Thursday 2 February 2012

கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு


கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த சர்ச்சைகள் எழுந்திருக்கிற இந்த காலத்தில் , அணுமின்சாரத்தை குறித்து நான் எழுதிய அநேகம் பதிவுகள் பல்வேறு காலத்தில் இந்த வலைப்பூவில் பதியப்பட்டது .   அணுமின்சாரத்தை குறித்து பலர் அறிய விரும்புகிற காரணமோ என்னவோ தெரியவில்லை  , பெரும்பாலான அணுமின் நிலையத்தை குறித்த பதிவுகள் 600 பக்க பார்வைகளை ( each ) தாண்டி விட்டது .  வலைப்பூவுக்கு வருகை தந்த நண்பர் ஒருவரின் கருத்தை வாசிக்கும் பொழுது தான் இந்த பதிவுகளின் தொகுப்பை ஒரே பதிவில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது .  அதன் விளைவு தான் இந்த கூடங்குளம் அணுமின் நிலையம்  - ஒரு அறிவியல் தொகுப்பு .



மின்சாரம் தயாரிப்பதற்கு அநேகம் வழிகள் இருக்கும் போது , அணுமின்சாரம் தேவையா ? என்ற கேள்வி எழுவது சகஜம் தான் .  இந்த பார்வையுடன் எழுதப்பட்டது தான் " அணுமின்சாரம் தேவையா ..? " என்ற பதிவு .   வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


புகுஷிமா அணுமின் நிலையத்தில் இயற்கை பேரிடர்களால் எதிர்பாராத நிகழ்வு நேர்ந்த பொழுது , கூடங்குளம் அணுமின் நிலையமும் பாதுகாப்பற்றது என்ற பயம் நிலவிய பொழுது கூடங்குளம் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களை அறிவியல் பூர்வமாக ஒப்புமை செய்து எழுதப்பட்டது தான் " புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா -  ஒரு ஆய்வறிக்கை "  என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


 அணுமின் நிலையங்கள் என்றாலே கதிரியக்கம் தான் என்று பெரும்பாலும் நம்பப்பட்ட சூழலில் , கதிரியக்கத்தை  குறித்து எளிய வார்த்தைகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதவேண்டும் என்று நினைத்ததின் விளைவு தான் " கதிரியக்கம் என்றால் என்ன ? - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .

பல நண்பர்கள் அணுக்கழிவு என்று ஒரு பெரிய வார்த்தையை உபயோகிப்பதை பார்த்து அநேகர் குழம்பிய பொழுது , இந்தியாவில் அணுக்கழிவு எப்படி கையாளப்படும் என்பதை ஆராய்ந்து பாரதத்தின் விளைவு தான் " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


அணுமின் நிலையங்கள் சுற்று சூழலை பாதிக்கும் என்று ஒரு கருத்து எழுந்த பொழுது , கொஞ்சம் அதை ஆராய்ந்து பார்க்கையில் உருவான பதிவு தான் " அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ? "  என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .



மீனவ நண்பர்கள் அனைவரும் அணுமின் நிலையத்திற்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் என்று ஒரு நண்பர் என்னை கேள்வி கேட்டபொழுது தான் " கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் -  ஒரு ஆய்வு " என்ற பதிவு வெளிவந்தது . வார்த்தையின் மேல் சொடுக்கவும் .


புகுஷிமா நிகழ்வுக்கு பின்னர் உலகம் முழுவதும் அணுமின் திட்டங்களை நிறுத்தி உள்ளார்கள் . அப்படி இருக்கும் போது கூடங்குளம் அணுமின் நிலையம் எதற்கு என்று எனது பதிவில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது .  அதற்க்கு விடை காண முனைந்ததின் விளைவு தான் " புகுஷிமாவுக்கு பிறகு அணுசக்தியில் உலக நாடுகள் ' என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும் 


இன்னும் சில பொதுவான் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க முனைந்ததின் விளைவு தான் "  அணுமின் நிலையங்கள் - சில கேள்விகள் - சில பதில்கள் " என்ற பதிவு . வார்த்தையின் மேல் சொடுக்கவும்



இந்த பதிவுகள் அனைத்தும் ஆதாரங்களுடன் , புள்ளி விவரங்களுடன் எழுதப்பட்டன .  ஆனால் இவைகளை மெருகேற்றிய பெருமை அனைத்தும் நமது பதிவுலகத்தின் நண்பர்களை சேரும் .  எதிர் கேள்விகளும் , எதிர் விவாதங்களும் ஆக்கப்பூர்வமான முடிவை எடுப்பதற்கு அநேகருக்கு உதவியது .  அதனை பேருக்கும் நான் நன்றி உடையவனாய் இருக்கிறேன் .  தொடர்ந்து படியுங்கள் .  ஆக்கப்பூர்வமாய் விவாதியுங்கள் .  

5 comments:

  1. Hi, Y not a compilation on Atom bomb and Atomic power plant???

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ...

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

      நீங்கள் கேட்டு கொண்ட படியே , வெகு சீக்கிரம் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் குறித்த வித்தியாசத்தை எழுத விழைகிறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுவீர்களா ....?

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
    2. நண்பருக்கு வணக்கம் ...

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

      நீங்கள் கேட்டு கொண்ட படியே , வெகு சீக்கிரம் அணுமின் நிலையங்கள் மற்றும் அணுகுண்டுகள் குறித்த வித்தியாசத்தை எழுத விழைகிறேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுவீர்களா ....?

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
    3. தங்களின் விருப்பபடி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுளேன் . காண்க .....http://naanoruindian.blogspot.in/2012/02/blog-post_06.html

      Delete
  2. ஐயா ....உங்களது அணுமின் நிலையம் குறித்த கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது . மிக அருமையாக அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வருகிறீர்கள் . மிக்க நன்றி . கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது என்று விளக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு பாடல் Toutube ல் வெளியிடப்பட்டு உள்ளது. நீங்கள் உங்களின் தளத்தில் இதை இணைத்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . பாருங்கள் . உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் இணைத்து விடுவீர்களா ...? http://www.youtube.com/watch?v=wA3nOGrWMsI

    நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி