Thursday, 20 October 2011

புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா ? - ஒரு ஆய்வறிக்கை


புகுஷிமா அணு உலைகளுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்ட வசமான நிகழ்வுகள் நாம் எல்லாரும் அறிந்ததே.   மிக கடும் பூகம்பத்தில் சிக்கி கொண்ட ஜப்பான் நாட்டில் அதை தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான சுனாமி தாக்குதல்களும் புகுஷிமா அணு உலைகளில்  பாதிப்பை ஏற்படுத்தியது.  உலகம் முழுவதும் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இந்த நிகழ்வு சாதாரண மக்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.   இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக மக்கள் போராட துவங்கி உள்ளனர்.   பெரும்பாலானவர்களின் கேள்வி என்னவெனில் புகுஷிமாவை போன்ற விபத்து கூடங்குளத்தில் நிகழாது என்பதற்கு என்ன பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்பதே.
இது ஒரு நியாயமான கேள்வி என்பதாலும் ,  மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்திற்கு முடிவு காணவேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த கட்டுரை எழுத முற்பட்டேன்.   

புகுஷிமாவில் என்ன நடந்தது?  :  2011 ம் வருடம் மார்ச் மாதம் 11 ம் தேதி ஜப்பான் நாட்டை 9  ரிக்டர் அளவிலான மிகப் பெரிய பூகம்பம் தாக்கியது.    பூகம்பத்தை உணர்ந்தவுடன் புகுஷிமாவின் அணு உலைகளில் பொருத்தப்பட்டிருந்த கட்டுபடுத்தும் கழிகள் ( Control Rods )  தானாகவே இறங்கி அனுப்பிலவின் தொடர் வினையை நிறுத்திவிட்டன.   ஆனாலும் சிதைவு வெப்பம் என அழைக்கப்படும் Decay heat யை குளிர்விப்பத்ர்க்கான மின்சார பம்புகளை இயக்குவதற்கான மின்சாரம் தடைபட்டு விட்டது ( பூகம்பத்தினால் ) .   
இந்த மாதிரி தருணங்களில் மின்சார பம்புகளை இயக்குவதற்காக டீஸல் ஜெனரேட்டர் இருக்கும்.   ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இந்த டீஸல் ஜெனரேட்டர்  மற்றும் பாட்டரிகள் சுனாமியால் எழுந்த தண்ணீரினால் மூழ்கியதால் இயக்கமுடியாம்ல் போனது.   இந்த சூழ்நிலை காரணமாக Reactor Coolant pumps  செயல்படமுடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் அதி சூடு நிறைந்த Zircaloy  உலோகத்துடன் நீராவி இடைப்பட்டு ஹைட்ரஜென் உருவாக ஆரம்பித்தது.   இந்த  Hydrogen அதிகமாக சேர்ந்து அணு உலை கட்டிடத்தில் இருந்து வெளியேறிவிட்டது .   ( நாம் தொலைகாட்சியில் பார்த்தோமே ,  அது இது தான் ).  ஏற்கெனவே உள்ளே இருந்த கதிரியக்க துகள்களும் அதனுடன் சேர்ந்து வெளியேறிவிட்டது.  
இந்த சம்பவத்தில் இருந்து இந்த விபத்து நடப்பதற்க்கான காரணிகளை வகைபடுத்துவோமே .
1 .  பூகம்பம்
2    சுனாமி
3    டீஸல் ஜெனரேட்டர் செயல் இழப்பு
4   எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை இல்லை.
5   அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள் இல்லை .
6   அணு எரி கோல்கள் உருகினால் அவற்றை பரவாமல் பாதுகாக்கும் கருவி இல்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் எப்படி வேறுபட்டது ..?
பூகம்பம்  :  ஜப்பான் அடிக்கடி பூகம்பம் நடைபெறுகிற இடம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்.   அங்கு 7  ரிக்டர் அளவிற்கு மேல் ஏற்ப்பட்டுள்ள பூகம்பத்தின் விபரங்களை நாம்  http://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Japan   காணலாம்.  


ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பூகம் அபாய பகுதி 2  ( மிக அரிதாக பூகம்பம் நிகழும் பகுதி )  என்ற வரையறைக்குள் உள்ளது.  எனவே பூகம்ப அபாயம் கூடங்குளத்திற்கு இல்லை எனலாம் .  இந்தியாவின் பூகம்ப நிலைகளை கீழே காணலாம் .  

சுனாமி :   சுனாமி என்ற வார்த்தையே ஜப்பானில் இருந்து தான் தோன்றியது என்பதை நாம் அறியாமல் இருக்க மாட்டோம்.  துறைமுக அலை என பெயரிடப்பட்ட இந்த சுனாமி பல மீட்டர் உயரத்திற்கு புகுஷிமாவில் வந்தது.  என் இதே போல ஒரு சுனாமி கூடங்குளத்தில் வர முடியாது என்பது அநேகரின் கேள்வி .   இது ஒரு நியாயமான கேள்வி தான்.
சுனாமி போன்ற பெரிய ஆழி பேரலைகளை உருவாக்க கூடிய இடம் tsunamigenic fault  என்று அழைக்கபடுகிறது.   இந்த இடத்தில உருவாகும் சுனாமியின் உயரம் அது பயணம் செய்யும் தொலைவை பொறுத்து மாறுபடுகிறது.   தொலைவு குறைவாக இருந்தால் அலைகளின் உயரம் அதிகமாகவும் ,  தொலைவு அதிகமாக இருந்தால் அலைகளின் உயரம் குறைவாகவும் இருக்கும்.   ஜப்பானில் இந்த சுனாமி உருவான Fault புகுஷிமாவில் இருந்து 130 கிமீ.  அதனால் ஏற்பட்ட சுனாமியின் உயரம் அதிகம். 
ஆனால் ,  கூடங்குளம் பகுதியில் சுனாமி உருவாகும் Fault 1300  மற்றும் 1500  கிமீ தூரத்தில் தான் உள்ளது.   அதாவது அதனால் உருவாகும் சுனாமி அலைகளின் உயரம் அதிகபட்சம் 2  முதல் 3  மீட்டர் உயரம் தான் வரமுடியும்.   தகவலுக்கு ( http://www.tsunamisociety.org/272Jaiswal.pdf
அதனால் தான் 9  மீட்டர் கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்திருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்ற கருது ஏற்றுகொள்ள கூடியதே.
 டீஸல் ஜெனரேட்டர் செயல்   :   புகுஷிமாவின் டீஸல் ஜெனரேட்டர் தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டு இருந்ததால் அந்த ஜெனரேட்டர் தண்ணீருக்குள் மூழ்கி விட்டது.  ஆனால் கூடங்குளம் டீஸல் ஜெனரேட்டர்  9 . 3  மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் செயல் இழப்பு என்ற பேச்சு அர்த்தமற்றதாகி விடும். 
மாத்திரமல்ல கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ஒன்றுக்கு நான்கு டீஸல் ஜெனரேட்டர் கொண்டுள்ளபடியால் அதிகபட்ச பாதுகாப்பு உறுதி செய்யபடுகிறது .  ( நன்றி :   Facts on KKNPP )
எந்த மின்சாரமும் இல்லாமல் குளிர்விக்க செய்யும் பாதுகாப்பு முறை  :   இது ஒரு முக்கியமான பாதுகாப்பு முறை.   புகுஷிமாவில் இந்த முறை இல்லை .  அப்படியே 4  டீஸல் ஜெனரேட்டர்களும் செயல் இழந்தாலும் Passive heat removal system என்ற அதி நவீன பாதுகாப்பு அமைப்பின் படி கூடங்குளம் அணுமின் நிலையங்கள் அணு உலைகளின் வெப்பத்தை குளிர்விக்கும் ஆற்றல் உள்ளவை .  அதனால் புகுஷிமாவில் ஏற்பட்டது போல Decay Heat யை குளிர செய்ய முடியாத நிலை ஏற்படாது என்பது திண்ணம்.
அணு உலை கட்டிடத்திற்குள் உருவாகிய Hydrogen யை கவர்ந்து கொள்ளும் கருவிகள்  ;    Hydrogen யை கட்டுபடுத்த முடியாத காரணத்தினால் புகுஷிமாவின் அணு உலைகள் சேதத்திற்கு உள்ளானது என பார்த்தோம்.   அனால்  கூடங்குளம் அணுமின் நிலையங்களில் இந்த கருவிகள் ( Hydrogen recombiner )  ஏராளம் பொருத்தப்பட்டிருப்பதால் அவைகள் இந்த hydrogen உருவானாலும் அவற்றை நீராக மாற்றும் சக்தி கொண்டவை.
Core  Catcher :   கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முக்கியமான் பாதுகாப்பு அரண்களில் இதுவும் ஓன்று.   பொதுவாக அணு உலைகள் வெடிக்கும் என்ற கருத்துகள் தவறு.   மாறாக அவைகள் உருகிவிடும் என்ற கருத்துகளே சரி.   அப்படி எல்லா பாதுகாப்புகளும் செயல் இழந்து போனாலும் ,  உருகிய அணு எரி கோல்களை வெளியில் விடாமல் இந்த கொள்கலன் தனக்குள் வாங்கி கொள்ளும்.    இந்த செயல்பாடு புகுஷிமாவில் இல்லை என்பது குறிப்பிட தகுந்தது.
இப்படி பல பாதுகாப்பு அரண்களை கொண்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை நாம் புகுஷிமாவின் அணு உலைகளுடன் ஒப்பிட்டு பயப்படுவது தேவை அற்றது என்பது எனது கருத்து .  இந்திய அணு மின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான் ( பல அடுக்கு ,  பல எண்ணிக்கைகள் )  நமது அணு மின் நிலையங்களை கட்டுவதற்கு கொஞ்சம் அதிகம் செலவாகிறது என்பது எனது கருத்து.    
இப்படி பல நவீன தொழில் நுடபங்களுடன் உருவாகி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த தேவையல்லாத வீணான வதந்திகளையும் ,  அச்சத்தையும் உதறி தள்ளி விட்டு பசுமையான மின்சாரத்தை நாம் வரவேற்கலாமே ....!
 உங்கள் கருத்துகளை பகிரலாமே
குறிப்புகள்  :   The Upside Down  , written by  Mr . Jha
                             Facts of  KKNPP
                             World wide Web

41 comments:

 1. அருமையான விளக்கம்! ஆதாரங்களுடன் எடுத்துசொல்லி உள்ளீர்கள்! தங்கள் சேவை தொடரவாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

  http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

  ReplyDelete
 3. மிகவும் அருமையான பகிர்வு.......
  தொடர்ந்து எழுதுங்கள்.......

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 4. தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

  http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. நல்ல பகிர்வு ........கட்டுரை அருமை ...

  ReplyDelete
 7. @ Thalir : தங்களின் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி
  @ Kannan : தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.
  @ Surya Prakash : தங்களின் கனிவான ஊக்கத்திற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 8. this is a very good comparison of facts. these kind of works should continue. thanks a lot

  ReplyDelete
 9. @ Pope: Dear Sir, Thank you for your visit and encouragement.

  ReplyDelete
 10. அன்பே சிவம் என்ற திரைப்படம் வரும் பொழுது சுனாமி என்ற ஒன்றை நாம் யாரும் அறிந்திருக்கவில்லை. அதில் கமல் தமிழகத்திற்கு சுனாமி வரும் என்பார். அதே போல சுனாமி வந்தது.

  இன்றைக்கு இலங்கை எனப்படும் பகுதி (போல 13 மடங்கு பெரிய பகுதி) முன்னொரு காலத்தில் இந்தியாவோடு இணைந்த நிலப்பரப்பாயிருந்தது. அப்போது அந்த பகுதிக்கு கோண்டுவானா எனப் பெயர். மேடான இலங்கை தவிர மற்றதெல்லாம் நீரில் மூழ்கி போக காரணம் சுனாமி.

  நமக்கு சுனாமி என்ற வார்த்தை தான் புதிது. ஆனால் சுனாமி புதிதல்ல. அதன் பழைய தமிழ் பெயர், ஆழிப் பேரலை, கடற்கோள்.

  ReplyDelete
 11. 1964 இல் புயல் காற்று சூறையாடிப் போக, 2000 பேரை பலி கொண்ட பேரிடரில் மீட்பு நடவடிக்கை செய்யாமல் வாழத் தகுதியற்றதாக அறிவித்ததோடு தனது கடமையை முடித்துக் கொண்டது அரசு. இன்றளவும் தனுஷ்கோடி வாழ தகுதியற்றதாகத்தான் இருக்கிறது. அணு உலை செயல்படத் தொடங்கும் பட்சத்தில் கூடங்குளமும் ஒரு நாள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப் படலாம்.

  ReplyDelete
 12. @ ரசிகன் : நண்பருக்கு வணக்கம் , தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி ..

  // அணு உலை செயல்படத் தொடங்கும் பட்சத்தில் கூடங்குளமும் ஒரு நாள் வாழத் தகுதியற்றதாக அறிவிக்கப் படலாம். //
  இவாளவு ஆதாரங்களோடு இந்த கட்டுரை வரையப்படிருந்தும் , நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இப்படி ஒரு கருத்தை கூறுவது கொஞ்சம் ஆச்சரியமாக தான் உள்ளது.

  ஆனால் உங்களையும் உங்கள் கருத்துகளையும் நான் வரவேற்கிறேன் . நன்றி

  ReplyDelete
 13. உங்கள் ஆதங்கத்தை நான் மதிக்கிறேன். நல்லது நடக்க வேண்டும் என்று தான் நாம் நினைக்கிறோம். ஆனால் எது நல்லது என்பதில் தான் கருத்து வேறுபாடு.ஆதாரம் என எதையும் கையில் வைத்துக் கொண்டு நான் அவற்றை எழுதவில்லை தான். அவையெல்லாம் எங்கோ, எப்போதோ படித்தவை. நீங்கள் ஆதாரம் கேட்டதால்,

  அன்பே சிவம் படம் வெளியான ஆண்டு 2003 : http://www.imdb.com/title/tt0367495/

  ஒரு சிறு தவறு, அது கோண்டுவானா அல்ல. லெமூரியா. (பிழை பொறுக்க வேண்டுகிறேன்):

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%௮

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%பே

  தனுஷ்கோடி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%பப்

  // சுனாமி அலைகளின் உயரம் அதிகபட்சம் 2 முதல் 3 மீட்டர் உயரம் தான் வரமுடியும்.//
  சுனாமி சொசைட்டி இப்படி சொன்ன விஷயம் (ஒருவேளை) வரப்போகும் சுனாமிக்கு தெரியுமா?
  2004 இல் வந்த சுனாமி குமரியில் நிற்கும் திருவள்ளுவர் சிலையை விட உயரமாக எழுந்ததாக படித்த நினைவு.

  நன்றி.

  ReplyDelete
 14. @ ரசிகன் : நண்பருக்கு வணக்கம் . நீங்கள் கொடுத்த ஆதாரங்களை பார்த்தேன்.

  // அன்பே சிவம் படம் வெளியான ஆண்டு 2003 : http://www.imdb.com/title/tt0367495///
  மிக நல்ல ஆதாரம் ... நன்றி

  // 2004 இல் வந்த சுனாமி குமரியில் நிற்கும் திருவள்ளுவர் சிலையை விட உயரமாக எழுந்ததாக படித்த நினைவு.//
  திருவள்ளுவர் சிலை 133 அடி ( 40 மீ ) உயரம் அன்பது தங்களுக்கு தெரிந்திருக்கும். 2004 ல் ஏற்ப்பட்ட ட்சுனாமியின் மிக பெரிய உயரம் இந்தோனேசியாவில் தான் உணரப்பட்டது ( கிட்டத்தட்ட 80 அடி ) . சரி .. கன்னியாகுமரியில் 133 அடி உயரத்திற்கு சுனாமி வந்தது என்ற தங்களின் கருத்து ஏற்புடையது அல்ல என நினைக்கிறேன் .

  நன்றி

  ReplyDelete
 15. அருமையான பகிர்வு..நன்றி.

  ReplyDelete
 16. மக்களின் பயத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ReplyDelete
 17. @ விஜயன் : உண்மை தான் நண்பரே ...

  ReplyDelete
 18. அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

  http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

  ReplyDelete
 19. I am happy that good analysis is made on this issue. I feel the current problem is not with the technical aspects. The agitators too fail to focus on the associated social issues. It is a fact that safety records of nuclear industries are much better than any other conventional industries. I would like to mention some of my views on our nuclear policy.

  When our country has mastered PHWR / FBR / AHWR technology, and when our country is proud to have enough uranium / thorium resources, why should it go for importing all types of reactors? This approach will lead to colonialism once again. We should stand on our own legs.

  However small may be the risk, it is a fact that there is a risk. Risk is not specific for nuclear energy alone..it is omnipotent. But a society which has come forward to accept that risk should be befitted socially and economically. The state which spares land for nuclear project should be given maximum share of electricity generation (~70%) and employment (~70%).

  Also the government should make public the agreement made with Russia on KKNP. People have the right to know the conditions stipulated by Russia over supply of fuel and the right of our country to reprocess the spent fuel.

  ReplyDelete
 20. @ Ram Prasad : Dear Sir, thank you very much for your kind sharings..

  As you said , of course , we have mastered PHWR/FBR/AHWR technology, But we don't have enriched Uraniam Technology. But we have the technology of using Thorium as a Fuel in our FBR reactors.

  But for that we need PU239 , which will be spent fuel after using U235. So i believe that that's why we are going for importing reactors.

  I do agree with you that suitable social , economical benefits to be given to the people , which doesn't mean that people are sacrificing their life..

  I hope so , you third point regarding the agreement with Russia may not be big problem to Govt.

  I do appreciate your constructive points and sharings in this regard. thank you

  ReplyDelete
 21. கூடங்குளத்தில் அமைத்துக் கொண்டிருக்கிற அணுமின் நிலையத்தை முதலில் கேரளாவில்தான் நிறுவத் திட்டமிட்டிருந்தது இந்திய அரசு. ஆனால் கேரளாவில் மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி பேராயக் (காங்கிரசு) கட்சி உள்ளிட்டு அனைவரும் போராடி எதிர்த்தனர். எனவே அதை அங்கு நிறுவாமல், தமிழகத்தின் கூடங்குளத்தில் நிறுவ முடிவெடுத்தது இந்திய அரசு.

  கேரளாவில் எதிர்த்த மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியும், பேராயக் (காங்கிரசு) கட்சியும் தமிழ்நாட்டில் வாய்மூடிகளாகி விட்டன. ஊமைத் தனமாய்க் கிடக்கிறது தமிழகம். ஏன் இந்த நிலை? அணுமின் நிலையத்தால் ஏற்படும் அழிவுகள் குறித்து விளக்கமாகத் தெரிந்து கொண்டாவது எதிர்க்க முனைவோம்.
  இதுவரை உலகில் 3 பெரிய அணு உலை நேர்ச்சிகள் நடந்துள்ளன. 1969 இல் சுவிட்சர்லாந்தில் லுசன்சு அணுஉலை வெடித்தது. இதனால் அந்த நாடு மிகப் பெரும் அழிவுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.

  1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் அணு உலை வெடித்தது. இதனால் அமெரிக்கா மக்கள் அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர். மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

  1986ல் ரசியாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபில் அணு உலை வெடித்தது. இதில் ரசியாவின் மக்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளும் பாதிப்புக்குள்ளாயின. காரணம் காற்றில் கதிரியக்கம் பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். பல இலக்கம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அள்ளிக் கொண்டு போகப்பட்டனர். செர்னோபிலைச் சுற்றி ஐம்பது மைல் வட்டத்திற்குள் உள்ள பகுதிகள் சுடுகாடாக மாறிப் போயின.

  இன்னும் பல்லாயிரம் மக்களுக்குக் குருதிப் புற்று நோய் வந்து கொண்டிருக்கிறது. இனியும் வரும் என்று பல ஆய்வுகள் அறிக்கை அளித்துள்ளன. ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் பாதிப்பு இருக்குமாம்.

  இந்த நேர்ச்சிக்குப் பிறகு ரசியாவில் அணு உலைகள் நிறுவுவதை அந்த அரசே நிறுத்தியுள்ளது. ஆனால் அதே ரசியாவுடன் தமிழகத்தில் கூடங்குளத்தில் அணு உலைகளை அமைக்கிறது ரசிய அரசு. இதற்கு 20,000 கோடி உருவா கடனாகவும், அதற்கு 17,000 கோடி வட்டியாகவும் ஆக மொத்தம் 37000 கோடி ரசியாவிற்கு செலுத்தியாக வேண்டுமாம். அதுவும் அவை பணத்திற்கு மாற்றுப் பொருளாக சர்க்கரை, கோதுமை, பழங்கள், பூக்கள் இவற்றைத்தான் கொண்டு செல்கின்றனர்.

  அமெரிக்காவிற்கு அருகில் அமெரிக்காவிற்குச் சொந்தமானதீவில் அணு உலைகளை உருவாக்கியது. அந்த உலையிலும் நேர்ச்சி ஏற்பட்டது. கதிரியக்கத் தைத் தடுக்க முடியவில்லை. 7 ஆண்டுகளாக 102 கோடி டாலர்கள் செலவு செய்தது. ஆனாலும் கெட்டிப்படுத் தப்பட்ட கான்கிரீட் கலவையை மீறி கதிரியக்கம் பரவுகிறதுஎன்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

  நியூயார்க் நகருக்கு சற்று தொலைவில் லாங்ஜ லாண்டு தீவில் அணுமின் உலையை அமெரிக்கா அமைத்தது. கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் அந்த உலையின் ரதம் (அபாயம்) நியூயார்க் நகர மக்களுக்குத் தெரிந்தது. நியூயார்க் நகரமே நெருப்புக் கோளமாக எழுந்தது. மக்கள் கடும் போராட்டங்கள் நடத்தினர். இப்போது அந்த அணு உலையை அப்படியே கிடப்பில் போட்டது அமெரிக்கா.

  அமெரிக்காவின் மேற்கு எல்லைப் பகுதி பாலைவனப் பகுதியாகும். திவாடா என்ற அந்தப் பகுதியில் அணுக் கழிவுகளை அங்கே ஆழக் குழி தோண்டிப் புதைக்க அமெரிக்க அரசு முயன்றது. பாலைவனப் பகுதி மக்கள் எழுச்சியால் போராட்டங் களைத் தொடங்கினர். அதன்பின் தங்கள் மண்ணில் அணு உலை அமைப்பது அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாகி விட்டது. அணுக் கழிவுகள் கக்கும் கதிர் இயக்கம் பத்தாயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று அணுவியல் அறிஞர்கள் அச்சம் தெரிவிக் கின்றனர்.

  இவ்வாறு பாதிப்பிற்கு உள்ளான நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு உதவி செய்வதாகக் கூறி இங்கு வளரும் தலைமுறைக்குத் தீ வைத்து எரிக்கத் திட்டமிடுகின்றன. இதை நன்கு உணர்ந்த இந்திய அரசு அதன் ஆட்சியாளர்களின் கொள்ளைக்காக மக்களைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அவர்கள் வாழும் பகுதியிலேயே அணு உலையை நிறுவுகின்றது.

  அணு உலை அமைத்து மின்சாரம் உருவாக்கம் செய்யும் திட்டங்களுக்குப் பல நாடுகள் விடை கொடுத்து வருகின்றன. அணு உலைகளே வேண்டாம் என்று அமெரிக்காவே பெருமூச்சு விடுகிறது. ஆனால் அணு உலை என்னும் கொள்ளிக் கட்டையை இந்தியா வின் தலையில் செருகிட திட்டமிடுகிறது அமெரிக்கா.

  ReplyDelete
 22. இந்த கட்டுரையை விரிவாக வாசிக்க http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14776:2011-05-23-06-06-07&catid=1327:2011&Itemid=574

  ReplyDelete
 23. நீங்க சொல்றது எல்லாம் சரிதான்...
  அந்தஅணுமின் நிலையம் செயல் பாட ஆரம்பித்தால்
  எங்கழுடாய வாழ்க்கை பாதிக்கப்படும் ...அதை உங்களை போல் உள்ள ஆட்கள் புரிந்து கொள்ள வேண்டும்....அங்கு பிடிக்கும் மீனை நான் சாப்பிடுவேன் ....வெளிமநிலத்துக்கு ஏற்றுமத்தியாகும்
  மீனின் எண்ணிக்கை வெஹுவஹ பாதிக்கப்படும்.. அணுமின் நிலையத்தை அடுத்து
  சின்ன முட்டம் chinna muttam fishing harbour

  உள்ளது அதை விட்டு போஹா சொன்னால் நாங்க எங்கு போவது.......கடலை விட்டு 10 கிலோமீட்டேர் தொலைவில் நாங்கள் போய் என்ன செய்வது ......நீங்க எங்கோ இருந்து விட்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம் .... அங்கு என்ன நடக்கும் எண்பது அங்கு வாசிக்கும் மக்களுக்கு தான் அறிவார்கள் .......
  இனிமேலும் இதை போல் பத்திவை படிக்க நேர்தல் ................................

  ....விஜி....
  கன்னியாகுமரி.............

  ReplyDelete
 24. @ முத்து : நண்பருக்கு வணக்கம் . தங்களின் கருத்துக்கு நன்றி .

  தங்களின் கேள்விகள் மிகுந்த அக்கறையுடன் கேட்கப்பட்டதாக நினைக்கிறேன் . ஆனால் என்னுடை சில கருத்துகளையும் நீங்கள் படிக்குமாறு அனுபுத் கேட்டு கொள்ளுகிறேன் .

  // 1969 இல் சுவிட்சர்லாந்தில் லுசன்சு அணுஉலை வெடித்தது. இதனால் அந்த நாடு மிகப் பெரும் அழிவுகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.//
  முதலில் இது ஒரு தவறான தகவல் . 1969 ல் டெஸ்ட் ரியாக்டர் ( 8 . 3 MWe மின்சார சக்தி ) யில் குளிர்வுக்கும் கருவிகள் பழுது அடைந்தது உண்மை ஆனால் நீங்கள் கூறியபடி அங்கு எந்த அழிவும் ஏற்படவில்லை . ஏன் எந்த கதிரியக்கம் அணு உலையை விட்டு வெளிவரவும் இல்லை . தகவலுக்கு படியுங்கள் "No irradiation of workers or the population occurred " . நன்றி : http://en.wikipedia.org/wiki/Lucens_reactor .

  // 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் அணு உலை வெடித்தது. இதனால் அமெரிக்கா மக்கள் அரசை எதிர்த்துக் கடுமையாகப் போராடினர். மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.//
  1979 ஆம் ஆண்டில் விபத்து ஏற்ப்பட்டது உண்மை தான் . ஆனாலும் கதிரியக்க அபாயம் இல்லாததால் மக்கள் வெளியேற்றப்படவில்லை . அச்சத்தின் காரணமாக 140000 மக்கள் தாமாக வெளியேற 663500 பேர் அதே இடத்தில தங்கியிருந்தனர் . தாமாக வெளியேறிய மக்கள் சில நாட்களுக்குள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பினர் .. நன்றி : http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident

  செர்நோபில் விபத்து ஒரு பெரிய விபத்து தான் . ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வடிவமைப்பு அதை விட பல மடங்கு மேலானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும் . வெகு விரைவில் செர்நோபிலும் கூடன்குளமும் ஒன்றா என்ற கட்டுரையில் இதை விளக்குகிறேன் .

  // இந்த நேர்ச்சிக்குப் பிறகு ரசியாவில் அணு உலைகள் நிறுவுவதை அந்த அரசே நிறுத்தியுள்ளது.//
  இதுவும் ஒரு தவறான தகவல் . செர்நோப்ய்ல் நிகழ்வுக்கு பிறகும் அந்த சமயத்தில் கட்டுமான நிலையில் இருந்த அணுமின் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு இயக்கப்பட்டது . மாத்திரமல்ல வேறு பல அணுமின் நிலையங்களும் கட்டுமான பணியில் இருக்கிறது . உதாரணத்திற்கு

  Novovoronezh II என்ற இடத்தில இரு அணுமின் நிலையங்களின் கட்டுமான பணி 2007 ம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2012 மின் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Novovoronezh_Nuclear_Power_Plant_II

  மற்றும் ரஷ்யாவில் கட்டப்பட்டு கொண்டிருக்கிற அணுமின் நிலையங்களின் பட்டியலை காண்க http://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors

  ReplyDelete
 25. @ முத்து : நண்பரே உங்கள் கேள்விக்கான பதிலை தொடர்கிறேன் ...

  // அணு உலைகளே வேண்டாம் என்று அமெரிக்காவே பெருமூச்சு விடுகிறது //
  இதுவும் ஒரு தவறான தகவல் . 1979 விபத்து சமயத்திலும் கட்டுமான பணியில் இருந்த 53 அணுமின் நிலையங்கள் கட்டிமுடிக்கப்பட்டு இயக்கப்பட்டன . அதன் பிறகு பெருமளவில் எண்ணை மற்றும் எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன .

  மாதிரம்மல்ல வருங்காலத்தில் அமெரிக்காவின் அணுமின் திட்டங்களை கொஞ்சம் இந்த தளத்தில் காணுங்களேன் ..
  http://www.world-nuclear.org/info/inf41.html .

  நன்றி

  ReplyDelete
 26. சகோ வணக்கம் , தங்களின் வருகைக்கு நன்றி .

  தங்களின் கேள்வியில் இருந்த ஆழ்ந்த சிந்தனையை உணர்ந்தேன் . அணுமின் நிலையத்தால் மீன்கள் பாதிக்கப்படாது என்பது ஏன் கருத்து . யாரோ சொல்லுகிற சில தவறான தகவல்களை நீங்கள் நம்பவேண்டாம் .

  முதலாவது நீங்கள் மீன் பிடிப்பதை தொழிலாக கொள்ளுவதால் கடலை குறித்து உங்களுக்கு நன்கு தெரியும் . நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை . பொதுவாக நீங்கள் இருக்கும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை 22 - 28 டிகிரி செல்சியஸ் . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Indian_Ocean . பொதுவாக அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கடல் நீர் 4 - 6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமுடையதாக இருக்கும் . ஆனால் அதுவும் இந்த மகா சமுத்திரத்தில் கலக்கும் போது கடலில் வெப்பநிலை உயர்வு அதிகபட்சம் 1 அல்லது 2 டிகிரி தான் இருக்கும் . அப்படி வெப்பநிலை சிறிது உயர்ந்து வெதுவெதுப்பு உண்டாகும் போது மீன்கள் இனவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் . இது தான் உண்மை,.

  நீங்கள் இப்பொழுது கேட்கலாம் . அந்த நீரில் கதிரியக்கம் இருக்குமே என்று சொல்லி .. அது சம்பந்தமாக நான் எழுதியுள்ள "அணுமின் நிலையங்கள் சில கேள்விகள் சில பதில்கள் " என்ற பதிவில் பாருங்கள் கடலில் கலக்கும் நீரில் கதிரியக்கம் இல்லை என்ற உண்மை விளங்கும் . http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html

  மாத்திரமல்ல கிட்டத்தட்ட 54 அணுமின் நிலையங்கள் உள்ள ஜப்பானின் மீன் பிடி தொழில் ஏதாவது பாதிக்கப்படிருக்கிறதா ..? மாறாக உலகின் அதிக மீன் கிடைக்கும் ( 3 வது இடம் ) இடமாக உள்ளது . தகவலுக்கு : http://www.nationsencyclopedia.com/Asia-and-Oceania/Japan-FISHING.html . இப்பொழுது புரிந்து கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன் .

  // சின்ன முட்டம் chinna muttam fishing harbour உள்ளது அதை விட்டு போஹா சொன்னால் நாங்க எங்கு போவது.......கடலை விட்டு 10 கிலோமீட்டேர் தொலைவில் நாங்கள் போய் என்ன செய்வது ......நீங்க எங்கோ இருந்து விட்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம் .... அங்கு என்ன நடக்கும் எண்பது அங்கு வாசிக்கும் மக்களுக்கு தான் அறிவார்கள் //

  சகோ . நீங்களும் என்னை போல தான் . உங்களை போலவே எனக்கும் ரத்தமும் உணர்சிகளும் உண்டு . அதனால் நான் எங்கு இருந்தாலும் உண்மையை பேச வேண்டியது தேவை என நினைக்கிறன் . உங்களை யார் உங்கள் இடத்தை விட்டு போக சொன்னார்கள் . நீங்கள் இருந்த இடத்திலே உங்கள் தொழிலை செய்யலாம் . சில தவறான தகவல்களை நீங்கள் நம்பவேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுகொள்ளுகிறேன் .

  நன்றி

  ReplyDelete
 27. வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம். அணுசக்தி என்பது மிகபெரிய அழிவு வழியே, அது எப்படி என்று விளக்கும் விடியோ சிந்திக்கவும் இணையதளத்தில் "தினமலருக்கு செருப்படி" என்கிற பெயரில் வைக்கப்பட்டுள்ளது. உங்களது கேள்விகளுக்கும் நீங்கள் இதுவரை எழுதிவந்த கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த எல்லா பதிவுகளுக்கும் அந்த விடியோ செய்தி விளக்கமாக அமையும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு "அணு ஆற்றல் குறித்து தொடக்கம் முதல் இறுதிவரை விளக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதிகள் தங்கள் ஆட்சியை நிலை நிறுத்தி கொள்ளவும். அந்நிய முதலீடுகளை கவரவும் அடிக்கும் கூத்தே இது. இதுதான் நாட்டின் உண்மையான முன்னேற்றம் என்று நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள். விடியோவை பாருங்கள் உங்களுக்கு மேலதிகமான தகவல்கள் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி தோழரே.

  ReplyDelete
 28. @ PUTHIYATHENRAL : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  // வணக்கம் நண்பரே நீங்கள சொல்லி இருப்பது முற்றிலும் தவறான விடயம்.//
  மிக எளிதாக எனது அத்தனை பதிவுகளிலும் இந்த கருத்தை பதிவு செய்துள்ளீர்கள் . ஆனால் எனது பதிவுகள் அனைத்தும் மிகுந்த ஆதாரத்துடன் எழுத பட்டிருக்கும் போது , நீங்கள் எளிதாக தவறு என்று சொல்லுவதை ஏற்று கொள்ள முடியவில்லை .

  நீங்கள் இன்னும் , அணுமின் சக்தியை குறித்த குறுகிய / தவறான கண்ணோட்டத்தில் காண்பதால் தான் தங்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என நினைக்கிறேன் . உங்களது கேள்விகளை நீங்கள் முன் எடுத்து வைக்கலாமே . நாம் ஆரோக்கிய விவாதம் செய்வோம்.

  தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

  ReplyDelete
 29. good job Mr. Proud to be an Indian

  ReplyDelete
  Replies
  1. @ அகில் :

   நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள்

   Delete
  2. What is the result of the latest studies on the tsunami height expected at Indian Ocean/ Bay of Bengal near KKNPP? Whether your diesel generators are above this level?

   Allan Donald

   Delete
  3. Dear Friend,

   Thanks for your visit and for your constructive question.

   The expected Tsunaami level near the Power Project is 4 Mtrs only. It may please be noted that in 2004 Tsunami , only 2 Mtrs height waves observed near the Power Project.

   But the DGs are kept above the height of 8.2 Mtr from the Sea Level. Hence the safety of the DGs are Proved.

   Thank you & Visit again

   Delete
 30. Why is it that the wrong concepts regarding nuclear power that have arisen in the minds of common public are not cleared by the authorities through popular media in Tamil Nadu? Small skits and visual depiction of the safety of the reactor can be aired? Debates can be arranged?

  -AD

  ReplyDelete
  Replies
  1. Dear Friend,

   Thank you for your visit and for your constructive question.

   I hope that govt. is doing some awareness program to clarify the doubts of the people through various medias. However , i do agree with you , the same is not in effective manner. May be , Govt may think to give a common awareness about Nuclear , where as in Blog we are discussing specific topics.

   Let us hope the best in the future days.

   Thank you for your concern on the interest of this great nation. Please visit again.

   Delete
  2. WHAT IS THE LATEST ON THE KK FRONT? I HEARD THAT A NEW COMMITTEE HAS BEEN SET UP BY TN GOVT. WHAT ARE THE TERMS AND ISSUES RAISED? CAN YOU ELABORATE? REGARDS

   -A.D

   Delete
  3. Dear Friend,

   Thank you for your visit.

   Yes... TN Govt has appointed one Committee consisting various 4 members. So far the committee has not yet started its work. I hope so , soon the work of the committee will take place. Once it starts , then i will elaborate all the terms & Issues... Please wait for sometime...

   Let us hope the best. You are welcome again...

   Delete
 31. ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.

  பீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.

  மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாதுகாத்து வைத்திருக்க முடியுமா? என்பதே பெரும் கேள்வி.

  சோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கொடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
  உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.

  ReplyDelete
 32. I am a bit confused by the above arguments. Somebody please clarify:

  (1)Are we saying that fishing will get affected by increased temperature in the sea water? Then what about the other power stations (non nuclear) that discharge high temperature water in the sea? Are we opposed to them also and should we close down all the power stations?

  (2)What about the fishing activity in Japan/ France whether they also have suffered?

  (3) Regarding risk in the power station operation, whether risk is not there in any of the other normal activities? In fact fishing is one activity which has more risk compared to many other activities. Still are we not undertaking fishing? Should we close down all these activities and deprive millions of their livelihood?

  (4)What about the wastes from our own chemical industries? Do they not unscrupulously discharge their waste in our own waters? How many lives have been spoiled/ deformation in new births taken place because of this? Should we accept this?
  (5) What is the history of discharge of toxic chemicals of nuclear industry and other industries in India? Has anybody studied this?

  I suggest that we should take up these issues also in this forum and fight against these.

  -AD

  ReplyDelete
 33. நணபரே,

  உங்கள் கட்டுரைகள் எல்லாம் படிக்கிறேன். நீங்கள் சொல்வது எல்லாம் சரிபோலத்தான் படுகிறது. ஆனால் அணுஉலை ஆபத்து என உள்ளம் சொல்கிறதே? என்ன செய்வது. நீங்களும் நானும் சராசரி மக்கள். அதிகாரம் படைத்த அரசியல்வாதிகள் அல்லர். தங்கள் சுயநலத்திற்காக எத்தனை மக்களையும் அரசியல் வாதிகள் பலி கொடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். பிறகு நீங்கள் ஏன் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக எழுதுகிறீர்கள். தயவுசெய்து அணு உலை பற்றி இன்னும் நிறைய ஆராய்ந்து உண்மையின் பக்கம் நின்று எழுதுங்கள்.
  அன்புடன்
  தோழன்

  ReplyDelete
 34. அன்பு நண்பருக்கு வணக்கம் ,

  தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....

  தங்களின் உண்மையான வருத்தம் , அதன் உணர்ச்சி என்பதை நான் தங்கள் கருத்தின் வாயிலாக அறிந்து கொண்டேன் . நீங்கள் கூறியது போல , நானும் நீங்களும் சாதாரண மனிதர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை . எனது பதிவுகள் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்காது ,, மாறாக அறிவியலை / உண்மையை எல்லாரும் புரிந்து கொள்ளவேண்டும் என்ற உணர்வில் எழுதப்படுவது தான் . நீங்கள் சொன்ன படி இன்னும் நிறைய ஆராய்ந்து அணு உலைகளை பற்றி நான் எழுதுகிறேன் .

  உங்கள் கருத்து என்னை ஊக்குவிக்கிறது ....

  தொடர்ந்து வருகை தாருங்கள் .. நன்றி

  ReplyDelete
 35. அணு உலை 100 சதவீதம் பாதுகாப்பானது என்கிறீர்கள். அதற்காக சில ஆதரங்களையும் தந்திருக்கிறீர்கள் சரி

  அணுக்கழிவை எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள் ? தயவு செய்து முழுமையாக விளக்கவும்

  ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி