Sunday, 18 December 2011

கூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..?

இந்த தலைப்பை பார்த்தவுடன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...? ஆம் ... கூடங்குளத்தில் நிகழும் சில செய்திகளை பார்க்கும் போது எனக்கும் கொஞ்சம் வித்தியாசமாக தான் இருக்கிறது ...!




 
பிரதமர் அவர்களின் ரஷிய பயணத்தை கண்டித்து கூடங்குளம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் போராட்டத்தில் 3  நாட்கள் ஈடுபட்டார்கள் என புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கூறினார்கள் .  இந்த போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமார் அவர்களிடம் பேட்டி கண்டபோது , திரு . உதயகுமார் மத்தியில் ஆளும் அரசு தமிழக மக்களுக்கு எதிரானது என்று பேசினார் .  அதாவது 8  கோடி மக்களுக்கும் மத்திய அரசு துரோகம் செய்து தான் அணுமின் நிலையத்தை அமைக்கிறது எனவும்  ,  கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் 3  பேரின் தூக்கு தண்டனையில் மத்திய அரசின் அணுகுமுறையை குறித்தும் பேசினார் ....

அட .... 8  கோடி தமிழனுக்கும் புது தலைவன் கிடைத்து விட்டான் போல என்று தான் நினைக்க தோன்றுகிறது .

Conflict management என்ற தலைப்பில் பல வருடங்கள் அமெரிக்காவில் பாடம் எடுத்த திரு . உதயகுமார் , தமிழ் வளர்ச்சிக்கும்  , தமிழனின் வளர்ச்சிக்கும் என்ன செய்தார் ...? இன்று வரை அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் திரு . உதயகுமார் தமிழன் என்று சொல்லும் தகுதியை எப்பொழுது பெற்றார் என்பது ஒரு புரியாத புதிர் தான் .


தமிழகத்தில் நிலவிய சில அசாதாரண அரசியல் சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக்கி கொண்டு  , அணுமின் நிலையங்களை குறித்த அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி  , இன்னும் அச்சம் தீரவில்லை என்ற ஒரு மாயையை உலகிற்கு ஏற்படுத்தி  , கடைசியில் வரும் 31  தேதிக்குள் அணு எரிபொருளை அணுமின் நிலையத்தில் இருந்து அகற்றாவிடில் குண்டு வீசி அணுமின் நிலையத்தை அழிப்போம் என்று பகிரங்கமாக மத்திய மாநில அரசாங்கத்திற்கு சவால் விடுகிறார் என்றால் ( தகவல் : தினகரன் , தினமலர் ) , இவரின் பின்னணி கொஞ்சம் ஆபத்தானது போல விளங்குகிறது .  இந்த சம்பவம் குறித்து கூடங்குளம் மற்றும் அதன் அருகில் உள்ள விஜயாபதி கிராம நிர்வாக அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனவும் அந்த செய்தி குறிப்பு தெரிவிக்கிறது .


 இது வரையிலும் நானும் இந்த போராட்டத்தை மக்கள் அச்சத்தினால் விளைந்த போராட்டம் என்று தான் நினைத்து கொண்டு இருந்தேன் .  இப்பொழுதும் என கோபம் மக்கள் மீது அல்ல .  அவர்கள் பயமுறுத்த பட்டதால் போராட விழைகிறார்கள்.  என கோபம் முழுவதும் தேசத்தின் நலனுக்கு எதிரான சில புல்லுரிவிகள்  மீது தான் .


வெளிநாட்டில் இருந்து பண உதவி வருவதாக மத்திய அமைச்சர் குற்றம் சாட்டின போதும்  , நான் அவ்வளவாக அதை ரசிக்கவில்லை .  ஒவ்வொரு முறையும் மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடரப்போவதாக பேட்டி கொடுத்து வந்த திரு. உதயகுமார்  , இதுவரை எந்த வழக்கு தொடுக்காமல் இருக்கிறார் என்றால் அதுவும் ஒரு புதிர்  தானே ...

126  வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியார் அணை பாதுகாப்பானது  , பூகம்பத்தை தாங்கும் சக்தி படைத்தது  ( நானும் அப்படி தான் நம்புகிறேன் ) என்பதை நம்பும் அரசியவாதிகளும்  , தலைவர்களும்  , பல அடுக்கு நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்ட அணுமின் நிலையத்தை எதிர்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதும் ஒரு புதிர் தானே ....

ஒரு வாரத்திற்கு முன்பு  மாண்புமிக தமிழக மின்துறை அமைச்சர் பேசும் போது மார்ச் மாதம் கூடங்குளத்தில் இருந்து கிடைக்கும் 930 MWe தமிழக மின்சார பற்றாக்குறையை தீர்க்கும்  ( நன்றி : தினகரன் ) என்றாலும்  , மாண்புமிகு தமிழக முதல்வர் வேடிக்கை பார்ப்பதும்  , கடிதம் எழுதுவதும் ஒரு புதிர் தானே ...

 இப்படி பல புதிர்களை தாங்கி கூடங்குளம் நின்றாலும்  ,  இந்த இந்தியனின் விருப்பம் என்னவெனில்  அப்பாவி மக்களை பயமுறுத்தி  , அவர்களை மனித கேடயங்களாக நிறுத்தி கலவர பேச்சை பேசும் சதிகார கூட்டத்திற்கு எதிரான குரல் மாத்திரமல்ல ஒரு கூட்டம் இளையோர்களும் எழும்பவேண்டும் .


 நிறுத்தி நிதானமாக வாசியுங்கள் .   என கருத்தும் , எழுத்தும்  அப்பாவி மக்களுக்கு விரோதமானது அல்ல  , ஆட்டு தோலை போர்த்தி கொண்டு உலா வரும் சில புத்திசாலிகளுக்கு எதிரானது ....

10 comments:

  1. தவறு நண்பரே நீங்கள் ஒரு தவறான செய்தியை சொல்லி இருக்கீங்கள். கூடன் குளம் அணு மின்நிலையம் ஆபத்தானது என்பதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளது.

    விஞ்சான பார்வை: மன்னார் வளைகுடா கடலின் தரைபகுதியில் 70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்தனர். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலைகள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    ஏதாவது சிறிய நிலநடுக்கம் ஏற்ப்பட்டாலும் இந்த வண்டல் குவியல்கள் சரிந்து சுனாமி பேரலைகளை உருவாக்கும், அதேநேரம் அந்த மணல் திட்டுகளின் அடியில் இருக்கும் எரிமலையும் வெடிக்ககூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இந்திய அணுசக்திக் கழகம் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட உள்ள பேரிழிவு பற்றி ஆய்வு செய்ய இன்றளவும் மறுத்து வருகிறது. இதுதான் கூடங்குளம் அணுமின்நிலையம் குறித்த ஒரு தெளிவான விஞ்சான பார்வை.

    ReplyDelete
  2. அமெரிக்காவில் பாடம் எடுத்தார் என்பதால் அவர் மக்கள் போராட்டத்தை நடத்த கூடாது என்று அர்த்தம் அல்ல. கூடங்குளம் பகுதி மக்களே இந்த அணு உலையால் பாதிப்படைய போகிறவர்கள் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் அதை சுற்றி உள்ள மாவட்டத்து மக்களே. அந்த பகுதி மக்களுக்கு தெரியும் உதயகுமார் யார்? என்பது பற்றி அந்து மட்டும் இல்லாமல் அந்த போராட்டத்தை sdpi , மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் சேராத அமைப்புகள் எல்லாம் கடுமையாக எதிர்கின்றன. தமிழ் சிந்தனையாளர்கள், அறிவு ஜீவிகளும் இதை கடுமையாக எதிர்க்கின்றனர். ஆகையால் நீங்கள் ஏதோ உதயகுமார் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று கொண்டு இதை கிளப்பி விடுவதாக சொல்வது முற்றிலும் தவறு. வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றிருந்தால் நடக்காத விசயங்களை கூட நடக்காத விசயங்களை கூட நடந்ததாக ஜோடிக்கும் நமது "ரா" மற்றும் உளவுத்துறை அன்றே இவர்களை உள்ளே தள்ளி இருப்பார்கள்.

    ReplyDelete
  3. நீங்கள் ப்ளாக் தொடங்கி இருக்கும் நோக்கமே கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிப்பதற்காக என்று நினைக்கிறன். ஏன் என்றால் உங்கள் பதிவுகள் முழுவதும் கூடங்குளத்தை சுற்றியே நிற்கிறது. எதனால் நீங்கள் இப்படி எழுதிறீங்கள் ஹிந்துதுவாவையும், பார்பனர்களையும் தவிர்த்து ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்க்கும் ஒரு திட்டத்தை நீங்கள் ஆதரித்து எழுதும் நோக்கம் என்ன? முதலில் இந்த போலி தேசபத்தி முகமூடியை கழட்டுங்கள்.

    ReplyDelete
  4. போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!http://www.sinthikkavum.net/2011/11/2.html please go to see this link thank you.

    ReplyDelete
  5. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு!

    // இப்படி பல புதிர்களை தாங்கி கூடங்குளம் நின்றாலும் , இந்த இந்தியனின் விருப்பம் என்னவெனில் அப்பாவி மக்களை பயமுறுத்தி , அவர்களை மனித கேடயங்களாக நிறுத்தி கலவர பேச்சை பேசும் சதிகார கூட்டத்திற்கு எதிரான குரல் மாத்திரமல்ல ஒரு கூட்டம் இளையோர்களும் எழும்பவேண்டும் //

    நீங்கள் சொல்வது உண்மைதான். தமிழ் நாட்டு மக்களை பீதியடையச் செய்ய திட்டமிட்டு சிலர் குழுக்களாக இயங்கி வருகின்றனர்.இதில் நமது உள்ளூர் அரசியல்வாதிகளும் பலியாகி விட்டனர்.
    இதற்கு தமிழ் - தமிழன் என்ற முகமூடிகள்.

    ReplyDelete
  6. There is no sense in comparing Mullai periyar and Koondangulam.

    In Mullai periyar Dam safety is the matter. whereas in Koondangulam its about atomoic wastes which will not able to see with our eyes.

    ReplyDelete
  7. @ Puthiyatentral : நண்பருக்கு வணக்கம் .

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி . நான் கொஞ்சம் இந்த கட்டுரையில் வேகமாக எழுதியதற்கு காரணங்கள் உண்டு ...

    // கூடன் குளம் அணு மின்நிலையம் ஆபத்தானது என்பதற்கு பலவிதமான ஆதாரங்கள் உள்ளது.//
    ஆபத்து இல்லை என்பதற்க்கு எனது புகுஷிமாவும் கூடன்குலமும் ஒன்றா என்ற கட்டுரையை காணுங்கள் . http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html

    // ஆகையால் நீங்கள் ஏதோ உதயகுமார் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று கொண்டு இதை கிளப்பி விடுவதாக சொல்வது முற்றிலும் தவறு.//
    நான் கூட இது நாள் வரையில் இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசவில்லை . மடியில் கணம் இல்லை என்றால் , மக்கள் போராட்டம் என்றால் , மக்கள் முன்பாக கணக்கு காண்பிக்க என்ன தயக்கம் ...? மாத்திரமல்ல அவதூறாக பேசும் மத்திய அமைச்சர் மீது வழக்கு தொடுக்க என்ன தயக்கம் ...? மாத்திரமல்ல chrisen என்ற சமூக இயக்கம் ( Charittable Trust ) , அணு மின் நிலையத்திற்கு எதிராக கைப்பிரதி அடிக்க என்ன நோக்கம் ...? இப்படி பல கேள்விகள் என்னை இப்படி எழுத தூண்டுகிறது ...

    // நீங்கள் ப்ளாக் தொடங்கி இருக்கும் நோக்கமே கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிப்பதற்காக என்று நினைக்கிறன்//
    நீங்கள் கூறியது முழுவதும் உண்மை தான் . சில தவறான தகவல்கள் மக்களை சென்று அடைவதை தடுக்கவும் , வருங்கால இந்தியாவின் முக்கிய சக்தியான அணுசக்தியை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் , எனக்கு இதை விட்டால வேறு வழி தெரியவில்லை . ஆனாலும் தொடர்ந்து சமூக காரியங்களை எழுத யாசிதுள்ளேன் . உங்கள் ஆசிகளோடு ...

    தங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி

    ReplyDelete
  8. @ TTE : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி .

    நிச்சயம் நிலை மாறும் . காத்திருப்போம் .

    ReplyDelete
  9. @ Arul : Dear Friend , Thank you for your visit and your comment.

    I feel , you are not aware of Nuclear System and your are worrying about Nuclear Waste.

    Kindly see my article : http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html

    Thank You

    ReplyDelete
  10. இந்த அரசு நிறுவனத்தில் அலட்சிய போக்கை இங்கே கண்டுகளியுங்கள்
    http://www.youtube.com/watch?v=XAb9UjzdixQ

    கூடன்குளத்திலும் இவ்வாறு செய்யமாட்டார்கள் என்று என்ன உத்திரவாதம்...அனு என்றும் ஆபத்தே !

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி