Thursday 1 March 2012

தமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு  எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள் .  முதல்வருடனான கூட்டத்தை முடித்து திரும்பிய திரு . உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையத்தை எரிவாயுவால் இயக்க முடியும் என்றும் , இது போல உலகத்தில் ஏற்க்கனவே நிகழ்ந்து இருப்பதாக 3 மின் நிலையங்களின் பெயரையும் குறிப்பிட்டார் .  இந்த தகவலை ஆராய்ந்து பார்த்தால் , திரு . உதயகுமார் அறிந்தோ / அறியாமலோ தமிழக மக்களையும் , தமிழக முதல்வரையும் ஏமாற்றும் தகவலை சொல்லி உள்ளார் என்பது புலனாகிறது ..
.
இந்த சம்பவங்கள் குறித்து நான் பல பதிவுகள் ஏற்கனவே எழுதி இருந்தாலும் ,  சில பதிவுலக நண்பர்களும் இதை வலியுறுத்தி எழுதுவதால் , இது குறித்து மிகவும் விளக்கமாக எழுத ஆசைப்பட்டதே இந்த பதிவு . பொறுமையுடன் படியுங்கள் .... கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் .

செய்தியாளர்களிடம் திரு . உதயகுமார் பேசும் பொழுது கீழ்க்கண்ட மூன்று அணுமின்  நிலையங்கள் Gas மற்றும் நிலக்கரி  மூலம் இயங்கும் மின் நிலையங்களாக மாற்றப்பட்டு இருப்பதாக கூறினார் . 
  1. அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம்
  2. ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம்
  3. மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம்
 இதே கருத்துகளை கூறி தினமணி நாளிதழில் வழக்கறிஞர் சுந்தரராஜன் என்பவர் 30 01 2012 அன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார் .  . எனவே இவற்றின் உண்மை பின்னணி குறித்து விளக்கமாக நாம் காண்போம் .


 அமெரிக்காவில் உள்ள ஷோர்ஹாம் அணுமின் நிலையம் .
ஏப்ரல் 13 , 1965 ம ஆண்டு இந்த மின்திட்டம் துவக்கத்தை குறித்து LILCO ( Long Island Lighting Company ) நிறுவனத்தின் தலைவர் தங்கள் நிறுவனத்தின் பங்குதாரர் கூட்டத்தில் அறிவித்தார் .  அதன் படி நியூயார்க் அருகில் உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில 1973 ம வருடம் தொடங்கப்பட்டு 1984 ம வருடம் கட்டி முடிக்கப்பட்டது 



3 mile தீவு விபத்திற்கு பிறகு , இந்த பகுதி மக்கள் அணுமின் நிலயத்திற்கு எதிராக போராடினார்கள் என்பது உண்மை தான் .  ஆனால் அணுமின் நிலையம் மூடப்படத்தின் உணமையான காரணம் பின்வருமாறு  :

  1. இந்த அணுமின் நிலையத்தின் கட்டுமானம் Nuclear Regulatory Commission and the Atomic Energy Commission போன்றவற்றின் விதிகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை . அதனால் இந்த அணுமின் நிலயத்தின் கட்டுமான தரம் கேள்விக்குறியானது ..... தகவலுக்கு : http://www.eoearth.org/article/Shoreham_Nuclear_Power_Plant
  2. இந்த அணுமின் நிலையம் அரசால் நேரடியாக கட்டப்படவில்லை . ஒரு தனியார் நிறுவனத்தால் ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Long_Island_Lighting_Company ) கட்டப்பட்டது . மேலும் இந்த நிறுவனம் தயாரித்த அவசர கால திட்டம் அரசால் ஏற்றுகொள்ள முடியாததால் இந்த மின் நிலையத்தின் செயல்பாடு அரசால் நிறுத்தப்பட்டது .

 மாத்திரமல்ல இந்த அணுமின் நிலையம் தனியாரால் கட்டப்பட்டதால் ,  இந்த அணுமின் நிலையத்தின் உபகரனகள் ( Turbine  ) போன்றவை வேறு ஒரு அணுமின் நிலையத்தில் ( Davis-Besse Nuclear Power Station ) பயன்படுத்தப்பட்டது . அதாவது அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired power station ஆக மாற்றமுடியாது என்பது விளங்குகிறது அல்லவா .... தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு காரணிகளை மேற்கொள்ளாத காரணத்தினால் தான் அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant



அணுமின் நிலையத்தின் Power Transmission system மாத்திரம் அப்படியே வைக்கப்பட்டு 2002 ம ஆண்டில் 100 MWe மின்சாரம் தயாரிக்கும் Gas Fired மின் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டது .  ஏற்கனவே அமைக்கப்பட்ட அணுமின் நிலைய உணகரனங்களை நீக்குவதற்கும் , புதிய Gas Fired மின் நிலையம் அமைப்பதற்கும் 186 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Shoreham_Nuclear_Power_Plant


 ஓஹியோ மாகாணம் , மாஸ்கோ என்னும் இடத்தில உள்ள வில்லியம் ஹெச். ஜிம்மர் மின்திட்டம் 

  சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தால் Ohio மாகாணத்தில் உள்ள மாஸ்கோ என்ற இடத்தில 230 மில்லியன் டாலர் செலவில் அணுமின் நிலையம் கட்டப்பட ஆரம்பித்தது .  இந்த அணுமின் நிலைய திட்டம் 1983 ம வருடம் கைவிடப்பட்டு கூடுதலாக 100 மில்லியன் டாலர் செலவழிக்கப்பட்டு கிட்டதட்ட 3 . 4 பில்லியன் டாலர் செலவில் ( 1984 ம வருட கணக்கின் படி ) அனல் மின் நிலையமாக மாற்றப்பட்டது .  ஏன் அப்படி செய்யப்பட்டது என்பதை நாம் காணலாம்





97 சதவீதம் கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையத்தின் முக்கிய Pipe line யை சோதித்து பார்க்கும் பொழுது மிக மோசமான தரத்துடன் அமைக்கப்பட்டு இருந்ததால் Nuclear Regulatory Commision 2 லட்சம் டாலர் அபராதத்தை சின்சினாட்டி gas  & electric நிறுவனத்தின் மீது விதித்தது .  மேலும் இந்த தனியார் நிறுவனம் முதல் முதலாக அணுமின் நிலையத்தை கட்டியபடியால்  ,  தரம் குறைந்த உபகரனகளையும் , தரம் குறைந்த கட்டுமானத்தையும் கொண்டு இருந்த படியால் , அணுமின் நிலையம் திட்டம் கைவிடப்பட்டது .  இந்த அணுமின் நிலையத்தை அனல் மின் நிலையமாக மாற்ற அணுமின் நிலையத்திற்கு அமைக்கப்பட்ட Cooling tower தவிர மற்ற அனைத்தும் புதிதாக மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/William_H._Zimmer_Power_Station


 மிக்சிகன் மாகாணம் , மிட்லேன்ட் அணுமின் நிலையம் 

Midland Cogeneration Venture என்ற நிறுவனத்தால் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த அணுமின் நிலையம் ஏன் Gas fired மின் நிலையமாக மாற்றப்பட்டு என்று நாம் பார்த்தால் , அந்த கட்டுமானம் மோசமான தரத்தினால் கட்டப்பட்டது மற்றும் அதன் தரைபகுதி மூழ்கவும் ( கட்டுமானத்தில் இருக்கும் போதே ) தொடங்கி விட்டது .  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture . அணுமின் நிலையம் கட்டுவதற்கு செலவழிக்கப் பட்டதை போல இரு மடங்கு செலவழிக்கப்பட்டு ( 500 மில்லியன் டாலர் ) , இந்த அணுமின் நிலையம் , Gas fired மின் நிலையம் ஆகா மாற்றப்பட்டது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Midland_Cogeneration_Venture 





மேற்க்கண்ட சம்பவங்களை நாம் பார்க்கும் பொழுது , நாம் கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள்ளது . அவை .....

  1. மேற்கண்ட அணுமின் நிலையனகள் அனைத்தும் தனியார் கட்டியது .  ஆனால இந்திய அணுமின் நிலயங்கள் அனைத்தும் இந்திய அணுசக்தி கழகத்தால் கட்டப்படுகிறது .
  2. மேற்கண்ட அனைத்து அணுமின் நிலையங்களின் கட்டுமானம் அனைத்தும் தரமற்றவை மற்றும் பாதுகாப்பற்றவை ஆக இருந்ததினால் தான் அவைகள் மாற்றப்பட்டது .  தரமான , மற்றும் பாதுகாப்பான மற்ற அணுமின் நிலையங்கள் ஏன் மாற்றப்படவில்லை ....?  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு காரணிகள் மத்திய , மாநில குழு வல்லுனர்களால் சான்றளிக்கப்பட்டு இருக்க திரு . உதயகுமார் இப்படி கேட்பது எதற்கோ ...?
  3. மேற்கண்ட மூன்று அணுமின் நிலையங்களும் வேறு நிலையங்களாக மாற்றப்படுவதற்கு ஏறத்தாழ இரு மடங்கு செலவு செய்யப்பட்டுள்ளது . அதாவது அந்த தொழில்நுட்பம் முழுவதும் மாற்றப்பட்டுள்ளது .  ஆனால் திரு . உதயகுமார் அணுமின் நிலையத்தை அப்படியே Gas Fired powed Station ஆக மாற்றமுடியும் என்று எப்படி சொல்லுகிறார் ...?
  4. மேற்கண்ட விடயங்கள் முழுவதும் திரு . உதயகுமாருக்கு தெரியாதா ...? அல்லது வேண்டும் என்றே மக்களை குழப்புகிறாரா ....? முதல்வரையும்  சேர்த்து ...
  5. சமையலுக்கே எரிவாயு ஒழுங்காக கிடைக்காத இந்த சமயத்தில் அண்ணாச்சி உதயகுமார் எரிவாயுவை எங்கிருந்து கொண்டுவருவார் என்பதும் விளங்காத காரியம் தானே ....!

இவைகளை கவனித்து பார்க்கும் பொழுது திரு . உதயகுமார் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும்  முட்டாள்கள் என்று நினைத்து விட்டார் என்றே தோன்றுகிறது ...... தமிழர்கள் முட்டாள்கள் அல்ல என்பதை திரு . உதயகுமார் உணரும் நாள் வரை நானும் காத்திருக்கிறேன் .  

55 comments:

  1. தமிழக அரசு நேயமித்துள்ள இந்த வல்லுநர் குழுவை நாங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறோம் ....இது ஒரு அப்பட்டமான புரட்டுத்தனம். வல்லுநர் குழுவுக்கு முன்னாள் அணுசக்தி கமிஷனின் தலைவரை நியமித்தது இடிந்தகரை தமிழர்களைக் கேவலப்படுத்துவதாகும். கலாம் ஒரு மூளையில்லாதவர் என்றால் இந்த சீனிவாசன் மூளை , கிட்னி எதுவுமே இல்லாதவர்.. உடனே இவரை நீக்கி விட்டு நாங்கள் சொல்லும் ஒரு நபரை வல்லுநர் குழுவுக்கு தலைவராக நியமஈக்க வேண்டும்...வல்லுநர் குழு உறுப்பினர்களாக பழ நெடுமாறன், கொளத்தூர் மணி , ஜவாஹிருல்லா, பீட்டர் பெர்னாண்டஸ், டக்லஸ் சிறியோன் , சிறில் நாடார், மைக்கேல் மதனகாமராஜ் ஆகியோரை நியமித்து அணு உலை அழிவுக்கானது என்று அறிக்கை தர வேண்டும்..அறிக்கை தரும் முன்னரே அணு உலையை புல்டோசர்கள் வைத்து இடித்து தரை மட்டமாக்க வேண்டும் அப்போத்டு தான் இடிந்தகரை மக்களுக்கு அச்சம் தீரும்' என்று உதைகுமார் தெரிவித்தாராராம்

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      இப்படி தான் அப்பாவி மக்களுக்கு தவறான தகவல்களை கொடுத்து உண்மையை அறிய விடாமல் முயற்சி செய்கிறார்கள் . ஆனால் போலி வேடம் வெகு காலம் நீடிக்காது . பொறுத்திருப்போம் பொறுமையுடன் .....

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
    2. ஒரு சாதாரண சுவரை (முல்லை பெரியாறு அணை)பரி சோதித்து அறிக்கை சமர்பிக்க ஆறு மாத காலம் ஆகும் போது இந்த சிக்கலான அணு உலை அப்படி இரண்டு மணி நேரத்தில் சோதிக்க முடியும். இந்த மாதிரி டம்மி சோதனைகளை செய்ய சிறில் நாடார் கூட தேவை இல்லை, உள்ளோர் குப்பன், சுப்பன், கூ முட்டை, மூத்த நாடான் இவர்களே போதும்.

      Delete
    3. நண்பருக்கு வணக்கம் ,

      உங்கள் கருத்துகள் எனக்கு வியப்பாக தான் உள்ளது . விஞ்ஞானிகள் சோதனைக்கு வருவதற்கு முன்பே , தேவையான தகவல்கள் , வரைபடங்கள் , விளக்கங்கள் அதனையும் படித்து விட்டு , மிக முக்கியமான , சிக்கலான இடங்களை நேரில் பார்வையிட்டு அறிக்கை சொல்லி இருக்கிறார்கள் . சரி. ..நன்கு பேசுகிறீர்கள் என்றே வைத்து கொள்ளுவோம் , உங்கள் அணு விஞ்ஞானி எத்தனை அணுமின் நிலையங்களை ( கூடங்குளம் கூட ) எத்தனை வருடமாக ஆராய்ச்சி செய்து வந்தார் ...?

      Delete
  2. எழுத்தாளர் ஞானிக்கு கேள்வி


    40% மின்சாரம் விநியோகத்தில் வீணாகிறது என்பது உங்கள் வாதம். ஆனால் 19% தான் வீணாகிறது என்பது அரசின் புள்ளி விவரம். தமிழ் நாடு மின்சார வாரியத்தின் இணையத்தில் இந்த விவரம் இருக்கிறது, copper loss , iron loss ஏதும் இல்லாமல் மின்சாரம் கடத்த இனி புதிய பொருள்தான் கண்டுபிடிக்க வேண்டும்

    அப்புறம் மத்திய அரசு 1000 மெகாவாட்டை குறைத்தது என சொல்லி இருக்கிறர்கள். அப்புறம் தனியார் மின் நிலையங்கள் உற்பத்தி 1000 மெகாவாட் .. ஆனால் தட்டுபாடு இருப்பதோ 5000 மெகாவாட் அளவிற்க்கு மீதம் 3000 மெகாவாட் யார் கொடுப்பாங்க.

    ஏதோ அனல் புனல் மின்சாரங்களில் ஆபத்து இல்லாதது போல பலர் என்னுகிறார்கள். அதிலும் பல பிரச்சனை இருக்கின்றன. அனல் மின்சாரம் ஓசோன் கெட காரணம். அதிகரித்து வரும் கரியின் விலை, தட்டுபாடு. புனல் மின்சாரத்தால் அணை கட்டி நீர் தேக்கினால் நிலநடுக்க வர வாய்பு. சூரிய மின்சாரம் பேச்சுக்கு மட்டுமே தற்போது உதவும்?காற்றாலை வெறும் 4 மாதம் மட்டும் பயன்படும். விலையும் அதிகம். மின்சார தொடர்வடம் அமைக்கும் செலவிற்க்கு உற்பத்தி கிடைப்பதில்லை

    அனு மின்சாரம் வேண்டாம் சரி, மாற்று வழி சொல்லுங்க?

    அப்புறம் குண்டு பல்பு வேண்டாம்ன்னு சொறீங்க..CFO உபயோகபடுத்த சொல்றீங்க. அந்த CFO உடைந்தால் அதில் இருக்கும் பாதரம் ( mercury) செய்யும் விளைவுகள் தெரியும் தானே

    ஏன் இப்படி உங்கள் எழுத்துகளில் இப்படி ஒரு மாறு பாடுகள். உங்கள் 40 கேள்வி பதில்களுக்கு மறுப்பு பதில்கள் மின்னியல் பொறியாளர்களால் எளிதாக முடியும். ஆனால் எதையும் நீங்கள் ஏற்று கொள்ள போவதில்லை என்ற போது ஏன் வீண் நேர விரயம் ?

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      உங்களின் விளக்கங்களும் , கேள்விகளும் மிக அருமை . நான் அவைகளை மனதார வரவேற்கிறேன் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  3. உதயகுமாரிடம் அந்த ஜெர்மன்காரர் இலவசமாக எரிவாயு தருகிறேன் என்று சொல்லி இருக்கிறாராம். அதனால் அவர் லாட்ஜில் தங்கி எரிவாயு உற்பத்தி செய்து கொண்டு இருந்தாராம். இது தெரியாமல் அவரை எரிவாயு டேங்கோடு நாடு கடத்தியதால் நமக்கு கிடைக்க இருந்த எரிவாயு கிடைக்காமல் போய் விட்டது.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      நல்ல காமெடி . ஆனால் இந்த மனிதர் அப்பாவி மக்களை கேடகமாக வைத்து கொண்டு விளையாடும் செயல் எப்பொழுது தான் முடியுமோ ...?

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  4. உதயகுமாரின் அடுத்த காமேடி
    மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிக மின்சாரம் வழக்க வேண்டும்.

    சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      இதே கருத்தை நானும் பல முறை எனது இடுகைகளில் சொல்லி உள்ளேன் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  5. உங்க அறிவியல் புள்ளி விபரம் எல்லாம் சரிதான். விபத்தே நடக்க வாய்ப்பில்லை என்று உத்தரவாதம் தர முடியுமா? ஒத்திகை பார்க்கிறேன் பேர்வழி என்று அந்தப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தியது உதயகுமாரா? எந்த நேரமும் வீட்டைவிட்டு ஓட வேண்டி இருக்கும் என்ற எண்ணத்தோடு நிம்மதியாக எப்படி குடும்பம் நடத்துவது?
    எவன் நிம்மதி கேட்டாலும் பரவாயில்லை. எவ தாலி அறுத்தாலும் பரவாயில்லை. நமக்கு டிவி பார்க்க, ஏசி போட, இன்டர்நெட்ல பொழுதைக் கழிக்க கரண்ட் வேணும். நீங்களும் உங்க விளக்கமும்.

    ReplyDelete
    Replies
    1. Wonderful comment Vijay,

      Delete
    2. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      மிக அருமையான ஒரு கேள்வியை கேட்டீர்கள் . உண்மையில் அவசர நிலை பாதுகாப்பு ஒத்திகையின் முயற்சி மக்களை கொஞ்சம் பயமுறுத்தி உள்ளது என்பது உண்மை தான் . இதை எனது பதிவிலும் நான் எழுதி உள்ளேன் . சரி . கொஞ்சம் கவனியுங்கள் ..... கொஞ்ச காலத்திற்கு முன்பு ( சில மாதங்களுக்கு ) கடற்க்கரையோரம் இருந்த பல கிராமங்களை சுனாமி ஒத்திகை என்று அவசர நிலை பாதுகாப்பு ஒத்திகையின் முயற்சி நடத்தப்பட்டது ( இதே தமிழகம் மற்றும் புதுச்சேரி ) . உங்களுக்கு தெரிந்து இருக்கும் தானே . அப்படி எனில் இனிமேல் யாரும் அந்த ஊரில் .வாழமுடியாது என்று அர்த்தமா ...? இல்லையே .....!

      அது போலவே , உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் , பாதுகாப்பு ஏற்பாடுகளின் இன்னும் ஒரு படி தான் இது . சரி அவசர கால ஒத்திகை வேண்டாம் என்று நீங்கள் சொல்லுகிறீர்களா ...? திரு . உதயகுமார் கூட அவசர கால ஒத்திகை வேண்டும் என்று சொல்லி உள்ளாரே ...? நீங்கள் ஏன் மக்களுக்கு அதன் அவசியத்தை சொல்லி புரியவைக்க கூடாது ....?

      சரி அவசரகால ஒத்திகை குறித்து மத்திய குழுவிடம் கேள்வி கேட்டீர்கள் அல்லவா ...? அந்த பதிலை ஏன் மக்களுக்கு கொடுக்கவில்லை ....? நீங்கள் இந்த கேள்விகளுக்கு பதில்களை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  6. Please read the comments made by Mr.BHARATIAN in this link,

    http://www.dianuke.org/questions-in-koodankulam-udayakumar/

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      I have read the comment of Mr.Bharatian made in the above said link....

      I Do wonder about his senseless statement . As you have asked the question , i have the responsibility to answer you...

      Mr.Bharatian talks about Re-Processing , but he is not talking about PU 239 generated from the U235 Fuel. As the other countries are not having the technology to use Thoriam as fuel along with PU239, they are not using the same and they are burying in Concrete Structures...

      But India is going to use TH 232 + PU 239 as fuel in its second stage reactors , which will give again Uraniam after its breeding , which will be a fuel for Third Stage reactor.

      Now you please think .... why India differs from Others...?

      Thank you for your constructive questions...

      Delete
  7. poda...punnaku

    ReplyDelete
    Replies
    1. Thank you Arivaali ( ! ? ) Sir ....

      Welcome again...

      Delete
  8. Friend,

    Dont give false news about using the Thorium fuel. Still its not a proven method. There are lots of confusions of using the fuel still. Also dont compare Tsunami and Atom reactor. Tsunami is out of our control but not in case of Atom reactor. If we wish we can avoid it.

    Tell me one thing, our Atom department NEVER achieved their goal of producing the power supply.. not even once... I'm not sure of the percentage. I hope they have achieved less than 10% what ever they promised for 30+ years and I'm sure in future also. Give me one good reason to keep my people in a grave danger of living near to a Atom reactor, for whom they never achieve their goal not even once.

    You are asking about the alternate methods, fine... Why dont you make use of Solar energy? Dont give some stupid reasons like the creation of solar panels are not env friendly. I hope I prefer that issue over the ATOM, which will keep the entire area as a no man land for centuries. Take example of Gujrat. They started using Canals open space to produce solar energy. If you still concern about Rs 13,000 spent on this reactor, then we dont have any humanity to care about the laks of people and their generation.

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you for your visit and constructive discussion..

      //Dont give false news about using the Thorium fuel.//
      it is not false news my dear. We have already tested this technology with our Indian Test reactors and the first FBR is being constructed near kalpaakkam . You may question me then why other countries are not yet starting the technology.. Some countries are constructing .... Many countries are not doing as they were not having TH232 sufficiently....

      //Tell me one thing, our Atom department NEVER achieved their goal of producing the power supply.//
      Your argument may be true for the past days. Many reasons behind of that . The first Target failed because of diversion in USSR. Hence most of our Nuclear Plans had been postponed including Koodankulam Nuclear Power Project. If KKNPP could have been started in the year of 1988 , kindly think about the Progress.

      As we proved our Nuclear Capability in Pokhran , a ban had been put by many countries for Nuclear. As result , we were suffering to get fuel . Hence it was one of the hindrence in achieving the mile stone. But now , a deal has been signed with many countries for uninteruppted supply of fuel. Hence , you can believe that in future the achievement will be more than the past..


      //Why dont you make use of Solar energy? //
      Friend, i am not against Solar. Govt is not also against Solar. Indian Govt. has set up a target of generating 20000 MWe electricity from solar in the coming years. But there are many hindrances in achieving this ... 1.) availability of sun light is limited . 2.) we can not store electricity. But our requirement of electricity is 5 lakh MWe , whereas our installed capacity is only 1.82 Lakh MWe. That is why a constant & consistent reliable source to produce Electricity is required. That's why ... i do support Nuclear...

      Thank You...

      Delete
  9. வணக்கம் இருதயம் சார் நலமா? உங்களது வாதங்கள் எல்லாம் உப்பு சப்பு இல்லாதது என்பதை மீண்டும் நிருபிக்கிறது. அந்த இடத்தில் மாற்று முறையில் மின்சாரம் எடுப்பது முடியுமா இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை. அணு உலைகள் என்பதே வேண்டாம் என்பதே நமது கருத்து. அதுவே மக்கள் நலம் விரும்பும் மனிதாபிமானம் தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஒவ்வொருவரின் கருத்தும் கூட. அணு மின்சாரம் என்பது தேவையில்லாத ஒன்று என்று உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பேன்ற ஒன்பது அறிஜர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அதனால் ஏற்ப்படும் இலாபங்களை காட்டிலும் அழிவே அதிகம். அது மட்டும் இல்லை அதன் கழிவுகளால் ஏற்ப்படும் ஆபத்தும் அதை பாதுக்காக்க ஆகும் செலவும் கணக்கிட்டால் அதற்க்கு பதிலான மாற்று முறைகளை தேர்ந்தெடுப்பதே அறிவுடைமை. மேலும் கூடங்குளம் பகுதியில் உள்ள மணல்பரப்பு நெகிழும் தன்மையை கொண்டது என்பதை உங்களால் மறுக்க முடியாது. மேலும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேராபத்துக்கள் உங்களையும், அபுல்கலாமையும் கேட்டு கொண்டு வராது. அதன் அளவையும் சீற்றத்தையும் நீங்கள் கற்பனையில் கணக்கிட முடியாது.

    மேலும் உதயகுமார், மற்றும் போராட்ட குழுவினர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தினால் அவர்கள் அதை மூட சொல்லாமல் அரசின் பணம் என்பது மக்கள் பணம் என்பதால் மாற்று வழிகளை கையாளுங்களேன் என்று கெஞ்சுகிறார்கள் மற்றபடி ஒன்றும் இல்லை. அந்த பகுதி மக்கள் விரும்பவில்லை என்றால் இழுத்து மூட வேண்டியதுதானே. சேது சமுத்திர திட்டத்தில் பல இலட்சம் கோடியை போட்டு விட்டு இழுத்து மூடவில்லையா, இல்லை நதி நீர் இணைப்பு என்று சொல்லி அதல் பல கோடி இலட்சங்களை போட்டு விட்டு மூடவில்லையா. கொள்ளை சரி மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்து சுவிஸ் வங்கிகளில் போட்டு சுகபோகமாக வாழவில்லையா?

    அந்த மக்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்கு மின்சாரம் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். அவர்களை நிம்மதியாக வாழவிட்டால் போதும் என்பதே. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும் என்பதற்கு மக்களை கொல்ல அவசியம் இல்லை. உங்கள் கோமாளி அப்துல்கலாம் சொல்கிறார் கூடங்குளம் மக்களுக்கு உலக தரம் வாய்ந்த மருத்துவமனையாம், அடுக்குமாடிகள் கொண்ட பசுமை வீடுகளாம், நால்வழி சாலையாம் ஏன்? இந்த வசதிகளை எல்லாம் போபாலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து கொடுத்து விட்டு அதைப்பற்றி பேசுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதிய தென்றல் வருக...... தாங்கள் நலமென நம்புகிறேன் .... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி .

      //உங்களது வாதங்கள் எல்லாம் உப்பு சப்பு இல்லாதது என்பதை மீண்டும் நிருபிக்கிறது.//
      ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் உப்பு சப்பு இல்லாதது என்று நீங்கள் கூறுவதே எனது பதிவுக்கு கிடைத்த வெற்றி போல தான் . நன்றி

      //அந்த இடத்தில் மாற்று முறையில் மின்சாரம் எடுப்பது முடியுமா இல்லையா என்பது இங்கு கேள்வி இல்லை. அணு உலைகள் என்பதே வேண்டாம் என்பதே நமது கருத்து.//
      பிறகு ஏன் நீங்கள் மக்களை இப்படி எல்லாம் தகவல் கொடுத்து ஏமாற்றுகிறீர்கள் என்பது தான் என்னுடைய இந்த பதிவின் நோக்கம் என்பதை நண்பர் மறந்து போக கூடாது ....

      //அணு மின்சாரம் என்பது தேவையில்லாத ஒன்று என்று உலக சமாதானத்துக்காக நோபல் பரிசு பேன்ற ஒன்பது அறிஜர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.//
      நண்பரே ... நீங்கள் ஒரு விடயத்தை அழகாக மறைத்து விட்டீர்கள் . அணுகுண்டுகளுக்கு எதிராகவும் , அணுகுண்டு கலாசாரத்திற்கு எதிராகவும் தான் அவர்கள் கருது வெளியிட்டார்கள் . அணுமின் நிலையங்களுக்கு எதிராக அல்ல என்பதை நீங்கள் மறந்து விடகூடாது . தகவலுக்கு : http://www.bbc.co.uk/news/world-asia-pacific-11740735

      //கூடங்குளம் பகுதியில் உள்ள மணல்பரப்பு நெகிழும் தன்மையை கொண்டது என்பதை உங்களால் மறுக்க முடியாது. மேலும் சுனாமி, நிலநடுக்கம் போன்ற பேராபத்துக்கள் உங்களையும், அபுல்கலாமையும் கேட்டு கொண்டு வராது//
      இந்த காரணிகள் எல்லாம் கணக்கில் கொண்டு தான் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டுப்பட்ட வருவதை மத்திய , மாநில குழுவினர் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர் என்பதி நீங்கள் மறந்து போக கூடாது நண்பரே ....!

      //ரசின் பணம் என்பது மக்கள் பணம் என்பதால் மாற்று வழிகளை கையாளுங்களேன் என்று கெஞ்சுகிறார்கள் //
      அடடா ...இப்பவாவது உங்களுக்கு புரிந்ததே ..... அரசின் பணம் மக்களின் பணம் என்பது .. அப்படியெனில் நீங்கள் எவ்வளவு அதிகம் திட்டம் நிறைவேருவத்ர்க்கு ஒத்துழைக்கவேண்டும் ....

      Doctor திரு ,.அப்துல் கலாம் அவர்களை கோமாளி என்று மிக கேவலமாக விமரிசிக்கும் நீங்கள் அணுமின் நிலைய தொழில் நுட்பத்தை எப்படி புரிந்து கொள்ளுவீர்கள் என்பது தான் எனது கவலை ...

      நன்றி

      Delete
  10. வணக்கம் இருதயம் இல்லாத இந்தியாவின் இப்போதைய பிரதமராக பேசும் இருதயம் அவர்களே! என்ன காதில் பூ சுற்றுகிரீர்களா? ஏதோ நீங்கள் இந்த நாட்டின் பிரதமர் மாதிரியும், அந்த மக்களுக்கு ஒன்று என்றால் நீங்கள் அப்படியே வந்து அவர்களை பாதுகாக்க திட்டங்கள் அமைத்து கொடுத்து வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விடுவது போலவும் பேசுகிறீர்கள்.

    அத்தனை பெரும் கலைவாணி பயலுவ நீங்கள் வேற வெவரம் கெட்ட ஆளா இருந்து கிட்டு அடுத்தவர்களையும் அப்படி ஆக்கதீன்கள்.... இந்த கலைவாணி பயலுவ சொல்லுவதை கேட்டு அணுஉலை கெட்டினால் அவ்வளவுதான் ஏதாவது நடந்தால் அம்போ என்று நடுத்தெருவில் விட்டு விட்ட போயி விடுவாணுவ. இந்த கிறுக்கு பயலுவளுக்கு வக்கலாத்து வாங்கிகிட்டு பதிவு வேற மனசாட்சியே இல்லாம போட்டு கிட்டு உங்கள் நேரத்தையும் வீணாக்கி மக்கள் நேரத்தையும் வீணாக்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதிய தென்றல் வருக...... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி .

      பிரதமர் மாதிரி பெரிய நபர்களிடம் எல்லாம் என்னை ஒப்பிடாதீர்கள் .... நான் ஒரு சராசரி இந்திய குடிமகன் . ஆனால் உண்மையை மறைத்து அப்பாவி மக்களை குழப்பி விடும் சில போலி முகமூடிகளுக்கு எதிராக பதிவு எழுதி வருகிறேன் . அவ்வளவு தான் ...

      அணுமின் நிலையம் என்பது அரசியல்வாதிகள் கட்டுவது அல்ல . பிரதமர் அவர்களோ , முன்னாள் பிரதமர் அவர்களோ , முதல்வர் அவர்களோ அல்லது எந்த அமைச்சர்களுமோ அணுமின் நிலையத்தை கட்டுவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் . அணுமின் நிலையங்கள் நமது நாட்டின் திறமை வாய்ந்த விஞ்ஞானிகள் , மற்றும் அறிஞர்களால் ( அணு இயல் படித்தவர்களால் மாத்திரம் அரசியல் படித்தவர்களால் அல்ல ) கட்டப்படுகிறது . எனவே தான் என் தாய் நாட்டை நம்புகிறேன் . என் தாய் திரு நாட்டின் விஞ்ஞானிகளை நம்புகிறேன் . அவர்களின் அறிவியல் அறிவை நம்புகிறேன் . ஆனால் சிலர் மக்களின் அறியாமையை நம்பி , அவர்களை குழப்பி விட்டு கொண்டு இருக்கின்றனர் . அவர்கள் இனம் காணப்படும் நாள் தொலைவில் இல்லை .

      Delete
    2. அண்ணே... அவர் எங்க அந்த மக்களை அடிப்படை புரியாத மக்கள் என்று சொன்னார்...? நீங்களா அப்படி ஒண்ண சொல்லிக்கிறதா... ஆஊன்னா நான் இந்தியன், தேசப்பற்று மிக்கவன், விஞ்ஞானியை நம்புபவன் என்று எல்லாம் சினிமா வசனம் பேசாதீர்கள்... காது வலிக்குது....

      ஏங்க... போபால் விஷ வாயு கசிவு விபத்துல உங்க விஞ்ஞானி என்ன செய்ஞ்சாங்க? உங்க நாட்டு பாதுகாப்பு அமைச்சு என்ன செய்ஞ்சுச்சு? முதல்ல அந்த கம்பெனி Owner-ஐ பத்திரமா தப்பி ஓட வச்சாங்க... இன்னமும் சரியான நஷ்ட ஈடு கொடுக்கவே இல்ல...

      போங்கப்பு போங்க... நீங்கதான் ஒழுங்கா படிக்கல... போய் பிள்ள குட்டிகளையாவது ஒழுங்கா படிக்க வைங்க ... சும்மா கப்பித்தனமா பேசிக்கிட்டு இருக்காதீங்க....

      Delete
  11. உங்கள் உச்சகட்ட பாதுகாப்பை தூக்கி குப்பையில் போடுங்கள். முதலில் இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பாருங்கள் யார் மக்கள் நலம் மக்களுக்காக பேசுகிறார்கள் யார் கார்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள் என்பதை பகுத்து பார்க்க தெரிந்து கொள்ளுங்கள். தமிழக மீனவர்கள் 500 பேருக்கு அதிகமாக இலங்கை ராணுவம் சுட்டு கொன்றதே எங்கே போனது உங்கள் உட்ச்சகட்ட பாதுகாப்பு. மக்களை பாதுகாக்காத அரசு, மக்கள் நலம் விரும்பாத அரசு இயந்திரம், ஊழல் பெரிச்சாளிகள் குடிகொண்டிருக்கும் அரசியல் இப்படிப்பட்ட ஒரு நாட்டில் இது போன்ற பிரச்னைக்கு உரிய அழிவை உண்டாக்கும் திட்டம் தேவை இல்லை என்பதே எங்களது கருத்து. உலக சமாதானத்திர்க்காக நோபல் பரிசு பெற்ற மேதைகளால், அப்துல் கலாம் போன்ற அரசின் பொய் பேசும் தற்குறி விஞ்சானிகளாக இல்லாமல் உண்மையை பேசும் நல்ல விஞ்சானிகள் சொல்வதைத்தான் எங்களால் கேட்க்க முடியும். அழிவு சக்தி இல்லாத நல்ல திட்டங்களை கொண்டுவாருகள் வரவேற்ப்போம். இதுபோல் கூண்டோடு கைலாசம் அனுப்பும் திட்டங்களுக்கு முகவர்களாக செயல்பட வேண்டாம் என்பதே எங்களது கனிவான வேண்டுகோள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதிய தென்றல் வருக...... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி .

      நான் ஏற்கனவே உங்களிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன் . நீங்கள் அணுமின் நிலையத்திற்கு எதிரானவரா அல்லது முதலாளிதுவத்திற்கு எதிரானவரா ..? இந்திய அணுமின் நிலையங்கள் எந்த corporate நிறுவங்களின் சொத்துகள் அல்ல என்பதயும் அவை இந்திய அரசின் ( மக்களின் ) சொத்து என்பதயும் நீங்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும் .

      //ங்கள் உச்சகட்ட பாதுகாப்பை தூக்கி குப்பையில் போடுங்கள்.//
      உலகில் உள்ள எல்லா அணுமின் நிர்வாகங்களையும் விட இந்திய அணுசக்தி கழகம் உச்ச கட்ட பாதுகாப்பை வலியுறுத்துகிறது மற்றும் செயல்படுத்தியும் வருகிறது . அதனால் தான் இந்தியாவில் கடந்த 40 வருடங்களாக இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வருகின்றன என்பதை நீங்கள் மறந்து போக கூடாது ..

      நன்றி

      Delete
  12. தமிழக மக்களையும், முதல்வரையும் ஏமாற்றும் அளவுக்கு உதயகுமார் புத்திசாலி என்று நீங்களே ஒத்து கொண்டு சான்றிதழ் அளித்து விட்டீர்கள் வேறு என்ன வேண்டும். இப்ப புரிகிறது ஏன் உங்கள் போலி விஞ்சானி கலாம் கூடங்குளம் நிபுணர் குழுவை கண்டு பயப்படுகிறார்கள் என்று.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் புதிய தென்றல் வருக...... தங்களின் வருகைக்கு மிக்க நன்றி .

      //தமிழக மக்களையும், முதல்வரையும் ஏமாற்றும் அளவுக்கு உதயகுமார் புத்திசாலி என்று நீங்களே ஒத்து கொண்டு சான்றிதழ் அளித்து விட்டீர்கள்//
      உண்மை ... ஏன் தெயர்யுமா ...? ஏமாற்றுகிறவன் எத்தனை நாள் வாழ்வான் என்று உங்களை நீங்கள் கேட்டு பாருங்கள் . ஒரே ஒரு பதில் தான் கிடைக்கும் . அது என்னவெனில் , " ஏமாறுகிறவன் இருக்கும்வரைக்கும் " என்பது தான் . அப்படியானால் ஏமாற்றுகிறவன் என்ற பெயர் எப்படி வருகிறது என்று கேட்டால் ஏமாறுகிறவர்கள் இருப்பதினால் ......

      அதுபோலவே .... திரு . உதயகுமார் புத்திசாலி என்ற உங்களின் கூற்று உண்மை .... ஏன் தெரியுமா .....? நம்மை போன்ற .................................இருப்பதினால் தான் ......

      நன்றி

      Delete
  13. ஃபுகுஷிமா விபத்தினைத் தொடர்ந்து ரசிய அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு ஆய்வறிக்கையை (http://www.bellona.org/articles/articles_2011/rosatom_report)ரசிய அரசு நிறுவனங்கள் அதிபர் மெத்வதேவிடம் அளித்திருக்கின்றன. வெள்ளம், தீ, நில நடுக்கம் முதலான இயற்கைப் பேரழிவுகள் முதல் மனிதத் தவறுகள் வரையிலான காரணங்களால் ஏற்படக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் ஏற்பாடுகள் ரசிய அணுஉலைகளில் இல்லை என்று கூறுகின்றது அந்த அறிக்கை. “அதுநாள் வரை வெளிப்படையாகச் சொல்லப்படாத, உலகம் அறியாத பல குறைபாடுகளை அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது” என்று நார்வேயின் ஆற்றல் தொழில்நுட்பத்துறையின் தலைமைப் பொறியாளர் ஓலே ரிஸ்தாத் இவ்வறிக்கையைப் பற்றித் தெரிவித்திருக்கிறார்.

    அவ்வறிக்கை பட்டியலிட்டுள்ள எல்லா குறைபாடுகளையும் ஆராயத் தேவையில்லை. ஒன்றை மட்டும் எடுத்துக் கொள்வோம். நில நடுக்கம் வந்தால் அணு உலையைப் பாதுகாப்பதெப்படி என்ற பிரச்சினை, ரசிய அணுஉலைகளின் வடிவமைப்பின்போது கணக்கில் கொள்ளப்படவே இல்லை என்று கூறுகிறது இவ்வறிக்கை. ஆனால், இந்திய அணுசக்தித் துறை இந்த உண்மையை வெளியில் சொல்லவேயில்லை. அணுமின் நிலையத்தின் 1.6 கி.மீ. சுற்றெல்லையில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடாது என்பது மிகவும் அடிப்படையான உலகறிந்த ஒரு விதி. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுனாமி குடியிருப்புகளை அரசே கட்டிக் கொடுத்திருக்கிறது. மக்களின் பாதுகாப்பு குறித்த இந்திய அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள இவ்விரு எடுத்துக் காட்டுகளே போதுமானவை.

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்கு உரிய பெயரில்லா நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் , ஆக்கப்பூர்வமான உங்களின் வாதத்திற்கும் எனது முதற்க்கண் நன்றிகள் .

      ரசிய அணு உலைகள் ஆபத்தானவை என்று நீங்கள் எனக்கு சுட்டி காண்பித்த தளத்தை பார்வையிட்டேன் . நீங்கள் அரைகுறையாக செய்திகளை புரிந்து கொண்டீர்கள் என புரிந்து கொண்டேன். நீங்கள் கூறிய தளத்தில் கூறப்பட்டு இருக்கும் இரண்டு மின் நிலையங்களும் RBMK 1000 வகையை சேர்ந்தவை ( ஆம் செர்நோபில் அணுமின் நிலையத்தை போல ) . எனவே செர்நோபிலுக்கு நேரிட்டது போல இந்த நிலையங்களுக்கும் நேரிடம் என்று அண்டை நாட்டுகாரர்கள் பயப்படுகிறார்கள் . மேலும் நீங்கள் சொல்லுவது போல அறிக்கை என்ற ஒன்றை நான் கானமுடியவில்லை . அறிக்கயை பார்த்ததாக அந்த பதிவில் எழுதப்பட்டு இருக்கிறது . நாம் அறிக்கையை படித்து பார்த்தால் உண்மை விளங்கும் ...

      சரி . ... கூடங்குளம் அணுமின் நிலையமும் , RBMK 1000 அணுமின் நிலையங்களும் ஓன்று என்று நீங்கள் நினைத்தீர்கள் ஆனால் , நீங்கள் தவறு செய்கிறீர்கள் நண்பரே .... கூடங்குளம் அணுமின் நிலையம் நிலநடுக்கம் , வெள்ளப்பெருக்கு போன்ற இடர்களை கருத்தில் கொண்டு தான் கட்டப்பட்டு உள்ளது என்பதை நீங்கள் அறிந்தும் இருப்பீர்கள் . கூடுதல் தகவலுக்கு : "புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை" என்ற எனது கட்டுரையை காணுங்கள் . http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_20.html

      //அணுமின் நிலையத்தின் 1.6 கி.மீ. சுற்றெல்லையில் மக்கள் குடியிருப்பு இருக்கக் கூடாது என்பது மிகவும் அடிப்படையான உலகறிந்த ஒரு விதி. ஆனால், கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் சுனாமி குடியிருப்புகளை அரசே கட்டிக் கொடுத்திருக்கிறது.//
      உங்களின் கருத்து மிக தவறு என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் . பொதுவாக அணுமின் நிலையங்களின் 1 . 6 KM சுற்றளவில் சுவர் கட்டப்பட்டு இருக்கும் . நீங்கள் போய் இடிந்தகரை பகுதியை நன்கு பாருங்கள் . உங்கள் கணக்கு சுவர் பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கும் தவறான கணக்கு போல தோன்றுகிறது .... நான் சொல்லுகிற படி அணுமின் கட்டிடத்தில் இருந்து 1 . 6 KM சுற்றளவில் குடியிருப்பு இல்லை என்றால் , உங்கள் நிலையை மாற்றி கொள்ளுவீர்களா நண்பரே ......

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  14. அணு மின்நிலையம் என்பது தேவதைகள் உலவும் சொர்க்கமாகவே இருக்கட்டும். அந்தச் சொர்க்கம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாதா? அது சொர்க்கமல்ல, நரகம்தான் என்பதை திருவாளர் மன்மோகன் சிங்கிற்கு நாம் புரிய வைத்து விட்டால், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவாரா? அறிவும் அறமும்தான் நாட்டை நடத்துகின்றனவா? “இல்லை.. இல்லை” என்று திகார் சிறையிலிருந்து கத்துகிறார், அமர்சிங்.

    ஃபுகுஷிமா விபத்துக்கு மேல் புரியவைப்பதற்கு வேறென்ன பொழிப்புரை வேண்டும்? இன்று அணு உலைகள் அமைப்பதை எல்லா நாடுகளும் இடைநிறுத்தம் செய்து விட்டன. மன்மோகன் சிங்கோ “சுயேச்சையான ‘அணு ஆற்றல் ஒழுங்குமுறை ஆணையம்’ ஒன்றை அமைப்பதன் மூலம் அணு உலைகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவோம்” என்று அறிவித்திருக்கிறார்.

    முதலில் அணுஉலைகளை விற்கும் அமெரிக்க முதலாளிகளின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துங்கள் என்று இந்திய அரசை நெருக்குகிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன். மன்மோகன் அரசு ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கும் அணுசக்தி கடப்பாடு சட்டத்தின் 17பி பிரிவு, “அணு உலையின் வடிவமைப்பில் தவறு இருந்து, அதனால் விபத்து நேரும் பட்சத்தில், அந்த உலையை விற்பனை செய்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்பதற்கு வழி வகுக்கிறது. பிரிவு 46 பாதிக்கப்பட்ட மக்கள் அணு உலை தயாரித்த கம்பெனியிடம் நட்ட ஈடு கோர மறைமுகமாக வழி செய்கிறது.’’ எனவே இவ்விரண்டு பிரிவுகளையும் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்கிறார் ஹிலாரி. (தி இந்து, ஜூலை,19, 2011)

    அணு உலைகளையே நீக்க வேண்டும் என்று கோருவதற்கு இதைக் காட்டிலும் வலிமையான காரணம் தேவையா என்ன?

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்கு உரிய பெயரில்லா நண்பருக்கு வணக்கம் ,

      //அந்தச் சொர்க்கம் வேண்டாம் என்று சொல்லும் உரிமை மக்களுக்குக் கிடையாதா?//
      உண்டு .... ஜனநாயக நாட்டில் உண்டு . நான் மறுக்கவில்லை . ஆனால் அது சொர்க்கம் அல்ல , நரகம் என்று ஒரு கூட்டம் மக்களை திசை திருப்புவதை பார்க்கும் பொழுது , அது நரகமல்ல , சொர்க்கம் தான் என்று புரிய வைக்கவேண்டிய கடமை அரசுக்கு மாத்திரமல்ல , ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது ...

      //ஃபுகுஷிமா விபத்துக்கு மேல் புரியவைப்பதற்கு வேறென்ன பொழிப்புரை வேண்டும்?//
      "புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை" என்ற எனது கட்டுரையை காணுங்கள் . http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_20.html . நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் .

      அணு விபத்து மசோதாவை குறித்து நீங்கள் சொன்னீர்கள் , " சில சரத்துகளை நீக்கும் படி ஹிலாரி சொன்னார் " என்று . அவற்றிற்கு எல்லாம் இந்தியா தலையாட்டி விடவில்லை என்பதை நீங்கள் என்று கொள்ள மறுக்கிறீர்கள் .

      //அணு உலைகளையே நீக்க வேண்டும் என்று கோருவதற்கு இதைக் காட்டிலும் வலிமையான காரணம் தேவையா என்ன?//
      கொஞ்சம் எனது ' அணுமின்சாரம் தேவையா ..?" என்ற கட்டுரையை காணுங்கள் . உங்களுக்கு காரணம் விளங்கும் . http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_16.html

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  15. //ஏமாற்றுகிறவன் எத்தனை நாள் வாழ்வான் என்று உங்களை நீங்கள் கேட்டு பாருங்கள் . ஒரே ஒரு பதில் தான் கிடைக்கும் . அது என்னவெனில் , " ஏமாறுகிறவன் இருக்கும்வரைக்கும்//

    இதுவும் ஒரு பதிலா நான் சொன்னது ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்த ஒரு தனி நபர் தமிழக அரசாங்கத்தையே ஏமாற்றி விட்டார் என்று நீங்கள் கதை அளப்பதை பற்றி நான் வஞ்சப்புகழ்ச்சி அணியில் சொல்லி இருந்தேன் அதற்க்கு நீங்கள் நேரிடையாக பதில் சொல்வதால் நானும் கேட்கிறேன்.

    அபுல் கலாம் மாதிரி, மண்ணு மோகன் மாதிரி, அரசியல் கூத்தாடிகள் மக்களை ஏமாற்றுபவர்கள்தான் இந்தியாவின் ஆளும் வர்க்கமாக இருக்கிறார்கள் உங்களை போன்ற ஏமாறும் பேர்வழிகள் இருக்கும் வரை அவர்களை போன்ற ஏமாற்றுகாரர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

    உதயகுமார் யாரையும் ஏமாற்றவில்லை, அணு உலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் யாரும் யாரையும் ஏமாற்றி எதையும் எடுத்து விடவில்லை. ஆனால் நீங்கள் சொல்லும் ஆட்களோ ஊழல் முடை அடிக்கும் கார்பரேட் நிறுவனங்களின் கைகூலிகள். மொத்தத்தில் அந்த மக்களுக்கு மின்சாரம் வேண்டாம். வேண்டும் என்று கேட்க்கும் பகுதிக்கு கொண்டு போங்கள் அம்புடுதான்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி . இவ்வளவு ஆதாரங்களுடன் இந்த பதிவு எழுதப்பட்டு இருக்கும் பொழுது நீங்கள் திரு . உதயகுமார் மக்களை ஏமாற்றவில்லை என்று மறுபடி மறுபடி கூறுவது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக தான் உள்ளது . நீங்கள் கூட அந்த கூட்டத்தில் உள்ளவர் என்பதை உங்களின் வார்த்தைகள் தெளிவாக சொல்லுகிறது .....

      நன்றி

      Delete
  16. //இந்திய அணுமின் நிலையங்கள் எந்த corporate நிறுவங்களின் சொத்துகள் அல்ல//

    சும்மா சின்ன புள்ள மாதிரி பேசாதீங்கள் சார்..... என்ன நடக்கிறது இந்தியாவில் என்பதை அடிப்படை புரியாத மக்களின் பாதிப்புகள் புரியாத நீங்கள்... நான் இந்தியன்.... தாய் திருநாடு.... என்னசார் வீர வசனம் எல்லாம் பேசுறீங்கள்.... நீங்கள் வேண்டுமானால் தாய் திரு நாடு என்று பெரிய சுலோகங்கள் சொல்லி மக்கள் பிரச்னையை மறைக்க பார்க்காதீர்கள். நீங்கள் வேண்டுமானால் இந்த காவாலி பயலுவளை நம்புங்கள் அந்த பகுதி மக்களும், நடுநிலையாளர்களும் நம்ப்பத்தயாராக இல்லை. இதற்க்கு முன் உள்ள மின் நிலையங்களின் மின்சாரம் மக்களுக்கா கொடுக்கப்படுகிறது. எல்லாம் கார்பரேட் நிறுவனங்களுக்கு வாரி கொடுத்து விட்டு மிட்சம் மீதியைதானே மக்களுக்கு செலவிடுகிறார்கள்......

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி . நீங்களே அந்த பகுதி மக்களை அடிப்படை புரியாத மக்கள் என்று கூறிவிட்டீர்கள் . அதனால் தான் உங்கள் நாடகம் அங்கு செல்லுபடி ஆகி கொண்டு இருக்கிறது என்பதை நீங்கள் மறக்க கூடாது . எனவே தான் நீங்கள் அந்த மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் . மக்கள் விழித்து எழும் காலம் வெகு தொலைவில் இல்லை நண்பரே ....

      நன்றி

      Delete
  17. இந்தியாவின் வ‌ள‌ர்ச்சிக்கும், ம‌ர‌புசாரா எரி ஆற்றல்க‌ளான‌ காற்றாலையும், சூரிய ஒளியும், உயிர்ம எரிபொருளுமே சரியான வழியாகும். ஆண்டின் 365 நாட்களும் சூரிய ஒளி கிடைக்கும் வெப்ப மண்டல நாடான இந்தியா சூரிய ஒளியிலிருந்து எடுக்கும் மின்சாரத்தின் அளவு 1 விழுக்காட்டிற்கும் குறைவு. அதுமட்டுமின்றி சதுர மீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6 கிலோ வாட் மின்சாரத்தை சூரிய ஒளியிலிருந்து பெறும் திறன் கொண்ட தார்ப் பாலைவனத்தையும், குஜராத்தின் வடக்குப் பகுதியையும் கொண்ட இந்தியாவில் ஏன் அந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில்லை. இது எல்லாத்தையும் கடைபிடிக்க மாட்டார்கள். ஏன் என்றால் அணு ஆயுதம் தயாரிக்க உரோனியம் செறிவூட்ட இந்த அணு உலை கூடங்கலையே ரகசியமாக பயன்படுத்தி வருகின்றனர் அதனால்தான் வெறி கொண்டு அணு உலை திறக்க அலைவது.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் பதிலுரைக்கும் மிக்க நன்றி .

      மிக அருமையாக , ஒரு ஆக்கப்பூர்வ கேள்வியை நீங்கள் கேட்டு உள்ளீர்கள் . சூரிய ஒளி மின்சாரம் ஒரு பசுமையான மின்சாரம் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்துகளும் இல்லை . அரசும் வரும் ஆண்டில் சூரிய ஒளியின் மூலம் 20000 MWe அளவுக்கு மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை தயாரித்து உள்ளது . ஆனாலும் சூரிய ஒளி மின்சாரம் நமது தேவைக்கு உறப்தை செய்யமுடியுமா என்றால் இல்லை என்ற பதில் தான் நமக்கு உள்ளது ...

      உதாரனத்திற்க்கு , சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க மிக பெரிய நிலம் தேவை . அதனால் தான் என்னவோ ... உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையே 200 Mwe மின்சாரம் தயாரிக்கும் சக்தி படைத்தது தான் .

      மாத்திரமல்ல , சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது காலநிலையை பொறுத்ததே . நன்கு சூரியன் இருக்கும் காலங்களில் மாத்திரம் நல்ல பலன் தரும் . அதுவும் காலை நேரங்களில் . உங்களுக்கு தெரியும் .... நாம் மின்சாரத்தை சேமித்து வைக்க முடியாது என்பதை ( குறைந்த அளவு மாத்திரம் பாடரிகளில் )

      சூரிய ஒளி மின்சாரம் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் விலையும் அதிகம் . அப்படியானால் நமது பொருளாதாரமும் பாதிக்கப்படும் .

      எனவே தான் செலவு குறைந்த , சுற்று சூழலுக்கு பாதுக்காப்பான , எந்த காலநிலையிலும் தொடர்ந்து ( 24 x 7 ) மின்சாரம் தரும் அணுமின் நிலையங்கள் நமது மின்தேவையை சந்திக்கும் என்பது எனது கருத்து.

      நீங்கள் நினைப்பது போல கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுகுண்டுகள் செய்யபடாது என்பதை நான் உங்களுக்கு முன்னமே விளக்கி உள்ளேன் என்பதை நீங்கள் மறந்து போக கூடாது ....

      நன்றி

      Delete
  18. சும்மா மாங்காய் புளித்ததா மவுத் புளித்ததா என்று சொல்லி விட்டு போய் விடமுடியாது. அமெரிக்காவில் சோலார் நிறுவனங்கள் 150 டாலருக்கு அதிகமாக மின்கட்டணம் செலுத்தும் விடுகளுக்கு சோலார் முறையில் மின்சாரம் எடுக்கும் பேனல்களை இலவசமாக இன்ஸ்டால் செய்வதோடு அவர்கள் கட்டும் மின் கட்டணத்தில் 75 சதவீதத்தை தங்களுக்கு கட்டினால் போதும் என்று சொல்லி எல்லாம் இடங்களிலும் அதை நிறுவி வருகிறார்கள். இதை அங்கு வசிக்கும் நண்பர் ஒருவர் தனது வீட்டில் நிறுவி இருப்பதாக சொன்னார் வேறு என்ன ஆதாரம் வேண்டும். எதற்கு ஆலை நிறுவி மின் உற்பத்தி செய்து பெரிய நிறுவனங்களுக்கு கொடுக்கணும் அதை பற்றியே சிந்தியுங்கள். மக்களுக்கு மின்சாரம் கிடைப்பதை பற்றி பேசினால் நீங்கள் ஒரே அன்னிய நிறுவனங்களை கொண்டு வருவதிலேயே குறியாக இருக்கிறீரே...

    ReplyDelete
  19. இனிமேல் அனல் மின்நிலயம் உருவாக்காமல் இருக்கும் மின் பற்றாக்குறையை சீர் செய்ய குழல் விளக்குகளை பயன்படுத்துவது.... மற்றும் அரசியல் மற்றும் மாநாடுகள், பொது நிகழ்ச்சி, கோவில், மசூதி, சர்ச் திருவிழாக்கள் இப்படி கொடுக்கும் மின்சாரத்தை, கள்ளத்தனமாக அரசியல், மாநாடுகளுக்கு மின்சாரத்தை திருடுவது இதை எல்லாம் கடுமையாக்கி சேமித்தால் போதிய அளவு மின் வெட்டை தடுக்க முடியும். அது போன்ற நிகழ்சிகளுக்கு ஜெனரேட்டரை பயன்படுத்தும்படி அரசு கடுமையாக சட்டங்களை கொண்டு வரவேண்டும். அதே வேலை விடுகளுக்கு தேவையான மின்சாரத்தை எடுக்க, தெரு விளைக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை பெற சோலார் பேனல்கள் மூலம் சூரிய மின் சக்தி பெரும் விடயத்தை மேற்கொள்ள வேண்டும். இதை செய்தாலே பெரும்பான்மையான மின் பற்றாக்குறையை தீர்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      உங்களின் வருகைக்கு நன்றி ....

      நீங்கள் சொல்லுவது போல சூரிய ஒளி மின்சாரத்தை நானும் ஆதரிக்கிறேன் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை , ஆனால் சூரிய ஒளி மின்சாரத்தினால் நமது தேவையை நாம் சந்திக்கமுடியாது என்பது தான் உண்மை . இது குறித்து ஒரு கட்டுரை எழுதி கொண்டு இருக்கிறேன் . அதில் உங்களுக்கு பதில் கிடைக்கும் என நினைக்கிறேன் .

      மின் சிக்கனம் வரவேற்க படவேண்டிய ஓன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை . ஆனால் மின் சிக்கனம் நமது மின் தேவையை சந்திக்குமா என்பதற்கு கொஞ்சம் எனது "மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்" கொஞ்சம் படியுங்கள் . http://naanoruindian.blogspot.in/2012/01/blog-post_24.html

      நன்றி

      Delete
    2. உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர்.

      சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?

      கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள்.

      இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

      Delete
    3. விஞ்ஞானத்தை நம்புவது வேறு, விஞ்ஞானிகளை நம்புவதென்பது வேறு. கூடங்குளத்தில் போராடும் மக்களையெல்லாம் பகுத்தறிவற்ற மூடர்கள் போல தனது (தினமணி) கட்டுரையில் சித்தரித்து, ‘கெக்கெக்கே’ என்று சிரிக்கிறார் நெல்லை சு.முத்து என்ற எழுத்தாளர்.

      ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை.

      அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!அணுகுண்டுக்கே அல்லேலுயா பாடியவரும், இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் எனும் அடிமை ஒப்பந்தத்தின் ஆதரவாளரும், தினமலரால் நேர்மையின் இருப்பிடம் என்று போற்றப்படுபவருமான அப்துல் கலாம் கூடங்குளம் மின் நிலையத்துக்குள் இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 மணி வரை ஆய்வு நடத்தி விட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என்று 40 பக்க அறிக்கையை உடனே வெளியிட்டிருக்கிறார்.

      Delete
    4. ரசிய நிறுவனமான “ஆட்டம் ஸ்ட்ராய் எக்ஸ்போர்ட்” டின் இணையதளத்தில் கம்பெனி விளம்பரத்துக்காக அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்களையே சுட்டுத் தயாரிக்கப்பட்டிருப்பதுதான் கலாமின் அறிக்கை.

      கூடங்குளம் பகுதி நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்படாது என்றும், நாகப்பட்டினத்தை 2004இல் தாக்கிய சுனாமி கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கவில்லை என்றும் கலாம் கூறுகிறார். அரசு புள்ளிவிவரப்படியே கன்னியாகுமரியைத் தாக்கிய சுனாமியால் மாண்டவர்களின் எண்ணிக்கை 808.

      இப்பகுதியில் இதுகாறும் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்கள் குறித்த விவரங்களையும் கூடங்குளம் போராட்டக் குழுவினர் பட்டியலிட்டுள்ளனர். சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!

      உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம். ஆனால், 1947இலிருந்து 2008 வரை உலகெங்கிலும் 76 விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 56 விபத்துகள் 1986இல் செர்நோபில் விபத்துக்குப் பிறகு நடந்தவை.

      4, மே 1987இல் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகள் மூடல். செலவு 300 மில்லியன் டாலர். 10, செப். 1989தாராப்பூர் அயோடின் கசிவு கதிர்வீச்சு 700 மடங்கு. செலவு 78 மில்லியன் டாலர். 3, பிப். 1995 கோட்டா ராஜஸ்தான் ஹீலியம்/கனநீர் கசிவு 2 ஆண்டு மூடல். செலவு 280 மில்லியன் டாலர். 22, அக். 2002 கல்பாக்கம்100 கிலோ சோடியம் (கதிர் வீச்சு) கசிவு. செலவு 30 மில்லியன் டாலர். (பொன்.ஏழுமலை, தினமணி, 24 நவ.) இவை இந்தியாவில் நடந்த சில விபத்துகள். இவற்றில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர்; இறந்தவர்கள் பலர்.

      Delete
    5. ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.

      Delete
    6. கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார். எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.

      Delete
    7. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....

      உங்களின் கருத்துகள் அனைத்தும் அணுமின் நிலையங்கள் வெளிநாட்டு தொழில் நுட்பத்தில் கட்டப்படுவதை எதிர்த்து தான் எழுதப்பட்டு இருக்கிறது . இடிந்தகரை மக்கள் தாங்கள் சொல்லுவது போல மறு காலனி ஆதிக்கம் என்று நினைத்து போராடவில்லை . மாறாக அணுமின் நிலையத்தினால் தாங்கள் பாதிக்கப்படுவோமா என்ற பயத்தினால் தான் போராடுகிறார்கள் . அந்த நியாயமான பயத்தை போக்க தான் அரசுகள் முயன்று வருகின்றன . ஆனால் நீங்களோ அந்த நியாயமான பயம் அரசால் தீர்க்க முடியாத படிக்கு , உங்களுக்கு சாதகமாக திருப்ப பார்க்கிறீர்கள் . அதை தான் நானும் பல முறை எனது பதிவுகளில் எழுதி வருகிறேன் ....

      //ஸ்ரீஹரிகோட்டாவில் சூடம் கொளுத்தி ஏவுகணை பத்தவைக்கும் கோமாளிகளுக்கு இவ்வளவு கொழுப்பு தேவையில்லை//
      நீங்கள் சொன்ன இந்த ஒரு கருத்து போதும் , " உங்களின் அறிவியல் ஞானத்தை ( ? ) எடுத்து சொல்ல ". எங்கே இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேறி விடுமோ என்ற பயம் உங்களுக்கு இல்லையா ....? அணு தொழில் நுட்பம் தான் உங்கள் எதிரி என்றால் விண்வெளி துறையை நீங்கள் ஏன் சாட வேண்டும் ...? இது மக்களுக்கு புரியாதா ......நீங்கள் காண்பிப்பது போலி முகம் என்று ....

      அறிவியலை பற்றி நான் எடுத்து சொல்லி உள்ள காரியங்களை அறிவியல் பூர்வமாக மறுத்து பேச உங்களால் முடியாத காரணத்தினால் ஊழல் கதைகளை எல்லாம் அள்ளி விடுகிறீர்கள் . இப்படி தான் உங்கள் தலைவர் உதயகுமாரும் அள்ளி விடுகிறார் . இப்படி எல்லாம் சொல்லுவதினால் , நீங்கள் மறைமுகமாக மக்களை தவறான பாதையில் கொண்டு செல்லுகிறீர்கள் என்ற பார்வையில் இருந்து நீங்கள் தப்பி கொள்ளமுடியாது என்பதை நீங்களும் அறிந்து உள்ளீர்கள் ...

      காத்திருக்கிறேன் .... பொறுமையுடன் .....

      தொடர்ந்து வருகை தாருங்கள் ....,. நன்றி

      Delete
    8. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....

      //சுனாமியின்போது, குமரிமுனை திருவள்ளுவர் சிலையின் உயரத்துக்கு133 அடிக்கு அலைகள் எழும்பின. ஆனால், கூடங்குளம் உலை 13.5 மீட்டர் (சுமார் 42 அடி) உயரத்தில் இருப்பதால், சுனாமி அலைகள் இதனைத் தாக்காது என்கிறார் கலாம். 133ஐ விட 42 பெரிது என்பது கலாமின் கண்டுபிடிப்பு போலும்!//

      ஐயா .....உங்களின் பதிலை படித்து பார்த்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது . 2004 ல் வந்த சுனாமியின் அதிகபட்ச உயரமே 24 மீட்டர் தான் ( அதாவது 80 அடிதான் ) . அதுவும் இந்தோனேசிய தீவுகளில் தான் உண்டானது . நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள் . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/2004_Indian_Ocean_earthquake_and_tsunami . பிறகு எப்படி கனியாகுமரியில் 133 அடி சுனாமி வந்து என்று உங்களின் " நிபுணர் குழு (?)" சொல்லுகிறது ..? கொஞ்சம் வேடிக்கையாக இல்லை . ஓஹோ ..... அலை பாறை மீது மோதி தண்ணீர் தெளித்ததே , அதையும் சேர்த்து கணக்கில் போட்டு தான் மக்களை குழப்புவீர்களோ ...?. Dr கலாம் சரியாதான் சொல்லி உள்ளார் , உங்களின் கணக்கு தான் தப்பு என்பதை நீங்கள் தான் உணரவேண்டும் நண்பரே ....

      நன்றி

      Delete
    9. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் வருகைக்கும் , பதிலுரைக்கும் மிக்க நன்றி .....

      //உலகம் முழுவதும் நடந்துள்ள அணு உலை விபத்துக்கள் இதுவரை ஆறே ஆறுதான் எனவும், இந்தியாவில் இதுவரை ஒன்றுகூட நடைபெறவில்லை என்றும் கூறுகிறார் கலாம்.//
      உண்மை தான் ஐயா ...... Accident என்பது வேறு ..... Incident என்பது வேறு . இது குறித்து புள்ளி விவரங்களுடன் நான் எழுத ஆசைப்படுகிறேன் . அநேக தனி பதிவுகள் எழுதி கொண்டு தான் இருக்கிறேன் . ஆனால் வேலை பளு காரணமாக முடியவில்லை . கொஞ்சம் பொறுங்கள் ...

      நன்றி

      Delete
  20. I AM A THERMAL POWER ENGINEER WITH MORE THAN 35 YEARS OF EXPERIENCE IN INDIA AND GULF COUNTRIES.
    A NUCLEAR POWER STATION CAN NOT BE CHANGED AS A THERMAL POWER STATION.
    FOR BULK POWER GENERATION, SOLAR ENERGY IS NOT USEFUL. THEN WHY SAUDI ARABIA IS WASTING IT'S OIL/GAS RESOURCES FOR PRODUCING POWER. SO FAR, THERMAL, NUCLEAR, HYDEL CAN ONLY PRODUCE BULK POWER.
    I HAVE NO DOUBT THAT UDAYAKUMAR IS A CHEAT. FOR THE SAKE OF MONEY, SOME PEOPLE CAN SUPPORT HIM.
    WHATEVER ARHUEMENT YOU PUT SOME WILL NOT ACCEPT. WE NEED NOT CARE ABOUT THEM. IF YOU ASK WHAT IS THEIR POLICY ABOUT IRAN'S NUCLEAR POLICY, THERE WILL NOT BE ANY REPLY. SHAMELESS PEOPLE.

    GOPALASAMY. SENIOR OPERATION ENGINEER. SAUDI ARABIA

    ReplyDelete
    Replies
    1. Dear Sir,

      Thank you very much for your visit and your valuable comment.

      Your comments are motivating me to go further.

      Thank you & visit again..

      Delete
  21. நண்பர் இருதயம் ... நல்ல பதிவு . வாழ்த்துக்கள் . அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களை அரசும் சரி , அணு உலையை ஆதரிப்பவர்களும் சரி ... “ பாமரர்கள் , அச்சப்படுகிறார்கள் , விழிப்புணர்வு தேவை “ என்றே சொல்கிறார்கள் . ஆனால் உதயகுமார் குழுவினரும் அவர்களை ஆதரிப்பவரும் முன்னாள் ஜனாதிபதி , சிறந்த தேசபக்தர் , விஞ்ஞானி மேதகு அப்துல் கலாம் அவர்களை மிகவும் கேவலமாகவும் மரியாதைக் குறைவாகவும் கொச்சைப்படுத்தியும் பேசி வருவது அவர்களின் ஈன புத்தியையே காட்டுகிறது . வாழ்க வசவாளர்கள் என்று கலாம் இன்று வரை அத்தகைய “ அதி மேதாவி”களையோ அவர்களது தூற்றல்களையோ பொருட்படுத்தவே இல்லை. Turbine , Cooling Tower , Main Pipe line , Proton , electron , இது எதுவுமே தெரியாமல் விஞ்ஞானி உதயகுமார் அணு உலை குறித்து ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாடம் நடத்துகிறார். :D
    ----- மொகி / நெல்லை.

    ReplyDelete
  22. intha anu ulaiya kattiyathum thaniyar compani-kall thaan.ungalukku theriyuma nannparkalay. anaithum tharam kuraintha poruttkall. intha ulai start aahinal problem conform

    ReplyDelete
  23. தோழர் இருதயத்துக்கு நன்றி.
    உதயகுமார் அவர்கள் தொடர்ந்து அணு உலை குறித்து தவறான பிரச்சாரத்தை நடத்தி வருவதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறீர்கள். மிக்க நன்றி. அணு உலை மூட வேண்டும் என்பதற்காக புதிய புதிய புரளிகளை கிளப்புகின்றனர். தீர்வு காணமுடிகிற தொழில்நுட்ப பிரச்சனைகளை முன் நிறுத்தி தீருவே காண முடியாததுபோல் அறிவொன்னாவாதத்தை முன் நிறுத்துகின்றனர். மக்களை ஏமாற்றி தன் பின் அணிதிரட்டியுள்ளனர் என்பதே உண்மை. இது வெகுகாலம் நீடிக்க அனுமதிக்க கூடாது. தானாய் மாறும் என்று ஒதுங்குவிடவும் முடியாது. அம்மக்களின் பீதியை தெளியவைத்து இதன் பின்னுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எடுபிடித்தனத்தையும் அதன்வழி செல்லும் உதயகுமார் கூட்டத்தையும் அம்பலப்படுத்த வேண்டும். இதனடிப்படையில் உங்கள் தொழில்நுட்பம் குறித்த பிரச்சனையை அருமையாக கையாளுகிறீர்கள். மிக்க நன்றி. இன்று பல நாடுகளில் அணு உலைகள் மூடுவதாக அறிவித்திருப்பதற்கு முக்கிய காரணம் தொழில் நுட்ப பிரச்சனையல்ல. சமூக பொருளாதாரப் பிரச்சனை என்பதை World Nuclear Energy Report தெரியப்படுத்துகிறது. தொடர்ந்து உங்கள் பணி தொடரட்டும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Thank you sir for your kind visit and encouragement...

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி