Wednesday 21 December 2016

தவறான திட்டமிடல் - வங்கி பணியாளர்கள் போர்க்கொடி...- வலுக்கும் எதிர்ப்பு....

5௦௦ ரூபாய் மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அரசாங்கம் அறிவித்தபோதே , இது பயனில்லா அறிவிப்பு என்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தப்படும் அறிவிப்பு என்றும் பல பதிவுகள் எழுதியுள்ளேன்..

சில நண்பர்களிடம் விவாதிக்கும் போது , டிசம்பர் 3௦ ம் தேதி எல்லாம் சரியாகிவிடும் என்று மாண்புமிகு பிரதமர் உறுதி அளித்துள்ளார் என்று மாறி மாறி சொன்னார்கள்.  இன்னும் 1௦ நாள் தான் இருக்கிறது,...ஆனால் நாடு மிக மோசமான நிலைக்கு போகிறதை தான் நாம் பார்க்கமுடிகிறது....

இந்த நிலையில் தான் வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் போராட்டம் செய்யபோவதாக அகில இந்திய வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பும் , அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பும் தெரிவித்து உள்ளது... இந்த போராட்ட அறிவிப்புக்கு இவர்கள் கொடுக்கும் காரணம் மிக ஏற்புடையதே....


  • மக்களின் தேவைகளை சந்திக்கும் வகையில் , போதுமான அளவு பணம் ரிசர்வ் வங்கியால் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்படவேண்டும்.  போதுமான அளவு பணம் கையில் இருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறுகிறார்....போதுமான நிதி கையில் இருந்தால் , அதை வங்கிகளுக்கு கொடுப்பது தானே நியாயம்

  • ரிசர்வ் வங்கியால் போதுமான அளவு பணம் கொடுக்க முடியாவிட்டால் , வங்கியின் பண பரிவர்த்தனைகள் ரத்து செய்யப்படவேண்டும்.

  • அன்றாட வாழ்வின் போராட்டங்களுக்காக மணிக்கணக்கில் ஏன் நாள்க்கணக்கில் வரிசையில் நின்று பணம் கிடைக்காத போது , பொது மக்களுக்கு கோபம் வந்து வங்கி பணியாளர்களுக்கு பாதுகாப்பின்மை நிலவுகிறது. போதிய பாதுகாப்பு கொடுக்கவேண்டும்.

  • நவம்பர் 8 முதல் இந்நாள் வரை இரவு பகல் உழைத்த அதிக நேரத்திற்கு கூலி கொடுக்கவேண்டும்.

  • நாடு முழுவதும் அதிகப்படியான புதிய நோட்டுகள் பிடிபடுவதாக தகவல் வருவதை குறித்து சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.
கடைசி கருத்து ரொம்ப யோசிக்கவேண்டி உள்ளது.....வங்கி பணியாளர்கள் கூட்டமைப்பு இப்படி வெளிப்படையாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்லுவதால் , இந்த புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டுகள் உண்மையிலே வங்கி வந்து தான் செல்லுகிறதா...? இல்லை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்தே செல்லுகிறதா....?

அடுத்த தேர்தலில் மக்கள் அளிக்கும் பதிலடியை பார்க்கும் வரை , நிதி அமைச்சரும் சரி  , பிரதம அமைச்சரும் சரி , நாட்டை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டார்கள் என்று தான் தெரிகிறது....டிசம்பர் 3௦ வரை பொறுப்போம்....

2 comments:

  1. Really. If the government gives enough money then all that goes to rich ones. How did the big people get so much new currency, when the government restricted the allowance? You are fucking moran. Dont even know whats happening? Without the bank employees support how did they get.

    ReplyDelete
    Replies
    1. Thank you sir for your visit and comments... I request you to consider the following few points...

      1. RBI says very less money was there when the CBI probe to find out how large amount of 2000 rs notes have been issued without their knowledge. Why Govt. is nor ordering a probe..?

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி