மின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனிமனித வருமானம் வேலைவாய்ப்பின் மூலம் பெறப்படுகிறது. வேலைவாய்ப்புகள் அநேக தொழிற்சாலைகள் மூலமாக பெறப்படுகிறது. ஆனால் தொழிற்சாலைகள் பெருகவேண்டுமானால் அதற்கு மூலப் பொருளாக மின்சாரம் தேவைப்படுகிறது.
1 . அனல் மின் நிலையங்கள்
2 . நீர் மின்நிலையங்கள்
3 . காற்றாலைகள் .
4 . சூரிய ஒளி மின் ஆலைகள்
5 . அணுமின் நிலையங்கள் .
இப்படி இத்தனை வழிகள் இருக்கும் போது அணுமின்சாரம் தற்பொழுது நாட்டிற்கு தேவையா என்பது தான் அநேகம் பேரின் வாதம். குழப்பம் என்று கூட சொல்லலாம் . அதனால் இந்த வழிகளை பற்றி கொஞ்சம் எழுத வேண்டியது அவசியம் என கண்ட படியால் இந்த பதிவை எழுத் துணிந்தேன் . நண்பர்கள் உங்களின் ஆரோக்கியமான கருத்துகளை எழுதுவதால் நம் கருத்துகள் மேம்படும்.
1 . அனல் மின் நிலையங்கள் : நமது நாட்டின் அனல் மின் நிலையங்கள் தேசிய அனல் மின் நிர்வாகத்தால் அருவக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 30 , 2011 ன் படி 1 ,15 , 649 . 48 MWe மின்சாரம் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது . இது கிட்டத்தட்ட தேசிய மின் தேவையில் 66 சதவீதமாகும்.
2011 - 2012 - வருடத்தில் இந்தியாவின் மொத்த நிலக்கரி தேவை 696 மில்லியன் டன் . ஆனால் உள்நாட்டில் இருந்து 554 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீதி 114 மில்லியன் டன் நிலக்கரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம் என்பது தான் உண்மை ( நன்றி : http://www.goldenocean.no/?menu=2&id=175 )
இதனால் இந்தியாவில் உள்ள அனல்மின் நிலையங்களில் தேவையான அளவு மின்னுற்பத்தி செய்யமுடியவில்லை எனபது தான் திண்ணம். இந்த பதிவு எழுதப்படும் போது அனல் மின் நிலையங்களில் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்கு தான் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று நிலக்கரித்துறை அமைச்சரின் கூற்றை நினைத்து பார்க்கிறேன்.
இந்நிலையில் 2040 வருடத்திற்குள் இந்தியாவின் மொத்த நிலக்கரியும் தீர்ந்துவிடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது . தகவலுக்கு http://www.business-standard.com/india/storypage.php?autono=333749
பெருகி வரும் மின் தேவைகள் ஒரு பக்கம் இருக்க , எப்படி வருங்காலத்தில் அனல் மின் நிலையங்கள் எதிர்பார்த்த மின்சாரத்தை கொடுக்க முடியும் என்பது ஒரு பெரிய கேள்வி தான். 5 . 78 % சதவீத CO2 ( மொத்த உலகத்தின் ) இந்தியாவில் இருந்து வெளியிடப்படுகிறது . ( தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_carbon_dioxide_emissions ) அதனால் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் நச்சு புகையை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயத்திலும் நாம் உள்ளோம் என்பது மறுக்க இயலாது.
2 . நீர் மின் நிலையங்கள் : இன்யாவில் தற்பொழுது நீர் மின் நிலையங்களின் உருவாக்கு திறன் கிட்டத்தட்ட 30,920 Mwe . நீர் மின்சாரங்கள் இருக்கும் இடங்களை கீழே பார்க்கலாம்
(நன்றி : http://www.eai.in/ref/ae/hyd/hyd.html)
ஆனால் இந்த நீர்மின் நிலையங்களிலும் பெரும்பாலானவற்றில் மின்சாரம் சரிவர தயாரிக்க முடியவில்லை என்பது தான் உண்மை . ஏன் என்றால் இவையும் இயற்கையை சார்ந்து ( மழையை ) இருக்கிறது. உலகின் அதிக மலை பொழியும் பிரதேசம் என்று கருதப்படும் சிரபுஞ்சியில் கடந்த 5 வருடங்களாக மழை இல்லை என்றால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா .. தற்பொழுது 26 சதவீத மின்சாரம் நீர் மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கிறது.
3 . காற்றாலைகள் : இது ஒரு தூய்மையான் மின் சக்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 31 மார்ச் 2011 கணக்கின் படி இந்தியாவின் மொத்த காற்றாலைகளின் உற்பத்தி திறன் 14550 Mwe . அதிலும் தமிழ்நாடு அதிகபட்சமாக 6007 Mwe உற்பத்தி திறனை கொண்டுள்ளது . இன்னும் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு கொண்டே இருக்கின்றன.
( நன்றி : http://en.wikipedia.org/wiki/Wind_power_in_India ))ஆனால் ஏன் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு வருகிறது மே , ஜூன் , ஜூலை , ஆகஸ்ட் , செப்டம்பர் மாதங்களில் மாத்திரம் WIND TURBINE சுழற்றுவதற்கு தேவையான காற்று வேகம் உள்ளது . அதாவது 11 KM /H ல் இருந்து 19 KM / H வரை உள்ளது . மற்று தருணங்களில் மிகவும் குறைவாக காற்று வீசுவதால் தேவையான் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை . ( தகவலுக்கு : http://rangareddy.nic.in/profile-pdfs/91.pdf ) . இதற்க்கு அரசை குறை சொல்லுவதிலும் எந்த லாபமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
4 . சூரிய ஒளி மின் ஆலைகள் : சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அனைத்து நாடுகளும் யோசிக்க தான் செய்கிறது . ஏன் எனில் , இதில் தயாரிக்கப்படும் மின்சாரம் பசுமையானது . இதற்க்கு எந்த மூலப் பொருளும் தேவை இல்லை. மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்கு தேவையான மின் கம்பங்கள் இல்லாத போது அந்த வீடுகளுக்கு சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரம் அற்புதமானது.
ஆனால் சில பிரதிகூலங்களும் உள்ளன. இதனை நிறுவுவதற்கு ஆகும் செலவு அதிகம். உலகின் மாசு காரணமாகவும் சூரியன் இல்லாத தருணங்களிலும் மின்சார உற்பத்தி குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுகிற அளவுக்கு தொழில்நுட்பம் வளரவில்லை. இந்தியாயவின் பெரிய சோலார் மின் உற்பத்தி 40 Mwe ( Adani Bitta Solar Plant,குஜராத் ) என்பது ஆச்சரியம் தானே.
5 . அணு மின் நிலையங்கள் : இப்பொழுது தான் இந்தியா இந்த துறையில் காலடி எடுத்து வைத்துள்ளது என்று நாம் நினைக்க கூடாது. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்திய அணுசக்தி தந்தை என்று அழைக்கப்படுகிற ஹோமி பாபா அவர்களின் கனவுகளோடு அணு சக்தி திட்டங்கள் 1956 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 20 அணு மின் நிலையங்கள் மூலம் 4780 Mwe மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவின் அணுமின்சாரத்தின் அளவு வெறும் 3 சதவீதம் என்பது தான் அநேகரின் கேள்விக்கு காரணம். ஏன் இந்த அணு மின்சாரம் நமக்கு தேவை.? இது ஒரு நியாயமான கேள்வி என்பதில் எனக்கு மறுப்பு ஏதும் இல்லை. மேற்குறிப்பட்ட எல்லா மின்சார வழிகளும் நிரந்தரமான ஒரு மின்சாரத்தை வகை செய்யாத போது அணு மின் நிலையங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் , எல்லா காலங்களிலும் மின்சாரத்தை கொடுக்கும் என்ற நிலை நாம் அதை தேட செய்கிறது.
உலகின் பொருளாதாரத்தில் உயர்ந்த நாடுகள் எல்லாம் அணு மின்சாரத்தை பெரும் அளவில் பயன்படுத்துகிறது என்பது தான் உண்மை . அமெரிக்காவில் 104 அணு உலைகள் மூலம் 101119 Mwe மின்சாரமும் , பிரான்ஸ் 63473 Mwe மின்சாரமும் , ஜப்பான் 48900 Mwe மின்சாரமும் அணுமின் நிலையங்களில் இருந்து பெறுகின்றன. அப்படியெனில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று தான் அர்த்தம்.
இந்தியா தன்னுடைய அணுமின்சார தேவையை 2050 ஆவது வருடத்தில் மொத்த மின்தேவையில் 50 சதவீதமாக உயர்த்த திட்டம் கொண்டுள்ளது . அதற்காக மக்களுக்கு தீங்கு விளைவிக்கலாமா என்பது ஏன் பதிவுலக நண்பர்கள் பலரின் கேள்வி. நான் மறுபடியும் உங்களுக்கு சொல்லுகிறேன் " முதாலவது பாதுகாப்பு , பிறகு உற்பத்தி " என்ற கொள்கையை தான் இந்திய அணு சக்தி துறை பின்பற்று வருகிறது. அதனால் தான் கடந்த 50 வருடங்களாக அணு மின் திட்டங்களை நிறைவேன்றி வருகிறோம் என்ற அணு சக்தி ஆணையத்தின் கூற்றை நாம் புறம் தள்ள முடியவில்லை.
அணு மின் நிலையங்களில் இருந்து சுற்று சூழலை தடுக்கும் எந்த நச்சு புகையும் வெளியிடப்படாது என்பது கூடுத தகவல் . பசுமையின் திட்டமாகிய அணு மின் திட்டங்களை குறித்த அச்சங்கள் விளக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவனின் நோக்கம் கூட. 24 மணி நேரமும் , எந்த காலத்திலும் மின்சாரத்தை கொடுக்கும் அணு மின் நிலையங்களை நாம் ஏன் வரவேற்க கூடாது ?
அமெரிக்காவில் 104 அணு உலைகள் இருப்பது உண்மைதான் ...ஆனால் 1984 பிறகு புதிதாக அங்கு அணு உலைகள் காட்டப்படவில்லையே ஏன் ?
ReplyDeleteஅமெரிக்காவில் 104 அணு உலைகள் இருப்பது உண்மைதான் ...ஆனால் 1984 பிறகு புதிதாக அங்கு அணு உலைகள் கட்டப்படவில்லையே ஏன் ?
ReplyDeleteஉலகில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளின் விளைவே இத்தேக்கத்திற்கு காரணம்; உற்பத்தியின் தேக்கமே காரணம்; மிகு உற்பத்தி நெருக்கடியில் தவிக்கும் வளர்ந்த நாடுகள், மின்சாரத்தை அதிகப்படுத்த அதற்கு மேல் இயலவில்லை. பெரும் முதலீடுகளும், மிகு உற்பத்தி நெருக்கடிளுமே
Deleteஇம்முடிவுகளுக்கு காரணம்.
பிரான்ஸ் நாட்டில் அணு சக்தி மூலமாக 70 சதவீதம் மின்சாரம் தயாரிக்கப் படுவது உண்மைதான் ...ஆனால் பிரான்சின் முக்கிய அணு சக்தி நிறுவனமான அரீவா நிறுவனத்தின் துணை நிறுவனம் அமைத்த அணு உலை பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மண்ணில் புதைத்ததன் மூலமாக குடி நீரில் கதிரியக்கம் கலந்ததற்க்காக 50000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே !
ReplyDeleteவருடத்தில் சில மாதங்கள் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கும் ஜெர்மனி நாட்டில் அணு உலைகள் அனைத்தையும் மூடிவிட்டு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து மின் தேவையை பூர்த்தி செய்யப் போகிறார்களே எப்படி ?
ReplyDeleteஉலகின் மொத்த தேவையின் நாற்பது சதவீத யுரேனியத்தை ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியாவில் இன்று வரை ஒரு அணு உலைகூட கட்டப்படவில்லையே ஏன் ?
ReplyDelete@ கூடல் பாலா : வாருங்கள் சகோதரரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
ReplyDelete// அமெரிக்காவில் 104 அணு உலைகள் இருப்பது உண்மைதான் ...ஆனால் 1984 பிறகு புதிதாக அங்கு அணு உலைகள் காட்டப்படவில்லையே ஏன் ? //
தங்களுடைய கேள்வி மிக சிறந்த கேள்வி என்பதில் சந்தேகம் இல்லை . இந்த இடைப்பட்ட வருடங்களில் எரிவாயுவில் இருந்து மின்சாரம் எடுக்கும் ஆலைகளை அமெரிக்கா நிறுவி வந்தது என்பது உண்மை. அப்படியெனில் அமெரிக்கா அணுமின் நிலையங்களை இனிமேல் நிறுவாது அல்லவா என்று நீங்கள் அடுத்து கேட்பீர்கள் அல்லவா ..
கொஞ்சம் http://www.world-nuclear.org/info/inf41.html இந்த பக்கத்திற்கு சென்று பாருங்களேன். அமெரிக்காவின் எதிர்கால அணுமின் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளது. நன்றி
@ கூடல் பாலா : வாருங்கள் சகோதரரே உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
ReplyDelete//வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே சூரிய ஒளி கிடைக்கும் ஜெர்மனி நாட்டில் அணு உலைகள் அனைத்தையும் மூடிவிட்டு சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரித்து மின் தேவையை பூர்த்தி செய்யப் போகிறார்களே எப்படி ?//
இது ஒரு மிக சிறந்த கேள்வி .
ஜெர்மனி 2020 ல் அணு உலைகளை மூட போகிறது . பின் ஏன் இந்தியா மூட கூடாது என்று ...? ஜெர்மனியின் மொத்த பரப்பளவு 357092 ச. கிமீ . மக்கள் தொகை 82 மில்லியன் அதாவது 1 ச.கிமீ பரப்பளவில் 2296 பேர் வசிக்கிறார்கள் மொத்தம் 20000 MWe மேலான மின் சக்தி 17 அணு உலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு சராசரி மனிதனின் மின் பயன்பாடு 70000 KWh . ஆனால் இந்தியாவின் நிலபரப்பளவு 2973193 ச.கிமீ. மொத்த மக்கள் தொகை சுமார் 121 மில்லியன். அதாவது 1 ச.கிமீ பரப்பில் சுமார் 406 பேர் வசிக்கிறார்கள். மொத்தம் 4500 MWe மின்சக்தி 20 அணு உலைகள் மூலம் தயாரிக்க படுகிறது. தனி மனித மின் பயன்பாடு 700 KWh .
நன்கு கவனித்து பாருங்கள் .. ஜெர்மனியின் மக்கள் அடர்த்தி இந்தியாவை விட 5 .5 மடங்கு அதிகம் . அது மாத்திரமல்ல ஜெர்மனி தன்னிறைவு அடைந்து விட்ட படியினாலும் அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால் இந்தியாவை யோசித்து பாருங்கள் . மாத்திரமல்ல ஜெர்மனியின் இந்த முடிவால் சுமார் 250 பில்லியன் யூரோ ( 350 பில்லியன் டாலர் .., அதாவது 350 x 50 = 17500 பில்லியன் ருபாய் .. 1 பில்லியன் என்பது 100 கோடி . அப்படியெனில் மொத்தம் 1750000 கோடி ருபாய் ) முதலீடு செய்ய வேண்டுமாம் ( தகவலுக்கு http://www.thelocal.de/money/20110919-37687.html பார்க்க )
நன்றி
20 அணு உலைகள் இருந்தும் இதிலிருந்து கிடைப்பது 2.6 சதவிகிதம் மின்சாரம் தான்..இதற்காக இதனை கோடி சிலவு ஏன்?உங்களிடம் ஒரே கேள்வி தான் அணு கதிர்வீச்சு பாதிப்பா இல்லையா ?புள்ளி விபரங்கள் போட்டு குழப்பி ஏமாற்ற வேண்டாம்..அணு கழிவின் ஆயுள் காலம் என்ன? இதை எப்படி பாதுகாப்பது? இதை பாதுகாக்க 50000 ஆண்டுகள் செலவு செய்ய வேண்டும் ..
Deleteஇந்திய அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பானவையாக இருக்கலாம் ...ஆனால் எதிபாராத ஒரு விபத்து நிகழுமாயின் மக்களை காப்பாற்ற எந்த ஒரு ஏற்பாடும் இல்லையே ஏன் ?
ReplyDeleteஜப்பானில் சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு பாதிப்புகளை முற்றிலும் சரி செய்ய இந்திய ரூபாய் மதிப்பு படி 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டுள்லார்களே...இது போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டால் என்னவாகும் ?
ReplyDelete@ கூடல் பாலா :
ReplyDelete//உலகின் மொத்த தேவையின் நாற்பது சதவீத யுரேனியத்தை ஏற்றுமதி செய்யும் ஆஸ்திரேலியாவில் இன்று வரை ஒரு அணு உலைகூட கட்டப்படவில்லையே ஏன் ? //
இது ஒரு நியாயமான கேள்வி . ஏன் நானே பல முறை கேட்டிருக்கிறேன் . 7617930 சகிமீ ( இந்தியாவை விட மூன்று மடங்கு பெரியது ) உடைய ஆஸ்த்திரேலியாவில் 22 . 7 மில்லியன் மக்கள் ( இந்தியாவை விட 4 .5 மடங்கு குறைவு ) வசிக்கிறார்கள். 77 சதவீத மின்தேவை விலை குறைந்த நிலக்கரியினால் சந்திக்கப்படுகிறது. சுற்று சூழலுக்கு பாதகம் விளைவிக்கும் நச்சு புகை 38 % ஆஸ்த்திரேலியாவில் இருந்து வெளியிடப்படுகிறது ( நீங்கள் ஒரு சுற்று சூழல் நண்பர் என்பது எனக்கு தெரியும் ).
அதனால் 2005 ம் வருடம் ஆஸ்திரேலியாவின் தென் கடற்கரையான நியூ சவுத் வேலஸ் என்ற இடத்தில முதல் அணு மின் நிலையத்தை நிறுவதற்கு தீர்மானிக்கப்பட்டு சுற்று சூழல் அமைச்சிடம் அனுமதி பெறப்பட்டு சில புள்ளிகளும் ( TENDERS ) கோரப்பட்டது. ஆனால் 2007 ல் நடந்த தேர்தலில் திரு John Howard ( அணு மின் சக்தியை ஆதரித்தவர் ) தொழிலாளர் கட்சியினால் தோற்க்கடிக்கப்பட்டதால் தற்பொழுது அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.
பெருகி வரும் சுற்று சூழல் சீர்கேட்டினால் ( Global Warming ) கடல் மட்டம் உறைந்து வருவதை உணர்ந்துள்ள அரசு அதி சீக்கிரம் அணு மின் உலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆரோக்கியமான கேள்விகள் என்னை ஊக்கப்படுத்துகிறது.. நன்றி
நானும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்பவன்தான் ...அதனால்தான் இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அணு உலைகளே வேண்டாம் என்கிறேன் ....வந்தபின் காப்பதைவிட வருங்கால் காப்பது சிறந்ததல்லவா ....
ReplyDeleteகேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்கும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது ...நிதானமாக யோசித்து பதிலளியுங்கள் ..நன்றி சகோ ...
ReplyDelete@ கூடல் பாலா :
ReplyDelete//ஜப்பானில் சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு உலையிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு பாதிப்புகளை முற்றிலும் சரி செய்ய இந்திய ரூபாய் மதிப்பு படி 10 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டுள்லார்களே...இது போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டால் என்னவாகும் ? //
உங்கள் வாதத்திற்கு இல்லாமல் உணமையான அக்கறையில் உள்ளதை நான் உணர்கிறேன். புகுஷிமா ... ஒரு மோசமான நிகழ்வு தான் என்பதில் மாற்று கருத்தே இல்லை . ஆனால் புகுஷிமா அணு உலைகளுக்கும் இந்திய அணு உலைகளுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
புகுஷிமா அணு உலைகள் முதல் தலைமுறை அணு உலைகள் என்ற பிரிவை சார்ந்தவை . ஜப்பானின் முதல் அணு உலை என்று கூட நாம் சொல்ல முடியும் . ஆனால் இந்திய அணு உலைகள் மூன்றாம் தலைமுறை என்ற பிரிவை சேர்ந்தவை.
புகுஷிமா பூகம்பம் அதிகம் உருவாகும் பகுதியில் உள்ளது . ஆனால் இந்திய அணு உலைகள் அப்படி அல்ல.
புகுஷிமா பூகம்பத்தை உணர்ந்தவுடன் தானாகவே தொடர் வினைகள் நின்று விட்டன. ஆனால் குளிர்விக்க வேண்டிய Diesel Generator தண்ணீருக்குள் மூழ்கி விட்டதால் அணு உலைகளை குளிர்விக்க செய்ய வேண்டிய Pumps இயக்கப்படாமல் போனது. ஆனால் இந்திய அணு உலைகளில் ஒன்றுக்கு நான்கு Diesel Generator உள்ளது. அதுவும் கடல் மட்டத்தில் இருந்து 9 . 3 மீட்டர் உயரத்தில்.
புகுஷிமாவில் அணு உலை வெடிக்கவில்லை. அணு உலையின் வெப்பத்தை தணிக்க கடல் தண்ணீர் செலுதப்பட்டதால் தண்ணீர் மூலக்கூறுகள் பிரிந்து O2 மற்றும் hydrogen ஆக பிரிந்து விட்டது. இப்படி அணு உலையில் தேங்கிய Hydrogen அளவு அதிகமான போது வெண்ணிற புகையை கக்கியபடி கதிரியக்கத்தையும் கொண்டு வந்துவிட்டது. ஆனால் இந்திய அணு உலைகளில் Hydrogen Recombiner என்ற கருவிகள் அதிகமாக பொருத்தப்பட்டுள்ளதால் Hydron தனியாக இருக்க முடியாது. மாத்திரமல்ல Passive Heat Removal System என்ற பாதுகாப்பு இருப்பதால் Diesel Generator இல்லாமலும் அணு உலைகளை குளிர்விக்க முடியும்.
இப்படி இந்திய அணு உலைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற காரணத்தினால் தான் இந்திய அணு உலைகள் பாதுகாப்பானவைகள் என நான் கூறுகிறேன். நமக்கு புகுஷிமா போல ஒரு நிகழ்வு நிகழாது.
குறிப்பு : 1990 ம் வருடம் புகுஷிமா வின் அணு உலைகளின் பாதுகாப்பு குறித்த US Nuclear Regulatory Commission மற்றும் 2004 ம் வருடம் ஜப்பானின் Nuclear and Industrial Safety Agency அவர்களின் பாதுகாப்பு குறித்த ஆட்சேபங்களும் பின்பற்றப்டவிலை புகுஷிமாவில். ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை அப்படி அல்ல. அதனால் இந்தியாவுக்கு அது போன்ற நிலை வராது.
நன்றி
@ கூடல் பாலா :
ReplyDelete// நானும் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்பவன்தான் ...அதனால்தான் இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அணு உலைகளே வேண்டாம் என்கிறேன் ....வந்தபின் காப்பதைவிட வருங்கால் காப்பது சிறந்ததல்லவா .... //
நீங்கள் ஒரு சிறந்த தேச பக்தர் என்பதை உங்கள் எழுத்துகளே சொல்லுகின்றன. கொஞ்சம் மெதுவாக நான் கூறுவதை அசை போட்டு பாருங்கள். நான் உங்களை வற்ப்புறுத்தவில்லை. We Indians are having a Bright Future
/// கேள்விகளுக்கு தாங்கள் பதிலளிக்கும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது //
மதிப்பு மிக்க ஒரு பதிவர் ஒரு சிறிய மாணவனுக்கு கொடுக்கும் பாராட்டாக இதை ஏற்று கொள்ளுகிறேன்.
நன்றிகள் பல
ஒரே கேள்வி பதில் சொல்லுங்கள்...
ReplyDeleteசூரிய ஒளி சக்தி ஒரு யூனிட்டுக்கு மூன்று ரூபாய் தான் செலவாகிறது, அணு மின் சக்தி மூல பொருள் மட்டும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வருகிறது... அணுமின் சக்திக்கான கட்டிட முதலீடும், முப்பது வருடங்களுக்கு பிறகு மூடிய பிறகு போடப் போகும் முதலீட்டையும் கணக்கு போட்டால், ஏன் நாம் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்யக் கூடாது...
எதற்காக இந்த பாழாய் போன அணு மின்சார திட்டம்...
கல்பாக்கத்தில் நடக்கும் விபத்துக்கள் மூடி மறைக்க படுகிறது, இல்லையேல் போராட்டம் உச்சம் தொட்டிருக்கும்...
ஏன் மூடி மறைக்க வேண்டும்?
நண்பர் Suryajeeva : வணக்கம் , தங்கள் வருகைக்கு நன்றி
ReplyDeleteசூரிய ஒளியின் மின்சாரத்தை குறித்து நான் எழுதியுள்ள கட்டுரையின் பகுதிகளை தயை கூர்ந்து மறுபடி வாசியுங்களேன். உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என நினைக்கிறேன்.
கல்பாக்கம் குறித்து நீங்கள் குறித்துள்ள தகவல் ஆதாரமற்றது என்று கருதுகிறேன். ஆதாரம் இருந்தால் கொடுங்களேன்.
நன்றி
transliteration service not working, so coming tomorrow for reply... but you had not answered my question... kalpakkam tehelka endru type seithu google lil thedungal kidaikkum
ReplyDeleteketkkum entha kelvikkum pathil illai..
ReplyDeletenalla hits kidaichchaachchu
very good
@ Suryajeeva :
ReplyDeleteMy dear sir, i am anxiously waiting for your questions. I do understand that you are talking something about the thegalka report. I hope so , two days before a clear details have been given by Atomic Commission in Newspapers. I believe that you have not seen the information.
what else required from this blogger.
I am very much interested in constructive conversation and my writings are not for Hit.
Kindly understand this please..
Thank you
சூரிய ஒளி சக்தி குறித்து நான் கேட்ட கேள்விகளுக்கும் உங்கள் பிற பதிவுகளில் நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கும் இது வரை நீங்கள் பதில் சொல்லவில்லை, அரசு உண்மைகளை மறைக்க தான் பார்க்கிறது என்ற வாதம் atomic commission விட்ட செய்தியால் எப்படி தீரும்?
ReplyDeleteசூரிய ஒளி சக்தி குறித்து விலை உயர்ந்த தொழில் நுட்பம் என்று கூறியிருக்கிறீர்கள், நான் கேட்பது அது விலை கம்மியாக தானே வருகிறது என்று...
நண்பரே இங்கே பாருங்கள். நீங்கள் கடந்த பதிவில் சொன்ன உண்மையின் லட்சணம் இதுதானா?
ReplyDeletehttp://kousalya2010.blogspot.com/2011/10/blog-post_17.html
கல்பாக்கம் குறித்து மேலும் பல பார்வைகள், நீங்கள் மெச்சும் மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகளின் லட்சணம் இது தான் http://kudankulam2011.wordpress.com/2011/10/13/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/
ReplyDelete@ பிரபு கிருஷ்ணா : நண்பருக்கு பதில் முந்தைய பக்கத்தில் கொடுத்துள்ளேன். நீங்களும் பார்த்ததாக சொல்லியுள்ளீர்கள் . நன்றி
ReplyDelete@ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் .
ReplyDeleteசூரிய ஒளி மின்சாரம் குறித்து நான் எழுதி இருந்த பக்கங்களை பார்க்க சொன்னேன். நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன். ஏன் நான் அப்படி சொன்னேன் என்றால் நம் நாட்டின் மிக பெரிய சூரிய ஒளி பண்ணை 40 MWe மின்சாரம் தயாரிக்க உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தகவல் பலகையில் பார்க்கும் போது 1 MWe மின்சாரம் தயாரிக்கும் வசதிக்கு 18 கோடி செலவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாத்திரமல்ல அதன பின் சூரிய ஒளியில் தயாரிக்க படும் மின்சாரத்தை ரூ 15 / யூனிட் என வாங்குவதற்கும் , பின் அதை ரூ 5 / யூனிட் என மக்களுக்கு கொடுக்கவும் குஜராத் அரசு முடிவு செய்துள்ளது . அதாவது 1 யூனிட் மின்சாரத்திற்கு ரூ 10 அரசு மானியம் கொடுக்கப்படும். தகவலுக்கு http://www.livemint.com/2011/06/07001344/Adani-Power-to-start-two-solar.html
ஆனால் நீங்கள் விலை குறைவு என்று சொல்லுகிறீர்கள் . அரசு மானியம் என்றாலும் அந்த பணம் நம் வரிப்பணம் தானே . அதனால் தான் விலை உயர்ந்தது என்கிறேன். நன்றி
நீங்கள் ஒரு தனி மனிதரா அல்லது ஒரு இயக்கமா என்பதை முதலில் தெளிவு படுத்தி விட்டு எழுதுங்கள்...
ReplyDeleteஉங்கள் எழுத்து வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொடுப்பது போல உள்ளது.
உங்கள் எழுத்தால் பிரபலமாக வேண்டும் என்பது உங்கள் எண்ணம் என்றால் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
யாருக்கோ கூலிக்கு எழுதுபவர் என்றால் உங்கள் ஆதாரம் அபத்தம்.உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம்.
எந்த ஒரு வளந்த நாடும் இன்று ஒரு அணு உலை தொடங்குவதில்லை.அணு உலை என்ன ... சாதாரண Microwave Oven கூட எத்தனை நாடுகளில் தடை....
ஏன் என்று ஆராய்ந்து பாருங்கள்..உங்களுக்கு விடை கிடைக்கும்.
@ ரெவரி : தங்கள் முதல் வருகைக்கும் , தங்கள் கனிவான கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. யாரிடமும் கேட்காத கேள்வியை என்னை பார்த்து கேட்டு உள்ளீர்கள் என்பதில் இருந்து நான் உங்களை மிகவும் பாதித்து இருக்கிறேன் என நினைக்கிறேன் .
1 // நீங்கள் ஒரு தனி மனிதரா அல்லது ஒரு இயக்கமா என்பதை முதலில் தெளிவு படுத்தி விட்டு எழுதுங்கள்...//
பதிவுலகில் கருத்து மாறுபாடுகள் என்பது சர்வ சாதாரணம் . இதில் இயக்கம் அல்லது தனிமனிதன் என்ற வரைமுறை அல்ல என்பது என தாழ்மையான கருத்து.
2 //உங்கள் எழுத்து வாழைப்பழத்தில் விஷம் வைத்து கொடுப்பது போல உள்ளது.
உங்கள் எழுத்தால் பிரபலமாக வேண்டும் என்பது உங்கள் எண்ணம் என்றால் ஆகிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.//
பதிவுலகில் உங்களை போன்ற பெருந்தனமையான் பாராட்டுகளுக்கு நான் பாத்திரன் என எண்ணினால் , தாழ்மையுடன் ஏற்று கொள்ளுகிறேன் .
3 // யாருக்கோ கூலிக்கு எழுதுபவர் என்றால் உங்கள் ஆதாரம் அபத்தம்.உங்களுக்கு பதில் எழுதுவது நேர விரயம்.//
இதே கேள்வியை நான் உங்களை பார்த்து கேட்டால் நீங்கள் எவ்வளவு வருத்தப்படுவீர்களோ , அதை போல வருத்தமாய் உணர்கிறேன்.
4 // எந்த ஒரு வளந்த நாடும் இன்று ஒரு அணு உலை தொடங்குவதில்லை.அணு உலை என்ன ... சாதாரண Microwave Oven கூட எத்தனை நாடுகளில் தடை....ஏன் என்று ஆராய்ந்து பாருங்கள்..உங்களுக்கு விடை கிடைக்கும். //
அப்படி அந்த விடையை கண்டுபிடிக்க தான் இந்த பதிவு என்றால் நீங்களும் ஆக்கபூர்வமான இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுவீர்கள் என நினைக்கிறேன்.
நன்றிகள் பல
மாமன் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாண ஆயிருச்சு...அதனால தங்கச்சிய கல்யாணம் பண்ணப்போறேன்னு சொல்றமாதிரி இருக்கு உங்க லாஜிக்...அபத்தம்...
ReplyDeleteஉங்கள் முதல் பதிவை இப்போது தான் வாசித்தேன்...அது நீங்கள் யாரென்பதை
தெளிவாக காட்டியது...
நண்பர் சூர்யா அழைத்தால் இங்கு வந்தேன்...வந்ததுக்கு வருந்துகிறேன்..
உங்கள் சமூக சேவையை (?)தொடருங்கள்...வாழ்த்துக்கள்...
@ ரெவரி : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கு நன்றி .
ReplyDeleteநீங்கள் சொன்ன உதாரணத்திற்கும் எனது பதிவுகளுக்கும் சம்பந்தம் ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை .
மாறாக இழிவான தனி நபர் விமரிசனத்தையும் எனது பதிவுகளில் இருப்பதில்லை . அதனால் நீங்கள் வருந்துவதற்கு ஒன்றும் இல்லை. மிக நல்ல விவாதத்தை நாம் தொடர்ந்து செய்வோம். நான் எங்காவது தவறு செய்வதாக தோன்றினால் , அதை சுட்டி காட்ட வேண்டியதும் இல்லையெனில் விளக்கம் கேட்க வேண்டியதும் உங்கள் கடமை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். நன்றி
http://www.ebay.in/itm/1-MW-SOLAR-POWER-PLANT-/160420076368
ReplyDelete8000 kwh is 25 crores
that is 30 years investment
8000 kwh x 10950 days
8,76,00,000 kwh
கிடைக்கும் மின்சாரத்தை அதற்க்கப்புறம், செலவு செய்த தொகையை வகுத்து பாருங்கள்.. ஒரு அளவு மின்சாரம் 2.85 வரும்... பராமரிப்பு செலவான கண்ணாடியை துடைத்தல் சேர்த்தால் ஒரு யூனிட்டுக்கு 3.00 rs varum
இதை என் முந்தய பதிவிலேயே சுட்டி உள்ளேன்...
http://suryajeeva.blogspot.com/2011/10/blog-post_04.html
இது தனியார் நிறுவனம் விற்கும் தொகை...
இதை அரசே எடுத்து செய்தால் இன்னும் செலவு குறையும்...
மானியம் இல்லாமல் சொல்லும் விலை...
கொஞ்சம் திறந்த மனதுடன் குறிப்பிட்டுள்ள என் பதிவை படித்தால் விளங்கும்...
ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உள்ளது
மக்கள் தேர்ந்தெடுத்த அரசு எவ்வாறு ஏமாற்றுகிறது என்று நீங்கள் கொடுத்து உள்ளீர்களே ஒரு கணக்கு அதிலேயே தெரிகிறது...
கொஞ்சம் ஆராய்ச்சி செய்தால் போதும்..
@ Suryajeeva : நண்பருக்கு வணக்கம் , தங்களின் கருத்துக்கு நன்றி . மிகுந்த பணிச்சுமையின் காரணமாக உங்களுக்கு உடன் பதில் கொடுக்க முடியாமல் போனதிற்கு வருந்துகிறேன்.
ReplyDeleteநீங்கள் கொடுத்த வலைதளத்திற்கு சென்று செய்திகளை பொறுமையுடன் வாசித்தேன். மிக அற்புதமான காரியத்தை நீங்கள் விவாத்திற்கு கொண்டு வந்து உள்ளீர்கள் . முதலாவது நான் சூரிய ஒளி மின்சாரத்திற்கு எதிரானவன் அல்ல என்பதை மறுபடியும் உங்களுக்கு நியாபகபடுதுகிறேன். இப்பொழுது விவாதத்திற்கு வருவோம்.
உங்களின் கணக்கு மிக அற்புதம் . அது மிகவும் என்னை கவர்ந்தது. கொஞ்சம் யோசிக்கவும் வைத்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கொஞ்சம் நீங்கள் கொடுத்த வலைத்தளத்தில் பார்த்தபோது 1 MW மின்சாரம் தயாரிக்க தேவையான சூரிய ஒளி மின்கலங்களை குறித்து எழுதி உள்ளார்கள். 1 MWe மின்சாரத்திற்கு 10 - 15 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்பதயும் எழுதி உள்ளார்கள். அப்படியெனில் நமக்கு தேவையான மின்சாரம் தயாரிக்க மிக பெரிய நிலபரப்பும் தேவைப்படும் . ஆனால் அதற்க்கு நாம் பாலைவனங்களை உபயோகபடுத்தகூடும்.
இதுவரை உலகில் அரிசோனாவில் தான் மிக பெரிய சூரிய ஒளி பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 240 MWe . அப்படி பெரிய அளவில் ப்ராஜெக்ட் செய்யப்படுகிற பொழுது அதற்க்கு ஆகும் நிலப்பரப்பும் , அதற்க்கான விலையும் பல மடங்கு அதிகம். உலகின் 5 மிகபெரிய சூரிய ஒளி பண்ணைகளை குறித்த தகவல் உள்ள இந்த வலைதளத்தை பாருங்கள் http://www.solarinsure.com/largest-solar-power-plants
அதனால் இரண்டு காரியங்கள் நினைவில் கொள்ளப்பட வேண்டி உள்ளது.
1 . நமது பெருகி வரும் மின் தேவையை சமாளிக்க கூடிய அளவு மின்சாரம் தயாரிக்கும் சூரிய ஒளி பண்ணைகள் இன்னும் அமைக்கப்படவில்லை .
2 . அப்படி பெரிய அளவில் நாம் அமைக்க முயன்றால் நாம் அதற்க்கு செலவிடும் தொகை பெரிய அளவில் இருக்கும் ( நமது சக்திக்கு அப்பாற்பட்டது ). நீங்கள் சொன்ன தகவல் உண்மை ஆனால் தொழில்வளர்ச்சிக்கு பொருந்தாது.
வருங்காலங்களில் சூரிய ஒளி பண்ணைகள் மூலமாகவும் நாம் மின்சாரம் தயாரிக்கலாம் ஆனால் அதே நேரத்தில் நிலையான , அதிக அளவு மின்சாரத்தை பெற அணுமின் தொழினுட்பம் நமக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது திண்ணம் .
நன்றி
@ Suryajeeva : நான் கூறியபடி என் முதல் இடுகை இன்று முதல் நீக்கபடுவதால் , அவற்றில் நீங்கள் கேட்ட கேள்விக்கும் , கருத்துக்கும் இதில் பதில் எழுதுகிறேன் .
ReplyDelete// துக்ளக் சோ செய்வது போல் உள்ளது உங்கள் பதில்கள் //
நீங்கள் இவ்வளவு பெரிய பத்திரிகையாளரை என்னுடன் ஒப்பிடுவது யானையை எறும்புடன் ஒப்பிடுவது போன்றது.
//உங்கள் பதிவுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை,
மாறாக உங்கள் பதில்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி விடுங்கள்..
நான் உங்களுக்கு பதில் சொல்கிறேன்...
jeevansure@gmail.com //
இந்த கருத்துக்கு பதில் எழுதாமல் இருப்பது தான் சால சிறந்தது என நான் நினைத்தாலும் ஏன் பதில் எழுதவில்லை என நீங்கள் கேட்பீர்கள். எனவே பதில் எழுதுகிறேன்.
நீங்கள் வர விருப்பமில்லை என கூறிவிடீர்கள் , எனவே வாருங்கள் என அழைப்பதற்கு நான் பிறந்த குலம் ( தன்மானம் ) அனுமதிக்கவில்லை , வர வேண்டாம் என சொல்லுவதற்கு நான் பிறந்த இனம் ( பெருந்தன்மை ) என்னை அனுமதிக்கவில்லை.
ஆனால் நீங்கள் விருப்பபட்டால் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். உங்களுடன் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் பங்கு பெற்றது எனக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுக்கிறது.
நன்றி
வணக்கம்
ReplyDeleteஉங்கள் பதிவைப் படித்தேன் மற்றும் சில நண்பர்களின் கருத்துக்களையும் அதற்கு உங்களுடைய மறுமொழிகளையும் படித்தேன்.எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு புள்ளி விவரத்தோடு மட்டுமல்லாமல் அதற்கான ஆதாரத்தோடும் பதில் சொல்கிறீர்கள் இந்த செயல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.மேலும் நான் உங்களிடம் விவாதம் செய்ய வரவில்லை ஏனென்றால் எல்லாவற்றிற்குமே பதில் தயாராக வைத்திருக்கிறீர்கள்.அதுமட்டுமல்லாமல் உங்கள் பதிவும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே உள்ளது.அதற்காக அணுஉலை என்கிற செயற்கை பேரளிவுடன் கை கோர்க்கலாமா?எவ்வளவுதான் பாதுகாப்புகளை பலபடுத்தினாலும் விபத்து நேரிட்டால் பல கி.மீ தொலைவிற்கு அதன் தாக்கம் இருக்கும் என கடந்த மாத ஜுனியர் விகடனில் குறிப்பிட்டிருந்தார்கள்.எது எப்படியோ வந்த பிறகு பதறுவதை விட வருமுன் காப்பது சிறந்தது தானே ஏனென்றால் நம் இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் பட்டு பின்னர்தான் திருந்துவோம்.அம்மாதிரி நிலை அணு உலை விவகாரத்திலும் வந்துவிடக் கூடாது என்று நினைப்பது இயல்புதானே.
மிக்க நன்றி
நீங்கள் மேலும் பலதரப்பட்ட சமூகம் சார்ந்த கட்டுரைகள் எழுதலாம் என் எண்ணம்.
@ ilavarasan:
ReplyDeleteஐயா , தங்களின் முதல் வருகைக்கும் தங்கள் கனிவான கருத்துக்கும் நன்றி .
தங்களின் கருத்துரை எனக்கு மிகவும் ஊக்கம் கொடுக்கிறது.
//அம்மாதிரி நிலை அணு உலை விவகாரத்திலும் வந்துவிடக் கூடாது என்று நினைப்பது இயல்புதானே.//
நான் தங்கள் கருத்தை அப்படியே ஏற்று கொள்ளுகிறேன். ஆனால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை , ஐயங்களை நீக்குவதும் நமது கடமை என்று தானே நாம் நினைக்கிறோம். தற்பொழுது இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதால் மாத்திரம் , நான் இந்த விசயங்களை பற்றி அலச முடிவு எடுத்தேன். நீங்கள் கூறியபடி , வெகு சீக்கிரம் பல தரப்பட்ட சமூகம் சார்ந்த கட்டுரைகளை நான் எழுத யாசித்துள்ளேன்.
தங்களின் கனிவான திறந்து மனதுடன் கூடிய பார்வைக்கு எனது வணக்கங்கள் .
மறுமொழி கூறியதற்கு மிக்க நன்றி.
ReplyDelete'ஒருவேளை விபத்து நடந்துட்டா என்ன பண்றது' என்பது தர்க்கம். இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.
ReplyDelete@ kumar : நண்பருக்கு வணக்கம் . தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
ReplyDeleteHi,
ReplyDeleteI believe you are totally biased on Nuclear power issue. But i want to share my thoughts also.
1. When a growing country like india needs power it should go for easy available technology and make it wide spread also. for example you have mentioned for 1 Mwt current solar power consumes 18 crore of money so 2000 MW * 18 = 36000 crore only. I believe 15,824 is the implementation cost of Kudankulam project. But if you calculate running cost and maintenance cost it will reach for 75% of solar power for sure. Why dont we spend 25 % extra money to avoid a huge risk.
2. In case of solar power the private company includes its profit and so it costs 18 crore for 1 Mwt. But if govt produces the same panels by its own manufactering divisions like BHELL of any public sector companies it can provide with less cost as well as its a huge job offer for us.
3. Instead of producing power in a single point solar panel allows you to produce in customer place and so the loss of power transmission can be avoided. moreover govt can provide solar panels to the farmers in low price and make them to use it. so no need of providing free current also.
4. Solar panels are having a long life and there is no need of full investment at a time so all together nuclear project is always bad idea only.
But to accept all these above things first you should not be biased and you should love your country and people. If you have ego to show the country as atomic power there is no point of trying or thinking alternate power at all.
Dear Sir,
DeleteI do respect your valuable comments made on this article....
Please understand that i am not against solar power. I have already written in this article that Solar power is a clean power...
as you were talking about the running cost Kudankulam Nuclear Power project , i would like to tell you one things. Approximately 2.40 crore Unit of electricity will be produced by a single 1000 MWe reactor in one day. You please calculate the operating cost now... and please tell me which is cheaper...
i do agree with you solar panel can be fixed in houses . I think the Govt.of Tamilnaadu already announced some housing project with solar power.
As you might have known that only 22% of electricity is being used for domestic purpose and other others are being used for industrial purpose , can we meet them only by solar?. It may please be noted that the biggest solar farm in the world is having the capacity of 200MWe only.
I am accepting your points on the use of solar . But i would like to tell you that the non-stop , 24x 7 continuous power can be given by Nuclear only. It may further please be noted that our requirement is 5 Lakh MWe. But our Installed capacity is only 1.82 lakh MWe. Kindly think , whether it is achievable by solar or Nuclear...?
As you love this soil and this country , i do also friend. I enjoyed with the constructive discussion with you.
Thank You..
ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.
ReplyDeleteபீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.
மீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாதுகாத்து வைத்திருக்க முடியுமா? என்பதே பெரும் கேள்வி.
சோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கொடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.
நண்பருக்கு வணக்கம் ,
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
//ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே//
என்னுடைய பதிவை நீங்கள் கவனமாக படிக்கவும் . இடிந்தகரை என்ற கிராமத்தின் தொழில் மீன்பிடி தொழில் எனவும் , கூடங்குளம் கிராமம் மீன்பிடி தொழில் ஈடுபடவில்லை எனவும் நான் குறிப்பிட்டு உள்ளேன் . இது தவறான தகவல் என்றால் , நீங்கள் கூடன்குளதிர்க்கு ஒரு முறை கூட செல்லவில்லை என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும் . இன்னும் சொல்லுகிறேன் ... கூடங்குளம் கிராமம் மீன்பிடி கிராமம் அல்ல .... வேண்டுமானால் சென்று பாருங்கள் ...அப்படி இல்லை எனில் , கூடங்குளத்தில் இருந்து பதிவுகளை எழுதும் மதிப்பிற்கு உரிய பதிவர் கூடல் பாலாவிடம் கேட்டு பாருங்கள் . நீங்கள் தான் உண்மைக்கு மாறாக பேசுகிறீர்கள் நண்பரே ....
//அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள்.//
நண்பரே ...உங்களின் கருத்து எனக்கு ஆச்சரியமானது . நீங்கள் ஒரு மனிதரின் வார்த்தைகளை கேட்க சொல்லுகிறீர்கள் . ஆனால் நானோ ஆதாரப்பூர்வமாக எனது கட்டுரையில் செய்திகள் மற்றும் காணொளிகள் துணையுடன் எழுதியுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து போக வேண்டாம் ...
//அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள்//
நண்பரே ....நீங்கள் முதலாளிதுவத்திற்கு எதிரானவரா அல்லது அறிவியலுக்கு எதிரானவரா ....? இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் அணுமின் நிலையங்களை நீங்கள் ஆதரிப்பீர்களா ...? ஏன் எனில் அவைகள் கார்பெரெட் முதலாளிகள் அல்ல. அரசு உடமைகள் ... நான் அதிசய மனிதன் அல்ல நண்பரே ... உங்களை போன்ற சாதாரண மனிதன் தான் ..
//அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாது காத்து வைத்திருக்க முடியுமா என்பதே பெரும் கேள்வி.//
அணுக்கழிவு குறித்த கேள்விக்கு எனது அணுக்கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு என்ற கட்டுரையை காணுங்கள் ...
//நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.
உங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.//
நான் வெகு நாட்களாக இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் நண்பரே ... அநேக வருடங்கள் பதிவுலகத்தின் வாசகராக இருந்து வந்த நான் பதிவனாக மாற வேண்டும் என்ற வேகத்தை எனக்கு கொடுத்தது கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த சர்ச்சைகள் தான் . ஏன் எனில் எனக்கு கொஞ்சம் அறிவியல் பிடிக்கும் . அறிவியலை புரிந்து கொள்ளாமல் , பதிவர்கள் தங்கள் இஸ்டத்திற்கு பதிவு எழுதுவதை பார்த்து நான் அவர்களுக்கு Comment இட்டுக்கொண்டும் , பதில் எழுதிக்கொண்டும் இருந்தேன் . ஆனால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிவர்கள் பதில் கொடுக்காதது மாத்திரமல்ல என்னுடை கேள்விகளையும் நீக்கி விட்டார்கள் . எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதாரமாக கொண்டு தான் எனது முதல் பதிவை எழுதினேன் . இது அறிவியலுக்கு , உணர்ச்சிக்கும் , சில பொல்லாத விசமிகளுக்கும் இடைப்பட்ட காரியம் என்பதாலும் , நான் பிறந்த தமிழ் மண்ணில் இந்த காரியங்கள் நிகல்வதினாலும் , இவற்றை குறித்து அதிகமாக எழுதிவருகிறேன் . இன்னும் எழுதுவேன் . எனது சமூகம் சார்ந்த மற்ற பதிவுகளையும் நீங்கள் இந்த தளத்தில் காணலாம் .
உங்கள் கேள்விகளும் , கருத்துகளும் என்னை ஊக்குவிக்கிறது . நன்றி
dear friend
ReplyDeleteso far PMO office not reveal how to dispose
atomic waste because it has too much year half life period
more over PMO OFFICE DIRECTLY IMPLEMENT THIS KUDAN KULAM PROJECT WITHOUT OBTAINING PROPER APROVAL AS LIKE IN MANY OTHER DEVELOPED COUNTRIES
YOUR SELF MAY NOT AWARE OF THAT
IF GOI STAND IS PURE THEN THEY CAN GET APPROVAL IE ENVIRONMENTAL CLEARANCE AS LIKE OTHER DEVELOPED COUNTRIES?
SORRY I AM MUCH INTERESTED PERSON IN TAMIL READING BUT I COULD NOT TYPE IN TAMIL
WISH YOU ALL THE BEST
Dear Sir,
Deletethank you for your visit and your constructive discussion. Kudankulam Nuclear Project has got the clearance from MOEF. It may please be noted that all the required certificates / approval are available with kudankulam Nuclear power Project. The same has been intimated to the agitators by the Central Panel.
I feel , now you will be happy about KKNPP.
Thank you and visit again.
sorry gentle man wrong informn
ReplyDeleteif you are haveing if its open to public it must be why dont that photo copy may be posted in web site?
Dear Sir,
DeleteI am not having the photo copy. But why you can't have the visit to the below mentioned link for your requirement.
http://npcil.nic.in/pdf/Environmental_Clearances_for_KKNPP1_2.pdf.
Now are you agreeing with me... Thank your for your visit..
மேற்குறிப்பிட்ட அனைத்து வாதங்களுக்கும் இங்கு பதிலளிக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். படித்துவிட்டு அனைவரும் அங்கு வாதத்தை தொடரலாம்... இல்லையேல் எது விடுப்பட்டுள்ளதோ அதை குறிப்பிடுங்கள் விவாதிப்போம்!!! (இப்பொழுதுதான் இவ்விவாதத்தை கவனித்தபடியால், விவாதத்திற்கு உரிய காலத்தில் பதிலளிக்க முடியவில்லை.) கீழ்குறிப்பிட்ட இடுக்கையை படியுங்கள்..
ReplyDeletehttp://samaran1917.blogspot.in/2012/09/1.html
Pothuvudaimai Seeman : தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
ReplyDeleteபதிவர் அவர்களுடைய கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய பல சந்தேகங்களை தீர்த்து வைத்து விட்டது....பதிவர் அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாகவும் நிதானமாகவும் பதிலலித்துள் ளார்......நன்றி
ReplyDelete