கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கிற இந்த  காலத்தில் , அணுமின்சாரத்தை குறித்து நான் எழுதிய அநேகம் பதிவுகள் பல்வேறு  காலத்தில் இந்த வலைப்பூவில் பதியப்பட்டது .   அணுமின்சாரத்தை குறித்து பலர்  அறிய விரும்புகிற காரணமோ என்னவோ தெரியவில்லை  , பெரும்பாலான அணுமின்  நிலையத்தை குறித்த பதிவுகள் 600 பக்க பார்வைகளை ( each ) தாண்டி விட்டது .   வலைப்பூவுக்கு வருகை தந்த நண்பர் ஒருவரின் கருத்தை வாசிக்கும் பொழுது தான்  இந்த பதிவுகளின் தொகுப்பை ஒரே பதிவில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது  .  அதன் விளைவு தான் இந்த கூடங்குளம் அணுமின் நிலையம்  - ஒரு அறிவியல்  தொகுப்பு .
மின்சாரம் தயாரிப்பதற்கு அநேகம் வழிகள் இருக்கும் போது , அணுமின்சாரம்  தேவையா ? என்ற கேள்வி எழுவது சகஜம் தான் .  இந்த பார்வையுடன் எழுதப்பட்டது  தான் " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவு .   வார்த்தையின் மேல்  சொடுக்கவும் . 
புகுஷிமா அணுமின் நிலையத்தில் இயற்கை பேரிடர்களால் எதிர்பாராத நிகழ்வு  நேர்ந்த பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையமும் பாதுகாப்பற்றது என்ற பயம்  நிலவிய பொழுது கூடங்குளம் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களை அறிவியல்  பூர்வமாக ஒப்புமை செய்து எழுதப்பட்டது தான் " புகுஷிமாவும் கூடன்குளமும்  ஒன்றா -  ஒரு ஆய்வறிக்கை "  என்ற பதிவு .  வார்த்தையின் மேல் சொடுக்கவும் .
 அணுமின் நிலையங்கள் என்றாலே கதிரியக்கம் தான் என்று பெரும்பாலும்  நம்பப்பட்ட சூழலில் , கதிரியக்கத்தை  குறித்து எளிய வார்த்தைகளில் அனைவரும்  புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதவேண்டும் என்று நினைத்ததின் விளைவு தான் "  கதிரியக்கம் என்றால் என்ன ? - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு .   வார்த்தையின் மேல் சொடுக்கவும் .
பல நண்பர்கள் அணுக்கழிவு என்று ஒரு பெரிய வார்த்தையை உபயோகிப்பதை பார்த்து  அநேகர் குழம்பிய பொழுது , இந்தியாவில் அணுக்கழிவு எப்படி கையாளப்படும்  என்பதை ஆராய்ந்து பாரதத்தின் விளைவு தான் " அணுக்கழிவு இந்தியாவின்  நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு .  வார்த்தையின் மேல்  சொடுக்கவும் . 
அணுமின் நிலையங்கள் சுற்று சூழலை பாதிக்கும் என்று ஒரு கருத்து எழுந்த  பொழுது , கொஞ்சம் அதை ஆராய்ந்து பார்க்கையில் உருவான பதிவு தான் " அணுமின்  நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ? "  என்ற பதிவு .  வார்த்தையின் மேல்  சொடுக்கவும் .
மீனவ நண்பர்கள் அனைவரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்று ஒரு நண்பர் என்னை கேள்வி கேட்டபொழுது தான் " கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு " என்ற பதிவு வெளிவந்தது . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .
புகுஷிமா நிகழ்வுக்கு பின்னர் உலகம் முழுவதும் அணுமின் திட்டங்களை நிறுத்தி  உள்ளார்கள் . அப்படி இருக்கும் போது கூடங்குளம் அணுமின் நிலையம் எதற்கு  என்று எனது பதிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது .  அதற்க்கு விடை காண  முனைந்ததின் விளைவு தான் " புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள் '  என்ற பதிவு .  வார்த்தையின் மேல் சொடுக்கவும்  
இன்னும் சில பொதுவான் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க முனைந்ததின் விளைவு  தான் "  அணுமின் நிலையங்கள் - சில கேள்விகள் - சில பதில்கள் " என்ற பதிவு .   வார்த்தையின் மேல் சொடுக்கவும்
இந்த பதிவுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் , புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்டன . ஆனால் இவைகளை மெருகேற்றிய பெருமை அனைத்தும் நமது பதிவுலகத்தின் நண்பர்களை சேரும் . எதிர் கேள்விகளும் , எதிர் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பதற்கு அநேகருக்கு உதவியது . அதனை பேருக்கும் நான் நன்றி உடையவனாய் இருக்கிறேன் . தொடர்ந்து படியுங்கள் . ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள் .

Hi, Y not a compilation on Atom bomb and Atomic power plant???
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் ...
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....
நீங்கள் கேட்டு கொண்ட படியே , வெகு சீக்கிரம் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் குறித்த வித்தியாசத்தை எழுத விழைகிறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுவீர்களா ....?
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
நண்பருக்கு வணக்கம் ...
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....
நீங்கள் கேட்டு கொண்ட படியே , வெகு சீக்கிரம் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் குறித்த வித்தியாசத்தை எழுத விழைகிறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுவீர்களா ....?
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
தங்களின் விருப்பபடி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுளேன் . காண்க .....http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_06.html
Deleteஐயா ....உங்களது அணுமின் நிலையம் குறித்த கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது . மிக அருமையாக அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வருகிறீர்கள் . மிக்க நன்றி . கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது என்று விளக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு பாடல் Toutube ல் வெளியிடப்பட்டு உள்ளது. நீங்கள் உங்களின் தளத்தில் இதை இணைத்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . பாருங்கள் . உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் இணைத்து விடுவீர்களா ...? http://www.youtube.com/watch?v=wA3nOGrWMsI
ReplyDeleteநன்றி