகாப்பான  , சுற்று சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தொடர்ச்சியான ( 24 x 7 மணி நேரமும் ) மின்சாரதிர்க்க்காகவே விரும்பப்படுகிறது .  அப்படியானால் உண்மையில் இந்திய அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தியின் அளவு தான் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமே ..


28 10 1969 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த தாராபூர் முதல் அலகு 160 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம் 2008 - 2009 ல் 1007 மில்லியன் யூனிட் ( 72 % ) மின்சாரமும்  , 2009 - 2010 ல் 1199 மில்லியன் யூனிட் ( 86 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1142 மில்லியன் யூனிட் ( 81 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1252 மில்லியன் யூனிட் ( 97 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....


28 10 1969 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த தாராபூர் இரண்டாம் அலகு 160 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம் 2008 - 2009 ல் 1349  மில்லியன் யூனிட் ( 96 % ) மின்சாரமும்  , 2009 - 2010 ல் 1251  மில்லியன் யூனிட் ( 89 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1273 மில்லியன் யூனிட் ( 91 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1235 மில்லியன் யூனிட் ( 96 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....



01 04 1981 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த ராஜஸ்தான் இரண்டாம் அலகு 200 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம்  2009 - 2010 ல் 950  மில்லியன் யூனிட் ( 54 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1720 மில்லியன் யூனிட் ( 98 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1655மில்லியன் யூனிட் ( 103 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....

Sources : NPCIL Website...


  மாத்திரமல்ல இரண்டு நாளுக்கு முன்னால் இந்திய அணுமின் நிலையங்கள் ஒரு நாளில் உற்பத்தி செய்த மின் அளவு (MWe ) திரட்டி கொடுக்கப்பட்டு உள்ளது 

இடம்
அலகு
திறன் MWe
உற்பத்தி MWe
%
தாராப்பூர்
1
160
162
101.25%
2
160
160
100.00%
3
540
0
0.00%
4
540
460
85.19%
ராஜஸ்தான்
1
100
0
0.00%
2
200
222
111.00%
3
220
233
105.91%
4
220
234
106.36%
5
220
234
106.36%
6
220
236
107.27%
கக்ராபாரா
1
220
225
102.27%
2
220
228
103.64%
கைகா
1
220
170
77.27%
2
220
170
77.27%
3
220
171
77.73%
4
220
155
70.45%
கல்பாக்கம்
1
220
161
73.18%
1
220
155
70.45%
நரோரா
1
220
160
72.73%
1
220
157
71.36%
மொத்தம்
20
4780
3693
77.26%





 TAPS 3 & RAPS 1 தவிர்த்து 
18
4140
3693
89.20%

 தாராபூர் 3 ம் அலகு மற்றும் ராஜஸ்தான் முதல் அலகு போன்றவை பராமரிப்பிற்க்காய் நிறுத்தப்பட்டு உள்ளது .  அப்படி எனில் இந்திய அணுமின் நிலையங்களின் மொத்த உற்பத்தி அளவு 89.20 % என்பது எவ்வளவு ஆணித்தரமாக உறுதியாகி உள்ளது .  



ஏப்ரல் 2011 முதல் பிப் 2012 வரை மொத்தமுள்ள 20 அணுமின் நிலையங்கள் மூலம் 29596 மில்லியன் யூனிட் ( Capacity Factor 79 % , Availablity Factor 91 % )  என கூறப்பட்டு உள்ளது .  source : http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx 


 ஏற்கனவே இருக்கும் அணுமின் நிலையங்களே சராசரியாக 80 % மேல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொழுது ,  நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு உள்ள மூன்றாம் தலைமுறை அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் 400 - 500 MWe மின்சாரம் தான் தரும் என்று திரு . உதயகுமார் & பூவுலகின் நண்பர்கள் சொல்லுவது சுத்த பொய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல ...?


பள்ளி செல்லும் குழந்தைகளின் மனதை கெடுத்து அவர்களை போராட தூண்டுகிறார் திரு . உதயகுமார் என்ற எனது சென்ற பதிவின் வாதத்தை பல ஏற்று கொள்ளாத பொழுது , அப்படி பட்ட ஒரு வீடியோ பதிவை நான் இணைத்து இருக்கிறேன் பாருங்கள்



இந்த வீடியோவின்  முடிவில் பாருங்கள் .  ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் சொல்லுவதை நினைத்து தாங்களே சிரிப்பதை .... தாங்கள் என்ன சொல்லுகிறோம் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத இந்த இளம் தலைமுறையை சீரழிக்கும் திரு . உதயகுமாரை சமூகம் மன்னிக்காது என்பது எனது திண்ணமான கருத்து