அரசியல் என்பது ஒரு பெரிய துறை . ஆழம் தெரியாமல் அதில் காலை விடமுடியாது என்று தான் நான் நினைத்து கொண்டிருந்தேன் . திடீரென்று இன்று காலை என் நண்பன் கேட்டான் " அரசியல்வாதியாய் மாற என்ன தகுதி வேண்டும்? " இந்த கேள்வி கொஞ்சம் என்னை அசைத்தபடியால் இதை குறித்து ஒரு கட்டுரை எழுத முற்பட்டேன் .
இன்னும் ஒரு நண்பனிடம் இதை குறித்து விவாதிக்கலாம் என்று அவனிடம் என் நண்பன் கேட்ட அதே கேள்வியை கேட்டபோது , அவன் பொறுமையுடன் என்னை பார்த்து ஒரு சின்ன கதை சொன்னான் ....
பள்ளிகூடத்தில் நன்கு படிக்கிற மாணவர்கள் முதல் பெஞ்சில் இருப்பார்கள் . கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் நாடு வரிசையில் இருப்பார்கள் . தேர்ச்சி பெறாத மாணவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற கடைசி பெஞ்சில் இருப்பார்கள் .
இதில் நன்கு படிப்பவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகிறார்கள்
பள்ளிகூடத்தில் நன்கு படிக்கிற மாணவர்கள் முதல் பெஞ்சில் இருப்பார்கள் . கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் நாடு வரிசையில் இருப்பார்கள் . தேர்ச்சி பெறாத மாணவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற கடைசி பெஞ்சில் இருப்பார்கள் .
இதில் நன்கு படிப்பவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பிறகு மருத்துவர் அல்லது பொறியாளர் ஆகிறார்கள்
கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் ஒரு டிகிரி முடித்து விட்டு பிறகு MBA போன்ற மேலாண்மை படிப்புகள் முடித்து முதல் பிரிவினரை ஆளுகிறார்கள் .
மாப்பிளை பெஞ்ச் மாணவர்கள் தோல்வி அடைந்த பிறகு ஒரு கட்சியில் சேர்ந்து MLA , MP ஆகி இரண்டாம் பிரிவையும் , முதல் பிரிவையும் ஆளுகிறார்கள் ..
இப்பொழுது புரிகிறதா .....? என்று கேட்டான் ..
ஓரளவுக்கு அவன் சொன்ன காரியங்கள் இன்றைக்கு அரசியலில் நடந்து கொண்டு தான் இருக்கிறது ? எத்தனயோ புண்ணியவான்கள் இந்த அரசியலை புனிதமாக கருதி சேவை செய்த வாசனையான காலங்கள் போய் அரசியல் என்றால் சாக்கடை என்று சொல்ல கூடிய நிலையில் இன்று உள்ளது . இன்றைய அரசியல் வாதியின் சில அடிப்படை தகுதிகளை பார்க்கும் போது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாய் தான் உள்ளது
- குறைந்தது ஒரு கோடியாவது சொத்து இருக்கவேண்டும் ( தேர்தலில் போட்டி இடுவதற்கு ) . இந்த முறை தேர்தலில் நான் சில பேரின் சொத்து மதிப்புகளை ( கட்சி பாகுபாடு இல்லாமல் ) பார்த்த போது தான் இந்த தகுதியை கண்டு கொண்டேன் . இந்த பணத்தை கொண்டு பதவியை பிடிப்பதற்கு செலவு செய்து ( பாருங்கையா ....சேவை செய்வதற்கு பிறந்தவர்கள் ) வெற்றி பெற வேண்டும் .
- குறைந்தது 2 வழக்குகளாவது இருக்க வேண்டும் ( அடிதடி , ஊழல் மற்றும் பிற ). ஏன் எனில் ஜெயித்தபிறகு சட்டமன்றத்தில் / நாடாளுமன்றத்தில் சண்டை போடுவதற்கு .
- கல்வி தகுதி என்று ஒன்றும் இல்லை ( மிக குறைந்த அளவில் நன்கு கற்றவர்கள் ஜெயிக்கிறார்கள் )
- ஆள்பலம் , சாதி பலம்
- இன்னும் பிற
என்னை பொறுத்த வரை அரசியலில் ஒருவர் ஈடுபட வேண்டுமானால் அவர் கீழ்க்கண்ட தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் .
- குறைந்தது ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில் நேரடி பட்டம் ( தொலை தூர கல்வியில் அல்ல ) பெற்று இருக்க வேண்டும் . ஒரு சாதாரண இளநிலை ஊழியனின் பதவிக்கு உள்ள தகுதி தான் இது ( அரசியலில் சேர்ந்து பின் நான் எப்படியாவது Doctor பட்டம் வாங்கி விடுவேன் என்று சொல்லகூடாது . ஏன் எனில் இப்பொழுது நிறைய Doctor அரசியலில் இருக்கிறார்கள் )
- கூடுதலாக ஆட்சிமுறை குறித்து 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் . இந்த வகுப்புகள் தாய் மொழியில் திறமைமிக்க கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும் . Closed book system என்ற முறை உபயோகபடுதப்படாமல் Open book system என்ற முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் .
- ஒருமுறை MLA ஆக இருந்தவர் மாத்திரம் MP பதவிக்கு போட்டியிட தகுதி செய்யப்பட வேண்டும் .
- ஒரு குற்றப்பத்திரிகை இருந்தால் கூட அந்த வழக்குகள் முடிந்த பிறகு தான் அரசியலில் ஈடுபட வேண்டும்
குறிப்பு : சில நல்ல , தியாகம் உள்ள அரசியல்வாதிகளை கருத்தில் கொள்ளாமல் பொதுவான ஒரு கண்ணோட்டமே இது . ஆகவே அரசியல் தூய்மை உள்ளவர்களுக்கு இந்த கட்டுரை பொருந்தாது . நன்றி
பள்ளிகூடத்தில் நன்கு படிக்கிற மாணவர்கள் முதல் பெஞ்சில் இருப்பார்கள் . கொஞ்சம் நன்கு படிப்பவர்கள் நாடு வரிசையில் இருப்பார்கள் . தேர்ச்சி பெறாத மாணவர்கள் எல்லாம் மாப்பிள்ளை பெஞ்ச் என்ற கடைசி பெஞ்சில் இருப்பார்கள்
ReplyDeleteஇது போல் சட்டம் வைத்தால் எவருமே தேறமாட்டார்கள்
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் .
Deleteதங்கள் கருத்துகள் என்னை ஊக்குவிக்கிறது . தொடர்ந்து வருகை தாருங்கள்
///குறைந்தது ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில் நேரடி பட்டம் ( தொலை தூர கல்வியில் அல்ல ) பெற்று இருக்க வேண்டும் . ஒரு சாதாரண இளநிலை ஊழியனின் பதவிக்கு உள்ள தகுதி தான் இது ( அரசியலில் சேர்ந்து பின் நான் எப்படியாவது Doctor பட்டம் வாங்கி விடுவேன் என்று சொல்லகூடாது . ஏன் எனில் இப்பொழுது நிறைய Doctor அரசியலில் இருக்கிறார்கள் ) ///
ReplyDeleteஅரசியலில் ஈடுபட சமூகத்தின் மீது மாளா காதல் இருந்தாலே போதுமானது, படிப்பெல்லாம் பிறகுதான்...
///கூடுதலாக ஆட்சிமுறை குறித்து 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும் . இந்த வகுப்புகள் தாய் மொழியில் திறமைமிக்க கல்வி நிறுவனங்களால் நடத்தப்பட வேண்டும் . Closed book system என்ற முறை உபயோகபடுதப்படாமல் Open book system என்ற முறையில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் .///
மேலே உள்ள பதிலை பார்க்கவும்.
///ஒருமுறை MLA ஆக இருந்தவர் மாத்திரம் MP பதவிக்கு போட்டியிட தகுதி செய்யப்பட வேண்டும் .///
இதுக்கு என்ன காரணம் என்றே தெரியலியேங்க... எதுக்காக இப்படி ஆலோசனை..
///ஒரு குற்றப்பத்திரிகை இருந்தால் கூட அந்த வழக்குகள் முடிந்த பிறகு தான் அரசியலில் ஈடுபட வேண்டும் ///
எப்படிங்க இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க, ஒருத்தரை போட்டியிடாம செய்யனும்ன்னா ஒரே ஒரு குற்றப்பத்திரிக்கை போதும்ன்னா எதிர்கட்சிகாரங்க மேல எல்லாம், ஒரே ஒரு வழக்கு போட்டுட்டா போதுமே, யாருமே தேர்தல்ல நிக்க முடியாம போயிடும். தொடர்ந்து இவங்களே ஆளும் கட்சியா இருக்கலாம்.
அடிப்படையான விஷயம் என்னன்னா, அரசியல் என்று தனியாக ஒரு துறை கிடையாது, மக்களை அரசியல் படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது...