Wednesday, 18 January 2012

இன்றைய தேவை - அறிவியல் தமிழா ..? அறிவியல் தமிழனா ..?


தலைப்பு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா ...?  கொஞ்ச நாட்களாக என் மனதிற்குள் ஓடி கொண்டிருக்கும் நினைவுகளும்  , எண்ணங்களும் தான் இந்த பதிவு எழுதப்படுவதின் காரணம் .


அறிவியல் தமிழ்  என்ற வார்த்தை அதிகமாக நான் பள்ளி படிக்கும் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததை நான் அறிவேன் .  அது என்ன அறிவியல் தமிழ் என்று கேட்க தோன்றுகிறது அல்லவா ..?  ருசியா நாட்டில் அனைத்து அறிவியல் பாடங்களும் ருசிய மொழியில் தான் இருக்குமாம் .  அதனால் அந்த நாட்டு குழந்தைகள் அறிவியலை எளிதாக கற்று கொள்ளுமாம் .   ஜெர்மன் தேசத்தில் அனைத்து அறிவியல் பாடங்களும் ஜெர்மன் மொழியில் தான் இருக்குமாம் . அதனால் அந்த நாட்டு குழந்தைகள் எளிதாக அறிவியலை கற்று கொள்ளுமாம் . 


ஆனால் நமது இந்திய திரு நாட்டில் பல ஆட்சி மொழிகள் இருப்பதினால் , அறிவியல் பாடங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்  ( பொறியியல் மற்றும் மருத்துவம் ) தான் கற்ப்பிக்கப்பட்டு வந்தன /  வருகின்றன .  இந்த சூழலில் தமிழ் இளையோர்கள் அறிவியலை தமிழில் கற்கவேண்டும் எனவும் அதற்காக அறிவியல் பாடங்கள் தமிழில் இயற்றப்படவேண்டும் என்பது தான் அறிவியல் தமிழ் என்ற  வார்த்தை தோன்றுவதின் ஆரம்பம் .  இதன் முக்கிய காரணம் அறிவியலை தமிழ் இளையோர்கள் நன்றாக கற்று தேறவேண்டும் என்பது தான் . 


ஆனால் தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்க்கும் போது அறிவியல் தமிழ் தமிழகத்தில் வென்றுள்ளதா என்று தான் நினைக்க தோன்றுகிறது.  அணுமின் நிலையங்கள் என்றவுடன் மக்களும் சரி ,  மாணவர்களும் சரி , ஏன் சில ஆசிரியர்களும் சரி நினைக்கிற காரியம் என்னவெனில்   " அணுமின்சாரம் மிகவும் ஆபத்தானது " என்று. ஏன் எனில் அணுமின்சாரத்தை குறித்தும்  , அணுமின் நிலையங்களை குறித்தும் கற்று அறிந்து பேசுகிற மக்கள் மிகு குறுகிய அளவில் தான் உள்ளனர் .  மீதி மக்கள் அனைவரும் யாராவது சொல்லும் வதந்திகளை மாத்திரம் பேசுகிறார்கள் .  எங்கே போனது அறிவியல் தமிழ் ?


சரி அறிவியல் தமிழன் தேவையா ? என்ற கருத்துக்கு வருவோம் .  இன்று உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று போராடும் சில செந்தமிழர்களையும்   ,  தன்மான தலைவர்களையும் நினைக்கையில் எனக்கு கோபமும் , வெறுப்பும் தான் வருகிறது .  இவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் ?  

உணர்ச்சி பொருந்திய உரைகளை அள்ளி வீசும் இவர்கள் செய்த மாபெரும் சாதனை என்ன தெரியுமா ...?  அறிவியலை தமிழன் கற்கவிடாமல் செய்தது தான் .. வேறென்ன சொல்ல முடியும் ...?  

பள்ளியில் கற்கும் சிறுவர்களை அழைத்து அவர்களை பள்ளிக்கு போகவிடாமல் செய்து அவர்களை கொண்டு போர்ராட்டங்களையும் , உண்ணாவிரதங்களையும் நடத்தும் இவர்கள் வருங்கால சமுதாயத்தை தவறான பாதையில் நடத்தி படுகுழியில் நடத்துகிறார்கள் என்ற ஏன் குற்றசாட்டை எப்படி இவர்கள் மறுக்க முடியும் ..?   

அறிவியலுக்கு விரோதமான எதிர்ப்பை சிறுவயதில் பாலகர்க்கு புகட்டும் இவர்கள் வளமிக்க தமிழ் சமுதாயத்தை எப்படி உருவாக்குவார்கள் ...?  நான் நினைக்கிறேன் ... ஒரு வேளை தமிழ் சமுதாயம் அறிவியலை கற்றுவிட்டால் இவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு யார் போவார்கள் என்று நினைக்கிறாகளோ ...?

என்னுடைய எழுத்துகள் பரிபூரணமாக மாயையை உடைத்து எறிவதற்காக தான் எழுதப்படுகின்றன .  அறிவியல் தமிழ் பெருகவேண்டும்  , அறிவியல் தமிழை கற்று அறிவியல் தமிழர்கள் பெருக வேண்டும் , அறிவியலில் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும் என்பது தான் இந்த இந்தியனின் விருப்பம் .

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அணுமின்நிலையங்கள் குறித்து யேர்மனி, யப்பான் போன்ற அதி உயர் அறிவியல் நாடுகளில் கூட எதிர்ப்பு இருக்கிறது. அந்த இரு நாடுகளும் தமது அனைத்து அணுமின்நிலையங்களையும் மூடும் நாளை குறித்து விட்டன. ஆகவே அந்த விடயத்தை மட்டும் வைத்து நாம் ஒரு சமூகத்தின் அறிவியல் அறிவு நிலையை மதிப்பிட முடியாது. ஐக்கிய அமெரிக்காவிலும் கூட பெரும்பான்மை மக்கள் படிவளர்ச்சிக் கொள்கையை, அறிவிய அண்டவியல் கொள்கைகளை ஏற்கவில்லை. எனவே அறிவியல் மனப்பக்குவத்தை தடுப்பதில் பல காரணிகள் உள்ளன. நீங்கள் கூறுவது போல அரச கொள்கைகள், கல்வி முறைகள் முக்கியமான காரணம். இன்னொரு காரணம் சமயம். மற்றையது மக்களிடம் இருக்கக் கூடிய இயல்பான ஆர்வம். சட்டம் மக்கள் மொழியில் இல்லை. மருத்துவரால் நோய்க்கான விளக்கத்தை தாய் மொழியில் விளக்க முடியவில்லை. இப்போது மக்கள் சாத்திரம், சாதகம், கிரகம் என்று நம்பித் தொலைகிறார்கள். இந்த நிலை இருக்கும் போது அணுமின்நிலையம் பற்றி மட்டும் ஒரு அறிவியல் விவாதம் நடக்க வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பாக முடியும்.

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி