Friday 12 July 2013

கூடன்குளமே வருக ...! மின்சாரம் தருக .....!




பல வருடங்களாக காத்திருந்த கூடங்குளம்  அணுமின் நிலையம் இயங்குவதற்கு அணுசக்தி ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது மிக முக்கியமான நிகழ்வு . இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிகிறது .  எல்லாரும் இப்பொழுது பரபரப்பாக பேசுகிற ஒரு வார்த்தை  கிரிடிகாலிட்டி       ( Criticality ) என்பதே.  அணுமின் நிலையத்திற்கும் இந்த வார்த்தைக்கும் என்ன தொடர்பு என்பதை சிந்தித்ததின் விளைவே இந்த பதிவு .



கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும் , அதை குறித்த தவறான தகவல்கள் குறித்தும் ஏற்க்கனவே இதே வலைப்பூவில் பல இடுகைகள் எழுதியுள்ளேன் . இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும் முறைகள் குறித்து இதில் நாம் பார்க்கலாம் .

அணுமின் நிலையத்தில் உள்ள அணு கொள்கலன் ( reactor vessel ) என்ற பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த கொள்கலனில் தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு இருக்கும் . இந்த யுரேனிய அணுக்கள் சிதைவுறுவதால் உண்டாகும் தொடர்வினையும் , அதனால் ஏற்ப்படும் வெப்பமும் , நீராவி உண்டாக்குவதற்கு பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம் . அதை குறித்த செய்திகள் இந்த வலைப்பூவிலும் உள்ளன.

யுரேனிய எரிபொருள் இருக்கும் கொள்கலனுக்குள் அணுப்பிளவு தொடர்வினையை ஊக்குவிப்பதற்காக Neutron Sources இருக்கும் . இந்த neutron கள் தான் அணுவை பிளக்கும் என்பதை நாம் அறிந்து இருக்கிறோம் .  அதனால் இந்த வினை தொடங்காதபடிக்கு அணு கலன் முழுவதும் போரோன் நிறைந்த தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும் . அது கிட்டத்தட்ட 17% வரை இருக்கும் . மேலும் இந்த neutron களை கட்டுப்படுத்துவதற்க்காக காட்மிய கழிகள் (Control  rods )பொருத்தப்பட்டு இருக்கும் .  இந்த போரோன் மற்றும் காட்மியம் போன்றவை neutran களை விழுங்கும் தன்மை உடையதால் அணுப்பிளவு வினை தொடங்காமல் இதுவரை இருந்தது 

Criticality என்றால் என்ன ...?
அணு கலனில் இருக்கும் போரான் கலந்த தண்ணீரில் உள்ள போரானின் அடர்த்தி (  Concentration ) படிப்படியாக குறைக்கப்படும் . அதாவது கிட்டத்தட்ட 8 % அளவுக்கு . அதே நேரத்தில் காட்மிய கட்டுப்படுத்தும் கழிகள் மெதுவாக உயர்த்தப்படும் . இப்படி படிப்படியாக போரான் மற்றும் காட்மியம் விலக்கிக்கொள்ளப்படும் பொழுது , Neutran Sources ல் இருந்து புறப்படும் neutran கள் யுரேனிய அணுக்களுடன் மோதி தொடர்வினையை உருவாக்கும் .   Steam Generator என்ற நீராவி கொள்கலனில் நீராவி உற்பத்தி செய்யும் அளவுக்கு வெப்பம் உண்டானவுடன் , வேண்டிய அளவு கட்டுப்படுத்தும் கழிகள் இறக்கப்பட்டு தொடர்வினை கட்டுப்படுத்தப்படும் ( Controlled Chain Reaction ).  இதே செயலை மாறி மாறி செய்து அனுகலனில் வெப்பத்தை நிலைநிறுத்தும் முறையே Criticality என்று அழைக்கப்படுகிறது.

இந்த பகுதி ஒரு அணுமின் நிலையம் இயங்குவதற்கு தேவையான முக்கிய மைல் கல் என்றே சொல்லலாம் .   அதன் பிறகு Synchronization என்று சொல்லப்படுகிற நிகழ்வின் மூலமாக அணுகூடத்தில் உற்பத்தியாகிற நீராவி turbine வழியாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு உள்ள பிளேடுகளில் மோத வைக்கப்படும் . அப்படி செய்வதால் Rotor சுற்ற ஆரம்பித்து Stator மூலமாக மின்சாரம் கிடைக்கும் 

கொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வெகு விரைவில் 1000 MWe மின்சாரம் தயாரித்து தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஓரளவாவது தீர்க்க                          " கூடன்குளமே வருக ...!,மின்சாரம் தருக....!"

No comments:

Post a Comment

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி