கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து மக்கள் சில வாரங்களாக போராடி வருகிறதை நாளேடுகள் மூலம் அறிந்திருக்கிறோம் . மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளும் தலைவர்கள் இந்த போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றனர் .
போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது . அந்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .
போராட்டத்தின் அடிப்படை என்னவென்று பார்க்கும் போது அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட காரியங்களில் மக்களுக்கு ஏற்பட்ட அச்ச உணர்வு தான் என்று பொதுவாக அரசால் கூறப்பட்டுள்ளது . அந்த அச்ச உணர்வை நீக்கும் வகையில் மத்திய , மாநில அரசுகள் தனி தனி குழுக்கள் அமைத்து பேச்சு வார்த்தைக்கு ஆயத்தமாகி வருகின்றன .
பேச்சு வார்த்தையின் முதல் சுற்றில் போராட்ட குழுவின் சார்பில் 50 கேள்விகள் மத்திய குழுவிடம் அளிக்கப்பட்டதையும் , அதற்க்கான பதில் தமிழ் , மலையாளம் , இந்தி ( இது தமிழன் போராட்டம் என்று சொல்லுபவர்கள் கவனிக்க ) மொழிகளில் வேண்டும் என்று சொன்னதையும் , அதை மக்கள் மத்தியில் நாங்கள் விநியோகித்து அவர்கள் கருத்தை கேட்போம் என்று சொன்னதையும் நான் அறிந்த போது உண்மையில் கொஞ்சம் மகிழ்வடைந்தேன் . ஏன் எனில் பாதுகாப்பான அணுமின் நிலையத்தை குறித்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் மக்கள் அச்சம் தீர்ந்து விடும் என்பது எனது எண்ணமாயிருந்தது .
இந்த சூழலில் தான் போராட்ட தலைவர் திரு . உதயகுமார் மற்றும் திரு . பொன்ராஜ் ( திரு . அப்துல் கலாம் அவர்கள் உதவியாளர் ) இருவரும் கலந்து கொண்ட ஒரு நேரடி நிகழ்ச்சியை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது . அது தான் இந்த பதிவு எழுதப்படுவதின் மூலக்காரணம் .
பதிவுலக நண்பர்கள் பல பேரும் இந்த அணுமின் நிலையத்தை பற்றி எழுதும் போது இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள் , " அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் பக்கத்தில் அல்லது ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...?" என்று . நான் அந்த கேள்வியை படிக்கும் போது , என்ன இது சிறு பிள்ளை போல கேள்வி என்று நினைத்து கொள்ளுவேன் .
ஆனால் இதே கேள்வியை ( அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைத்தால் என்ன ...? ) நேரடி ஒளிபரப்பில் பேசிக்கொண்டிருக்கும் போது திரு . உதயகுமார் அவர்கள் திரு . பொன்ராஜ் அவர்களிடம் கேட்டார் . திரு . பொன்ராஜ் சொன்னார் , " ஐயா , நீங்கள் மிகுந்த அறிவாளி என்று நான் பேசிக்கொண்டிருக்கிறேன் , ஆனால் நீங்கள் இப்படி கேள்வி கேட்கிறீர்கள் " என்று. இந்த பதிலுக்கு திரு. உதயகுமாரின் எதிர்ப்பு பலமாய் இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தோற்று போய் விட்டீர்கள் . ஆமா .... ஒரு அசடு வழிந்த சிரிப்பு ஒன்றை தான் திரு . உதயகுமார் பதிலாக கொடுத்தார் .
இங்கே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் . ஐயா , உங்களுக்கும் தெரியும் . அணுமின் நிலையத்தை ஜனாதிபதி மாளிகையில் வைக்கமுடியாது என்று . பின் ஏன் நீங்கள் இதே போல ஒரு கேள்வியை மக்கள் மத்தியில் கேட்டு மக்களை குழப்புகிறீர்கள் ....? அதற்கு காரணம் என்ன ...?
எல்லாவற்றிற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தது போல , கடைசியில் அந்த நிகழ்ச்சி நிறைவுறும் போது திரு . உதயகுமார் ஒரு கருத்து சொன்னார் , " யார் சொன்னாலும் சரி , பிரதமர் சொன்னாலும் சரி , மூன்று அல்ல முப்பதாம் தலைமுறை அணுஉலை வந்தாலும் எங்களுக்கு அது வேண்டாம் " என்று .
இங்கு தான் எனக்கு தூக்கி வாரிப்போட்டது .... அப்படியானானால் .....
- நீங்கள் எதற்கு குழு அமைத்தீர்கள் ...?
- எதற்கு 50 கேள்விகள் அமைத்து கொடுத்தீர்கள் ...?
- மக்கள் ஏற்று கொண்டால் போராட்டம் வாபஸ் என்று எப்படி சொன்னீர்கள் ...?
- உங்கள் கேள்விக்கு திரு . பொன்ராஜ் பதில் கொடுக்கும் போது ஏன் இடைமறித்து பேசினீர்கள் ...?
- தமிழனுக்கு எதிரான அணு உலை என்று சொல்லி ஏன் மூன்று மொழிகளில் பதிலை கேட்டீர்கள் ...?
இதெல்லாம் என்னுடைய சில கேள்விகள் ....ஏன் தெரியுமா , யார் சொன்னாலும் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லுபவர் கேள்விக்கு கொடுக்கப்படும் பதிலை எப்படி ஆய்வு செய்வார் ...?
இப்படி இவர் எடுக்கும் பல காரியங்கள் , இவர் மக்களின் அச்சத்தை தீர்க்கும் வழிமுறைகளை விரும்பவில்லை என்பதையும் , மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் எனபதையும் மிக தெளிவாக் சுட்டி காண்பிக்கிறது .
இது இவரின் ரெட்டை வேடம் அல்லாமல் வேறென்ன ....? என்ற என கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும் . காத்திருக்கிறேன் அது வரை ...!
ennakku onnu mattum puriyala sir,
ReplyDeleteAlready tamil natula iruntha companys ellam panjob side poitanga. ippo anu min nilayatha open pannama senchi, tamil natoda valarchia yen thadukirengs?
Nalla kelvi... Thangaludayathu...
ReplyDeleteவணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.
ReplyDelete@ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
ReplyDelete// வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .
நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி
சரியான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி !
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் .
Deleteதங்கள் கருத்துகள் என்னை ஊக்குவிக்கிறது . தொடர்ந்து வருகை தாருங்கள்
ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.
ReplyDeleteபீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.
மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாதுகாத்து வைத்திருக்க முடியுமா? என்பதே பெரும் கேள்வி.
சோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கொடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.