கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார் பல பல புதிய புதிய காரணங்களை சொல்லி மக்களை போராட தூண்டி கொண்டே தான் இருந்தார் என்பதை எனது பதிவுகளில் பலமுறை எழுதி இருக்கிறேன் . சரி .... எங்கே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று போராடிய அப்பாவி மக்கள் எப்படி திரு . உதயகுமாரை இந்த அளவுக்கு நம்பினார்கள் என்ற கேள்வி எழாமல் இருக்கவில்லை தானே ....
பதிவுலகில் கூட சில பதிவர்கள் , திரு உதயகுமாரை குறித்து பதிவு எழுதுகையில் காமராஜருக்கு ஒப்பிட்டு எழுதினார்கள் . இவர்கள் காமராஜரை குறித்து என்னத்தை தான் அறிந்திருந்தார்களோ தெரியவில்லை . இன்னும் ஒருவர் ஒருபடி மேலே போய் இவர் இயேசு , புத்தர் வரிசையில் வந்தவர் என்று ஒரு கவிதை எழுதிவிட்டார் . எல்லாம் தலைவிதி ...! சரி ....உண்மையில் இந்த திரு . உதயகுமாரை மக்கள் அப்படியே நம்பிவிட காரணம் தான் என்ன என்று யோசித்ததின் விளைவு தான் இந்த பதிவு
கூடங்குளத்தில் தற்பொழுது நடக்கிற நிகழ்வுகள் ஆரம்பித்த சூழலை பார்த்தால் கொஞ்சம் வியப்பாக தான் இருக்கும் . உள்ளாட்சி தேர்தலை ஒட்டி , கூடங்குளத்தில் ஏற்கனவே இருந்த பஞ்சாயத்து தலைவர் அணுமின் நிலையத்திற்கு ஆதரவானவர் என்பதால் , அந்த பஞ்சாயத்து தலைவரை தோற்க்கடிக்க வேண்டி மக்களை ஓன்று திரட்டும் பணியில் இந்த போராட்டம் துவங்கப்பட்டது என்பது தான் உண்மை என்று நான் கடந்தமுறை கூடங்குளம் சென்ற பொழுது அறிந்து கொண்டேன்.
இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் அவ்வளவு ஆதரவு கிடைக்காத நிலையில் , கூடங்குளத்தை சேர்ந்த ஒரு சிலரால் திரு . உதயகுமார் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டு இருக்கிறார் . திரு ,. உதயகுமார் கூடங்குளம் வந்ததுமே அவர் எடுத்த ஒரு பெரிய முடிவு என்னவெனில் போராட்டம் கூடங்குளத்தில் இருந்து இடிந்தகரை பகுதிக்கு மாற்றப்பட்டது . ஏன் எனில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சோதனை ஓட்டத்தின் போது எழுந்த சத்தம இடிந்தகரை மக்களை பயமுறுத்தி வைத்து இருந்தது .
மீனவ நண்பர்கள் சூழ்ந்து இருந்த இந்த கிராமத்தில் போராட்டம் நடத்துவதற்கு ஆலய வளாகத்தை தேர்ந்து எடுத்த இவர் முதல் முதலில் செய்த வேலை என்னவெனில் சோமாலியாவில் உள்ள குழந்தைகளின் சில படங்களையும் , மூளை வளர்ச்சி இல்லாத சில குழந்தைகளின் படங்களையும் பேனராக தயாரித்து மக்கள் முன்பு வைத்து மக்களை பயப்பட வைத்தார் . தொடர்ந்து மீன் கிடைக்காது , கான்சர் வரும் , கதிரியக்கம் வரும் , கரு சிதைவு உண்டாகும் , உங்கள் ஊரை விட்டு விரட்டி விடுவார்கள் என்று சொல்லி மக்களை குறிப்பாக பெண்களை பயத்தில் ஆழ்த்தி போராட்டத்தில் ஈடுபட வைத்தார் .
உடனடியாக மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அரசினால் , அணுமின் நிலையத்தின் அறிவியல் அறிஞர்களினால் கொடுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது . இந்த திட்டம் மக்கள் மத்தியில் கொஞ்சம் விழிப்புணர்வு ஏற்ப்படுதவே , உடனடியாக திரு . உதயகுமார் தனது அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார் . அது தான் சாகும் வரை உண்ணாவிரதம் . கிட்டத்தட்ட 127 பேர் அந்த உண்ணாவிரதத்தில் இருந்த பொழுது , திரு . உதயகுமார் மாத்திரம் உண்டு போராட்டத்தில் இருந்தார் என்பது உலகம் அறிந்த உண்மை . அப்பொழுது தான் உதயமாகியது புதிய தலைமுறை என்ற தொலைகாட்சி . அந்த தொலைக்காட்சியை யாரும் பார்க்காத நேரத்தில் , நேரடி ஒளிபரப்பை இடிந்தகரையில் இருந்து செய்தது . அந்த தொலைக்காட்சியில் திரு . உதயகுமார் மாத்திரம் தான் பேசுவார் . நன்கு மக்கள் ரசிக்கும் படி பேசினார் . அணுமின் நிலையத்தை பார்லிமென்ட் மத்தியில் வைத்தால் என்ன என்பது போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றது.
இந்த நிலையில் சாகும் வரை உண்ணாவிரதம் 11 வது நாளை அடைந்தது . பல தமிழக தலைவர்களும் போராட்ட பந்தலுக்கு வந்தார்கள் ( ஒட்டு கிடைக்குமே ...) 127 பேரில் பலர் சாப்பிட்டு கொண்டு உண்ணாவிரதம் இருக்க , சிலர் மாத்திரம் உண்மையாக உண்ணாவிரதம் இருந்தார்கள் . அந்த உண்மையான சிலரின் நலனுக்காக , மக்களின் நலனுக்காக தமிழக அரசு உண்ணாவிரதம் கைவிடும் படி அழைப்பு கொடுத்தது . அதை ஏற்காத போராட்ட குழு " அணுமின் நிலையத்தை மூடுவதற்கு தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றினால் " போராட்டத்தை கைவிடுவதாக கூறியது . திரு . உதய்குமாருக்காக அல்ல , மக்களுக்காக தமிழக அரசும் , " மக்களின் அச்சம் நீங்கும் வரை , தற்காலிகமாக அணுமின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் " தீர்மானம் நிறைவேற்றியது . இது உதயகுமாரின் சாதுர்யத்தால் கிடைத்தது என்று மக்கள் எண்ண தொடங்கினர் .
தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் , மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களையும் திரு . உதயகுமார் தலைமையில் குழுவினர் சந்தித்தனர் . எனவே திரு . உதயகுமார் நினைத்தால் எதுவும் நடக்கும் என்று அப்பாவி மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர்
தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் திரு . உதயகுமார் அழைத்து கொண்டு வரும் நக்சல் கும்பலை சேர்ந்த குழுவினர் பாடல்கள் , நாடகங்கள் மூலமாக , மக்களின் உணர்வுகளை போராட்டத்தில் தீவிரப்படுத்த ஆரம்பித்தனர் . குழந்தைகளும் அவர்களின் பார்வையில் தப்பவில்லை .
ஒவ்வொரு முறையும் தவறான கருத்துகளை கூறும் திரு . உதயகுமார் இப்படி தான் ( மக்களின் நம்பிக்கையால் ) ஒவ்வொரு அறிவியல் அறிஞர்களையும் முட்டாள் என்று சொல்லி கொண்டு இருந்தார் . இவர் ஒரு பெரிய சமூக சீரழிவுக்கு மக்களை கொண்டு செல்லுகிறார் என்பதை நான் பல பதிவுகளில் சுட்டி காண்பித்து உள்ளேன்.
பெண்களையும் , குழந்தைகளையும் போராட்டத்தில் ஈடுபடுத்தி எப்பொழுதும் அந்த அரணுக்குள் தன்னை ஒளித்து கொள்ளுபவர் . இப்பொழுது கூட அப்படி தான் என்பது தான் உண்மை .
இவரின் அதனை அசைவுகளையும் தீவிரமாக கவனித்த அரசுகள் , இவர்களுக்கு உண்மையில் அணுமின் நிலையத்தை குறித்த அச்சம் இல்லை . இவர்கள் அச்சம் நீங்காத அளவுக்கு திரு . உதயகுமார் என்பவரால் மூளைசலவை செய்யப்பட்டு உள்ளனர் என்பதை கண்டுபிடிததின் விளைவு தான் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடங்குவதற்கு அரசு ஆதரவு கொடுத்தது என்று சொல்லுகிறார்கள்.
போராட்ட குழுவை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் . ஆனால் அவர்கள் மக்களை திட்டமிட்டு போராட தூண்டிய திரு . உதயகுமார் , திரு . முகிலன் போன்றவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை .. திரு . உதயகுமார் சரண் அடைவதற்கு அரசு அழைப்பு கொடுத்தபிறகும் . திரு உதயகுமார் மக்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறார். இந்த நிலையில் காவல் துறை மீது கல்வீச்சு நடத்த பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளது .
எனது பதிவுகளில் அடிக்கடி நான் சொல்லுகிற படி , திரு . உதயகுமாரின் போலி முகமூடி என்று கிழிந்துள்ளது . அப்பாவி மக்களின் பின்னால் இருந்து கொண்டு அந்த மக்களின் அன்பையும் , அறியாமையும் திரு. உதயகுமார் தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தால் , சட்டம் மன்னித்தாலும் , சமூகம் அவரை மன்னிக்காது . போராடுபவர்களை விட போராட தூண்டியவர்கள் பெரும் தண்டனைக்கு உரியவர்கள் . எனவே திரு. உதயகுமாரின் மீதும் , அவரது நக்சல் கூட்டத்தின் மேலும் சட்டம் தனது கடமையை செய்யவேண்டும் . ஆனால் அதே நேரத்தில் அவரால் ஏமாற்றப்பட்ட அப்பாவி மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவேண்டும் என்பதே இந்த இந்தியனின் ஆசை .






