Wednesday, 9 November 2011

திரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் .? - ஒரு வேதனை குமுறல்


கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் .  இந்த சூழ்நிலையில் இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானியும்  , முன்னாள் குடியரசு தலைவருமான திரு. அப்துல் கலாம் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து " கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது " என்று அறிக்கை வெளியிட்டார் . 

இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களில் பதிவுலகம் அவருக்கு கொடுத்த கொடுமையான் சில பட்டங்களை கண்டு மிகவும் அதிர்ந்து போன இந்திய குடிமக்களில் நானும் ஒருவன் .  வெகு சிலரே இந்த மாதிரி பதிவுகளை எதிர்த்தபோதிலும்  , அநேகர் அற்புதம் , அதிசயம் என்று அந்த பதிவுகளை பாராட்டியிருப்பது கொடுமையிலும் கொடுமை .


 ஒரு பதிவர்  எழுதியுள்ளார்  அப்துல் கலாம் ஒரு கோமாளி என்று .  அந்த பதிவர் பெரும் அறிவாளியாக தான் இருக்கமுடியும் .

1981 ல்   -  பத்ம பூசன்
1990 ல்  -   பத்ம விபூஷன்
1997 ல்  -  பாரத ரத்னா
2009 ல்   - அமெரிக்காவின் ஹூவர் மெடல்
இப்படி பல பதக்கங்களும் ,  விருதுகளும் அவரின் அறிவியல் அறிவுக்காக , அவர் ஆற்றிய தேசப்பணிக்காக கொடுக்கப்பட்டிருக்கிறதே  , அவரை பார்த்தா கோமாளி என்று சொல்லுகிறீர்கள் ...?


இன்னும் ஒரு பதிவர் சொல்லுகிறார் , "  இவரின் உபதொழில் கூலிக்கு மாரடிப்பது என்று "
இப்படி கேள்வி கேட்பவர் எந்த கூலிக்கு மாரடிப்பவர் என்று நானும் கேட்டால் அது மிகவும் அசிங்கம் .  வாங்குகிற சம்பளத்திற்கு ஒழுங்கா வேலை பார்க்காமல் அரசை ஏமாற்றி சம்பளம் வாங்கி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வாழ்கிற பதர்களுக்கு மத்தியில் நாட்டிற்காக உண்மையாய் உழைத்து  நாட்டின் பாதுகாப்பு துறையிலும் ( DRDO )  , விண்வெளி துறையிலும் ( ISRO ) பணியாற்றி இந்தியாவின் முதல் செயற்கை கோள் செலுத்தும் வாகனத்தின் ( SLV ) தலைவராய் விளங்கினாரே ,  அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " கூலிக்கு மாரடிப்பவர் என்று "


 இன்னும் ஒரு பதிவர் கருத்து சொல்லி உள்ளார் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது "
இந்தியாவின் குடியரசு தலைவர் மாளிகையை குழந்தைகளுக்காக திறந்து விட்ட தலைவர் என்று நாளேடுகள் செய்தி வெளியிட்ட போது நீங்கள் பார்க்கவில்லையா .....?   சாதாரண MLA அடிபொடிகளுடன் ரகளை பண்ணும் போது ,  முதல் குடிமகனாய் இருந்த போதும் எளிமையாய் இருந்தாரே , அவரை பார்த்து நீங்கள் கேட்கிறீர்கள் " ஜனாதிபதி போதை இவரை மாற்றிவிட்டது " என்று 


காரணம் இவர் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று சொல்லி விட்டாராம் ..  அதனால் இவருக்கு அணு அறிவியலில் அறிவு இல்லையாம் ... 

ஏம்பா ...  அக்னி  மற்றும் ப்ரித்வி போன்ற ஏவுகணைகளை பறக்க விட்டு  ... உங்களை போல நாட்டின் மானத்தை பறக்க விடாமல் ,  தேசத்தின் பெருமையை நிலை நிறுத்தினாரே , அப்பொழுது ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று ...." 


 2020 ல் இந்தியா எல்லாவிதங்களிலும் தன்னிறைவு பெற்று உலகத்தில் முதல் இடத்திற்கு வரும் என்று  INDIA 2020 என்ற புத்தகத்தில் சொன்ன போது தேசமே அவரை கொண்டாடினதே அப்பொழுது நீங்கள் ஏன் சொல்லவில்லை இவருக்கு அறிவு இல்லை என்று 

 பொக்ரானில் அணு சோதனையை நடத்தின போது உலகமே இந்தியாவை வியப்பாய் நோக்கி பார்க்கும் போது அவரை எல்லாரும் பாராட்டினார்களே ,  அப்பொழுது ஏன் சொல்லவில்லை அவருக்கு அறிவு இல்லை என்று ...

Phd (Political சயின்ஸ்)  படித்தவர் தான் உங்கள் அணு விஞ்ஞானி போலவும் திரு , அப்துல் கலாம் ஒன்றும் அறியாதவர் போலவும் கதை விடும் நண்பர்களே ,  உங்களால் அவரை பாராட்ட முடியவில்லை என்றாலும் தயவு செய்து அவரை இகழாதீர்கள் ...

வானத்தை நோக்கி துப்புகிறவர்களின் ( உங்களின் ) முகத்தின் மேல் எச்சில் விழுவதை அறியாமல்  , இச்சகம் பேசும் நண்பர்களே  , எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான் " நீங்கள் இந்தியர்கள் தானா ...?" 

75 comments:

 1. மிக சரியாக சொன்னீர்கள்! உடல் நிலை சரியில்லாததால் இரண்டுநாட்களாக பதிவுலகம் வரவில்லை! சந்திரனை பார்த்து நாய் குரைத்த கதைதான் இந்த பதிவுலக வாசிகளின் கருத்து!

  ReplyDelete
 2. நாங்கள் இந்தியர்கள் அல்ல. தமிழர்கள். இந்தியா தமிழர்கள் சாவில் மகிழும் நாடு. தமிழ் மீனவர்களா, கூடங்குளம் வாழ் மக்களா, தமிழ் இன உறவுகளா கவலைப்படமாட்டான் இந்தியன். ஆனால் ஒரு சீக்கியனுக்கு ஆஸ்திரியாவில் பிரச்சினை என்றால் ஓடுவான். வங்காளனுக்கு ஆசுடிரலியாவில் பிரச்சினையா ஓடுவான். இந்தியன் என்று சொல்லி ஏமாறாமல் இருக்க முயற்சியுங்கள். போபால் சாவுக்கு ஒன்னும் புடுங்காத இந்தியா கூடங்குளத்தில் என்ன பண்ண போகுது. கலாம் ஒரு வன்முறை அரசு சார் அதிகாரி. அணுகுண்டு உற்பத்தியாளன். அரச வன்முறை அடித்தட்டு மக்களுக்கு எதிரானதே.

  ReplyDelete
 3. @ தளிர் : உண்மை தான் நண்பரே

  ReplyDelete
 4. @ செல்வராஜ் : நண்பரே .. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
  மிக்க உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகளை அள்ளி கொட்டுகிறீர்கள் .

  // இந்தியா தமிழர்கள் சாவில் மகிழும் நாடு.//
  மிக தவறான கருத்தை நீங்கள் சொல்லி உள்ளீர்கள் . காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பது இந்தியா . அதில் யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை .

  திரு . அப்துல் கலாம் என்பவர் கூட தமிழர் தான் என்பதில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என நினைக்கிறேன் . உங்கள் பார்வையில் தவறான தகவல் திணிக்கப்பட்டுள்ளது என்று தான் நினைக்கிறேன் . அரசின் திட்டங்கள் மக்களை அழிப்பதற்கு அல்ல மக்களை வாழவைப்பதற்கு தான் என்பதி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

  நன்றி

  ReplyDelete
 5. நண்பரே!

  உங்க பட்டியல்ல என் பதிவு விடுபட்டிருக்கு . சேர்த்து கிளிங்க.

  http://kavithai07.blogspot.com/2011/11/blog-post_08.html

  ReplyDelete
 6. ஒரு நல்ல மனிதரை கேவலமாக பேசும் நண்பர்களுக்கு சாட்டையடி பதிவு .. நன்றி

  ReplyDelete
 7. இந்தியா:
  170 லிட்டர் கொண்ட பீப்பாய் கச்சா எண்ணெய் 160 டாலர் வித்தபோதும் பெட்ரோல் விலை குறையலை. இப்ப 90 டாலர் விக்கும் போதும் குறையலை. அம்பானி பணம் தான் இந்தியாவில் விளையாடுது. அடித்தட்டு மக்கள் நீங்களும் நானும் எதிர்த்து குரல் கூட கொடுக்க முடியாதுங்க. கேட்டா இறையான்மைன்னு சொல்லி உள்ளே போற்றும் இந்தியா. ஒரிசாவிலும் ஜார்கன்ட்டிலும் வாழும் இடத்துக்காக போராடும் மலை வாழ் மக்களை தீவிரவாதின்னு உள்ளே போடும் அரசு, அங்குள்ள இரும்பை நிலக்கரியை வெளிநாட்டுக்காரன் கொள்ளை அடிக்க அனுமதி கொடுக்கும் இந்தியா அரசு. 5oo பேர் தமிழ் மீனவர்கள் செத்து போனார்களே, மன்னிக்கணும், கொன்னு போட்டார்களே ஒரே ஒரு தடவை வாய் திறந்திருக்குமா இந்த இந்தியா. இது தமிழர்கள் இறந்தார்கள் என்பதால் சொல்லுகிறேன் என நினைக்க வேண்டாம். மணிப்பூரில் ராணுவம் அப்பாவி மக்களை கொன்று பாலியல்
  பலாத்காரம் செய்ததால் 12 வருடம் உண்ணாவிரதம் இருந்தாரே அம்மாநில பெண் போராளி. இப்படி வரலாறு அதிகம் உண்டு நண்பரே. அப்துல் கலாம் தமிழ் நாட்டில் பிறந்த தமிழர்தான். ஆனால் மக்களை அழிக்கும் அணுவுலை, அணுகுண்டு, ஏவுகணை, சாதாரண மக்களுக்கு பயன்பாடு கிடைக்காத செயற்கைக்கோள் தொழில் நுட்பம், இவைகள் தவிர விலைவாசி பத்தியோ, குஜராத் இசுலாமியர் படுகொலை செய்யப்பட்டதையோ, கோடி கோடியாய் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு கருப்பாவதையோ பேசாத இவரை எப்படி மாமனிதராக, அறிவியலாளராக ஏற்றுக்கொள்வது. மன்னிக்கவும் நண்பரே. ஆதங்கத்தை அதிகமாய் எழுதிவிட்டேன்.

  ReplyDelete
 8. @ கூடல் நண்பன் : தங்கள் வருகைக்கும் , ஊக்கதிற்க்கும் நன்றி

  ReplyDelete
 9. @ செல்வராஜ் : நண்பருக்கு வணக்கம் . தங்கள் பதிலுரைக்கு நன்றி ..

  நீங்கள் மிகவும் உணர்ச்சி வேகத்தில் பேசியுள்ள இந்த கருத்துரையில் பெரும்பாலான காரியங்கள் இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத காரியங்கள் ( இந்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகள் பற்றி ) . இவைகளை குறித்து கொஞ்சம் ஆராய்ந்து நான் ஒரு பதிவு எழுதுகிறேன் ... ஆனால் உங்கள் கடைசி வரிகள் இந்த பதிவுக்கு சம்பந்தபட்டவை .

  // அப்துல் கலாம் தமிழ் நாட்டில் பிறந்த தமிழர்தான். ஆனால் மக்களை அழிக்கும் அணுவுலை, அணுகுண்டு, ஏவுகணை, சாதாரண மக்களுக்கு பயன்பாடு கிடைக்காத செயற்கைக்கோள் தொழில் நுட்பம், இவைகள் தவிர விலைவாசி பத்தியோ, குஜராத் இசுலாமியர் படுகொலை செய்யப்பட்டதையோ, கோடி கோடியாய் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு கருப்பாவதையோ பேசாத இவரை எப்படி மாமனிதராக, அறிவியலாளராக ஏற்றுக்கொள்வது. மன்னிக்கவும்//

  சாதாரண மக்களுக்கு பயன்படாத செயற்கை கோள் தொழில்நுட்பம் என்று சொல்லி இருக்கிறீர்கள் . கொஞ்சம் ஆச்சரியம் தான் . நாம் இப்பொழுது பதிவு எழுதுகிறோமே ( இன்டர்நெட் ) , தொலைகாட்சி பார்க்கிறோமே , தொலை பேசி பேசுகிறோமே , இதெல்லாம் செயற்கை கோள்கள் மூலம் என்பதை தாங்கள் அறிந்திருப்பீர்கள் .

  திரு. அப்துல் கலாம் அரசியல்வாதியாய் இருந்தால் நீங்கள் சொன்னது போல படுகொலை , கருப்பு பணம் ஆகியவற்றை பேசியிருப்பார் . அவர் விஞ்ஞானி என்பதால் அறிவியல் சம்பந்தப்பட்ட அணுமின் நிலையம் பற்றியும் அதன் பாதுகாப்பு பற்றியும் பேசியிருக்கிறார் . ஆனால் நீங்கள் கருப்பு பணம் மற்றும் அரசியல் பேசுபவர்களை தான் அறிவியலாராக ஏற்று கொள்ளுவேன் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது . அதான் இன்றைய குழப்பங்களுக்கு காரணம் . மக்கள் அரசியல் பேசும் தலைவர்களை அறிவியல் விஞ்ஞானிகள் எனவும் , அறிவியல் விஞ்ஞானிகளை முட்டாள்கள் எனவும் நினைப்பது .

  நன்றி

  ReplyDelete
 10. "கரம்சந்த் காந்தி = மஹாத்மா

  அன்னா ஹஜாரே = ஒரு பில்லியன் மக்கள காப்பாத்த வந்தவரு

  அப்துல் கலாம் = எல்லாம் தெரிந்த நல்லவரு"

  இந்திய ஆட்டுமந்தை மனநிலையில் இருந்து வெளியே வந்து யோசிங்க

  ReplyDelete
 11. இருதயம்

  நீங்க என்ன நினச்சிகிட்டு பண்றீங்கன்னு எனக்கு தெரியல, தமிழ் மக்கள் எண்ணத்திற்கு எதிரா பதிவு போடுறீங்க, நாங்க எதாவது சொன்னா இந்தியன் இல்லையான்னு சொல்றீங்க, இந்தியன்னு சொன்ன ஏன் இப்படி தமிழ்நாட்டுக்கு நடக்கதுன்னு கேட்டா? தமிழ் உணர்வு பத்தி பேசுறீங்க, இல்ல இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத விசயம் அதுன்னு பத்தி சொல்லாம பதுங்குறீங்க. உங்களைப் போன்ற அடிமைகளும், உண்மை இதுதான் என்று தெரிந்தாலும் நமது பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் தான் இந்த இந்தியன் என்கிற முகமூடிக்கு காரணம்

  கேள்வி கிட்ட பதில் சொல்லணும் சார், இல்லன்னா இப்படி பதிவு போடக் கூடாது. இங்க யாரும் முட்டாள் இல்ல, உங்க பதிவு மூலச்லவையில் சிக்க

  போங்க போய் இந்தியன்ற பெயர்ல நீங்க எத சொன்னாலும் கண்ண மூடிகிட்டு கேட்க எதாவது ஒன்னு ரெண்டு அப்பாவி தமிழன் இருப்பான் அவன்கிட்ட சொல்லுங்க.

  உங்களமாதிரி ஆளுங்க என்ன எழுதினாலும் ஒன்னும் பண்ண முடியாது. அல்லனப் பட்ட தினமலரே முழிபிதிங்கி நிக்குறப்போ நீங்க என்ன சார் மூலச் சலவைக்கு முயற்சி பண்றீங்க?

  ReplyDelete
 12. @இருதயம்

  நீங்க என்ன நினச்சிகிட்டு பண்றீங்கன்னு எனக்கு தெரியல, தமிழ் மக்கள் எண்ணத்திற்கு எதிரா பதிவு போடுறீங்க, நாங்க எதாவது சொன்னா இந்தியன் இல்லையான்னு சொல்றீங்க, இந்தியன்னு சொன்ன ஏன் இப்படி தமிழ்நாட்டுக்கு நடக்கதுன்னு கேட்டா? தமிழ் உணர்வு பத்தி பேசுறீங்க, இல்ல இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத விசயம் அதுன்னு பத்தி சொல்லாம பதுங்குறீங்க. உங்களைப் போன்ற அடிமைகளும், உண்மை இதுதான் என்று தெரிந்தாலும் நமது பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் தான் இந்த இந்தியன் என்கிற முகமூடிக்கு காரணம்

  கேள்வி கிட்ட பதில் சொல்லணும் சார், இல்லன்னா இப்படி பதிவு போடக் கூடாது. இங்க யாரும் முட்டாள் இல்ல, உங்க பதிவு மூலச்லவையில் சிக்க

  போங்க போய் இந்தியன்ற பெயர்ல நீங்க எத சொன்னாலும் கண்ண மூடிகிட்டு கேட்க எதாவது ஒன்னு ரெண்டு அப்பாவி தமிழன் இருப்பான் அவன்கிட்ட சொல்லுங்க.

  உங்களமாதிரி ஆளுங்க என்ன எழுதினாலும் ஒன்னும் பண்ண முடியாது. அல்லனப் பட்ட தினமலரே முழிபிதிங்கி நிக்குறப்போ நீங்க என்ன சார் மூலச் சலவைக்கு முயற்சி பண்றீங்க?

  ஹி ஹி ஹி.............

  ReplyDelete
 13. @ Siva : தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 14. சிவா

  அவரு யோசிக்க வேணாமா? நம்பள யோசிக்க வைக்கிறாராம்?

  ReplyDelete
 15. விஞ்ஞானியா இருந்த புத்திசாலிய இருக்கனும்ன்னு உங்களுக்கு யாரு சொன்னது இருதயம்?

  ReplyDelete
 16. @ நிவாஸ் : நண்பருக்கு வணக்கம் . தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..
  // தமிழ் மக்கள் எண்ணத்திற்கு எதிரா பதிவு போடுறீங்க, நாங்க எதாவது சொன்னா இந்தியன் இல்லையான்னு சொல்றீங்க, இந்தியன்னு சொன்ன ஏன் இப்படி தமிழ்நாட்டுக்கு நடக்கதுன்னு கேட்டா? தமிழ் உணர்வு பத்தி பேசுறீங்க, இல்ல இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாத விசயம் அதுன்னு பத்தி சொல்லாம பதுங்குறீங்க. //

  கொஞ்சம் உணர்ச்சிவசப்படாமல் என் பதிவையும் நண்பர் செல்வராஜ் பதிலையும் படியுங்கள் . நண்பர் செல்வராஜ் பெட்ரோல் விலையேற்றம் பற்றியும் , மணிப்பூர் மாநில மக்கள் ராணுவத்தால் கொடுமை செய்யப்படுவதாகவும் , ஓடிசாவின் நிலை பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார் . இது மத்திய அரசின் பல்வேறு நிலைப்பாடுகள் எனவே தான் இதற்க்கு தனி பதிவு கொடுக்கலாம் என்று நினைத்தேன் . இது தவறா ...?

  தமிழ் மக்கள் எண்ணத்திற்கு எதிரா பதிவு போடுறீங்க என்று கேட்டீர்கள் . இது மிகவும் தவறான எண்ணம் . நீங்கள் சொல்லுவது எப்படி இருக்கிறது என்றால் முழு தமிழ்மக்களும் உங்களுடைய கருத்து உடையவர்களாய் இருக்கிறார்கள் எனவும் நான் மாத்திரம் மாற்று எண்ணம் உடையவனாய் இருக்கிறேன் எனவும் நினைக்கிறீர்கள் . என்னுடைய் பதிவுகள் தமிழ் மக்களுக்கு விரோதமானது அல்ல , சில தவறான தகவல்களுக்கும் , சில குறும்புகார பதிவர்களுக்கும் எதிரானது .. உங்களுக்கு தெரியுமா , போராட்டம் நடக்கும் கூடங்குளம் பகுதியில் கூட சமீபத்தில் நடந்த தேர்தலில் போராட்ட குழுவினால் நிறுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார் எனவும் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக உள்ள ஒரு நபருக்கு 25 % சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன் . எப்படி நீங்கள் சொல்ல முடியும் நான் அனைவருக்கும் எதிரான கருத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி ....?

  // உங்களைப் போன்ற அடிமைகளும், உண்மை இதுதான் என்று தெரிந்தாலும் நமது பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பயம் தான் இந்த இந்தியன் என்கிற முகமூடிக்கு காரணம்//
  உங்களை நினைத்தால் கொஞ்சம் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்தியன் என்ற வார்த்தையை நான் முகமூடியாக பயன்படுத்த அவசியம் இல்லை ஏன் எனில் நான் உண்மையில் பிறப்பாலும் உணர்வாலும் இந்தியன் தான் . நீங்கள் சொன்னது போல அடிமை தான் . உண்மைக்கு அடிமை . பிழைப்பிற்கு பங்கம் வந்துவிடும் என்று நீங்கள் சொல்லும் அர்த்தம் எனக்கு எந்த விதத்தில் பொருந்தும் என்பது எனக்கு கொஞ்சம் விளங்கவில்லை .

  // உங்களமாதிரி ஆளுங்க என்ன எழுதினாலும் ஒன்னும் பண்ண முடியாது. அல்லனப் பட்ட தினமலரே முழிபிதிங்கி நிக்குறப்போ நீங்க என்ன சார் மூலச் சலவைக்கு முயற்சி பண்றீங்க? //
  பதிவு எழுதுவது மூளை சலவை செய்வதற்கு என்ற உண்மை இப்பொழுது நீங்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டேன் . அதனால் தான் பல ஆதாரமில்லாத பதிவுகளை எழுதி , மக்களை மூளை சலவை செய்து பயமுறுத்தி வைத்துள்ளீர்கள் என நான் கூறினால் நீங்கள் ஏற்று கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன் .

  தங்களின் கேள்விகள் என்னை இன்னும் ஊக்குவிக்கிறது . தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

  ReplyDelete
 17. @ நிவாஸ் : நண்பரே ... எல்லா புத்திசாலியும் விஞ்ஞானி அல்ல ஆனால் எல்லா விஞ்ஞானியும் புத்திசாலி தான் ..

  ReplyDelete
 18. ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் தமிழர்கள் இலங்கை படையினர் மற்றும் தற்போது இலங்கை மீனவர்களால் கூட தாக்க படுகிறார்கள். அப்துல் கலாம் இது வரை இதை பற்றி வாயே திறக்க வில்லை.

  ReplyDelete
 19. நாங்கள் இந்தியர்கள் அல்ல. தமிழர்கள். இந்தியா தமிழர்கள் சாவில் மகிழும் நாடு.
  தமிழ் மீனவர்களா, கூடங்குளம் வாழ் மக்களா, தமிழ் இன உறவுகளா கவலைப்படமாட்டான் இந்தியன்.
  ஆனால் ஒரு சீக்கியனுக்கு ஆஸ்திரியாவில் பிரச்சினை என்றால் ஓடுவான். வங்காளனுக்கு ஆசுடிரலியாவில் பிரச்சினையா ஓடுவான்.
  இந்தியன் என்று சொல்லி ஏமாறாமல் இருக்க முயற்சியுங்கள். போபால் சாவுக்கு ஒன்னும் புடுங்காத இந்தியா கூடங்குளத்தில் என்ன பண்ண போகுது.

  கலாம் ஒரு வன்முறை அரசு சார் அதிகாரி. அணுகுண்டு உற்பத்தியாளன். அரச வன்முறை அடித்தட்டு மக்களுக்கு எதிரானதே.

  As I could not type in Tamil copied above views,
  First we are Tamils ...we Indians Tamils living in a Country where Govt Policy is alawys anti Tamil...M Jagadeesan

  ReplyDelete
 20. looks like you posted this article to get hits. come out from the image you had about mr.kalam and view his comments. can you justify what mr.kalam said? else be quiet. one cannot accept his words jsut because he is a scientist. if you are really hurt by comments about mr.kalam give the justification for all the comments given by him about kudankulam. dont create a sympathy just by saying he is a sceinetist, president bla,bla.prove that he is right

  raja

  ReplyDelete
 21. இருதயம்

  நீங்கள் ஒருவர் மட்டும் என்று நான் சொல்லவில்லை, தமிழினத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிராக பதிவுபோடும் சிலரில் நீங்களும் ஒருவர். ஏன் என்னால் ஒரு பெரிய பட்டியலே தரமுடியும், தினமலர், தினமணி....நீங்கள் என்று நீளும் பட்டியல் அது.

  சரி நீங்கள் சொல்வது படியே வைத்துக்கொள்வோம் கூடங்குளம் அணுஉலை வேண்டுமா வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு நடத்த சொல்லுங்கள் பார்க்கலாம்? நடத்த மாட்டார்கள்?

  நீங்கள் பதிவிடுவது எப்படி தெரியுமா இருக்கிறது? அணுஉலையை எதிர்க்கும் நாங்கள் எல்லாம் முட்டாள் போலவும், நீங்கள் மட்டும் புத்திசாலி போலவும் இருக்கிறது. அணுஉலை இல்லாத நாடுகள் உண்டு என்று சொல்லியாகிவிட்டது,

  இந்த அணு உலையினால் வரும் நட்டம் இந்தியாவின் வளர்ச்சியை பாதாளத்தில் தள்ளிவிடாது என்பதும் உண்மை. இதுவரை அரசியல் வாதிகள் செய்த ஊழலுக்கு இது எம்மாத்திரம்?

  இந்த ஒரு அணு உலையினால் இந்தயா வல்லரசாகிவிடும் என்றால் அது மடத்தனத்திலும் மடத்தனம்

  இந்த அணு உலையில், தமிழகத்துக்கு தரப்படும் வெறும் 976 மெகாவாட் மின்சாரத்தில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மின்வெட்டும் தீரும் என்றால் அதுவும் இல்லை, சரி மீதிக்கு இன்னும் எத்தனை அணு உலைகள் தமிழ்நாட்டில் அனுமதி தரப் போகிறீர்கள்

  உங்கள் பதிவுகள் அனைத்தையும் பாருங்கள், நீங்கள் இந்த வாழ்த்தலாம் அமைத்ததே கூடங்குள அணு உலைக்கு ஆதரவாக பொய் பிரச்சாரம் செய்யவே என்று நன்கு தெரிகிறது

  உண்மை இந்தியன் என்றால், தமிழக மீனவர் பிரச்சனை பற்றி நீங்கள் இந்தியனாய் இருந்து என்ன சாதித்தீர்கள்... மீண்டும் இந்தியன் இந்தியன் என்னும் போரவைக்குள் ஒலிய வேண்டாம், காவிரி, முல்லை பெரியாறு, கிருஷ்ணா நதிநீர், ஒக்னைக்கள் என்று மக்களுக்கு தேவையான எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது,
  மக்களுக்கு தேவை இல்லன்னு சொல்ற அணு உலைப் பிரச்னைக்கு வந்து இந்தியன் இந்தியன்னு சொல்லி யார ஏமாற்ற நினைக்கிறீங்க?

  என்னமோ உங்களுக்கு மட்டும்தான் இந்திய உணர்வு பொங்கிட்டு வருதா? கார்கில் பிரச்சனைக்கு தெரு தெருவா உண்டியல் தூக்கி பிச்சை எடுக்காத குறையா நிதி திரட்டி இருக்கேன், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடிச்சிருக்கேன்,

  என்னமோ அதிசயமா வந்துட்டீங்க இந்தியன்னு, பள்ளிகூடத்துல முழுங்குனத இங்க வந்து துப்பதீங்க?

  மீண்டும் மீண்டும் சொல்வேன் நீங்கள் இந்தியன் என்று சொல்லிக் கொள்வது, முக மூடியே, உங்களுக்கு இந்திய உணர்வே இல்லை என்று என்னால் அடித்துக் கூற முடியும், நாளை யாராவது கோடி கோடியாக டாலர் கொடுத்தல் இந்தியாவையும் நீங்கள் கட்டிக் குடுப்பீர்கள்.

  ReplyDelete
 22. என்னது எல்லா விஞ்ஞானிகளும் புத்திசாலிகளா? அது சரி............. போங்க சார் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காதீங்க.... போயி உங்க சம்பளத்த வாங்கிகிட்டு சந்தோசமா இருங்க, உங்க வீட்டு AC, TV க்காக தினம் உழைச்சு உழைச்சு உயிரோட போராடி வாழ்க்கை நடத்தும் எங்கள் அப்பாவி அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில விளையடதீங்க... இல்ல நேரா வாங்க உக்காந்து பேசுவோம்

  ReplyDelete
 23. hello boss, ignore this kind of people. they are nothing usefull to society. most of them may be terrorist supports or some region based fanatics. they need something daily to spread venom about others.

  As Kalam does not requires any certificate from these peoples but they requiring some 2 mins attention by writing garbage.

  ReplyDelete
 24. @arun Kumar

  i appreciate ur bold and attractive as well as positive thinking as an indian. yes i accept i am very proud to be a terrorist ,violator as any kind of person i am for thamizh.

  i agree Mr.Kalaam no need any certificate or reward from our side, as much as he keep quite. we never consider about anyone among the people who against tamizhians. But one thing u should know. u r from karnadaka u ask the peoples to demolish the dam. then u can know how many terrorist are in this state. if u dont want demolish ask them to give the place for tamilnadu then u can know how much guarantee u have for ur life.

  u r a software engineer,

  u dont know wat is daily wages life

  u dont know fishermen's life

  u know only the software and some hardware
  credit card, debit card, hike, seminar, thesis, deadline, USA and UK

  some science, some girls week end party

  that's all

  how can u know the people who going to live in risk place like koodnakulam

  y they want to sacrifice there life for the people like you?

  we also respect kalaam, but never when he is turn against the peoples life

  not only kalaam

  who ever the person

  ReplyDelete
 25. @Arun Kumar

  U have posted indian national anthem in ur profile. Good very good and nice.

  but i hope u know the meaning of the words and lines of national anthem. if u know then u should know how peoples are respect and follow as per the national anthem lines.

  if all they think like that then y we r only facing the consequences?

  y the government never consider the the problems? as a india wat u did for the people?

  wat u did for india? think and say how is real and truthful indian and who is not?

  ReplyDelete
 26. இந்தக் திட்டம் தொடங்கி குறைந்தது 15 வருடங்கள் ஆகி விட்டது இந்த திட்டத்தின் ஆபத்து பற்றி இது வரை இவர்கள் முளைக்கு எட்டாத்தது ஆச்சரியம் தான்.இதார்க்கு இடையில் உலகில் எத்தநையொ அணு உலை விபத்து நடக்கத்தான் செய்தது அப்போதெல்லாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் போலும்.இதன் உண்மையான முகம் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது விரைவில் அம்பலாமாகும்.

  ReplyDelete
 27. திரு. இந்தியன் அண்ணே,

  நாங்க அணு உலை வேண்டாம்னு சொல்லல... எங்க வீட்டுகுள்ள வேண்டாம்னுதான் சொல்றோம். பஞ்சாப்லயோ, ஹரியானாவுலயோ தாராளமா வைங்க.. எங்களுக்கும் மின்சாரம் குடுங்க... "இந்தி"யாவை வல்லரசாக்குங்க ;)

  ReplyDelete
 28. This comment has been removed by the author.

  ReplyDelete
 29. This comment has been removed by the author.

  ReplyDelete
 30. This comment has been removed by the author.

  ReplyDelete
 31. அவர் அமெரிக்கா சென்றிருந்தால் அவருக்கு நோபெல் பரிசு கிடைத்திருக்கும்.அவருடன் பணி புரிந்த பலர் இன்று வெளிநாடுகளில் பெரிய பதவிகளில் உள்ளனர்.இவர் இங்குள்ள எளிய வசதிகளை ஏற்று ஆராய்ச்சி செய்து பல சாதனை புரிந்து இங்கயே இருப்பதால் இவரின் அருமை யாருக்கும் புரிய வில்லை. என்ன செய்வது ? இப்படிப்பட்ட கோமாளிகளிடம் இடி வாங்க வேண்டி உள்ளது .

  ReplyDelete
 32. @T G Ramamurthy - ஏன் இந்தியாவில் அல்லது வேரு எந்த ஒரு நாட்டில் உள்ளவர்களுக்கும் நோபல் பரிசு கிடைத்ததில்லையா என்ன?

  ReplyDelete
 33. வைகுந்த ராஜ்யத்தில் இருந்து கொட்டும் பணம் நின்று விட்டால் அப்போது தெரியும் போராட்டத்தின் வீரியம்.

  ReplyDelete
 34. @Barari - ஆமா தல

  கொட்டு கொட்டுன்னு கொட்டுது, எங்களால அல்ல முடியல நீங்களும் வந்து கொஞ்சமில்ல எவ்வளவு வேனும்மோ அல்லிட்டுபோங்க

  எவ்வளவு இலவசம் கொடுத்தாலும் துரோகத்துக்கு ஆட்சிய மத்தி ஒட்டுபோடுரவங்க ஐயா நாங்க, உங்களமாதிரி உண்மையான மக்கள் போராட்டத்த வீட்ல காலாட்டிக்கிட்டு பணம் வாங்கிட்டாங்க, வெளிநாட்டு சதின்னு கதபேசல.

  உங்களுக்கு பிரச்சனை வந்தால் கூட போராடாம குனிஞ்சு வாங்கிக்குவீங்க, அப்பகூட எங்களமாதிரி ஆளுங்க வந்துதான் உங்களுக்கும் போராடுவோம்.

  அடுத்தவன் வலிய புரிசுக்காம நீங்க சுகமா வாழ அவங்க செத்தாலும் பரவாயில்லைன்னு நினைக்கும்போது, நாளைக்கு உங்களைப் பத்தி கவலைப்பட எவனும் வரமாட்டான்

  ஓ நாங்கதான் எவ்வளவு அடிச்சாலும் காசுக்காக அடிமையா இருந்துட்டு போயிடுவோம்ன்னு சொல்றீங்களா? அப்போ சரி

  ReplyDelete
 35. @ Anand : நண்பருக்கு வணக்கம் , தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . திரு . செல்வராஜ் அவர்களுக்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும் ... மீனவர்கள் தாக்கப்பட்டு மிகவும் மோசமான நிகழ்வு தான் . அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. திரு. அப்துல் கலாம் அரசியல்வாதியாய் இருந்தால் நிச்சயம் அது குறித்து பேசியிருப்பார் ஆனால் அவர் அறிவியாளறாய் இருப்பதினால் அறிவியல் சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினை குறித்து பேசியிருக்கிறார் என்பது தான் எனது கருத்து. நன்றி

  ReplyDelete
 36. @ M . Jagatheesan ; நண்பரின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . நீங்கள் கூறிய கருத்துகளில் எனக்கு மாற்று கருத்து உள்ளது . அரசு தமிழனுக்கு எதிரி கிடையாது . அரசின் திட்டங்கள் எதுவும் தமிழினத்தின் பாதகம் அல்ல என்பது எனது கருத்து

  ReplyDelete
 37. @ Raja : Dear Mr. Raja , thank you for your comment in this regard.

  // can you justify what mr.kalam said? else be quiet//
  i do really astonish about your above said statement.

  Can you please tell me what wrong with the statement of Dr.Kalam with respect to Kudankulam ...?

  Can you please explain what you have observed about Kudakulam than Dr.Kalam observed.?

  Can you please tell me have you ever undergone about the Nuclear Science..?

  But Dr.Kalam , who has the knowledge about Nuclear Science speaks out , but we poor people simply blaming him without knowing what is what..?

  I do appreciate you if you are giving your valuable comments of Kudankulam.

  Thank you..

  ReplyDelete
 38. @ நிவாஸ் : Dear Friend , I do understand the pains in your feelings by your reply to Mr.Arun Kumar.

  Dear Friend , please be patience . You are talking about the fisherman community and the people in Kudankulam. Yea... i would like to inform you that the same concern i also have on that people. This posting & sharing are also part on that only.

  My writings may be direct , but it is true.. Listen Friend , No body will sacrifice for Kudankulam Nuclear Power Project. it is all because of our basic fear about the recent happenings in Fukushima..

  But the respected people those who knows science better than us, with all evidence & explaining the facts , are being abused by worthless words , which should not be encouraged.

  Thank You

  ReplyDelete
 39. @ Baraari : தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சத்தியம் சீக்கிரத்தில் ஜெயிக்கும் ,

  ReplyDelete
 40. @ சிவா : நீங்கள் அணு உலையை எதிர்க்கவில்லை என்பது மிகவும் வரவேற்க தகுந்தது. பொதுவாக அணுமின் நிலைய்னகளை சுற்றிலும் 1 . 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுவர் இருப்பதினால் , கண்டிப்பாக உங்கள் வீட்டிற்குள் வர வாய்ப்பில்லை . நீங்கள் சொன்ன படி அரியானாவில் சீக்கிரம் அணுமின் நிலையம் அமைக்கும் திட்டம் இருப்பதாக நாளேடுகளில் இருந்து அறிந்து கொண்டேன் . நன்றி

  ReplyDelete
 41. @ T G Ramamurthy : தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
  உண்மை தான் . பொதுவாக நம்முடன் இருக்கும் வரை அவர்களின் அருமை யாருக்கும் தெரிவதில்லை . ஆனாலும் இந்த விடயத்தில் மக்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு இருப்பதினால் இப்படி பேசுகிறார்கள் என்று நினைக்கிறேன் . அதை உணரும் நாள் சீக்கிரம் வரும்

  ReplyDelete
 42. No atomic reactor is safe to say scientifically. We do not have enough experience to learn how human error cause an accident in a reactor. For this we need to learn from many such accidents. Air travel safety is still improved for accidents continuoesly occur. Accidents are unavoidable. Yet we travel in air. But in a atomic reactor accident is not permissible. It destroys lives for ages. As a common man I know these truth. But Dr. Kalam, knowing well all these truth did not speak it, making himself a mocking object. Dr. Kalam was never disrespected before. As a scientist he should speak what is best for the people. He miserably failed. His stature is very tall. He said Koodangulam reactor is 'safe' based on available safety precautions while the element of human error is still unedited. We do not have enough knowledge about it. I pitied him for he played into the hands of politicians. He admits that 25% waste is not recyclable, an indispensable commodity and the govt is going to use it for making atomic bombs. It means threats on us is increased. India is not safe in the hands of such scientists however tall they are.

  ReplyDelete
 43. @ Palanivelu : Dear Sir, thank you very much for your kind visit and comments.

  I believe that India is having sufficient knowledge about Nuclear reactors. PHW reactors are designed by India and are being operated in many of Indian Reactors safely for the past 40 Years.

  It may please be noted that the waste what you are mentioning is not waste. that is called as PU239. as you rightly said , this PU239 can not be recycled. but India is having a separate plan for that. That is Our second stage Reactors will use this PU239 + TH232 as fuel. Kindly see my article regarding this in (அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை - http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html )

  Hence , As a scientist , Dr.Abdul Kalam has told the right thing only.

  Thank You. Visit again

  ReplyDelete
 44. The theory that 'something can go wrong will go wrong' should be followed in design, execution and production stage of a project. This is because of human element is involved in every operation. Man is unstable and unreliable. That is why automation is promoted, yet we cannot eliminate him 100%. So air crash train accidents factory accidents occur despite high safety measures. But in the matter of atomic reactor no such excuse is affordable. you know, Chernobil in Russia happened only due to human error. We are not able make a reactor which is safe for we lack a clear foresight where an element of failure might crept in. 40 years of operation is not sufficient to do this, while 100 years of air safety or 250 years railway safety is not sufficient. All due to human error. So the theory stands tall that 'accidents will occur'. We did not eliminate human involvement in the operation of the present reactors. We could not also. An accident here will make the entire world to regret for ages, you and me too. Also note, nowadays the ecology reacts to all scientific development very severely, e.g. ozone hole, earth warming up-co2 conc., soil weaning off fertility due fertilizers and pesticides, fragile birds are eliminated due to mobile radio signals. These reactions of ecology were unknown and unpredictable. They are also irreparable. We don't know how the nuclear waste will cause damage. To know we have to weight some decades. But it is sure the damage will be severe in scale for the entire humanity. Little more judiciousness is all we need. After all our scientific knowledge is turning on us making us idiots. Simple technology as a means of survival is always beautiful. Don't play with fire.

  ReplyDelete
 45. @ Palani velu : Dear Sir, Thank you very much for your comment.

  // Man is unstable and unreliable. That is why automation is promoted, yet we cannot eliminate him 100%//

  Sir, it may please be noted that Nuclear Reactors are having two systems namely Active & Passive. Active systems will be operated by Operators with the use of electric Power. But at the same time Passive systems will function automatically once they feel the design parameter is vary. All the critical equipments will be of Passive system. However one set of Active system also will be kept for this purpose. As the number of safety aspects are getting more , the construction cost is getting more in Nuclear Reactor.


  //After all our scientific knowledge is turning on us making us idiots//
  I don;t know why you have mentioned this statement. But i can ask you one questions sir. Can you please tell something in our life without science. No... You can not...So Science is for life only. For the betterment of life , we are using scientific technologies.

  //Don't play with fire. //
  its a opt example you have given. Sir as told by you that Fire was so dangerous in the past days. But now you please see... Everybody is using fire , even small children. How..? yea.. we are having knowledge to use the controlled fire for constructive purpose. Like wise , we have tech. & knowledge to use the Nuclear Reactors to generate power in constructive manner with required safeguards.

  For the spent fuel disposal , once again i request you to read my article "அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை - http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html "

  Thank you

  ReplyDelete
 46. Dr.Abdul Kalam Most respectful person in INDIA. He was taken our tamil litrature to the EU Parliment. As a tamilian we need to respect always to Dr.Abdul Kalam. For this Nuclear Reactor issues many more officials was involved. But now we finally Blame one Person. Be Gentle Always, He is a real Gentleman for this Decades..............

  ReplyDelete
 47. @ murugan : Dear friend , Thank you very much for your visit and your comment. I do agree with you , that Dr.Abdul Kalam is a respectable person.

  ReplyDelete
 48. நன்றாக கேட்டு இருக்கிறீர்கள்...

  தமிழர் ஒருவர் அறிவியல்பூர்வமாக பேசினால் அவருக்குப் பட்டம் "அறிவு கிடையாது" என்று தான்!!
  இதையே, வேறொருவர் வந்து புரியாத மொழியில் சொன்னால் தானே நாம் ஏற்றுக்கொள்கிறோம்!!

  தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள சில பதர்கள் எப்படியும் எழுதும்!

  ReplyDelete
 49. @ ஆளுங்க :

  ஆம் நண்பரே ,,,, தங்கள் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 50. இது சம்பந்தமாக நானும் ஒரு பதிவு இட்டிருந்தேன்.எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...என்று திருக்குறள் படித்துவிட்டு (அல்லது தமிழ் தமிழ் என்று கூச்சல் போட்டு ஆனால் திருக்குறள் படிக்காமல் விட்டு) கலாம் மற்ற பிரச்னைகளில் கருத்து சொல்லலை அதனால் இது தப்பு என்று பகுத்தறிவுக்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் பேசுவது இப்போது எல்லாம் புரச்சி ஆகிவிட்டது. எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு.ஆனால் எல்லாரும் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்லியே ஆகவேண்டும் கட்டாயம் இல்லை. நீ கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்று மிரட்டுகிற 'கருத்து கந்தசாமி' கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது. இது சிறு கும்பல்தான். இப்போதும் அவர் அறிக்கையை ஆராய்கிற மனப்பான்மை இல்லை. ஆனால் லேபிள் என்னவோ நான் தமிழன்! கருத்தை ஆராய உழைப்பு தேவை. பொறுமை தேவை. பிறகு அதன் அடிப்படையில் நிராகரித்தால் விவாதிக்கலாம். பொறுமை இல்லாததுதான் அவர் தமிழர் அல்ல நான் நிராகரிக்கிறேன் என்று கூச்சல் போடும்.
  http://ahamumpuramum.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 51. Mr. Iruthayam said: Sir, it may please be noted that Nuclear Reactors are having two systems namely Active & Passive. Active systems will be operated by Operators with the use of electric Power. But at the same time Passive systems will function automatically once they feel the design parameter is vary. All the critical equipments will be of Passive system. However one set of Active system also will be kept for this purpose. As the number of safety aspects are getting more , the construction cost is getting more in Nuclear Reactor'.
  You are talking only the provision available in the reactor like Dr. Kalam to say it is safe. But he cunningly avoided the threat of human error and disgraced himself. I don't know about you.
  So I should I explain what human error is. Concorde supersonic plane was flying between London and New York safely. No problem was found. Every possible danger was envisaged and provisions were provided. It flown for more than two decades. One day a jammed one and half feet steel rod fallen on run way flung and punctured one tire and hit the fuel tank. The plane crashed. The reason is rod was not removed. If done, the accident would not happen. This is called human error. We cannot predict where the source of human error is. That is why I say behavior of man is unstable and unreliable. Yet we have to live and live with accidents reducing it at the best. We cannot afford to refuse modern life. So the question comes between affordable accidents and unaffordable accidents.
  But the two decades old supersonic flight after that was stopped. They did not justify building some provisions. Because we cannot play fools to learn from costly mistakes. The choice is we can fly with ordinary jet planes.
  So,every accident, you see, is pregnant with human error. But the atomic reactor accident is not affordable. It destroys not only lives but life sustainability of earth for ever. So no nuclear reactor is safe. I better put it in this way for your sake. Koodankulam reactor is safe but the earth is not safe with it. This is the case with every reactor on the earth.

  ReplyDelete
 52. Mr. Irudhayam said 'I don;t know why you have mentioned this statement. But i can ask you one questions sir. Can you please tell something in our life without science. No... You can not...So Science is for life only. For the betterment of life , we are using scientific technologies'.
  Yes. You catch the point. 'Science is for the betterment of life'. That is the parameter. If it is destructive we cannot and we should not, that is what I insist.
  But in India that is not the case. Dyes are destructive to eco-system and developed countries don't make it. Since we manufacture and did not ban Tiruppur become dollar city. They enjoy the benefit at our cost. likewise leather chemicals are harmful to soil and they banned. We don't. Around Arni we process leather with these chemicals and export. The effect of it on cultivation is vulnerable for 500 years to come. The lands are not arable Down from Tiruppur and Arni. But we afford it only because creation of jobs. It is only temporary. Tiruppur or Arni cannot continue forever. As you said science is for the betterment of life not for the destruction. Once sustainability of lives is improved we, like westerners will ban these chemicals.
  But what with the atomic reactor? Your own word justify that. Is it betterment of life? Or, can we afford it? Since there is other better and cheaper source for electricity atomic reactor is not betterment of our lives nor it is affordable. You understand it in your own point of view.

  ReplyDelete
 53. @ மாயன் : நண்பரே .. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

  நீங்கள் கூறிய கருத்துகள் உண்மையை பிரதிபலிக்கிறது .

  ReplyDelete
 54. @ Palani velu : Dear Sir, Thank you very much for your kind comments.

  I do enjoy with the constructive conversation with you. You are worrying about the Human Error , I do appreciate you that your concern is great. But it may please be noted that Nuclear Reactors will not be operated by anybody. A well trained & licensed operators only can operate the systems . The world wide practice in nuclear Reactors is to test the skill of operators atleast once in three months.

  I do take a note of your Flight Accident Concept. Sir, Nuclear Reactors are not like that. A Separate dedicated team will always be there to ensure the safety & maintenance of the systems. As the Techniques followed in Nuclear Reactors are based on 6 Sigma Concept , i feel your concern on human error will be effectively handled in Nuclear Reactors.

  I do appreciate you that you have given some good examples which are spoiling our Ecology. I would like to draw your kind attention Sir that Nuclear Reactors are Eco-friendly. They will not emit any CO2 , which is the basic cause of Global warming . You may be aware that CO2 & SO2 are highly generated by Thermal Power Station. So... why i can not say Nuclear is betterment for life...?

  You may ask me about other sources of Electricity. You are invited to see my earlier writtings " http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html " Title : அணுமின்சாரம் தேவையா ..? - ஒரு பார்வை .

  Thank You...

  ReplyDelete
 55. I read comment where you mentioned about training and 6 sigma concept. By that you are trying to say, man is reliable and the source of human error is predictable despite the example I shown before. This is untamed inexperienced mind, I am sorry to say. Then the world renowned theory that 'accident will occur' on the top of all provisions does not hold water.
  If so, why insurance companies refuse to insure the reactor? They will reap huge ransom amount every year? They may gladly stand up for serious commitment! Why not, not even the govt owned ones do not come forward.
  All these efforts are good, dear friend. But the human error is like devil, we don't know how or why an accident can be avoided until it happens.

  ReplyDelete
 56. @ Palani velu : Dear Sir, Thank you for your valuable comment.

  I do wonder about your state of argument. I have a string Opinion that except " ACT OF GOD " , in all things man / human is reliable.

  Who said..? Nuclear Reactors can not be insured..? All Nuclear Reactors will be insured for the third party damages. Kindly take note of this.

  Thank You

  ReplyDelete
 57. இலவச மின்சாரம் வேண்டும்........வீட்டுக்கு ஒரு விளக்கு திட்டத்துல மின் இணைப்பு வாங்கிட்டு , டிவி, மிக்சி, கிரைன்டர்னு கொழிக்கனும்.....ஆனா அணு மின்சாரம் மட்டும் கூடாது.....பிறகு கரன்ட் எங்கிருந்து வருமாம்? இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திய அணு மின் திட்டங்களுக்கு எதிரான் சதியின் பின்னணியை திரு. குருமூர்த்தி அவர்கள் அழகாக விளக்கியுள்ளார்............இந்தியாவின் பல மாநிலங்களில் அணு மின் திட்டங்கள் செயல் படுகின்றன....என்னமோ தமிழ் நாட்ட மட்டும் குறி வச்சு அழிக்கிற மாதிரி பிரச்சாரம்......உருப்பட்டாப்புலதான்......

  ReplyDelete
 58. @ Siva Saravanakumar : நண்பருக்கு வணக்கம் . தன்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..

  நீங்கள் சொன்ன தகவலை நானும் பார்க்கிறேன் . நன்றி

  ReplyDelete
 59. ஒன்றும் தெரியாத அரைகுறை ஆட்கள் தூண்டிவிடும் போராட்டமிது. அவர்களை சாவி கொடுத்து இயக்குவது யாரென்று விரைவில் வெளிவரும். இவர்களுக்கெல்லாம் கல்பாக்கம் உதாரணமாக தெரியவில்லையா? கல்பாக்கம் விபத்து ஏற்பட்டால் சென்னையே இருக்காதுதான். ஆனால் இதுவரை யாரும் எதிர்க்கவில்லையே!! எதுவும் ஆகவில்லையே!! முல்லை பெரியார் அணை உயரம் கூட்டினால் பெரும் ஆபத்து, அந்த பகுதியில் பூகம்பம் ஏற்பட்டால் அணை உடைந்து மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டு கேரளா வுக்கு ஆபத்து, இப்படி கேரளா அரசு ,கட்சிகள் கூறினால் அதை மட்டும் சிறுபிள்ளை தனம் ,அறிவு கெட்ட செயல் என்று ஓலமிடும் மூணாம் தர அரசியல் வியாதிகள் தான் இங்கேயும் நமக்காக போராட வந்துவிட்டனர்.
  உனக்கு ஒரு நியாயம்,அடுத்தவனுக்கு ஒரு நியாயம்?
  இவர்களுக்கு அரசியலும் தெரியாது,அணுவும் தெரியாது- ஆனால் நல்லா கருத்து சொல்வார்கள்.

  ReplyDelete
 60. அப்து கலாமின் நேர்மையை சந்தேகிக்கும் பேர்வழிகளே... அவர் மட்டு ஜனாதிபதியாக "அன்று" இருந்திராவிட்டால் சோனியா பிரதமராகி இருப்பார் என்பது தெரியாதா?
  கூலிக்கு பேச வேண்டிய அவசியம் அவருக்கு கிடையாது, அவருக்கென்ன மனைவியா? துனைவியா? கோடிகோடி யை சேர்க்க?
  சீக்கியனுக்கு பிரச்சினை என்றால் பஞ்சாப் தான் கொதிக்கிறது, பிகாரிக்கு பிரச்சினை என்றால் பிகார் தான் பொங்குகிறது. பிறகு தமிழனுக்கு பிரச்சினை என்றால் மட்டும் முழு இந்தியாவே துடிக்க வேண்டுமா? மீனவனுக்காக எத்தனை கட்சிகள் போராடுகின்றன? போராடாத கட்சி, தலைவர்களை அரசியலிலிருந்து அகற்றி விட்டாயா? நீ தேர்ந்தெடுத்த பனா.சீனா தான் பாதுகாப்புக்கு பொறுப்பு, அவராவது வருவாரா? தப்பு எல்லாம் நம்மிடம் தான் உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில காரனுக்கும் ஒவ்வொரு பிரச்சினை, கூட்டாச்சி என்பதே அதுதான். சுமூகமாக தீர்க்க காலதாமதம் ஆகும்தான்.
  அணுசக்தியே தேவையில்லை, அணு ஆயுதம் வேண்டாம் என்று எந்த சாமானியனும் ஏற்க மாட்டான். சராசரி மக்கள் கூடங்குளம் தேவையென்றே கருதுகின்றனர். அறிவுஜீவிகள் மட்டும் தான் எதிராக இருக்கிறார்கள்,
  வைகை அணை கட்டும் போது பல கிராமங்கள் அழிந்துவிட்டன. அவர்களுக்கும் ஆதங்கம் தான், ஆனால் அந்த அணை மூலம் வரும் தண்ணீரால் தான் 4 மாவட்டங்களே சோறு சாபிடுகின்றன.

  ReplyDelete
 61. என்னது இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்கிறதா? இல்லை நண்பர்களே... தமிழன் தான் தமிழனுக்கு துரோகம் செய்திருக்கிறான்,செய்கிறான்,செய்வான்.
  சில,பல ஆண்டுகளாகவே மத்திய அரசில் நாம் தேர்ந்தெடுத்த நம் இனமான தலைவர்கள் தான் கோலோச்சி வந்தனர், அந்த அதிகாரத்தில் ஒரு சதவீதத்தயாவது செத்து செத்து வாழும் மீனவனுக்காகவோ, கூண்டோடு அளிக்கப்பட தொப்புள்கொடி களுக்காக உபயோகித்திருப்பானா? மறுபடி ,மறுபடி, மாறி மாறி அவர்களைத்தான் ஆசையாசையாய் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கும் தமிழா...உன் கேடுகளுக்கெல்லா ம் காரணம் இந்தியாவா? நல்ல கதையாய் இருக்கிறதே!!!

  ReplyDelete
  Replies
  1. nannbaray anu ulai thangal ooril irunthal neengal ippadi pesa matteergal. thala valium kaichalum thanakku vanthal than therium

   Delete
 62. I WAS LOOKING AT YOUR WEB SITE TO HAVE SOME DETAILS ABOUT THE KOODANKULAM PROJECT WHICH YOU RECOMMENDING IS NOT DANGER FOR PUBLIC. BUT YOU DID NOT QUOTE EVEN A SINGLE POINT TO STRESS YOUR RECOMMENDATION.

  ReplyDelete
 63. @ தலைதனையன் :

  Dear Sir,

  Thank you for your visit and comments. Can you please tell me specifically which is not stressed or which is not shown. I may help me to identify the same if it is not incorporated.

  Thank You

  ReplyDelete
 64. வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

  ReplyDelete
 65. வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

  ReplyDelete
 66. @ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  // வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
  மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .

  நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.

  தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

  ReplyDelete
 67. எந்த வகையிலும் அணுசக்தி ஒரு அழிவு சக்தியே, அதற்கு வக்காலத்து வாங்கும் உங்களை பார்த்தால் மிகவும் வருத்தமாக உள்ளது. அப்பிடியே அணு உலை தான் வேண்டுமானால் டெல்லியில் வைத்து பிற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியது தானே. எங்க வீட்டுக்குள்ள அனுமதிக்க மாட்டன் ஆனால் அடுத்தவன் வீட்டில் வெடி வெடிப்போம் என்கிறீர். அதற்கு இந்தியன் என்ற முகமூடி வேறு, வெட்கமாய் இருக்கிறது.

  அப்புறம் கதாநாயகன் அப்துல்கலாம் அவர்களுக்கு அணு உலையை பற்றி கருத்து சொல்ல தகுதியே இல்லை, ஒரு வேலை அவர் மற்ற மக்கள் பிரச்சினையில் கருத்து சொல்லியிருந்தால் இங்கு செல்லலாம். அதுவும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   //எந்த வகையிலும் அணுசக்தி ஒரு அழிவு சக்தியே, அதற்கு வக்காலத்து வாங்கும் உங்களை பார்த்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.//
   உங்களின் இந்த கருத்தை பார்த்து எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் உள்ளது . நண்பரே .. எனது கருத்துகள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக அறிவியலின் படி எழுதப்பட்டு உள்ளது . அறிவியல் அறிவியல் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் . அணுமின் நிலையங்கள் குறித்த ஒரு அறிவியல் தொகுப்பு இந்த வலைப்பூவில் உள்ளது . நீங்கள் பொறுமையாக படியுங்கள் ... ஆரோக்கியமாக விவாதியுங்கள் ...சந்தேகம் இருந்தால் ...

   //அப்பிடியே அணு உலை தான் வேண்டுமானால் டெல்லியில் வைத்து பிற மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டியது தானே.//
   இந்த கருத்து எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது . இதே போல கருத்தை தான் திரு . உதயகுமார் அவர்களும் மக்களிடம் கூறி வருகிறார் .. சரி .. உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் .... நெய்வேலி அனல் மின் நிலையம் . தூத்துகுடி அனல் மின் நிலையம் , மேட்டூர் நீர் மின் நிலையம் ஆகியவற்றை டெல்லியில் அமைக்கலாமே என்று நான் கேட்டால் , உங்களுக்கு நான் பைத்தியக்காரன் போல் தோன்றுவேன் அல்லவா ...? ஏன் ... எது எது எங்கு வைக்க வசதிப்படுமோ , அங்கு தான் வைக்க முடியும் . உங்களின் இந்த கேள்வி அணுமின் நிலையங்களை குறித்து தாங்கள் இப்பொழுது தான் அறிந்து வருகிறீர்கள் என்பதை காண்பிக்கிறது ...

   //அதற்கு இந்தியன் என்ற முகமூடி வேறு, வெட்கமாய் இருக்கிறது. //
   எனக்கும் வெட்கமாய் தான் இருக்கிறது . ஏன் தெரியுமா ...? மக்களின் அறியாமையை போக்கும் கருத்துகளை எழுதினால் அவன் முட்டாள் என்று கூறும் சமூகத்தில் பிறந்ததற்காக ....! நல்ல ஒரு சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் தவறான கருத்துகளை கூறி மக்களை மாக்களாய் மாற்றும் கூட்டத்தை இந்த சமூகம் தலயில் தூக்கி வைத்து கொண்டாடுகிறதே ... அதை நினைத்து எனக்கும் வெட்கமாக தான் இருக்கிறது . ஆனால் உங்களின் கேள்வியை நான் வெட்கமாக எண்ணாமல் , வேதனையாக தன எண்ணுகிறேன் .

   //அப்துல்கலாம் அவர்களுக்கு அணு உலையை பற்றி கருத்து சொல்ல தகுதியே இல்லை,//
   PHD பொலிடிகல் சயின்ஸ் படித்த ஒருவர் அணு உலைகளை பற்றி பேச தகுதி இருக்கும் போது , உலகம் மதிக்கும் பெரும் அறிவியல் அறிஞர் பாரத ரத்னா திரு அப்துல் கலாமுக்கு தகுதி இல்லை என்று நீங்கள் கூறுவது வேதனைக்கு உரியது ...

   தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

   Delete
 68. வணக்கம் தோழர்

  நாம் அனைவரும் இந்தியர்கள் என்கிறீர்களே,

  இந்தியன் என்பது ஒரு தேசிய இனமா? அல்லது
  இந்தியா என்பது ஒரு தேசமா என்று கூறுங்கள்,

  லாகூரில் 1946ல் பிறந்தவன் இந்தியன், 1948ல் பிறந்தவன் பாகிஸ்தானி, ஒரு தேசிய இனம் இப்படி இருக்க முடியுமா?

  முதலில் தேசம் என்பதற்கு நீங்கள் என்ன வரையறை சொல்வீர்கள்?

  ReplyDelete
 69. ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.

  பீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.

  மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாதுகாத்து வைத்திருக்க முடியுமா? என்பதே பெரும் கேள்வி.

  சோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கொடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
  உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.

  ReplyDelete
 70. யார் சொன்னாலும் நம்ம ஜனங்க கேட்கும் மனப்பக்குவத்தில் இல்லை.அனு உலை ஆபத்தானது என்ற முடிவை எடுத்து விட்ட மனிதர்களிடம் எவ்வளவு தான் விளக்கம் கொடுத்தாலும் எடுபடாது.இவர்கள் கவிழ்த்து வைத்த பானை மாதிரி எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் கவிழ்ந்த பானை நிறையாது.யார் வந்து சொன்னாலும் இவர்கள் இப்படித்தான். அணுசக்தி பற்றி கலாமுக்கு ஒன்றும் தெரியாது என்று இவர்கள் சொல்கிறார்கள்,பாமர மக்கள் பயத்தை பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையை எதிர்க்கும் நபர்களுக்கு ஜப்பானை எடுத்துக்காட்டி பேசியும் தெளிவு பிறக்காது இருப்பது வேதனை.

  ReplyDelete
 71. I'M THIMMARAJAN,

  i am not indian i'm tamilan this is my simplest explaination because i already so many time thinked about indian and tamilan then only i took this dicision, simple onething that is the india always doing againt to tamilans and india always against to tamilnadu public works. i have somany points i already so many times explained to peoples who are all saying indian, you remember one think few years ago i'm also thinking and saying indian only but now i'm saying clearly and after that very deefly thinked about india with tamilnadu i'm TAMILAN. again you say indian means it's no problem for me i hope one day you will know about india activities then that day again you will come to my point that day i will ask to are you indian or tamilan means that day you will say tamilan i hope,......I MUST!WE MUST!! TAMILAN MUST!!!

  ReplyDelete
 72. நெருப்பு26 March 2012 at 02:14

  ஏம்பா .. அண்ணனுங்களா ..! இதே அப்துல்கலாம் அஞ்சு வருஷத்துக்கு முந்தி கூடங்குளம் சுத்தி பார்த்துகிட்டு அந்த மக்களிடம் அணுஉலை இயங்க சம்மதிக்காதீர்கள் என சொல்லிவிட்டு , இப்போது வந்து அணு உலை பாதுகாப்பானது என சொல்வது எந்த கணக்கில் சேரும் !

  ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி