கதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த போது , எல்லாரும் கதிரியக்கம் என்ற Radiation யை குறித்து மிகவும் பயந்து பேசினார்கள். என்னுடைய முறை வந்தபோது நான் பொதுவாக அவர்களிடம் ஒரு கேள்வியை கேட்டேன் .
கதிரியக்கம் ( Radiation ) என்றால் என்ன என்று நினைக்கிறீர்கள் ? அவர்கள் அளித்த பல பதில்களை பார்த்து நான் கொஞ்சம் வியந்துதான் போனேன். ஏன் எனில் ஒருவர் சொன்னார் Radiation என்பது விஷம் என்றார் ( அவர் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார்) . இன்னும் ஒருவர் சொன்னார் Radiation என்பது ஒரு வாயு ( Gas ) , அது மக்களை கொல்லும் சக்தி படைத்தது என்று. அன்று தீர்மானித்தேன் இந்த radiation என்ற கதிரியக்கத்தை குறித்து ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று. புரிந்து கொள்ளுவதற்கு கொஞ்சம் கடினமான பகுதி என்றாலும் , எளிதில் விளங்ககூடிய அளவில் இந்த கட்டுரையை எழுத நான் யாசிக்கிறேன்
Radiation அல்லது கதிரியக்கம் என்றால் என்ன ?
இயற்பியலின் படி கதிரியக்கம் என்பது ஒரு ஊடகம் அல்லது பரந்த வெளியாக செல்லும் ஆற்றல் அல்லது அலைகள் அல்லது சக்திமிகுந்த சிறு துகள்கள் என்று வரையறுக்கபடுகிறது.
இந்த கதிரியக்கம் அயனியாக்க ( Ionizing ) மற்றும் அயனியாக்கம் அல்லாத ( Non Ionizin ) என்று இரு வகைப்படும்.
இதில் அயனியாக்க கதிரியக்கம் ( Ionizing Radiation ) என்பதை குறித்த அச்சமே நிலவுவதால் அதை குறித்தே இந்த கட்டுரையில் எழுத அதிகம் கவனம் கொண்டுள்ளேன். இந்த வகையில் கீழ்க்கண்ட கதிரியக்கங்கள் வருகிறது...
1 . ஆல்பா கதிர்கள் ( Alpha Rays )
2 பீட்டா கதிர்கள் ( Beta Rays )
3 காமா கதிர்கள் ( Gamma Rays )
4 நியூட்ரான் கதிர்கள் ( Neutraan Rays )
5 X கதிர்கள் ( X Rays )
6 காஸ்மிக் கதிர்கள் ( Cosmic Rays )
இந்த கதிர்கள் ஊடுருவி செல்லும் சக்தி படைத்ததால் மனுக்குலத்திற்கு தீங்கு விளைவிக்கவும் இவைகளால் முடியும் என்ற என் கருத்தை நண்பர்கள் ஏற்று கொண்டவுடன் என்னை பார்த்து கேட்ட கேள்வி என்ன தெரியுமா ?
அதனால் தான் சொல்லுகிறோம் அணு மின் நிலையங்கள் வேண்டாம் என்று .
நான் அவர்களிடம் கேட்டேன் கதிர்வீச்சின் பிறப்பிடமே அணுமின் நிலையங்கள் தான் என்று நினைக்கிறீர்களா ?
உடனே கோரசாக பதில் வந்தது " ஆம் என்று "
இந்த கதிரியக்கங்கள் பெருமளவு இயற்கையாகவும் , கொஞ்சம் செயற்கையில் இருந்தும் மனிதனுக்கு கிடைக்கிறது. என்ற என் பதிலுக்கு ஒரு சேர வியப்பும் , எதிர்ப்புகளும் எழும்பியதால் இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன்.
Radiation அல்லது கதிரியக்கம் என்பது சிவேர்ட் ( Sievert ) என்ற அலகினால் அளக்கப்படுகிறது. அதனுடைய பழைய அளவு ரெம் ( Rem ) என்ற அலகினால் அளக்கப்பட்டது. இந்த அலகுகளின் மாற்றம் குறித்து கீழே காணுங்கள்
1 ரெம் (Rem) = 0 .01 சிவேர்ட் = 10 மில்லி சிவேர்ட்
1 எம்ரெம் (mrem ) = 0 .01 மில்லி சிவேர்ட் = 10 மைக்ரோ சிவேர்ட்
1 சிவேர்ட் = 100 ரெம்
1 மில்லி சிவேர்ட் = 100 mrem = 0.1 ரெம்
1 மைக்ரோ சிவேர்ட் = 0.1 mrem
(நன்றி : http://en.wikipedia.org/wiki/Sievert )மனிதன் பெறுகின்ற கதிரியக்கத்தில் பெருமளவு , அதாவது 81 % இயற்கையில் இருந்து பெறுகிறான். அந்த 81 சதவீதம் இப்படி பிரிக்க படுகிறது. இயற்கையாக பூமியின் வளிமண்டலத்தில் நிறைந்துள்ள ராடான் 55 % , இயற்கையாக கடல் , மண் , தாது பொருட்கள் இவற்றில் இருந்து 15 சதவீதம் மற்றும் இயற்கையாக மனிதன் உடலுக்குள் ( Tritium , Carbon - 14 , மற்றும் பொட்டாசியம் - 40 ) 11 சதவீதம் . இது அநேகம் பேருக்கு ஆச்சரியமாக தான் இருக்கும் என்பதி சந்தேகம் இல்லை .
மீதம் 19 சதவீத கதிரியக்கத்தை மனிதன் செயற்கை மூலமாக பெறுகிறான் . அதாவது மருத்துவ சேவைகளினால் 15 சதவீதமும் , நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களினால் ( டிவி , கம்ப்யூட்டர் , மற்றும் பல ) 3 சதவீதமும் , மீதம் 1 சதவீதம் அணு மின் நிலையங்கள் , ஆகாய விமான பிரயாணங்கள் போன்றவற்றின் மூலம் கிடைக்கிறது என்பது நமது எண்ணங்களை எல்லாம் தவிடு பொடியாக்குகிறது அல்லவா .?
இப்பொழுது யாரோ ஒருவர் கேட்கிறார்கள் மருத்துவ துரையின் மூலமாக கதிரியக்கம் நமக்கு கிடைக்குமா ..? எப்படி இதை நம்ப முடியும் என்று ..? நம்புங்கள் .. சில ஆதாரங்களை தருகிறேன் ..
மார்பக எக்ஸ்ரே ( 14 x 17 இன்ச் ) = 15 mrem
பல் எக்ஸ்ரே ( 3 இன்ச் சுற்றளவு ) = 300 mrem
முதுகு தண்டு எக்ஸ்ரே ( 14 x 17 இன்ச் ) = 300 mrem
thyroid uptake study = 28000 mrem
Thyroid Oblation = 18000000 mrem
ஒரு நாளைக்கு நீங்கள் 20 சிகரெட் புகைப்பீர்கள் ஆனால் 280 mrem / day கதிரியக்கத்தை நீங்கள் பெறுகிறீர்கள் என்றபொழுது அநேகரின் முகத்தில் ஈயாடவில்லை.
ஒரு முறை 30000 அடி உயரத்தில் பறக்கும் ஒருவர் , தன் ஆயுள் காலம் முழுவதும் அணுமின் நிலையத்தில் வேலைபார்க்கும் ஒரு தொழிலாளியை விட கதிரியக்கத்தை அதிகமாக பெறுகிறார் ( நன்றி : The Upside Down , Book of Nuclear Power , Page No : 148 , Written by . Mr Jha )
நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் , அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன ( கொஞ்சம் http://www.ciol.com/Networking/News-Reports/Mobile-tower-radiation-fear-grips-Delhi/137567/0/ படியுங்களேன் )
முடிவுரை : இன்னும் இவைகளை குறித்து எழுத வேண்டுமெனில் ஏராளம் இருக்கிறது , ஆனாலும் 99 சதவீத கதிரியக்கத்தை நாம் தாராளமாக ஏற்று கொண்டு உள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம் என்றபோது என் நண்பர்கள் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தலைகளை அசைத்தார்கள்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆக்கப்பூர்வமான் கேள்விகளை தொடுக்கலாமே .. நாம் விவாதிப்போம் ... நன்றி
தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html
நண்பரே... இது போன்ற அறிவியல் செய்திகளை பதிவுசெய்வது மிக அவசியமானது. பதிவு அருமையாக இருந்தது.
ReplyDeleteமேன்மேலும் பல அறிவியல் செய்திகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
@ அருள் :
ReplyDeleteநண்பரே , தங்கள் வருகைக்கு மிக்க நன்றி
@ அசோக் குமார் : தங்களை போன்ற விஞ்ஞானிகளின் ஊக்கம் எனக்கு மிகுந்த எழுச்சியை கொடுக்கிறது.
ReplyDeleteதொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
படித்தவரை அருமையாக இருந்தது.ஆனால் எனக்கு இது போதவில்லை . இதை பற்றி மேலும் ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteஅன்புடன் சூர்ய பிரகாஷ்
@ surya prakash : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteதங்களின் விருப்பபடி இன்னும் ஒரு பதிவு எழுதுகிறேன். ஆனால் கொஞ்சம் பணிச்சுமை இருப்பதால் ஒரு இரண்டு நாட்களாவது ஆகும் . கொஞ்சம் பொறுத்து கொள்வீர்களா ?
தங்களின் ஆர்வம் என்னை ஊக்குவிக்கிறது . நன்றி
நிச்சயமாக நண்பரே ..........
ReplyDeleteData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
ReplyDeletehttp://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
பயனுள்ள பார்வை...
ReplyDelete//நாம் எல்லாரும் கையில் வைத்திருக்கும் அலைபேசிகளின் கதிரியக்கமும் , அவற்றிக்கு பயன்படும் அலைபேசி கோபுரங்களும் கதிரியக்கத்தை தாராளமாக நமக்கு தருகின்றன//
வருத்தமான செய்தி தான் நன்பரே..
வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.
ReplyDelete@ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
ReplyDelete// வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .
நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
வணக்கம் நன்பரே....
ReplyDeleteஒரு வருடத்திற்கு கதிரியக்கத்தில் வேலை செய்யும் அதிகாரி சராசரியாக 20 மி. சிவெர்ட் வரை வாங்கலாம், அது பொது மக்களுக்கு 1மி.சி. ஆகும்....
ஆனால் இது ஒழுங்காக பராமறிக்கப் படுகிறதா.....
தொகாட்டிக் விளைவு மற்றும் திடர்மினிக் விளைவு பற்றி மறைக்கப்பட்டிருக்கிறதே
இந்த கதிரியக்க எல்லைகளை மீறினால் என்ன விளைவு ஏற்படும்... உடனடி விளைவு ... நீண்ட கால விளைவு என்றால் என்ன..... கதிரியக்கத்தால் ஏற்படும் நோய்கள் என்று எதுவுமே இல்லையா.....
அணுக் கழிவுகளை எவ்வாறு வெளியேற்றுவது.. கழிவுகளின் வெளியேற்றத்தின் காற்று மாசடைவதில்லையா
வணக்கம் நன்பரே....
ReplyDeleteஒரு வருடத்திற்கு கதிரியக்கத்தில் வேலை செய்யும் அதிகாரி சராசரியாக 20 மி. சிவெர்ட் வரை வாங்கலாம், அது பொது மக்களுக்கு 1மி.சி. ஆகும்....
ஆனால் இது ஒழுங்காக பராமறிக்கப் படுகிறதா.....
தொகாட்டிக் விளைவு மற்றும் திடர்மினிக் விளைவு பற்றி மறைக்கப்பட்டிருக்கிறதே
இந்த கதிரியக்க எல்லைகளை மீறினால் என்ன விளைவு ஏற்படும்... உடனடி விளைவு ... நீண்ட கால விளைவு என்றால் என்ன..... கதிரியக்கத்தால் ஏற்படும் நோய்கள் என்று எதுவுமே இல்லையா.....
அணுக் கழிவுகளை எவ்வாறு வெளியேற்றுவது.. கழிவுகளின் வெளியேற்றத்தின் காற்று மாசடைவதில்லையா
Mr.Irudhayam , try to write scientific articles more
ReplyDelete