Thursday, 23 February 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் - திரு . உதயகுமாரின் கருத்துகள் - சரியா ...?


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் திரு . உதயகுமார் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் தகவலை இன்றைய தேதி தினமணி ( பக்கம் 5 ) ல் வாசிக்க நேரிட்டது .  எப்படி எல்லாம் திரு . உதயகுமார் மக்களை திசை திருப்புகிறார் என்ற யோசனை மேலோங்கியத்தின் விளைவு தான் இந்த பதிவு .
 
 
 கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தேவையான மாற்றங்களை செய்து இயற்க்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என திரு . உதயகுமார் தெரிவித்து உள்ளார் . 
 
சாத்தியம் இல்லாத இந்த தகவலை ஏற்கெனவே போராட்ட குழுவின் நிபுணர் குழு கூறி உள்ளதால் அதற்க்கு இந்த வலைப்பூவில் தெளிவான தகவல்களுடன் "மக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு - ஒரு பார்வை" என்ற தலைப்பில் , மக்களை தவறான தகவல்களை கூறி குழப்புவதை நான் எழுதி இருக்கிறேன் .  
 

இந்தியாவில் மொத்தம் 5500 MWe மின்சாரம் இயற்க்கை வாயு மூலம் தயாரிக்கும் மின் நிலையங்கள் உபயோகத்தில் உள்ளது .  கிட்டத்தட்ட 4000 MWe மின்சாரம் எரிவாயு மூலம் தயாரிக்கும் மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளது .   நாள்தோறும் 35 மில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயு உற்பத்தி செய்யப்பட்டாலும் இந்த மின் திட்டங்களுக்கு தேவையான எரிவாயுவை சந்திக்க முடியாததால் மற்ற தொழில்களுக்கு பயன்படும் சுமார் 7 35 மில்லியன் க்யூபிக் மீட்டர் எரிவாயுவும் மின்திட்டங்களுக்கு திருப்ப வேண்டும் என்று சென்ற புதன் கிழமை அன்று அணில் அம்பானி குழுமத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு உள்ளது .  ( நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ்   ,  தேதி 23 . 02 . 2012  , பக்கம் : 13 ).


தற்பொழுது இருக்கும் மின் திட்டங்களுக்கே எரிவாயு பற்றாக்குறை இருப்பதை திரு ,. உதயகுமார் உணரவில்லையா ...? அல்லது உணர்ந்து கொள்ளாதது போல பேசுகிறாரா ...?
 

சுற்று சூழல் பாதிக்கப்படும் என்று அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடும் டாக்டர் . உதயகுமார் அவர்கள் , எரிவாயு மின் நிலையங்கள் மூலமாக வெளியிடப்படும் வாயுக்கள் சுற்று சூழலை கெடுக்காது என்று சொல்லுகிறாரா ...? அதனால் ஏற்ப்படும் புவி வெப்பமயமாதலின் விளைவாக கடல் மட்டம் உயர்ந்து கடலோர கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதே ...? அது திரு ,. உதயகுமாருக்கு தெரியாதா ...? இல்லையெனில் இதை கூறினால் மக்கள் போராட்டத்தை விட்டு விடுவார்கள் என வேண்டும் என்றே மறைக்கிறாரா ...?


மாண்புமிகு தமிழக முதல்வர்  அமைத்த குழுவை வரவேற்கிறோம் என்றும் தமிழக முதல்வர்  அவர்களை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறிய திரு . உதயகுமார் தமிழக குழு அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று கொடுத்த அறிக்கையை எதிர்ப்பதும்  , சங்கரன் கோவில் இடைதேர்தலுக்கு முன்பாக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அறிவித்ததும் , தமிழக முதல்வருக்கு விடப்பட்ட சவால் அல்லாமல் வேறு என்ன ..?  சென்று போன உள்ளாட்சி தேர்தலை தனக்கு சாதகமாக்கி போராட்டத்தை தீவிரப்படுத்தி கொண்ட அவர் இப்பொழுதும் அரசியல் சதுரங்கத்தில் மக்களை பலியாக்குவதும் என்ன நியாயம் ....?
 
 
கிராமத்து மக்களிடம் கருத்து கேட்காததால் மாநில குழுவை புறக்கணிக்கிறோம் என்று சொல்லும் திரு . உதயகுமார் , பள்ளி செல்லும் மாணவர்கள் முதலாக அணுமின் நிலையங்களை பற்றி தவறான கருத்துகளை பரப்பை அவர்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்தீர்களே .... கிராமத்து மக்கள் என்ன சொல்லுவார்கள் என்பது மாநில குழுவுக்கு தெரியாதா என்ன ...?
 
 
 திரு . உதயகுமார் இடத்திற்கு இடம் மாற்றி பேசும் நல்ல பேச்சாளராக இருக்கலாம் , ஆனால்  தன்னை நம்பி கூட வரும் மக்களை தவறாக வலி நடத்தும் மோசமான தலைவர் என்பதை மக்கள் எப்பொழுது உணருவார்கள் ....? பார்க்கலாம் .... காத்திருந்து .....?
12 comments:

 1. சூரிய வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதைப் பற்றி தாங்களின் கருத்து என்ன.
  அணு மின்சாரம் மட்டும் தான் வழி என்று ஏன் கருதுகிறீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

   மிக அருமையாக , ஒரு ஆக்கப்பூர்வ கேள்வியை நீங்கள் கேட்டு உள்ளீர்கள் . சூரிய ஒளி மின்சாரம் ஒரு பசுமையான மின்சாரம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்துகளும் இல்லை . அரசும் வரும் ஆண்டில் சூரிய ஒளியின் மூலம் 20000 MWe அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தயாரித்து உள்ளது . ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் நமது தேவைக்கு உறப்தை செய்யமுடியுமா என்றால் இல்லை என்ற பதில் தான் நமக்கு உள்ளது ...

   உதாரனத்திற்க்கு , சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மிக பெரிய நிலம் தேவை . அதனால் தான் என்னவோ ... உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையே 200 Mwe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது தான் .

   மாத்திரமல்ல , சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது காலநிலையை பொறுத்ததே . நன்கு சூரியன் இருக்கும் காலங்களில் மாத்திரம் நல்ல பலன் தரும் . அதுவும் காலை நேரங்களில் . உங்களுக்கு தெரியும் .... நாம் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பதை ( குறைந்த அளவு மாத்திரம் பாடரிகளில் )

   சூரிய ஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் விலையும் அதிகம் . அப்படியானால் நமது பொருளாதாரமும் பாதிக்கப்படும் .

   எனவே தான் செலவு குறைந்த , சுற்று சூழலுக்கு பாதுக்காப்பான , எந்த காலநிலையிலும் தொடர்ந்து ( 24 x 7 ) மின்சாரம் தரும் அணுமின் நிலையங்கள் நமது மின்தேவையை சந்திக்கும் என்பது எனது கருத்து.

   உங்களின் ஆக்கபூர்வமான கேள்விக்கு மிக்க நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

   Delete
 2. any time this useless protest will be curbed.

  ReplyDelete
  Replies
  1. Dear Friend ,

   Thank you for your visit and comments.

   Delete
 3. Mr Gokul, for Solar electricity we need to spend Rs 18 /unit. do you think it s feasible?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி .

   உங்களின் கருத்துகள் உண்மை . கூடவே இந்த காரியங்களையும் நாம் யோசிக்க வேண்டி உள்ளது .

   சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மிக பெரிய நிலம் தேவை . அதனால் தான் என்னவோ ... உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையே 200 Mwe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது தான் .

   மாத்திரமல்ல , சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது காலநிலையை பொறுத்ததே . நன்கு சூரியன் இருக்கும் காலங்களில் மாத்திரம் நல்ல பலன் தரும் . அதுவும் காலை நேரங்களில் . உங்களுக்கு தெரியும் .... நாம் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பதை ( குறைந்த அளவு மாத்திரம் பாடரிகளில் )

   தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

   Delete
 4. எல்லாம் அரசியல். எதற்காக மாநில அரசும், மத்திய அரசும் மக்களை குழப்பி வரும் உதயகுமாரை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை؟ உதயகுமார் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல்.

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   உண்மை தான் நண்பரே ... பொறுத்து இருந்து கவனிப்போம் . அரசுகள் என்ன செய்கிறது என்பதை ....

   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. நீ இந்தியனா, வெளிநாட்டுக்காரனா?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   நான் இந்தியன் என்பதில் எனக்கு மிகுந்த பெருமை உண்டு ஐயா....

   Delete
 6. மின்சாரம் நமக்கு கண்டிப்பாக தேவை. அந்த மின்சார தயாரிப்புக்கு அமெரிக்கா, ரஷ்யா போன்ற அந்நிய நாடுகளின் தொழில்நுட்பங்கள் நமக்கு தேவை இல்லை. அந்நிய நாடுகளின் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால், நமக்குத்தான் கேடு.

  ReplyDelete
  Replies
  1. மதிப்பிற்கு உரிய பெயரில்லா நண்பருக்கு ,

   தங்கள் வருகைக்கு எனது நன்றிகள் .

   தங்கள் கருத்தில் இருந்து நீங்கள் அணுமின் நிலையங்களை ஆதாரிக்கிரீர்கள் . ஆனால் வெளிநாட்டு தொழில்நுட்பம் நமக்கு தேவை இல்லை . உள்நாட்டு அணு தொழில்நுட்பம் போதும் என்கிறீர்கள் . நமது நாட்டின் இரண்டாம் நிலை அணுமின் நிலையங்கள் முழுவதும் நமது நாட்டின் தொழில்நுட்பம் தான் என்பதில் நீங்கள் மகிழ்வு அடைகிறீர்கள் தானே ....

   தொடர்ந்து வருகை தாருங்கள் நன்றி ...

   Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி