அணு மின் நிலையங்களை குறித்து செய்திகள் இப்பொழுது எங்கும் விவாதிக்கப்படுகிறது. இது ஒரு நல்ல விஷயம் தான். விதண்டாவாதத்திற்கு சில பேர் சில கேள்விகளை கேட்கும் போது , உண்மையான பொது அக்கறையோடும் சில கேள்விகள் எழும்ப தான் செய்கிறது. இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு பதில்கள் சொல்லப்படாத பட்சத்தில் , கேள்விகள் எந்த விதமான உணர்சிகளோடு கேட்கப்பட்டதோ அதே உணர்சிகளை மக்களிடம் தவறாக சேர்க்கவும் வாய்ப்புண்டு. எனவே தான் இந்த பதிவுலத்தின் மிக முக்கியமான ( நான் மிகவும் மதிக்கிற ) ஒரு பதிவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் , அதன் மூலம் அணு மின் நிலையங்களை குறித்து நாம் அறிந்து கொள்ளவும் இந்த இடுகையை இட முயற்சி மேற்கொண்டேன் .
இந்த கேள்விகள் அனைத்தும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்து மாண்புமிகு பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளவையாக அந்த கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சாதாரண குடிமகனாக இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்க முற்பட்டுள்ளேன்.
கேள்வி : When Tsunami hit our Coast ? ( எப்பொழுது சுனாமி நம்முடைய கடற்கரையை தாக்கும் ..? )
இந்த கேள்விக்கு சிறந்த பதில் கடவுளுக்கு மட்டும் தான் தெரியும் . ஆனால் அப்படி சுனாமி தாக்கினாலும் , அது கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஏன் பாதிக்கமுடியாது என்பதற்கு இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் சுனாமி என்ற கருத்தின் கீழ் காணலாம் ( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html )
கேள்வி : How Will an Earthquake miss Kudankulam ? ( பூகம்பம் எப்படி கூடங்குளத்தை தாக்காதிருக்கும் .? )
இந்த கேள்விக்கும் இதே வலைத்தளத்தில் நான் எழுதியுள்ள புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் பூகம்பம் என்ற தலைப்பின் கீழ் காணலாம். ( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html )
கேள்வி : Where will you Store your Radioactive Waste ? & How Long will you guard the Waste ?
இது ஒரு நல்ல கேள்வி . பொதுவாக Radioactive Waste என்று வருகிற ப்ளுட்டோனியம் 239 மிக பத்திரமாக காரிய கொள்கலனில் ( காரியம் கதிர்வீச்சை வெளிவிடாது என்று எங்கோ படித்த நியாபகம் வருகிறதா ) பாதுகாக்கப்பட்டு , மிக சிறந்த Concrete கொள்கலனுக்குள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் . அந்த Concrete கொள்கலனுக்குள் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும்.. இந்த வசதிகள் எல்லாம் அணு மின் உலைகளுக்குள் தான் செய்யப்பட்டிருக்கும் . இது பொதுவான முறை .
இரண்டாவது கேள்விக்கு , தயவுசெய்து இதே வலைதளத்தில் பதியப்பட்ட எனது பதிவான் " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு " என்ற கட்டுரையில் காணலாமே .. ( http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html )
கேள்வி : How will You Cool the Nuclear Core ? & Where will you keep the hot Water after cooling the Core ? ( எப்படி அணு எரிகோலை குளிர்விப்பீர்கள் ? அப்படி குளிர்விக்கப்பட்ட பின் தண்ணீரை கடலில் தானே கலக்கவிடுவீர்கள் ? )
இந்த கேள்வி மிக மிக முக்கியமான கேள்வி . அநேகர் இப்படி தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். நேரடியாக கடல் நீர் அணு உலைகளுக்குள் செலுத்தப்பட்டு பின் நேரடியாக கடலுக்குள் விடப்படும் எனவும் அதனால் கதிரியக்கம் கடலில் கலந்து விடும் என்றும் கருதுகிறார்கள். இது ஒரு தவறான கருத்து. கொஞ்சம் இதை விளக்கமாக காண்போமே ..
மேற்கண்ட படத்தை ( அணு உலைகள செயல்படும் முறை ) நன்கு ஒரு விசை பாருங்கள் . மூன்று சுற்றுகள் ( Three Circuits ) தெரிகிறதா ..?
முதல் சுற்று : அணு பிளவு நடக்கும் உலைக்கும் நீராவி உருவாக்கும் எந்திரத்திற்கும் ( Primary Circuit is between Reactor Pressure vesel & Steam Generator ) . இந்த சுற்றில் கடல் நீர் பயன்படுத்தப்படாது . மாறாக சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் தான் பயன்படுத்தப்படும் . நமக்கு தெரியும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சிஸ் என்று சொல்லி. ஆனால் இந்த முதல் சுற்றில் Pressurizer என்ற கருவி மிக அதிக அழுத்தத்தில் நீரை அழுத்துவதால் , முதல் சுற்றில் ( Primary Circuit ) நீரானது அணு மின் உலைக்குள் இருந்து வெப்பத்தை மாத்திரம் எடுத்து கொண்டு Steam Generator என்ற நீராவி உருவாக்கும் இயந்திரத்திற்கு வருகிறது..
இரண்டாம் சுற்று : Steam Generator என்ற நீராவி இயந்திரத்தில் இருந்து Turbine என்ற விசையாழி வழியாக Condenser என்ற பகுதியை அடைந்து மறுபடி Steaam Generator யை அடைகிறது. நன்கு கவனிக்கவும் முதல் சுற்றும் இரண்டாம் சுற்றும் ஒன்றுடன் ஓன்று கலவாது . மறுபடி படம் பாருங்கள். இந்த இரண்டாம் சுற்றிலும் கடல் நீர் பயன்படுத்தபடாது . இங்கும் நன்னீர்தான். இங்கு தான் நீராவி உற்பத்தி செய்யபடுகிறது. இந்த இரண்டாம் சுற்றில் Pressurizer என்ற அழுத்த கருவி இல்லாததால் இங்கு நீர் 100 டிகிரி செல்சியஸ் அடைந்தவுடன் நீராவியாகிறது.
இப்பொழுது உங்களுக்கு ஒரு நியாயமான கேள்வி வரலாம் ... அதெப்படி இரண்டு சுற்றுகளும் ஒன்றோடு ஓன்று கலவாது என்று சொல்லுகிறீர்கள் . எப்படி வெப்பம் இரண்டாம் சுற்றுக்கு மாற்றப்படும் என்று . அப்படி கேட்ப்பீர்கள் ஆனால் மிக சரியான கேள்வியை கேட்டீர்கள். வெப்பமானது முதல் சுற்றில் இருந்து இரண்டாம் சுற்றுக்கு Heat Exchanging ( வெப்ப பரிமாற்றம் ) என்ற முறையில் தான் மாற்றப்படுகிறது. இன்னும் புரியவில்லையா ..? ஒரு சின்ன உதாரணம் சொல்லுகிறேன் . நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது என்னுடைய சூடான பாலை ஆற்றுவதற்கு எனது அம்மா என்ன செய்வார்கள் தெரியுமா ..? அந்த பாலை ஒரு பாத்திரத்தில் வைத்துகொண்டு அந்த பாத்திரத்தை வேறு தண்ணீரின் மேல் வைப்பார்கள். அப்பொழுது அந்த பாலின் வெப்பம் பரிமாற்றத்தின் மூலம் அந்த தண்ணீருக்கு மாற்றப்படும் .
இப்பொழுது உங்களுக்கு விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். இரண்டு பொருட்களும் ஒன்றுடன் ஓன்று கலவாது ஆனால் ஒரு சுற்றில் உள்ள நீரின் வெப்பம் ( பாத்திரத்தின் பாலின் வெப்பம் ) இரண்டாம் சுற்றுக்கு பரிமாற்றம் செய்யப்படுகிறது.
இப்படி இருக்கும் போது முதல் சுற்றில் இருக்கும் கதிர்வீச்சு எப்படி இரண்டாம் சுற்று நீருக்கு பரவ முடியும் ? யோசித்து பாருங்கள்
சரி தொடர்ந்து கவனிப்போம் . இப்போது இந்த நீராவி Turbine எனப்படும் விசையாழியில் மோதும் போது அதனுடன் இணைக்கப்படிருக்கும் Rotor என்ற சுழலி சுற்றப்படுவதால் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. சரி ... இந்த நீராவி Turbine ல் மோதும்போது என்ன ஆகும் என்று பார்த்தோமானால் , அந்த நீராவி குளிர்ந்து நீராய் மாறிவிடும் . ( நம்முடைய பழைய காலத்து சமையல் அறையில் சாதம் பொங்கும்போது நீராவி வெளியேறும். அப்பொழுது நாம் அந்த பாத்திரத்தை மூடி கொண்டு மூடினால் , அந்த மூடியில் தண்ணீர் இருக்கும் . அதே முறை தான் )
மூன்றாம் சுற்று : இந்த சுற்றில் தான் கடல் நீர் உள் வந்து Condenser என்ற பகுதி வரை வந்து செல்லுகிறது ( Condenser என்ற பகுதியில் குளிர்ந்த நீராவி அதாவது நீர் இருக்கும் ) இப்பொழுது படத்தை பாருங்கள் . இந்த கடல் நீரும் இரண்டாம் சுற்றுடன் கலப்பதில்லை. அப்படியெனில் , ஆமா இந்த இடத்திலும் வெப்ப பரிமாற்றம் மாத்திரம் தான் நிகழும். அப்படியெனில் மிக குறைந்த வெப்பம் உள்ள கடல் நீர் தான் மறுபடி கடலுக்கு திரும்பும்.
இப்பொழுது கவனியுங்கள் ... கடல் நீர் அணு உலைகளுக்குள் செல்லாது . கடல் நீரில் கதிரியக்கம் கிடையாது. அதனால் கடல் நீரில் கதிரியக்கம் இருக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறானது என நாம் விளங்கி கொள்ள முடியும்.
இன்னும் சில கேள்விகள் அந்த பதிவில் கேட்கப்பட்டுள்ளது .. அவற்றுக்கான பதிலை அடுத்த இடுகையில் இடுகிறேன் . ஏன் எனில் இவை அனைத்தும் தொழில் நுட்ப சந்தேகங்கள் , அவைகள் அனைத்தும் மேலாண்மை சந்தேகங்கள் . அதனால் இரண்டு பதிவுகளாக இட்டால் சிறந்தது என்ற முடிவுக்கு வருகிறேன்.
மேற் கூறிய காரணங்களின் படி பார்க்கும் போது அணு மின் நிலையங்கள் பாதுகாப்பானது எனவும் அதினால் எந்த கதிரியக்க பாதிப்பும் கடல் வாழ் உயிரினங்களுக்கு நேராது எனவும் புலப்படுவதால் அணுமின் நிலையங்களை வரவேற்கும் நம்முடைய தயக்கங்களை அகற்றுவோம் .. நன்றி
இந்த இடுகையை மற்ற திரட்டிகளும் இணைக்க உதவுங்களேன் ... நன்றி
ReplyDeleteநல்ல பதிவு . நிறைய உழைப்பு அடங்கியுள்ளது என்பது மட்டும் புரிகிறது.
ReplyDelete@ Surya Prakash : நண்பருக்கு வணக்கம் , தங்கள் வருகைக்கும் , புரிதலுக்கும் நன்றி
ReplyDeleteஎன்னவளே
ReplyDeleteஎல்லா ஆயுதங்களையும்
பயன் படுத்த தெரிந்தவனே
மிகப்பெரிய வீரன் என்று சொன்னேன்
நீயோ
ஆயுதங்களின் தீமையறிந்து
அதை பயன்படுத்த தெரிந்தும்
தொடாதவனே மாவீரன் என்கிறாய்!
குளிரூட்டிக்காக நன்கு மூடப்பட்ட, காற்று வர வாய்ப்பில்லாத மகிழுந்துக்குள்ளும் கைப்பேசியின் காந்த அலைகள் வந்து சேருகிறது. அதை விடவே வலிமையானது அணு கதிர்வீச்சு.
ReplyDeleteஎத்தனை நாளைக்கு பாம்பின் பல்லை அது நம்மை கடிக்காதபடி பிடித்துக் கொண்டிருக்க முடியும்?
காரீய கொள் காலன் அணுக் கதிர்வீச்சை தடுக்கும் என்றால், கல்பாக்கம் பகுதி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது எதனால்?
@ ரசிகன் : நண்பர் அவரகளுக்கு வணக்கம் .. தங்களின் கருத்துரைக்கு நன்றி
ReplyDelete// குளிரூட்டிக்காக நன்கு மூடப்பட்ட, காற்று வர வாய்ப்பில்லாத மகிழுந்துக்குள்ளும் கைப்பேசியின் காந்த அலைகள் வந்து சேருகிறது. அதை விடவே வலிமையானது அணு கதிர்வீச்சு. //
நீங்கள் ஒரு காரையும் அணுமின் நிலையத்தையும் ஒப்பிடுவது கொஞ்சம் வியப்பாக உள்ளது. காரில் கதிவீசை கவர்ந்து கொள்ளும் எந்த தனிமங்களும் , கருவிகளும் கிடையாது என்பதை தங்களுக்கு தெரிவிக்கிறேன் .
// காரீய கொள் காலன் அணுக் கதிர்வீச்சை தடுக்கும் என்றால், கல்பாக்கம் பகுதி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது எதனால்?//
நண்பரே .. நீங்கள் அணுமின் நிலையத்தால் தான் புற்றுநோய் உருவாகிறது என்ற தவறான கருத்தை கொண்டு உள்ளீர்கள் . அணு மின்நிலையத்தை தவிர நாம் 99 சதவீதம் வாங்கி கொள்ளும் கதிர்வீச்சினால் ஏன் புற்றுநோய் உருவாகமுடியாது.
தற்பொழுது மறைந்த மாண்புமிகு அமைச்சர் பெருமகன் திரு கருப்பசாமி அவர்கள் குடல் புற்று நோயால் மரித்து போனார் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்கள் எந்த அணுமின் நிலையத்தின் பக்கத்திலும் வேலை பார்க்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
நன்றி
மிகவும் அவசியமான பயனுள்ள பதிவு...தங்களின் முயற்சிக்கும்,பதிவிற்கும் எனது இதயம் கனிந்த மனபூர்வமான நன்றிகள் பாராட்டுக்கள்.
ReplyDelete@Reply for ரசிகன் said...
ReplyDelete(http://vaazhveperaanantham.blogspot.com/2011/10/blog-post_22.html)
//
காரீய கொள் காலன் அணுக் கதிர்வீச்சை தடுக்கும் என்றால், கல்பாக்கம் பகுதி மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ளது எதனால்?//
அணு மின் நிலையங்கள் வேண்டவே வேண்டாம் என நீங்கள் கூறுகிறீர்கள்...
மின்சாரம் தற்போது அனல் மின் நிலையங்க்களில் இருந்தே அதிகம் பெறப்படுகிறது.
நன்பா அனல் மின் நிலையம் இயங்குவதற்கு நிலக்கரி எரிக்கப்படுகிறது.இதன் மூலம் வெளியாகும் புகை நச்சு தன்மை மிகுந்தது உயிரினங்களுக்கும் சுற்று சூழலுக்கும் மிகுந்த பாதிப்பை வழங்கியபடியே செயல்படுகிறது..(புற்றுநோய்,ஆஸ்துமா,என பட்டியல் நீளும்)
அணு மூலம் கிடைக்கிற மின்சாரம் சுத்தமானது என் கலாம் போன்ற அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.அதுவே உங்கள் பார்வையில் தீங்க்கானது என்றால் தற்போது நம் மின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வருகிற அனல் மின் நிலையங்க்களையும் சேர்த்தே மூட வேண்டும்...
தீ சுடும் என்பதால் அதை சமைக்க பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று சொல்வது போல இருக்கிறது உங்கள் பேச்சு..
@ விஜயன் : நண்பரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
ReplyDeleteஅப்போ "கூடங்குளம் மக்கள் செத்தாலும் பரவால நமக்கு 24 மணி நேரமும் இடைவிடாமல் மின்சாரம் வேண்டும்" என கூறுகிறீர்கள்..?
ReplyDelete@ Chinnz :
ReplyDeleteநண்பருக்கு வணக்கம் , தங்கள் வருகைக்கு நன்றி ...
கூடங்குளம் மக்கள் சாக வேண்டும் என்று யாரும் சொல்ல வில்லை . மாறாக அவர்களும் வாழ வேண்டும் என்பதற்கு தான் மின்சாரம் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
நன்றி
வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.
ReplyDelete@ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
ReplyDelete// வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .
நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.
தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி