Sunday, 15 January 2012

அணுமின் நிலையங்கள் - சுற்று சூழல் நண்பனா ...?


அணுமின் நிலையங்கள் குறித்து பலரும் பல விதமாக பல தருணங்களில் பேசி வருகிறார்கள் .  அணுமின் நிலைய்னங்கள் சுற்று சூழலுக்கு எதிரானவை என்ற கருத்துகள் பரவலாக எல்லாராலும் பேசப்படுகிறது . உண்மையில் அணுமின் நிலையங்களினால் சுற்று சூழலுக்கு ஆபத்து உண்டா என்ற ஆராய்ச்சியின் விளைவாக எழுதப்பட்டது இந்த கட்டுரை ... 


புவி வெப்பமயமாதல்  :   உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் மிகப்பெரிய ஆபத்து புவி வெப்பமயமாதல் என்பதை நம்மில் பலர் அறிந்திருப்போம் .  அப்படி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய முன்னுரையை நான் கொடுக்க விரும்புகிறேன் . நமது அநேக தொழிற்சாலைகள்  , வாகனங்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவில் புகை வெளியிடப்படுகிறது . 


அப்படி வெளிடப்படும் புகையில் அதிக அளவில் CO2  மற்றும் SO2  ஆகியவை உள்ளது .  இந்த வாயுக்கள் பூமியை பாதுகாக்கும் ஓசோன் படலத்தை அழிக்கும் சக்தி படைத்தவை.  அதன் விளைவாக சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகிறது . அதன் விளைவாக பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் என்ன நடக்கும் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  முதலாவது அண்டார்டிகா பகுதியில் உள்ள பெரும் பனிபாறைகள் உருகும் .  தற்பொழுதும் பெருமளவில் பனிபாறைகள் உருகி கொண்டு தான் இருக்கின்றன .  அதன் விளைவாக பெருமளவு தண்ணீர் கடலில் சேர்ந்து கடலின் நீர் மட்டம் உயரும் .  கடலின் நீர் மட்டம் உயர்ந்தால் பெரும்பாலான தீவுகள் காணாமல் போகும் . மாத்திரமல்ல கடலோர கிராமங்களை கூட அரித்து கொண்டு போகும் .
அணுமின் நிலையங்கள் இந்த மாதிரி வாயுக்களை வெளியிடாது என்பது ஒன்றே போதாதா .... நமது எதிர்காலத்தை அணுமின் நிலையங்கள் பாதுகாக்கிறது என்பதற்கு .  உண்மையில் மீனவ நண்பர்களின்  வாழ்வில் அக்கறை கொண்டவர்கள் இந்த உண்மையை அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .


பூமியின் வெப்பம் அதிகரித்தால் , பூமியின் பசுமை குறைந்து பூமி வறண்டு கொடும் பஞ்சம் பூமியில் ஏற்ப்படும் .  அணுமின் நிலையங்கள் SO2 மற்றும் CO2 வாயுக்களை வெளியிடாததால் இந்த பாதிப்புகளை குறைக்கும் ,
ஒரு வேளை என்னுடைய கட்டுரை கண்ணை மூடி கொண்டு நான் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறேன் போன்ற எண்ணத்தை உங்களுக்கு உருவாக்கலாம் .  ஆனால் கொஞ்சம் யோசித்து பாருங்கள் .  வருங்கால பூமியை பாதுகாக்கும் வகையில் சுற்று சூழலை பாதுகாக்கும் இந்த மாதிரி அணுமின் நிலையங்களை சுற்று சூழலின் நண்பன் என்று நான் சொல்லுவதில் என்ன தவறு இருக்கிறது ....?6 comments:

 1. இந்த பதிப்புக்கு நன்றி... இந்த உண்மையை இந்திய அரசு தெளிவாக மக்களிடம் விளக்கினால் எதற்கு இந்த கூடங்குளம் போராட்டம்? நம் இந்திய தேசத்தில் அரசியல் சக்திகள் சிறு விஷயத்தையும் ஆயுதமாக பயன்படுத்தி குளிர் காயும் தருணம் இது. மக்களின் அறிவுகண் திறக்க இதுபோன்ற கட்டுரைகள் மிக முக்கியம். கூடங்குளம் சேவை மக்களுக்கு தேவை என்று உணர்த்தும் தருணம் இது. குட்டிநியூஸ்.காம் யின் மனமாற்ந்த நன்றி...

  ReplyDelete
  Replies
  1. @ BRG : நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகையும் , கருத்தும் என்னை ஊக்குவிக்கிறது . நன்றி

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 2. சரிதான். ஜப்பான் புகுஷிமாவில் பாதிக்கப்பட்டுள்ளது சுற்றுசூழலா அல்லது வேறேதுவுமா?

  ReplyDelete
  Replies
  1. நண்பருக்கு வணக்கம் ,

   தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...

   தங்களின் கேள்வியின் அர்த்தம் எனக்கு புரிகிறது . புகுஷிமாவில் நடந்தது போல நமது நாட்டிலும் நடக்கும் என நீங்கள் பயப்படுகிறீர்களா ...? கொஞ்சம் " புகுஷிமாவும் கூடன்குளமும் ஒன்றா " என்ற எனது கட்டுரையை வாசியுங்களேன் ....http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_20.html

   மாத்திரமல்ல ... புகுசிமாவின் விபத்து வேதி வினையினால் நிகழ்ந்தது என்பதயும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன் ....

   தொடர்ந்து வருகை தாருங்கள் .... நண்பரே

   Delete
 3. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி