Wednesday, 8 February 2012

மின்வெட்டா ....? மின்சாரமா .....? - பரிதாப தமிழகம்

 இன்றைய தமிழகத்தின் நிலையை என்னை அல்லவா அல்லது சிரிக்கவா என்று தெரியாத நிலையில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன் .  கடும் மின்வெட்டில் தவித்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டில் , வெயில் ஏற ..., ஏற ....எங்கும் மின்சாரதிர்க்காக குரல்கள் ஒலிக்க தொடங்கிவிட்டது . 
 
 
 
கோவை மாநகரில் கடும் மின்சார தட்டுப்பாட்டினால் குறு தொழில்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் தினமும் சுமார் 250 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகின்ற காரணத்தினால் வரும் 10 ம தேதி அன்று 35 ஆயிரம்  முதல் 40 ஆயிரம் தொழிறசாலைகள் மூடப்படுகிறது . சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் போராட்டம் நடக்க இருக்கிறதாம் .( Source : தினகரன் , பக்கம் 5 , தேதி 08 - 02 - 2012 )
 
 
தினமும் எட்டு மணி நேரம் மின்வெட்டு நிலவுவதால் , தினமும் சுமார் 200 கோடி ரூபாய் நஷ்டம் உண்டாவதால் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சாலைகள் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வருகிறது . .( Source : தினகரன் , பக்கம் 4 , தேதி 08 - 02 - 2012 )
 
 
 கடும்  மின்வெட்டு நிலவுவதால் , 10 ம வகுப்பு மற்றும் 12 ம வகுப்பு பொது தேர்வுகளை தள்ளி வைக்கவேண்டும் என்று ஒரு கூட்டம் சொல்லுகிறது.
 
 
இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி  வரும் திரு . உதயகுமார் சொல்லுகிறார் , " உடனடியாக மத்திய தொகுப்பில் இருந்து 1000 MWe மின்சாரம் வழங்கவேண்டும் " என்று .   சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும் என்பது ஐயாவுக்கு தெரியாது என்று நினைக்கிறேன்
 
 
 
சரி ....நமது அரசியல் தலைவர்கள் என்ன தான் செய்கிறார்கள் என்று பார்த்தால்...... சிங்க தமிழனும் , தானை தமிழனும் , நாம் தமிழனும் இருக்கிற இடமே தெரியவில்லை .  இவர்களுக்கு மின்சாரம் தேவையா என்ன .....
 
சரி நமது சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதாவது பேசுவார்கள் என்றால் ,  அவர்களுக்கு தலையாய வேலையே மேஜையை தட்டுவது தான் என்று TV யை பார்த்து தெரிந்து கொண்டேன் . 
 
 
சரி .... நமது அமைச்சர்கள் ஏதாவது செய்வார்கள் என்றால் ,  26 பேர் பணியில் இறங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டு ஆனந்தம் கொண்டேன் . கடைசியில் தான் அறிந்து கொண்டேன் .  அவர்கள் sankarankovil தேர்தல் வேளைகளில் இறங்கி உள்ளார்களாம் .  ஏன் என்றால் அது அவர்களின் மான பிரச்சனையாம் ....
 
ஆமாம் .... அது உண்மை தான் ...... நாங்கள் தான் உண்மையான தமிழர்களின் தலைவர்கள் என்று போலி முகம் காட்டும் தமிழர் தலைவர்களை இப்பொழுதும் அசராமல் நம்பும் எங்களை போன்ற தமிழர்களுக்கு ஏது மானம் ....ஏது பிரச்சனை ....?
 
 
இயங்க துடிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வதந்திகளை புறந்தள்ளுவோம் ...... மின் வேட்டை தூக்கி எறிவோம் ....

17 comments:

 1. ye bewakoof chup raho.jhaadhaa hogayaa thumaaraa bakwaas.Bandh karo thumaaraa naatak.

  ReplyDelete
  Replies
  1. அன்பு கொண்ட முகம் தெரியாத நண்பரே ...

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி. நீங்கள் நல்ல இந்தியில் என்னை திட்டி உள்ளீர்கள் . எனக்கு மிக்க மகிழ்ச்சி . நான் அதற்க்கு பதில் கொடுப்பதற்கு முன்பு நீங்கள் என்ன சொல்லி உள்ளீர்கள் என்பதை நமது நண்பரகளும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக உங்களின் கருத்தை தமிழாக்கம் செய்து அதற்க்கு பதில் கொடுக்க விரும்புகிறேன் .

   // ஏ முட்டாளே அமைதியாயிரு ...! உன்னுடைய முட்டாள்தனம் அதிகமாகி விட்டது . உன்னுடைய நாடகத்தை நிறுத்து // இப்படி நீங்கள் எழுதி உள்ளீர்கள் . நன்றி ...

   நண்பரே ......மாபெரும் அறிவியல் அறிஞர் திரு அப்துல் கலாம் அவர்களையும் மாபெரும் மருத்துவர் . சாந்தா அவர்களையும் முட்டாள் என்று முத்திரை குத்துகிற கூட்டத்திற்கு இந்த முகம் தெரியாத பதிவன் எம்மாத்திரம் .....இல்லையா ...?

   உன்னுடைய முட்டாள்தனம் அதிகமாகி விட்டது என்ற உங்கள் கருத்தை நீங்கள் கொஞ்சம் யோசித்து பார்த்து எழுதியிருக்க வேண்டும் . எது முட்டாள் தனம் . அறிவியலை பேசுவதா ...? அல்லது அறிவீனதிர்க்கு எதிராக எழுதுவதா ...? அல்லது மதியீனத்தை எதிர்ப்பதா ....? இவையெல்லாம் முட்டாள்தனம் என்றால் , என் முட்டாள்தனம் இன்னும் அதிகமாகும் என்பதை தங்களுக்கு தெரிவிக்க கடமைப் பட்டு உள்ளேன் .

   யார் நாடகம் ஆடுகிறார்கள் என்பதை எல்லாரும் அறிந்திருக்கிறார்கள் . நண்பரே ...! எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல நடிக்கும் சில போலி உத்தமர்களும் , இல்லாத சில காரியங்களை சொல்லி நல்ல சமுதாயத்தை கெடுக்கும் நல்லவர்களும் உங்களுக்கு தொண்டு செய்வது போல மாயை உண்டுபண்ணலாம் . ஆனால் அவைகள் தான் நாடகம் என்பதை நீங்கள் உணரவேண்டும் ...

   நீங்கள் என்னை தரக்குறைவாக பேசினாலும் , எனது பதிவுகளுக்கு ஆதாரபூர்வமாக கொடுக்க உங்களுக்கு பதில் இல்லாத காரணத்தினால் , இந்த விமர்சனத்தை நான் எனக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரமாகவே எடுத்து கொள்ளுகிறேன் .

   நன்றி

   Delete
 2. ஐயா மின்வெட்டுக்கு காரணம் நாம்தான். தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை மற்றைய மாநிலங்களுக்கு தாரை வார்த்து கொடுத்தால் இப்படித்தான் நடக்கும். அடுத்து குழல் விளக்குகளை பயன்படுத்தினால் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்பதை மக்களுக்கு விளக்கி அரசே அந்த குழல் விளக்குகளை மக்களுக்கு இலவசமாக வழங்கலாம். சும்மா மாடு கொடுக்கிறேன், கம்ப்யூட்டர் கொடுக்கிறேன் என்று சொல்வதை விட்டு விட்ட குழலால் விளக்குகளை பயன்படுத்தினால் 70 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும் அதை விட்டு விட்டு இன்னும் அந்த பழையகாலத்து 60 , 40 ,100 . வால்ட் மற்றும் டியூப் லைட் இப்படி பயன்படுத்தினால் இப்படித்தான் நடக்கும். விஞ்ஜானம் முன்னேற்றத்தை கூட அறியாத ஒரு முட்டாள் கூட்டம் ஆட்சி செய்தால் இப்படித்தான்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே ... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...

   பொதுவாக மாநில அரசின் சார்பில் மின்சாரம் தயாரிக்கும் எந்த மின் நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வெளி மாநிலங்களுக்கு செல்லவில்லை என்பதை தாங்கள் ஏற்று கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன் . மத்திய அரசின் சார்பில் தயாரிக்க படும் மின்சாரத்தின் ஒரு பகுதி மாத்திரமே வெளி மாநிலங்களுக்கு செல்லுகிறது . ஆனாலும் நிலக்கரி பற்றாக்குறை காரணத்தினால் தேசிய அனல் மின் நிலையங்களில் இருந்து போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை .

   நீங்கள் சொன்னபடி மின்சிக்கணம் செய்யலாம் ஆனாலும் நமது மின்தேவை அதிகமாகி இருப்பதால் அவைகள் அவ்வளவு பலன் தருமா என்பது கேள்வியே ..... ஆடு மாடு கொடுப்பதற்கு பதில் Energy Saver Light கொடுக்கலாம் என்ற உங்கள் கருத்துக்கு எந்த award வேண்டுமானாலும் கொடுக்கலாம் .

   மிக்க நன்றி

   Delete
 3. நான் குழல் விளக்கு என்று சொன்னது வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் எனர்ஜி சேவர் பல்புகளைதான்.

  ReplyDelete
 4. we generate more than our requirement but max fed to the national grid but there is no grid provided by the centre to bring to tamilnad. we talk indian first and then only we tals tamilians.
  but others talk about their state,
  recently kundha hydro electricity genaration was not permitted by the centre stating that the river is joining with bhavani then with kaveri andhence we need to get other state permission even though the entire is inside tamilnad and jayanthinatarajan is not willing to give permission, everybody wants kudankulam and what we will get only 500 to 650 which can be obtained from kundha but we want only the projects which others discardrd andwill stick on to it. we tamilians are expert for nandu export

  ReplyDelete
  Replies
  1. Dear Friend,

   Thank you for your visit and for your valuable comment .

   It may please be noted that all the power generated by state own power stations are not being transmitted to any other nearby states. some percentage of the power generated by Central power stations , is only being shared to the nearby states.

   regarding Kundha hydro electricity generation , kindly see the following link : http://en.wikipedia.org/wiki/Kundah_hydro-electric_power_house

   Friend , it may please be noted that , From kudankulam Tamilnadu will get 925 Mwe. Our tamilians are expert only in believing some rumors only friend...

   But i do agree with you that " We are Indians first , then we are Tamilians.."

   Please visit again... Thank You...

   Delete
 5. ப்ளீஸ் கூல் டவுண்...

  ReplyDelete
  Replies
  1. சகோ . வணக்கம் ....

   தங்கள் வருகைக்கு மிக்க நன்றி , ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விட்டேனோ ..?. உங்களை போன்ற பெரிய பதிவர்களின் உற்சாகம் தான் என்னை தொடர்ந்து எழுத தூண்டுகிறது .

   நன்றி

   Delete
 6. Read This,
  http://www.frontlineonnet.com/stories/20120224290310600.htm

  ReplyDelete
  Replies
  1. Dear Friend,

   Thank you for your visit. I had visited the site , what you have suggested for me. I understood that the link talks about the incident happened in Fukushimaa.

   Friend, Already i have added an article here in the name of "புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை " - http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_20.html.

   why you can not have a visit please...?

   Delete
 7. Whether the protesting farmers are anti nationals?
  http://telugudesam.org/tdpcms/index.php?option=com_content&view=article&id=19079%3ADharmana+pushed+Kovvada+nuclear+plant+against+local+protests&Itemid=18

  What will happen to India if all the proposed 36 nuclear power plants are installed? Our future generations will spend their energy , money and time to safeguard the nuclear waste. The world would be a hell to them.

  ReplyDelete
  Replies
  1. Ha...ha.. , I have seen the above link gentleman. The baseless information is given by Telugu desam party , as it is opposing Nuclear ( for the sake of their Politics ) . you can compare the same with our Tamil Politicians also...

   I am not saying that Farmers are anti national . But i am saying that those who want to put a bomb on National asset , those who are invoking the innocent people against peace, are really anti-nationals. still more , i can say something.

   //What will happen to India if all the proposed 36 nuclear power plants are installed?//

   dear friend , i do astonish about your questions. Surely it will be installed , not only that some more projects also may come. You know onething...we are loosing all our natural resources but at the same time our electricity demand increases more rapidly like anything. Nuclear is the best solution for all the above.

   Thank You...

   Delete
 8. So after 40 years India will install 72 plants (energy demand) then after 40 years 144 plants. It will produce nuclear waste and the future generations will have to protects those wastes. Good.

  ReplyDelete
  Replies
  1. My dear friend..., I am so much attracted by your continuous visit and i thank you for your real feeling about the future generation..

   Friend, It may please be noted that in my earlier article about the Nuclear Spent fuel ( What you are telling as waste ) , i have clearly explained that the spent fuel of First Generation reactors ( PU 239 ) will be fuel (with TH232) for second stage reactor. Spent Fuel of Second Stage ( U233) will be the fuel for AHWR reactor. Then why you are worrying. We are going to recycle it and we are going to reuse it...? Then where is the place of fear...?

   Cheer Up... Dear..

   Delete
 9. This may tell you the real situation of Kalpakkam area.
  http://www.dianuke.org/pugazhenthi-kalpakkam/

  ReplyDelete
  Replies
  1. Dear Friend ,

   I had a visit to the above link.... I have some questions with you.... the same questions i have already asked in the above mentioned link also... If you Know Dr.Pugaz , you please ask the following questions on my behalf..

   1. Why Dr.Pugaz is not talking about the Natural Radiation level in the sea shore...? He does not know...? or He pretends...?

   2. Why Dr.Pugaz is not fighting against Smoking , which is playing a major role in Cancer...? He does not have real interest in that ...?

   3. Why I have to believe Dr. Pugaz than Dr. Santha , the famous Doctor than him and who got Magsaysay Award, and Padma Shri. for her sincere work in the field of Cancer...?

   Dear Friend , i know for all the above questions , he can not answer me.... The truth is some doctors and one PHD ( political science ) are confounding the people with their false protests. Why can't we wait for some time , so that their mask will be removed...?

   Thank You....

   Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி