Tuesday 24 January 2012

மின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்

கடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது  ( கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில்  கூட )  .  இது ஒரு நல்ல ஆரோக்கியமான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .  சில தினங்களுக்கு முன்பு இந்த மின்சார சேமிப்பை குறித்து எனது நண்பர்கள் சிலர் கேள்வி எழுப்பியதால் , இந்த கட்டுரை எழுதலாம் என முற்ப்பட்டேன் . 


மின்சாரம் பொதுவாக யூனிட் என்ற அளவுகளில் நாம் அறிந்திருக்கிறோம் .  அந்த யூனிட் அளவுகளுக்கு தான் நாம் மின்வாரியத்திற்கு கட்டணம் செலுத்துகிறோம் . எனவே யூனிட் என்றால் என்ன என்று நாம் அறிந்து கொள்ளுவோம் .  மின்சாரத்தை நாம் WATTS ( பல்புகளில் பார்ப்போமே ) என்ற அளவுகளில் கணக்கிடுகிறோம் .   ஒரு மணி நேரத்தில் 1000  வாட் மின்சாரம் பயன்படுத்தினால் அதுவே ஒரு யூனிட் என்று அழைக்கப்படுகிறது .  இதை ஒரு கிலோ வாட் என்றும் அழைக்கலாம் .  


சரி இப்பொழுது கவனிப்போம் .  குண்டு பல்புகள் குறைந்தது 40W , 60W , 100 W என்ற அளவுகளில் இருக்கிறது என்று வைத்து கொள்ளுவோம் .  நீங்கள் 40W பல்பு ஒன்றை 25   மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 40 x 25 = 1000 ).  ஆனால் அதே நேரம் 18 W CFL பல்பு உபயோகப் படுத்தினால் கிட்டத்தட்ட 55  மணி நேரம் எரியவிட்டால் ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும் ( 55 .5 x  18  =  1000 ). . எனவே குண்டு பல்புகளை நாம் மாற்றினால் நாம் மின்சாரம் சேமிக்கலாம் .  இந்த சேமிப்பு இருந்தால் போதுமே , அணுமின் நிலயங்கள் எதற்கு என்பது தான் எனது நண்பர்களின் வாதம் .  


சரி அப்படியானால் நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் மற்ற பொருட்களை ஏன் நீங்கள் நினைத்து பார்க்கவில்லை என்று கேட்டேன் .  அவர்களுக்கு விளங்கவில்லை .  நமது வீட்டில் பயன்படுத்தும் சில பொருட்களுக்கு ஆகும் மின்சார செலவை கணக்கிட ஆரம்பித்தேன் .  சில உங்கள் பார்வைக்கும் ...



Appliances

Watts
Electric Heater
-
5000
Refrigerator    - 20 Cu Ft
-
800
Freezer  - 20 Cu Ft
-
550
Well Pump ½ HP
-
1000
Well Pump 1HP
-
2000
Microwave Oven 800W
-
1200
Microwave Oven 1000W
-
1500
Coffee Maker
-
900
Toaster
-
900
Computer
-
250
TV - 32" Color
-
170
Stereo System
-
140
Clothes Iron
-
1100
Washing Machine
-
1000
Electric Clothes Dryer
-
6000
Hair Dryer
-
1600
Air Conditioning 1 Ton
-
2000
Air Conditioning 2 Ton
-
3000
Air Conditioning 3 Ton
-
4500
Window A/C
-
2000
Ceiling Fan
-
100
Vacuum Cleaner
-
780
Central Vacuum
-
1750


இப்பொழுது  சொல்லுங்கள் , நமது தேவை எவ்வளவு என்று ..?  யாரும் பதில் சொல்லவில்லை . நாம் சேமித்தாலும் நமது தேவையை எட்டமுடியாத தொலைவில் உள்ளோம் என்று சொன்ன போது கொஞ்சம் புரியாமல் விழித்தார்கள் .  நான் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தேன் .


இந்தியாவில் சராசரி தனிமனித பயன்பாடு 800 Kwh அதாவது 800 யூனிட் ஒரு ஆண்டிற்கு . ஆனால் அமெரிக்காவில் 5000 யூனிட்டும் ,  ஐரோப்பிய நாடுகளில் தனி மனித பயன்பாடு சராசரியாக 10000 யூனிட்டும் உள்ளது .  உலக அளவில் சராசரியாக தனிமனித பயன்பாடு கிட்டத்தட்ட 3000 யூனிட் .   இந்தியா அந்த 3000 யூனிட் சராசரி பயன்பாட்டை அடைய வேண்டும் எனில் 500 GWe மின்சாரம் தேவை . அதாவது 500000 MWe மின்சாரம் தேவை .  ஆனால் தற்பொழுது இந்தியாவின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களின் அளவும் 182 GWe மின்சாரம் மட்டுமே . அதாவது 182000 MWe மின்சாரம் மட்டுமே .  இன்னும் நமது தேவை கிட்டத்தட்ட 150  சதவீதம் அதிகம் என்ற பொழுது ஒரு திகைப்பு அவர்களுக்கு ஏற்ப்பட்டது .

உடனே கேட்டார்கள் ... அப்படியெனில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்று ...  அவர்கள் கேள்வியில் நியாயம் உள்ளது .  நமது தேவையை இன்னும் அதிகம் சந்திக்கலாம் . 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுவதால் அணுமின் நிலையங்கள் நிறைந்த பலனை கொடுக்கும் என்ற பொழுது எப்படி என்ற கேள்வி தான் மேலோங்கி நின்றது .


சரி ... விளக்குவோம் என்று ஆரம்பித்தேன் .  கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அளவு 1000 MWe என்பது நமக்கு தெரியும் .  1 MWe என்றால் 1000 கிலோ வாட் / மணி  அதாவது ஆயிரம் யூனிட் .  ஒரு மணி நேரத்தில் 1000 MWe என்றால் 10 லட்சம் யூனிட் ( அதாவது 1000 x 1000 ).  அப்படியெனில் 24 மணி நேரத்தில் அதாவது ஒரு நாளில் 240 லட்சம் ( அதாவது 24000000 யூனிட் )  யூனிட் மின்சாரம் தயாரிக்கும் வல்லமை கொண்டது .  அதாவது ஒருமாதத்தில் 72 கோடி யூனிட் ( 720000000 ) மின்சாரம் தயாரிக்க முடியும் .  இப்பொழுது புரிகிறதா .... வளரும் இந்திய மின் தேவைக்கு அணுமின் நிலையங்களின் பங்கு என்றபொழுது .... அனைவரும் ஒருமித்து சொன்ன பதில் ஆம் என்பது ......


மின்சாரத்தை சேமிப்போம்  ,  அணுமின் நிலையங்களை நாம் வரவேற்ப்போம் .  எதிர்காலத்தை ஒளிமயமாக்குவோம் என்பது இந்த இந்தியனின் கோரிக்கை .

25 comments:

  1. UNGAL THALATHTHAI MUTHAL MURAYAAGA VAASIKINREN. BOPAAL VISAVAIVAAL PAATHIKKAPATTA MAKKALUKKU INNUM NIVAARANAM KIDAIKKAVILLAYE? APPURAM EPPADI ANU ULAIGALAI ATHARIKKA MUDIYUM?. OOLAL NIRANTHA NAATTIL ANU ULAI AABATHTHAANATHE.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      நீங்கள் போபால் விபத்தையும் , அணுமின் நிலையங்களையும் சம்பந்தபடுத்தி பேசுவது ஏற்புடையது அல்ல என்பது என் கருத்து. அணுமின் நிலையங்கள் அதி நவீன பாதுகாப்புடன் கட்டப்பட்டு , AERB என்ற ஒழுங்கு முறை ஆணையத்தால் முழுவதும் தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு , AERB மற்றும் WANA போன்ற பன்னாட்டு அமைப்புகளின் கீழ் செயல்படுகிறது . தவீர பல அடுக்கு பாதுகாப்பும் , பல மடங்கு பாதுகாப்பும் உள்ளதால் , அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானவை என்பது தான் உண்மை .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
    2. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று பலர் கூறுகிறார்கள்.
      Chernobyl அணு மின் நிலையம் நவீன பாதுகாப்புடன் (அன்றைய பாதுகாப்புடன்) கட்டப்பட்டது. ஆனால் அது உடைந்தது. Fukushima அணு மின் நிலையம் நவீன பாதுகாப்புடன் (அன்றைய பாதுகாப்புடன்) கட்டப்பட்டது. Chernobyl அணு மின் நிலையத்தில் செய்த தவறுகளை சரி செய்து கொன்டனர். ஆனால் Fukushima அணு மின் நிலையமும் உடைந்தது. ஆனால் இன்று கூடங்குளம் அணு மின் நிலையம் நவீன பாதுகாப்புடன் கட்டபட்டடுளது என்றும் Chernobyl மற்றும் Fukushima அணு மின் நிலையத்தில் நடந்த தவறு கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடக்காது என்றும் கூறுகிறார்கள். அதனால் பயப்பட தேவையில்லை என்று நம்ப சொல்லுகிறார்கள். அவர்கள் அப்படி தான் சொல்லுவார்கள். ஏன் என்றல் அவர்கள் இழப்பதற்கு ஒன்றும் இல்லை. ஒருவேலை விபத்து நடந்தாலும் "பாதுகாப்பானது என்று" நம்பிக்கை தெரிவித்தவர்களுக்கு தண்டனை இல்லை. அப்படியே யார் மீதாவது குற்றம் சுமத்தினால்,விபத்து என்றும் black swan theory என்றும் சொல்லி தப்பித்து விடுவார்கள். ஆனால் நாம்
      அனைத்தையும் இழந்துவிடுவோம். தமிழ்நாடு என்ற பெயரில் சுடுகாடு மட்டும் மிஞ்சும்.

      கடவுளால் கூட மூழ்கடிக்க முடியாது என்று சொல்லப்பட titanic கபால் தன்னுடைய முதல் பயணத்தில் மூழ்கிவிட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் பாதுகாப்பானது என்று நம்புவது எப்படி?

      Delete
    3. @ JAX
      நண்பருக்கு வணக்கம் .,

      தங்களது கேள்விகள் மிக உணர்வு பூர்வமாக கேட்கப்பட்டுள்ளது என்பதயும் மிகுந்த அக்கறையுடன் கேட்கப்பட்டு உள்ளதையும் நான் உணர்கிறேன் .

      முதலாவது நீங்கள் கூடங்குளம் மற்றும் Chernobyl போன்ற இரண்டு அணுமின் நிலையங்களை ஒப்பிடுகிறீர்கள் . இரண்டு அணுமின் நிலையங்களும் வடிவமிப்பில் , தொழிநுட்பத்தில் முற்றிலும் மாறுபட்டவை என்பதை நீங்கள் தயை கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள் . Chernobyl முதல் தலை முறை அணுமின் நிலையம் ஆனால் கூடங்குளம் மூன்றாம் தலைமுறை நவீன அணுமின் நிலையம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

      இரண்டாவது கூடங்குளம் மற்றும் புகுஷிமா அணுமின் நிலையங்களை ஒப்பிடுகிறீர்கள் . என்னிடத்தில் மிக அதிகம் பேர் கேட்ட நியாயமான கேள்விகளில் இதுவும் ஓன்று . நீங்கள் ஏன் என்னுடைய " கூடன்குளமும் புகுஷிமாவும் ஒன்றா ?" என்ற கட்டுரையை வாசிக்கக்கூடாது ? http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_20.html . உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் .

      தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்ற உங்கள் சந்தேகம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் . இதுவரை 20 அணுமின் நிலையங்களை இந்திய அணுசக்தி துறை இயக்கி வருகிறது . பாதுகாப்பாக .....! கடந்த 40 வருடங்களாக .....! இந்திய அணுசக்தியின் கொள்கையே "பாதுகாப்புக்கு முதலிடம் " என்பது தான் .

      Titanic கப்பலையும் கூடங்குளம் அணுமின் நிலயத்தையும் நீங்கள் ஒப்பீடு செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள் .

      உங்கள் கேள்விகள் என்னை ஊக்குவிக்கிறது . தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  2. ANU ULAIGAL NIRUVALAAM THAPPILLAI. AANAAL INTHA INDIA AATCHIYAALARGALAI NAMBI NIRUVA MUDIYAATHU. IVARGALUKKU PANAM KIDAITHTHAAL ENNA VENDUMENDRAALUM SEIVAARGAL.OOLAN NIRAINTHA NAADUGALUKKU ANU ULAI AABATHTHAANATHE. ATHIL INTHIYAVUM ADANGUM. NAALAI BAATHIKKA POVATHU APPAVI MAKKAL THAAN.MUTHALIL OOLALAI OLITHTHUVITTU VAARUNGAL PINBU ANU ULAI AMAIKKALAAM

    ReplyDelete
  3. your writings are analytical and informative. Keep it up your good work.:)

    ReplyDelete
    Replies
    1. Thank you Sir. Your comments are encouraging me to go foward. I request your continuous support & Visit.

      Thank you

      Delete
  4. Replies
    1. நண்பருக்கு வணக்கம் .

      தங்கள் கருத்துகள் என்னை ஊக்குவிக்கிறது . தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete
  5. ஏண்டா , நீங்கள் அணுமின் நிலையத்தின் ஆதரவாளர்களா ...? அது தான் இப்படி எழுதுகிறீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நான் உண்மைகளை ஆதாரத்துடன் பேசுகிறேன் / எழுதுகிறேன் என்பது தான் உண்மை. கொஞ்சம் அணுமின் நிலையங்களை குறித்த உங்கள் தவறான கண்ணோட்டத்தில் இருந்து வெளியில் வந்து , நான் கொடுக்கும் தகவல்களை அலசி பாருங்கள் . நீங்களும் புரிந்து கொள்ளுவீர்கள் .

      ஆக்கப்போர்வமான கேள்விகள் என்னை மிகவும் ஊக்குவிக்கும் . உங்கள கேள்விகளுக்காக காத்திருக்கிறேன் . தொடர்ந்து வருகை தாருங்கள் .

      Delete
  6. ஏண்டா நீ என்ன அணு உலை எதிர்பாலரா இப்படி கமெண்ட் அடிக்கிற.........உன் பக்கம் கருத்துக்கள் இருந்தால் அதை சொல்லி விவாதம் செய்,அதை விட்டுட்டு...........

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நாம் கோபப்படுவதினால் என்ன லாபம் . உண்மையை அறிந்து கொண்ட கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்கிறோம் . வெகு சீக்கிரம் , நம் நண்பர்கள் அனைவரும் அறிந்து கொள்ளுவார்கள் .

      தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  7. Iyaa , ungal katturai arumaiyaaga thaan ullathu. anumin nilayathirkku ethiraaga oru samoogamae poraadugirathe.. appdiyenil meenpidi tholil paathikkappadum entru thaanae artham . athai neengal vilakka mudiyumaa?

    Judes

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      மிக முக்கியமான ஒரு நல்ல கேள்வியை நீங்கள் எழுப்பியுள்ளீர்கள் . அணுமின் நிலையங்களினால் கடல் வாழ் உயிர்களுக்கும் , மீனவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பது தான் உண்மை . இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் . இதை குறித்து விளக்கமாக ஒரு இடுகை எழுத விரும்புகிறேன் . நீங்கள் கொஞ்சம் பொறுக்க முடியுமா ?

      நன்றி

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. hi its true but u just know about the population of kudankulam.its not a village.10,000 ration cards in there.u want the power for ur electronics items. But if Power plan is run we wil dead in there.now the uranium radiation level is incresed.the whole near by sea area is affected around 60km.all the thirty thousand peopls dont want that.we r taking about our livings. But the peopls who r want power plan saying about ur personal life...

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      உங்களது கேள்வியை படித்து பார்க்கும் போதே , நீங்கள் குழப்பத்தில் தான் இந்த கேள்விகளை கேட்பது போல தோன்றுகிறது .

      முதலாவது ... கூடங்குளம் பெரிய கிராமம் என்கிறீர்கள் . இருக்கலாம் . நாங்கள் எல்லாரும் செத்து போய் விடுவோம் என்கிறீர்கள் . நண்பரே ... நீங்கள் ஏன் இப்படி குழம்ப வேண்டும் . யோசித்து பாருங்கள் . அணுமின் நிலையனகள் வருவதினால் சாவு உண்டாகும் என்றால் அமெரிக்காவில் மாத்திரம் 104 அணுமின் நிலையங்கள் உள்ளது . அங்கு எல்லாரும் செத்து போய் அல்லவா இருக்கவேண்டும் ...?

      இரண்டாவது யூரேனியம் Radiation கூடி உள்ளது என்று சொல்லுகிறீர்கள் . பரவாயில்லை ... எப்படி உங்களுக்கு தெரியும் என்று நான் கேட்டால் , உங்களிடம் பதில் இருக்காது என்பதும் எனக்கு தெரியும் . நண்பரே , நாம் இயற்கையாக வாங்கி கொண்டிருக்கும் கதிர் வீச்சின் அளவு தான் அதிகரித்து இருக்க முடியும் . தயவு செய்து கதிரியக்கம் குறித்த எனது பதிவை படித்து பாருங்கள் .

      60 KM கடற்கரை பாதிக்கப்பட்டுள்ளது என்று சொல்லுகிறீர்கள் . இதுவும் ஒரு தவறான தகவலே . அணுமின் நிலயங்கள கடல் வளத்தை பாதிப்பது இல்லை . கொஞ்சம் பொறுங்கள் . இது குறித்து நான் ஒரு தனி இடுகை இட விரும்புகிறேன் .

      உங்கள் சந்தேகங்களையும் , கேள்விகளையும் நீங்கள் கேட்பது எனக்கு மகிழ்வாக உள்ளது . தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி

      Delete
  10. Dear Sir, Your articles are very much useful and based on scientific facts. Since it is in Tamil, it will definitely be helpful in reaching more and more people across the south.

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you for your visit . My heart overwhelms for your kind encouragement. Thank you...

      Delete
  11. Why the American Government did not erect 1000 nuclear plants as they decided on 1973? They have 104 nuclear plants only. Why they have not started new plants in last 30 years? Why Germany announced that they close all nuclear plants within a time frame? Why Australia did not have a single Nuclear power plant even though they have plenty of Uranium and selling it to all over the world? Don't You know that the people from hamlets around Kalpakkam are affected by Cancer? Don't you know that the nuclear wastage should be preserved for thousands of years? Do you know that there are many alternatives for power production? Do you know that the nuclear power plant companies need not to compensate more than 1500 crore if any accident occurs. Do you know that in koodankulam project, initially Russia agreed that the wastage will be buy back, then it rejected the proposal and now we have to preserve those wastage. Why America is keen on making more nuclear plants in India? Instead they can make more plants there. Do you know that Israel will help us if any disaster occurs in koodankulam? Is this not tell the fact that we don't have such technology and we must rely on Israel?

    ReplyDelete
    Replies
    1. Dear Friend,

      Thank you very much for your visit and constructive questions. Many of your questions had been asked by many of our friends and had been answered by me on various occasions. however , i would like to answer you now also...


      //Why the American Government did not erect 1000 nuclear plants as they decided on 1973? They have 104 nuclear plants only. Why they have not started new plants in last 30 years?//

      its a very good question. Dear Friend , Americans were Constructing many Gas & Oil Power Plants. Construction 4 x 1000 MWe AP reactors have been already started in Georgia & Vogtle with a capital cost of 1.6 bollion dollar. Not only that , you may have a glance of future Nuclear reactors of USA in the following given site. http://www.world-nuclear.org/info/inf41.html

      Delete
    2. // Why Germany announced that they close all nuclear plants within a time frame?//

      It is also a good question. Dear Friend , after Chernobyl Incident Germanay declared that its Nuclear Capacity will be closed by 2002. but what happened../ they have not closed any reactors. Now after Fukushima ... they are telling that we will phase out our reactors by 2020. Ok... Let us hope that they will phase out Nuclear Reactors. But they are importing Power from France , where the power is produced by Nuclear. But in India , whether we have any possibility of importing Power?

      Delete
    3. //Why Australia did not have a single Nuclear power plant even though they have plenty of Uranium and selling it to all over the world? //

      It is also a good question. Australia is having 70% ureniam reserve. Yes i do agree with you... But at the same time , we have see onething. 22.7 million ( 5 times lesser than India ) people are living in Australia in 7617930 SqKm ( 3 times greater than India). 77% of Australian electricity is produced by Coal, as they have plenty of Coal. What i want to say is their demand of electricity is lesser than India.

      However , in 2005 , Australia planned to construct its first Civil Nuclear reactor in South wales and some tenders are also floated for the same. But unfortunately Mr.John Howard , the pro Nuclear had been defeated. Hence the plan was dropped by the New Govt.

      Dear Friend, you know one thing 38% of green house gases are being released by Australian Thermal Power Plants. To reduce the Carbon emission , very soon Australia will take a decision to come to Nuclear.

      Delete
  12. Dear Friend , you are talking about Cancer. May i ask you some questions..? on what basis , you are telling that Cancers are coming because of Nuclear Reactors. ? why are you not talking about Natural Radiation which is much high in Chennai and Coastal areas. You want to hide all these information from the public...?

    You are talking about Nuclear Waste. I suggest you to have a look on my earlier writings in the topic of "அணு கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு - ஒரு அறிவியல் பார்வை " - http://naanoruindian.blogspot.in/2011/10/blog-post_15.html.


    //Why America is keen on making more nuclear plants in India? Instead they can make more plants there//

    As the demand is more in India , naturally Suppliers will keen on making their products. It is common rule.

    Further , you are asking , whether USA / Israel will help us something happens....? Friend, you are confusing yourself that we have our own safety systems and rules and regulations. They are only the suppliers. Thats all.

    I really enjoyed in this constructive conversation with you...

    Thank you

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி