Sunday, 13 November 2011

SUN TV செய்தது சரியா ...?


இன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது .   தொடர்ந்து வரும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் விதத்திலும் , உண்மை நிலையை மக்கள் அறியும் விதத்திலும் இந்த செய்திகள் ஒளி பரப்ப பட்டது வரவேற்க தகுந்தது .  

கிட்ட தட்ட இரவு 9 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரையிலும் சென்னை பட்டணத்தின் பெரும்பாலான ATM இருக்கும் இடங்களை SUN TV யின் தொலைகாட்சி பதிவு செய்தது .  அதில் இரவு 9 மணிக்கு ஒரு ATM ல் காவலாளி இல்லை என்றும் அதிகாலை 1  மணிக்கு ஒரு காவலாளி தூங்கி கொண்டு இருப்பதையும் ,  அதிகாலை 1 . 30 மணிக்கு தூங்கி கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பியும் அற்புதமான ஒளி பரப்பை செய்து முடித்தது SUN TV யின் செய்திகள் .



அண்ணா சிலையின் முன் உள்ள ATM ல் இரவு 9 மணிக்கு காவலாளி இல்லை என்று ரிப்போர்ட்டர் பேசினார் .  அந்த இரவில் விழித்திருக்கும் சக்திக்காக ஏன் அவர் ஒரு தேநீர் அருந்த சென்றிருக்க கூடாது ....?

ICICI வங்கியின் ATM ஒன்றில் தூங்க கொண்டிருந்த ஒரு காவலாளியை எழுப்பி அவரது முகம் திரையில் நன்கு விழும் படி காண்பித்து அவரிடம் தூங்கி கொண்டிருக்கிறீர்களா என்று கேட்க அவர் மிகுந்த தர்ம சங்கடத்துடன் இப்பொழுது தான் என்று தலை குனிந்து சொல்ல ,  நான் ரொம்பவே நொந்து தான் போனேன் .

அந்த காவலாளி தூங்கினதை  நான் நியாயப்படுத்தவில்லை .  இருந்தாலும்   அவர் என்ன மாதிரி சூழ்நிலையில் அந்த இரவு வேலையை தேர்ந்து எடுத்தாரோ .. அநேக இரவு நேர காவலாளிகள் பகல் நேரம் வேறு வேலை செய்கிறதை நான் அறிந்திருக்கிறேன் .  எல்லாம் குடும்பத்தை காப்பாற்ற தான் .  நீங்கள் ஒரு வார்த்தை அவரிடம் பேசியிருக்கலாம் ( TV யில் காண்பிக்காமல் ) ,   இல்லை என்றால் ஒரு பொதுவான ரிப்போர்ட் கொடுத்திருக்கலாம் .  எதுவும் செய்யாமல் ஒரு அப்பாவியின் முகத்தை அழகாக காட்டி விட்டீர்கள் .   இனி மேல் அவருக்கு எப்படி அந்த வேலை நீடிக்கும் ..?
இப்படி அப்பாவி மக்களை முன்னால் நிறுத்தி , பிரபலமாகும் அநேகர் இந்த நாட்களில் எழும்புகிறார்கள் .  அதனால் பாதிக்கப்படுவது என்னவோ ... மக்கள் தான் 



என்னடா ... இந்த இருதயம் இப்படி எழுதுகிறார் என நினைக்கலாம் ...!  ஆம் ... வேறென்ன செய்ய ... பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?  என்பதை  இப்பொழுதும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறேன் .

16 comments:

  1. நச்சென்ற கருத்து!!

    கோடிகோடியாய்க் கொள்ளை அடிப்பவர்களை யார் தான் கண்டு கொள்கிறார்கள்??
    அவர்களும் கூட்டாளிகள் என்பதாலோ?

    ReplyDelete
  2. ungal pathivukalil udanz ottu pattaiyai niruvungal engalai athariyungal

    http://udanz.com

    ReplyDelete
  3. @ ஆளுங்க :

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  4. @ சங்கர் நாராயன்

    தங்கள் வருகைக்கும் நன்றி . நிச்ச்சயமாக செய்கிறேன்

    ReplyDelete
  5. @ துரை டேனியல்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ..

    ReplyDelete
  6. சன் டிவிக்கு ஆண்மைத்தனம் நிறைந்து இருந்தால், அவர்களை கேமராவுடன் ஒவ்வொரு VAO ஆபிசிலும், MLA ஆபிசிலும், RTO ஆபிசிலும், ஊழியர்கள் வதைபடும் ஃபாக்டரிகளிலும் நிற்கட்டும். தங்கள் மீடியா கடமையை ஆற்றட்டும். ஆனால் அவர்கள் கொட்டை நீக்கிய புலிகள் என்பது மட்டுமே உண்மை!

    ReplyDelete
  7. சன் டிவி செய்தது மிக தவறு.

    ReplyDelete
  8. மிக நியாயமான கருத்து .............

    ReplyDelete
  9. இவர்கள் செய்யும் தவறுகளை யாராவது படம் பிடித்தால் நன்றாக இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. @இருதயம் - முதல் முறையாக உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன். இதுபோல் நடுநிலமையான செய்திகளை மட்டும் விமர்சிக்கவும் மிக்க நன்றி

    ReplyDelete
  11. @ ரிஷி :
    @ வைரவன் :
    @ அஞ்சா சிங்கம் :
    @ வல்லி சிம்ஹன் :
    @ நிவாஸ் :

    நண்பர்களே உங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  12. பகலில் எல்லாரும் விழித்திருக்கும் போதே கோடி கோடியாய் கொள்ளை அடித்து ஊரை ஏமாற்றும் கயவர்களை விட்டு அப்பாவி மக்களை முன் நிறுத்தி பிரபலமான இந்த செய்கை சரி தானா ..?

    Amen...

    ReplyDelete
  13. இன்று மீடியாக்கள் பரபரப்புக்காக எதையும் செய்யத் தயங்குவதில்லை.

    நண்பரே, உங்கள் பதிவுகளை hotlinksin.com திரட்டியில் பகிர்ந்து உங்கள் மேலான ஆதரவினை தாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக ஐயா..... தங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  14. நல்ல கருத்து

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி