Saturday 28 January 2012

கடல் சார் வாழ்வும் - கூடன்குளமும் - ஒரு ஆய்வு



கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா என்று பல நண்பர்கள் நேரிலும் , பதிவுலகத்திலும் கடந்த சில நாட்களாக கேட்க ஆரம்பித்தனர் .  ஒரு நண்பர் ஒரு படி மேலே போய் , அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வு பாதிக்கப்படும் என்பதினால் தான் மீனவ சமுதாயமே போராடுகிறது என்ற பொழுது நான் ஆச்சரியப்பட்டு போனேன் .  அதன் விளைவு தான் இந்த பதிவு எழுத முனைந்தது .
 
 
 முதலாவது என்னிடம் அநேகர் கேட்ட கேள்வி என்னவெனில் , " அணுமின் நிலையத்தின் கழிவுகள் / கதிர்வீச்சு கலந்த தண்ணீர் கடலில் கலக்கப்படுவதால் கடலில் உள்ள மீன்கள் செத்து போய் விடும் என்று சொல்லுகிறார்கள் .  அது உண்மையா ? " என்பது தான்.
 

இந்த கேள்வி அணுமின் நிலையத்தின் செயல்பாடுகளை குறித்து அறியாத நண்பர்கள் கேட்பதினால் , நாம் இதை குறித்து எழுதுவது / சொல்லுவது அவசியம் எனக் கண்டேன் .    அணுமின் நிலையத்தின் மூன்றாம் சுற்றின் தண்ணீர் ( அதாவது அணு உலைக்கு எந்த விதத்திலும் சம்பந்தப்படாத சுற்று ) கடலில் கலப்பதால் , எந்த கதிர்வீச்சும் கடலில் சேரமுடியாது .  இதை குறித்து நான் ஏற்கெனவே " அணுமின் நிலையங்கள் சில கேள்விகள் சில பதில்கள் " என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளேன் .  தகவலுக்கு : http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html கொஞ்சம் படியுங்கள் .
 
 
கதீர்வீச்சு கடலில் கலக்க வாய்ப்பிலாததால் கடல் சார் வாழ்க்கை எப்படி பாதிக்கப்பட முடியும் ?  மாத்திரமல்ல .   பொதுவாக மீனவ மக்கள் அதிகமாக  இருக்கும் இந்திய பெருங்கடலின் வெப்பநிலை 22 - 28 டிகிரி செல்சியஸ் . தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Indian_Ocean . பொதுவாக அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் கடல் நீர் 4 - 6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமுடையதாக இருக்கும் . ஆனால் அதுவும் இந்த மகா சமுத்திரத்தில் கலக்கும் போது கடலில் வெப்பநிலை உயர்வு அதிகபட்சம் 1 அல்லது 2 டிகிரி தான் இருக்கும் . அப்படி வெப்பநிலை சிறிது உயர்ந்து வெதுவெதுப்பு உண்டாகும் போது மீன்கள் இனவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் . இது தான் உண்மை,.



ஒருவேளை நான் இப்படி எழுதுவது சந்தேகத்தை கொடுக்கும் என்பதினால் , அணுமின் நிலையங்கள் அமைந்திருக்கும் மற்ற நாடுகளில் மீன் பிடிக்கும் தொழிலை குறித்து ஆராய முனைந்தேன் .   மற்ற நாடுகள் எல்லாம் கொஞ்சம் நிலம் , கொஞ்சம் கடல் என்று இருப்பதால் ,  முழுவதும் கடல் சூழ்ந்த நாட்டை குறித்து ஆராய்ந்தால் என்ன என்று நினைத்து பார்த்தேன் .  ஜப்பானை தவீர வேறு ஒன்றையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை .  என்ன ஜப்பான் ஒரு நல்ல உதாரணம் தானே .
 
 
 ஜப்பான் - கிட்டத்தட்ட 54  அணுமின் நிலையங்கள் இருக்கிறது . அனைத்தும் கடற்கரையில் தான் இருக்கிறது .  ஜப்பான் அணுமின் நிலையங்கள் எப்படி அமைந்துள்ளது என்பதை கொஞ்சம் பாருங்கள் 
 
 ( Source:http://energybusinessdaily.com/wp-content/uploads/2011/03/japan_nuclear_plants_locations.gif )


Tomari :   இந்த பகுதியில் ஜப்பான் 3 அணுமின் நிலையங்களை அமைத்துள்ளது   ( 2 X  579 MWe  and  1 X 912 MWe ).  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Tomari_Nuclear_Power_Plant .   சரி .  இந்த பகுதியில் மீன் பிடி தொழில் ஏதாவது பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்ற உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லுவதை விட  கொஞ்சம் இந்த youtube video வை பாருங்கள் . http://www.youtube.com/watch?v=H7cGCXct8fc 
 
Onagawa :  இந்த பகுதியிலும் ஜப்பான் 3 அணுமின் நிலையங்களை அமைத்துள்ளது  ( 1 X 524 MWe and 2 X 825 MWe ).  தகவலுக்கு : http://en.wikipedia.org/wiki/Onagawa_Nuclear_Power_Plant .   இந்த பகுதியில் தான் Saury எனப்படும் மீன்கள் விற்கப்படும் ஜப்பானின் மிகப்பெரிய சந்தை இருக்கிறது .  மேலும் தகவலுக்கு : http://www.houseofjapan.com/local/onagawa-fish-market-auctions .
 
 
என்ன நான் சொல்லுவது உங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறதா ...?   இன்னும் ஒரு ஆச்சரியத்தை உங்களுக்கு நான் தருகிறேன் .  உலகின் அதிக மீன் கிடைக்கும் ( 3 வது இடம் ) இடமாக ஜப்பான்  உள்ளது .   அட அப்படியா ....  ஆமாம் ...தகவலுக்கு : http://www.nationsencyclopedia.com/Asia-and-Oceania/Japan-FISHING.html 

நண்பர்களே .., நான் எழுதியுள்ள அனைத்தும் ஆதாரங்களுடன் தந்திருக்கிறேன் .   நான்கு பக்கமும் கடல் சூழ்ந்துள்ள ஜப்பான் 54 அணுமின் நிலையங்களை கொண்டு இருக்கிறது ஆனால் மீன் வளத்தில் உலகில் மொன்றாவது இடத்தில இருக்கும் போது ,  அதி நவீன கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்வு பாதிக்கப்படும் என்ற வாதத்தை நாம் எப்படி ஏற்று கொள்ளமுடியும் ...?  என்பது தான் இந்த இந்தியனின் கேள்வி .



எனவே ... சுற்று சூழலை பாதிக்காத அணுமின் நிலையத்தை வரவேற்ப்பதில் நமக்கிருக்கும் தயக்கத்தை தூர எறிந்து விட்டு , நமது நண்பர்களிடமும் , மீனவ சமுதாயத்திடம் சொல்லுவோம் உண்மையை .... ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்ப்போம் .
 
 

9 comments:

  1. இது மாதிரியான தகவல்களை நம் மத்திய அரசு அப்பகுதி மக்களுக்கு தெரிவித்து ஆதரவை பெற முயற்சி செய்யலாமே?

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா.... முயற்சி செய்வார்கள் என நம்புவோம் . தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete
  2. நானும் அணுமின் நிலையம் தேவையா? என்ற கருத்து உடையவனே. இருந்தாலும் இது மாதிரி தகவல்கள் நிச்சயம் நிறைய நண்பர்களின் மனதை மாற்றும். நல்ல பதிவு.

    ReplyDelete
  3. நண்பருக்கு வணக்கம் .,

    தங்கள் வருகைக்கும் , ஊக்கம் தரும் நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி.

    தொடர்ந்து வருகை தாருங்கள் .

    ReplyDelete
  4. தோழரே நீங்கள் திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாத கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள்... நீங்கள் சொல்வது போல் ஜப்பானில் அணு உலை கழிவுகளை கடலில் கரைக்கவில்லை. மேலும் சகோதரர் முத்து கிருஷ்ணன் பேசி இருக்கும் வீடியோவுக்கு பதில் கொடுக்காமால் அணு என்றால் என்ன வென்று அறிந்து கொள்ளாமலேயே அதை ஆதரிக்கும் ஒரு ஆள் நீங்களாகத்தான் இருக்க முடியும். அணு கழிவுகளின் வீரியம் போக குறைந்தது இருபத்தைந்து ஆயிரம் ஆண்டுகள் ஆகும் அதன் கதிர்வீச்சு போக என்பதே விஞ்சான உண்மை/. உங்களை இந்தியன் என்கிற தேசிய மாயை இப்படியெல்லாம் பேச வைக்கிறது.முதலில் மனிதன் என்கிற நிலையில் இருந்து பேசுங்கள் அப்புறம்தான் நாடு மதம் மொழி எல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ..

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...

      // தோழரே நீங்கள் திரும்ப திரும்ப ஆதாரம் இல்லாத கருத்துக்களை பதிந்து வருகிறீர்கள்.//
      இவ்வளளவு ஆதாரங்களுடன் நான் கட்டுரைகளை எழுதி இருந்தும் , நீங்கள் ஆதாரம் இல்லை என்று கூறுவது கொஞ்சம் வியப்பாக தான் இருக்கிறது .
      // ஜப்பானில் அணு உலை கழிவுகளை கடலில் கரைக்கவில்லை.//
      அதே போல தான் கூடங்குளம் என்பதை நீங்கள் ஏன் ஏற்க்க மறுக்கிறீர்கள் ...?

      //அணு என்றால் என்ன வென்று அறிந்து கொள்ளாமலேயே அதை ஆதரிக்கும் ஒரு ஆள் நீங்களாகத்தான் இருக்க முடியும்.//
      அணுவை குறித்து நீங்கள் என்ன அறிந்துள்ளீர்கள் என்பதை எனக்கு அறிவித்தால் , நாம் தொடர்ந்து ஆரோக்கிய விவாதத்தில் பேசுவதற்கு வசதியாக இருக்கும் .

      அணுக்கழிவுகள் குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு எனது " அணுக்கழிவு இந்தியாவின் நிலைப்பாடு " என்ற கட்டுரையை காணுங்கள் . http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_15.html . கதிர்வீச்சு குறித்த தகவல்களுக்கு " கதிரியக்கம் என்றால் என்ன ?" என்ற எனது கட்டுரையை காணுங்கள் .

      சகோ . முத்து கிருஷ்ணன் ஆதாரமில்லாமல் பேசும் பேச்சுகளை நம்பும் நீங்கள் , ஆதாரங்களுடன் உங்கள் முன் வரையப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை நம்ப மறுப்பது துரதிர்ஷ்டமே..!

      தொடர்ந்து வருகை தாருங்கள் ... நன்றி

      Delete
  5. அணு மின் நிலையம் பற்றி மக்களிடம் உள்ள பயத்தைப் போக்க இது போன்ற செய்திகளை மத்திய-மாநில அரசுகள் கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் மாநில அரசு கா0கிரசு அரசு மேல் உள்ள கோபத்தில் போராட்டக்காரர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது.அணு உலைகள ஆபத்தானவைதான்,கதிர் வீச்சும் ஆபத்துதான்.எனினும் மாற்று ஏற்பாடு இல்லா நேரம் மின் உற்பத்திக்கு அணுவைத்தான் பிளக்க வேண்டியுள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு வணக்கம் ,

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

      தொடர்ந்து வருகை தாருங்கள் ..

      Delete
  6. ஐயா ....உங்களது அணுமின் நிலையம் குறித்த கட்டுரைகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது . மிக அருமையாக அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வருகிறீர்கள் . மிக்க நன்றி . கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுக்காப்பானது என்று விளக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஒரு பாடல் Toutube ல் வெளியிடப்பட்டு உள்ளது. நீங்கள் உங்களின் தளத்தில் இதை இணைத்தால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் . பாருங்கள் . உங்களுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் இணைத்து விடுவீர்களா ...? http://www.youtube.com/watch?v=wA3nOGrWMsI

    நன்றி

    ReplyDelete

நாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி