Saturday 8 September 2012

கிழிகிறது திரு. உதயகுமாரின் போலி முகமூடி - ஒரு பகீர் ரிப்போர்ட்


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பயத்தினால் மக்களை போராடி வந்த போராட்டங்களையும் , கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்தும் பத்திரிகைகள் , நிகழ்வுகள் எல்லாவற்றிலும் பேசப்படுகிறது .  பதிவுலகத்திலும் பல பதிவுலக நண்பர்கள் தங்கள கருத்துகளை வெளியிடுகிறார்கள் .  நான் கூட இந்த நிகழ்வுகள் குறித்து விளக்கமாக இந்த வலைப்பூவில் பல கட்டுரைகள்  எழுதி உள்ளேன் .  இந்த சூழ்நிலையில் இன்று காலை தினத்தந்தி பத்திரிகையை படித்தவுடன் இந்த இடுகையை எழுதும் எண்ணம் தோன்றியது 

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் திரு. உதயகுமார் வஞ்சகமாக பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார் என்றும் அவரது நோக்கம் மக்களின் நியாயமான பாதுக்காப்பு அச்சங்களை போக்குவதில் இல்லை என்று நான் பல முறை பல ஆதாரங்களுடன் பதிவிட்டு இருக்கிறேன் .  ஆனால் திரு. உதயகுமார் மற்றும் சில பதிவுலக நண்பர்கள் இந்த போராட்டத்தை ஒரு அகிம்சை போராட்டம் என்றே வர்ணித்து வந்தனர்

 
இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான கடைசி போராட்டத்தை ( அகிம்சை ..? ) திரு. உதயகுமார் அறிவித்து உள்ளார் .  அதாவது நாளை 09 09 2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தை முற்றுகை இடப்போவதாக.  
இந்த சூழ்நிலையில் இடிந்தகரை மற்றும் அதை சுற்றியுள்ள சில மீனவ கிராமங்களில் அணுமின் நிலையத்தின் எதிர்ப்பு குழுவில் உள்ள 32 பேர் ஒரு அறிவிப்பை தண்டோரா போட்டு அறிவித்து உள்ளனர் .  அந்த அறிவிப்பு என்ன சொல்லுகிறது என்றால் , "  போராட்டத்தில் உயிர் இழக்கும் நபர்களுக்கு அணுமின் நிலையத்தின் எதிர்ப்பு குழுவின் நிதிக்குழு சார்பில் 5 லட்சம் வழங்கப்படும் " என்று.   ( நன்றி : தினத்தந்தி 08 09 2012 )

அதாவது அகிம்சை போராட்டம் என்று மக்களை தூண்டிவிடும் திரு . உதயகுமார் நாளைய போராட்டத்தை மிக பெரிய கலவரமாக உருவாக்க திட்டமிட்டு உள்ளார் என்பது தானே அர்த்தம் .  எப்படியும் சில உயிர்களை அந்த போரரட்டத்தில் இழக்க வைப்பதும் இவரின் திட்டம் என்று தெரிகிறது அல்லவா ..!
இவரை பார்த்தும் , இவர் இப்படி சொன்னதை ஆதரித்து எனக்கு பதில் எழுத காத்திருக்கும் நண்பர்களை பார்த்தும் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் ...
  1. இந்த முற்றுகை போராட்டத்திற்கு செல்லும் கூட்டத்தின் முன்பு நீங்களோ ( திரு. உதய்குமாரோ அல்லது திரு . புஷ்பராயனோ அல்லது மேற் சொன்ன பதிலை ஆதரிக்கும் யாரோ ) செல்ல தயாரா ...?
  2. ஒரு உயிருக்கு 5 லட்சம் என்று தைரியமாக அறிவித்து இருக்கும் நீங்கள் , உங்கள் உயிரை விட்டு அந்த 5 லட்சத்தை பெற்று கொள்ளுவீர்களா ...?
  3. அப்பாவி பெண்களையும் , குழந்தைகளையும் முன்னால் நிறுத்த திட்டமிட்டு இருக்கும் நீங்கள் ( திரு ,. உதயகுமார் , திரு. புஷ்பராயன் மற்றும் அவரின் கருத்துகளை ஆதரிப்பவர்கள் ) உங்கள் மனைவிகளையோ அல்லது பிள்ளைகளையோ முன் நிறுத்துவீர்களா ..?
அப்பட்டாக மக்களை நயவஞ்சக வார்த்தைகளினால் ஏமாற்றி வரும் திரு, உதயகுமாரின் மக்கள் தலைவன் என்ற போலி முகமூடி அவரின் இந்த வார்த்தையின் மூலம் கிழிந்துள்ளது ,   இதன் பிறகும் மக்கள் அவரின் பின்னால் செல்வதும் , மக்களாகிய தங்கள் நலனில் மாத்திரம் அக்கறை கொண்ட படியினால் இன்னும் கனிவுள்ளதுடன் அவர்களை அணுகும் அரசை கீழ்த்தரமாக நினைப்பதும் பரிதாபத்துக்கு உரிய நிகழ்வுகள் ..


 அப்படி ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் , அது திரு. உதயகுமார் மற்றும் அவரது நக்சல் கூட்டத்தின் மொத்த சதி திட்டத்தின் வெளிப்பாடு தான். அதை மக்களும் , எதிர்கால சமுதாயமும் ஒருகாலும் மன்னிக்க மாட்டார்கள்

23 comments:

  1. uthava vittal neengal summa irungal. uthayakuar is best

    ReplyDelete
  2. உங்கள் வாதம் முறையற்றது. உதயகுமாரின் கேள்விகளுக்கு மத்திய அரசு முழுமையான பதிலை இதுவரை தரவில்லை. இப்படி இருக்கும்போது உதயகுமார் போராட்டத்தைத் தூண்டுகிறார் என்று சொல்வது நிலக்கரிப் புகழ் காங்கிரஸால் மட்டும்தான் முடியும்.

    ReplyDelete
  3. உங்கள் பொய் குற்ற சாட்டுக்கு அளவே இல்லையா?

    5 லட்சம் அளிக்கப்படும் என்று கூறியதாக கூறுவது நீங்கள் மட்டுமே.
    தங்களின் லட்சணம் இதன் மூலம் நிச்சயம் வெளிப்படும்.
    மத்திய அமைச்சர் ஒருவரைப்போல் வெட்கம் என்பது இல்லையா?

    ReplyDelete
  4. It is true. It was said by the Agitation team that they will give 5 Lakhs / head. It was written in Tamil News Paper & also in Sun News.

    Good effort , please carry on

    ReplyDelete
  5. நண்பர்களுக்கு வணக்கம் .

    நான் வெளியிட்டுள்ள இந்த செய்தி ஒரு ஆதாரம் இல்லாத செய்தியாக இருக்கும் என் நீங்கள் நம்புவதில் இருந்தே , நீங்கள் திரு. உதயகுமாரை அளவுக்கு அதிகமாக நம்புகிறீர்கள் என்று தெரிகிறது . இந்த செய்தி 08 09 2012 தேதியிட்ட தினத்தந்தி நாளிதழில் ( Nagercoil edition ) இரண்டாவது பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது . திருநெல்வேலி edition கூட இந்த செய்தி வெளியிட்டுப்பதாக அறிந்தேன் . அந்த செய்தியின் புகைப்படத்தை உங்களுக்காக நான் இந்த பதிவுடன் இணைக்கிறேன் .

    08 09 2012 , மதியம் 1 30 மணி அளவில் சன் செய்திகளில் இதே செய்தி ஒளிபரப்ப பட்டது . எனவே திரு . உதயகுமார் அப்பாவி மக்களை முன் வைத்து ஆட நினைத்த கபட நாடகத்திற்கு முற்று புள்ளி வைக்கப்பட்டு விட்டது . அதனால் தான் மாவட்ட ஆட்சியாளர் கூட " அசம்பாவிதம் நிகழ்ந்தால் திரு. உதயகுமார் தான் பொறுப்பு " என்று Notice கொடுத்ததையும் நினைவு படுத்த விரும்புகிறேன் .

    தன்னை நம்பும் அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தும் திரு.உதயகுமாருக்கு எதிரான் எனது பதிவுகள் தொடரும் .

    தங்கள் வருகைக்கும் , கருத்துக்களுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் இருதயம்.
      தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திகளில் வரும் அனைத்தையும் நீங்கள் நம்பி விடுவீர்களா? அதென்ன குறிப்பிட்ட ஒரு நாளிதழ் செய்தியை மட்டும் நம்புகிறீர்கள். மற்ற செய்தித் தாள்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
      அது சரி. உங்களுக்கு தேவையான செய்தி எதில் உள்ளதோ அதை மட்டும் தானே நீங்கள் எடுத்துக் கொள்வீர்க்ள்...

      Delete
    2. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . இந்த நாளிதழ் வெளியிட்டது தவறு என்றால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் திரு. உதயகுமாரோ அல்லது அவரது சகாக்களோ , இந்த நாளிதழுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமே , மடியில் கணம் இல்லை என்றால்

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அண்ணே... இந்தியன் அண்ணே.. என்ன அண்ணே, 6 மாசமா ஆளைக் காணலை... எங்க போயிட்டீங்க?

    சரி, இந்த பதிவுக்கு வருவோம்... அண்ணே, தப்பு அண்ணே... 5 லட்சம் இல்லை... 50௦ லட்சம்ணே... எங்க வீட்டு வாசல்ல கூட நின்னு சொல்லிட்டு போணாங்கன்னே...

    பொழப்பத்த நாதாரி... என்ன பொய் இது...

    அது எப்படி... தண்டோரா மூலம் அறிவிச்சாங்களா? தண்டோரா யார் போடுவாங்கன்னு தெரியுமா? உள்ளாட்சி அமைப்புகள்தான் அப்படி செய்யமுடியும்... நீங்க என்னடான்னா... பத்திரிக்கைக்காரனுக்கு அரசு விளம்பரம்ன்னு எலும்ப விட்டெறிஞ்சா 5 லட்சம் என்ன 50௦ லட்சம்ன்னு கூட செய்தி போடுவான்...

    ReplyDelete
    Replies
    1. @ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் .

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

      குடியரசு நாடு என்பதால் தான் இந்த போராட்டத்தை இவ்வளவு காலம் அரசு பொறுமையுடன் அணுகியது என்பதை நீங்கள் மறந்து விடகூடாது . ஒரு வருடத்திற்கும் மேலாக மக்களின் அச்சத்தை போக்க பல விதங்களிலும் மத்திய , மாநில அரசுகள் தன்னால் ஆனா மட்டும் முயற்சித்தது . ஆனால் , மக்களோ தன்னை தவறாக நடத்தும் திரு. உதயகுமாரின் மாயவலையில் விழுந்து விட்டதால் இந்த நடவடிக்கை மிகவும் காலதாமதமாக தான் எடுக்கப்பட்டு உள்ளது . குடியாட்சி என்று சொல்லி மக்களை நக்சல்கள் எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பலாம் என்பதும் , அதை அரசு தடுக்க கூடாது என்பது கொஞ்சம் கடினம் தான் நண்பரே ...

      ஆனால் இந்த நடவடிக்கையில் மக்களை தூண்டி விட்ட திரு. உத்ய பட்டை கொண்டார் ஆனால் தூண்டப்பட்ட மக்கள் மாட்டி கொண்டார்கள் . அது தான் வேதனை

      Delete
  8. ஆதாரத்தின் ஆதாரமே வருக வருக. இவரு வாயை திறந்தால் உண்மை மட்டுமே பேசுவார். அந்த உண்மையை நம்பி தான் ஆக வேணும் என்று புலம்பல் வேறு. போங்க போய் பொழப்பை பாருங்க. மன்னிக்கவும் மறந்துவிட்டேன், உங்க பொழப்பே இது தானே

    ReplyDelete
    Replies
    1. @ பலசரக்கு : நண்பருக்கு வணக்கம் ,

      நீங்கள் அதிகம் நம்பும் திரு. உதயகுமாரை பற்றிய இந்த உண்மை உங்களுக்கு கொஞ்சம் கசக்க தான் செய்யும் . என்ன செய்வது

      Delete
  9. என்னண்ணே பதிலையே காணோம்....

    என்ன செய்றதா? ஆறு மாசமா தேசபக்தி வியாபரத்த விட்டுட்டு வேற என்னமோ பண்ணினீங்களோ அத்த Continue பண்ணுங்க...

    ReplyDelete
  10. 1988-இல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட போது தமிழகம் அழியும்,இனம் இல்லாமல் போகும் இதனால் என்று போரடிய ...மக்களும்,பத்திரிகை களும் இன்று அணு உலைக்கு ஆதரவளித்து........ போரடும் மக்களை....விலை போய்விட்டார்கள் ?
    உன்னை போல் சிலரும் கூறுகின்றனர் ........

    *விலை போனது போரடும் மக்களா? ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கும் உங்களை போன்ற படித்த அறிவாளியான மாக்களா?

    *போரடும் மக்களிடம் முட்டாள் கேள்வி கேட்கும் நீ ....அதன் பாதிப்பு உனக்கும் உண்டு என்று தெரிந்தும் கல்லாகி,ஐந்தறிவு ஜீவன்களாக போனது ஏன் ?

    *போராடும் மக்களை அயல் நாட்டுவரிடம் பணம் வங்கி விலை போனதாக .....மக்கள் வரி பணங்களை கொள்ளை அடித்து அயல் நாட்டு வங்கியில் கோடிகணக்கில் பதுக்கிய அரசியல் தலைவர்கள் கூறும் பொய்களை நம்பி ....எம்மக்களை பழி பேசும் அறிவாளிகளே ..!

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      நீங்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு இருக்கிறீர்கள் . தயை கூர்ந்து எனது பதிவுகள் அனைத்தையும் கவனமாக படியுங்கள் . அனைத்தும் ஆதாரங்களுடன் எழுதப்பட்டு இருக்கிறது . அதில் உங்களுக்கு என்ன சந்தேகம் என்று கேளுங்கள் , விளக்க முற்படுகிறேன் ,.

      எனது பதிவுகள் எதுவும் அப்பாவி மக்களுக்கு எதிரானது அல்ல , ஆனால் அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளவிடாமல் செய்து அவர்களை ஏமாற்றி அவர்களை போராட வைக்கும் விசமிகளுக்கு எதிரானது என்பதை நான் உங்களுக்கு கூறி கொள்ளுகிறேன்

      நன்றி

      Delete
  11. no wonder, as suspected these so called leaders are misguiding innocent people for their sponcers interest , a day that will bring this western sponsored drama to light - but who will remain other than this leaders ?

    ReplyDelete
  12. no wonder, as suspected these so called leaders are misguiding innocent people for their sponcers interest , a day that will bring this western sponsored drama to light - but who will remain other than this leaders ?

    ReplyDelete
    Replies
    1. Dear Fried ,

      thank you for your visit and your comment.

      lets wait for that day sir.

      Delete
  13. வணக்கம் இருதயம்.
    தமிழ் நாளிதழ்கள் மற்றும் செய்திகளில் வரும் அனைத்தையும் நீங்கள் நம்பி விடுவீர்களா? அதென்ன குறிப்பிட்ட ஒரு நாளிதழ் செய்தியை மட்டும் நம்புகிறீர்கள். மற்ற செய்தித் தாள்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையா?
    அது சரி. உங்களுக்கு தேவையான செய்தி எதில் உள்ளதோ அதை மட்டும் தானே நீங்கள் எடுத்துக் கொள்வீர்க்ள்...

    ---Joe Vinoth---

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . இந்த நாளிதழ் வெளியிட்டது தவறு என்றால் எதற்கெடுத்தாலும் வழக்கு போடும் திரு. உதயகுமாரோ அல்லது அவரது சகாக்களோ , இந்த நாளிதழுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாமே , மடியில் கணம் இல்லை என்றால்

      Delete
    2. அப்படியென்றால் மற்ற நாளிதழ் மீது நீங்களும் உங்களைப் போன்றவர்களும் வழக்கு தொடரலாமே. வழக்கு தொடர்வது நம் குறிக்கோள் அல்ல சகோதரரே. போராடினால் அவர்கள் நக்சல் தீவிரவாதிகள்?? உங்களை போல் போராடாமல் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பவர்கள் நல்லவர்கள். இப்படி பார்த்துக் கொண்டே இருந்து தான் இலங்கையில் நம் சொந்தங்களை இழந்தோம். அதே போல் இங்கும் நடை பெற வேண்டுமா? அனு உலை தவிர வேரு எதுவுமே உங்களுக்கு தெரியாது. மின்சாரம் அதன் மூலம் மட்டும் தான் கிடைக்குமா. மக்களுக்காக தான் அரசு. அரசிற்காக மக்கள் அல்ல. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் தேவையில்லை. மக்களின் வாழ்க்கைக்கு உதவாமல் இலவசங்களை அள்ளிக் கொடுத்தால் அது உங்களுக்கு நல்ல அரசு. ஏன் எங்களுக்கு சந்தேகம் வரக்கூடாதா? நீங்கள் சில கூடங்குளம் ஆதரவாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு பேசுகிறீர்கள் என்று நாங்கள் சந்தேகிக்களாமே.

      ---- Joe Vinoth -----

      Delete
    3. Dont link Srilankan issue here.That is big subject to discuss.Many people do not think about LTTE,s attrocities.LTTE is terrorist organization fought with Lankan army by using innocent people as shield.That is a main reason why many people dead in final war.
      Coming to subject.... one news paper publishing a news and u r blaming (or asking others to blame) other papers about non publishing of same news!

      Delete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி