Friday, 17 February 2012

மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே ..............


தமிழக அரசு எந்திரத்தின் எல்லா துறைகளும் இப்பொழுது சங்கரன்கோவிலை தான் சுற்றி சுற்றி வருகின்றன .  முன்னாள் கால்நடை துறை அமைச்சர் திரு . கருப்பசாமி புற்று நோயால் மரித்த பிறகு ,  இடைதேர்தல் அவரின் தொகுதியில் அறிவிக்கப்பட்டு இருப்பதே அந்த பரபரப்புக்கு காரணம் .  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் , மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சி தலைவர் அவர்களும் காரசாரமாக சட்டசபையில் மோதி கொண்டதும் , அனைவரின் கவனத்தையும் இந்த தொகுதியின் பால் ஈர்த்திருக்கிறது .
 
 
 
 சங்கரன்கோவில் இடைதேர்தலில் 5  முனை போட்டி நிலவ போகிறது .  அதிமுக , திமுக ,  தேதிமுக , மதிமுக மற்றும் பாஜக போன்ற கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளரை நிறுத்த உள்ளது .  இவர்களில் யாரை MLA ஆக தேர்ந்தெடுக்க போகிறார்கள் , மாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்கள் என்பதை கொஞ்சம் அலசி பார்க்கலாம் ..
 
 
 பாஜக -  இந்த தேர்தலில் வேட்பாளரை அறிவித்து இருப்பது கொஞ்சம் ஆச்சரியம் தான் .  ஏன் எனில் மத்திய மற்றும் மாநில பாஜக நிர்வாகிகள் அதிமுக கட்சிக்கும் எங்களுக்கும் கொள்கை அளவில் ஒற்றுமை இருப்பதாகவும் , கூட்டணிக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லி கொள்ளும் நிலையில் பாஜக வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது அதிமுக வுக்கு எதிரான வாக்குகளை சிதற செய்யும் நோக்கம் என்பதை நாம் மறுக்க முடியாது .
 

மதிமுக  -  இந்த கட்சியின் நிலை என்ன என்பதை நினைத்து மக்களே கொஞ்சம் குழம்பி போய் தான் உள்ளார்கள் . காரணம் பஸ் கட்டணம் , பால் விலை உயர்த்தப்பட்ட பொழுது மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த போகிறேன் என்று சவால் விட்டவர் , அம்மாவுக்கு பயந்தோ என்னவோ சவாலை காற்றிலே பறக்க விட்டு விட்டார் .  இவர் எப்படி சங்கரன்கோவிலை காப்பாற்றுவார் என்ற எண்ணத்தினால் புரட்சி புயலுக்கு வாய்ப்பு கொஞ்சம் குறைவு தான் .
 
 

தேதிமுக :  இந்த கட்சியின் மிக பெரிய பலமே அதன் தலைவர் தான் .  அதே போல மிக பெரிய பலவீனமும் அவர் தான் .  சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த புதிதில் அவரை ஆதரித்த அநேகர் அவரின் அரசியல் பேச்சுகளை கண்டு ( ? ) ஒதுங்கியுள்ளனர் .   சட்டசபையில் வீராவேசமாக பேசிய திரு . விஜயகாந்த் , அம்மாவின் சவாலுக்கு ( சங்கரன்கோவில் ஜெயிக்க முடியுமா ..?)  நேரடியாக சவால் விடாமல் , கவர்னர் ஆட்சி இருந்தால் ( எப்படியும் வராது என்ற தைரியம் ) போட்டியிட தயார் என்று அறிவித்ததில் இருந்து சங்கரன்கோவிலில் அவரால் முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளார் என்பதை அறிய முடிகிறது .
 
 

திமுக :  திமுக தலைவர் அவர்களின் இரு புதல்வர்களினால் கட்சியின் நிலைப்பாடே ஆட்டம் கண்டிருக்கிற இந்த நிலையில் ,  இந்த இடை தேர்தலில் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று அஞ்சா நெஞ்சன்  அழகிரி தெரிவித்து  இருக்கிறார் .. ஆனாலும் தொடர்ச்சியாக திமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போய் கொண்டு இருப்பதால் , தொகுதி வேலையை பார்ப்பதில் கொஞ்சம் தொய்வு இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .அதிமுக  :  தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக 26 அமைச்சர்கள் உள்ளடக்கிய குழு ஒன்றையும் இந்த கட்சி அறிவித்து உள்ளது . ( அமைச்சர்களுக்கு வேறு வேலை இல்லையா என்று நீங்கள் கேட்ககூடாது ) .  சங்கரன்கோவில் மாண்புமிகு வாக்காளர்களை கவர்வதற்காக அரசின் இலவச திட்டங்கள் , மிக்சி ,  Grinder எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது ( அப்போ ... மின்சாரம் என்று கேட்கக்கூடாது ) .  இந்த இடை தேர்தல் அரசின் மானப் பிரச்சினை  என்பதால் அனைத்து வழிகளையும் பின்பற்றி வெற்றி என்ற முனைப்போடு களம் கண்டுள்ளது ...
 
 
மாண்புமிகு வாக்காளர்களின் நிலை என்னவாய் இருக்கும் என்று யோசித்து பார்த்தால் கொஞ்சம் வேடிக்கையாக தான் இருக்கிறது .
 •  அதிமுகவை தவிர யார் வெற்றி பெற்றாலும் சட்டசபையில் உட்கார கூடமுடியாது  என்பதை மக்கள் அறிந்து உள்ளார்கள் .
 • சாத்தான்குளத்தை தேவன்குளமாக மாற்றுவோம் என்ற வாக்குறுதி என்ன ஆயிற்று என்பதயும் மக்கள் அறிந்து உள்ளார்கள் .
 • தேர்தல் தேதி 18 ( 1 + 8 = 9 ) , அட ஆமாங்க ...அம்மாவின் ராசி தேதி . எப்படி தான் இப்படி எல்லாம் தேர்தல் கமிசன் கூட யோசித்து தேதி அறிவிக்கிறார்களோ என்று கூட குரல் எழும்புகிறது ...
  
அட ... முடிவு தான் என்னய்யா ...? என்று நீங்கள் கேட்டால் ... கிடைப்பதை                ( ? .....!  )  வாங்கி கொண்டு மீண்டும் ஆளும் கட்சிக்கே வாய்ப்பளிக்க தீர்மானம் செய்வது தான் சரியான வழி என்று தான் நினைக்கிறார்கள் .  எப்படியும் இந்த MLA வும் சட்டசபையில் போய் மேஜையை மாத்திரம் தட்டுவார் என்பதை அறிந்த பிறகும் .....
 

2 comments:

 1. பிஜேபி இந்தத் தேர்தலில் எப்படி நிற்கிறது என்பது மிகவும் ஆச்சரியம்தான். எழுதிவேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள் பிஜேபி பெறும் வாக்குகளின் எண்ணிக்கை நிச்சயம் 800 ஐத் தாண்டாது. அதுவும் வேட்பாளரின் தனிப்பட்ட 'புகழினால்' இருக்குமேயொழிய கட்சிக்காக அல்ல!

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

   நீங்கள் கூறியே அதே கருத்து தான் எனதும் கூட. BJP யின் வாக்குகள் AIADMK வுக்கு தான் சாதகம் . மக்கள் யோசிக்கவேண்டும் . பார்க்கலாம் ...

   Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி