Thursday, 16 February 2012

ஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை


சமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது .  சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் .  இன்றைய நாளேடுகளின் மூலம் , ஆசிரியர் அடித்தால் ஒரு மாணவன் தூக்கு போட்டு இறந்த செய்தியை அறிந்தேன் .  ஒரு பக்கம் மாணவர்கள் ஆசிரியர்களையும் , மறுபக்கம் ஆசிரியர்கள பாதுகாப்பற்ற சூழ்நிலை என்று மாணவர்களையும் குறை சொல்ல ,  உண்மையில் ஆசிரியர் - மாணவர் உறவு எப்படித்தான் உள்ளது என்று யோசித்து பார்த்தேன் .. இந்த பதிவை எழுதுகிறேன் 
மாதா , பிதா , குரு , தெய்வம்  என்று ஆசிரியர்களை தெய்வத்திற்கு முன்பு வைத்து சொல்லப்பட்டிருக்கிற தமிழ் மொழியினை நாம் அறிவோம் .  வீட்டில் தாய் , தந்தையுடன் கழிக்கும் அதே அளவு பொழுதை மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடனும் கழிக்கிறார்கள் .  8 மணி நேரம் பள்ளியில் ஆசிரியர்களுடனும் , 8 மணி நேரம் தூக்கத்திலும் , மீதி 8 மணி நேரம் வீட்டில் பெற்றோர்களுடனும் மாணவர்கள் கழிக்கிறார்கள் .  எனவே பெற்றோரை போலவே ஆசிரியர்களும் முக்கியமானவர்கள் என்பதற்காகவோ என்னவோ அவர்கள் தெய்வத்திற்கு முன்பு வைக்கப்பட்டனர் .நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது எங்களுக்கு இருந்த ஆசிரியர்கள் ,  பெற்றோரை போலவே எங்களை பார்த்து கொண்டார்கள் என்றால் அது மிகையல்ல .   அன்பிலும் ,  கண்டிப்பிலும் , கவனிப்பிலும் ,  ஆரோக்கியத்திலும் .... எல்லாவற்றிலும் ஆசிரியர்கள் பள்ளியில் ஒரு பெற்றோர் போலதான் .  எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது .  எனது முதல் வகுப்பு ஆசிரியை ( தற்பொழுது மறைந்து விட்டார்கள் ) மாணவர்களை மடியில் வைத்து தான் அ , ஆ  எழுத சொல்லி தந்தார்கள் .   யாருக்காவது  உடல் நலம் சரி இல்லாமல் போனால் , தோளில் தூக்கி வைத்து அரவணைத்து இருக்கிறாகள் .  அவர்களை பார்க்கும் பொது எங்களுக்கு பயம் வந்தது இல்லை ஆனால் மரியாதை கலந்த ஒரு வித உணர்வு இருக்கும் .  ஏன் எனில் ஆசிரியர்கள் பணியை தொழிலாக செய்யாமல் சேவையாக செய்து வாழ்ந்தார்கள் .


ஆனால் இன்றைய அநேகம் ஆசிரியர்கள் ஆசிரிய பணியை சேவையாக செய்யாமல் தொழிலாக செய்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது .   அன்று எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் மாணவர்களுக்கு சேவை செய்த ஆசிரியர்கள் எங்கே .? இன்று பள்ளிக்கு பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே  ( மாணவர்கள் பெயர் வாங்கவேண்டும் என்ற நோக்கத்திற்கு அல்ல ) ஆசிரிய தொழிலில் மாணவர்களை நடத்தும் பள்ளிகள் எங்கே ....?


நான் சொல்லுவது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம் .  ஆம் ... அன்று அரசு பள்ளிகளில் தான் பிள்ளைகள் படித்தார்கள் . எந்த கட்டணமும் செலுத்த தேவை இல்லை .  ஆனால் ஒழுக்கமும் , கண்டிப்பும்  தாராளமாக இருந்தது .  ஆனால் இன்று புற்றீசல் போல தனியார் பள்ளிகள் பெருகி இருக்கின்றன .  மதிப்பெண் என்ற ஒரே காரணத்திற்க்காக ஆசிரியர் , மாணவர் என்ற உறவு சீரானதாய் இராமல்  , அன்பு கலந்த கண்டிப்பு இராமல் , அக்கறையற்ற தண்டனைகள் பெருகுவதால் தான் இப்படி சம்பவங்கள் நிகழ்கிறதோ என்ற ஆதங்கம் எனக்கு ....இன்றைய நாளேட்டில் ஒரு காரியத்தை பார்த்தேன் .  ஒரு 80 வயது ஆசிரியர் , கடுமையான் உடல் நோயினால் பாதிக்கப்பட்டும்  , என் உயிர் போகும் வரை என் கையில் சாக் பீஸ்  இருக்கும் என்று சொல்லி உள்ளார் . அவரது இளமை காலத்தில் அவரது சேவையினால் உயர்ந்த மாணவர்கள் என்று அவரை சந்தித்து தங்கள் நன்றி கடனை செலுத்தினார்களாம்.  அதில் ஒருவர் அந்த ஆசிரியர் வீட்டிலே தங்கி இருந்த படித்து உள்ளாரர் .  இந்த மாதிரி பெருந்தன்மையுள்ள , தன்னலமற்ற  , சேவை மனப்பான்மை உள்ள ஆசிரியர்களை மனமார வணங்கும் நான் அதே நேரத்தில் மற்றவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறேன் , "  ஆசிரிய பணி தொழில அல்ல அது ஒரு சேவை .... ஒரு நாட்டின் தூண்கள் உங்கள் கைகளில் தான் .  அவர்கள் தவறு செய்தாலும் , அன்புடன் நல்வழி படுத்தும் பொறுப்பும் கடமையும் உங்களுடையதே ....."

5 comments:

 1. Replies
  1. Dear Friend,

   Thank you very much for your visit and comments...

   Delete
 2. எனக்கு கிடைத்த "Liebster Award " இந்த விருதினை தங்களுக்கு வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி.
  http://alaiyallasunami.blogspot.in/2012/02/blog-post_17.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் , தங்களின் விருதும் என்னை இன்னும் பதிவுலகிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற என்னத்தை கொடுக்கிறது . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்ளுகிறேன் .. நன்றி

   Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி