Friday, 11 November 2011

தமிழ்நாடு அரசியல் - இது ஒரு கற்பனை ( ஆனால் நடக்கலாம் )



அக்கா.. கருணாநிதி பெயர் இருக்கிற எல்லாவற்றையும் மாத்தனும் .   தமிழ் செம்மொழி அப்படின்னு நான்தான் அறிவிக்க செய்தேன் என்கிறாரேதமிழ் செம்மொழி இல்லை..... அப்படின்னு ஒரு சட்டம் போட்டுடுவோம் .....

ஐயையோ... அப்படியெல்லாம் செய்தால் பெரிய பிரச்சினை ஆகிவிடும்வேணும்ன்னா ... இந்த மேம்பாலங்களை எல்லாம் இனிமேல் கார் போககூடாது அப்படின்னு ஒரு சட்டம் போட்டுட்டு அதை நடைபாதை ஆக்கிடலாம் ....






அப்பா ... என்ன தான் நடக்குது இங்க .... ஒன்னுமே எனக்கு புரியவில்லை ....


ஏம்பா ... எனக்கே புரியவில்லைநான் வேற என் காலத்திற்கு பிறகு என் வீடு மருத்துவமனை ஆகும் அப்படின்னு சொல்லிட்டேன்எங்கே அதை மருத்துமனையிலிருந்து மார்ச்சுவரியா மாற்றிடுவாங்களோ என பயமாயிருக்கு ...   




அப்பா ... என்ன யோசனை பலமாய் இருக்கு ....?


அட ..ஆமாப்பா .... எத்தனை முறை தான் அன்பு சகோதரிக்கும்கலைஞர் ஐயாவுக்கும் மாறி மாறி ஜால்ரா அடிப்பது .   மக்கள் வேற யோசிக்க ஆரம்பிச்சிட்டாங்க .... மூணாவது அணி ஏதாவது வந்தால் தான் நாம பிழைச்சோம் ...







தம்பி ... இத்தனை நாள் தமிழன் தமிழன்னு சத்தம் போட்டேன்ஆனால் செந்தமிழன் பட்டம் உங்களுக்கு தான் கிடைத்திருக்கிறது ...


அண்ணே ... ஒண்ணுமில்ல .. சினிமாவில படம் எடுத்து பார்த்தேன் ஒன்னும் ஓடல ... ஆனா .. அதே படத்தை மக்கள் மத்தியில நானே ஒட்டி பார்த்தேன் ... பாருங்க அமோக வெற்றி .   ஆனா பாருங்க ....படம் எப்படியும் ஒரு நாள் முடியத்தான் வேணும் .





ஏம்பா ... யாரை பார்த்தாலும் நான் உளறு வாயன்னு சொல்லுறாங்க ..  என்ன செய்ய .. படத்தில தான் என்னாலே வேகமா பேசமுடியும் ..  சரி சரி .... சிவப்பு கண்ணை வெள்ளையா காண்பிக்கிற கண்ணாடி எதாவது இருந்தால் சொல்லுங்களேன்எப்படி தான் கூலிங்க்ளாஸ் போட்டாலும் கண்ணை பார்க்கிறாங்க .... ரொம்ப மோசம் ..!







சார் , தமிழ்நாட்டிலே நீங்க தலைவராய் இருந்து ஏன் செயல்பாடுகள் சரி இல்லை ..?

  யார் சொன்னது ...? தமிழ்நாட்டில் 7 கோடி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சேர்த்திருக்கிறோம்ஆனால் என்னை தவிர யாரும் ஒட்டு போடவில்லைதீவிர ஆலோசனைக்கு பிறகு மேலிடத்திற்கு ரிப்போர்ட் கொடுப்பேன்





அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை .   வரும் சட்டமற்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் .  


11 comments:

  1. தங்கபாலு...மு க மிகவும் ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. @ Beer mohamed : தங்கள் முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. @ Saro : சகோ . தங்களின் ஊக்கத்தினால் தொடர்ந்து முன் செல்ல முடியும் என நினைக்கிறேன் . நன்றி

    ReplyDelete
  4. @ ரெவரி : நண்பருக்கு வணக்கம் . தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. என்ன பாஸ் எப்படி இருக்கீங்க ? பதிவு நல்லா இருந்துச்சு , சென்ற பதிவையும் படிச்சேன் நன்றாக இருந்தது காரசாரமான விவாதத்தையும் படித்தேன் உங்களின் பொறுமையான பதிலளிக்கும் விதம் நன்றாக இருந்தது ,

    ReplyDelete
  6. ஒரு காலத்தில், "அரசுக்கு தெரியாதா மக்களுக்கு என்ன செய்வது என்று?" என்று கேள்வி கேட்ட இருதயமா இது? சார், இந்த அரசியல்வாதிகளை கிண்டல் அடிக்கும் வேலையை நாங்க பாத்துக்கிறோம்... நீங்க போய் இந்திய இறையாண்மை சட்டப் படி இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இந்த அரசு எப்படி கைது செய்ய வேண்டும் என்று யோசியுங்கள். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து எழுத நிறைய இருக்கு, அதை எழுதுங்க...

    ReplyDelete
  7. @ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    இப்பொழுதும் நான் என்னுடை கருத்தில் மாறுவதில்லை . " அரசுக்கு தெரியாதா மக்களுக்கு என்ன செய்வது என்று " கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு விரோதமாக போராடும் நபர்களுக்கு நான் விரோதி அல்ல , எதிரியும் அல்ல . ஆனால் கூடங்குளம் அணுமின் நிலயத்தை குறித்தும் அதன் போராட்டத்தை குறித்தும் என் வலையில் விளக்குவது தான் என்னுடைய நோக்கம் . மற்ற படி வேறல்ல .

    // கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்து எழுத நிறைய இருக்கு, அதை எழுதுங்க..//
    நிச்சயமாக ... செய்வேன் . ஏன் எனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கேள்விகள் கேட்கப்படுகிறது . இவற்றிற்கு பதில் சொல்லுவதில் நானும் மகிழ்கிறேன் . உங்களை போன்ற பதிவுலக நண்பர்களின் கேள்விகள் என்னை வேதனை படுத்தாது மாறாக எனக்கு உற்சாகம் தான் கொடுக்கிறது .

    அரசியல்வாதிகளை கிண்டல் அடிப்பதை குறித்து எழுதி இருந்தீர்கள் . பார்தீர்களா .. ஒரு பெரிய தப்பை செய்து விட்டேன் . கம்யூனிஸ்டு தலைவர்களை விட்டு விட்டேன் . ஹி ... ஹி .

    நன்றி நண்பரே

    ReplyDelete
  8. @ Surya Prakash : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    உங்களை போன்ற நல்லெண்ணம் படைத்த நண்பர்கள் எனக்கு இருக்கும் போது நலத்திற்கு குறை ஒன்றும் இல்லை . உங்களை போன்ற நண்பர்களின் ஊக்கம் என்னை தொடர்ந்து செயல்பட வைக்கிறது . மிக்க நன்றி

    ReplyDelete
  9. நீங்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களை கிண்டலடிக்காதர்க்கு காரணம் இத்தனை நாள் மார்க்சிய முதலாளிகள் அணு உலை விஷயத்தில் அமைதி காப்பதால் என்றும் தெரியும்... ஆனால் ஒன்று இத்தனை பெரிய போராட்டத்தை எதிர்த்து, நீங்கள் போடும் பதிவுகள், போபால் மக்கள் போல் செர்நோபில் மக்கள் போல் இந்த மக்கள் நிலை ஆகும் பொழுது குற்ற உணர்ச்சி பொங்கி கஷ்டப் பட நேரிடும் என்று தெரியும்... உங்களுக்கு இருதயம் என்று ஒன்று இருந்தால்

    ReplyDelete
  10. @ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் . உங்களின் பதிலுரைக்கு நன்றி

    // நீங்கள் கம்யூனிஸ்ட் தலைவர்களை கிண்டலடிக்காதர்க்கு காரணம் இத்தனை நாள் மார்க்சிய முதலாளிகள் அணு உலை விஷயத்தில் அமைதி காப்பதால் என்றும் தெரியும்..//

    அப்படியா ....! வடிவேலுவும் சிங்கமுத்துவும் கூட தான் அணு உலைகளை பற்றி பேசவில்லை . ஆனால் நான் அவர்களை குறித்து எழுதி இருக்கிறேன் என்பதை நீங்கள் மறந்து போக கூடாது . உண்மையில் நான் சிவப்பு சட்டையை சட்டை செய்பவன் அல்ல என்ற காரணத்தால் கூட நான் மறந்து போய் இருக்கலாமோ என்று நினைக்கிறேன் .


    //ஆனால் ஒன்று இத்தனை பெரிய போராட்டத்தை எதிர்த்து, நீங்கள் போடும் பதிவுகள், போபால் மக்கள் போல் செர்நோபில் மக்கள் போல் இந்த மக்கள் நிலை ஆகும் பொழுது குற்ற உணர்ச்சி பொங்கி கஷ்டப் பட நேரிடும் என்று தெரியும்... உங்களுக்கு இருதயம் என்று ஒன்று இருந்தால் //

    நீங்கள் என்னை மிகவும் குற்றப்படுத்துகிறீர்கள். பரவாயில்லை . நண்பரே இருதயம் என்று ஓன்று இருப்பதினால் தான் உண்மையை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் , வஞ்சகத்தின் குரல் மக்களை ஏமாற்ற கூடாது என்று என் பதிவை எழுதி கொண்டே இருக்கிறேன் . உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து எழுதுவேன் .
    நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி