Friday 23 March 2012

திரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..?



கூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி..? என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்கள் படித்து உள்ளனர் .  சுமார் 1600 பக்க பார்வைகள் , இந்த பதிவு மாத்திரம் பார்க்கப்பட்டு உள்ளது.  சிலர் எனது கருத்துகளை ஆதரித்தார்கள் .  சிலர் திரு . உதயகுமாரை நான் தனிப்பட்ட விரோதத்தில் தாக்குகிறேன் என்றும் கருத்து கூறினார்கள் .   நான் மறுபடியும் தெளிவு படுத்த விரும்பும் காரியம் என்னவெனில் எனக்கும் , திரு . உதயகுமாருக்கும் எந்த தனிப்பட்ட கசப்போ , விரோதமோ கிடையாது .  ஆனால் அப்பாவி மக்களின் நம்பிக்கையை பெற்று கொண்ட அவர் பொய்யான பல தகவல்களை சொல்லி மக்களை மேலும் போராட தூண்டுவதை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியாது .  எனவே .. இந்த பதிவிலும் திரு . உதயகுமார் சொன்ன ஒரு கருத்து மாபெரும் பொய் என்பதை ஆதாரங்களுடன் விவரிக்க விரும்புகிறேன் .


" இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்தும் 40 சதவீதம் மாத்திரமே மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்றும் அதனால் கூடங்குளம் அணுமின் நிலையமும் 400 - 500 MWe மின்சாரம் மாத்திரம் தான் தயாரிக்கும் எனவும்  , அதனால் தமிழகத்திற்கு 160 MWe மின்சாரம் மாத்திரமே கிடைக்கும் என்றும் " ஒரு புதிய ஆனால் பெரிய பொய்யை திரு . உதயகுமார் மக்களிடம் பேசி வருகிறார் .
Source : http://www.youtube.com/watch?v=L72xvNan1Bs&feature=related
Source : http://www.youtube.com/watch?v=HWX-cgu1Y_M&feature=related




மேற்சொன்ன இரு வீடியோ பதிவுகளிலும் திரு. உதயகுமார் இந்த கருத்தை சொன்னதுமன்றி , இதே கருத்தை மக்கள் மத்தியில் பரப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் என்று தான் நான் சொல்லவேண்டும் .  ஏன் எனில் ... இதே கருத்துகளை புதிய தலைமுறை தொலைகாட்சியில் " புது புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் " பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பினரும் முன் வைத்தனர் .  எனவே ... இந்த கருத்து பொய் என்று நிரூபிக்க தனி பதிவு எழுதுவது என்ற முடிவுக்கு வந்தேன்

 கடந்த சில வருடங்களுக்கு  முன்பு  ( அதாவது அணு எரிபொருள் ஒப்பந்தம் செய்யப்படும் வரை ) சில காலம் இந்திய அணுமின் நிலையங்கள் 50 சதவீத மின்சாரம் தான் தயாரித்து வந்தன என்பது உண்மையே ... அதற்க்கு காரணம் இந்திய அணுமின் நிலையங்களின் செயல்பாடு அல்ல மாறாக அணுமின் நிலையங்களுக்கு தேவையான அணு எரிபொருள் பற்றாக்குறையினால் தான் என்பதே உண்மை . ஆனால் அணுசக்தி உடன்பாடு இந்தியா மற்ற நாடுகளுடன் செய்து கொண்டபிறகு எரிபொருள் தடை இன்றி கிடைக்க ஆரம்பித்து இருப்பதினால் , அவற்றின் உற்பத்தி திறன் பெருமளவில் உயந்து உள்ளது என்பதே உண்மை ....
 பொதுவாக அணுமின் நிலையங்கள் அவற்றின் பாதுகாப்பான  , சுற்று சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தொடர்ச்சியான ( 24 x 7 மணி நேரமும் ) மின்சாரதிர்க்க்காகவே விரும்பப்படுகிறது .  அப்படியானால் உண்மையில் இந்திய அணுமின் நிலையங்களின் மின் உற்பத்தியின் அளவு தான் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமே ..


28 10 1969 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த தாராபூர் முதல் அலகு 160 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம் 2008 - 2009 ல் 1007 மில்லியன் யூனிட் ( 72 % ) மின்சாரமும்  , 2009 - 2010 ல் 1199 மில்லியன் யூனிட் ( 86 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1142 மில்லியன் யூனிட் ( 81 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1252 மில்லியன் யூனிட் ( 97 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....


28 10 1969 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த தாராபூர் இரண்டாம் அலகு 160 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம் 2008 - 2009 ல் 1349  மில்லியன் யூனிட் ( 96 % ) மின்சாரமும்  , 2009 - 2010 ல் 1251  மில்லியன் யூனிட் ( 89 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1273 மில்லியன் யூனிட் ( 91 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1235 மில்லியன் யூனிட் ( 96 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....



01 04 1981 ல் வர்த்தக ரீதியாக மின்சாரம் தயாரிக்கக ஆரம்பித்த ராஜஸ்தான் இரண்டாம் அலகு 200 MWe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது ...  இந்த நிலையம்  2009 - 2010 ல் 950  மில்லியன் யூனிட் ( 54 % ) மின்சாரமும் , 2010 - 2011 ல் 1720 மில்லியன் யூனிட் ( 98 % ) மின்சாரமும் , ஏப்ரல் 2011 - பிப் 2012 வரை 1655மில்லியன் யூனிட் ( 103 % ) மின்சாரமும் தயாரித்து உள்ளது .....

Sources : NPCIL Website...


  மாத்திரமல்ல இரண்டு நாளுக்கு முன்னால் இந்திய அணுமின் நிலையங்கள் ஒரு நாளில் உற்பத்தி செய்த மின் அளவு (MWe ) திரட்டி கொடுக்கப்பட்டு உள்ளது 

இடம்
அலகு
திறன் MWe
உற்பத்தி MWe
%
தாராப்பூர்
1
160
162
101.25%
2
160
160
100.00%
3
540
0
0.00%
4
540
460
85.19%
ராஜஸ்தான்
1
100
0
0.00%
2
200
222
111.00%
3
220
233
105.91%
4
220
234
106.36%
5
220
234
106.36%
6
220
236
107.27%
கக்ராபாரா
1
220
225
102.27%
2
220
228
103.64%
கைகா
1
220
170
77.27%
2
220
170
77.27%
3
220
171
77.73%
4
220
155
70.45%
கல்பாக்கம்
1
220
161
73.18%
1
220
155
70.45%
நரோரா
1
220
160
72.73%
1
220
157
71.36%
மொத்தம்
20
4780
3693
77.26%





 TAPS 3 & RAPS 1 தவிர்த்து 
18
4140
3693
89.20%

 தாராபூர் 3 ம் அலகு மற்றும் ராஜஸ்தான் முதல் அலகு போன்றவை பராமரிப்பிற்க்காய் நிறுத்தப்பட்டு உள்ளது .  அப்படி எனில் இந்திய அணுமின் நிலையங்களின் மொத்த உற்பத்தி அளவு 89.20 % என்பது எவ்வளவு ஆணித்தரமாக உறுதியாகி உள்ளது .  



ஏப்ரல் 2011 முதல் பிப் 2012 வரை மொத்தமுள்ள 20 அணுமின் நிலையங்கள் மூலம் 29596 மில்லியன் யூனிட் ( Capacity Factor 79 % , Availablity Factor 91 % )  என கூறப்பட்டு உள்ளது .  source : http://www.npcil.nic.in/main/AllProjectOperationDisplay.aspx 


 ஏற்கனவே இருக்கும் அணுமின் நிலையங்களே சராசரியாக 80 % மேல் மின்சாரம் உற்பத்தி செய்யும் பொழுது ,  நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டு உள்ள மூன்றாம் தலைமுறை அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம் 400 - 500 MWe மின்சாரம் தான் தரும் என்று திரு . உதயகுமார் & பூவுலகின் நண்பர்கள் சொல்லுவது சுத்த பொய் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல ...?


பள்ளி செல்லும் குழந்தைகளின் மனதை கெடுத்து அவர்களை போராட தூண்டுகிறார் திரு . உதயகுமார் என்ற எனது சென்ற பதிவின் வாதத்தை பல ஏற்று கொள்ளாத பொழுது , அப்படி பட்ட ஒரு வீடியோ பதிவை நான் இணைத்து இருக்கிறேன் பாருங்கள்



இந்த வீடியோவின்  முடிவில் பாருங்கள் .  ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் சொல்லுவதை நினைத்து தாங்களே சிரிப்பதை .... தாங்கள் என்ன சொல்லுகிறோம் என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத இந்த இளம் தலைமுறையை சீரழிக்கும் திரு . உதயகுமாரை சமூகம் மன்னிக்காது என்பது எனது திண்ணமான கருத்து



103 comments:

  1. நாராயண சாமியிடம் எவ்வளவுப்பா வாங்கின....? கடினமா உழைச்சுருக்க...! நான் இந்தியன் என்று முதலில் எழுதியிருக்கியே...! அப்ப நாங்கலெல்லாம் யாரு... பாகிஸ்தான்காரங்களா? போராட்டத்தை திசை திருப்பாதீங்க. சின்ன பிள்ளைங்க தன்னை வீடியோ எடுக்கிறாங்கன்னு தெரிஞ்சா கொஞ்சம் கூச்சத்துடன், சிரித்துக் கொண்டேதான் பேசும். உக வீட்டில் வாண்டுகள் இல்லையா? இல்லை அணுஉலையில் வாழுகிற ஆளா?
    மக்களுக்கு பயம் இருக்கு. ஏவுகணை, ராக்கெட் போன்ற நாட்டில் பாதுகாப்புக்கு முக்கியமான இஸ்ரோவில் பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு. இந்தியன் என்றால், பொதுமக்களின் காசை கொள்ளையடிப்பவன். (நீங்க வேற நான் இந்தியன்னு முதல் பக்கத்திலேயே எழுதியிருக்கீங்க?)
    அணு உலை மூலம்தான் நமக்கு மின்சாரம் கிடைக்கும். வேறு வழியே இல்லை என்று விஞ்ஞானி அப்துல்கலாம் போல் முட்டாள்தனமாக பேசக்கூடாது. சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தில் ஊழல் செய்ய முடியாது.
    அதனால் இதுபோன்ற பல லட்சம் கோடி அணு உலை அமைக்க விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேபோல், நம் மக்கள் நன்றாக இருக்கவேண்டும். மனிதன் கழிவுகள் போல் வாழும் இந்தியாவில் அணு உலை தொடங்குவோம் என்று ரஷ்யா இங்கு முதலீடு செய்கிறது. இந்த அணு உலையின் ஆய்வில் கிடைக்கும் முடிவுகள் எல்லாம் ரஷ்யாவுக்கு, அணு உலை வெடித்தால் சாவு இங்குள்ள அப்பாவி தமிழர்களுக்கு... என்ன கொடுமை சார்...?
    உதயகுமாரை குற்றம் சொன்னாலும், அங்குள்ள போராட்டத்தை குறை சொல்லாதீங்க. அவர்களது போராட்டம் உண்மையானது? நியாயமானது? உயிருக்கு ஆபத்து வரும் என்றால், அதை தடுக்க நினைப்பதில் என்ன தப்பு. வரவே வராது. பாதுகாப்பாக இருக்குகிறது என்றெல்லாம் சொல்லு நாய்கள், 40 ஆண்டுகளுக்கு பின்னர் இருக்க மாட்டார்கள். அப்போது அணு உலை விபத்து நடந்தால், என்ன செய்வது? மக்கள் அச்சத்தில் போராடுகின்றனர். அதை கொச்சைப்படுத்த, மத்திய அரசின் புரோக்கர் நாராயணசாமி போடும் எலும்பு துண்டை வாயில் கவ்வி திரியும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    ReplyDelete
    Replies
    1. இந்த இந்தியன் இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாரு... பழைய பதிவுல ப்ரதாநு யாரோ இதே கேள்வி கேட்டாங்க... இந்த இந்தியன் அதெல்லாம் நடக்கவே நடக்காது... இது தவற வேற வழியே இல்லன்னு சப்ப கட்டு தான் கட்டிருக்காரு!

      Delete
    2. பேரன்பு கொண்ட அனானி நண்பருக்கு ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      உங்கள் கருத்தை பார்த்தால் எனக்கு கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது . கடுமையாக உழைத்து இருக்கிறேன் என்று நீங்கள் கொடுக்கும் பாராட்டை நான் தாழ்மையுடன் ஏற்றுகொள்ளுகிறேன் அதே நேரத்தில் இப்படி நான் உண்மையை எழுதுவதால் திரு . நாராயணசாமி பணம் கொடுப்பார் என்றால் , நீங்களே கொஞ்சம் வாங்கி கொடுங்களேன் .... ஏன் சார் ..., நான் எழுதிய அதாரப்பூர்வ பதிவை குறித்து நீங்கள் ஒன்றுமே எழுதாத காரணத்தினால் நான் கூறியதை உண்மை என்று நீங்களே ஏற்று கொள்ளுகிறீர்கள் தானே ...!

      நீங்கள் பாகிஸ்தான் காரர் என்று நான் சொல்லவில்லை . நான் ஒரு இந்தியன் என்று எனக்கு நானே பெருமையுடன் கூறிகொள்வதில் என்ன தவறு கண்டீர்கள் ... நான் ஒரு இந்தியனாய் பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளுகிறேன் ...

      ஐயா , காமெரா பார்த்து பேசுவதற்கு பிள்ளைகள் கூச்சப்படுகிறது என்றால் , அந்த பிள்ளைகளுக்கு காமெரா குறித்த அறிவியல் அறிவு கூட வரவில்லை என்று தானே அர்த்தம் . பிறகு எப்படி ஐயா அணுமின் நிலையங்களை பற்றி பிள்ளைகள் பேசமுடியும் ...?

      என்னுடைய எழுத்துகள் எல்லாம் மக்களை தவறான திசையில் கொண்டுபோகும் சில தீய சக்திகளுக்கு எதிரானது தானே அல்லாமல் , அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் ....

      திரு. உதயகுமாரை குற்றப்படுதலாம் என்று நீங்கள் கூறி இருப்பதில் இருந்து , நீங்கள் இந்த பதிவை ஏற்று கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம் தானே .... தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  2. as usual you rock

    ReplyDelete
    Replies
    1. Dear Friend.

      Thank you verymuch for your visit and comments...

      Please visit again...

      Delete
  3. my friend

    where were you before few months?

    Anand

    ReplyDelete
    Replies
    1. Dear Friend ,

      i was the reader of many blogs once. But while seeing the foolish writings of the authors about Nuclear , i came here as an author..

      Thank you...

      Delete
  4. பொதுவாக அணுமின் நிலையங்கள் அவற்றின் பாதுகாப்பான , சுற்று சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான தொடர்ச்சியான ( 24 x 7 மணி நேரமும் ) மின்சாரதிர்க்க்காகவே விரும்பப்படுகிறது

    Good Joke

    Anand

    ReplyDelete
    Replies
    1. Dear Anand ,

      kindly give me some time , to make new posting in this subject...

      Thank you

      Delete
  5. எல்லா மின்சார தயாரிப்பிலும் பிரச்சனைதான் அனல்மின் நிலையம்- மிகுந்த காற்றுமாசு, நீர்மின்நிலையம்- நிலநடுக்க ஆபத்து. நல்ல தூய வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் அந்தமான் காட்டுக்கு போய்வாழலாம்

    ReplyDelete
  6. Good article with valid informations

    ReplyDelete
    Replies
    1. Dear Friend ,

      Thank you for your visit & comments. This encourages me...

      Delete
  7. Why do not you migrate to live in kudankulam or kalpakkam

    ReplyDelete
    Replies
    1. யார் மாட்டேங்கிறாங்க அங்க எனக்கு ஒரு க்ரவுண்டல் வீடு வாங்கி கொடுங்க பேஷா போய் கூடங்குளத்துல குடி இருக்கிரோம்

      Delete
    2. Why Not.... I do agree with the answer given by another Anony friend .... I am ready to live in Kudankulam. What harm ..?

      Delete
  8. udayakumar or any other kumar are not important. For your luxury thousands of people needs to live under fear all their life?

    ReplyDelete
    Replies
    1. funny.!! electricity is not a luxury , its basic common need of any human being.

      Delete
    2. என்னது லக்ஸரியா? யோவ் இங்க அவனவன் வூட்ல சிங்கிள் பல்புக்கே கரண்ட் இல்லாம தவிக்கிறான் இதுல லக்சரிக்கு யாருங்க கூடங்குளம் கேட்டது? போய் கொயம்புத்தூர் பக்கம் போய் பாருங்க. மின்சார தட்டுபாட்டால் எத்தனை சிறு தொழில்கள் அழிந்து கொண்டு இருக்கின்றன என்பது புரியும்.

      பயம் எல்லாம் உதயகுமார் போல ஆட்கள் கிளப்பி விடும் பீதி

      Delete
    3. Dear friends ,

      thank you for your visit and comments...

      Why you are not understanding , " Electricity is the base for the development of our Economy " . It is not for luxury life.... It is a basic requirement to the life of people...

      Thank you & visit again...

      Delete
  9. அருமையான விளக்கம் ! பணி தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பருக்கு .

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      தங்களின் பாராட்டு என்னை உற்சாகபடுத்துகிறது ...

      நன்றி

      Delete
  10. ஜெர்மன் ஜப்பான் போன்ற நாடுகள் ஏன் அணு உலைகளை புரக்கணிக்க முடிவு செய்துள்ளது. அணு உலைகள் இயற்கைக்கு பாதகமா இல்லையா, கதிர்வீச்சு அபாயம் உண்டா இல்லையா ? தெளிவு படுத்துவீர்களா?

    ReplyDelete
    Replies
    1. germany closed its old nuclear power generations projects. its not yet decided about the future nuclear power generation projects.

      Japan did not stopped its projects, its considering to enhance the protection.
      you can read about more information on this blog

      Delete
    2. சென்னை கல்பாக்கத்தில் பல வருடங்களாக அனு உலை இருக்கிறது. அதனால் சென்னை அதன் சுற்று புறத்தில் கதிர் வீச்சு பாதிப்பு என கேள்விபட்டு இருக்கிறீர்களா?
      கல்பாக்கதில் விபத்து நடந்தது, எரிமலை இருக்கிறது என சில பேர் உடான்ஸ் விட்டு திருகிறார்கள். ஆதாரம் இல்லாத பேச்சுகள் அவை.

      Delete
    3. Josephine, Please read this.

      http://www.frontlineonnet.com/stories/20120406290610300.htm

      "In Japan, home to the world's third largest fleet of reactors (after the U.S. and France), only two of 54 reactors are working. And only one of them is on Honshu, the main island. Attempts to restart reactors are encountering fierce opposition from local authorities and citizens. Five million people have signed a nationwide appeal to abandon nuclear power."

      Delete
    4. Dear sister ,

      Thank you for your visit and you have asked a very good constructive question...

      Regarding the status of Japan .... Ofcourse , i have to write a seperate article. anyway , let me make you understand with some small words...

      ஜெர்மனி 2020 ல் அணு உலைகளை மூட போகிறது ( only old Projects. it may be noted that once after Chernobyl also , germany took the same decision.. but afterwards it is withdrawn ) . பின் ஏன் இந்தியா மூட கூடாது என்று ...? ஜெர்மனியின் மொத்த பரப்பளவு 357092 ச. கிமீ . மக்கள் தொகை 82 மில்லியன் அதாவது 1 ச.கிமீ பரப்பளவில் 2296 பேர் வசிக்கிறார்கள் மொத்தம் 20000 MWe மேலான மின் சக்தி 17 அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் மின் பயன்பாடு 70000 KWh . ஆனால் இந்தியாவின் நிலபரப்பளவு 2973193 ச.கிமீ. மொத்த மக்கள் தொகை சுமார் 121 மில்லியன். அதாவது 1 ச.கிமீ பரப்பில் சுமார் 406 பேர் வசிக்கிறார்கள். மொத்தம் 4500 MWe மின்சக்தி 20 அணு உலைகள் மூலம் தயாரிக்க படுகிறது. தனி மனித மின் பயன்பாடு 700 KWh .

      நன்கு கவனித்து பாருங்கள் .. ஜெர்மனியின் மக்கள் அடர்த்தி இந்தியாவை விட 5 .5 மடங்கு அதிகம் . அது மாத்திரமல்ல ஜெர்மனி தன்னிறைவு அடைந்து விட்ட படியினாலும் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவை யோசித்து பாருங்கள் . மாத்திரமல்ல ஜெர்மனியின் இந்த முடிவால் சுமார் 250 பில்லியன் யூரோ ( 350 பில்லியன் டாலர் .., அதாவது 350 x 50 = 17500 பில்லியன் ருபாய் .. 1 பில்லியன் என்பது 100 கோடி . அப்படியெனில் மொத்தம் 1750000 கோடி ருபாய் ) முதலீடு செய்ய வேண்டுமாம் ( தகவலுக்கு http://www.thelocal.de/money/20110919-37687.html பார்க்க )

      Not only that German is importing the electricity from France , where the electricity is from Nuclear Only...

      I have already written an article , "அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ...? " http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_15.html

      Thank you.... & visit again....

      Delete
  11. நல்ல விளக்கங்கள் மற்றும் துல்லியமா புள்ளி விவரங்கள்...
    கூடங்குளம் அணுமின் நிலையம் முலம் தயாரிக்க படும் மின்சாரத்தின் முலம் எத்தனை ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மின் பற்றாகுறை சரி செய்ய படும் ???
    மின் பற்றாகுறை காரணமாக இப்பொழுதே பல குடும்பங்கள் நடு தெருவுக்கு வந்து விட்டன..
    கோவையில் பல சிறு குறு தொழிற்சாலைகள் இபொழுதே முட பட்டு விட்டன.

    //உங்க ப்ளாக் டெம்ப்ளேட்-ஐ மாற்றினால் படிக்க நன்றாக இருக்கும்.. அந்த Tabler Column மிகவும் சிரமப்பட்டு படிக்க வேண்டியது உள்ளது.. இல்லாட்டி உங்க font colour-ஐ மாற்றுங்கள்...///

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பருக்கு .

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      தங்களின் பாராட்டு என்னை உற்சாகபடுத்துகிறது ...

      நிச்சயமாக எனது template யை மாற்ற நான் முயற்சி செய்கிறேன் .

      நன்றி

      Delete
  12. உதயகுமார் போராட்டம் அல்லது சாப்பாடு சாப்பிட்டுகொண்டு உண்ணாவிரதம் இருக்கவேண்டும்
    என்றால் கூடங்குளத்தில் இருக்கவேண்டும் அதைவிட்டு எதற்க்கு இடிந்தகரையில் நாடகம்
    நடத்துகிறார்.

    ReplyDelete
  13. நான் தமிழன்...........

    ReplyDelete
    Replies
    1. இருந்து விட்டு போ

      Delete
  14. Hello Indian,
    From where did you get the power production and efficiency details? I checked in your link on NPCIL and found only the capacity details of all reactors not the power production details. Kindly explain.

    ReplyDelete
    Replies
    1. அதே தளத்தில் ஏற்கனவே பயனில் உள்ள மின் நிலையங்களின் பெயரை க்ளிக் செய்து பார்க்கவும். அங்கு அனைத்து தகவல்களும் உள்ளது.
      http://www.npcil.nic.in/main

      Delete
    2. Aninymous,
      Nothing displayed in your above mentioned link. BTW, did you mean this page?
      http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=74

      Here also I could not found what I want.

      Delete
    3. http://www.npcil.nic.in/main/ProjectOperationDisplay.aspx?ReactorID=74

      this is information about tarapur plant. it has all the information you require. kindly check individual power plants from the portal.

      Delete
    4. Thank you friends for your constructive discussion..

      Delete
  15. அருமையான விளக்கம் ! வாழ்த்துக்கள் ! வாழ்க இந்தியா!

    ReplyDelete
  16. உங்கள் வாதம் சரி என்றே வைத்துக்கொள்வோம.. ஒரு தனி மனிதனால் 2000 மக்களை பேசி தன் பக்கம் வைத்திருக்க முடிகிரன்தென்றால் .. 120 கோடியை ஆளும் / 8 கோடியை ஆளும் அரசுகளால் அந்த 2000 பேருக்கு விவரமாக விளக்கி அவர்களிடம் திரு உதயகுமாரை தனிமை படுத்த முடியவில்லையா .. கையாலாகத அரசுகளா ? .. அதை விடுத்து ஜெயா அரசு ஏன் இரட்டை வேடம் போட்டது??

    ReplyDelete
    Replies
    1. தனி மனிதன் மதம் பெயரால் 2000 மக்களை வெளியுலக வாசம் படாமல் மக்களை அடைத்து வைத்து இருக்கிறார். தென் மாவட்ட கடலோர கிராமங்களில் அரசை விட சர்ச் பேச்சுக்கு தான் மக்கள் கட்டுபடுவர். மேலும் உதயமுமார் பிண்ணியில் நக்சல் தீவிரவாதிகள் உள்ளதால் அரசு இந்த பிரச்சனையை எடுத்தோம் கவிழ்த்தோம் என கையாள முடியாது.

      Delete
    2. அன்பு நண்பருக்கு .

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது தான் அரசுகளின் நோக்கம் என்பது தான் சரியான பதில் ... திரு .உதயகுமாரின் போலி முகமூடி கிழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை ...

      நன்றி

      Delete
  17. @ அனானி..
    கொஞ்சம் சன் நியூஸ் பார்க்க வேண்டுகிறேன்...உதயகுமார்க்கு நக்ஸல்கள் பின்னணியில் உள்ளனர் என்ற செய்தி வெளியாகி உள்ளது..

    ReplyDelete
  18. anony - so what.. my question is not abotu naxal or who is behind udayakumar.. ! it is about the capacity of TN and Central Govt. to convince 2000 people.

    ReplyDelete
    Replies
    1. govt can take any action but at the same time it has irresponsibility to handle the situation smoothly so it wont affect the innocents

      Delete
  19. as usual , data in the above table doesnt have justification.. as usual , blog author will say tat we have to believe because he is saying it

    ReplyDelete
    Replies
    1. without checking the proofs he has given you simply blabbering without any facts.

      Delete
    2. Dear anony... friend ,

      if you are not believing me .... Why you can not ask NPCIL about this details through RTI...?

      Please do it then you will understand the reality of this article...

      Thank you...

      Delete
    3. அண்ணே, நாங்க NPCIL-ஐ எல்லாம் கேட்க வேண்டியதில்லை. நீங்கள் கொடுத்திருக்கும் Data உண்மை என்றால், ஏன் இன்னும் பவர் கட் இருக்கிறது? இவ்வளவு மின்சார உற்பத்தில் வளர்ச்சி இருக்கும்போது ஏன் இந்த மின்வெட்டு தொடர்கிறது....? ஆக, மின் உற்பத்தி வளர்ச்சியே இல்லாமல், ஒரு டுபாகூர் Dataவைத் தருகிறீர்கள் நீங்கள். நீங்கள்தான் உண்மையான இந்தியன் .

      Delete
    4. Hi all,
      That's what I am repeatedly telling that there is no power production details in the link. This Indian is a liar.

      Delete
    5. @ முருகன் : நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      உங்கள் கருத்து எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது . அணுமின் நிலையங்கள் 40 % திறனில் இயங்கும் என்ற திரு . உதயகுமாரின் பொய் கூற்றை தகுந்த ஆதாரங்களுடன் பொய் என நிரூபித்து உள்ளேன் . ஆனால் நீங்கள் ஏன் மின் தட்டுப்பாடு ஏற்ப்படுகிறது என்று கேட்கிறீர்கள் . இது ஒரு நல்ல கேள்வி என்றே நான் வைத்து கொள்ளுகிறேன் . நண்பரே ... நான் அணுமின் நிலையங்களின் திறனை குறித்து கட்டுரை எழுதி உள்ளேன் . ஆனால் நமது மின் தேவையை பெருமளவில் சந்தித்து வரும் மற்ற மின்நிலையங்கள் எதிர் கொள்ளும் சவாலை எழுதவில்லை . அப்படி எழுதி இருப்பேன் என்றால் , உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து இருக்கும் ....

      கொஞ்சம் பொறுங்கள் ... எல்லா மின் நிலையங்கள் குறித்த ஒரு ஒப்புமை கட்டுரை எழுதுகிறேன் .

      நன்றி

      Delete
    6. @ Vaaimai :

      Dear friend , thank you for your visit...

      You will accept all the people as " True " , those who are saying false informations and you will say about the truth as Lie.....

      No problem for me.... My writtings will be continued against the false informations.

      thank you...

      Delete
    7. @இருதயம்: தவறான தகவல்களுக்காக எழுதினால் மட்டும் போதாது அண்ணே... ஆபத்தான, மோசடியான, லஞ்ச ஊழல்களை ஒளிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும்... செய்வீர்கள்தானே...?

      Delete
    8. என்ன தகுந்த ஆதாரத்துடன் எழுதி உள்ளீர்கள்...? நீங்க ஒரு "Table"-ல கொஞ்சம் Numbersஐ டைப் பண்ணி கொடுத்தா அதை நாங்க அப்படியே நம்பணுமா? நீங்க சொன்ன Site-லயோ , அனானி சொன்ன linksலையோ ஒரு தகவலும் இல்லை. நீங்க எங்க இருந்து எடுத்தீங்களோ அந்த Link-ஐ கொடுங்க இருதயம். ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்க?

      Delete
    9. யாருக்குமே கிடைக்காத தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி இப்படி கிடைக்கிறது? தகவல் அறியும் உண்மை சட்டத்தில் வாங்கினீர்களா? நாங்க எல்லாம் கேட்டா... இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான மேட்டர்...உனக்கு எதுக்கு இது எல்லாம்? நீ நக்சலா? நீ எந்த தீவரவாத இயக்கம்...? ஒசாமா உனக்கு எப்படி சொந்தம்? தாலிபான் அமைப்பு உனக்கு சொந்தமாமே? அப்படின்னு எல்லாம் கேட்குறாங்க அண்ணே... ஆனா பாருங்க உங்களுக்கு மட்டும் உடனே கொடுத்துட்டானுங்க... நீங்கதாண்ணே நிஜமான இந்தியன்.....

      Delete
    10. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

      //@இருதயம்: தவறான தகவல்களுக்காக எழுதினால் மட்டும் போதாது அண்ணே... ஆபத்தான, மோசடியான, லஞ்ச ஊழல்களை ஒளிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும்... செய்வீர்கள்தானே...?/

      நிச்சயமாக நண்பரே .... எனக்கு இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .... லஞ்ச ஊழல்களை ஒழிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் எனது பதிவுகள் வரும் ...கண்டிப்பாக ...!

      //நீங்க சொன்ன Site-லயோ , அனானி சொன்ன linksலையோ ஒரு தகவலும் இல்லை//
      நான் கொடுத்த லிங்க் ல் உள்ள ஒவ்வொரு அணுமின் நிலையத்தையும் குறித்த தகவல்களை தொகுத்து தான் நான் எனது பதிவில் எழுதியுள்ளேன் நண்பரே .... நான் கொடுத்து இருக்கும் ஆதாரங்கள் ஒரு பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல என்பதை தங்களுக்கு தெரிவித்து கொள்ளுகிறேன் ...

      //யாருக்குமே கிடைக்காத தகவல்கள் எல்லாம் உங்களுக்கு எப்படி இப்படி கிடைக்கிறது? தகவல் அறியும் உண்மை சட்டத்தில் வாங்கினீர்களா?//
      Yes ..... எவ்வளவு மின்சாராம் தயாரிக்கப்படுகிறது என்ற உங்கள் கேள்விக்கு நிச்சயம் தகவல் உரிமை சட்டத்தில் பதில் கிடைக்கும் .. ஆனால் அணுமின் நிலையத்தின் வரைபடம் வேண்டும் , அணு எரிபொருளை சேமித்து வைக்கும் இடம் குறித்த தகவல் வேண்டும் என்று நீங்கள் கேட்டால் , உங்களுக்கு பதில் கிடைக்காது நண்பரே ....!

      நன்றி

      Delete
    11. நான் ஒண்ணும் அணு உலை வரைபடம் கேட்கலையே... நீங்க ஏன் பேச்ச மாத்துறீங்க... எவ்வளவு மின்சாராம் தயாரிக்கப்படுகிறது என்ற எனது கேள்விக்கு எங்கே பதில்.... உங்களுக்கு கிடைத்த இந்த தகவல் (நீங்களா டைப் பண்ணி இருக்கும்) போலியானது... நம்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.... இவ்வளவு மின்சார உற்பத்தி இருந்தா பவர் கட் வர வேண்டிய அவசியமே இல்லை... நீங்களா தொகுத்து எழுதினீங்கன்னு சொல்றீங்க... நான் நீங்க கொடுத்த லின்க்ல போய் ஒரு நாள் பூரா முயற்சி செஞ்சு பார்த்தும் ஒண்ணும் கிடைக்கல...

      இது நீங்களா எழுதினது....என்ன சரியா...

      Delete
    12. ///நிச்சயமாக நண்பரே .... எனக்கு இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .... லஞ்ச ஊழல்களை ஒழிக்கும் திட்டங்களுக்கு எதிராகவும் எனது பதிவுகள் வரும் ...கண்டிப்பாக ...!///

      பார்த்தீங்களா... இந்த பதில்ல இருந்தே ஒண்ணு தெரியுது... நீங்க எதையுமே சரியாக படிக்காமல், புரியாமல் பேசும் ஆள் என்று...

      நான் சொன்னது... லஞ்ச ஊழலை ஒளிக்கும் (Hiding) திட்டங்களுக்கு எதிராக போராடுங்கள்...

      நீங்கள் சொல்வது ... லஞ்ச ஊழலை ஒழிக்கும் (Destroying) திட்டங்களுக்கு எதிராக போராடுவேன்...

      என்ன கொடும சார் இது... நாங்க எல்லாம் லஞ்ச ஊழலை ஒழிக்க திட்டங்கள் தீட்டினா... நீங்க அந்த திட்டங்களுக்கு எதிராக போராடுவேன் என்கிறீர்கள்...

      போங்க சார்... போயி நல்லா படிங்க முதல்ல...

      Delete
  20. I spend more time to read the post and all the above comment.
    Y u not think about produce electricity through Solar, water and wind. Developed countries like switzerland only has solar power half of a year. But they can produce electricity through solar. Like wise through water and wind. But India has solar power throughout the year similarly wind and also has water. But y u people not talk about that. Nuclear plant is not only a solution for Electricity. Still upto now we live. How we get power and electricity till now. U can say now the need of electricity is increased. ok i understand. What is the need of power cut for more than 10 hours. why this suddenly changes happen. Pls think.

    -- vinoth

    ReplyDelete
    Replies
    1. Dear friend Vinod...,

      thank you for your visit. I do appreciate your valuable constructive discussion....

      I have never said anything against Solar Power or Wind power. India is also working in all the fields to generate electricity. But such power will not meet our energy requirement . our requirement is 5 Lakh MWe , where as we have an installed capacity of 1.8 Lakh MWe... Nuclear gives the constant and continuous electricity in all time... Just i will explain all this facts in the coming article...

      Nuclear Power program is planned for the future requirement. What i mean .... once all the sources ( 62% thermal) comes down because of shortage of coal... this Nuclear power will meet that shortage also....

      Because of major failure in Thermal Power Stations in tamilnadu , we are facing severe Power cut...

      Thank you...

      Delete
    2. Vinoth
      மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு, எதிலுமே பயனில்லை எனில் இருதியாக அணுமின் நிலையத்தை நிறுவலாமே. அனு உலையால் பாதிப்பே இல்லை என்று சொல்லுவது 200% அப்பட்டமான பொய். தனக்கு கீழ் இறுப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துவிடக் கூடாது.

      Delete
  21. உங்கள் கருத்துகள் மிக arumai. வரவேற்பட வேண்டியவை. இயற்கை எத்தனையோ alivai தருகிறது. நாடு நலம் காண ஒரு அணு மின்னிலயதி அமைக்க ethanai போரட்டம. நாளைக்கே sunami பூகம்பம் vandhu அனைவரும் அழிந்து விட்டால் இந்த போரட்டகரர்கள் என்ன செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. குமார், இயற்கை அழிவைத்தருவதில்லை. மனிதனின் பேராசையே அழிவுக்கு காரணம். ஒரு சுனாமி வந்தால் ஆயிரக்கணக்கானோர் மடிவர். ஆனால், அதன் பாதிப்பு அதோடு முடிந்து போகும். ஒரு பெரு வெள்ளம் வந்தால், ஆயிரக்கணக்கானோர் மடிவர். ஆனால், அதன் பாதிப்பு அதோடு முடிந்து போகும். ஆனால், அணு விபத்து நிகழ்ந்தால், உங்களை மட்டும் அல்ல, உங்கள் பேரக்குழந்தைகளின் , பேரக்குழந்தைகளின் , பேரக்குழந்தைகளை கூட விட்டு வைக்காது அதன் பாதிப்பு.

      Delete
    2. @ முருகன் : நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      அணுமின் நிலையங்களை குறித்த உங்கள் பார்வை மிக குறுகியது என்று நான் நினைக்கிறேன் . தவறு இல்லை .. ஆனால் இந்திய அணுமின் நிலையங்கள் மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுக்கு முன் உரிமை கொடுத்து கட்டப்பட்டவை . அதனால் நீங்கள் பயப்படுகிற படி ஆபத்துகள் நேரிடாது ... அது எப்படி நீங்கள் சொல்லமுடியும் என்று நீங்கள் அடுத்த கேள்வி கேட்பீர்கள் .... நியாயம் ......

      ஏற்க்கனவே அணுமின் நிலைய்னகள் அமைக்கப்படும் நிலப்பரப்பில் ஏற்ப்படகூடிய சாதக பாதகங்களை கருத்தில் கொண்டு தான் அணுமின் நிலையங்கள் கட்டப்படுகிறதே தவீர , நாம் நினைக்கிற படி எந்த இடத்திலும் அணுமின் நிலையங்களை நாம் அமைக்கமுடியாது என்பது தான் உண்மை ...

      நன்றி

      Delete
    3. இருதயம் அண்ணே.. என் பார்வை குறுகியது என்கிறீர்கள்... அப்படியே வச்சுக்குவோம்.

      இப்பவும் ஒண்ணும் கேட்டுப் போகல.... எதாவது பேரிடர் நிகழ்ந்தால் அதற்கான நஷ்ட ஈடு முழுவதையும், அணு உலை சம்பந்தப்பட்ட நிறுவனமே முழுவதுமாக தர வேண்டும் என்று ஒப்புகொள்ளச்செய்ய முடியுமா? இந்திய அரசாங்கம் அதை தரக்கூடாது.... அரசாங்க பணம் என்பது மக்களின் வரிப்பணம். அதை விடுத்து அனைத்து நஷ்டஈடும் சம்பந்தப்பட்ட நிறுவனமே முழுவதுமாக தர வேண்டும். பாதுகாப்பானது என்றால் ஏன் அந்த நிறுவனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது? 1500 கோடி வரை மட்டுமே அந்த நிறுவனம் தருமாம். இந்தத் திட்டம் பாதுகாப்பானது என்றால் ஏன் முழுவதையும் தர ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்?

      இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்... அடுத்த நாடு எதுவும், இந்திய நாடு நன்றாக வளர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்காது... எந்த திட்டமானாலும் அவர்கள் பயன் பெறவே நினைப்பார்கள்... உதவி என்பது எல்லாம் ஒரு விதமான வியாபாரத்தந்திரம்.

      ஏதோ எனக்குத்தெரிந்த குறுகிய பார்வை இதுதான். நீங்கள்தான் கடலளவு கற்றுத்தேர்ந்தவர் ஆயிற்றே.... எங்கே சொல்லுங்கள்...அவர்கள் ஏன் முழு நஷ்ட ஈட்டையும் தர ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள் என்று....?

      Delete
    4. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

      Nuclear liablity Bill குறித்த உங்கள் கேள்வி வரவேற்க தகுந்தது தான் . அநேகர் இதை குறித்து தவறாகவே புரிந்து வைத்து உள்ளார்கள் . Nuclear liablity பில் எனப்படுவதின் மூலம் , ஏதாவது நஷ்டம் ( விபத்து மாத்திரம் அல்ல ) , அந்த உபகரணத்தை கொடுத்த நிறுவனமும் கொஞ்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கட்டாயமாகிறது .... அது என்ன கொஞ்சம் ரூபாய் என்று நீங்கள் கேட்கலாம் ...

      இந்த Bill யை நாம் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால் , நாம் பொருட்களை Transport செய்யும் பொழுது நாம் செய்கிற Transit insurance Concept யை புரிந்து கொண்டால் , இதை எளிதில் விளங்கி கொள்ளலாம் . அதாவது , நாம் லாரியில் ஏற்றும் பொருளுக்கு , இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்து இருப்போம் . அந்த பொருட்களுக்கு ஏதாவது Damage ஆகி இருந்தால் Insurance company தான் நமக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் .... மாறாக Transport நிறுவனம் அல்ல . ஆனால் இந்திய வாகன சட்டப்படி Insurance நிறுவனம் Transport நிறுவனத்திடம் இருந்து ஒரு அளவு பணம் வசூலிக்கும் . இதை SDR ( Special Drawing Rights ) என்று சொல்லுவார்கள் ...

      அதை போலவே .... இந்திய அணுமின் நிலையங்கள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது . அப்படி ஏதாவது நஷ்டம் ஏற்ப்பட்டால் ( காப்பீடு நிறுவனம் மக்கள் பணம் என்பதால் ) அணு உபகரனகளை தயார் செய்து Supply செய்யும் நிறுவனம் SDR Rights படி பணம் கொடுக்கும் ....

      இதை குறித்த அநேகம் பேர் கேள்விகள் கேட்டிருப்பதால் , நான் தனி இடுகை எழுத ஆசைப்படுகிறேன் .. ஆனால் மிகுந்த பணி சுமையின் காரணமாக என்னால் முடியவில்லை .. கொஞ்சம் காத்திருங்களேன் .... நன்றி

      Delete
    5. எது என்ன புதுக் கரடி? இந்திய அணு மின் நிலையங்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனவா... வாங்க பாஸ்... எந்த இன்சூரன்ஸ் கம்பெனிகிட்ட Insure பண்ணி இருக்கீங்க... premium என்ன? இந்தியாவுக்குள்ள Insure பண்ணனும்னா ஒரு இந்தியக் கம்பனிஇடமே செய்யவேண்டும்... அப்படி எந்த கம்பெனி Insurance கொடுத்திருக்கு.... இந்த கேள்வியைக் கேட்பதனால் என்னை நக்சல் என்றோ, ஒசாமாவுக்கு தம்பி என்றோ, தாலிபான் தலைவன் என்றோ உளறிவிடாதீர்கள்... (அதைத்தானே செய்து கொண்டு இருக்கிறீர்கள்...)

      நஷ்ட ஈட்டு ஷரத்து என்னான்னா ... விபத்து நிகழுமாயின்... அந்த வெளிநாட்டு நிறுவனம் 1500௦௦ கோடிகளுக்கு மேல் நஷ்டஈடு தர வேண்டியதில்லை... அதற்குமேல் ஆகும் அனைத்து நஷ்டஈட்டையும் இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும்....

      ஏன் பாஸ்... இங்க எங்க இன்சூரன்ஸ் கம்பெனி பேர் வருது....

      போங்க போங்க... போயி நல்லா படிச்சிட்டு வந்து பேசுங்க.... உங்கள எல்லாம் பார்த்த எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது...

      Delete
    6. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      ஆம் ... இந்திய அணுமின் நிலையங்கள் காப்பீடு செய்யப்பட்டு தான் உள்ளது நண்பரே .... பல வகையான காப்பீடுகள் உள்ளது ..... Nuclear insurance policy என்று கூட ஒரு பாலிசி உள்ளது ..... ஆனால் எந்த Insurance company இடம் insure செய்து இருக்கிறார்கள் என்ற தங்களின் கேள்விக்கு சம்பத்தப்பட்ட துறை தான் பதில் கொடுக்க வேண்டும் . வேண்டுமானால் நாம் RTI பயன்படுத்தி கேட்டு பார்ப்போம் .....

      நன்றி

      Delete
  22. இவ்வளவு மின்சார உற்பத்தி அதிகரிச்சிருக்கா கடந்த 4 வருடங்களில்? நிஜமாவே ஆச்சரியமான விசயம்தான்?

    ஆமா...? இவ்வளவு உற்பத்தி அதிகரிச்ச பின்னும் ஏன் 10௦ மணி நேர பவர் கட் இருக்கு...? but உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. @ முருகன் : நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      தற்பொழுது அணுமின் நிலையங்களின் Instaled capacity 3 % சதவீதம் தான் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள் . அதாவது ஏற்க்கனவே இந்தியாவில் நிறுவப்பட்டு உள்ள 1 . 8 லட்சம் MWe நிலையங்களில் இந்திய அணுமின் நிலையங்களின் Capacity 4780 MWe மாத்திரம் தான் . எனவே தான் இந்த அளவை அதிகரித்தால் , தற்பொழுது நிகலுவது போல மின்வெட்டு வருங்காலத்தில் நடக்காது நாம் தடுக்கலாம் ...

      நன்றி

      Delete
    2. அப்படிப்போடு... பூனைக்குட்டி வெளியே வருகிறது... ஒரு அணு உலை கட்ட தோராயமாக ... 5000௦ கோடி என்று வைத்துக்கொண்டாலும், 22 அணு உலைகள் கட்ட 110000௦௦௦ கோடி செலவு ஆகியிருக்கு. ஆனா இவ்வளவு செலவு பண்ணியும், வெறும் 4780 MWe௦தான் மின்சாரம் உற்பத்தி பண்றதா சொல்றீங்க... இதை, மலிவானதுன்னு வேற சொல்லுறீங்க.... இப்ப சொல்லுங்க யாரு யார கேனப்பயல்ன்னு நினைச்சு எலி ஏரோப்லேன் ஓட்டுதுன்னு சொன்னது?

      எதிர்காலத்துல மின்வெட்ட தடுக்கிறது எல்லாம் இருக்கட்டும்... இப்ப மின்வெட்ட முதல்ல தடுக்கப்பாருங்க... Artificial-லா இருக்குற மின்வெட்டு ஏன் ஏன் ஏன் ஏன் ...?

      Delete
    3. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

      உங்கள் கணக்கு நல்ல கணக்கு தான் .. ஆனால் MWe Capacity மற்றும் மின்சார தயாரிப்பு போன்றவற்றையும் , மற்ற சக்திகளுக்கு பயன்படுத்தும் தொகையையும் நீங்கள் ஏன் கணக்கில் கொள்ளவில்லை ...?
      மற்ற மின் நிலையங்களை விட அணுமின் நிலையங்கள் தான் குறைந்த விலையில் மின்சாரம் கொடுக்க முடிகிறது ... எதனால் ....?

      யோசியுங்கள் நண்பரே

      நன்றி

      Delete
    4. நான் யோசிக்கிறது இருக்கட்டும்... 4800௦ Mwe மின்சாரம் தயாரிக்க 110000௦௦௦௦ (ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி) என்பது... குறைந்த தொகையா? அண்ணே நீங்க என்ன ராசாவுக்கு சொந்தமா? இந்த அமௌன்ட் எல்லாம் உங்களுக்கு குறைச்சலா தெரியுது...

      22 அணு உலைகளை கட்டவே 110000௦௦௦௦ (ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி) தேவை என்றால்... தீய்ந்த எரிபொருளை பாதுகாக்க எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள்..? எவ்வளவு காலம் செலவழிப்பீர்கள்... அது எல்லாம் இந்த கணக்குலயே வரலயே... நல்லா உக்காந்து யோசிங்க அண்ணே...

      Delete
    5. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      MWe என்பது மின்சாரம் தயாரிக்கும் Capacity அளவை குறிப்பிடுகிறது .. ஆனால் தயாரிக்கப்படும் மின்சாரம் என்பது யூனிட் அளவுகளில் அதாவது KWH என்று குறிப்பிடப்படுகிறது ... 1000 MWe capacity உள்ள சூரிய மின் நிலையம் ஓர் மாதத்திற்கு 36 கோடி யூனிட் ( 12 மணி நேரம் மாத்திரம் செயல்படும் ) என்றால் , அணுமின் நிலையங்கள் 72 கோடி யூனிட் மின்சாரம் தயாரிக்கும் . கவனிக்க Capacity வேறு ....தயாரிக்கப்பட்டு உள்ள மின்சாரத்தின் அளவு வேறு......

      உங்கள் கணக்கு எனக்கு சரியாக படவில்லை நண்பரே ...

      நன்றி

      Delete
  23. அணு எரிபொருள் பற்றாக்குறை என்றால் 1974-ல் 4 அணு உலைகள் இருந்தது, எப்படி 308 வருடங்களில் 22 அணு உலைகளாக மாறின? வீட்டுல அடுப்பு எரிக்க மண்ணெண்ணை இல்லை என்றால், நாம் அடுப்பு வாங்குவோமா? நீங்கள் மட்டும் எப்படி அணு எரிபொருள் இல்லாமல்(பற்றாக்குற உடன்), அணு உலைகளை மட்டும் கட்டி வந்தீர்கள் ...?

    கேக்குறவன் கேனப்பயலா இருந்த எலி ஏரோப்லேன் ஓட்டும் சொல்லுவங்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. @ முருகன் : நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      உங்கள் கேள்விகளில் இருந்து நீங்கள் நாட்டு நடப்புகளில் கொஞ்சம் Week என்று தான் எனக்கு தெரிகிறது . பரவாயில்லை . நண்பரே ....நமது நாடு அணுகுண்டு சோதனை ஒன்றை பொக்ரானில் நடத்திய பொழுது NSG எனப்படும் அணு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் இந்தியாவிற்கு அணு எரிபொருள் ஏற்றுமதியை தடைசெய்தது .... இப்பொழுது நீங்கள் கேட்க்கிறீர்கள் ..... அப்படி எதற்கு நாம் இறக்குமதி செய்யவேண்டும் என்று .....இது கூட நியாயமான கேள்வி போல தான் தெரிகிறது .....

      நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க்கிறேன் ..... நமது நாட்டில் தான் போதிய அளவு எண்ணெய் வளம் இல்லையே .... நாம் ஏன் இறக்குமதி செய்யவேண்டும் ....? அது போல தான் இதுவும் ..... இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நிலையான மின்சாராம் வேண்டும் என்பதற்காக தான் அணு எரிபொருளை இறக்குமதி செய்தது இந்திய அரசு ....

      //கேக்குறவன் கேனப்பயலா இருந்த எலி ஏரோப்லேன் ஓட்டும் சொல்லுவங்கலாம்...//
      சரியான வார்த்தை .... இப்பொழுது தான் திரு . உதயகுமார் மக்களை எப்படி ஏமாற்றினார் என்பது எனக்கு விளங்குகிறது ...

      நன்றி

      Delete
    2. இருதயம் அண்ணே... நான் இங்க உதயகுமாரை இழுக்கவே இல்லை.... நீங்கள்தான் தேவை இல்லாமல் அவரை ஒவ்வொரு பதிலுக்கும் இழுக்கிறீர்கள். ஆக உங்கள் நோக்கம், உதயகுமாரை தூற்றுவது மட்டுமே... நீங்க எண்ணமும் பண்ணுங்க...

      நான் கேட்ட கேள்வியை நன்கு படித்து புரிந்து பதில் சொல்லுங்கள். நான் ஏன் எரிபொருள் இறக்குமதி செய்கிறீர்கள் என்று கேட்கவில்லை. எரிபொருளே கிடைக்கவில்லை...உலக நாடுகள் தடை போட்டு இருந்தன என்று சொல்லுகிறீர்கள்.... எரிபொருளே இல்லாத பொழுது எப்படி, எதற்கு ஐயா 22 அணு உலைகள் வரை கட்டி வந்தீர்கள்...? அதுவும் 30௦-40 வருட ஆயுள் உள்ள உலைகளை எரிபொருள் இல்லாமல் ஆயிரக் கணக்கில் கோடிகளை கொட்டி கட்டி வந்ததன் மர்மம்தான் என்ன?

      உதயகுமார் சொல்லுவதை அப்படியே கேட்பதற்கு நாங்கள் ஒன்றும் மங்குணிகள் இல்லை. .. அதே போலத்தான் நீங்கள் சொல்லுவதையும் அப்படியே கேட்பதற்கும் நாங்கள் ஒன்றும் இளிச்சவாயர்கள் இல்லை.

      Delete
    3. அது Week இல்லை ... Weak. நாங்க வேணா நாட்டு நடப்புல Weak ஆக இருந்துக்குறோம்... (அப்படின்னு நீங்க நினைச்சுக்கோங்க...).

      நீங்க முதல்ல படிக்கிறதை நல்லா படிச்சுட்டு வாங்க... அரைகுறையா படிச்சிட்டு அணு உலை பாதுகாப்பானது.. அதுவும், இந்திய அரசயில்வாதிகளின் முடிவில் கட்டிய அணு உலை மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள்...

      உங்களை எல்லாம் நினைச்சா பாவமா இருக்கு....

      Delete
    4. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

      உங்கள் கேள்விகள் என்னை உற்சாகபடுத்துகிறது ... நாம் ஏன் யூரனியம் இறக்குமதி செய்யவேண்டும் என்று ஒரு அருமையான கேள்வி கேட்டீர்கள் ... ஐயா உலகிலே அதிக அளவில் தோரியம் ( 3 லட்சம் டன் ) இந்தியாவில் கிடைக்கிறது . ஆனால் தோரியம் அணுமின் நிலையங்கள் கட்ட வேண்டுமானால் அதற்க்கு புளுட்டோனியம் 239 என்ற தனிமம் தேவைப்படும் . இந்த புளுட்டோனியம் 239 என்ற தனிமம் எப்பொழுது கிடைக்கும் தெரியுமா ...? யூரனியம் எரிபொருளாக பயன்படுத்தப்படும் அணுமின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது ...

      எனவே தான் இந்தியா யூரனியம் இறக்குமதி செய்வதில் கருத்தாய் இருக்கிறது .... ஏன் என்றால் , இப்பொழுது உள்ள அணுமின் நிலையங்களின் Spent Fuel ல் உள்ள புளுட்டோனியம் 239 மற்றும் தோரியம் ஆகியவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் இரண்டாம் நிலை அணுமின் திட்டங்கள் இந்தியாவில் உள்ளது ... எனவே மின்சார உற்பத்தியில் தனிர்றைவு இந்தியாவுக்கு உண்டாகும் .... இது தான் Dr பாபா அவர்களின் கனவும் கூட ...

      நன்றி

      Delete
    5. பாஸ்... நான் யுரேனியத்த ஏன் இறக்குமதி பண்றீங்கன்னு கேட்கல....

      நல்ல புரிஞ்சு படிச்சிட்டு அப்புறமா பதில் சொல்லுங்க சரியா...

      ஏன் கேள்வி யுரேனியம் ஏன் இறக்குமதி பண்றீங்கங்கறது கிடையாது...கிடையாது...கிடையாது... என்ன தெளிஞ்சிடுச்சா? என்ன புரிஞ்சிடுச்சா?

      மறுபடியும் கேட்கிறேன்....

      எரிபொருளே கிடைக்கவில்லை...உலக நாடுகள் தடை போட்டு இருந்தன என்று சொல்லுகிறீர்கள்.... எரிபொருளே இல்லாத பொழுது எப்படி, எதற்கு ஐயா 22 அணு உலைகள் வரை கட்டி வந்தீர்கள்...? அதுவும் 30௦-40 வருட ஆயுள் உள்ள உலைகளை எரிபொருள் இல்லாமல் ஆயிரக் கணக்கில் கோடிகளை கொட்டி கட்டி வந்ததன் மர்மம்தான் என்ன?

      எங்க கொஞ்சம் தெளிவா தெளிஞ்சிட்டு படிங்க பார்க்கலாம்... ம்ம்ம்ம் ... என்ன இப்ப கேள்வி புரியிதா?

      இந்தக் கேள்வியவும் Delete பண்ணிடாதீங்க.... திருப்பி திருப்பி டைப் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு...

      Delete
    6. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      தங்களின் கேள்வியை முழுமையாக புரிந்து கொண்டு தான் நான் பதில் கொடுத்து உள்ளேன் . ஆனால் நீங்கள் தான் புரிந்து கொள்ளவில்லை . அணு எரிபொருள் பற்றாக்குறை இருந்தும் ஏன் 20 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டது என்று நீங்கள் கேள்வி கேட்டீர்கள் ..... உங்கள் கேள்விக்கு நான் கொஞ்சம் சுருக்கமாக பதில் கொடுத்து இருந்தேன் ... அவ்வளவு தான் .....

      அதாவது .... வருங்காலத்தில் நமது மின் தேவையை பெருமளவில் சந்தித்து கொண்டு இருக்கும் அனல் மின் நிலையங்கள் நமது தேவையை சாதிக்க முடியாத பொழுது அணுமின் நிலையங்கள் மூலமாக தான் இந்த தேவை சந்திக்கமுடியும் .. இந்தியாவில் தோரியம் தனிமம் அதிக அளவில் இருந்தாலும் , அதை எரிபொருளாக பயன்படுத்தும் அணுமின் நிலையத்திற்கு தேவையான PU 239 என்ற தனிமம் யூரனியம் பயன்படுத்தும் அணுமின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் . அப்படியானால் இந்தியா தோரியம் அணுமின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தின் தன்னிறைவு அடைய வேண்டுமானால் , யூரனியம் அணுமின் நிலையங்கள் அவசியம் . இது தான் DR பாபா வின் கனவு என்றும் நான் எழுதி இருந்தேன் ... எனவே தான் U 235 எரிபொருள் நம்மிடம் இல்லாத பொழுதும் கூட எதிர்கால தேவைக்காக இந்த அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன .....

      தங்களுக்கு புரியாத அளவுக்கு மிக சுருக்கமான எனது முந்தைய பதிலுக்கு என்னை மன்னிக்கவும் ...

      நன்றி

      Delete
  24. முதலில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் என்றார்கள்...

    பின்பு, வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்றார்கள்..... (பின்பு அப்படி சொல்லவே இல்லை ... பணம் வரும் வழிகளை ஆராய்கிறோம் என்று சொன்னார்கள்...இன்னும் ஆய்ஞ்சுக்கிட்டு இருக்காங்கப்பா...)

    இப்பொழுது.... நக்சலைட் தொடர்பாம்....

    ங்கொய்யாலே.... மீடியா எல்லாம் உங்க பக்கம் இருந்தா... என்ன வேணா எழுதுவீங்களா?

    அணு உலைகளை ஆதரிப்போர் முதற்கொண்டு இதனைப் பற்றி சிந்திக்க வேண்டும். நமக்கு வாக்குறுதி தருவோர்...யார் என்று சிந்திக்க வேண்டும்? இந்த அரசியல் வியாதிகள், பல வடிவ நாக்கு கொண்டவர்கள். இவர்கள் வாக்குறுதியையா நாம் நம்புவது?

    ReplyDelete
    Replies
    1. என்னாங்கண்ணே...இந்தக் கேள்விக்கும் பதிலையே காணோம்...?

      Delete
    2. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

      நீங்கள் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் பதில் உங்கள் கேள்வியிலே உள்ளது ... ஆனால் இதில் பகடை காயாக அப்பாவி மக்கள் பயன்படுத்தப்படுவது தான் கொடுமை ....

      பொறுத்திருந்து பார்க்கலாம் ....

      Delete
    3. நான் கேட்ட மூன்று கேள்விகளுக்கும் எங்கே பதில் உள்ளது? எனக்கு ஒண்ணுமே தெரியலயே... ஏம்ப்பா நீங்க யாராவது பாத்தீங்களா? இவருக்கு மட்டும் கேள்விக்கான பதில் கேள்வியிலேயே தெரியுதாம்.... உங்களுக்கு தெரிஞ்சா சுல்லுன்கப்பா புண்ணியமா போவும்...

      Delete
    4. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

      உங்கள் கேள்விக்கு பதில் உங்கள் கேள்வியிலே இருக்கிறது ...

      // முதலில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம் என்றார்கள் ///
      பிறகு என்ன சொல்ல சொல்லுகிறீர்கள் .. போராட்டத்தை முன் நின்று ஆயர் நடத்த , பிற பாதிரியார்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் ....இப்பொழுது கூட கூட்டப்புளி என்ற கிராமத்தை சேர்ந்த பாதிரியார் சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டார் என்று நாளேடுகளில் நீங்கள் படிக்கவில்லையா ...?

      // வெளிநாட்டு பணம் ....//
      அரசின் ஆய்வு முடிவுகளுக்கு நாம் காத்து இருப்போம் . முதலில் வெளிநாட்டு பணம் என்றவுடன் , எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது என்றால் தூக்கு போடுவேன் என்று சொன்ன சிலர் தற்பொழுது கொஞ்சம் பணம் வந்தது அதை நியாயமாய் செலவு செய்துள்ளோம் என்கிறார்கள் ..

      // நக்சலைட் தொடர்பு //
      நிச்சயமாக இருக்கும் ..... சந்தேகம் இல்லை . ஆனால் மக்கள் அதினுடன் தொடர்பு வைத்து இருக்க மாட்டார்கள் எனவும் , மக்களை ஏமாற்றி போராட தூண்டும் சில சக்திகளுக்கு நக்சலைட் தொடர்பு இருக்கும் .. இல்லை என்றால் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பாடல்கள் எதற்கு ...?

      நீங்கள் அரசியல்வாதிகளை நம்பவேண்டாம் .... நம் நாட்டின் விஞ்ஞானிகளை நம்புங்கள் நண்பரே ... நன்றி

      Delete
    5. வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக முதலில் சொல்லிவிட்டு பின்பு ஆய்வு செய்கிறோம் என்று சொன்னது யார்? ஆய்வே செய்யாமல் எப்படி வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்றீர்கள்? இப்படி பொய் சொன்னால் பிரதமர் மீதே வழக்கு போடுவோம் என்று சொன்ன உடன்தானே இப்படி பல்டி அடித்தீர்கள்.... போராட்டத்தில் கிறிஸ்தவர்களும் பங்கு பெற்றார்கள் அவ்வளவுதான்... ஏன் வேறு மதத்தவர் யாரும் பங்கு பெறவில்லையா? நீங்கள்தான் மதத்துவேசத்தை கிளப்பிவருகிறீர்கள்...

      Delete
    6. என்னது நக்சலைட்டா ....டேய் காங்கிரஸ் நாயே சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாம போயிடுமேன்னு போராட்டம் நடத்திட்டு இருக்கோம் ...இதுல உனக்கு நக்சலைட்டே ....ஒத்தா தேவடியா பயலே.... அப்புறம் என்ன சொன்ன ....வெளிநாட்டு பணமா....எங்க உங்க அப்பன் நாராயண சாமி கண்டு பிடிச்சானா...லூசாடா நீ....கிறிஸ்தவர்கள் போராட்டமா.....உவரி சுயம்புலிங்கம் சாமி, திருச்செந்தூர் முருகன் கோயில்.... எல்லாரும் கிறிஸ்தவ கடவுளா....அங்கயும் போராட்டம் நடக்குது......... அப்புறம் உதயகுமார் கிறிஸ்தவன் இல்லைடா..... அவரும் ஹிந்து தான்..... ஏன்டா இந்த பொழப்பு உனக்கு..... கமல் இந்தியன் படத்துல சொல்லுற மாதிரி "களை புடுங்கனும்டா".......உங்கள மாதிரி ஆளுங்கள தமிழ் நாட்ட விட்டு விரட்டுன போதும்டா....காங்கிரஸ் நாய............

      Delete
  25. முருகன்..........மக்கள் பாதிக்கப்பட கூடாது என்பது தான் அரசுகளின் நோக்கம் என்பது தான் சரியான பதில் ... திரு .உதயகுமாரின் போலி முகமூடி கிழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை ...

    ReplyDelete
    Replies
    1. endha arasu makkal bathika kudathunu nenaikuthu.. sollunga...

      Delete
    2. than petra makkal. thanga la sutrri irrukara makkal bathika kudathunu nenikara arasiyal vathigal nadathural atchi gala eppadi etha ethirpakka mudyum...

      Delete
    3. எது ஐயா, அரசுகளின் நோக்கம்? திடீர்னு ஒரு நாள், 10௦ மணி நேர பவர் கட் வந்தது.... அது எப்படி அப்படி, ஒரே நாளில் அவ்வளவு மின் பற்றாக்குறை நிகழ்ந்தது? இதக் கேள்வி கேட்டால், நான் தேசத்துரோகி. மின் பற்றாக்குறை 3000 MW என்கிறார்கள். ஆக, 20௦% பற்றாக்குறைதான் உள்ளது. ஆனால் 50௦% மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இதுதானா மக்களுக்கு செய்யும் நல்லது? புல்லரிக்க வச்சுட்டீங்களே....

      Delete
    4. அப்புறம், இருதயம், அவர்களே, நீங்களே, ஏன் உங்க வலைத்தளத்தில், Anonymousஆக பதிலிட்டுகொண்டு இருக்கிறீர்கள்... சும்மா, நிஜப் பேரைப் போட்டே பதில் சொல்லுங்கள்....

      Delete
    5. @ முருகன் : நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      நான் anonymous ஆக பதில் இட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை . அப்படி தைரியம் இல்லாத என்னால் , இப்படி பதிவுகள் எழுதமுடியாது ... அதற்க்கு சில பதிவர்கள் இருக்கிறார்கள் ....அப்படி கருத்து இடுவதற்கு ....

      நன்றி

      Delete
    6. ///எது ஐயா, அரசுகளின் நோக்கம்? திடீர்னு ஒரு நாள், 10௦ மணி நேர பவர் கட் வந்தது.... அது எப்படி அப்படி, ஒரே நாளில் அவ்வளவு மின் பற்றாக்குறை நிகழ்ந்தது? இதக் கேள்வி கேட்டால், நான் தேசத்துரோகி. மின் பற்றாக்குறை 3000 MW என்கிறார்கள். ஆக, 20௦% பற்றாக்குறைதான் உள்ளது. ஆனால் 50௦% மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இதுதானா மக்களுக்கு செய்யும் நல்லது? புல்லரிக்க வச்சுட்டீங்களே....
      /////

      அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லிடுங்களேன்... ஏன் இதை விட்டு விட்டீர்கள்...??

      Delete
    7. சொல்லுங்கண்ணே........பதில் சொல்லுங்க......விடாதீங்க....

      Delete
  26. Vinoth
    மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு, எதிலுமே பயனில்லை எனில் இருதியாக அணுமின் நிலையத்தை நிறுவலாமே. அனு உலையால் பாதிப்பே இல்லை என்று சொல்லுவது 200% அப்பட்டமான பொய். தனக்கு கீழ் இறுப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று நினைத்துவிடக் கூடாது.

    ReplyDelete
  27. முருகா அண்ணே....எங்க இந்தியன் அண்ணே...பதில் சொல்வாங்க........நம்ம நாடு நல்லா ஜொலிக்கும்..

    ReplyDelete

  28. will indian govt allow all its nuclear plant employees to undergo a radiation screening test by a private team???

    ReplyDelete



  29. The figures u have mentioned may be the capacity of the nuclear reactors .can u give the figures in terms of electrical energy generated from those plants??????

    and Why the former chief of AERB opposes nuclear power plants??

    why the contribution of nuclear power plants in indias electrcial energy need is just 2.7%????

    do u know that Kalpakam plant has deficient vehicle facility to evacuate its own employees if anything happens??(courtesy ananatha vikatan)

    can u answer why for the past 15 yrs no country in the world have started to build a new plant ?????




    ReplyDelete
  30. http://www.4tamilmedia.com/special/news-review/8224-koodankulam-nuclear-power


    Just go thru this Mr. Hindian........Thank u

    ReplyDelete
  31. Mr. Indian doesnt even know why Kerala or west bengal or gujarat is not ready to accept a nuclear plant when the temperature is cool enough to run this plant... May be he is a guy from congress...Thts y he is supporting this without proper information.... Mr. Indian go nd ask Mr. Modi to support plants....Now he changes a state with Solar energy.... Solar equals thousands of Nuclear plants.....nd dnt just bull shit here... I m ready to go to koodankulam nd stay.... Just do it...I m frm koodankulam...My name is jose...i m nt like u sitting somewhere nd talkin abt this plants... Just come here nd tell our 12 std children about the plants...They vil give u a clear info than wat u read nd type here....Germany closed bcz they are developed countries....Hw stupid u r.... Have u ever worked on indian industries....just go nd work first....I hv worked in india nd abroad....U know wat s safety measures....Just dnt bull shit.....Just search wat is safety first....nd kalpakkam is not safe, U go to the places nd ask nd put article....Pls dnt read in the internet nd talk....go to the people nd talk to them b4 putting an article...I personally went to kalpakkam nd talked with people... A girl whose father died in cancer who worked n kalpakam plant....nd 8 people died in 2010, 2011.....bcz f cancer....all worked in plants....nd people outside having thyroid problem.... Go to them b4 sittting in the computer....Plssssssssssss....First try to know uranium's reaction nd wat is thorium.... wat relation between them... wat s de side effects if they spread in de air..... Ur article is really a bad one.... these figures u gave s not correct.... nd the final qn...we have kalpakkam, neyveli, Mettur dam nd asia's 2nd biggest wind mil farm....We have this much n our state nd y the hell current cut fr us only wen kerala doesnt hv anything but only 2 hrs a day?.... Just think fr de answer by having a normal human being, U vil know whether u need plant r not

    ReplyDelete
  32. அண்ணே நிங்க சொல்லுறது எல்லாம் சரின்னு வச்சுக்கலாம்.... இந்தியாவில் இருக்கும் எல்லா அணு உலைகளும் 89.20 % உற்பத்தி செய்கிறது என்றால் ஏன் தமிழ்நாட்டில் மின்சார பற்றாகுறை ???? இதற்க்கு விளக்கம் குடுக்க முடியுமா?????

    ReplyDelete
  33. This guy is not a nan indian,,,,,,,,,,,,,,,,,, he is a Non human,,,,,,,,,,,,,,,,,,,,,,, he wants to get a nuke baby,,,,,,,,,,,,,,,,,, nan indian sucks,,,,,,,,,,,,,

    ReplyDelete
  34. The capacity column has wrong values.
    Tarapur : It was initially constructed with two boiling water reactor (BWR) units of 210 MWe each initially by Bechtel and GE under the 1963 123 Agreement between India, the United States, and the International Atomic Energy Agency. The capacity of units 1 and 2 was reduced to 160 MWe later on due to technical difficulties.

    Please move the capacity of Tarapur to 210 and calculate. The same way, put the right value for others also.

    http://en.wikipedia.org/wiki/Tarapur_Atomic_Power_Station

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி