Saturday, 15 September 2012

திரு. உதயகுமாருக்கு நக்சல் தொடர்பு உண்டா ? - ஒரு பகீர் ரிப்போர்ட்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மீனவ சமுதாயத்தை சேர்ந்த மக்கள் போராடி வருகிறதை நாம் நாளேடுகள் மற்றும் தொலைகாட்சிகள் மூலம் அறிந்து இருக்கிறோம் .  இந்த போராட்டத்தில் மக்களை பலவிதங்களிலும் பொய்யான தகவல்களை சொல்லி , அவர்களை குழப்பி , போராட்டத்தில் அவர்களை திரு. உதயகுமார் பயன்படுத்தியதை இந்த வலைப்பூவில் பல கட்டுரைகளில் நான் எழுதியுள்ளேன் .   சிறு குழந்தைகள் மனதில் கூட அரசுக்கு எதிரான எண்ணத்தை வித்திட்டு எதிர்கால சமுதாயத்தை வீணாக்கிய பெருமை இவரையே சேரும் .  ஆனால் பதிவுலக நண்பர்கள் பலர் இவரின் உண்மை முகம் அறியாமல் இவருக்கு ஆதரவு கொடுத்து வருவதை பார்த்து வேதனையுற்ற நான் " திரு. உதயகுமாருக்கு நக்சல் தொடர்பு உண்டா ?" என்ற இந்த கட்டுரையை எழுத முனைந்தேன் .


என்னுடைய நிலைப்பாட்டை ஒரு முறை வெளிப்படையாக சொல்லி கொள்ளுகிறேன் .  இந்த பதிவு அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல ,  கூடங்குளம் போரரட்டத்தில் எப்படி நக்சல் நிலைகள் தங்கள் வேலையை செய்தன என்பதயும் ,  திரு. உதயகுமாருக்கு அப்படி பட்டவர்களுடன் தொடர்பு உண்டா என்றும் ஆராய்ந்தே இந்த கட்டுரை எழுதப்படுகிறது .  நக்சல்கள் என்பவர்கள் மக்களை எப்பொழுதும் அரசுக்கு எதிராக திருப்பி விடுபவர்களே .  நியாயமான போராட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டாலும் , இந்த நக்சல்கள் ஒரு போதும் , மக்கள் அரசுக்கு செவி கொடுத்து விடகூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள் .  அதனால் இவர்கள் மக்களை தங்கள் வழிக்கு கொண்டு வருவதற்கு பாடல்கள் , நாடகங்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் நடத்துவார்கள் .  இந்த பாடல்களை , நாடகங்களை கூர்ந்து பார்க்கிற மக்கள் மத்தியில் வர்களை அறியாமலே அரசின் மேல் வெறுப்பும் ,  இறையாண்மை தத்துவத்தை மதியாமையும் ஏற்ப்படும் .  இதற்க்கு குற்றவாளிகள் மக்களா என்றால் இல்லை , அது அவர்களை தவறாக நடத்தும் நக்சல்களே.


இடிந்தகரை மக்கள் தான் போராடுகிறார்கள் என்ற எண்ணம் உலகம் முழுவதும் இருக்க , இடிந்தகரை என்ற கிராமத்திற்கும் , கூடங்குளம் என்ற கிராமத்திற்கும் சம்பந்தம் இல்லாத சில  இயக்கங்கள் இந்த போராட்டத்தை எண்ணெய் ஊற்றி தூண்டி விட்டன .  அப்படி பட்ட சில இயக்கங்களின் செயல்பாடுகளை நான் கீழே விவரிக்கிறேன்


மகஇக என்ற இயக்கத்தின் புரட்சி போராட்டம் என்ற தலைப்பில் கீழ் உள்ள இந்த வீடியோவை பாருங்கள் . இதனுடைய 0 . 38 முதல் 0 . 59 வது நிமிடம் வரை  இந்த video வில் உள்ள ஒருவர் பேசுகிற காரியத்தை நான் அப்படியே எழுதுகிறேன்

" அந்த இடிந்தகரை கூடங்குளம் மக்களுடைய போராட்டம் என்கிறது அது வீச காத்திருக்கிற ஒரு புயல் மாதிரி அது . இந்த 180 நாட்களாக அந்த இடிந்தகரையில் இந்த புயல் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது அல்லது தருணம் பார்த்து கொண்டிருக்கிறது .  அந்த இடிந்தகரை புயல் ஒரு நாள் கரையை கடக்கும் . அப்படி கரையை கடக்கும் தினத்திலே , கூடங்குளம் அணு உலை வேரோடு பிடுங்கி வீசி எறியப்படும் தோழர்களே " 

என்று தொடர்ந்து பேசுகிறார் .  Video இணைப்பு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது .  அப்படியானால் ஒரு பெரிய வன்முறைக்கு அப்பொழுதே அடித்தளம் போடப்பட்டு இருக்கிறது என்பது விளங்குகிறது அல்லவா !இடிந்தகரையில் நடைபெற்ற உண்ணாவிரத பந்தலில் முரசு கலை இயக்கம் என்ற இயக்கம் நடத்திய ஒரு பாடலின் Video பதிவை நான் கீழே இணைத்துள்ளேன் .  அந்த பாடலின் வரிகள் இப்படி ஆரம்பிக்கிறது

" அழுதால் வராது நீதி
ஆவேசம் கொண்டு வா நீ "


இந்த பாடலின் இடையில் இப்படி ஒரு வரி வருகிறது

" யுத்தம் என்று வந்த போது
இரத்தம் சிந்த வேண்டும் " 
  என்று

இந்த பாடலின் வரிகளும் , இதை பாடுகிறவர்களின் உணர்சிகளும் ,  அந்த மேளதாளமும் மக்களை காந்திய வழியிலா நடத்தி இருக்கும் ?


இடிந்தகரை மற்றும் கூடங்குளம் மக்களின் சிறு பிள்ளைகளையும் இந்த கூட்டம் விட்டு வைக்கவில்லை.  இதை குறித்து நான் பல பதிவுகளில் எழுதி உள்ளேன் .  அணுமின்  நிலையத்திற்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் அவ்வ பொழுது அரசுக்கு எதிராகவும் இந்த சிறு பிள்ளைகளுக்கு சொல்லி வந்து இருக்கிறார்கள் .  கீழே ஒரு video இணைப்பு  இணைத்திருக்கிறேன் .

பள்ளிக்கு போய் பாடம் படித்து , நாட்டின் தூண்களாய் விளங்க வேண்டிய இந்த பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்கப்படும் கோசத்தை பாருங்கள் .  அதில் அரசுக்கு எதிராக " மானம் கெட்ட மத்திய அரசே"  என்று கோசம் சொல்லி கொடுக்கப்படுகிறது .   இது வளரும் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு பாய்க்கும் செயல் அல்லவா ?  நாளைக்கு எப்படி இந்த குழந்தைகள் அரசியல் அமைப்பு சட்டத்தையும் ,  இந்திய இறையாண்மையையும் மதிக்கும் ?

 சரி ...இப்படி பல Video பதிவுகளை என்னால் இணைக்க முடியும் .   இப்பொழுது நீங்கள் கேட்கலாம் சரி . திரு. உதயகுமார் நக்சல் கூட்டத்தில் தொடர்பு உள்ளவரா என்பதை குறித்து சொல்லவே இல்லையே என்று .

அதையும் நான் கூறி விடுகிறேன் .  தமிழ் தேச பொதுவுடைமை கட்சி என்று ஓன்று இருக்கிறது .  இந்த கட்டுரையை வாசிக்கும் அநேகர் அதன் பெயரை கூட கேள்விப்பட்டு இருக்க முடியாது .  அந்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சியின் முக்கியமான கொள்கை என்ன தெரியுமா ?

" தேர்தல் அரசியலை புறந்தள்ளி , மக்கள் எழுச்சி பாதையின் மூலம் இந்தியத்தின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவித்து இறையாண்மையுள்ள தமிழ்  தேசிய குடியரசை அமைப்பது "

இவர்கள் அணுமின் நிலையத்தை எதிர்த்தும் ,  திரு . உதயகுமாருக்கு ஆதரவாகவும் தங்கள் முக நூலிலே எழுதி வருகிறார்கள் .  இந்திய இறையாண்மைக்கு எதிரான கொள்கை உடைய இவர்கள் திரு. உதயகுமாரை ஆதரிப்பது ஏன் ?  அவர்களுடைய முக நூலில் திரு,. உதயகுமார் நண்பராக உள்ளார் .  அந்த Screen Shot யை கீழே நான் இணைத்துள்ளேன்

 கூடங்குளம் செய்திகள் என்ற பெயரில் பொய்யான சில செய்திகளை கூறி மக்களை ஏராளமாய் திசை திருப்பும் ஒரு Web Page இருக்கிறது .  அதில் இன்றைக்கு வீர தமிழன் என்பவர் செய்த பதிவை Screen Shot செய்து இணைத்துள்ளேன் .  காணுங்கள் .   தமிழ் , தமிழன் என்ற பெயரை சொல்லியே தமிழுக்கும் , தமிழனுக்கும் ஏதும் செய்யாமல் , அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் வஞ்சகம் இது


தமிழ்நாட்டில் நக்சல்கள் இல்லை என்று நமது அரசும் , காவல் துறையும் சொல்லி வருவது மிகவும் மகிழ்ச்சியான காரியம் தான் .  ஆனாலும் அரசுக்கு எதிரான கருத்துகள் அப்பாவி மக்களிடையே வஞ்சகர்கள் பரப்பி வருவதை அரசுகள் கண்டு கொள்ளாமல் விட்டால் , நம்மால் நமது நாட்டின் இறையாண்மையையும் ,  ஒற்றுமையையும் , வருங்கால சந்ததியையும் காப்பாற்றவே முடியாத சூழல் ஏற்ப்படலாம்.

மறுபடியும் சொல்லுகிறேன் .  எனது இந்த பதிவு அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல . எனவே அப்பாவி மக்களுக்கு எதிராக நீ எழுதி விட்டாய் என யாரும் தயை கூர்ந்து கருத்து எழுத வேண்டாம் .  எனது பதிவுகள் உணர்வுகளை தூண்டி மக்களின் மூளையை மழுங்க வைக்கும் , தீய சக்திகளுக்கு எதிரானதே ..

ஜெய் ஹிந்த்

12 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. அணு உலை நல்லது ..........அது திறக்கப்பட்டால் பிரச்சனைகள் கண்டிப்பாக தீரும் ,

  ஆனால் நம் பிரச்சனைகள் தீராது

  முன்னொரு காலத்தில் தமிழ் இனம் ஒன்று இருந்ததாம்

  அவர்கள்தாம் அணுவால் அழிந்த அறிவிலிகள்............ என உலகு சொல்லும்

  இந்த உலை திறந்தால் மின்சாரம் நிச்சயம் இலங்கைக்கு செல்லும் ,

  நிச்சயம் கேரளாவுக்கு செல்லும் , ஒரு நாற்பது ஆண்டுகள் நாம் வாழ

  நம் சந்ததிகளை அழிக்க துணை போக மாட்டோம் என்பவர்கள் நக்சல்கள் என்றால்

  நாங்கள் நக்சல்கள் தாம் ..........................

  ReplyDelete
 3. ஆமாண்ணே... ம.க.இ.க, தமிழ் தேச பொதுவுடைமை கட்சி ஆட்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள்... அவர்கள் இந்த தேசத்தை சேர்ந்தவர்கள் அல்ல. வேறு யாரும் போராடக்கூடாது. போராடினால் உனக்கு என்ன அங்கே வேலை என்ற ஆதிக்க சக்திகளின் கேள்வியைக் கேட்போம். அவர்கள் கையில் பாருங்கள்... தாரை, தப்பட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். எவ்வளவு தைரியம் இருந்தா இதைப்போன்ற ஆயுந்தங்களை எடுத்து வந்து இருப்பார்கள்?

  //" அந்த இடிந்தகரை கூடங்குளம் மக்களுடைய போராட்டம் என்கிறது அது வீச காத்திருக்கிற ஒரு புயல் மாதிரி அது . இந்த 180 நாட்களாக அந்த இடிந்தகரையில் இந்த புயல் ஓய்வெடுத்து கொண்டிருக்கிறது அல்லது தருணம் பார்த்து கொண்டிருக்கிறது . அந்த இடிந்தகரை புயல் ஒரு நாள் கரையை கடக்கும் . அப்படி கரையை கடக்கும் தினத்திலே , கூடங்குளம் அணு உலை வேரோடு பிடுங்கி வீசி எறியப்படும் தோழர்களே "//

  அப்படின்னு ஒருத்தர் சொல்றாராம்.

  அது சரி, நாராயணசாமி என்ன சொன்னார்? விமானம் வந்து மோதினாலும் அணு உலை உடையாது என்றுதானே சொன்னார்? தாரை தப்பட்டை போன்ற பயங்கரமான ஆயுதங்கள் தாக்கினால் அணு உலை நொறுங்கிவிடும்ன்னு சொல்லலையே... அந்தக் குறையைப் போக்கத்தான் நீங்க இருக்கீங்களே... நீங்க கலக்குங்க சித்தப்பு...

  இந்திய சுதந்திரப் போராட்டம் நடந்தப்போ இதை மாதிரிதான் கலைஞர்கள் கிராமம் கிராமமாய் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டினார்கள். இப்பொழுது என்ன வெள்ளைக்காரன் ஆட்சியா நடக்கிறது? இப்படி எல்லாம் போராட்டம் நடத்த? இன்னும் நாம முழுசா வெள்ளைக்காரனுக்கு தூக்கி கொடுத்துவிடவில்லயே.. அதுக்கு அப்புறம் தானே இந்த மாதிரி போராட்டம் எல்லாம் நடத்தவேண்டும்... மதிகெட்ட மங்குணிகள்... உங்கள் அறிவு, நேர்மை, தேசப்பற்று இதெல்லாம் இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

  எல்லாம் முடிஞ்ச உடன்தான் போராட்டம் நடத்துனும்... அதுக்கு முன்னாடியே சுதாரித்துக்கொண்டு போராட்டம் நடத்தினால் அவன் தேசத்துரகிதான்... தொடரட்டும் உங்கள் அரும் பெரும் பணி...

  ReplyDelete
 4. "மானம் கேட்ட மத்திய அரசே" என்று கோசம் போடுகிறார்கள் என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆமாம் அண்ணே, இவர்கள் எப்படி அவ்வாறு சொல்லலாம் ஒரு நேர்மைமிக்க மத்திய அரசை பார்த்து? நம்ம நீதி, நேர்மை, ஈரம் மிக்க மத்திய அரசு சமீபத்தில்தான் 35 லட்சம் ரூபாய் செலவில் திட்ட அலுவலகத்தை சேர்ந்தவர்கள் (அதாவது, இவர்கள் தான் எப்படி எல்லாம் நம்ம நாட்டு சொத்தை வெளிநாட்டு காரனுக்கு விக்கலாம்னு திட்டம் போடுரவனுங்க), ஆய் போறதுக்கு கக்கூஸ் கட்டி முடித்து இருக்கிறது... பசியிலும், தண்ணீர் இல்லாமலும், தகுந்த சிகிச்சை வசதிகள் இல்லாமலும் வாடும் மக்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தராமல், ஆய் போறதுக்கு 35 லட்சம் செலவழித்த மத்திய அரசை "மானம் கேட்ட மத்திய அரசே" என்று எப்படி கேட்கலாம்? இவர்களால் 35 லட்ச ரூபாய் செல்வி கக்கூஸ் கட்டி அதில் ஆய் போக முடியுமா? என்ன தைரியம் பாருங்கள்?

  மேற்கு வங்கத்தில் வேண்டாம் என்று சொல்லி, கர்நாடகத்தில் வேண்டாம் என்று சொல்லி, கேரளாவில் வேண்டாம் என்று சொல்லி, இருக்கும் இழிச்சாவாயங்கள் தமிழர்கள்தாம், அவர்களிடம்தாம் ஒற்றுமை இல்லை... அதனால் அங்கு ஆரம்பிப்போம் என்று சொல்லி இங்கு ஆரம்பித்து இருக்கும் மத்திய அரசின் புத்திசாலித்தனம் என்ன? இவர்களின் அறிவு என்ன? தமிழகம் வேண்டாம் என்று சொன்னால் இருக்கவே இருக்கிறது "தேசத்துரோக குற்ற்றச்சாட்டு".. ஆனால் இதனை முதலில் வேண்டாம் என்று சொன்ன மேற்குவங்கம், கர்நாடகா, கேரளம் இவர்கள் தேசத்துரோகிகள் இல்லையா என்று கேட்டால்... அவர்கள் ஒற்றுமை உணர்வு உள்ளவர்கள்... அங்கே இப்படி மக்கள் விரோதப்போக்குடன் நடக்கும் மனிதர்களை சுத்தமாய் ஒதுக்கிவைத்து விடுவார்கள்... அவர்கள்தாம் நம்ம வேலை செல்லுபடி ஆகாது... ஆனால் தமிழினம் அப்படி அல்ல.. ஒற்றுமை கிடையாது...அவர்களுக்குளே காட்டிக்குடுக்கும் ஈனப்பிறவிகள் அதிகம்...ஆகையால் அங்கே ஆரம்பிப்போம் என்று புத்திசாலித்தனமாய் யோசித்த மத்தி அரசை "மானம் கேட்ட மத்திய அரசு" என்று சொல்வது மிகப்பெரிய குற்றம் அண்ணே...

  ReplyDelete
 5. அண்ணே.. ஆபத்து... ஆபத்து... ஜப்பான் நாட்டுக்காரன் இன்னும் 30௦ வருசத்துல எல்லா அணு உலைகளையும் மூடப்போறானாம். அதை மேய்ப்பது ரொம்ப கஷ்டமா இருக்காம், வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஒரு மிகப்பெரிய கொள்கை முடிவு எடுத்து அறிவிச்சு இருக்காங்களாம்..

  அதைப்பத்தி ஒரு பதிவு இதோ:
  http://naatkurippugal.wordpress.com/2012/09/16/japans30yearplan/

  ஏண்ணே... ஜப்பான்காரனுக்கும் , உதயகுமாருக்கும்னு தொடர்பு இருக்குன்னு நாம ஏன் ஒரு கதை எழுதக்கூடாது? உதயகுமார் இந்தியாவை அழிக்கும் நோக்கில்தான் கூடங்குளத்து அப்பாவி மக்களை வசியப்படுத்தியது போன்று, ஜப்பான் அரசையும் வசியப்படுத்திட்டாருன்னு அண்ணன் அணு விஞ்ஞானி நாராயணசாமியை விட்டு ஒரு பரபரப்பான அறிக்கைவிட்டோம்னா சூப்பரா இருக்காது? நல்ல யோசிங்கன்னே... அருமையான வாய்ப்பு இது.

  ReplyDelete
 6. ஜப்பான் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள அ​னைத்து அணுஉ​லைக​ளையும் மூடிவிட​வேண்டும் என புகுசிமாவில் நடந்த ​கோரவிபத்திற்கு பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ​கொள்​கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  வெள்ளியன்று ​வெளியிடப்பட்ட ​கொள்​கை ஆவணத்தில் “நடந்த ​மோசமான விபத்தின் எதார்த்தத்திலிருந்தும், அவ்விபத்திலிருந்து கற்றுக் ​கொண்ட பாடத்தின் அடிப்ப​டையிலும் ​தேசத்தின் ஆற்றல் மூ​லோபாயத்​தை அதன் ஆரம்பத்திலிருந்து மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டியிருக்கிறது”. “இப்புதிய ​மூ​லோபாயத்தின் ஒரு முக்கியமான கருத்து என்பது அணுசக்தி​யை சாராத சமூகத்​தை அ​டைவ​தே” இந்த முடிவு கடந்த இரண்டு மாதங்களில் நாடு முழுவதுமுள்ள மக்களிடம் நடத்திய கலந்தா​​லோச​னைகள் மற்றும் வரலாறு காணாத அணுஉ​லைக்​கெதிரான ​போராட்டங்களுக்கு பிற​கே உருவாகியுள்ளது. உள்ளூர் ஊடகங்களின் ​செய்திப்படி அ​மைச்சர​வை ஏற்கன​வே இந்த பரிந்து​ரைக​ளை ஏற்றுக் ​கொண்டுவிட்டது, மு​றைப்படியான அறிவிப்புகள் ​வெகுவி​ரைவில் ​வெளியிடப்படும்.


  இந்த ஜப்பான்காரனுக்கு நேரங்காலமே தெரியாது. இப்பதான் இறையாண்மை, ஜெய் ஹிந்த், பரத் பந்த், பாரத் மாதா கீ ஜே ன்னு அணு உலை ஆபத்தை பத்தி தெரியாத கூட்டத்தை இந்தியா வல்லரசு ஆக போகுதுன்னு நம்ப வைத்து கொண்டிருக்கும்போது நம்மள காமெடி பீஸ் ஆக்கிட்டானே .

  ReplyDelete
  Replies
  1. திரு. அனானி நண்பர் அவர்களுக்கு வணக்கம் ,

   இந்த குறிப்பிட்ட இடுகையில் எந்த கருத்துரைக்கும் பதில் அளிக்க கூடாது என்ற முடிவில் இருந்தேன் . ஏன் எனில் இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லாத கேள்விகளும் ( திரும்ப திரும்ப ஒரே கேள்விகள் ) அதற்க்கு பதில்களும் அளிக்கப்படும் போது , இந்த இடுகையின் உண்மை கொஞ்சம் மறைக்கப்படும் என்ற எண்ணத்தில் தான் அப்படி இருந்தேன் . ஆனால் நீங்கள் புதியதாக , மிக ஆரோக்கியமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளதால் , இதற்க்கு நான் பதில் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றே உணர்கிறேன் .

   //ஜப்பான் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் ஜப்பானில் உள்ள அ​னைத்து அணுஉ​லைக​ளையும் மூடிவிட​வேண்டும் என புகுசிமாவில் நடந்த ​கோரவிபத்திற்கு பிறகு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ​கொள்​கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.//
   நானும் நாளேடுகள் மூலம் இந்த செய்தியை படித்தேன் . ஒரு காரியம் எனக்கு விளங்கவில்லை . ஜப்பான் அணுசக்தியின் கொடுமைகளை அறிந்த படியினால் 30 ஆண்டுகள் கழித்து அதன் அணு உலைகளை மூடுமாம் . என்ன கொடுமை ஐயா இது . உண்மையிலே அணுமின் நிலையங்கள் தீமையானது என்றால் நாளைக்கே அல்லது இந்த வருடத்திலேயே மூட வேண்டியது தானே . அது என்ன 30 வருடங்கள் கழித்து ...? அப்படியானால் இனிவரும் 30 வருடங்களுக்கு நாங்கள் அணுமின் நிலையங்களை இயக்குவோம் ஆனால் எந்த விபத்தும் நேராது என்ற ஜப்பான் மறைமுகமாக அறிவிக்கிறது என்று தானே அர்த்தம் . நீங்கள் சொன்னபடி 2 மாதங்களாக மக்களிடம் கருத்து எடுத்த ஜப்பான் ஏன் இப்பொழுது நிறைவேற்றாமல் 30 வருடங்கள் கழித்து நிறைவேற்றவேண்டும் ?

   ஜப்பான் என்னை காமெடி பீஸ் ஆக்கவில்லை ஆனால் யார் காமெடி பீஸ் ஆனது என்பது இப்பொழுது தங்களுக்கு விளங்கி இருக்கும் . நன்றி

   Delete
 7. பாஸு... என்ன பாஸு, அவருதான் காமடி பீசுன்னு சொன்னாருன்னா, அதுக்கு உங்க அறிவார்ந்த தத்துவத்தையெல்லாம் வீணாக்கிக்கிட்டு இருக்கீங்களே...

  //அப்படியானால் இனிவரும் 30 வருடங்களுக்கு நாங்கள் அணுமின் நிலையங்களை இயக்குவோம் ஆனால் எந்த விபத்தும் நேராது என்ற ஜப்பான் மறைமுகமாக அறிவிக்கிறது என்று தானே அர்த்தம் . நீங்கள் சொன்னபடி 2 மாதங்களாக மக்களிடம் கருத்து எடுத்த ஜப்பான் ஏன் இப்பொழுது நிறைவேற்றாமல் 30 வருடங்கள் கழித்து நிறைவேற்றவேண்டும் ?//

  சூப்பர் கேள்விண்ணே... ஜப்பான்காரன் இதைப்படிச்சா அவமானத்துல செத்தே போயிருவான் .... அப்படி ஒரு கேள்வி.

  ஆனா பாருங்கண்ணே... நீங்க நினைக்கிற மாதிரி அணு உலை வேண்டாம் என்று சொன்ன உடன், பூட்டு போட்டு பூட்டிச் செல்ல, அது ஒண்ணும் "வீரபாஹு பேக்கரி" கடை இல்லண்ணே... அதை மூடுவதற்கு குறைந்தபட்சம் 30௦ ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும். ஜப்பான் அரசாங்கத்தை நீங்க இங்க இருக்கு அரசாங்கம் மாதிரி நினைச்சிடீங்க....

  நாம எப்படி ஐந்தாண்டுத்திட்டம் போடுறோமோ, அந்தத் திட்டங்கள் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படணும்னு கால அளவு வச்சிருக்கமோ... அதே மாதிரி ஜப்பானும், அடுத்த 30௦ ஆண்டுகளில் மக்கள் நலன் கருதி, இவை அனைத்தும் மூடப்படும் என்று சொல்லி இருக்காங்க. அங்க மக்கள் நலன்தான் முக்கியம். அறிக்கையில் மிகத்தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்....


  “நடந்த ​மோசமான விபத்தின் எதார்த்தத்திலிருந்தும், அவ்விபத்திலிருந்து கற்றுக் ​கொண்ட பாடத்தின் அடிப்ப​டையிலும் ​தேசத்தின் ஆற்றல் மூலோபாயத்​தை அதன் ஆரம்பத்திலிருந்து மறுபரிசீல​னை ​செய்ய ​வேண்டியிருக்கிறது. இப்புதிய ​மூ​லோபாயத்தின் ஒரு முக்கியமான கருத்து என்பது அணுசக்தி​யை சாராத சமூகத்​தை அ​டைவ​தே”

  இதுக்குமேல என்ன தெளிவா வேணும்னு சொல்றீங்க... "அணு சக்தி சாராத சமூகத்தை அடைவதே..."

  நம்ம அரசியல் விஞ்ஞானி நாராயணசாமி போன்றோ, அணு, பொருளாதார, சமூக, வல்லரசு விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றோ, அணுமின் கம்பனிகளுக்கு ஆதரவாக சிந்திக்க, பரப்புரை செய்ய அங்கு ஆட்கள் கிடையாது.

  வாங்கண்ணே, மனித சமூகத்தை வேரறுக்க முடியும் என்றால் இன்றைய தேதியில் அது அணு உலை ஒன்றால்தான் முடியும. ஆக நாம எல்லோரும் ஒன்று திரண்டு அங்கு போய் "உதயகுமார் இங்கு வந்தாரா... ஏதாவது தாரை தப்பட்டை போன்ற கொடிய ஆயுதங்கள் கொண்டு வந்து அணு உலையை மிரட்டினாரா அப்படின்னு விசாரிச்சு, "ஜப்பானின் இந்த முடிவுக்கு காரணம் உதயகுமாரின் சதிதான்" அப்படின்னு சொல்லி தேசத்துரோக வழக்கு மட்டும் இல்ல... உலகத் துரோக வழக்கு ஒண்ணையும் அவர் மேல போட்டுருவோம்.

  என்னன்னே நான் சொல்றது...

  ReplyDelete
 8. இப்பவாவது ஒன்ன புரிஞ்சுக்கோங்க... நாங்க ஒண்ணும் கூடங்குளத்துக்கு மட்டும் எதிரானவர்கள் கிடையாது... அணு உலைகள் அனைத்துக்கும் எதிரானவர்கள். உலகில் எங்கு அணு உலைகள் அமைக்கப் பட்டாலும், அது மனித குலத்துக்கு கட்டப்படும் சமாதி என்பதை புரிந்துவைத்துள்ளவர்கள்... அணுமின் கம்பனிகளுக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டித்தர பிரச்சாரம் செய்யும் இழிந்த விஞ்ஞானிகள் இல்லை நாம். அன்பை போதித்தவர்கள். நாட்டுக்காக போராடும்பொழுது இப்படித்தான் "தீவிரவாதி, வன்முறையாளன், போக்கிரி" போன்ற பட்டங்கள் நம்மைத்தேடி வரும்.

  நமது நோக்கம் அரசாங்கத்திடம் நல்ல பெயர் எடுப்பது அன்று. நல்ல பெயர் எடுப்பது விஞ்ஞானிகளின், அரசியல் தரகர்களின் நோக்கமாகும்.

  நமது நோக்கம் மக்களை, சமூகத்தை பாதுகாப்பது. அன்பார்ந்த உலகத்தை உருவாக்கி பேணிக்காப்பது மட்டுமே...

  ReplyDelete
  Replies
  1. மிக சரியான வாதம்!

   Delete
 9. இன்னைக்கு உதயகுமார் செய்வது தேசத்துரோகம் என்கிறீர்களே... ஒன்னு தெரியுமா, மகாத்மா காந்தி மீதும் அன்றைய ஆட்சியாளர்களால் தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
  பிரிட்டிஷ் அரசை விமர்சித்து எழுதியதற்காக 1922, மார்ச் 23 ஆம் தேதி மகாத்மா மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது.
  அதற்கு மகாத்மா எழுதிய பதில் என்ன தெரியுமா? "தேசப்பற்று என்பதை சட்டத்தின் மூலம் உருவாக்கவோ, முறைப்படுத்தவோ முடியாது. தேசத்துரோகம் என்ற இந்த சட்டப்பிரிவு [124 (A)] என்பது கருத்துச் அடக்கவும் ஒடுக்கவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டப் பிரிவுகளில் முதன்மையானது"

  இதனை இங்கே உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

  இதனால் தெரியவரும் சேதி என்னவென்றால், ஆட்சியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தேசத்துரோக குற்றச்சாட்டும், பிடித்தால் அன்று "சார் பட்டம், இன்று விஞ்ஞானி, தேசப்பற்றாளர் பட்டமும் வழங்கி சிறப்பிக்கப்படும்.

  ReplyDelete

 10. i have the satisfaction of reading a nice joke after a long time

  keep it up

  ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி