Sunday 14 July 2013

போராட்ட வதந்திகளை ஊதித்தள்ளிய கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு தொகுப்பு



நாளேடுகள் முழுவதும் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட தொடங்கிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் அதே சாதனையின் தருணங்களில் , இந்த அணுமின் நிலையம் எத்தனை விதமான தவறான வதந்திகளுக்கு ( போராட்டக்காரர்களின் ) முற்றுபுள்ளி வைத்திருக்கிறது என்று எண்ணிப்பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு .




1.  கூடங்குளம் பகுதி முழுவதும் காலி செய்யப்படும் என்ற முதல் வதந்தி :-

பெரும்பாலான உள்ளூர் கிராம மக்கள் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட ஆரம்பித்ததே இந்த வதந்தியை நம்பித்தான் .  இது தான் போராட்டத்திற்கு மக்களை கூட்டி சேர்த்த யுத்தி என்று கூட என்னால் சொல்லமுடியும் . போராட்டம் தொடங்கிய ஆரம்ப கட்டங்களில் வலைப்பூவில் கூட அநேக பதிவர்கள் இந்த காரியத்தை முன் நிறுத்தி பதிவெலுதியதை  நாம் படித்திருக்கிறோம் . 
 
 3000 புல்டோசர்கள் தயாராய் இருப்பதாகவும் , அவைகள் மூலம் கூடங்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் தரைமட்டமாக்கப்படும் என்றும் இந்த பகுதி மக்கள் பயமுறுத்தப்பட்டு இருந்தனர் என்பதையும் நாம் அறிந்து இருக்கிறோம் . அந்த மாதிரி தருணங்களில் எல்லாம் அரசும் சரி , அணுமின் நிலைய நிர்வாகிகளும் சரி " மக்கள் தங்கள் இருப்பிடங்களை காலி செய்ய வேண்டிய அவசியம் இல்லை " என்று மாறி மாறி சொன்னபோதும் , போராட்டக்காரர்கள் அவைகளை பொய் என்றே மக்களை நம்ப வைத்தனர் .
 

இப்படிப்பட்ட தருணத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கினபடியால் " மக்களை காலி செய்யவேண்டும் என்ற வதந்தி பொய்யானது "


2. அணுமின் நிலையம் இயங்கினால் அருகில் வாழ முடியாத அளவுக்கு சத்தம் உண்டாகும் என்ற வதந்தி :-
 
 
கூடங்குளம் அணுமின் நிலையம் தனது சோதனை ஓட்டத்தை தொடங்கிய நாட்களில் , அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான சத்தமும் , அதிர்வுகளும் , புகையும் உண்டானது என்றும் , எனவே அணுமின் நிலையம் இயங்கும் காலம் முழுவதும் இப்படிப்பட்ட சத்தங்கள் அதிர்வுகள் உண்டாகும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர்


ஆனால் இந்திய அணுமின் கழகமோ , அணுமின் நிலையங்கள் இயங்கும் போது சத்தம் உண்டாகாது என்றும் , சோதனை ஓட்டத்தின் போது அதிகப்படியான நீராவி உற்பத்தியானால் அதை வெளியேற்றும் முறையை (   safety Valve ) பரீட்சித்து பார்த்ததினால் மாத்திரமே இந்த சத்தம் வந்தது என்று விளக்கினாலும் அதை கேட்பதற்கு யாரும் இல்லை 

அணுமின் நிலையத்தினால் உண்டாக கூடிய சத்தத்தை குறித்து நிபுணர் குழுவிடமும் போராட்ட குழு கேள்வி எழுப்பி இருந்தது . அதற்க்கு சத்தம் ஏதும் உண்டாகாது என்ற நிபுணர் குழுவின் பதில் ஏனோ மக்களிடம் சேர்க்கப்படவே இல்லை .


இன்றைக்கும் கூட சில வலைபூ நண்பர்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சத்தம் ஏதும் வரவில்லை எனவே அணுஉலை இன்னும் இயங்கவே இல்லை என்று ஆணித்தரமாக எழுதுவதை பார்த்தால் சிரிக்கவா அல்லது அழுவதா என்று தெரியவில்லை


(Source : https://www.facebook.com/henavel?fref=ts)

ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் சத்தமில்லாமல் தனது இயக்கத்தை தொடங்கி இருப்பது இந்த வதந்திக்கு வைத்த ஒரு பெரிய முற்றுப்புள்ளி தானே .

3. தரமற்ற பொருட்களால் ஆன் கட்டுமானம் என்ற வதந்தி :

ஆரம்ப நாட்களில் இருந்தே திரு உதயகுமாரும் அவரை சேர்ந்தவர்களும் கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் மண்ணால் கட்டப்பட்டது என்றும் அதில் உள்ள பொருட்கள் எல்லாம் தரமற்றவை என்றும் சொல்லி மக்களை ஏமாற்றியே வந்தனர் .


அரசும் , அறிஞர்களும் , அறிவியல் மேதைகளும் பொருட்களின் தரத்தை குறித்து சான்று கொடுதபோதேல்லாம் , அவர்களை தூற்றியே வந்த போராட்டகாரர்களின் பொய்யான வதந்தி இன்று தவிடு பொடியாயிற்றெ கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கதொடங்கியதால் .
 
 
இப்படி வதந்திகளை தவிடு பொடியாக்கி , அறிவியலின் அதிசயத்தை மக்கள் உணர தொடங்கி இருக்கும் அதே நேரத்தில் திரு உதயகுமாரின் புது போராட்ட அறிவிப்பு. அதன் பெயர் " மக்கள் திரள் மரண போராட்டமாம் ".  எங்கிருந்து கிடைக்கிறதோ இவருக்கு இப்படி பெயர்கள் . இப்பொழுதே தெளிய தொடங்கி இருக்கும் மக்கள் கூட்டம் இவருக்கு புரிய வைக்கும் நாங்கள முட்டாள்கள் அல்ல என்பதை

கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த அறிவியல் தொகுப்பை இதே வலைப்பூவில் நான் எழுதி இருக்கும் "கூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்பு" என்ற சுட்டியை சுட்டி படியுங்கள்

3 comments:

  1. அட இந்தியனே, நீங்களே ஒரு கேள்வியை உண்டுபண்ணி நீங்களே பதில் அளிப்பதுதான் உங்களுக்குத் தெரிந்தது... இல்லையா.?

    அணுவுலையில் தொடர் அணு நிகழ்வுகள் நடக்கவில்லை என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
    99.8 என்ற கட்டுமான பணி முடிந்துள்ளது என்ற நிலையில் இரு ஆண்டுகளாக இருப்பதற்கு என்ன காரணம் என்று எழுத துப்பில்லை.

    தானே, ஒரு இல்லாத பிரச்சனயை கூறி அதை தீர்த்து விட்டோம் என்ற அற்ப சந்தோசத்தில் நீங்கள் எவ்வளவு நாட்கள்தான் காலத்தை ஓட்ட முடியும்.?

    ReplyDelete
  2. இந்தியா என்று பார்க்கும் போது தென் பகுதி தமிழகம் ஒதுக்கப்படவேண்டும் என்பதும், தமிழகம் என்றால் தென் பகுதி குமரி ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் கால காலமாக எழுதப்படாத அரசியல் சட்டம் போல..மொத்தத்தில் தென் பகுதி என்றால் தேவை இல்லாத ஒன்று. குமரியில் வசிப்பவள் என்கிற முறையில் உலை அமைவதையும் செயல்படுவதையும் முற்றிலும் எதிர்க்கிறேன். உன் வீட்டின் அருகில் உயர் மின்அழுத்த கம்பம் வைத்தாலே எதிர்க்கும் நீ எங்கள் மாவட்டத்திற்கு உலை வைத்து, என் மக்கள் உயிருக்கு உலைவைத்து அந்த மின்சாரத்தில் சுகவாழ்க்கை அனுபவிக்க ஆசைபடுகிறாய்? மலையக துறைமுகம் வழியாக யுரேனியம் கொண்டு வந்த வண்டிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு + 8 மருத்துவ ஊர்தியும் கொண்டு வந்தீர்கள் ஆனால் நீங்கள் பாதுகாப்பு கருதி கொண்டுவர பயன்படுத்திய சாலையின் தரம்? கடந்த 9 ஆண்டுகளாக செப்பனிடப்படாத புதுக்கடை + திங்கள்நகர் + கடற்கரை சாலை இதில் இன்னும் சுவாரசியமான விடயம் என்னவென்றால் உள்ளூர் அரசியல்வாதிகள் கூட தங்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு இந்த சாலையை பயன் படுத்துவது கிடையாது. (இதே சாலையோரத்தில் தான் ராட்சத குழாய்கள் பதித்து கிராம புற குடிநீர்பயன்பாடு என்ற திட்டத்தில் குழித்துறை ஆற்றில் இருந்து உலைக்கு நன்னீர் கொண்டுசெல்லப்படுவது வேறு கதை).

    ReplyDelete
  3. All the above comments given by radhisha is foolishness. People can understand the truth of this article... Good article....keep writing..

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி